anti - piracy

Post Page Advertisement [Top]


             ஒளிதருமோ என் நிலவு...![தீபாஸ்-ன்]
                                    
                                 அத்தியாயம்-07

                                              

ழகுநிலா தனக்கு நேற்று இரவு வந்த போன் காலில் பயந்து இரவு முழுவதுவும் தூங்காமல் இருந்தாள். அன்று தன தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு போய் வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ..? அம்மா சொன்னதுபோல் தேவையில்லாமல் வெளியே சுற்றியதால் வந்த வினையோ என வருந்தினாள்.
    
அன்று  ஹோட்டலில் இருந்து கொண்டுவந்து சுவிச்சுடு ஆப் செய்து தனது உடைகளுக்கு அடியில் எடுத்து வைத்திருந்த போனை எடுத்து அதனை தன போன் சார்ஜரின் மூலம் ஜார்ச் செய்து  எப்படியாவது ஆன் செய்து அதில் ரெகார்ட் ஆகியிருக்கும் ஹோட்டலில் தனக்கு நடந்த சம்பவத்தை டெலிட் செய்து விடவேண்டும் என்று முயன்று கொண்டிருந்ததில், பொட்டு தூக்கம் இல்லாமல் விடிந்தே விட்டது.
    
அதனை ஆன் செய்து பின் உள்நுழைய அந்த மொபலின் உரிமையாளனின் பிங்கர்பிரின்ட் கேட்டது அவள் எவ்வளவு முயன்றும் வேறு வழிகளில் அதனில் லாகின் செய்ய முடியவில்லை
    
அன்று தனக்கு ஏற்பட இருந்த ஆபத்தை முன்பின் தெரியாத அந்த ஹன்ட்சம் ஹீரோவின் மூலம் கடந்துவிட்டோம் என்ற ஆசுவாசமாக இருக்கும் போது, நேற்று வந்த அந்த போன் கால் அவளின் நிம்மதியை பறித்தது. 
    
எப்படி அந்த ரோக்குக்கு என் மொபைல் நம்பர் தெரிந்தது. அதுவும் நான்  அவனின் மொபைலை மூச்சுவிடாமல் நாளை மதியம் அந்த மாலிற்கு போய்  அவனிடம் கொடுக்க வேண்டுமாமே! நான் அவனின் பார்வை வட்டத்துக்குள் விழுந்து விட்டேனாமே. அப்படி அவனிடம் கொடுக்காமல் ரொம்ப புத்திசாளித்தனமாக அந்த மொபலை பற்றி ஆராய்ச்சி செய்தாலோ? அல்லது அதனை சைபர்கிரைம் ஆபீசில் இன்பார்ம் பண்ணினாலோ நான் பத்திரமாக் என் ஊரான குட்லாம்பட்டிக்கு போக முடியாதாமே! என்னை பற்றிய அனைத்து விபரங்களையும் அவன் தெரிந்து வைத்திருக்கிறான். இப்பொழுது அவன் செய்த போன் கால் எல்லாம் பிரைவேட் நம்பரில் இருந்து வருகிறதே! இது என்ன, இப்படி ஓர் இக்கட்டில் நான் மாட்டிக்கொண்டேன்.
   
மதுரை மீனாட்சி தாயே எனக்கு ஓர் அவமானம் என்றால் பாதிக்கப் படுவது நான் மட்டும் அல்ல  என் குடும்பம் முழுவதுவுமே. என்னை எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து மீட்டு கொண்டு வந்துவிடு என்று வேண்டுதலை வைத்தவள், தனது சுமதியை அழைத்து இன்று கொஞ்சம் சீக்கிரம் ஆபீஸ் வரச் சொல்லி அவளிடம் இதைப்பற்றி பகிர்ந்து கொண்டு என்ன செய்யலாம்? என்று முடிவெடுக்க  நினைத்தாள் அழகு நிலா.
    
அவள் மொபைலை வெளியில் எடுக்கும் போதே சுமதியிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அதனை ஆன்செய்து காதில் வைத்ததும் அந்தபக்கம் இருந்து சுமதி அடியே அழகி!  இங்க  பிரச்சனை ஆகிடுச்சுடி என்று பதட்டமாக பேசும் குரல் காதில் விழுந்தது.
    
அவளின் பதட்டமான் குரலில் தன்னுடைய பிரச்சனையை மறந்து அவளிடம்,  “சுமதி ஏன் பதட்டமாக பேசுகிறாய்...?  என்று கேட்டாள் அழகி
     
அதற்கு சுமதி  என்னுடைய லவ் மேட்டர் எப்படியோ என் பெரியப்பாவிற்குத் தெரிந்து என் அப்பா அம்மாவை இங்கு வர வைத்து விட்டார்கள் அழகி.  இன்றைக்கு என்னால் ஆபீஸ் வர முடியாது என நினைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தவள் அப்பறம் பேசுறேன் அழகி அம்மா கதவை தட்டுகிறார்கள் என்று போன் இணைப்பை  துண்டித்தாள்.
      
தனது தோழியான சுமதியிடமும் விசுவிடமும் இப்பொழுது உதவிகேட்க முடியாது என்பதனை உணர்ந்த அழகுநிலா,  நெட்டில் எப்படி ஐ போனை அதன் பாஸ்வேர்ட் இல்லாமல் லாகின் செய்யலாம் என்று சர்ச் செய்து.. செய்து... ஓய்ந்தாள். தற்செயலாக கடிகாரத்தில் மணியைப்பார்த்தவள் அது இன்னும் அவள் ஆபீஸ் பஸ் வர பதினைந்து நிமிடம் தான் இருக்கிறது என்று காண்பித்தது. எனவே வேகமாக கிளம்பி காலை  சாப்பிடாமல் மதிய சாப்பாட்டையும் மறந்து பஸ்ஸை பிடிக்க ஓடினாள்.
     
தனது ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்ததும் அவளுடைய மொபைலுக்கு அழைப்பு வந்தது பயந்து கொண்டே அதை எடுத்து பார்த்தவளுக்கு அதுவும் ஓர் பிரைவேட் நம்பர் கால் என்பது புரிந்தது கலக்கத்துடன் காதில் வைத்தாள்.
     
அழைத்தவன் இரவு அவளுக்கு போன்செய்து அவளை கதிகலங்க வைத்தவன் தான், என்ன கேர்ள் இன்னைக்கு மதியம் நான் சொன்ன மாலுக்கு வந்துவிடனும், நான் அங்கு நீ வந்தவுடன் போன் செய்து எங்கு நிற்க வேண்டும் என் சொல்கிறேன் ஏதாவது சொதப்பலாம் என்று நினைத்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்  என்று கூறிவிட்டு தொடர்பு துண்டித்தான்.
     
அழகு நிலாவிற்கு அந்த மொபைலில் இருந்த அன்று அவளுக்கு நடந்த நிகழ்வின் வீடியோ பதிவை நீக்காமல் அதனை கொடுக்கவும் மனது இல்லை, மேலும் அவனின் மிரட்டலை அசால்டாக பாவித்து வேறு  நடவடிக்கை எடுக்கவும் பயம் ஏற்பட்டது .
    
மேலும் அன்று அதை அந்த டிப் டாப் ஹீரோவால் மட்டும் எப்படி அதை இயக்கி தன்னிடம் காண்பிக்க முடிந்தது என்னால் இதை லாகின்  செய்யவே முடியவில்லையே என்று நினைத்தாள்.
   
மேலும் அந்த வீடியோ பதிவை பார்பவர்கள் அன்று அவனுடன் தான் இணைந்து விழுந்த காட்ச்சியை எப்படிவேண்டுமானாலும கதைகட்டி தன்னை தப்பாக நினைக்கவும் வழி இருப்பதை தெரிந்தவள் இது மட்டும் வெளியில் பரவினால்!, என்பதை நினைத்தவள் நெஞ்சம் நடுங்கியது
   
முதல் முதலாக் தனது அம்மா சொல்வதை கேட்டு தான் வேலைக்கு வராமல் இருந்தால் இந்த மாதிரி இக்கட்டில் மாட்டாமல் இருந்திருக்கலாமோ? என்ற எண்ணம் ஏற்பட்டது.
   
என் அம்மாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் என் மேல் தப்பு இல்லையென்று நான் கூறியதை அது நம்பினாலும், அம்மா கூறும் “முள்மேல் சேலை விழுந்தாலும் சேலை மேல்  முள் பட்டாலும் சேலைக்குத்தான் நட்டம் என்று நினைத்து  குழம்பியபடி அவளது அலுவலகத்தை அடைந்தாள்.
     
அவள் ஆபீஸ் வாசலில் இறங்கியதும் மறுபடியும்  போன் வந்தது. அவளின் ஓவ்வொரு அசைவையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான் என்று அவள் உணரச்செய்யவே இப்படி அவளை தொடர்புகொண்டு பேசுவதாக கூறினான்.
    
உன் ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரியும். எனக்குத்தெரியாமல் எதுவும் உன்னால் செய்யமுடியாது. அப்படியேதும் புத்திசாளித்தனமாக் நீ நடக்க முயன்றால்! பிறகு நீ ஒழுங்காக குட்லாம்பட்டிக்கு போய் சேரமாட்டாய் என்ற மிரட்டலுடன் பேசினான். மேலும் அவன்  மாலில் பெயரை சொல்லி அங்கு மதியம் 3 மணிக்கு மொபைலை தன்னிடம் கொடுக்க வரவேண்டும் என் கூறி வைத்துவிட்டான் .
       
காலையில் சாப்பிடாமல் வந்ததும் மேலும் இந்த பிரச்சனையை எப்படி சமாளித்து மீளுவேன் என்ற மண்டைகுடைசசலும் சேர்ந்து அவளுக்கு தலைவலி ஏற்பட்டது. என்றுமே அவள் இருக்கும் இடம் கலகலப்பாக் இருக்கும். இன்று அவளின் அமைதி கண்டு உடன் வேலை பார்பவர்கள் உடல்நலமில்லையா? என்று விசாரிக்கவேறு ஆரம்பித்துவிட்டனர்.
       
ரமேஸ், ஒருபடி மேலே சென்று மதியம் அவள் லன்ச் கூட சாப்பிடவராமல் தலையை பிடித்தபடி அமர்திருந்தவளின் முன் கேன்டீனில் இருந்து  சாப்பாடும் தலைவலி மாத்திரை, தண்ணீரோடு வந்து அமர்ந்தான்
       
நிமிர்ந்து பார்த்தவளிடம் அழகுநிலா சாப்பிடாமல் இருந்தால் தலைவலி இன்னும் கூடத்தான் செய்யும். முதலில் சாப்பிடுங்க என்று கட்டாயப்படித்தினான்.
      
அவளுக்குமே கொஞ்சம் தன்னை கவலையில் இருந்து வெளிக்கொண்டுவர கொஞ்சம் யோசிப்பதற்கு சக்திவேண்டும், அதற்கு கொஞ்சம் சாப்பிட்டு மாத்திரையை போட்டுக்கொண்டு இந்த தலைவலியை விரட்டினால்தான் முடியும் என்று உணர்ந்தவள், தாங்ஸ் ரமேஸ், என கூறி அவன் கொடுத்த சாப்பாட்டை வாங்கி அவசரமாக சாப்பிட்டு முடித்தவளிடம் ஓர் மாத்திரையையும் தண்ணீர் கேனையும் நீட்டியவனின் முகம் பார்த்தால் அழகுநிலா.
      
ம்...வாங்கி போட்டுக்கோங்க என்று நீட்டினான். முதலில் அவளுக்கு இருந்த தலைவலியிலும் குழப்பத்திலும் அவன் குடுத்த சாப்பாட்டை யோசிக்காமல் உடன் வேலைபார்பவன்  தானே! என்று நினைத்து உண்டவளுக்கு இப்பொழுது சாப்பாடு உள்சென்றதும் கொஞ்சம் தெளிவு வந்ததினால், ரமேஸ் சாரி! உங்களுக்கு என்னால் சிரமம் வேண்டாம் கீழே வச்சுடுங்க நான் எடுத்துப்போடுப்பேன் என்றவள்  தனது பேக்கில் இருந்து சாப்பாட்டுக்கும் மாத்திரைகும் உரிய பணத்தை எடுத்தாள்.
       
அவள் ரமேஸிடம், செம பசி அதனால்  தலைவலி கூடிருச்சு. கேண்டீன் போய் வாங்க கூட தெம்பு இல்லாமல் இருந்துச்சு. என்னோட கஷ்டம் பார்த்து உதவிசெஞ்சதுகு தாங்ஸ் ரமேஸ்! என்றபடி இத வாங்கிக்கோங்களேன் என்று பணத்தை கொடுத்தால்
       
அவள் தன்னிடம் சாப்படுக்கான காசை நீட்டவும் முகம் சுருங்க, கூடவேலை பார்பவர்களுக்கு உடலுக்கு முடியாதபோது ஓர் வேளை சாப்பாட்டு வாங்கி கொடுப்பதற்கு போய் யாராவது காசு வாங்குவாங்களா? அல்லது உங்களை மாதிரி இந்த சின்ன விசயத்துக்கு உதவி செய்ததுக்கு போய் காசு கொடுத்து அவமானப்படுத்துவாங்காளா?
       
நீங்க என்ன நெனச்சு என்கிட்டே இந்த காசை கொடுக்குறீங்கனு எனக்குப் புரியல, அன்னைக்கு நான் ஹோட்டலில் உங்களின் மேல் ஆர்வம் இருபதாக காட்டியதுக்கு... நீங்கள் என்னை அண்ணன்... என்று கூப்பிட்டபிறக்கும், உங்களை வேறு எண்ணத்தில் நான் நெருங்க முயலமாட்டேன். ஆனால் கூடவேலை பார்க்கும் சக தோழனாக கூட உங்களால் என் உதவியை ஏற்றுக்கொள்ள முடியாத அபாக்கியவதியா நான்?  என்று கேட்டான் .
       
அவன் அவ்வாறு கூறியதும் ரமேஸ் உங்களை  தவறானவராக நான்  நினைத்திருந்தால்  உங்களிடம் முகம் கொடுத்தே நான் பேசியிருக்க மாட்டேன். ஆனால் நான் கிராமத்தில் வளர்ந்தவள் அந்நிய ஆண்களிடம் தேவையில்லாமல் நின்று பேசுவதை கூட என் அம்மா அனுமதிக்க மாட்டார்கள். அதனால்தான் சட்டென்று உங்களின் உதவியை பெற கொஞ்சம் யோசனயாகிவிட்டது.
       
இப்போ என்ன, உங்களிடம் நான் இந்த பணத்தை கொடுக்ககூடாது. சரி.. இனி நீங்களும் என் நண்பன். அதனால் காலத்தில் உதவிய என் நண்பனுக்கு நன்றி என்று கூறியவள்.காசு கொடுத்ததுக்கு போய் இப்படிபேசி போன தலைவலியை திரும்ப வர வச்சுட்டீன்களே! என்றவள் மாத்திரையை எடுத்து தண்ணீரை அருந்தியவள் முகம் தனது மொபைல் ஒலியில் திரும்ப கலவரமானது.  அதனை எடுத்துப்பார்த்தவள் தனது அம்மா அழைத்ததை பார்த்து சற்று பதட்டம் குறைந்தாள்.
       
போனை அட்டன் செய்தவள். அம்மா! நான் நல்லா இருக்கேன்மா.... வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களாமா... இப்போ ஆபீஸ்ல கொஞ்சம் வேலயாய் இருக்கேன் ரூம் போனதும் பேசறேன்மா என்றவள் தொடர்பை துண்டித்தாள். பின் ஆசுவாசமாக மூச்சை எடுத்தவள் யோசனையுடன் தன முகம் பார்த்தபடி இருந்த ரமேசை பார்த்து தன முகபாவனையை மறைத்தபடி சிரித்த முகத்தோடு என்ன ரமேஸ் அப்படி பார்கிறீங்க! என்று கேட்டாள்.
       
“நான் உங்கள் நண்பன் தானே அழகுநிலா என்று கேட்டதும், ஆம். என்று தலை அசைத்து அவளும் யோசனையுடன், இப்போ எதுக்கு திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறீங்க ரமேஸ் என்றாள்.
        
நீங்க “ஆம் என்று சொன்னதால் கேட்கிறேன், ஏதேனும் பிரச்சனையா அழகுநிலா. வேலையில் சேர்ந்தில் இருந்து நான் பார்த்த துறுதுறுப்பான அழ்குநிலாவாக இன்னைக்கு நீங்க இல்லை. காலையில் இருந்து டல்லாகவும்   அடிக்கடி உங்களுக்கு போன் வருவதும் போன் வந்ததும் நீங்கள் டென்சன் ஆவதையும் நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏதேனும் பிரச்சனையா? என்னிடம் கூறும் விசயமாக இருந்தால் நண்பனாக நினைத்து சொல்லுங்களேன், என்னால் என் தோழியை இப்படி பார்க்க கஷ்டமாக  இருக்கு என்றான்.
      
துன்பம் வரும்போது தான் உண்மையான நண்பனை நீ அடையாளம் காண முடியும் என்பதற்கு இணங்க அவளின் சோர்ந்த முகம் பார்த்தே உதவத்துடிக்கும் அவனின் செயலில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தவள் தன்னை இயல்பாக அவனிடம் காட்டிகொள்ள முயன்றாள்.
      
எனவே குறும்புடன் அவனை பார்த்து இப்போதான் நான் உங்களை நண்பன்டா என்று சொல்லி ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் என்னை காலையில் இருந்து சைட் அடிச்சுகிட்டு இருந்ததாக என்னிடமே சொல்றீங்களே! என்ன திரும்பவும்  உங்களை பார்த்து அண்ணா என்று கூப்பிட வைக்கப் போகிறீர்களா? என்று அவன் பேசும் பேச்சை திசைதிருப்ப குறும்புடன் கேட்பதுபோல் நடித்தாள்.
       
அதற்கும் அசராமல் பேச்சை மாற்றாதீர்கள் அழகுநிலா! உங்களுக்கு நான் உங்களின் விசயத்தில் தலையிடுவது பிடிக்கவில்ல்லை எனில் நேராக சொல்லிவிடுங்கள், சுமதி பிறந்தளால் அன்று பார்ட்டிக்கு ஹோட்டல் போனபோதும் நீங்க ரெஸ்ட்ரூம் போனபோது எதுவோ அசம்பாவிதம் உங்களுக்கு நடந்ததை என்னால் யூகிக்க முடிந்தது. அன்றைக்கும் உங்கள் முகம் வாடியபோதே,  என்னபிரச்சினை? என்று விசாரித்து உதவவேண்டும் என்று  உந்துதல் ஏற்பட்டது
      
ஆனால் நீங்கள் நான் கேட்பதை விரும்பமாட்டீர்கள். மேலும் உரிமையோடு உங்களிடம் என்னால் எப்படி ஏதும் பிரச்சனையா?  என்று கேட்க்கமுடியாதே! ஆனால் இன்று நான் உங்களின் நண்பன் என்று நீங்கள் ஏற்றுக்கொண்டதால் தான் கேட்டேன் என்று கூறினான்.
      
அன்று நடந்ததை யாரும் கவனிக்கவில்லை என்று தான் நினைத்திருந்தது தவறு போல என்று மனதினில் நினைத்தவள், ரமேசுக்கு தெரிந்தால் தனக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுவார் என்றும், நம் முகம் பார்த்தே வருத்தத்தை போக்கவேண்டும் என்று நினைக்கும் நண்பனிடம் மறைப்பது  கூடாது என்று அவனிடம் கூறி என்ன செய்யலாம் என முடிவெடுக்கலாம் என்று நினைத்தாள்.
      
எனவே, பிரச்சனை தான் ரமேஸ். அன்று ஹோட்டலில் எனக்கு நடந்த பிரச்சனை முடியாமல் போன் ரூபத்தில் இன்னும் என்னை துரத்துகிறது என்று அன்று நடந்ததையும் அந்த ஹேன்சம் மேன் தன்னை காப்பாற்றியதையும், அதனை தொடர்ந்து அன்று தன்னை வீடியோ எடுத்த போனை சுவிட்ச் ஆப்செய்து வைத்துக்கொண்டதையும், மேலும் நேற்றிரவு தனக்கு வந்த மிரட்டல் கால் பற்றியும் கூறினாள் அழகுநிலா.
     
அவள் கூறியதும் அன்று உங்களிடம் வம்பிளுத்தவன் மினிஸ்டர் மகன் என்று வேறு சொல்லியிருக்கிறான். அதனால் ஜாக்கிரதையாக ஹேண்டில் பண்ணனும் என்றவன், அவன் உங்களை எந்த நம்பரில் இருந்து  தொடர்புகொண்டான் என்பதை உங்களின் போனில் பார்த்து   நம்பரை என்னிடம் கொடுங்க அந்த நம்பரை வச்சு அவனை கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாம் என்றான்.
     
அவன் சொன்னதும் அவன் இதுவரை என்னிடம் ஏழுதடவை பேசியிருக்கான் ஆனால் எல்லாமே வேறுவேறு நம்பரில் இருந்துதான் வந்தது மேலும் அந்த நம்பர் எல்லாமே மொபைல் நம்பர் மாதிரி இல்லை நெட்டில் இருந்து என்னிடம் பேசியிருக்கிறான் என்றாள்.
     
மேலும் நான் எனக்கு நடந்த வீடியோ பதிவை டெலிட் செய்துவிட்டு அவனிடம் கொடுக்கலாம் என்று பார்த்தால் அதை என்னால் அதற்குரிய லாகின் பிங்கர்ப்ரின்ட் இல்லாமல் இயக்கவே முடியல!
       
மேலும், அவன் என்னை பற்றி எல்லாமே தெரிந்துவைத்திருகிறான். என் போன் நம்பர் உட்பட என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவளின் மொபைல் ஒலிஎழுபியது. கலவரத்துடன் அதனை எடுத்து பார்த்தால் நிலா அதில்   பிரைவேட் நம்பர்காலை பார்த்ததும் கலவரத்துடன் ஆன் செய்து காதில் வைத்தவளிடம் ,
      
என்ன கேர்ள்! உதவிக்கு போயும் போயும் அந்த ரமேஸ் தான் உனக்கு கிடைத்தானா? அடங்கி சொல்றதை மட்டும் கேளு, என் பலம் தெரியாமல் மேலும் உனக்கு சிக்கலை இழுத்துக்கொல்லாதே! மணி 1:30 ஆகிடுச்சு சரியா 3 மணிக்கு நீமட்டும் தனியா மொபைலை எடுத்துட்டு மாலுக்கு வந்து சேரனும்! என்று கூறி தொடர்பை துண்டித்தான் .
     
அந்த போன் கால் வந்ததும் வேகமாக தன்னை சுற்றி கண்களை ஓட்டினாள் அழகுநிலா. ஆபீஸ் உள்ளேயும் தான் கண்காணிக்கப்படுவதை நினைத்து அவளின் ரத்த அழுத்தம் உயர்ந்தது. ரமேஸ் உங்களோடு இப்ப நான் பேசுவதைக்கூட அவன் சொல்றான். எனக்கு என்னவோ இது பெரிய நெட் வோர்க்காக எனக்கு தெரியுது.  அந்த பதிவிற்காகவோ? இந்த காஸ்லிபோனுக்காகவோ? ஒன்றும் அவன் என்னிடம் இதை கேட்கவில்லை மேலும் ஏதோ ஓர் ரகசியம் இந்த போனில் இருக்கு! அதனால் தான் அவன் இத்தனை தீவிரம் காண்பிக்கிறான்.
     
இதில் ஆபத்து நிறைய இருக்கும் போல ரமேஷ்.  அது உங்களையும் பாதிக்க வேண்டாம். நான் கிளம்பறேன். மதியம் பெர்மிசன் போட்டுவிட்டு நன் மட்டும் அந்த மாலுக்கு போகிறேன் என்றாள். ரமேஸ் பதில் கூறவருவதை பார்த்து, எதுவும் பேசாதீங்க!.. என்றவள் தனது டீம் லீடரை பார்த்து லீவ் எடுபதற்கு விரைந்தாள்.
                                                            
                     ----தொடரும்----


1 comment:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib