பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை...![தீபாஸ்-ன்]
அத்தியாயம்[முதல் பாகம்]-28
ராஜேஷ்
பத்மினியுடன் பேசிக்கொண்டே காரின் முன்கதவை அவளுக்கு திறந்து விடும் நேரம்
அக்காரிலிருந்து
பத்தடி தூரத்தில் வந்து நின்ற பஸ்ஸில் இருந்து வானவராயரின் ஊரில் இருக்கும் ஒரு
குடும்பத்திலுள்ள குழந்தைக்கு வெளியூரில் இருந்த அவர்களின் குலதெய்வத்திற்கு
மொட்டை எடுத்து காதுகுத்த சுற்றத்தாருடன் சென்ற ஒரு கோஸ்ட்டி வந்து இறங்கியது.
அவர்கள்
அனைவரின் பார்வையிலும் ராஜேஷ் பத்மினிக்காக கார்கதவை திறந்து விடுவதையும் அவன்
சுற்றிவந்து காரில் ஏறி காரை ஓட்டிச்சென்றதுவரை அத்தனையும் விழுந்தது.
எனவே
ஊருக்குள் வந்ததும் அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்னதான் ஊர் பெரிய
வீட்டு பெண்ணாக இருந்தாலும்
இரவு
நேரத்தில் இப்படி கல்யாணம் ஆன பொண்ணு அடுத்த ஆம்பளைகூட போறதை பார்த்துட்டு எப்படி
சும்மா இருக்க முடியும்.
இந்த
ஊருக்குன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாம போயிடுமே இதை பார்குற மத்தவங்களும் தப்பு
பண்றது தவறில்லை என்று நினைச்சிட்டா ஊர் என்னாவது.
ஒழுக்கமில்லாதவங்களை
ஊரில் சேர்க்காமல் தள்ளி வைப்பதுபோல பெரியவீட்டு வானவராயர் பொஞ்சாதியையும் தள்ளி வைக்க
நாளைக்கு ஊருக்குள் பிராது கொடுக்கணும் என்று பேசிக்கொண்டனர்.
இவ்விசயம்
கண் மூக்கு காத்து கொடுத்து அன்றிரவே பலவிதமாக ஊருக்குள் பரவி அது வானவராயரின்
வீட்டிற்கும் வந்து சேர்ந்தது விடியலில்.
எப்பொழுதும்
பத்மினி லேட்டாகவே எழுந்துகொள்வதால் காலையில் ஆறுமணிக்கு வீட்டுக்கு
பால்கரக்கவரும் பால்பான்டியின் மூலம் வானவராயரின் அம்மா காத்தில் இவ்விசயம்
விழுந்தது.
வயலுக்கு
நடவுக்கு எத்தனை ஆள் கூட்டிவர என்று கேட்டுவந்த முனியாண்டிமூலம் வானவரயரின்
தந்தையின் காதிலும் விழுந்தது..
தோட்டத்தில்
பூஜைக்கு பூப்பறிக்கச்சென்ற வானவராயரின் அக்கா தேவகியின் காதிலும் விழுந்தது.
அவளின்
மகளும் வானவரய்ரின் மனைவி பற்றி தவறானப் பேச்சு ஊருக்குள் போய்கொண்டிருப்பதாகவும்
சில
பெருசுகள் அவள் மீது நாளைக்கு பிராதுகொடுக்க பேசிக் கொண்டிருப்பதும் தோட்டத்தில்
ஓரமூட்டை தூக்க வந்த பொன்னையா உடன் வந்த அவளின் வீட்டுக்காரி கூறினாள்.
அதனை
கேட்ட தேவகிக்கு வீட்டிற்குள் தானே தூங்கிக் கொண்டிருகிறாள் இவங்க
சொல்றதப்பார்த்தா அவ எங்கோயோ ஓடிப்போயிட்ட மாதிரில்லா இருக்கு என்று என்னும் போதே
அடிவயிறு கலங்க வேகமாக பத்மினியை அவளின் அறையில் இருக்கிறாளா என்று
தெரிந்துகொள்ள ஓடிச்சென்று அவளின் ரூம்
கதவை தட்ட கைவைத்தால் அது உள்ளே லாக் போட்டாமல் திறந்திருந்தது.
உள்ளே
சென்றவளின் கண்ணில் பட்டது அங்கிருந்த மேஜையின்மேல் பேப்பர் வெயிட்டரின் கீழ்
இருந்த ஒரு தாள்.
பதட்டத்துடன்
அதை எடுத்தவளுக்கு அதில் இருந்த ஆங்கிலவாசகம் என்ன என்று தெரியவில்லை.
எனவே
வேகமாச்சென்று அவளின் பீரோவைத் திறந்துபார்த்தாள். அதிலிருந்த அவளின் உடுப்புக்கள்
அடுக்கிவைக்கபடிருந்த இடம் காலியாக இருந்தது.
இருந்தும்
பாத்ரூமிற்குள் இருந்தாலும் இருக்கலாம் என்று சென்று பார்த்தவள் அங்கேயும் அவள்
இல்லை.
தேவகிக்கு
படபடவென வந்தது. பட்டணத்து வாசம் மகளின் வாழ்வை தடம் பிரட்டிவிடுமோ என்று அஞ்சி
இங்கு வந்து ஊரே மெச்சும் வகையில் வாழ்ந்துவரும் தன் தாய்வீட்ட்டில்
கம்பீரமே
உருவாக வளம் வரும் தன் தம்பிக்கு கல்யாணம் செய்துகொடுத்து வாழ வைத்துவிட்டேன் என்
மகளை என்று இறுமாப்புடன் இருந்தேனே.
கிடைத்த
அற்புதமான வாழ்கையை முட்டாளாக இழந்த அவளின் மகளுக்காக அழுவதா?
இல்லை
தான் சொன்ன காரணத்துக்காக மறுவார்த்தை ஏதும் கூறாமல் அவளுக்கு என்னை கல்யாணம்
செய்வதில் சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று பேசி அவளின் சம்மதம் பெற்று
மணந்தவள்
இன்று பொய்த்துப்
போனதால் கிடைத்த ஏமாற்றத்தால் அவமானப்பட்டு நிற்கும் தன் தம்பிக்காக
வருத்தப்படுவதா?
ஆயிரம்
கனவுகளோடு என்னை வளர்த்த தாய்தந்தை தவிக்கவிட்டு காதலித்தவரையே கணவனாக அடையவேண்டும்
என்பதற்காக இருபத்தியோரு வருஷத்துக்கு முன் என்னைப் பெற்றவர்களை தலை
குனியச்செய்தேன்.
அதை
மன்னித்து ஏற்றுக்கொண்ட தன் தாய் வீட்டின் நிலையும் தனது தம்பியின் நிலையும் தனது மகளால் மீண்டும் தலை குனியும் நிலை வந்ததை கண்டவளுக்கு
எப்படி இதை சரிசெய்வேன் என்று சஞ்சலம் வருத்தம் இயலாமைத் தாக்கியது.
அந்நேரம்
வெளியே அவளின் தாயின் குரல் அவளைத் திடுக்கிட வைத்தது. ஏ...ராசா என்னாச்சு
உங்களுக்கு என்ற குரல் அவளுக்கு கேட்டதும் பதறியபடி வெளியில் வந்தாள் தேவகி.
வானவரயரின்
அப்பா திருவேங்கடம் தன்னிடம் முனியாண்டி கூறிய செய்தியை எப்படி தன மனைவி
ராசாத்தியிடம் கூற என்ற பதை பதைப்புடன் இருந்தார்.
அவரது
மனைவிக்கு அவ்விசயம் அரசல் புரசலாக காதில் விழுந்ததை அவர் அறியவில்லை.
அந்நேரம்
இரவு வீட்டில் தங்காமல் பண்ணைக்குச் சென்ற தன் மகன் இன்னும் வீட்டிற்கு திரும்பாத
நிலையில் கம்பீரமான தனது மகன் காதில் இவ்விசயம் விழுந்தாள் அவன் எவ்வாறு
துடிப்பான்.
என்று
நினைத்தவருக்கு நெஞ்சில் முணுக்கென்று முளைத்த வலி அதிவிரைவில் அதிகரித்து
வியர்வையில் குளித்தபடி தன் நெஞ்சை பிடித்தபடி தனது சாய்வு நாற்காலியில் உட்கார முயன்றவர்
உட்காராமல் தடாரென விழுந்தார். அவரின் உயிரும் அதேநிமிடம் பிரிந்தது.
பண்ணை வீட்டிற்கு
சேதி பறந்தது. விரைந்தோடி வந்த வானவராயர் கண் முன்னே சடலமாகி இருந்த தந்தையின் இறுதிக்
காரியத்தை செய்தவருக்கு தனக்கு மனைவியாக
வந்தவளால் ஏற்பட்ட இழப்பை கண்டவருக்கு நெஞ்செல்லாம் ரணமாகிப் போனது.
அன்றிலிருந்து
அன்னம் தண்ணி கூட அருந்தாமல் வெறித்தபடி அமர்ந்திருந்த தனது தாயையும் தன் மகளை இறந்துவிட்டால் என்று கூறி தனது தாய்க்கும்
தனக்கும் சேவகியாக மாறிப்போன அக்காவையும் கண்டவர் துக்க வீட்டின் சூழல்
காரணமாகவும் பின்நடந்த தனது தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரி வீடு
என்று அழைந்தவருக்கு.
மனதில்
ஓரத்தில் முள்ளாய் குத்திகொண்டிருந்த தன மனைவியின் நினைவை வெளிபடுத்தவும் அவளை
தேடிப்போக சந்தர்ப்பம் ஏற்படாமல் போனது.
அவரின்
தகப்பனின் பதினாறாம் நாள் காரியத்தின் போதுவரை .அந்த வீட்டில் அருகில் வானவராயரின்
வீட்டின் தயவில் பாட்டி பேத்தியுமாக வாழ்ந்து வந்த வெள்ளையம்மா தான் அந்த வீட்டின்
பொறுப்பை வேலைகாரி என்ற இடத்தில் இருந்து செய்யாமல் வீட்டின் ஒரு ஆளாக இருந்து
சீர்படுத்த முயன்றாள்.
நேரா
நேரத்திற்கு சமையல் செய்து வானவராயரை சின்னய்யா சாப்பாடு எடுத்துவச்சுட்டேன் சாப்பிட்டுபோங்க
அப்போத்தான் ஜமீந்தாரம்மாவை என்னால் சாப்பிடவைக்க முடியும் என்றும், ராசாத்தியையும்
தேவகியையும் இப்படி இருந்தீங்கன்னா எப்படி சின்னய்யாவை தேத்தி கொண்டுவருவீங்க
என்று மிரட்டி சாப்பிட வைப்பதும்.
கணக்கு
கணேஷப்பிள்ளையிடம் வீட்டுக்கு வரும் நெல் மூட்டை கணக்கும் கூலிக்கு வந்த ஆட்கள்
கணக்கும் கூறி கணக்குச்சொல்வதும்.
பின் வானவராயரிடம்
அன்றைய வரவு செலவுகளை ஒப்பித்து இரவு படுக்க மட்டுமே வீட்டுக்குபோகும் அவரின்
குணம் பொறுமை அந்த குடும்பத்தின் மீதிருக்குமக் அக்கரை ஆகியவற்றை பார்த்த தேவகி,
உடலுக்கு
முடியாமல் இருக்கும் தன அம்மாவிடம் என் மகச் செத்துபோய்டாங்கரதுக்காக என் தம்பியை
இப்படியே விட்டுவிட முடியுமா.? என்று மனதிற்குள் தன மகளை பற்றிய கவலை இருந்தாலும்
தன் தாய்வீட்டில் இந்த நிலைக்கு காரணமான தன மகளின் மீது அதை விட கோபம் அதிகமாக
இருந்ததால் அவ்வாறு கூறினாள்.
அதுவரை
தனது மகளின் முகம் பார்த்து பேசாமல் இருந்த ராசாத்தி அவள் அவ்வாறு சொன்னதும்
நிமிர்ந்து மகளின் முகம் பார்த்தார்.
இத்தனை
நாள் பாராமுகத்துடன் தன்னுடைய மகள் மீது இருந்த கோபத்தில் தன்னை ஏறெடுத்துக்கூட
பார்க்காமல் இருந்த தன் அம்மா வானவரயரின் வாழ்க்கை பற்றி பேசவும் நிமிர்ந்து பார்ப்பதை கண்டவர்
கடகடவென தன் மனதில் உள்ளதைச் சொன்னார்.
ஆமாம்மா
என் மகச் செத்துப்போயிட்டா... அதனால இந்த வீட்டு மனுசமக்க மேல அன்பா பாசமா
பொறுப்பா உள்ள வெள்ளையம்மாவை அப்பாவின் பதினாறாம் நாள் விசேசத்தப்பவே உங்க
உடல்நிலையை காரணமாக வச்சு என் தம்பிக்கு கல்யாணம் முடிச்சுடனும்.
அப்படியில்லையினா
இனி அவன் வேறு கல்யாணம் செய்யவைப்பதே முடியாத காரியமாகிடும் இனி என் வயித்தில
பிறந்த பாவி எக்காரணம் கொண்டும் இந்த வீட்டு வாசல்படி மிதிக்க நான் விடமாட்டேன்.
இனி இந்த
குடும்பத்தில் வாழும் தகுதிய அவ இழந்துட்டா.என்று கூறினார் தேவகி.
ராசாத்திக்கும்
அதே எண்ணம் மனதில் இருந்ததால். இதை நீ செஞ்சு முடி அப்போதான் நீ என் மகள்னு இனி
நான் உரிமையா உன் கூட பேசுவேன் என்று பதில் கூறிவிட்டு அமைதியானார்.
அவரின்
வார்த்தைகளை கேட்ட தேவகிக்கு தன் அம்மாவின் அன்பையும் மன்னிப்பையும் தனது தம்பியின்
சந்தோசத்தை மீட்டெடுக்கவும் இது ஒன்றே முடிவு என்று நினைத்து வெள்ளையம்மளுக்குக்
கூட தெரியாமல் அவர் பாட்டியிடம் தனியாக பேசி சம்மதம் வாங்கினாள் தேவகி.
பதினாறாம்
நாள் காரியத்திற்கு வந்தவர்கள் முன்னிலையில் தன் மனதில் இருப்பதை கூறி தனது
தம்பியை வெள்ளையம்மாவின் கழுத்தில் தாளிகட்டச்சொல்லி வற்புறுத்தினார்.
அதற்கு
மறுப்புத் தெரிவித்த வானவராயரிடம், தற்கொலை மிரட்டல்விட்டு தான் நினைத்ததை
சாத்தித்தார் தேவகி.
அதன்
பின் வெள்ளையம்மாளும் வானவராயரும் ஊருக்கு முன்பு மட்டுமே பல வருடங்கள் கணவன்
மனைவியாக இருந்தாலும் இருவரும் இணையாமலேயே இருந்தனர்.
நான்குவருடம்
சென்ற பின்பே வானவரயர் வெள்ளயமாளின் தன்னலமில்லா அன்பால் ஈர்க்கப்பட்டு இரண்டாவது
முறை இரண்டாம் தாரமான வெள்ளையம்மாளின் மேல் காதலில் விழுந்து அவருடன் கணவனாக
இணைந்தார்.
ராஜேசுடன்
ரயில்வே ஸ்டேசன் சென்ற பத்மினியை டெல்கி ரயில் ஏறவிடாமல் தடுக்க முயன்றான்.
தன்னுடன்
வரச்சொல்லி தான் அவளுக்கு பாதுகாப்பாக
இருப்பதாக கூறினான்.
ஆனால்
பத்மினியோ தனக்கு யார் தயவும் தேவையில்லை தன்னுடைய சொந்த உழைப்பால் தன்னால் தனியாக
வாழமுடியும் என்று கூறி டெல்கியில் வந்து தனது பரதநாட்டிய குழுவில் ஆசிரியராக
பொறுப்பேற்றார்.
அவர் ஏதோ
ஒரு கோபத்தில் வந்து விட்டாராகினும் ஒவ்வொரு நாளும் வானவராரை பார்க்கவேண்டும் என்ற
ஆவலும் அவருக்கு எழாமலில்லை.
தான்
அவர் அடித்த அடிக்கு கோபித்துகொண்டு வந்துவிட்டேன் என்பதற்காக தன்னை தேடி வராமல்
அவர் இருப்பதை கண்டு தன மேல் அவருக்கு காதல் துளி கூட இல்லையோ என்ற சஞ்சலம்
கொண்டார்.
நாள்செல்லச்செல்ல
பத்மினிக்கு தேவையான வருமானமும் நண்பர்களுக்குள்ளான சந்தோஷங்கள் குறைவில்லாமல்
இருந்தாலும் மனதின் ஓரம் தன்னைத் தேடி வானவராயர் வராததினால் உண்டான ஏமாற்றம்
எந்நேரமும் வதைத்துக்கொண்டே இருந்தது.
நாற்பது
நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தான்
கற்பமாக உள்ளதையே பத்மினி உணர்ந்தாள்.
அதை
உணர்ந்தபின் அவளால் வானவரயரிம் மேல் கோபத்தை பிடித்துவைத்துகொள்ள முடியாத அளவில்
சந்தோசமும் உண்டாது.
கூடவே
தான் செய்ததை திரும்ப நினைத்துபார்க்கையில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தன் மேல் கோபம் கொள்ளுமாறு சூழ்நிலையை வானவராயருக்கு
ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தாள்.
இப்பொழுது
நினைக்கும் போது தன்மேல் நிறைய தவறாகக் கணிக்கக் கூடிய சூழலும் வானவராயர் இடத்தில்
வேறு ஒருவன் இருந்தால் இன்னும் மோசமாக தன்மேல் பழி சுமத்தும் சூழல் இருப்பதும்
அவளுக்கு தெளிவானது.
எனவே இனியும்
அவர் தன்னை தேடிவருவார் என்ற நம்பிக்கையில் இருக்க கூடாது என ஊருக்கு கிளம்பி தன்
வயிற்றில் அவரின் வாரிசு வளர்வதை சொல்லனும் எனக் கிளம்பிகொண்டிருகும் போது பத்மினியைத்
தேடி ராஜேஷ் அங்கேயே வந்தான்.
ஏனோ
பத்மினிக்கு தான் இபொழுது இருக்கும் மனநிலையில் ராஜேசை சந்திக்கும் விருப்பம்
இல்லை.
ஏனோ ஒரு
வகையில் நண்பனான அவன் எனக்காக என் சந்தோசத்துக்காக சினிமா கூட்டிக்கொண்டு போனதால்
தான் தனக்கும் வானவவராயருக்கும் இந்த பிரிவு உண்டானது.
இருந்தாலும்
தற்போதைய தன் நிலைக்கு அவனும் ஒரு காரணம் என்பதால் அவனின் வரவு அவளுக்கு
பிடித்தமானதாக இல்லை.
ஆனால்
ராஜேஷ் முன் எப்பவும் விட மிகவும் ஆர்வமாக பந்தாவாக அவளுக்கு நிறைய
பரிசுப்பொருட்களை வாங்கிகொண்டு அவளை தேடிவந்திருந்தான்.
எப்பொழுதும்
பத்மினி அல்லது பத்தூ என்று அழைப்பவன் வந்ததும் ஹாய் சுவீட்டி என்று விரித்த
சிரிப்புடன் தனது கையில் வைத்திருந்த பூங்கொத்தை அவளிடம் கொடுத்தான்.
அதன்
பின் அவள் அழகு இப்பொழுது இன்னும் கூடியிருப்பதாகவும் தங்களுக்கிடையில் இனி எந்த
தடையும் இல்லையென்றும் கண்டபடி பிதற்றினான்.
உங்களுக்கு
என்னாச்சு ராஜேஷ் நான் உங்களோட பிரன்ட் ஜஸ்ட் பிரன்ட் ஒன்லி. ஆனா புதுசா இருக்கு
உங்க பேச்சு நான் என்னமோ உங்க லவ்வர் மாதிரி பேசிட்டு இருக்கீங்க.
இதை நான்
உங்ககிட்ட எதிர்பார்க்கல நான். மிஸ்ஸஸ் வானவராயன்றது உங்களுக்கு ஞாபாகம் இல்லையா?
அப்படி இல்லாட்டி
இப்போ நான் உங்களுக்கு சொல்றேன் கேட்டுக்கோங்க இனி இது போல வானவராயரின் வொய்ப் கூட
நீங்க பேசுறதா இருந்தா உங்க பிரண்ட்ஷிப்பே இனி வேண்டாம் என்றாள்.
அவளின்
இந்த நிமிர்வானப்பேச்சு அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பி அவனின் உண்மையான முகத்தை
அவளிடம் வெளிகாண்பிக்கச் செய்தது.
மேலும்
அவளின் இப்பொழுதைய அநாதரவான நிலை அவனுக்கு அவள் எளிதானவளாக எண்ணவைத்தது.
எனவே
கடகடவெனச் சிரித்தவன். அது பாஸ்ட் பத்தூ. இப்போ நீ என்னோட ஓடிவந்த என் காதலி...!
அதனால உன் எக்ஸ் ஹஸ்பென்ட் வானவராயருக்கு உன் அம்மாவே இன்னொருகல்யானம் முடிச்சு
வச்சுட்டாங்க.
என்
புருசன்னு இப்போ நீ வானவராயன தேடிப்போன ஊரே சேர்ந்து உன் மேல சானிய கரைச்சு
ஊத்தும் கட்டுன புரசனையும் நழுவவிட்டுட்ட இப்போ உன்னை வச்சுக்க போற என்னையும்
விரட்டிடாத.
உன்
அழகுக்கு உன்னை கல்யாணம் செய்யணும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன்.ஆனால் அந்த
வானவராயனுக்கு போன்னாடியா போயி அவன் எச்சி படத்தால உன்னைய இப்போ வச்சுகிடனும்
என்று நினைகிறேன்.
என்று
அவன் கூறி முடிக்கையில் அங்கு மூலையில் இருந்த துடப்பத்தை கையில் எடுத்தவள் அவனை
கண்மண்தெரியாமல் அடிக்க ஆரம்பித்தாள்.
அவளின்
இந்த அதிரடியில் அரண்ட ராஜேஷ் சத்தம் கேட்டு அங்கு அவளுக்கு தெரிந்தவர்கள் கூட ஆரம்பித்ததும்
மாட்டினால் அதோகதி ஆகிடும் என்று தப்பித்து ஓடிவிட்டான்.
அவன்
சென்றதும் தான் ஊருக்கு போக பேக்செய்த துணிபை திருப்பி கவிழ்த்தி கொட்டியவள்
தனிமையில் ரூம் கதவை சாத்திவிட்டு கதறி அழுதாள்.
அவளால்
வானவராயர் வேறு ஒருத்தியை கல்யாணம் செய்துகொண்டார் என்று கூறியதை நம்பவே இயலவில்லை.என்றாலும்
அது உண்மை என்றால் தன்னால் அதை நேரில் சென்று பார்த்து உறுதிசெய்ய நினைக்கவே மனம் பயத்தில் கிடுகிடுத்தது.
எனவே
அவள் வீட்டில் இருந்த டெலிபோனுக்கு டரங்கால் புக் செய்து பேச முடிவெடுத்தாள்.
இணைப்பு கிடைத்த
போது வானவராயர் வெளியில் போயிருந்தார். வெள்ளையம்மால் சமையல் செய்துகொண்டிருந்தால்
ராசாத்தி உடள் நிலை இன்னும் சீராகாததால் படுக்கை அறையில் இருந்தார்.
எனவே
தேவகிதான் கூடத்தில் இருந்த டெலிபோன் அழைப்பை ஏற்று பேசினார்.
எதிர்பக்கம்
ஹலோ நான் பத்மினி பேசுறேன் என்றதுமே அவரின்
நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. மகளுக்காக கண்ணீர் அருவியாக கன்னத்தில் வழியவழிய
துடைத்துக்கொண்டே குரலில் தனது நெகிழ்ச்சியை காண்பிக்காமல் பேசினாள்
அந்த
பேரில் ஒருத்தி முன்னாடி இந்த வீட்டில் இருந்தாள் ஆனால் அவ இப்போ உயிரோட இல்லை.
என்
உறவுன்னு சொல்லிக்கொண்டு இந்த ஊருபக்கம் வந்தே உன்னையும் ஊர்வாசலிலே நிறுத்தி
உள்ளவராம செத்தவள திரும்ப சாகடிச்சிட்டு நானும் செத்துப்போயிடுவேன்.
என்
தம்பிக்கு உன்னமாதிரி பேய கட்டிவச்ச நானே அவனுக்கு இப்போ அந்த பூமாதேவி போல அன்பான
பொண்ண கட்டிவச்சுருக்கேன்.
உறவுன்னு
சொல்லிகிட்டு ஊருக்குள் வந்து உன்னால என் அப்பா மட்டும் செத்தது போதும் .திரும்பி வந்து எங்க எல்லோரையும்
சாகடிச்சுடாத என்று படபடவென பேசியவள் அவளின் பதிலைகூட கேட்காமல் ரிசீவரை
தாங்கியில் வைத்துவிட்டாள்.
ஏற்கனவே
ராஜேஷ் சொன்னது தான் இருந்தபோதிலும் தனது தாயாரின் வாய்மொழியாக கேட்டது
பத்மினிக்கு அத்தனை வலிநிரைந்ததாக இருந்து.
நடைபிணமாக
இருந்தவளுக்கு அமெரிக்காவில் திருமணமாகி கணவருடன் சென்ற அவளது தோழி விசாலி அங்கு
ஆரம்பித்திருந்த நடனப்பள்ளிக்கு ஆசிரியர் தேவைபட்டதாக கூறவும் இங்கு இனி இருக்க
முடியாது என்று முடிவெடுத்து தானே அந்த வேலையில் சேர விரும்புவதாக கூறி அவளது
நடனப்பள்ளியின் உதவியோடு நடனஆசிரியர் பணிக்காக அமேரிக்கா புறப்பட்டுவிட்டாள்
பத்மினி.
வகுலா
தீரனின் இந்த அதிரடியை எதிர்பார்த்து இருக்கவில்லை. அவனை சாதாரண ஒரு பிஸ்னஸ்
மேனாகவும் பிராங்கின் பிஸ்னஸ் அட்வைசர் என்ற முறையிலும் தான் தெரிந்து
வைத்திருந்தாள்.
அவன்
இந்தியாவில் பிராங்கிற்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டிருகிறான் என்று பிராங்கின்
மூலம் அறிந்திருந்தால்தான் என்றாலும் வெப்பன்ஸ் கொண்டு மிரண்டுபவனாக அவள் அவனை
நினைத்துகூட பார்க்கவில்லை.
பிராங்கும்
அவளிடம் அவனின் இந்த தன்மையை கூறவில்லை. தன்னுடைய அக்கவுண்டில் ஒரு லம்ப் அமௌன்ட்
தீரனுக்காக அவனின் நண்பன் இம்மாமி ஹேக் செய்து இந்தியாவில் அவன் செட்டில் ஆகிவிட வழிசெய்துவிட்டான்
மேலும்
அந்த அமௌவுன்ட் லூடெட் ஆனது பற்றி வெளியில் கூறமுடியாது ஏனெனில் அப்பணம்
கவெர்மென்ட்க்கு தெரியாமல் நான் வைத்திருப்பது சோ எப்படி அவன் டிரிக்கியா என்னிடம்
கொள்ளயடித்தானா அதேபோல் நானும் அவன் என்னிடம் கொள்ளையடித்த பணத்தை அவனிடமிருந்து
அவ்வாறே மீட்டெடுக்கணும்.
அந்த
அமௌன்ட் உனக்காக நான் சேர்த்து வைத்தது என்று கூறி அது நம் கைக்கு வந்தால்தான்
நம்மால் மேரேஜ் லைப்பை லக்சூரியசாக வாழமுடியும்.
சோ..
அந்த பணம் திரும்ப நம்ம கைக்கு வர நீ எனக்கு சின்ன ஹெல்ப் பண்ணு என்றவன் அவளுக்கு
போட்டுக்கொள்ள விதவிதமான ஆர்னமன்த்ஸ் அடங்கிய ஒரு பாக்ஸ்சை கொடுத்தான்.
அவன்
கொடுத்த நகைகளை யோசனையுடன் வாங்கிய வகுலாவிடம் நீ எனக்காக செய்ய வேண்டியது
ஒன்னேஒண்ணுதான்
எனக்காக
நீ இந்தியா போகணும் அங்க நீ போகுறதுக்கு சுத்திப்பார்க்கரதுக்கு எல்லாமும் நான்
பார்த்துகொள்வேன்.
ஆதற்குபதிலாக
நீ அங்கிருக்கும் தீரனிடம் எனக்கும் உனக்கும் பிரச்சனை வந்து பிரிஞ்சுட்டதா போய்
சொல்லனும்
அதற்குப்பின்
நேரே அவனிடம் பழையபடி நீங்க ரெண்டுபேரும் சேர ஆசைபடுவதாக சொல்லி ஏமாற்றி அவன்
தங்கியிருக்கும் இடத்திற்கு போய் அவன் கூட எத்தனை பேர் இருக்காங்க
முடிந்தால்
அவன் இப்போ நான் அவனைச் செய்ய அனுப்பிய சி.என்.ஜி வொர்க்கை தான் செய்கிறானா?
அல்லது
வேறு ஏதாவது சி.என்.ஜிக்கு எதிரா செய்றானா என்பதை கண்டுபிடிக்க முடிந்தால்
கண்டிபிடிக்கணும்.
அவ்வாறு
நீ கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை நீ அவன் கூட அவன் இருக்கிற
இடத்துக்கும் போகும்போது நான் கொடுத்த இந்த நகைகளை போட்டுட்டு போனாலே போதும்,
நீ எங்க
இருக்குற என்னபேசுற என்பதையும் இதோபார் என்று அதில் இருந்த மாடலான ஒரு வாட்ச்சை
எடுத்து அதில் மறைமுகமாக பொருத்தபட்டிருந்த ஹிட்டன் கேமராவை காண்பித்து
இதை நீ
போட்டுட்டுப் போவதால் அவன் இருக்கிற இடத்தில் சூழலையும் என்னால் இதன் மூலம்
பார்த்து தெரிந்துகொள்ளமுடியும்
எனக்கு
அந்த டீடெய்ல்ஸ் போதும் அடுத்து அவனோட ஆட்டத்தை நான் குளோஸ் பண்ணிடுவேன்.
இதெல்லாம்
நீ எனக்காக செய்தாய் என்றால் இங்கு நீ வரும் போது உனக்கும் எனக்குமான மேரேஜ்க்குரிய
எல்லா ஏற்பாட்டையும் செய்து முடித்திருப்பேன்.
அன்னைக்கே
நம்ம மேரேஜ் கிப்ட்டாக என்னோட சதர்ன் ஈஸ்ட் ரெஸ்ட்டாரன்ட்டை உன் பேருக்கு
ரெஜிஸ்டர் செய்து கொடுத்துடுவேன் என்று டீல் பேசினான்.
அவன் தன்
பேருக்கு ரிஜிஸ்டர் செய்து கொடுப்பதாகக் கூறிய அந்த ரெசார்டில் தங்குவதையே பெரிய
பாக்கியமாக நினைக்கும் அவளிடம்
அவளுக்கே
உரியதாக ஆகிவிடும் என்று அவன் சொன்னதும் எப்பாடுபட்டாவது டீலை முடிக்கவேண்டும்
என்ற ஆசை அவளுக்கு பொங்கியதன் விழைவே இப்பொழுது அவள் அனுபவிக்க ஆரம்பித்தாள்.
அமெரிக்காவில்
தீரனின் ஆள் பிராங்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் சேஷ் செய்து தீரனுக்குச் சொல்லும்
போதே...
பிராங்
வாங்கிய ஸ்பை ஆர்னமன்ட்ஸ் கலெக்சன்ஸ் பற்றிய விவரத்தையும் அதை வகுலாவிடம் கொடுத்ததையும் ஏற்கனவே தீரன்
தெரிந்து வைத்திருந்தான்.
தீரன்
கூறியபடி அடுத்து சிறிதுநேரத்தில் வகுலாவை ஒரு கார் நின்றுகொண்டிருந்த இடத்தில்
காரை நிறுத்தி அவளுடன் அதிலிருந்து இறங்கினான்.
அதேபோல்
நின்றுகொண்டிருந்த காரில் கிட்டத்தட்ட வகுலாவின் முகச்சாடையில் அவளின் வயதும்
உயரமும் நிறமும் உள்ள அவளைப் போலவே மேக்கப் மற்றும் டிரஸ்சில் மற்றொருபெண் அந்த
காரில் இருந்து இறங்கினாள்.
வகுலா
அவளை திடுக்கிடலுடன் பார்த்துக்கொண்டே தீரனின் துப்பாக்கிமுனையில் அந்த காரில்
ஏறினாள்
அவளோ
வகுலாவை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல். வகுலாவும் தீரனும் இறங்கிய காரில் ஏறி
அமர்ந்தவள் சீட்டில் இருந்த வகுலாவின் ஹேண்ட்பேக்கை தன்னுடையது போல் எடுத்து தன
கையில் கோர்த்து வைத்துகொண்டாள்.
இரண்டுகார்களும்
வேறு வேறு திசையில் அதன் பயணத்தை மேற்கொண்டது.
இத்துடன் முதல் பாகம் முடிவடைகிறது. இரண்டாம் பாகம்
விரைவில்......

கதை நன்றாக உள்ளது. விறுவிறுப்பாகவும் செல்கிறது. ஆனால் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளதால் படிக்க சிரமமாக உள்ளது.
ReplyDeleteஇதனை சரி செய்தால் நன்றாக இருக்கும்.