ஒளிதருமோ என் நிலவு...?[தீபாஸ்-ன்]
அத்தியாயம்-11
மீட்டிங் முடிந்து
வெளியில் வந்ததும் மதியம் சாப்பிட
சுமதியுடன் இணைந்து கொண்ட அழகுநிலா,
அவளிடம், என்னடீ
இப்படி திடீர்னு என்னை போய் அசிஸ்டண்ட் போஸ்டில் போட்டிருக்கிறார்கள்….?. என்னைவிட டேலண்ட் ஆன ஸ்டாப் இருக்கும் போது நான் எப்படி?
எனக்கு பயமாக இருக்கிறது, என்னால் முடியாது என சொல்லப்போறேன் என்றாள்.
அவள் சொல்வதை
கேட்ட சுமதியின் மனதிற்குள்ளேயும் இதே கருத்து இருந்தாலும் அவள் அழகுநிலாவை
பார்த்து, லூசாடி நீ!
உனக்கு
கிடைத்திருக்கும் இந்த சான்சை பார்த்து ஒவ்வொருத்தியும் உன்னை பொறாமையுடன்
பார்க்கும் இந்த நேரத்தில் இதை வேண்டாம் என்று சொல்கிறாயே! உன்னை தத்தினு தான்
சொல்லனும் என்றாள்
நான் தத்தியாகவே
இருந்துட்டுப் போறேன். நான் பார்க்க வந்தது இஞ்சினியர் வேலைக்கு. என்னை போய்
செக்ரட்டரியாக வேலை பார்க்கச் சொன்னால் உடனே ஒத்துக்கொள்ளனுமாக்கும்.
நானே இப்போதான்
தட்டுத் தடுமாறி ஒருவழியா இங்கிலீசில் சரளமாக பேச ஆரம்பிச்சிருகிறேன்.
நாம டீமா இருப்பதினால்
எப்படியோ சமாளிச்சுடுறேன். இதுல ஏதோ வில்லங்கம் இருக்குது சுமதி.
ப்ரோகிராமிங்
பண்ணுவது என்றால் அது என்னால் முடியும். ஆனால் செக்ரட்டரியாக கம்யூனிகேசனில்
எச்ஸ்பெர்ட்டா இருந்தால்தான் முடியும்,
எனக்கு இது செட்டாகாது என்றாள்.
அவள் கூறியதை
கேட்ட சுமதி உன்னால் முடியும் அழகி. முதலில் இந்த பில்டிங் உள்ளே வரவே பயந்த.
இப்போ எப்படி அழகா
வேலையில் பிட் ஆகிவிட்ட. அதேபோல் இந்த வேலையையும் உன்னால் பிக்கப்செய்ய முடியும்.
மேலும்,
செக்ரட்டரியாக செலக்டாக ஆட்கள் அழகாக
இருக்கணும் என்றுதான் நினைப்பார்கள்.
உன்னிடம் தான்
அழகு கொட்டிக்கிடகுதே நானெல்லாம் என்னை அழகாக காட்டுவதுபோல் ட்ரெஸ் உடுத்துவேன்.
ஆனா நீ எந்த
ட்ரெஸ் போட்டாலும் உன் அழகு அந்த உடையும் அழகாககாட்டிவிடும். . நம்ம ஆபீஸ் பியூட்டி
குயீன் நீ. சோ! உன்னை அவர்கள் தேர்ந்தெடுத்ததில் தப்பே இல்லை என்றாள்.
அவர்கள்
பேசிக்கொண்டு இருக்கும் பொது அவர்களின் புறம் வந்த அவர்களின் டீம் லீடர் ரமணி,
வாழ்த்துக்கள் அழகுநிலா... உங்களுக்கு
முக்கியமான பொறுப்பு கொடுத்திருகிறார்கள் சேலரியும் டபுளாகப்போகுது! எங்களுக்கு ட்ரீட் எப்ப கொடுக்கப் போகிறீங்க?
என்று கேட்டார்
பார்ப்போம்!
பார்ப்போம்! முதலில் என்னால் அந்த வேலையில் செட் ஆக முடியுதா? என்று பாப்போம்.
பின்பு ட்ரீட் கொடுப்பதை பற்றி பேசுவோம் என்று சொன்னாள்.
அப்பொழுது சுமதி, ரமணியிடம் எனக்கு இன்னைக்கு
மூன்றுமணிக்கு மேலேயும் நாளைக்கும் லீவ்
வேண்டும். எனக்கு நாளை மேரேஜ் பிக்ஸ் பண்ண போறாங்க என்றாள். .
அவள் கூறியதை
கேட்டதும் சூப்பர். அதுதான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிறீங்களா?
நிறைய வேலை
இருக்கே நாளை மட்டும் தான் லீவ் தருவேன்
சுமதி, சாரிப்பா.... இந்த பிராஜெக்ட்டை சீக்கிரம் முடிகச்சொல்லி ஆர்டர்
வந்துருக்கு,
சரி சுமதி நீங்களாவது உங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆனதுக்கு
ட்ரீட் கொடுப்பீங்களா? என கேட்டார்
அதற்கு அழகுநிலா
ரமணியிடம், கண்டிப்பா ட்ரீட் வாங்காம விட்டுடுவோமா! என்று கூறிவிட்டு எனக்கும் லீவ் நாளைக்கு வேணும் என்றாள்.
அவள் கூறியதை
கேட்ட ரமணி, அதையேன் என்னிடம் கேட்கிறீங்க, அதுதான் இப்போ நீங்க என் டீமிலேயே
இல்லையே....
உங்க வேலையும்
சேர்த்து என்தலையில் தானே விழுந்திருக்கு. இனி உங்களுக்கு லீவ் வேண்டுமானால் நம்ம பாஸிடம் தான் கேட்கணும்
என்றார்.
வசந்த் தன்னுடைய
அறையில் மாதேஷுடன் விவாதித்துக்கொண்டு இருந்தான், நீ நினைக்கிறமாதிரி அழகுநிலா
கிடையாது.
அவள் இந்த ஆபீசில்
சேர்ந்த இந்த ஆறுமாதத்தில் அவளை நான் கவனித்ததினால்தான் சொல்றேன்.
உன்னிடம்
சொல்வதற்கென்ன! உனக்கே தெரியும். நான் பெண்கள் விசயத்தில் ஒதுங்கித்தான் இருப்பேன்.
ஆனால் எனக்கே அவள்
அழகைப் பார்த்ததில் இருந்து கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.
கொஞ்சம்
பழகிப்பார்கலாம் என முயற்சியும் செய்தேன். ம்..கூம் முடியல. படு உசார்
பார்ட்டி.
எல்லாரோடையும்
ஜோவியலா பேசுரமாதிரி தெரிஞ்சாலும் ஓர் லிமிட்டுக்கு மேல அவ யாரையும் கிட்டக் கூட
சேர்கறது இல்லை என்றான்.
அவன் சொன்னதை
கேட்டு மாதேஷ், உன்னால் முடியலைன்னு சொல்லு. அதற்கெல்லாம் ஓர் முகராசிவேணும்.
முதலில் கூட அவட்ட
கொஞ்சம் நெருங்கிப் பழகி அவளுக்கு நம்பிக்கையானவனா காட்டி, அந்த ‘போனை’ ஹெல்ப் பண்றேன்
என்று கேட்டு வாங்க மட்டும் செய்யலாம் என நினைத்தேன்.
ஆனா இப்போ இந்த மீட்டிங்கில் அவளை பக்கத்தில் பார்த்தபிறகுதான் தெரிஞ்சது,
நரேன் ஏன் தொட்டுப்பார்கனும் என்று ரிஸ்க் எடுத்தான் என்று. ஷி இஸ் நேச்சுரல்
பியூட்டி மடக்கிறனும் என்று முடிவே... பண்ணிட்டேன் என்றான். .
அவன் சொன்னதை
கேட்ட வசந்த், டேய்.. அப்படியெல்லாம் செஞ்சுராத. நம்ம கிட்ட வேலை பார்க்கிற
பொண்ணுகிட்ட நாமே வாலாடினா நம்ம பிஸ்னஸ் பாதிச்சிடப் போகுத்து,
தானே மேல வந்து
விழுந்தா அது பிரச்சனை இல்லை. ஆனா நாம ஏமாத்தி கைவச்சா பிரச்சனையாகி, நேம் கெட்டுடும் என்றான்.
அதற்கு பதில்
சொல்ல வாய்திறந்த நேரத்தில் அழகுநிலா அவர்களின் ரூமின் வெளியில் இருந்து கதவை தட்டி மே ஐ கம் இன் என்று கேட்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து
சிரித்துவிட்டு, எஸ் கம் இன் என்றனர்.
உள்ளே வந்த அழகுநிலாவை
மாதேஷ் தான் உட்கார்ந்திருந்த டேபிளின் முன் உள்ள சேரை காண்பித்து உட்காருங்க மிஸ்
அழகு...நிலா... என்று அவளது பெயரை உச்சரிக்கும் போது அழகு என்ற வார்த்தையில்
அழுத்தத்தையும் நிலா என்ற வார்த்தையை ரசனையுடனும் சொன்னான்.
ஏனோ அபீசியலாகத்
தான் முதல்முதலில் பேசவந்தபோது அவள் எதிர்பார்த்த பாஸ் என்ற தோரனையை விட்டு,
மாறுபட்டு ஒலித்த அவனின் குரலே அவளுக்கு ஓர் எச்சரிக்கை ஓசையை கொடுத்தது.
எனவே அவளது
மலர்ந்த முகம் சற்று கடுமையை பூசிக்கொண்டது அது என்னை விட்டு தள்ளியே நில் என்ற
எச்சரிக்கையை மாதேசுக்கு வழங்கியது.
அவளின்
முகக்குறிப்பை கண்ட மாதேசுக்கு வசந்த் சொன்ன உசார் பார்டி என்ற வார்த்தை அசரீரியாய்
ஞாபகம் வந்தது.
எனவே உன்னை உன்
வழியிலேயே சென்று மடக்கிகாட்டுறேன் என்று சவாலாக நினைத்து, தன்னை பாஸ் என்ற
தோரணைக்கு உடனே மாற்றிக்கொண்டான் மாதேஷ். .
இன்னும் உட்காராமல்
நின்று கொண்டே இருந்த அழகுநிலாவை, நான் உங்களை உட்காரச்சென்னேன் என்று அழுத்தமாக
கூறியதும் வேகமாக இருக்கையில் உட்கார்ந்தாள் அழகுநிலா.
நானே உங்களை
கூப்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே நீங்க பார்க்க
வந்திட்டீங்க. “குட்” ஆக்டிவாக இருந்தால்தான்
எனக்கு பிடிக்கும்.
என்னிடம்
வேலைசெய்யும் போதும் இதேபோல் இருந்தால்
ஓகே, இப்போ நம்ம வேலையை பற்றி பேசலாமா அழகுநிலா என்றான் மாதேஷ்.
பாஸ் வேலையை பற்றி
பேசுவதுக்கு முன் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றால் அழகுநிலா .
அவள் கூறவும்
யோசனையுடன் ம்...சொல்லுங்க என்றான் மாதேஷ்.
இல்ல... என்று தயக்கத்துடன் ஆரம்பித்த அழகுநிலா,
பட்டென்று என்னால் நீங்க எனக்கு கொடுத்திருக்கும் இந்த வேலையை ஏத்துக்க முடியாது
பாஸ் என சொல்லிவிட்டாள்.
அவள் கூறியதைக்
கேட்டு வாட்? என்று கோபத்துடன் கத்திவிட்டான் மாதேஷ். அவனின் கத்தலில் பயந்தபடி
உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்துவிட்டாள் அழகுநிலா.
அவள் அவ்வாறு
மறுப்புக் கூறுவாள் என்று எதிர்பார்க்காத வசந்த், “என்ன இப்படி சொல்றீங்க அழகுநிலா”
நீங்க இப்படி
சொல்வீங்க என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மேலும் நீங்க நான் சொல்கிற இந்த
கம்பெனி வேலையே செய்வதற்கான ஒருவருட ஒப்பந்த்தின் அடிப்படியில் உங்களின்
சம்மதத்தோடு வேலையில் சேர்த்திருக்கிறோம்.
அப்படியிருக்குறப்போ
இப்போ கொடுத்த வேலையே செய்யமுடியாதென்று மறுத்து பேசறது. இட்ஸ் நாட் குட் அழகுநிலா, என்றான் .
அவன் அவ்வாறு
கூறியதும், பாஸ்... என்னால் ப்ரோகிராமிங் மட்டும்தான் பண்ணமுடியும்.
செக்ரட்டரி
என்றால் அதற்கு நல்ல கம்யூனிகேசன் ஸ்கில் இருக்கனும். என்னால் மேனேஜ்
பன்னமுடியுமோனு பயமாக இருக்கிறது என்று குறைந்த சத்தத்தில் பயந்தபடி சொன்னாள்.
இப்போ எங்களிடம்
நீங்க மனதில் உள்ளதை பேசலையா? நீங்க உங்க டீம்மோட இருக்கும் போது நான் இங்கே
இருந்து பார்த்துக்கிட்டு தானே இருக்கிறேன்.
இப்படி முடியாது
என்று சொல்வது இதுவே லாஸ்ட் ஆக இருக்கட்டும். மேலும் இந்த போஸ்டிங்குக்கு புதுசா
செக்ரட்டரியை தேர்வு செய்து அவங்களுக்கு நம் ஆக்டிவிட்டி பற்றி தெளிவுபடுத்த
எல்லாம் இப்போ நேரம் இல்லை.
சோ.... நீங்கதான்
இப்போதைக்கு .என்று கடுமயான முகத்துடன் சொல்லிமுடித்தான் வசந்தன்.
வசந்த் பேசும்போதே
தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்த மாதேஷ் அழகுநிலாவை பார்த்து,
நம்ம கம்பெனியை
நியூ பில்டிங்கில் கட்டுவதற்கு மூன்று காண்ட்ராக்டர்களிடம் கொட்டேசன்
கேட்டிருந்தோம்,
இன்னும் ஒன் ஹவர்
கழித்து உங்க அபீஸ் மெயில் ஐடிக்கு அதை சென்ட்
செய்திருப்பார்கள்.
அந்த டீடைல்சை
உடனே இன்பார்ம் பண்ணுங்க. யாரிடம் நம்ம கன்ஸ்ட்ரக்சன் வொர்க்கை கொடுக்கலாம் என்று
நாளைக்கு முடிவு பண்ணும்
என்று கூறிய
மாதேஷ், அழகுநிலாவிடம் நீங்க வெளியில் உட்கார்ந்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் உங்களை
கூப்பிட்டுக்கொண்டே இருக்க முடியாது.
சோ! உங்களுக்கு
இந்த ரூமிலேயே டேபிள் அரேஞ் பண்ணிடுவாங்க நாளைக்கு! என்று அதிகாரமாய் சொல்லியவன்,
ம்.. நீங்க இப்போ
உங்க சீட்டுக்கு போகலாம் என்று சொன்னான்.
அழகுநிலாவால்
அதற்குமேல் மறுத்து எதுவும் கூறமுடியவில்லை. இப்பொழுது நாளைக்கு லீவ் கேட்டால் அது
கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் போனதால் கேட்காமலே இருந்துவிடுவது பெட்டர்
என நினைத்து ஓகே பாஸ் என்றபடி எழுந்து தனது டேபிளுக்கு வந்தாள் அழகுநிலா.
சுமதி அழகுநிலாவிடம்
வந்து, ஏய் உன் போனை ஆப் பண்ணி வச்சுருக்கேன்னு எனக்கு விசு போன் பண்ணினான்.
இந்தா பேசு என்றாள்.
அதனை வாங்கி காதில் வைத்தவள் ரொம்ப சந்தோசம் விசு ம்...கூம் எனக்கு நாளைக்கு லீவ்
கிடைக்கல நான் ஆபீஸ் முடிந்ததும் சாயங்காலம் வருகிறேன் சரி பை என்றவள் போனை
சுமதியிடம் கொடுத்தாள்.
என்னடி அழகி, பாஸ்
உனக்கு நாளைக்கு லீவ் கொடுக்கலையா என்று வருத்தத்துடன் கேட்டவள், என்ன செய்றது...
சரி சாயங்காலம் கண்டிப்பா வந்துடனும் என சொல்லியவள், எனக்கு வொர்க் இருக்கு நான் இங்க
நின்னுட்டு இருக்கிறது ரமணி பார்த்துட்டா ஒருவழி செஞ்சுரும் என்றவள் தனது இடம்
சென்று அமர்ந்து கொண்டாள்.
அழகுநிலா
யோசனையுடன் தனது சிஸ்டத்தை இயக்கவும் அவளுக்கு மெயில் வந்திருபதற்கான இன்டிமேசனை
பார்த்தவள் அதனை ஓபன் செய்து பார்க்கையில் மூன்று கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிகளில்
இருந்து கொட்டேசன்கள் வந்திருந்தது
அதில் ஒன்று ஜானகி
பில்டர்ஸ் ஆனால் அது ஆதித்தோடது என்பது
அழகுநிலாவிற்கு தெரியாதே! மேலும் அதில்
மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இரண்டு வகையான கொட்டேசனை அனுப்பியிருந்தது.
அழகுநிலா அந்த
மூன்று கம்பெனி கொட்டேசனையும் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு தனது பாஸிடம் கொடுக்க
விரைந்தாள்.
மாதேஷ் அப்பொழுது
அங்கு இல்லாததால் அந்த கொட்டேசன்களை வசந்திடம் கொடுத்தாள் அழகுநிலா.
வசந்த் ஏற்கனவே
தனது மேனேஜரிடம் டாப் த்ரீ கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியிடம் தாங்கள் புதிதாக
கட்டப்போகும் பில்டிங்கின் லேன்ட் ஸ்கொயர் பீட் அளவை கூறி தங்களின் சாப்ட்வேர்
கம்பெனியின் பொதுவான் தேவைகளை கூறி கொட்டேசன் வாங்கச்சொல்லி மட்டும்
சொல்லியிருந்தான்,
பாவம் அவன்
அறியவில்லை டாப் ஒன் தற்போது ஜானகி பில்டர்ஸ் என்பதை. மேலும் அழகுநிலா கொடுத்த அந்த நான்கு
கொட்டேசனில் இரண்டு கொட்டேசன் தான் அவனுக்கு திருப்தியாக இருந்தது ஆனால் அந்த
இரண்டும் ஜானகி கன்ஸ்ட்ரக்சன் உடையது
என்று தெரிந்தால் தனது நண்பனான மாதேஷ் ஆட்சேபனை
செய்வானோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது எனவே யோசனயுடன் நின்றுகொண்டிருந்தான் வசந்த்.
ஆனால் அழகுநிலாவிற்குதான்
ஆபீஸ் நேரம் முடிந்துவிட்டதே மற்ற எல்லோரும் அலுவலகத்தைவிட்டு கிளம்பிக்கொண்டு
இருப்பதை பார்த்து தான் மட்டும் தனித்து கிளம்ப விருப்பமில்லாமல் எப்போதடா தன்னை
போகச்சொல்வான் என முள்ளின் மீது நிற்பதைப் போல் நின்றுகொண்டிருந்தாள்.
யோசனையுடன்
நிமிர்ந்து அழகுநிலாவை பார்த்தபோது அவள் பார்வை முழுவதுவும் கண்ணாடி தடுப்புக்கு
வெளியே அபீசையே பார்த்தபடி இருப்பதை கண்டு அங்க என்ன அப்படி பார்க்குறீங்க
அழகுநிலா? என்று கேட்டான்
அவனின் கேள்விக்கு
வேகமாக ஒன்றுமில்லை பாஸ். மற்ற ஸ்டாப்ஸ் எல்லோரும் கிளம்பறாங்க நானும் கிளம்பட்டா?
என்றாள்.
அவள் அவ்வாறு
சொல்லியதும் இங்க பாருங்க அழகுநிலா நீங்க இதேபோல் மாதேசிடமும் கவணமில்லாமல் வேலை
பார்க்காதீங்க
மேலும் இப்போ நாம
கம்பெனியின் விஸ்திகரிப்பிற்காக கூடுதலாக் உழைக்க வேண்டியநேரம் டூ யூ அன்டர்ஸ்டேன்ட்.
தேட் யூ சுட் கோஆப்பரேட்? என்றான்
அவனின்
வார்த்தைகளுக்கு தன்னை அறியாமல் அவள் உதடுகள் ஓகே பாஸ் என்று உச்சரித்ததும்,
என்ன நினைத்தானோ?
நீங்க இப்போ போகலாம் அழகுநிலா. நாளைக்கு காலையில் உங்களுக்கு டேபிள் இங்கே அரேஞ் பண்ணியிருப்பார்கள்.
ஒரு அரை மணிநேரம் முன்னாடியே வந்துருங்க
என்று கூறினான்.
ஏற்கனவே கடுப்பில்
இருக்கும் அவனிடம் வேறு எதுவும் மறுத்துபேச பயந்து வெளியேறினாள்.
சோர்வுடன் தனது
பேக்கை எடுத்தபடி வாசலை நோக்கி சென்றுகொண்டிருந்த அழகுநிலாவினை பார்த்த ரமேஸ்
கிளம்பியாச்சா? என்று கேட்டபடி அவளுடன் இணைந்து நடந்தான்
தனது சோர்வை
மறைத்து அவனிடம் புன்னகைத்தபடி நம்ம காப்
இன்னும் கிளம்பலையே என்று கேட்டாள் அழகுநிலா
ஐந்துநிமிசம்
முன்னாடி கிளம்பிபோய்விட்டதே. நீங்க கவணிக்கலையா?
ஆட்டோவில் தான் ஹாஸ்டலுக்கு போகனுமா நான் வேனா ஹாஸ்டலில் ட்ராப் பண்ணட்டுமா?
என்று கேட்டான்.
அச்சோ! அதெல்லாம்
வேண்டாம் ரமேஷ். நான் ஆட்டோவிலேயே போறேன் என்று சொன்னவள், எனக்கு ஓர் உதவி
செய்யமுடியுமா ரமேஷ்? எனக் கேட்டாள்.
என்ன செய்யணும்
என்று சொல்லுங்க அழகுநிலா, என்னால் முடிந்ததை கண்டிப்பா செய்வேன் என்றான் ரமேஷ்
உங்களுக்கு யாரவது
சைபர்கிரைமை அணுக தெரிந்தவர்கள் இருகிறார்களா ரமேஷ்?, எனக்கு மிரட்டல் விடுக்கும்
அந்த போன் ஆசாமி திரும்ப மிரட்டுவதற்குள் என் வீடியோ பதிவை டெலிட் செய்யணும் எனறு
ட்ரை செய்தேன்.
ஆனால் என்னால்
முடியல என் வீடியோ பதிவை இதில் இருந்து டெலிட் செய்யணும் மேலும் என்னை இந்த அளவு
டார்ச்சர் செய்த அவனுக்கும் சட்டப்படி தண்டனை கொடுக்கணும் என யோசனயாக இருக்கு.
ஆனால் இதை நான்
செய்தாதாக வெளியே தெரியாதவாறு
தெரிந்தவர்கள் மூலம் செய்யணும் என நினைக்கிறேன் என்றாள் அழகி.
அவள் அவ்வாறு
சொன்னதும் ரமேஷ், அவளிடம் உங்களின் மீது தப்பு இல்லையே பிறகு ஏன்? நீங்கள்
செய்ததாக வெளியில் தெரிந்தால் என்ன? நான் உங்ககூட கம்ப்ளைன்ட் கொடுக்க துணைக்கு
வருகிறேன். எதுனாலும் நேரா மோதிப் பார்த்திடுவோம் என்றான் சற்று கோபமாக.
அவனின் கோபத்தை
பார்த்து யோசனையுடன், நீங்க நினைக்கிறமாதிரி என்னால் நேரடியாக இதை கையாளமுடியாது.
மேலும் இதில் உள்ள வீடியோ டெலிட் ஆனால் தான் என்னால் நிம்மதியாக் மூச்சு
விடமுடியும்.
ரமேஷ் என்
வீட்டில் என்னை வேலைக்கு அனுப்பியதே பெரிய விசயம். மேலும் என்னை வேலைக்கு அனுப்பியதையே
குற்றமாக பேசும் என் ஊரு மக்களுக்கு நான் பிரச்சனையில் மாட்டியிருப்பது தெரிந்தால்
கண்,காது,மூக்கு வச்சு பேசி ஊருக்குள் என் குடும்பத்தை தலை நிமிர்ந்து
நடக்கவிடமாட்டாங்க, அதற்குத்தான் நான் பயப்படுகிறேன். அந்த மிரட்டல் ஆசாமிக்கு பயந்து
இல்லை என்றாள்.
அவள் சொன்னதும்
யோசனையுடன் என் ப்ரண்ட் அண்ணன் இன்ஸ்பெக்டராக இருக்கிறான், அவரிடம் நான் ஆலோசனை
கேட்கிறேன் என்று சொன்ன ரமேஷ் அவளின் முன்பே டயல் செய்தான், சத்யா அண்ணா என் தோழி
அழகுநிலாவிற்கு பிரச்சனை, அதில் இருந்து எப்படி தப்பிக்க என்று ஆலோசனை
சொல்லமுடியுமா? எனக் கேட்டான்.
அதற்கு என்ன
பிரச்சனை? என்று கேட்டதும் இதோ அவளிடமே போனை கொடுக்கிறேன் அவளே பிரச்சனைபற்றி
சொல்வாள் என்று கூறி அழகியிடம் போனை கொடுத்தான்.
அழகுநிலாவும்
தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அவளுக்கு ஹோட்டலில் நடந்ததை மேலோட்டமாக சொல்லிவிட்டு
அதன் பின் அந்த
மினிஸ்டரின் மகன் நரேன் தன்னை மிரட்டியதையும் அதன்பின் மாலில் அவனிடம் போனை
கொடுக்க போனதும் அங்குநடந்த அசம்பாவிதத்தையும் மேலோட்டமாக சொன்னவள்
தனது பேரும்
வீடியோவும் வெளிவராமல், தான் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற என்று
கேட்டாள் அழகுநிலா.
அதற்கு அந்த இன்ஸ்பெக்டர்
சத்யன் சிறிது யோசித்து இந்த போன் மேட்டரை நீங்க கம்ப்ளைன்ட் ஆக எழுதி
வேப்பேரியில் இருக்கிற கமிஷினர் ஆபிசில் உள்ள
சைபர் கிரைமில் நாளைக்கு ஈவினிங் ஒரு ஐந்து முப்பதுக்கு வந்து கொடுங்க.
நானும் அங்க வந்துடுறேன் என்ன செய்யலாம் என்று பார்த்துவிடுகிறேன் என்று கூறினார்
சத்யன்
உடனே ரொம்ப தாங்க்ஸ்
சார் நாங்க நாளைக்கு கம்ளைன்ட் கொடுக்க அங்க வந்துடுறோம் என்று சொல்லி போனை
ரமேசிடம் கொடுத்தாள்.
பின் ரமேசிடம்,
நாளைக்கு சுமதியின் நிச்சயத்திற்கு உங்களையும் அழைத்து இருப்பாள். ஆபீஸ்
முடிந்ததும் என் கூட வேப்பேரியில் இருக்கிற கமிஷினர் ஆபீசில் இருக்கிற சைபர்
கிரைம் டிப்பார்ட்மென்ட்க்கு என் கூட வருகிறீர்களா? அங்கு போய் கம்ளைன்ட்
கொடுத்துட்டு அப்படியே இரண்டுபேரும் சுமதி நிச்சயத்திற்கு போவோம் என்றாள் அழகுநிலா.
அதற்கு ரமேசும்,
சரி என தலையாட்ட அதற்குள் இருவரும் பேசிக்கொண்டே அலுவலகத்தைவிட்டு வெளிவந்து
இருந்தனர்.
ரமேஷ் அழகுநிலாக்காக
அங்கு சென்றுகொண்டிருந்த ஆட்டோவை கைக்காண்பித்து நிப்பாட்டி அதில் அழகுநிலாவை அனுப்பிவைத்து தானும் தனது பைக்கை
எடுத்து தோழிக்கு தன்னால் உதவமுடிந்த மன நிம்மதியுடன் வீட்டிற்கு விரைந்தான்.
இன்ஸ்பெக்டர்
சத்தியன் மினிஸ்டர் காந்தனின் கைக்கூலி. அவனுக்கு
அரசாங்கம் கொடுக்கும் சம்பளப்பணத்தைவிட நரேனின் அப்பா மினிஸ்டர் காந்தனின் மூலம்
கிடைக்கும் வருமானம் அதிகம். எனவே அவனது விசுவாசத்தை இப்பொழுது மினிஸ்டருக்கு காண்பிக்க
நினைத்து அவரது பெர்சனல் நம்பரை அழுத்தினான்.
ஆனால் அவர்
சத்தியனின் நம்பரை பார்த்தவுடன், டிப்பார்ட்மெண்டில் நமக்கு விசுவாசமா இருக்கிற
நாயா... இவன தக்கவச்சுக்க எழும்புத்துண்ட போட்டா, கவ்விட்டுபோகாம எப்பப்பாரு ஏதாவது
கேட்டு நச்சரிக்கிறானே.... இந்த இன்ஸ்பெக்டர் விக்ரம் என்று எரிச்சலுடன் போனை
சைலண்டில் போட்டுவைத்தார் மினிஸ்டர் காந்தன்.
இருதடவை முயற்சிசெய்த
இன்ஸ்பெக்டர் விக்ரம் அதை மினிஸ்டர் எடுக்கவில்லை என்றதும் நரேனின் மொபைல்
நம்பருக்கு தொடர்பு கொண்டான் .
அதை நரேன்
எடுத்ததும் ஒரு விஷயம் உங்க காதில போடனுமே
தம்பி என்றான் விக்ரம் .
சொல்றதுக்குதானே
போன் பண்றே என்னனு சொலலுங்க இன்ஸ்பெக்டர் சத்யன் என்றான் நரேன்.
இல்ல தம்பி....
இந்த விஷயம் உங்களுக்கு ரொம்ப முக்கியமானது அதனால விஷயம் சொன்னதும் கொஞ்சம் நம்மள
கவணிக்கணும் என்றான்.
அவனின் பேச்சில்
காண்டான நரேன் முதலில் விசயத்த சொல்லு இன்ஸ்பெக்டர், பிறகு தான் எப்படி
கவனிக்கணும்னு முடிவெடுக்கமுடியும் என்றான்.
உங்களுக்கு அழகுநிலானு
யாரையும் தெரியுமா தம்பி? அதுகிட்ட உங்க போன் ஏதாவது மாட்டிக்கிட்டதா? என்று
கேட்டான்
அழகுநிலாவின்
பெயரைக்கேட்டதும் அலார்ட் ஆன நரேன், உனக்கு எப்படி போன் விபரம் தெரிந்தது? விசயத்த
இழுவையா இழுக்காம முழுசா சொல்லு
இன்ஸ்பெக்டர் என்று குரலில் கடுமையைக் கூட்டி கேட்டான்.
இல்ல அந்த பிள்ள
சைபர் கிரைம் ஆபீஸ் பற்றி என்கிட்ட விசாரிச்சுச்சு அதுட்ட எதோ போன் இருக்காம் ,
உங்களை பற்றி எதோ
கம்ளைண்டுடன் நாளைக்கு சாயங்காலம்
ஐந்துமணிக்கு கொண்டுபோய் கொடுக்கணும் என்றும் அதுக்கு என்னையும் துணைக்கு வரச்சொல்லி என்னுடைய
தம்பியின் நண்பன் ரமேஸ் கேட்டான்,
விஷயம் உங்களை
பற்றியதுன்னு தெரிந்ததும் அவனிடம் வருகிறேன்
என்று பிட்டப்போட்டுட்டு உங்க காதிலையும் விசயத்த சொலிட்டேன் என்றான்.
அவன் கூறியதை
கேட்டதும் கோபத்தின் உச்சிக்கு போன நரேன் கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு,
நாளைக்கு நைட்டு கெஸ்ட்ஹவுஸ் வா! உனக்கு வேண்டியதை தர்றேன் வாங்கிக்கோ! என்று சொன்னவன் போனை
அனைத்து வைத்தான். நாளைக்கு இருக்குடீ உனக்கு என்று கருவிக்கொண்டான்.
அழகுநிலா அன்று
காலை அவளது ஆபீஸ் கேப் வருவதற்கு முன்பே சாயங்காலம் நடக்கும் சுமதியின்
நிச்சயத்திற்கு செல்வதால் எப்பொழுதும் போடும் சுடிதாரை தவிர்த்து சேலை அணிந்து
கொண்டாள்.
மேலும் அங்கு
போகும் முன் ரமேசுடன் சைபர் கிரைம் ஆபீஸ்ககு சென்று கொடுப்பதற்காக நரேனின்
போனையும் எடுத்துக்கொண்டாள்.
மேலும் இன்று ஆபீஸ்
வேலையை ஒழுங்காகச் செய்தால் தான் சாயங்காலம் சுமதியின் நிச்சயத்திற்கு பெர்மிசன்
கேட்டு ரமேசுடன் கிளம்பிப் போகமுடியும் என எண்ணி வசந்த் சொன்னதுபோல் முன்னமே ஆபீஸ்
போவதற்கு கிளம்பி வெளியில் வந்து ஆட்டோவில் ஏறி தனது ஆபீஸ் அடைந்தாள்.
நரேனின் ஆள்
ஒருவன் அழகுநிலாவை கண்காணிப்பதற்கு வாசலில் நின்று கொண்டிருந்தவன் அவள் ஆபீஸ் பஸ்
வர இன்னும் நேரம் இருப்பதால் கொஞ்சம் அசால்டா இருந்தான்
அழகுநிலா வெளியில்
வந்ததையோ கைநீட்டி ஆட்டோவை அழைத்ததையோ கவனிக்க தவறினான் சரியாக ஆட்டோ கிளம்பி
போகும் போதுதான் தற்செயலாக பார்த்தவன் ஆட்டோவில் அவள் செல்வதைப் பார்த்தான்.
உடனே நரேனுக்கு
அழைத்து அவள் நாம் எதிர்பார்த்த நேரத்தைவிட முக்கால்மணி நேரத்திற்கு முன்பே ஹாஸ்டலைவிட்டு
கிளம்பிவிட்டதால கோட்டவிட்டுட்டோம் அண்ணே என்றும் கூறினான் .
அவன் சொன்னதை
கேட்டு டெண்சனான நரேன், சொன்ன வேலையே செய்ய துப்பில்லை? நீ எல்லாம் என்ன xxxxxxxx என்று அசிங்கமாக அவனை திட்டியவன் சரி சாயங்காலம் அவ ஆபீஸ்
விட்டதும் அந்த ரமேஷ் கூட வெப்பேரிக்கு கமிஷனர் ஆபீசுக்கு போறவழியில் போட்டுருங்க
அப்போவும் சொதப்புன நீ செத்த என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.
----தொடரும்----

No comments:
Post a Comment