உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால்
(தீபாஸ்)
(தீபாஸ்)
அத்தியாயம் 08
அறைக்குள் வந்த விக்னேஷை கண்டதும் பட்டென எழுந்து நின்ற அழகியை “எதுக்கு நிக்கிற உட்கார்..” எனச்சொல்லிவிட்டு கதவை உள் தாழ்போட்டவன் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
அவனின் கட்டுபாட்டை மீறி கண்கள் அவளின் தேகத்தின் மீது தவழ்ந்தது.
ஐந்தடி உயரத்தில் கோவில் சிலை அம்சமுள்ள வளைவு நெளிவுகளுடன் இருந்தவளின் பெண்மையின் வனப்பைக் கண்டு பெருமூச்சுடன் “செம ஸ்ரெக்சர் இவளுக்கு...” என்று மனதினுள் சொல்லிக் கொண்டான்...
ஆனாலும் இந்த பட்டிக்காட்டை கூட்டிக்கிட்டு ஒரு டிஸ்கோத்தே போக முடியுமா..? என் கலருக்கு பக்கத்தில் இவளால ஜோடி போட்டு நிக்கத்தான் முடியுமா..? என்ற முடிவில், தனது நிலைபாட்டில் உறுதியுடன் இருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான்.
அவன் உட்கார் என்றதுமே எந்தவித அலட்டலும் இல்லாமல் அமர்ந்துகொண்ட அழகிக்கு அவனின் அளவெடுக்கும் பார்வை படபடப்பை கொடுத்தது.
அந்த அவஸ்தையில் இருந்து தப்பிக்க “நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா...?” என்று பேச்சுக் கொடுத்தாள்.
அவள் அவ்வாறு கேட்டதும் ‘இவளென்ன எனக்கு முதல்ல முந்திகிட்டு எதுவோ கேக்கணும்னு சொல்றா...!” என்ற யோசனையுடன். “ம்... கேளு” என்றான்.
“நான் படிக்கணும்.... படிச்சிட்டு எங்க காலேஜ்லயே ராஜி மிஸ் போல வேலையில் சேரனும். அதுவரை ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அதுக்குப் பிறகு மத்ததெல்லாம்னு யோசிச்சேன்” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும் விக்னேஷின் முகம் பிரகாசித்து இருக்க வேண்டும். ஆனால் ‘இவள்போய் என்னைய தள்ளிவைக்க நினைக்கலாமா...? நான் தான் எனக்கு விருப்பம் இல்லைன்னு இவளை தள்ளி நிறுத்துறது நியாயமா இருக்கும்...! இந்த மூஞ்சி என்னை எப்படி இப்போ வேணாம்னு சொல்லலாம்..?” என்ற கோபம் உண்டானது.
சொல்லிவிட்டு பதிலுக்காக அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த்தவளுக்கு கோபத்தில் அவன் முகம் சுருங்குவதைக் கண்டு..
“நான் கேட்டதுக்கு கோவப்படாதீங்க, நீங்களும் அப்படி ஒன்னும் என்மேல விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டது போல தெரியலை...!, அதனால உங்களுக்கும் இந்த ஏற்பாட்டில் விருப்பம் இருக்காதுனு நெனச்சு சட்டுன்னு கேட்டுட்டேன்” என்றாள்.
‘தனக்கு அவளை பிடிக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டு அவளே ஒதுங்கி நிற்க நெனச்சு இருக்கா...! பரவாயில்லை இவள்கிட்ட அன்பா பேசி கையெழுத்து வாங்கிட்டு அதுக்குப் பிறகு இப்படியே கண்டுக்காம இருந்தா அவளே பிரச்சனை இல்லாம ஒதுங்கிப் போயிடுவா போல..’என்ற ஆசுவாசம் அவனுக்கு உண்டானது.
அந்த எண்ணத்தில் அவள் தன்னை தள்ளிவைத்த கோபம் மட்டுப்பட்டது. எனவே “உன்னைய எனக்கு பிடிக்காம எல்லாம் இல்ல... உனக்கு ஒரு எய்ம் இருக்கிறதுபோல எனக்கும் இருக்கு... அதனாலத்தான் நானும் அவ்வளவா மேரேஜ்ல இன்ட்ரெஸ்ட் காட்டலை...:” என்றான்.
“ஓ...ஹோ... “ என்று சொல்லி தலை அசைத்தவளின் தெனாவெட்டான செயல் அவனை கடுப்பாகியது. இருந்தாலும் காரியத்தில் கண்ணா இருக்கணும் என்ற எண்ணத்தில்,
“எனக்கு பிஸ்னெஸ் பண்ணனும், அதுவும் பெரிய அளவில தொடங்கணும். அதுல சக்சஸ் ஆனதுக்கு பிறகுதான் மேரேஜ் லைஃபை ஸ்டார்ட் பண்ணனும்னு நினச்சேன். ஆனா அதுக்கு முன்னாடி அம்மா உன்னைய இப்பவே மருமகளா ஆக்கணும்னு இஷ்டப்பட்டதால இந்த கல்யாணம் நடந்துருச்சு” என்றான்.
“எங்க அப்பாவும் ராதா அத்தை வந்து பொண்ணு கேட்டதால மறுக்க முடியாம உங்களுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வச்சிட்டார். ஆனா நாம ரெண்டுபேருமே மனசால இன்னும் கல்யாணத்துக்கு ரெடியாகளை” என்றாள்.
“ஆமா... ஆனா கல்யாணம் முடிஞ்சிருச்சி இனிமே ரொம்ப காலம் நாம இப்படியே தள்ளி தள்ளி இருக்கமுடியாது. அதனாலத்தான் என் பிஸ்னெஸ் கனவை சீக்கிரமா நனவாக்கிட்டு நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ண ஒரு ஐடியா யோசிச்சு வச்சிருக்கேன்” என்றான்.
“என்ன ஐடியாங்க..?” என்றவளிடம்.
“இப்பவே பிஸ்னெஸ் ஸ்டார்ட்டி பண்ணலாம்னு யோசிக்கிறேன்.. அதுக்கு நீயும் எனக்கு ஒத்துழைக்கணும்” என்றான்.
“இப்போதைக்கு நான் படிக்கணும் படிப்பு முடியிறவரை உங்களை எந்த விதத்திலும் டிஸ்டப் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேனே... வேற என்ன பண்ணனும்...?”
“சரிதான், ஒரு வருஷத்தில் நீ படிச்சு முடிச்சுடுவ. அதுக்கு பிறகு எப்படியும் என்கூட உன் வீட்டில உன்னைய அனுப்பி வைக்கணும்னு நினைப்பாங்க. அதுக்குள்ள என்னோட எய்ம் அச்சீவ் பண்ணனும்னா பிஸ்னசை உடனே நான் ஸ்டார்ட் பண்ணனும்
அதுக்குத் தேவையான சோர்ஸ் எனக்கு வேணும். உங்க அப்பா சீதனமா எழுதிக்கொடுத்த அந்த ரோட்டுமேட்டு இடத்தை எனக்கு என் பேருல மாத்திக் கொடுத்துடு. அதைவச்சு என் பிஸ்னசை உடனே நான் ஆரம்பிச்சிடுறேன்” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் அன்றைக்கு அத்தை ராதா சீதனமாக அந்த நிலத்தை கேட்டு வாங்கியதற்கான காரணத்தை யோசித்தது நினைவுக்கு வந்தது. அதற்கு இப்பொழுது கிடைத்த பதில் அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
அப்போ நிலத்துக்காகத்தான் இவர் என்னை கல்யாணம் பண்ணினாரா..? அவள் மனதில் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது. அதனால் ஒரு வகை பிடிவாதமும் அவளுள் குமிழியிட்டது.
அவ்வளவு நேரம் எதோ ஒரு வகையில் அவனை அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவளை யோசிக்க வைத்தது.
அன்பிற்கு எந்தவித அடித்தளமும் போடாமல் அவனின் தேவைக்கு என்னைய பயன்படுத்த நினைக்கிற சுயநலவாதி இவன். என்று அவன் மீது அபிப்ராயம் உண்டாபது.
எதோ ஒரு வகையில் என் மனதை இவன் ஜெயிக்கட்டும் அதன் பிறகு அந்த நிலத்தை நானே இவருக்கு மாத்திக் கொடுத்துடுவேன் என்று தனக்குள் முடிவெடுத்தாள்.
விக்னேஷோ அவளின் எண்ணம் புரியாமல் தான் சொன்னதுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தீவிரமான யோசனையுடன் இருப்பதைக் கண்டவன் இவளை யோசிக்க விடக் கூடாது போல ரொம்ப உசாரான ஆளா இருக்காளே. என்று நினைத்தான்.
அவளை கவிழ்க்க கட்டிப்பிடிச்சு கிஸ் அடிப்பதுதான் சிறந்தவழி, என்று முடிவெடுத்து சட்டென நெருங்கி அவள் அதிர்ந்து விழிப்பதைப் பொருட்படுத்தாமல் இறுக்கி அணைக்க முயன்றான்.
அனிச்சை செயல்போல அணைக்க வந்தவனின் நெஞ்சில் கை இரண்டையும் வைத்து தள்ள முயன்றவள் அவனின் பனியனுக்குள் மொடமொடவென பேப்பர் கற்றைகள் போல ஏதோ தட்டுபடுவதைக் கண்டுக்கொண்டாள்.
தான் அனைத்ததும் பொட்டிப் பாம்பாய் தன்னிடம் அடங்கிவிடுவாள் என்று எண்ணியதற்கு மாறாக தன்னை தடுக்க முயன்று நெஞ்சில் கைவைத்தது தள்ளியதும்., அதைத்தொடர்ந்து கையெழுத்து வாங்க கொண்டுவந்த டாக்குமெண்டை கை ஸ்பரிசித்தில் அவள் உணர்ந்துகொண்டதையும் புரிந்தவன் மூளை சட்டென குழம்பிப் போனது தனது அணைப்பை தளர்த்திக்கொண்டான்.
அவள் தள்ளியதில் பேப்பர் எதுவும் கிழிந்து போயிட்டால் புதுசா ரெடிபண்ண டவுனுக்கு போகணுமே என்ற எண்ணத்தில் அவளின் செயலில் கோபம் கொண்டு சட்டென பனியனுக்குள் கிடந்த டாக்குமெண்டை வெளியில் எடுத்தான்.
ஏய்... அறிவிருக்கா..? உன்னால எனச்சொல்லிக் கொண்டே அந்த பேப்பர்களை ஆராய்ந்தவன் நல்லவேளை கிழியலை கசங்கிதான் இருக்கு என்றபடி அதன் சுருக்கங்களை நீவி விட்டான்.
“பத்திரம் போல இருக்கு... என்னதுங்க இது...?”
“உங்க அப்பா உன்னை கல்யாணம் பண்ணுறதுக்கு எனக்கு சீதனமா கொடுத்த அந்த நிலத்தை என் பேர்ல மாத்துற டாக்குமென்ட், இந்தா... இதில் கையெழுத்துப் போடு” எனச்சொல்லி அவளிடம் பத்திரத்தை நீட்டினான்.
அதை கையில் வாங்கியவளின் கண்கள் இன்னும் அதிர்ச்சியில் விரிந்தது. அதில் எழுதியிருப்பதை வெறித்துப் பார்த்தாள்.
முதல் இரவில் அவனுடன் கூடிக் கழிக்க அவள் விரும்பவில்லை தான் ஆனாலும் ஆயுளுக்கும் தொடர இருக்கிற அவனின் பந்தம் விட்டுப் போகம்படி முகம் திருப்பும்படி நடந்துகொள்ளக் கூடாது. தனக்கு குடும்ப வாழ்கையை தொடங்க அவகாசம் கேட்டு அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றால் தனது பிடிவாதத்தை தளர்த்தி ஏற்றுகொள்ள பழகிக்கிட வேண்டும் என்றே நினைத்திருந்தாள்.
ஆனால் அந்த நிலத்துக்காகத்தான் தன்னை கல்யாணம் செய்திருக்கிறான் போல என்ற எண்ணம் அவளை கொதிப்படைய வைத்தது. எனவே உண்டான ஆத்திரத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள்.
“இதோ பாருங்க, நீங்க பிஸ்னெஸ் ஆரம்பிக்கணும்னா அதுக்கு உங்க சொத்தை யூஸ் பண்ணனும் அதைவிட்டுட்டு எங்கப்பா எனக்கு கொடுத்துருக்க நிலத்தை எப்படி நீங்க கேக்கலாம், அவர் எனக்காக போட்ட நகை சொத்து எல்லாம் என்னோட பாதுகாப்புக்காக. என்னால இதுல கையெழுத்துப் போட முடியாது” என்றாள்.
***
துர்க்காவை விக்னேஷ் கர்டசிக்காக கொஞ்சம் ரெட் வொயின் எடுத்துக்கோ. இந்த ஒரு தடவை மட்டும் இதுக்குப் பிறகு நானும் இனி குடிக்க மாட்டேன் எனச் சொல்லி கட்டாயபடுத்தியதும் அரைகுறை மனதுடன்
“உண்மையாவே ரெட் வொயின் சாப்பிட்டா போதை ஏறாதுல...? இருந்தாலும் இதோட இனி நீங்களும் குடிக்க மாட்டீங்கனு சொன்னதுக்காக கொஞ்சமா மட்டும் எடுத்துக்குறேன். நீ இருக்கிற தைரியத்தில் இந்த ஒரு தடவை எடுத்துக்குறேன் விக்கி” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும் மகிழ்ச்சியுடன் அத்தனை பேர் முன்பும் சற்றும் யோசிக்காமல் அழுத்தி அவள் கன்னத்தில் முத்தமிட்டு “தேங்க்ஸ் டியர்” என்றான்.
அவனிடம் சரி எனச் சொன்னாலும் மனதினுள் ஒரு பதட்டமும் தப்புப் பண்றோமோ என்ற தயக்கத்தோடு சம்மதத்தை சொன்னவளின் கன்னத்தில் பதிந்த அவனின் முதல் முத்தம் ‘ஜிவ்வென்ற போதையை மது அருந்தாமலேயே பற்ற வைத்து அவளின் தயக்கத்தை பின்னுக்குத் தள்ளியது.
இருவரின் அன்னியோன்யத்தை கண்ட இளமைப் பட்டாளங்கள் இன்னும் இன்னும் கேலி செய்து அவர்களின் நெருக்கத்தை ஊக்கப் படுத்தியது போதையில்.
முதலில் கொஞ்சமாக ரெட் வொயின் அவளுக்கு கொடுத்த விக்னேஷ் அடுத்ததாய் ஆரஞ் ஜூஸ் கலரின் ஒன்றை கொடுத்தான். அதன் சுவையும் சாத்துக்குடி ஃப்லேவரில் இருக்கவும் கண்ணாடி டம்ளர் நிறைய இருந்ததை பேசிக்கொண்டே விக்னேஷ் உடன் ஒட்டி உரசி அமர்ந்தபடி கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக்கொண்டே அருந்தி முடிந்தாள்.
நேரம் செல்லச்செல்ல அத்தனை பேர் மத்தியில் காதலனின் சில்மிசத்தை தடுக்க கூட மறந்து அவள் அறியாமல் அவளுக்கு கொடுக்கப்பட்ட மது போதையில் அனுமதித்து அவனுடன் ஒன்றிப் போனாள்.
விக்னேஷின் மனதில் அவளின் நெருக்கம் சாமரசத்தை வீசச் செய்தது. இங்குள்ளவர்களுள் துர்க்கா உட்பட யாருக்கும் அவனுக்கு கல்யாணமாகிய விஷயம் தெரியாது.
மேலும் அந்தக் கல்யாணத்தில் அவனின் கயமை எண்ணத்தை கண்டுகொண்ட பட்டிக்காட்டுக்காரி அவனின் அணைப்பை வெறுத்து ஒதுக்கியதில் உண்டான காயமும் தோல்வியும் கொடுத்த ஆத்திரம் துர்க்காவின் நெருக்கத்தில் தணிந்துக் கொண்டிருந்தது.
மனதினுள் அழகு மலரிடம், “பட்டிக்காடு உனக்கே அம்புட்டு திமிர் இருந்தா எனக்கு எம்புட்டு இருக்கும். தாலி கட்டியும் வாழா வெட்டியா காலம் முழுக்க நீ இருக்கப் போற... ஆனா நான் உன்னைவிட படிப்பில அழகில உசந்த, எனக்கு ஈக்வலான பெர்சனாலிட்டி இருக்கிற என் துர்க்காவோட இன்னைக்கே என் லைஃபை ஸ்டார்ட் பண்ணி உன்னை பழி வாங்கப் போறேன்’ என்று சூளுரைத்துக்கொண்டான்.
---தொடரும்---

No comments:
Post a Comment