Post Page Advertisement [Top]

                               பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை

என் மூன்றாவது கதை பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை


கதாநாயகன்;தீரமிகுந்தன்.

கதாநாயகி;யாழிசை
            

Episode 01                       Episoe 02
Episode 03                                                       Episode 04
Episode 05                                                       Episode 06
Episode 07                                                       Episode 08
Episode 09                                                       Episode 10
Episode 11                                                       Episode 12
Episode 13                                                       Episode 14
Episode 15                                                       Episode 16
Episode 17                                                       Episode 18
Episode 19                                                       Episode 20
Episode 21                                                       Episode 22
Episode 23                                                       Episode 24
Episode 25                                                       Episode 26
Episode 27                                                       Episode 28
முதல் பாகம் இத்துடன் முடிந்துவிட்டது.
இரண்டாம் பாகம்
Episode 29                                                      Episode 30
Episode 31                                                      Episode 32
Episode 33                                                      Episode 34
Episode 35                                                      Episode 36
Episode 37                                                       Episode 38
Episode 39                                                       Episode 40
Episode 41
என்ற கதையை கொஞ்சம் இடைவெளி விட்டு திரும்ப எழுத ஆரம்பித்துவிட்டேன். நான் இதன் முதல் பாகத்தை வேறுதளத்தில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்.அதன் இரண்டாம் பாகத்தை எழுதி கொடுக்க என்னால் அப்போது இயலவில்லை இப்பொழுது இரண்டாம் பாகம் எழுததொடங்கவுள்ளேன். என் முதல் பாகத்தை என் தளத்தில் உங்களுக்கு கொடுத்து முடிப்பதற்குள் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து தொடர்ந்து உங்களுக்கு கொடுக்க நினைத்துள்ளேன்.விரைவில் உங்களை சந்திக்க வருகிறான் தீரமிகுந்தன். ஒரு வருடம் முன்பு எழுதிய முன்னோட்டத்தை அப்படியே இப்பொழுது உங்களது பார்வைக்கு கொடுத்துள்ளேன்.
            
இந்த கதை இன்றைய நம் சமூகத்தின் நிலைபற்றி கூகுளில் நான் அலசிபார்த்ததின் தாக்கத்தால் உருவானது . அதற்காக நீங்கள் என்னை சமூக சீர்திருத்தவாதி என்று எண்ணிவிடவேண்டாம் .நான் பக்கா சுயநலவாதி என்வீடு, என் ஊர் ,என்தேசம் ,என் இன தமிழ் மக்கள் என்று என் என்னுடைய என்று பேசும் சுயநலவாதி .
           
நான் மிகச் சாதாரண பெண் அதுவும் குடும்பம் மட்டுமே எனது உலகம் அதை தாண்டி எந்த சிந்தனையோ செயலோ புரிய அனுமதிக்காத குடும்பச்சூலழுக்கு பழக்கப்பட்ட பெண்.
                 
ஆனால் எனக்குள்ளேயும் பல தேடல்கள் இருந்தது முன்பெல்லாம் நூலகத்தில்  இருந்து எனக்கு கதை புத்தகங்களை என் நச்சரிப்பு தாங்காமல் என் கணவர் எடுத்துகொண்டு வந்து கொடுப்பார். கடந்த ஐந்து வருடமாக வீட்டில் கணினி இருந்ததால் அதில் இருந்து புத்தகங்களை தரவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன் கணினியில் படிக்க ஆரம்பித்தபிறகு என் தேடல்களும் அதிகரித்துக்கொண்டே சென்றது
             
அவ்வாறு தேடிய தேடல்களின் இன்றைய நம் தமிழ்க்குடியை சூழ்ந்திருக்கும் போராட்ட மேகத்தை பற்றி நான் வலைதளத்தில் தேடல்களை மேற்கொண்டேன். அவ்வாறு நான் வலைதளத்தின் மூலம் சேகரித்த விசயங்களில் என்னை தாக்கிய சில வார்த்தைகள்                      பொருளாதாரஅடியாள்,இலுமுனாடீஸ்,கார்பரேட்டார்ஸ் முதலியன.
     
அந்த காலத்தில் ஒரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க வேண்டுமானால் போர்தொடுத்து அந்நாட்டை வென்று அங்குள்ள செல்வ வளத்தை கொள்ளை அடித்து சென்றனர் எதிரி நாட்டார் .ஆனால் இன்று முடிசூடா அரசர்களாக பணத்தில் கொழுத்த உலக வர்த்தகதாரர்கள் தங்களது அடங்காத அசுர பண பசிக்கு ஒரு நாட்டின் செல்வங்களை நூதனமுறையில் கொள்ளையடிகின்றனர்.
      
இதுபோன்ற கொள்ளையடித்தல் சம்பவங்கள் நம் நாட்டிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறதோ! என்ற அச்சமும் அந்த கோர தாண்டவத்தை நம் மண்ணில் கார்ப்பரேட்டர்கள் ஆடிக்கொண்டிருகிரார்களோ என்ற சந்தேகமும் ,கேள்வியும்   இனையதளத்தில் நான் தேடிய தேடல் மூலம் எனக்குள் எழுந்தது. மேற்கூறியவை பற்றிய தேடலின்போது “Confessions of an Economic Hitman by John Perkins:2004 என்ற புத்தகத்தை படிக்கச்சொல்லி நம் தமிழ் ஆவலர்கள் சிலர் கூறியதைகேட்டு அதன் தமிழாக்கம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். தமிழில்:போப்பு என்பவரின் மொழிபெயர்ப்புவை நான் வாங்கி படித்தேன் அந்த புத்தகத்தை படித்ததின் தாக்கமே இந்த கதை.
மேற்கூறிய என் வார்த்தைகளில் இருந்து இது சமூக நாவல் என்றெல்லாம் நீங்கள் எண்ணிவிடவேண்டாம் இதுவும் என் வழக்கமான பாணியில்  காதல் கதையாகவே இருக்கும் .
    
இந்த கதைக்கும் உங்களின் கருத்துக்களையும் ஆதரவையும்எதிர்பார்க்கும்உங்களின்தோழி தீபாஸ்.
இக்கதையில் எபிகளின் link கீழே கொடுத்துள்ளேன் வாசித்துவிட்டு comment கொடுங்கப்பா.

10 comments:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib