உதிர்ந்தும் துளிர்த்தேன் உனால் (தீபாஸ்)
அத்தியாயம் 14
ஹாலில் மிகவும் நெருங்கிய சொந்தக்காரர்களும் முக்கியமான சில பெரியாட்கள் மற்றும் பிஸ்னஸ் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்,
ஓவியாவின் தாய்மாமா ஜெகதீஷ் மற்றும் மனைவி சரண்யா அத்தம்பதியின் மகன் ராம்ஜியும் தனியாக குடும்பமாக நின்றார்கள்.
இவளின் பெரியம்மா அவங்கர்களின் பிள்ளைகளோடு ஒரு டேபிளில் தனியாக இருந்தார்கள்.
அவளின் தாத்தாவின் பிஸ்னஸ் செய்பவர்கள் அவங்க வீட்டு பிள்ளைகளுடன் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்.
பாட்டி உத்திரமங்கைக்கு ஓவியா, முன்பு அவளின் அப்பாவின் பின்னாலேயே சுத்துவது பிடிக்காது.
"அப்படியே அப்பனை குணத்தில் உரிச்சு வச்சிருக்கா. அம்புட்டு வசதியும் இவளுக்குச் செஞ்சு கொடுக்குறது நாம ஆனா சாப்பாடு ஊட்டி. விட, கூட....ஓடிப்பிடிச்சு விளையாண்டனு செஞ்சு பிள்ளையை கைக்குள்ள போட்டு வச்சிருக்கான் இவள் அப்பன்" என எப்பொழுதும் ஓவியாவை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்து அவளிடம் சொல்லுவார் .
மேலும் அவளிடம் “ஏட்டி இனி உன் அப்பன் பின்னாடி சுத்துனால் கொமட்டுலேயே குத்துவேன்” எனச் சொல்லுவார்.
அவரிடம் ஓவியாவோ “நான் உங்க கூட பேசமாட்டேன். நீங்க என் அப்பாவை எப்பவும் திட்டுறீங்க” எனச்சொல்லி அவரிடம் ஒட்டாமல் ஒதுங்கி வந்துவிடுவாள்.
ஏனோ இன்றுவரை அவள் அப்பா இறந்த பிறகும் அவரிடம் ஒட்டுதல் வரவில்லை. அவர் அந்த பக்கம் இருந்தால் இவள் இந்தப்பக்கம் வந்துவிடுவாள்.
மேலும் இன்று மகளின் இரண்டாம் கல்யாணமாவது நல்லபடி நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தவர்களை கவனிப்பதிலும் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து நல்லபடி விவாகம் முடிப்பதிலேயே கவனம் செலுத்தினார் ருத்திரா.
கண்ணில் ஓவியா படும் நேரங்களில் எல்லாம் ஏதாவது கண்டித்து பேசுவதற்காகவாவது அவளை அருகில் அழைத்து பேசுபவர். இன்று கண்டுகொள்ளவில்லை. அதற்கு வேலை காரணமாக இருக்கலாம் இன்று அவள் பக்கம் திரும்பவில்லை.
தனியாக நின்ற ஓவியாவை யாருமே ஒரு ஜீவனாகக் கண்டுகொள்ள வில்லை. அவளை கடந்து போகின்றவர்களின் கேலிப் பார்வைதான் அவளின் மேல் விழுந்தது. எனவே திரும்ப ஹாஸ்டளுக்கு உடனே போய்விடவேண்டும் என்ற எண்ணம் ஓவியாவுக்கு வந்தது.
அவளின் தாய்மாமா மகன் ராம்ஜி இவளை பின்னால் வந்து தள்ளி விடுவது, கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பது, சீண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவான்.
இன்று இவள் தனியாக நிற்பதைக் கண்டு அவளின் அருகில் வந்து அவர்களின் பாட்டி கூப்பிடுவது போலவே “ஏட்டி உன் இரண்டாவது அப்பா அங்க பாரு” என்று மணவறையில் உட்கார்ந்திருந்த சேஷாத்திரியை சுட்டிக் காட்டினான், அப்பொழுது அவன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். எனவே ஓரளவு விஷயங்கள் அறிந்த வயது.
“கல்யாணம் முடிச்ச பிறகுதான் எல்லாத்துக்கும் பிள்ளை பொறக்கும். ஆனா நீ பொறந்த பிறகு உங்க அம்மாவுக்கு கல்யாணமாம்.சேம்..சேம்... இனி அத்தைக்கு நீ தேவைப்பட மாட்ட... அவங்களுக்கு வேற பாப்பா இனி வந்துருமே..!” எனச் சொல்லி கேலி செய்தான்.
“ஏய் ஓவி பாரேன் நாங்க எல்லாரும் அம்மா அப்பா கூட தனித் தனி டேபிளில் இருக்கோம். நீ மட்டும் தனியா இருக்க ஏன்னா நீ வேஸ்ட்..” எனச் சொல்லி சிரித்தான்.
ஓவியாவின் அருகில் தனது மகன் ராம்ஜி நின்று எதோ பேசுவதையும், அவள் முகம் அழுகைக்கு ஆயத்தமாவது போல இருப்பதையும் கண்ட அவனின் அம்மா.
“எல்லாரும் இருக்கும் போது அவள் கூட வம்பு பண்ணி இவன் அழுகவைக்கப்போறான்” என முனுமுனுத்தவள். மனதினுள் ஏற்கனவே அந்த பிள்ள ஒத்தையில் நிக்குது இவன் வேற....! என்று சலிப்புடன் அவர்களின் அருகில் வந்து
“டேய் இங்க என்னடா பண்ற..? வா....உன்னை அப்பா கூப்பிடுறார்” என்று அவனை கைப்பிடித்து இழுத்தவர் ஓவியாவை பார்த்து
“நீ ஏன் நடுவுல நிக்கிற..? ஓரமா போய் உட்காரு ஓவியா” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
அதே போல மண்டபத்தில் மூலையில் ஒரு ஓரமாக கிடந்த சேரில் போய் அமர்ந்தவள் எந்திரிக்கவே இல்லை.
ஓவியாவின் அம்மா மணவறையில் இருந்தாலும் அவளின் கண்கள் மகள் எங்கிருக்கிறாள் எனத்தேடியது. அவள் அமர்ந்திருக்கும் இடம் கண்ணுக்குப் படவில்லை. அவள் கண்கள் கூட்டத்தில் அலை பாய்வதை கவனித்த சேஷாத்திரி “யாரைத் தேடுற?” எனக் கேட்டதும் சங்கடத்துடன் “ஓவியா எங்க இருக்கான்னு பார்த்தேன். அண்ணன் கூட இல்லை என் அக்கா கூடவும் இல்லை அதுதான் தேடுறேன்” என்றாள்.
அவளின் மனதை புரிந்த சேஷாத்திரியும் தேடி “அதோ...” என்று ஓரத்தில் உட்கார்ந்திருந்த ஓவியாவைச் சுட்டிக்காட்டினார். அங்கிருந்தே இருவரும் அவர்களின் அருகில் வருமாறு சைகை செய்தனர்.
தனது அம்மா கூட்டத்தில் கண்களால் துலாவுவதை பார்த்ததுமே தன்னைத்தான் தேடுகிறாள் எனப் புரிந்து கொண்டாள் ஓவியா. ஆனால் அவளுள் இனம் புரியாத ஒரு கோவம், அழுகை, வருத்தம் எல்லாம் உண்டாகி இருந்தது. எனவே சேஷாத்திரி தன்னைக் கண்டு கொண்டு ஹேமாவிடம் சுட்டிக் காட்டவும் இருவரும் மணவறையில் இருந்து தன்னை வரும்படி சைகை செய்யவும் “மாட்டேன்.... நான் வரல.” என முனுமுனுத்தபடி அங்கிருந்தே மறுப்பாகத் தலை ஆட்டி அழுத்தத்துடன் அமர்ந்து கொண்டாள்.
அவளின் அருகில் இருபவர்கள் சொல்லியும் அவள் அங்கு போகாமல் பிடிவாதமாக அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டாள், திருமணம் முடிந்து மணவறை விட்டு இருவரும் இறங்கவுமே வேகமாக தனது அறைக்குச்சென்றவள் உடை மாற்றி தனது யூனிபார்ம் உடையை அணிந்து கொண்டு மறுபடியும் பள்ளிக்கு போக ஆயத்தமாகி நேராக அவளின் அன்னையிடம் வந்தாள்.
வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டிருந்தவர்களை விளக்கி அவளின் அம்மா ஹேமாவிடம் . “நான் ஸ்கூலுக்கு உடனே போய் ஆகணும் இப்பவே உடனே..” என்று அடமாகப் பேசினாள்.
ஓவியாவின் தந்தை சீனிவாசன் இறந்த பின்பு ஓவியாவின் உடல்நிலை சரியில்லாது போய் மீண்ட பின் அவள் நிறையவே மாறி இருந்தாள். அவளுக்கு அம்மா ஹேமா மட்டும்தான் துணை எனப் புரிந்ததாலோ என்னவோ. அவள் என்ன சொன்னாலும் மறுத்து பேசாது ஏற்கும் தன்மை கொண்டாள். அடம் பிடிப்பதை மிகவும் குறைத்துக்கொண்டாள்.
அவள் உண்டு அவளின் வேலை உண்டு என அடக்காமாக இருக்கப் பழகியவளின் இத்திடீர் பிடிவாதமும், அவள் விறைப்பாக நின்ற விதமும் கண்ட ஹேமா வந்திருக்கும் கூட்டத்தின் முன் அவளுடன் வழக்காடினால் பெரும் சர்ச்சை ஆகக்கூடும் என நினைத்தாள்.
மேலும் அவள் ஸ்கூலுக்குத்தானே போறேன் என்று சொல்கிறாள் போகட்டும். சில நாட்களுக்குப்பிறகு சரியாகிடுவாள் என நினைத்து டிரைவரை அழைத்து அவளை மறுபடியும் ஸ்கூலில் சென்று விட்டுவிடும் படி சொல்லி அனுப்பினாள்
அதன் பிறகு இரண்டுவருசமாக லீவுக்கு வீட்டுக்கு வரவே இஷ்டம் இல்லாமல் வருவாள் ஓவியா. அப்படி வந்தாலும் அம்மாவோடு முன்போல ஒட்டுதல் வரவில்லை அவளுடைய அம்மாவின் கவனம் மொத்தத்தையும் சேஷாத்திரியின் வசம் அவர் வைத்திருந்ததால்.. ஆனால் காலப்போக்கில் நிதர்சனம் புரிந்துகொண்டாள். அவங்க வாழ்கைக்கு அப்பா இல்லாததால் வரும் வெறுமையை விரட்ட இன்னொரு கல்யாணம் செஞ்சிருக்காங்க. இதை தப்புச் சொல்லக்கூடாது எனப் புரிந்துகொண்டாள்.
ஓவியாவின் அப்பா இறந்ததும் அவர் வேலைசெய்த நிறுவனத்தில் இருந்து வந்த கணிசமானத்தொகை அவளின் பெயரில் பேங் அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் மாதமாதம் அவளின் செலவுக்கு அவள் அம்மா மற்றும் தாத்தா கொடுக்கும் பணத்தில் செலவளித்தது போக மீதிப் பணம் அவளின் அக்கவுண்டில் சேர்ந்துகொண்டே இருக்கும். அதுவே ஓர் கணிசமான தொகையாக சேர்ந்து அவளின் வசம் இப்பொழுது இருந்தது. கிட்டத்தட்ட அரைக்கோடி பணம் அவளிடம் இருந்தது,
அவளுக்குத் தெரியும் அவளின் தாய்மாமா குடும்ப உறுப்பினர்களைப் பற்றி. தான் இந்நேரம் வெறும் மனுஷியாக இருந்தால் தன்னுடைய குணம் மட்டும் கருத்தில் கொண்டு தன்னை மருமகளாக்க முன் வந்திருக்க மாட்டாள் அவளின் அத்தை.
பொதுவாக அவளின் மாமா ஜெகதீஷ் அவளை வீட்டில் உள்ள டேபிள் சேர் போன்ற ஒரு பொருளாகப் பார்ப்பவர். தங்கள் வீட்டில் உள்ள பொருள் ஒன்று என்ற எண்ணம் மட்டுமே. அவளின் மேல், அன்புப் பிடிமானம் என்று ஒன்று அவருக்கு வந்தது கிடையாது அதற்காக இவளை வெறுக்கவும் மாட்டார்.
அவளின் அத்தை சரண்யாவுக்கு வீட்டில் உள்ளவர்கள் அவளின் செயலுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது. அவளை அதிகாரம் செய்யக் கூடாது. அவளின் சுதந்திரம் மட்டுமே பெரிது என இருப்பவள் மற்றவர்களின் துக்கமும் சந்தோசமும் அவர்களின் பாடு என்று நினைப்பவள்.
ஓவியா அவரை எந்த விதத்திலும் தொந்தரவு கொடுத்ததில்லை. அவரின் மகன் ராம்ஜி அவளிடம் வம்பிலுக்கும் போது பார்த்தால் அவனை கண்டித்து இழுத்துக்கொண்டு போவாள். ஆனால் அவனால் இவள் படும் காயங்களுக்கு ஆறுதல் சொன்னதில்லை.
சிறுவயதில் தன்னை தள்ளிவிடுவது வம்பிழுத்து மனம் நோகும்படி பேசுவது என்று இருக்கும் ராம்ஜி நாட்கள் செல்லச்செல்ல அதுபோல எல்லாம் செய்வதை நிறுத்திக்கொண்டன். ஆனால் அவள் பதினொன்று பன்னிரண்டு படிக்கும் காலத்தில் அவன் பிஜி பட்டபடிப்பு முடித்திருந்தான் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் ஓவியாவிடம் “ஹாய் ஓவி எப்ப வந்த..?” என்று ஆவலுடன் பேச்சுக் கொடுப்பான்.
சிறுவயதில் அவனிடம் பட்ட காயங்களின் காரணமாக அதன் பின் அவன் தொந்தரவு கொடுக்கவில்லை என்றாலும் அவன் வட மூலையில் இருந்தால் தென் தென்மூலைக்குச் சென்று விடுவாள்.
அவன் பார்வை அவள் மேனியில் அலையும் போக்கு அவ்வயதிலேயே அவளுக்கு உறுத்தலைத் தந்ததாலும் அவன் இருக்கும் இடத்தை ஓவியா நிற்பதைத் தவிர்த்தாள். ஆனால் அவளுக்கு விவரம் தெரிந்த பின்பு விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் போது வீட்டில் இருக்கும் ஓர் ஆள் என்ற முறையில் நேரிடையாக அவளிடம் அவன் பேச முயன்றபோது தவிர்க்க முடியாது திண்டாடினாள்.
இரட்டை அர்த்தங்களில் பேசுவது. வேண்டும் என்றே இடிப்பது. வெளியில் அவனுடன் ஊர் சுற்ற வரும்படி கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ராம்ஜி ஈடுபட ஆரம்பித்தான். அழகான பெண்களைக் கண்டுவிட்டால் சில்மிஷம் செய்யாமல் அவனால் இருக்க முடிவதில்லை என்று ஓவியா புரிந்து வைத்திருந்தால்.\
பொதுவாக அவர்களின் குடும்பத்தில் ஓர் வழக்கம் இருந்தது. ஆண் மகவு என்றால் ஒன்றுடன் நிறுத்திக்கொள்வர் பெண் மகவு என்றால் அடுத்து ஆண் மகவு வரவு வரை பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்து விடுவார்கள்.
பரம்பரையாக கட்டிக்காத்துவரும் அவர்களின் சொத்துகள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருந்தது என்றால். பாகப்பிரிவினை என்ற பெயரில் சொத்துப் பிரித்து சிதைந்து போய்விடும் என்ற எண்ணம்.\ ஒற்றை ஆண் வாரிசு மட்டுமே திரட்சியான அச்சொத்துகளை அப்படியே வைத்திருக்க முடியும் என்ற எண்ணம்.
ஓவியாவின்
தாத்தா
பாட்டியாகிய
எஸ்.கே.அம்பலவாணன்
உத்திரமங்கைக்கு
முதலில்
ரம்யா
பிறந்தாள்.
அதனைத்
தொடர்ந்து
ஜெகதீஷ்
பிறந்தார்.
ஜெகதீஷ்
குறை
மாதத்தில்
பிறந்ததால்
கர்ப்பத்தடை
செய்துகொள்ளவில்லை.
உடல்தேறி
உயிர்
பிழைத்து
ஜெகதீஷ்
எழுந்து
ஓடியாடும்
போது
உத்திரமங்கை
வயிற்றில்
ஹேமா
ஜனித்தாள். ஸ்கேனில் பெண்
மகவு
எனத்
தெரிந்ததால்
உயிர்தப்பிப்
பிழைத்தார்.
ஜெகதீஷ்க்கும்
சரண்யாவுக்கும்
முதலில்
பிறந்ததே ஆண் குழந்தையான
ராம்ஜி
எனவே
அடுத்த
பிள்ளை
பற்றி
அவர்கள்
யோசிக்கவே
இல்லை. கடல் போன்ற
சொத்துக்கு
ஒற்றை
வாரிசான
ராம்ஜிக்கு
நிறைய
சலுகைகளும்
கைநிறைய
பணமும்
கண்டதே
காட்சி
கொண்டதே
கோலம்
என
திரியும்
செல்வந்தர்
வீட்டுப்
பிள்ளைகளின்
நட்பும்
அவனின்
குணத்தை
மிக
மோசமடையச்
செய்துவிட்டது.
சொத்துக்களை
அவனின்
வசம்
கொடுத்தால்
அது
விரைவில்
அழிந்து
போகும்
என்ற
பயம் அவனின் தாத்தா
எஸ்.கே
அம்பலவாணனுக்கும்
அவனின்
அப்பா
ஜெகதீஷ்கும்
உண்டானது. தங்களின் வசம்
சொத்துக்களைப்
பாதுகாத்து
வைத்து
அவனின்
வாரிசிடம்
கொடுக்க
வேண்டும்
என்ற
எண்ணம்
உண்டானது.
அக்வனுக்கு
வெளியிடத்தில் இருந்து பெண்
எடுத்தால்
அவள்
தாங்கள்
சொல்வதைப்
புரிந்துக்கொள்வாளோ..!
மாட்டாளோ..!
என்ற
எண்ணம்
உண்டானது. எனவேதான் தாங்கள்
சொல்வதை
அப்படியே
ஏற்கும்
எந்த
வித
மறுப்பும்
தெரிவிக்காது
இருக்கும்
பெண்
வேண்டும்
என
என்னும்
போதுதான்
ஓவியா
அத்தன்மை
கொண்டவள்
என
முடிவெடுத்தனர்.
ஹேமாவின்
இன்றைய
நிலை
அவர்கள்
பேச
தோதுவாக
அமைந்ததால்
அவளின்
மகள்
ஓவியாவுடன்
ராம்ஜிக்கு
முடிச்சுப்போட
கலந்து
பேசி
கல்யாண
தேதி
குறித்தனர். ஆனால் யாருக்கும்
ஓவியாவிடம்
சம்மதம்
கேக்கணும்
என்ற
எண்ணம்
வரவில்லை.
எதையும்
மறுத்து
பேசாதவள்
இதற்கு
மட்டும்
மறுப்பா
சொல்லி
விடுவாள்!
என்ற
எண்ணமோ
என்னவோ. ஆனால் ஓவியா
அந்த
வீட்டில்
உள்ள
எல்லோரையும்
உரிமையாக
எண்ணாமல்
இருந்ததால்
அவர்களிடம்
எதையும்
எதிர்பார்க்காமல்
தள்ளியே
இருந்தாள். எனவே அவர்களிடம்
எதையும்
கேட்டு
வாக்குவாதம்
செய்யவில்லை
என்பதை
உணராமல்
போய்விட்டனர்.
அவள்
கல்லூரி
முடிந்து
காம்பஸ்
இன்டர்வியூவில்
கிடைத்த
வேலையில்
சேர்வதற்கு
தன்னுடைய
ஹாஸ்டல்
ரூமை
ஒதுக்கி
நீண்ட
வருடம்
சென்று
வீட்டிற்கு
வந்து
தங்கும்
எண்ணத்துடன்
காரில்
வந்து
இறங்கியவளை
வாசலிலேயே
எதிர்கொண்டான்
ராம்ஜி.
-----
.jpeg)
No comments:
Post a Comment