ஒளிதருமோ என் நிலவு...![தீபாஸ்-ன்]
அத்தியாயம்-10
அவள் வாங்காமல்
போன வளையலை தன் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டே காருக்கு வந்த ஆதித் .
டேஸ் போர்டின்
மீதிருந்த வளையலை எடுத்து காரைவிட்டு போன மகனை பார்த்த ஜானகி இன்னும் அதில் இருந்த
நகைக்கடை பையை பார்த்தவள் என்ன அது என எடுத்துப்பார்த்தாள்
அதில் இருந்த வைர
நகைகளை பார்த்த ஜானகி தன மகன் அதை அழகுநிலாவுக்கு வாங்கியதாக நினைத்தாள்
பின் ஏன் இதை அவளிடம்
கொடுக்கவில்லை என்று யோசனையுடன் அதனை பார்த்துக்கொண்டிருந்தாள்
அப்பொழுது காரின் கதவை
திறந்து ட்ரைவர் இருக்கையில் உட்கார்ந்த ஆதித்திடம் நகை அழகாக இருக்கிறது ஆதித்
யாருக்கு இதை வாங்கின எனக் கேள்வி கேட்டார்.
ஒரு நிமிடம் பதில்
சொல்ல தடுமாறிய ஆதித் பின் சமாளிப்பாக உங்களுக்குத்தான் அம்மா பிடிச்சிருக்கா
என்றான் .
அவனின்
தடுமாற்றத்தை பார்த்து தன் மகனுக்கு கூட காதலை சொல்வதில் தயக்கம் இருக்குமா?
எதற்கும் தயங்காதவன் எந்தவிசயத்தையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் சிங்கம் போன்ற தன் மகன் கூட காதல் என்றதும் அதை
வெளிபடுத்த வெட்கம் எனும் தடை ஏற்படுகிறதே என்று நினைத்தாள்
எனவே உதட்டில்
முறுவலோடு இது போன்ற டிசைன் எல்லாம் போடும் வயதை நான் கடந்துவிட்டேனே ஆதித்
ஆனாலும் கொடு எனக்கு வரும் மருமகளுக்கு பத்திரமாக வைத்து கொடுக்கிறேன் என்று அந்த
நகையை தன் பேக்கினுள் வைக்கப் போனாள்.
அப்பொழுது அம்மா இந்த
வளையலையும் அதனுடன் வைத்திருங்கள் இது அழகுநிலாவினுடையது அவளைத்தான் நீங்கள்
வீட்டிற்கு என் பிறந்தநாளுக்கு கூப்பிடுவதாக
சொன்னீர்களே வந்தாள் கொடுத்துவிடுங்கள் என்று கூறி கொடுத்தான்.
இருவருக்குள்ளேயும்
ஏதோ ஊடல் போல என மனதிற்குள் நினைத்த ஜானகி மீண்டும் மீண்டும் கேள்விகேட்டு அவனை
சங்கடப்படுத்தாமல் அந்த வளையலையும் தனது
பேக்கினுள் வைத்துக்கொண்டாள்.
ஆதித்
வர்சாவுக்கும் தனக்கும் உள்ள காதலை இப்பொழுது போய்கொண்டிருக்கும் அவனது ப்ராஜெக்ட்
முடிந்த பின்பு தனது அம்மாவிடம் சொல்லல்லாம் என நினைத்துக்கொண்டு இருந்தான் .
ஜானகி அந்த நகையை
காட்டி யாருக்கு வாங்கின என்று கேட்டபோது ஒருநிமிடம் சொல்லிவிடலாமா என்று
யோசித்தவன்,அப்படிச் சொன்னால் இப்பொழுதே அவளை பார்க்கவேண்டும் என கூற ஆரம்பித்துவிடுவார்கள்
ஆனால் டயமன்ட் ஷோரூமில்
வைத்து அவள் தன்னிடம் கோபமாக போயிருக்கும் இந்த சூழலில் கூறவேண்டாம் என
முடிவெடுத்தவன் உங்களுக்குத்தான் வாங்கியது என்று கூறிவிட்டான் .
ஆனால் ஆதித்தின்
மனம் அலைபாய்ந்தது. எப்படி வர்சாவிற்கு
புரியவைப்பது? “அப்போ நான் கூப்பிடும்போதே நின்றிருந்தால் அழ்குநிலாவின்
வாய்மூலமே அவள் உண்மையை தெரிந்திருக்கலாம்.” எல்லாம் அழகுநிலாவினால்தான் என்று
சிறிதுநேரம் அவளின் மீதுமட்டுப்பட்ட கோபம் திரும்ப எட்டிப்பார்த்தது.
ஜானகி, யோசனயுடம்
இருக்கும் ஆதித்தை பார்த்து, என்ன அதித் யோசனையெல்லாம் பலமாக இருக்கு என்றாள்.
தன் யோசனையில்
இருந்து தாயின் கேள்வியில் இயல்புக்கு வந்தவன், பிஸ்னஸ் பத்தித்தான்மா என்று
வரவழைத்த புன்னகையுடன் பதில் கூறினான்
எப்பொழுதும்
உனக்கு பிஸ்னஸ் பற்றித்தான் நினைப்பு. கொஞ்சம் எனக்கு மருமகள் கொண்டுவருவதை
பற்றியும் யோசிக்கலாமில்ல ஆதித்.
எனக்கும் மருமகள் அப்பறம் பேரன், பேத்தி என கலகப்பான
குடும்பமாக வாழவேண்டும் என்ற ஆசை கொஞ்சநாளாக அதிகரித்துக்கொண்டே போகிறது என்றாள்.
ம்....நான் கூடிய
சீக்கிரம் உங்க மருமகளை காண்பித்துடுவேன் என்றான் சிரித்தபடி .
அவனின்
வார்த்தையில் சந்தோசமான ஜானகி, ,அப்போ! மருமகளை நீ செலக்ட் பண்ணிட்ட என்கிட்டதான்
இன்னும் சொல்லாமல் மறைத்து வச்சிருக்க அப்படித்தானே ஆதித்!
நீ யாரை
காண்பித்தாலும் நான் மறுக்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கேனே பிறகு ஏன்பா
என்னிடம் சொல்ல உனக்கு தயக்கம் எனக் கேட்டாள் ஜானகி.
தன் அம்மாவின்
வார்த்தையை கேட்டவன் மனதிற்குள், வார்சாகூட
நான் லவ் பண்ண ஆரம்பித்தபிறகு இரண்டுபேரும் சந்தோசமா பேசிட்டு இருக்கறதவிட சண்டை
போட்டு ஒருத்தர ஒருத்தர் சமாதானப் படுத்தும் நாட்கள் தான் அதிகம்
அவள் கூட நல்லபடி
லவ் டிராக் ஓடும்போது சொல்லலாம் என்று நினைத்தால் ஒருவாரம் கூட
தாக்குபிடிக்கமுடியலையே! ராட்சசி.... அழகு ராட்சசி... என்று மனதிற்குள் அவளை
திட்டியபடி வெளியில் தன அம்மாவிடம் சிரித்தபடி
உங்களிடம் அவளை
பற்றி சொல்லகூடாது என்று நினைக்கல ஆனா உங்ககிட்ட அவளை நான் அறிமுகம் செய்யும் போது
எங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள்
எல்லாம் முடிவுக்கு வந்து இருக்கனும் என நினைககிறேன் என்றான்.
ஜானகி அவன்
கூறியதை பார்த்து, அழகுநிலாவுக்கும் ஆதித்துகும் ஊடல் என்று தான்நினைத்தது சரிதான்
என் நினைத்தவள், சீக்கிரமே எல்லாம் சரியாகிடும் ஆதித் என்றாள்.
அங்கு அழகுநிலா
தன் அறைக்குள் போனதும் நல்லவேளை என் போனை பர்சுக்குள் போடவில்லை அவனுடன்
பேசிக்கொண்டு இருந்ததால் அந்த போனில் கவருடன் இருந்த கைபிடியை தன கையில் மாட்டி
வைத்திருந்ததால் தப்பித்தது என நினைத்தவள்,
தன்னுடைய மற்றொரு
கையில் வைத்திருந்த ஐ போனை பார்த்து எப்படியாவது இதில் உள்ள என் வீடியோவை டெலிட்
பண்ணனும். அந்த ராஸ்கல் திரும்ப என்னை காண்டாக்ட் பண்றதுக்குள்ள எப்படியாவது இதை
டெலிட் செஞ்சுடனும் என நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவளின் அம்மாவிடம் இருந்து
அவள் போனிற்கு அழைப்பு வந்தது
அதை அட்டன் செய்து,
எதிர்புறம் கேட்ட ராசாத்தியின் வசைமாலைக்கு இடையில் வார்த்தைகளால் புகுந்து அம்மா “மன்னிச்சுக்கோ” கத்தாத நான் ரூமிற்கு வந்ததுமே உனக்கு
போன் பண்ணனும் தான் இருந்தேன்.
அதற்குள் மெஸ்ஸில்
சாப்பிட கூப்பிட்டுவிட்டாங்க சுடசுட சாப்பிட நாக்கு கெஞ்சுச்சா.... அதனால் சாப்பிட
போய்விட்டேன் என வாய்க்கு வந்தவாறு கதையடித்தாள்.
ரூமிற்கு வந்ததும்
போன் செய்கிறேன் என்று சொன்ன மகள் அவள் எப்போதும் பேசும் நேரத்தை கடந்து போன்
செய்யாததால் டென்சனுடன் போன் செய்த
ராசாத்தி பின் அவள் சாப்பாட்டை பற்றி பேசவும் கோபம் போய் மகளின் வயிற்றுப்பாட்டை
நினைத்து கவலை கொண்டாள் ராசாத்தி.
உனக்கு என்ன தலைஎழுத்தா
அழகி? நீ வேலைக்கு போய்தான் சாப்பிடனும் என்று இருக்கா? வீட்டில் இருந்தா வாய்க்கு
ருசியா நினைச்சதை நினைத்த நேரத்தில் செய்து சாப்பிடலாம் என்று புலம்ப ஆரம்பித்து
விட்டாள் ராசாத்தி
ஏற்கனவே அழகுநிலா
வேறு தேவையில்லாமல் வேலைக்கு வந்து வம்பை விலைகொடுத்து வாங்கிவிட்டோமோ? என
மருகிக்கொண்டு இருந்த நேரத்தில் ராசாத்தியும் இப்படி புலம்ப,
உடனே, சரிம்மா...
இப்போ உடனே வேலையை விடமுடியாது ஒருவருடம் அக்ரீமென்ட் முடிந்த உடனே நான் வேலையை விட்டுபுட்டு
அங்கேயே வந்துடுறேன், நீ புலம்பாத என கூறிவிட்டாள்.
ஏற்கனவே
ராசாத்திக்கு தன மகள் போனில் தன்னிடம் பேசும்போது எப்பொழுதும் இருக்கும் உற்சாகம்
இல்லாமல் பேசுவதை உணர்ந்துகொண்டிருந்தவள் அவளின் வேலையை விட்டுவிடுகிறேன் என்ற
வார்த்தையை கேட்டதும்,
அங்கே தன்
மகளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை யூகித்து, ஏன்டி அழகி! நீ..நல்லா இருக்கேயா உடம்புக்கு எதுவும் சுகமில்லையா? அல்லது வேலை
பார்க்கிற இடத்தில் எதுவும் பிரச்சனையா? உன் குரலே சரியில்ல புள்ள. உண்மையை
சொல்லிபுடு என விரட்ட ஆரம்பித்து
விட்டாள்.
அச்சோ.... அம்மா!
என் குரலை வச்சே கண்டுபுடுச்சுடுச்சே அதுபாட்டுக்கு அண்ணனை என்னை இங்கிருந்து கூட்டிவர அனுப்பிடபோது.
நான் மாட்டியிருக்கிற
பிரச்சனையில் இருந்து வெளிவருகிறவரை இங்கிருந்து போக முடியாதே! என நினைதவள்
குரலிலும் பழையபடி உற்சாகத்தை மெனக்கெட்டு கொண்டுவந்து,
அம்மா.... நீ
பேசாம இருக்கியா! அதுதான் நீ புலம்பறத பாத்து ஊருக்கு வருவேனு சொன்னா உடனே எனக்கு
பிரச்சனையினு நான் உன்கிட்ட சொன்னது போல கிளப்பிவிடுற.
நான் நல்ல ஜாலியா
வேலைக்கு போய்டு வந்துட்டுதான் இருக்கிறேன். அண்ணன் அடுத்தமாசம் ஒன்னாந்தேதி எப்பவும் போல் பார்க்கவந்தா போதும்.
ஏதாவது நீயா நெனச்சுகிட்டு
புலம்பி அண்ணனையும் சங்கடப்படுத்தாத. நான் நல்லாத்தான் இருகிறேன்மா,
அப்புறம் வீட்டில்
அண்ணன், மதினி என் மருமகப்பிள்ளை
எல்லோரையும் கேட்டதா சொல்லு. அடுத்த தடவ
எல்லோரிடமும் பேசுறேன் என்றபடி தொடர்பை துண்டித்தவள்,
அப்பாடா... என்று
பெருமூச்சு விட்டபடி எதில் இருந்தோ தப்பிப்பது
போல இரண்டு போனையும் தள்ளி வைத்துவிட்டு,
இத்துனூண்டு இருந்துகிட்டு இது
என்னமா மனுசங்களை ஆட்டிவைக்குது என்று நினைத்தவள்,
இன்று தனக்கு
ஏற்பட்ட அனுபவத்தில் ரொம்பவே மனமும் உடலும் சோர்ந்து போய் சாப்பிட கூட போகாமல்
அப்படியே படுக்கையில் விழுந்து உறங்கிபோனாள் என்று சொல்வதைவிட ஓய்ந்து தளர்ந்து
படுத்து மயங்கிப்போனாள்.
தூக்கத்தில்
இருந்த அழகுநிலாவிற்கு அந்த நரேன் அவளை துரத்திவர வேகமாக ஓடிப்போகிறாள் அழகுநிலா.
அவளுக்கு மூச்சு வாங்க உடலெல்லாம் நடுங்க தலைதெறிக்க ஓடியபடி பின்னால் அந்த
மினிஸ்டரின் மகன் துரத்துவதை திரும்பி பார்த்தபடி ஓடுகிறாள்,
திரும்பி
பார்த்தபடி ஓடியதால் எதிரில் வந்தவனை கவனிக்காமல் மோதி விழ பார்க்கையில் அவள் கீழே
விழுந்து விடாமல் ஓர் வலியகரம் அவளை தாங்கி பிடிக்கிறது. பதற்றத்துடன் நிமிர்ந்து
பார்க்கையில் அவளை பிடித்து தன்னுடன் சேர்த்து பாதுகாப்பாய் அணைக்கிறான் ஆதித்.
அந்தநேரம் அழகி....
அழகி.... உனக்கு என்ன ஆச்சு! என்று அவள் ரூம்மேட் அவளை தட்டி எழுப்பவும்
விழித்துபார்த்தவள் மொத்தமாக வியர்த்துப்போய் மலங்க மலங்க விழித்தாள்.
அவள் ரூம்மேட்
ஆஸ்பத்திரியில் நைட் டியூட்டி முடித்துவிட்டு ஆறுமணிக்கு ரூமிற்குவந்தவள் அழகுநிலா
படுத்தபடி மூச்சுவாங்கியபடி தொப்பலாக வியர்வையில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்து
பயந்து அவளை எழுப்பியிருந்தாள்..
அவள் முழிப்பதை “பார்த்து
என்னஅழகி என்னசெய்யுது” என் பதட்டமாகக்
கேட்டாள்
அதன் பின்தான்,
இரவு சீலிங்க்பேன் கூட போடாமல், உடுப்பைமாற்றாமல் அப்படியே படுத்து தூங்கிவிட்டதும் தனக்கு நேற்று நேர்ந்த சம்பவங்ககளால் கனவுவரும் அளவு தன்னை பாதிப்பதையும் உணர்ந்தவள்,
“இல்லப்பா... ஒரு
கெட்ட கனவு வேற ஒன்னும் இல்லை!” என்று பயந்தபடி தன்னை பார்த்துக்கொண்டு இருந்த
ரூம்மேட்டை சமாதானப் படுத்தியவளுக்கு தூக்கம் தொலை தூரம் ஓடிப்போனது.
இன்னைக்கு
எப்படியும் நடந்த சம்பவத்தை சுமதியிடம் பகிர்ந்து எப்படி இந்த சிக்கலில் இருந்து
வெளியில் வரலாம் என முடிவு செய்யவேண்டும் என நினைத்தாள்.
அன்று அந்த
ஹோட்டலில் தனக்கு நடந்த சம்பவம் முதல் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பிரச்சனை
வரை தனது தோழி சுமதியிடம் பகிர்ந்து கொள்ள அழகுநிலாவிற்கு சந்தர்ப்பம்
கிடைக்கவில்லை,
காலேஜ் படிக்கும்போதிருந்தே
விசுவும் சுமதியும் காதலில் விழுந்துவிட்டார்கள் என்றபோதிலும், மூன்றுபேரும்
பெரும்பாலும் நண்பர்கள் என்ற முறையில் தான் பொதுவாக பேச்சுக்கள் இருக்கும்.
ஆனால் தற்போது
விசு வேறு இடத்தில் வேலை பார்ப்பதாலோ? அல்லது வாரம் ஓர்முறை பார்க்கமுடிந்ததாலோ
என்னவோ? விசுவும் சுமதியும் தான் இருந்தாலும் ஓட்டிக்கொண்டே தன முன்னால் இருப்பதை
பார்த்த அழகுநிலாவிற்கு தான் அவர்களுக்கு இடையில் தொந்தரவாக இருகிறோமோ என்ற எண்ணம்
உண்டானது.
அதை நாசுக்காக
சுமதியிடம் ஜோடிப்புறாக்களுக்கு இடையில் என்னை ஜோக்கரா நிப்பாட்டவாடி என்னை
உங்ககூட எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போற?
இந்ததடவை நான் அவுட்டிங்
உங்க கூடவரலப்பா! என சொன்னதும் சுமதி சண்டைகே வந்துவிட்டாள்.
அடியே முதல்ல
நீயும் விசுவும் எனக்கு நல்ல ப்ரண்ட்ஸ் அதற்கு பிறகுதான் எனக்கு அவன் லவ்வர்.
மூணுபேரும் சேர்ந்துதான் சுத்துறோம் நீயும் வரணும் என கூறியபின், தவிர்க்க முடியாமல்தான்
அவர்களுடன் ஊர் சுற்ற சென்றாள் அழகுநிலா.
ஆனால், தான்
அவளிடம் இவ்வளவு நடந்தும் எதையும் பகிர்ந்துகொள்ளாதது தெரிந்தால் ரொம்ப
கோபப்படுவார்கள் இருவரும், என்று எண்ணியவள் அந்த போனையும் தன்னுடன்
எடுத்துக்கொண்டே ஆபீஸ் கிளம்பினாள்.
ஆபீசில் தான் நுழைந்ததும்
முகம் முழுவதுவும் சந்தோஷத்துடன் தன்னை எதிர்கொண்டு ஓடிவந்த சுமதியை பார்த்தவள்,
“என்னடி! முகத்தில்
பலப் எரியுது வீட்டில் பிரச்சனை அது இது என்று என்கிட்டே போனில் புலம்பிவிட்டு
நான் திரும்ப போன் பண்ணினால் கூட அட்டன் பண்ணாமல் கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு
இருந்தவளை இன்று அழுது வடியும் முகத்தோடு தான் பாப்போம் என வந்தால்,
நீ என்னடானா
இப்படி பல்ப் போட்டமுகத்தோட ஜொலிக்கிற” என்று கலாய்த்தாள் அழகுநிலா.
சுமதியோ அழகியை
பார்த்து, “அடியே! என் பெரியப்பா நாரதர் செய்த கலகம் நன்மையில் முடிங்க்சுருச்சுடீ
அழகி!” என்று சொன்னதும்,
அழகுநிலா புதிர்போடாமல் உன் சந்தோசத்திற்கான காரணத்தை
சொல்லு என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, விசுவிடம் இருந்து சுமதிக்கு போன்
வந்தது,
இரு சொல்றேன்
என்றவள் போனை அட்டன் பண்ணி டேய் விசு நான்தான் முதலில் அழகிட்ட சொல்வேன் என்றாள்.
பின்பு அவன் என்ன
சொன்னானோ “அட சீ... என்னாலெல்லாம் உன்ன வாங்க, போங்க, மாமா, அத்தான் என்றெல்லாம்
கூப்பிடமுடியாது நான் எப்பொழுதும் போல் உன்ன பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்”
என்றாள்.
அந்த பக்கம் அதற்கு
அவன் என்ன கூறினானோ? உடனே, “சரிப்பா உங்க
வீட்டு ஆட்களுக்கு முன்னாடிவேனா நீ சொன்னது போல் உன்ன கூப்பிடுறேன்.
இப்போ ஒகே வா! நீ
வா... நான் அர்ஜெண்டா முடிக்க வேண்டிய வேலையை என் டீம் லீடரிடம் கேட்டு
முடித்துவிட்டு இன்னைக்கு மதியமும் நாளைக்கும் லீவ் சொல்லிடுறேன்
என்னை ஒரு மூன்றுமணிக்கு
மேல் வந்து பிக்கப் பண்ணிகோ, அப்போ நீ நம்
அழகுநிலாவை நேரிலேயே இன்வைட் பண்ணு நான் வச்சுடுறேன்” என்று இணைப்பை துண்டித்தாள்
சுமதி .
அவள் பேசும்போதே ஓர்
அளவு யூகித்துவிட்ட அழகுநிலா “எப்புடிடீ? இரண்டுபக்கமும் கிரீன் சிக்னல்
கிடைச்சாச்சு போல...!” என தானும் அவர்களது மகிழ்ச்சியில் கலந்து கொள்ளும்
ஆர்வத்துடன் கேட்டாள் அழகி .
“ஆமா அழகி!
வீட்டிற்கு அம்மா, அப்பா வந்து என்னை விசாரிக்க ஆரம்பித்ததுமே நான் முதலில் கோபப்படுட்டு
எதுவும் பேசிடுவாங்களோ? என்று தான் பயந்தேன்.
ஆனா! அப்பா தான்,
யார் அந்த பையன் என்று கேட்டதும் நான் விசுதான் பா! என்று சொன்னேன்.
ஏற்கனவே காலேஜ்
படிக்கும் போதே அப்பாகிட்ட நம்ம ப்ரண்ட் என்ற முறையில் அவனை
அறிமுகப்படுத்தியிருந்ததால் அப்பாவிற்கு விசுவை அடையாளம் தெரிந்து கொண்டார்.
பயபுள்ள அப்பவே
ஓவராக்ட் கொடுத்து அப்பாகிட்ட நல்லபிள்ளைனு சர்டிபிகேட் வாங்கிட்டான் .
ஆனால், அவங்க
வீட்டிலும் சரின்னு ஒத்துக்கொண்டால்தான் இரண்டுபேருக்கும் கல்யாணம் செய்துவைப்பேன்
என்று அப்பா சொல்லிடாருடீ.
விசு வீட்டில்
தான் முதலில் ஒத்துக்கல வேறு ஜாதின்னு தெரிஞ்சதும் ரொம்ப யோசித்தாங்க போல!
ஆனா என் விசு
கல்யாணம் செய்தால் என்னைமட்டும் தான் என்று உறுதியா சொல்லிவிட்டதால் அவங்கள் வேறு
வழியில்லாமல் ஒத்துக்கிட்டாங்க.
ஆனா அவங்க
எதிர்பார்த்த டவுரியை விட அப்பாவிற்கு விசுவை பிடித்துப்போனதால் அதிகம் போடுவதாக
அப்பா சொல்ல,
இப்போ அவங்க
வீட்டிலேயும் முழு சம்மதத்தோடு ஒத்துகிட்டாங்க. நாளைக்கு பூ வச்சு கல்யாணத்தை
உறுதிபடுத்த போறாங்கடீ அழகி.
நீ கண்டிப்பா
நாளைக்கு முழுவதுவும் என் கூடவே இருக்கணும் இப்போவே லீவ் சொல்லிடு” என்றாள் சுமதி
மகிழ்ச்சியுடன்.
தனது பிரச்னையை
தற்போது சொல்லி அவர்களின் சந்தோசத்தை கெடுக்கவேண்டாம் என அவள் முடிவெடுத்து,
வெளியில் சிரித்து
நான் இல்லாமல் என் ப்ரண்ஸ் கல்யாண ஏற்பாடு நடந்திடுமா?, நான் வந்து இரண்டு
பேரையும் கலாய்த்து உங்கள் நிச்சய விழாவை சிறப்பிக்காவிட்டால் எப்படி?
என்று சொல்லிக்கொண்டு
இருக்கும் போதே அவர்களின் டீம் லீடர் எல்லோரையும் அவசரமாக அழைக்க இருவரும்
விரைந்தனர்.
அங்கு மதியம் பதினோருமணிக்கு
அவசரமான முக்கியமான மீட்டிங் இருப்பதால் அதற்குள்
அவர்களின் ப்ராஜெக்ட் பற்றிய
பெர்பார்மன்ஸ் ரிப்போர்டை
சமர்பிப்பதற்கான் நோட்ஸ் அனைவரும் விரைந்து தயாரிக்க ஆரம்பித்தனர்.
ரமேஸ் வேலை
செய்துகொண்டு இருந்தாலும் பார்வை என்னவோ அழகுநிலாவையே சுற்றிசுற்றி வந்தது.
அன்று மாலுக்கு
போன அழகுநிலாவிற்கு பிரச்சனை எதுவும் இல்லையே என விசாரிப்பதற்கு நேரம் பார்த்தபடி
இருந்தான்.
அதை தற்செயலாக்
கவனித்த அழகுநிலா என்ன என்று தன புருவத்தை வில்லாக வளைத்து பாவனையில் கேட்டாள்.
அவள் அவ்வாறு
கேட்டபின்புதான், இதுஎன்ன அந்த ஹன்ட்சம் ஹீரோ மாதிரி நானும் புருவம் உயர்த்தி
கேட்கிறேன். ஒரு இரண்டுதடவை சந்திப்பிலேயே அந்த ஆதித்தின் அசைவுகள் எனக்குள்
தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? இது நல்லதுக்கில்லையே.... என மனம் எச்சரிக்க,
மற்றொரு மனமோ அவன்
உனக்கு ஆபத்தில் உதவியவன். அதனால், மனதில் ஹீரோவாக அவனின் பிம்பம் பதிந்துவிட்டது.
மேலும் அவனுக்கு
அழகான காதலிவேறு இருக்கிறாள். பிறர் மனை நோக்காதே என்ற பழமொழி ஆண்களுக்கு
மட்டுமல்ல பெண்களுக்கும் தான் என்றது.
அவனின் உயரம் என்ன...?
அழகு என்ன..? நம்மையெல்லாம் அவன் திரும்பியே பார்க்க மாட்டான்,
அவன் திரும்பி
பார்க்காமல் இருப்பது சரி. ஒரு ஆணை இவ்வாறாக நினைத்தேன் என்று என் ஆத்தாவுக்கு
தெரிந்தால் என்னை உப்புக்கண்டமாக்கி விடுவாள்.
இந்த மாதிரி நினைப்பெல்லாம்
இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் என அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.
அழகா இருக்கிறான்,
ஆபத்தில் உதவியிருக்கிறான், அந்த எல்லையோடு பழகினால் போச்சு என்று தன்னை தயார்படுத்திக்கொண்டாள்.
அவள் அவ்வளவு
யோசனையில் இருந்ததால் ரமேஷ் பக்கத்தில் வந்து நின்றதோ? அழகுநிலா என்று
திரும்பத்திரும்ப கூப்பிட்டதோ? காதில் ஏறவில்லை.
அவள் அவ்வாறு
இருப்பதை பார்த்து அச்சோ பிரச்சனை பெரிதாகி போய்விட்டது போல அதனால்தான் இப்படி
அப்சட் ஆகி உட்கார்ந்திருக்கிறாள் போல என நினைத்து,
நீ எதற்கும் கவலை
படாத அழகுநிலா நானும் ஏதாவது உதவமுடிந்தால் உதவுகிறேன் என்னவென்று சொல்லு எனக்
கேட்டான்
அவன்
கேள்விகேட்கும் போதே தன்னிலை அடைந்தவள், அவன் கேட்டு முடித்ததும், மால் செல்கிறேன்
என்று இவனிடம் சொலிவிட்டு போய்விட்டேன்.
அதனால்தான் இவனும்
டெண்சனா இருக்கிறான் என்பதை உணர்ந்தவள், அச்சோ! அதெல்லாம் நான் சமாளித்துக் கொள்வேன்
ரமேஷ்,
எனக்கு உதவி தேவைப்பட்டால்
கண்டிப்பாக உங்களிடம் கேட்கிறேன்.
ஆனா பிரச்சனை
இன்னும் முடியல ரமேஷ். அங்கேயும் பிரச்சனை ஆகிவிட்டது. ஆனால்.... அன்று ஹோட்டலில்
உதவிய அதே ஆதித்தான் நேற்று மாலிலும் என்னை காப்பாற்றினார்
என பதில்
கூறிக்கொண்டு இருக்கும் போதே அவர்களின் டீம் லீடர் அவர்கள் இருவரையும் பார்த்து
உங்க இரண்டு பேருக்கும் கொடுத்த வேலையை முடிச்சாச்சா... என கேட்டதும் இதோ
முடித்துவிடுகிறோம் என இருவரும் தங்களுடைய வேலையில் ஆழ்ந்தனர்
பதினோரு மணிக்கு
எல்லோரும் மீட்டிங்ஹாலில் கூடியதும், வசந்த், எல்லோருக்கும் தங்களுடைய புது எம்டியாக
மாதேஷ் என்னுடைய பார்ட்னராக இணைகிறார்
என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.
மேலும், தங்களுடைய
நிறுவனத்தை புது பில்டிங்கில் விரிவு படுத்துவதாகவும் மேலும் இன்னும் நிறுவனத்தின்
வர்த்தகத்தை பெரிய அளவில் செய்வதற்காக ஆட்களையும் விரைவில்
பணியமர்த்தப்படுவதாகவும்,
அதற்கு முன்னோடியாக
தற்போது உள்ள அலுவலர்களை எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் திறமையின் அடிப்படையில் பிரித்து
புதிய போஸ்டிங்குகள் உருவாக்கப்படுவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டன.
அதில் தற்போது
போய்க்கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் முடியும் வரை மட்டுமே இப்பொழுது உள்ள டீம்
தொடரும் என்று கூறப்பட்டது.
மேலும் வசந்த், அழகுநிலாவின்
பெயரை சொல்லி அவங்க சேர்ந்து கொஞ்ச நாளிலேயே சுறுசுறுப்பாக வேலைபார்பதை பார்த்து
அவங்களை புது எம் டீ மாதேசுகு தேவையான டீடைல்ஸ்
கொடுக்கும் டெம்ரவரி அசிஸ்டன்டாக நியமனம் செய்யப் படுவதை அறிவித்தான்.
எனவே தற்போது
அவளின் டீமில் இருந்து அவளை ரிலீவ் பண்ணுவதாகவும் அவளது டீம் லீடர் அவளின் பொறுபை
கூடுதலாக ஏற்று செய்யும் படி உத்தரவு பிறப்பித்தான்.
அழகுநிலாவிற்கு
நம்பவே முடியவில்லை. அவள் எல்லோரையும் போலத்தான் வேலை பார்த்தாள். எதில், தான்
ஸ்பெசல் என அவளால் யூகிக்கமுடியாமல் இதை ஏற்பதா? என தயக்கத்துடன் விழித்தாள்.
---தொடரும்---

No comments:
Post a Comment