ஒளிதருமோ என் நிலவு...? [தீபாஸ்-ன்]
அத்தியாயம்-12
வசந்துக்கு போன்
செய்த மாதேஷ், நான் ஆபீசுக்கு மதியம்தான் வருவேன் அதுவரை அழகுநிலாவிற்கு அதிக வேலை
கொடுத்து டார்ச்சர் செய்யச் சொன்னான் .
அவன் கூறியதை
கேட்ட வசந்த் டேய் ஏண்டா அழகான ஒருத்திகிட்ட என்ன வில்லனா காட்டச்சொல்ற.
சும்மாவே அவ பாஸ்
ஆச்சேனு கொஞ்சமாவது ஏறெடுத்து பாப்போம்
என்று நினைக்காமல் என்னை, கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைப்பா.
இதில் நீ...வே..ற. என்று ஆதங்கப்பட்டான்
அவன் சொல்லவும் நீ
வில்லனாக ஆனாத்த்தானே நான் ஹீரோ வேஷம் அவளிடம் காண்பிக்க முடியும்! சொன்னதச் செய் வசந்த்.. என்றபடி இணைப்பை துண்டித்தான்.
ஏற்கனவே நியூ
பில்டிங் காண்ட்ராக்ட்டை ஜானகி பில்டர்ஸ்கிட்ட கொடுப்பதற்கு மாதேசை சம்மதிக்க
வைப்பதற்கே நேற்று வசந்துக்கு அப்பாடா.. என்று ஆனது
அதில் ஏற்கனவே தன
மீது கொஞ்சம் கடுப்பாக இருப்பவனிடத்தில் இப்போ நான் அழகுநிலாவிற்கு ஆதரவாக
இருப்பதுபோல் பேசினால் அவ்வளவுதான்,
பின் அவன் உன்
பார்ட்னர்சிப்பே வேண்டாம் என்று போய்விடுவான். என் எதிர்கால கனவுகளுக்கு அவனின்
சப்போர்ட் நமக்கு இப்போ தேவை,
சோ... அழகுநிலா
எப்படிபோனால் நமக்கென்ன. அவன் சொன்னது
போலவே செய்துடுவோம் என முடிவிற்கு வந்தான் வசந்த்.
அழகுநிலா ஆபீஸ்
வந்ததில் இருந்து அவளுக்கு மூச்சுவிடக்கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்து வேலை
வந்துகொண்டே இருந்தது.
மதியம் லஞ்சுக்கு
எல்லோரும் சாப்பிட போனபின்பும் அவள் தன் வேலையில் மூழ்கியிருந்தாள்
ரமேஷ் லஞ்ச்
டயத்தில் அழகுநிலாவை பார்த்து கம்ப்ளைன்ட் எவ்வாறு எழுதிக்கொடுக்க போகிறாள் என்று
தெரிந்து கொள்ளவும்
ஈவினிங் போர்தேர்ட்டிக்கு
பெர்மிசன்கேட்டு வரச்சொல்வோம் என நினைத்தும் அழகுநிலாவின் வருகைக்காக காத்து
இருந்தான் .
ஆனால் அவள் வராத
காரணத்தால் ஆபீஸ் ரூமின் பக்கம் வந்து லஞ்ச் சாப்பிட வராமல் இன்னும் என்ன
செய்துகொண்டிருகிறாள் என பார்க்க வந்தான் ரமேஷ்.
எம் டி ரூமில்
அவளுக்கு போட்டிருந்த மேஜையின் உள்ள சிஸ்டம் முன் உட்கார்ந்து சின்சியராக அவள்
வேலை பார்த்துக்கொண்டிருப்பதை கண்ணாடி தடுப்புக்கு வெளியில் நின்று கவனித்தான் ரமேஷ்.
அங்கு அவள் மட்டும் உட்காந்து வேலை பார்ப்பதை பார்த்தவன் அவளது மொபைலுக்கு
அழைத்தான்.
வேலை செய்துகொண்டே
மொபைலை எடுத்து காதுக்கு கொடுத்த அழகுநிலா சொல்லுங்க ரமேஸ் என்றதும் என்ன அழகுநிலா
சாப்பாட்டு நேரத்தில் கூட வேலை செய்துகிட்டு இருக்கீங்க? வாங்க முதலில்
சாப்பிட்டுவிட்டு பிறகு வேலை செய்யலாம் என்றான். .
அப்பொழுதுதான்
நேரத்தை பார்த்த அழகுநிலா டைம் பார்க்கல ரமேஷ் ஒரு டூ செகண்ட்ல இத முடிச்சுட்டு
நான் வருகிறேன் என்றவள் சொன்னதுபோல் அவனின் முன் வந்து தன சாப்பாட்டுடன்
உட்கார்ந்தாள் அழகுநிலா.
வந்துட்டயா! அழகுநிலா, சாயங்காலம் ஆபீஸ் முடிவதற்கு ஒருமணிநேரம்
முன்பே சுமதி நிச்சயத்திற்கு போகவென்று
பெர்மிசன் வாங்கிட்டு வந்துவிடுகிறேன் நீயும் வந்துடுவாயா?, அந்த மொபைலை
எடுத்து வந்துள்ளாயா என்று கேட்டான் ரமேஷ்.
ம்...நானும்
பெர்மிசன் கேட்டுப்பார்கிறேன் ரமேஷ், ஆனா நம்ம பாஸ் வசந்த் கொடுப்பாருன்னு எனக்கு
தோனல.
என் மேல் என்ன
கடுபுனு தெரியல. நாலுபேர் பார்கிற வேலையே என்னை மட்டும் பார்க்க வச்சு கொடுமை
பண்றாரு என்று சொன்னவளின் சோர்ந்த முகம் ரமேசுக்கு வருத்தத்தை தந்தது.
தன்னை கவலையுடன்
பார்க்கும் ரமேசை பார்த்த அழகுநிலா தன்னை இயல்பாக அவனிடம் காண்பித்து,
அதெல்லாம் நான்
கில்லி மாதிரி வேலைசெய்து சமாளித்துடுவேன் சம்பளம் இரட்டிப்பா தரும்போது வேலையும்
ரெட்டிப்பாகத்தானே இருக்கும் என்றவள்,
வேகமாக
சாப்பிட்டுமுடித்து எனக்கு வேலை இருக்குப்பா! நான் போறேன் என்றுச் சொல்லி தனது மேஜைக்கு விரைந்தாள் .
அவள் அங்கு எம்.டி
ரூமிற்குள் போனபின்புதான் கவனித்தாள் மாதேசும் வந்துவிட்டதை இருவருக்கும் பொதுவாக
குட் ஆப்டர்நூன் பாஸ் என்றவள் பாஸ் நீங்க கொடுத்த வொர்க்கை பினிஸ் பண்ணிட்டேன்
என்றாள் வசந்த்திடம்.
அவள் கூறியதும்
அப்போ நீங்க இப்ப என்ன செய்றீங்கன்னா ஏற்கனவே போய்கொண்டிருக்கிற ப்ராஜெக்ட்
ரிப்போர்ட்டை எல்லாம் தனி போல்டரில் பைல்பண்ணி சார்ட் நோட் பிரிபேர் பண்ணிடுங்க
என்றான்
அவன் சொன்னதும்,
பாஸ் நீங்க சொல்ற வொர்க்கை இன்னைக்கு சாயங்காலத்திற்குள் முடிக்க முடியாது.
மேலும் என் பிரண்டு
சுமதியோட நிச்சயதார்த்தத்திற்கு போக ஆபீஸ் டைம் முடிவதற்கு ஒருமணிநேரம் முன்பே
எனக்கு பெர்மிசன் வேணும்பாஸ் என கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் கேட்டாள்.
அவள் கூறியதை
கேட்டு கோபத்துடன் பேசப்போன வசந்த்தை, “ஒருநிமிஷம் வசந்த்.. நீங்க போய்டுவாங்க அழகுநிலா.
அதுவரை அவன்
குடுத்த வொர்க்கை செய்யுங்க மீதிவொர்க்கை இன்னும் இரண்டு நாட்களுக்குள் முடித்து
கொடுத்தால் போதும் என்று கூறினான்” மாதேஷ்.
பின்பு வசந்திடம்
கொஞ்சம் லிபரலாக நடந்துக்கோ வசந்த். நேற்று இருந்து பார்கிறேன் நீயும் ரொம்பத்தான்
படுத்தற அவங்கள.
என்னதான்
காண்ட்ராக்ட் பேசிஸ்சில் நாம் வேலைக்கு எடுத்திருந்தாலும் சேலரி டபுள்ளா
கொடுத்தாலும் அவங்களும் மனுசிதான் மிசின் கிடையாது என்பதை நாம கொஞ்சம் ஞாபகம்
வச்சுக்கிடனும் என்றான்.
காலையில் அவசர
அவசரமாக கிளம்பி, தனக்கு வந்த மிரட்டலை சமாளிக்க எடுத்தமுடிவு சரியா? என குழம்பிக்கொண்டும்...
புதிதாக தன மேல் திணிக்கப்பட்ட செக்ரட்ரி போஸ்டும்.... ஆபீசில் செய்த அதிகப்படியான
வேலையும் அழகுநிலாவின் உடல் மனம் இரண்டையும் பலவீனப்படுத்தியிருந்தது .
இந்தநிலையில்
தனக்கு சப்போர்ட்டாக மாதேஷ் பேசியதும் சட்டென்று சுய பச்சாதாபத்தில் அவளின்
கண்களில் கண்ணீர் தழும்பிவிட்டது.
அதை
அவர்களிடமிருந்து மறைப்பதற்காக கஷ்ட்டப்பட்டு கண்ணீரை வழியவிடாமல்
தடுத்துப்பார்த்தாள்.
இருந்தும்
மூக்கின்நுனியும் கன்னமும் சிவந்து உதடுகள் துடிக்க போவதை உணர்ந்து கீழ்இதழை
பற்களினால் கடித்து அடக்கமுயன்ற நேரம் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீர் முத்துக்கள்
கன்னத்தில் உருண்டு வழிந்துவிட்டது .
அதில் சங்கோஜமடைந்தவள்
வேகமாக தனது மேஜைக்கு விரைந்து சிஸ்ட்டத்தில் வேலைசெய்வதை போன்ற பாவனையில் தன்னை
நிதானப்படுத்த முயன்ற நேரம் அவளின் முன் மாதேஷ் தண்ணீர் பாட்டிலை நீட்டி ரிலாக்ஸ்
நிலா இந்தாங்க தண்ணீர் என நீட்டினான்
மறுபேச்சு
பேசாமல் அதை வாங்கி குடித்ததும் கொஞ்சம்
நிதானித்தவள் தேங்க்ஸ் பாஸ் என சொல்லி
வரவழைத்த புன்னகையை அவனுக்கு கொடுத்தாள்.
உடனே மாதேஷ்
அவளிடம் இப்போ கொஞ்சம் நார்மல் ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன். இல்ல இன்னும்....
என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை தடுத்து
ஸ்டில், ஐ ஆம் ஓகே
பாஸ் .கொஞ்சம் ரெஸ்ட்ரூம் போய் ரெப்ரஸ் பண்ணிட்டுவந்து என் வேலையே செய்கிறேன் என்றதும் சம்மதமாக மாதேஷ் தலையாட்டவும் எழுந்து
ரெப்ரஸ் செய்து வந்தவள் முகத்தில் ஆழ்ந்த சாந்தம் நிலவியது.
அவள் ரெஸ்ட்ரூம்
சென்றதும் வேகமாக மாதேஷ் அவளின் மேஜை ட்ராயரில் நரேனின் மொபைல் இருக்கிறதா என்று
ஆராய்ந்தான்
ஆனால் அழகுநிலா
கையில் வைத்திருக்கும் பர்சினுள் அதையும் எடுத்துக்கொண்டே சென்றிருந்தாள் அதனால்
அவனுக்கு அது கிடக்காமல் போய்விட்டது,
அவள் வரும்
அரவத்தை வசந்த் கூறியதும் பழையபடி அந்த டிராயரை மூடிவிட்டு தனது இருக்கைக்கு
வந்துவிட்டான் மாதேஷ் .
அழகுநிலா
சொன்னதுபோல் ஆபீஸ் விடும் ஒருமணிநேரம் முன்பே பெர்மிசன் வாங்கி கிளம்பிவிட்டாள்.
வெளியில் வந்ததும்
ரமேசை அவள் தேடுவதை அவளின் பின்னல் வந்த ரமேஷ் அறிந்துகொண்டு நான் உங்க பின்னால்தான்
இருக்கிறேன் அழகுநிலா என்றதும், திரும்பிப்பார்த்து,
வந்துட்டீங்களா?
நேரா கமிஷ்னர் ஆபீசிலுள்ள சைபர் கிரைம் ஆபீசுக்கு போகலாமா என்று கேட்டதும் அவன்
சம்மதமாக தலையாட்ட இருவரும் இணைந்து வெளியில் வந்து ரமேசின் பைக்கில் பின்னால்
உட்கார்ந்தபடி பயணத்தை மேற்கொண்டாள் அழகுநிலா.
ரமேஷ் கொஞ்சதூரம்
போகும்போதே சற்று இடைவெளியில் அவனது பைக்கை ஒரு மினிலாரி தொடர்வதுபோல் உணர்ந்தான்.
இருந்தாலும் தனது மனப்பிரமை
என நினைத்து சாலையில் கவனத்தை செலுத்தியவன் கடைகள் நிறைந்த சாலையைவிட்டு மெயின்
ரோட்டுக்கு வந்தபின்பு தனது பைக்கின் உள்ள
கண்ணாடியில் வேகமாக பின்னால் நான்குசக்கர மினிலாரி அசுரவேகத்தில் வருவதை பார்த்து பயத்துடன்
வேகமாக ஒதுங்கப்பார்த்தான்
இருந்தும் லேசாக
வண்டியை அந்த லாரி தட்டியதும் போய்கொண்டிருந்த ஸ்பீடில் இடித்ததினால் ஒருசைடாக
கால்போட்டு உட்கார்ந்திருந்த அழகுநிலா துண்டாக தூக்கி எறியப்பட்டாள்.
பைக்குடன் கீழே
சரிந்த ரமேஷ் கைகால்களில் பயங்கர சிராய்ப்புடன் எழுந்துகொள்ள சிரமப்பட்ட நேரம்
பின்னால் காலேஜ் ஸ்டூடன்ட் ஒரு ஐந்து பைக்கில் வந்தவர்கள் வேகமாக அவனின் அருகில் இறங்கி
அவன் எந்திரிக்க உதவி செய்தனர்
மற்ற இரண்டுபேர்
சற்று தள்ளி விழுந்திருந்த அழகுநிலாவின் அருகில் சென்றனர் தலையில் இருந்து ரத்தம்
வழிய மயக்கத்திற்கு சென்றுகொண்டிருந்த அழகுநிலாவை பார்த்ததும் தூக்குவதற்குப் பயந்து
ஆம்புலன்சிற்கு போன்செய்தனர்.
கஷ்ட்டப்பட்டு
எழுந்து ரமேஷ் அழகுநிலாவிற்கு என்ன ஆச்சோ...!
என்று பதறி அவளின் அருகில் சிராய்புக்காயம் ஏற்படுத்திய வலியையும்
பொருட்படுத்தாமல் வந்து அவளின் தலையை தன மடியில் தாங்கியநேரம் அவனின்
சட்டைப்பையில் இருந்த போன் சத்தம் எழுப்பியது
அதை எடுத்து
காதில் வைத்ததும் அந்தப்பக்கமிருந்து ஓர் குரல் பேசாம அங்கு வருகிற ஆம்புலன்சில்
அவளைமட்டும் ஏற்றிவிட்டு நீபாட்டுக்கு உன்வழிய பார்த்துக்கிட்டு போய்கிட்டேயிரு
இல்லையென்றால் நீயும் குளோஸ் ஆகிடுவ, என்று மிரட்டிவிட்டு போனை வைத்துவிட்டான்.
உறைந்துபோய் அவன் அடுத்து என்னசெய்ய என்று யோசிக்க முடியாமல் இருந்த சமயம் .
அடிபட்டு
மயக்கத்திற்கு போய்கொண்டிருந்த அழகுநிலா தனது கையில் அவளின் பேக்கை சுற்றி வைத்திருந்ததால் அந்த பேக்கும் அவளின் கையிலேதான்
மாட்டி இருந்தது .
ரமேசின் கையில்
தட்டி ரமேஷ்.... என்று கஷ்ட்டப்பட்டு கூப்பிட்டவள் தன் கையில் இருந்த பேக்கை
பார்த்து போன் மத்தவங்க கைக்கு போய்விடக் கூடாது என்று சொல்லியபடி மயங்கினாள்...
அவளின் குட்டி ஹேண்ட்பேக்கை
அவள் கையில் இருந்து அகற்றி தனது இன்செய்திருந்த சட்டையின் மேல் மூன்று பட்டனை
கழட்டி அதை உள்ளே வைத்து பட்டனை போடும்போது அந்த பேக்கினுள் இருந்த போன்
ஒலிஎழுப்பியது.
மனம் தட..தட..க்க
அதனை எடுத்து ஆன்செய்து காதிற்கு கொடுத்தான் ரமேஷ். அப்பொழுது
அந்தப்பக்கம் இருந்து ஓர் பெண்மணியின் குரல்,
அழகுநிலா!, நான்
ஆதித்தின் அம்மா ஜானகி பேசுகிறேன் என்றது அவன் காதில் விழுந்ததும் ரமேசிற்கு ஆதித்
அழகுநிலாவை காப்பாற்றிவிடுவான் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. .
உடனே ஆண்டி ஆதித்
சார் இருக்கிறாரா? இங்க அழகுநிலாவிற்கு ஆக்சிடென்ட் ஆகி வேப்பேரி ரோட்டில் மயங்கிக்கிடக்கிறார்கள்.
நீங்கள் சாரை கொஞ்சம் உதவிக்கு அனுப்பமுடியுமா? என்று கேட்டான்.
ஆதித்தின் வீடும்
அந்த ரோட்டுக்கு பக்கத்தில்தான் இருந்தது. எனவே ஜானகி ஒருநிமிஷம் பா... என்று
பதட்டத்துடன் ஆதித்...... என சத்தமாக குரல் கொடுத்தாள்.
அப்போதுதான்
வீட்டிற்கு வந்திருந்த ஆதித் இன்னும் உடைகூட மாற்றாமல் தனது ஷூவை கலட்டி
வைத்துவிட்டு தண்ணீர் அருந்திக்கொண்டிருந்தவன்,
என்னம்மா? என்று
அவளின் பதட்டம் பார்த்து கேட்டதும் அழகுநிலாவிற்கு ஆக்சிடெண்டாம் நம்ம வீட்டிற்கு
பக்கத்தில் இருக்கும் வேப்பேரி மெயின்
ரூட்டில் தான் மயங்கிக்கிடக்கிறாளாம் நீ போய் என்னவென்று பார்! என்று அவனிடம்
கூரியவள், இதோ இப்போ ஆதித் அங்கே
வந்துருவான் பா என்றாள்.
ஜானகியின் அருகில்
வந்த ஆதித் போனை கையில் வாங்கி நீங்க யார் என்று ஆதித் கேட்டதும் ரமேஷ் சார் கொஞ்சம்
ஹெல்ப் பண்ணுங்க நான் அழகுநிலாவோடு வேலை பார்க்கும் ரமேஷ்,.
நாங்கள் இருவரும்
பைக்கில் வரும் பொது ஒரு மினி லாரி எங்களை இடித்துவிட்டு போய்விட்டது என்று அவன்
சொல்லிமுடிபதற்குள் மறித்து பேசிய ஆதித், ஆம்புலன்சுக்கு போன் பண்ணவேண்டியதுதானே?
என்று கேட்டான்
அவனின் பேச்சை
கிட்ட இருந்து கேட்ட ஜானகிக்கே கோபத்தை கொடுத்தது. ஆதித்.....என்று அவள் குரல்
உயர்த்தி கூப்பிட்டதும் நிமிர்ந்து தாயின் முகத்தை பார்த்ததும் அவளின் தவிப்பை
கண்டு ஏதாவது அவளுக்கு அம்மாவிற்காகவாவது செய்யலாம் என்று நினைக்கையிலேயே....
ரமேசின் பதட்டமான
குரல் சார்.... சார்.... ப்ளீஸ் இப்போ எங்களை ஆக்சிடென்ட் செய்ததே அந்த
மினிஸ்டரின் வேலை தான்.
மேலும் அவர்களே ஆம்புலன்சை
வேறு இங்கு அனுப்பி அழகுநிலாவை கொண்டு செல்லப் பார்க்கிறார்கள் இதோ எங்களின்
அருகில் ஓர் ஆம்புலன்ஸ் வேறு வருகிறது என்று பதட்டத்துடன் கூறியதும்,
நிலைமையின்
தீவிரத்தை உணர்ந்த ஆதித், ஒரு பத்து நிமிஷம் சமாளிங்க ரமேஷ் நான்
வந்துவிடுகிறேன் என்றவன் தொடர்பை துண்டித்தான்.
பிரதர் அவங்க
தலையில் இருந்து ரத்தம் நிறைய போகுதுபாருங்க இந்தாங்க இந்த டவலால்
அழுத்திப்பிடிங்க என்று ஒருவன் டவல் கொடுக்கும் போதே அவர்களின் அருகில் வந்து
நின்ற ஆம்புலன்சில் இருந்து நான்குபேர் ஸ்ட்ரெச்சருடன் இறங்கி வந்தனர்.
தனது காரில் ஏறிய ஆதித்
வேப்பேரி ரோட்டிற்கு அதை ஓடவிட்டபடி அந்த ஏரியா போலிஸ் ஸ்டேசனின் எஸ்.ஐ அவனுக்கு வேண்டியவரானதால் அவருக்கு தனது
மொபைலில் அழைத்தான் .
போனை எடுத்த எஸ்.ஐ
சொல்லுங்க ஆதித் என்றதும், வைப்பேரி ரோட்டில் தனக்கு வேண்டிய அழகுநிலா என்றபெண்
ஆக்சிடென்ட் ஆகி இருபதாகவும்,
அந்த ஆக்சிடென்டை
செய்யச்சொல்லி ஏவியவனே பின்னாடி ஆம்புலன்சை அனுப்பி அவளை தூக்கிப்போக
முயல்கிறார்கள்
உடனே அதை
தடுத்துநிருத்தும்படியும் தான் ஸ்பாட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், மீதிவிபரம்
நேரில் பார்த்து சொல்வதாக கூறி இணைப்பைத் துண்டித்தான்.
அந்த எஸ் ஐ அந்த
ஏரியாவின் மெயின் ரூட்டின் ரோந்துப் போலீசுக்கு போன் செய்து ஆக்சிடென்ட் பற்றி
கூறி போலி ஆம்புலன்ஸில் அங்கு காயம்பட்டிருகும் பெண்ணை கடத்துவதாக தகவல்
வந்திருப்பதாக கூறி உடனே ஸ்பாட்டுக்கு போய் நிலவரத்தை அறியுமாறு கூறினார்
ரோட்டிலோ அழகுநிலாவை
தூக்கிப்போக அந்த ஸ்ட்ரச்சரை அவளுக்கு அருகில் கிடத்தியதும் ரமேஷ், “நான்
ஆம்புலன்சிற்கெல்லாம் போன் செய்யவில்லையே! எப்படி அதற்குள் நீங்க வந்தீர்கள்?” என்று பேச்சை
வளர்பதற்காக கேட்டபடி அழகுநிலாவை அவர்கள் தூக்காதவாறு பிடித்துக்கொண்டு கேட்டான்.
உடனே அங்கு
நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற அந்த ஸ்டூடன்ஸ், அவன் ஆதித்திடம்
பேசும்போது அங்குதான் இருந்ததினால் அவர்களுக்கும் அந்த ஆம்புலன்ச்சில் இருந்து
இறங்கிய நால்வரையும் சந்தேகக் கண் கொண்டுதான் பார்த்தனர்.
அந்த நால்வரின்
தோற்றமே பார்க்க ரவுடிகள் என்று அப்பட்டமாக காட்டிக் கொடுத்ததால் அந்த பையனில்
ஒருவன் தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுக்க முயன்றான்.
உடனே அந்த ரவுடிகளில்
ஒருவன் தம்பி ஒழுங்கா போனை பையில போட்டுட்டு திரும்பிப்பார்க்காம போயிருங்க.
பார்க்க சின்ன பையன்களா இருக்கீங்க ஒரு அடிக்கு தாங்க மாட்டீங்க! என்று
மிரட்டினான்
அப்பொழுது அங்கு
ரோந்து போலீஸ் விரைந்து வந்தது அதை பார்த்ததும் மாரி போலீஸ் வருதுடா வாங்க
போய்விடலாம்... என்றபடி அவர்களின் ஆம்புலன்சில் ஏறி தப்பித்துச்செல்ல முயன்றனர்.
அதில் ஒருவன்
ரமேசின் சட்டை பட்டன் திறந்திருந்த இடைவெளியில் அவளின் பேக்கை பார்த்து அவன்
வைத்திருந்த கத்தியை காட்டி வேகமா அந்த பேக்கை என்கிட்டே கொடுத்திடு,
இல்லையென்றால்
உன்ன குத்திடுவேன்... என்று போலீஸ் ஜீப்பின் மீது ஒருகண்ணும் கிளம்பி தனக்காக
காத்துக்கொண்டிருந்த ஆம்புலன்சின்மீது ஒரு கண்ணும்மாக இருந்துகொண்டு கூறினான்.
மற்ற ரவுடிகள்
வேனில் ஏறிவிட்டதாலும் போலீஸ் ஜீப் சமீபத்தில் வந்துகொண்டிருப்பதாலும் தைரியம்
வந்த அந்த ஸ்டூடன்ஸில் ஒருவன் தான் வைத்திருந்த பேக்கை அந்த ரவடி கத்தி
பிடித்திருந்த கையில் கத்தியை குறிபார்த்து தூங்கி எறிந்தான்.
கனமாக தனது கையில்
அந்த பேக் மோதவும் அந்த கத்தியை
நழுவவிட்டவன் போலீஸ் ஜீப் அருகில்
நெருங்கிவிட்டதால் ஓடிப்போய் ஆம்புலன்சில் ஏறவும் வேகமெடுத்து பறந்தது வேன்.
அங்கு போலீஸ்
ஜீப்பும் உண்மையான ஆம்புலன்சும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது நின்றதும் போலீஸ் அங்கு நிலவரத்தை
விசாரித்துக்கொண்டு இருக்கும்போதே ஆதித்தும் அங்கு விரைந்து வந்தான் .
அழகுநிலா தலையில்
கட்டிய துணியையும் மீறி ரத்தம் கசிய மயங்கியிருந்த நிலையை பார்த்தவனுக்கு ஏனோ!
நெஞ்சம் உரியவனுக்கு துடிப்பதுபோல் துடித்தது.
ஆம்புலன்சில் அவளை
ஏற்றும்போதே ஆதித் தனக்கு தெரிந்த பெரிய மருத்துவமனைக்கு எடுத்து போகச்சொன்னான்,
ரமேஷையும் அவளுடன்
ஆம்புலன்சில் ஏறச்சொல்லி ஆம்புலன்சின் பின்னால் தனது காரை செலுத்தினான்
அவன் முன்கூட்டியே
அந்த மருத்துவமனைக்கு தகவல் சொல்லி இருந்ததால் வெளியில் ஆம்புலன்ஸ் நின்றவுடனே
அங்கு விரைந்துவந்த டாக்டர் டீம்ஸ்
அழகுநிலாவை ஐ.சி.யூ வார்டில் அட்மிட் செய்தனர்.
ரமேசுக்கு ஏற்பட்ட
காயங்களுக்கு மருந்து போட்டு கட்டுப்போட்டு வெளியில் வந்ததும் ஆதித்தை அவன்
தேடினான்.
ஆதித் டாக்டரிடம்
அவளின் நிலையை விசாரித்துக்கொண்டு இருந்தான்.
அவள் தூக்கி
எறியப்பட்டது அங்கு ரோட்டோரமாக உணவு
விடுதி கட்ட அடித்திருந்த மண்மேட்டில் விழுந்ததால் பெரிதாக அடி ஒன்றும்
இல்லையென்றும்
விழுந்த வேகத்தில்
மண்டை மோதியதால் காயம் ஆகி இங்குவர தாமதம் ஆனதால் இரத்தம் நிறைய வெளியேறியதாலும்
அதிர்ச்சியாலும் மயக்கத்திற்கு சென்றுள்ளதாகவும் தலையின் காயத்தை பரிசோதித்து,
மேலும் மூளைக்கு ஏதும் பாதிப்பு
இருக்கிறதா என்று எம் ஆர் ஐ ஸ்கேன் எடுத்துவிட்டு சொல்வதாக மருத்துவர்
கூறிக்கொண்டிருந்தார்.
அவர்களின் அருகில்
வந்த ரமேசும் டாக்டர் கூறியதை கேட்டு அவளுக்கு உயிர் பயம் இல்லை என்று தெரிந்த
ரமேசும் நிம்மதியடைந்தான்.
மேலும் அங்குவந்த
போலீசும் ஆதித் இப்போதைக்கு ஆக்ஸிடென்ட் என்று மட்டும் எழுதிக்கொள்ளும்படியும்,
மேலும் அழகுநிலா
சரியானதும் தானே அவளுடன் போலீஸ் ஸ்டேசன் வந்து மேற்கொண்டு எதுவும் கம்ப்ளைன்ட்
கொடுக்கவேண்டுமென்றால் கொடுப்பதாகவும் கூறினான்.
அவர் போனதும்
ரமேஷ் ஆதித்திடம், இது பக்கா கொலை முயற்சி. ஏன ஆக்சிடன்ட் என்று மட்டும்
எழுதச்சொன்னீர்கள்? என்று கேட்டான்.
உங்களுக்கு மினிஸ்டர்
காந்தனின் செல்வாக்கு பற்றித்தெரியாது. இப்போ கோபப்பட்டு கம்ளைண்ட் கொடுத்தால்,
மினிஸ்டர் மகன் தனது அப்பா பேரை சொன்னால்
உடனே விசாரணை செய்வது போல் செய்து பின்
அந்த மொபைலை போலீசிடம் ஒப்படைகச் சொல்லுவார்கள்.
இந்த போனில்
மினிஸ்டருக்கோ அல்லது அவரின் மகனுக்கோ எதிரான பதிவு ஏதோ ஒன்று இருக்கவேண்டும்.
அதனால் இதை
போலீசுக்கு கொடுப்பதால் டிப்பார்ட்மெண்டை அவரின் அதிகாரத்தால் கைக்குள்
கொண்டுவந்து போனை மினிஸ்டர் கைப்பற்றிக்கொள்வார்.
மேலும் இந்த
ஆக்சிடென்ட் கேசை திசை திருப்ப அன்று ஹோட்டலில் அந்த மினிஸ்டர் மகன் அழகுநிலாவுடன்
எடுத்த வீடியோ பதிவை வேறுமாதிரி சித்தரித்து வெளியிட்டுவிட்டால் அது
நிலாவிற்குத்தான் பிரச்சனை
எனவே, அந்த வீடியோ
பதிவை முதலில் டெலிட் செய்யவேண்டும். இரண்டாவது அந்த போனில் அப்படி என்ன வீடியோ
அமைச்சருக்கு எதிராக உள்ளது என்று பார்வையிட்டு முடிந்தால் அந்த பிரச்சனையை வைத்து
அழகுநிலாவை திரும்ப அவர்கள் டார்ச்சர் செய்யாதபடி மிரட்ட என்னால்முடியும் என பதில்
கூறினான் ஆதித்.
அவன் கூறியதை
கேட்ட ரமேஷ் அரசியல்வாதியை எதிர்க்க தன்னைப் போன்ற அழகுநிலாமாதிரியான சாமானிய
மக்களால் முடியாது. \
அதற்கு ஆதித்
போன்ற செல்வாக்கான ஆட்களால் மட்டும்தான் முடியும் என்று உணர்ந்துகொண்ட ரமேஷ்,
சாரி சார்! நாம்
இருவரும் ப்ராப்பரா அறிமுகமே ஆகவில்லை. அழகுநிலாவிற்கு தெரிந்தவர்கள் என்ற
அடிப்படையில் மட்டுமே நாம் அறிமுகமாகியிருகிறோம் என்று சொன்னான்.
அவன் கூறியதும்
ஆதித், ஐ ஆம் ஆதித்தராஜ் ஜானகி பில்டர்ஸ் எம்டி என்று தன்னை
அறிமுகப்படுத்திகொண்டான்.
ரமேசிற்கு ஆதிதை
எங்கோ பார்த்தமாதிரி இருந்ததது. மேலும் அவன் தோரணையும், போலீஸ் முதல்கொண்டு
டாக்டர் வரை அவனிடம் பேசிய பாங்கும் அவனை செல்வாக்கு மிகுந்த நபர் என்பதை
உணரச்செய்தது.
ஆதித் ஜானகி
பில்டர்ஸ் எம் டி என்று தெரிந்ததும் இன்றைய தொழில் உலகின் ஹீரோவிடமா தான் பேசிக்கொண்டிருக்கிறேன்
என்று பிரமிப்புடன் ஓர் எட்டு அவனை விட்டு தள்ளி நின்று மரியாதையாக மேலும்
மரியாதையாக அவனிடம் பேசத்தொடங்கினான். .
ஆதித்துடைய பெயர்
மட்டும் தொழில் உலகில் பிரபலம். பொதுவாக அவனின் புகைப்படங்கள் எந்த மேகசீனிலும்
அவன் போட அனுமதிப்பதில்லை.
தன்னுடன்
பத்திரிக்கையாளர்கள் எடுக்கும் பேட்டிகளை
அவனது ஜானகிபில்டர்ஸ் எம்பலம் மற்றும் அவனது நிறுவனத்தின் முகப்பு
புகைப்படத்துடன் மட்டுமே வெளிவரும்.
மேலும் தன் முகம்
எல்லோருக்கும் பரிச்சயமாவது அவனுடைய ப்ரைவேட் வாழ்க்கையை பாதிக்கும் என்பது அவனது
கருத்தாக இருந்தது.
ரமேஷ், அவனை பற்றி அறிமுகப்படுத்தி முடிக்கும் போது
அங்கு வந்த நர்ஸ் சார் பேசன்ட் கண் முழிச்சுட்டாங்க என்று சொன்னதும் இருவரும்
அழகுநிலாவை பார்க்க அறைக்குள் சென்றனர்.
அங்கு ஆதித்தை
எதிர்பார்க்காத அழகுநிலா ஒருநிமிடம் இவர் எப்படி இங்கே என்று யோசனையுடன் ரமேசை
பார்த்தாள்.
உடனே ரமேஷ், சார்
மட்டும் ஆக்சிடென்ட் நடந்த இடத்திற்கு
வரவில்லை என்றால் என்னால் எதுவுமே செய்திருக்க முடியாது. இப்போ நீ பத்திரமா
இருப்பதற்கு சார் தான் காரணம் என்று கூறிகொண்டிருந்தான்.
அப்பொழுது ஜானகி,
ஆதித்துக்கு மொபைலில் அழைத்தாள் அழகுநிலா
எப்படி இருக்கிறாள்? என்று விசாரித்தார் .
மயக்கம் தெளிஞ்சிருச்சு
போனை அவகிட்டயே குடுக்கிறேன் பேசுங்க என்று அவளிடம் தம் மொபைலை நீட்டி அம்மா
பேசுறாங்க என்றான்.
அவளிடம் நலம்
விசாரித்த ஜானகி அந்த கடவுள் புண்ணியத்தில் இதோட போய்விட்டதே உனக்கு! உடம்பு
சரியானதும் என் கூட அம்மன் கோவிலுக்கு வரணும் நீ இந்த கண்டத்திலிருந்து
மீண்டுவந்ததும் உன்பேரில் நான் அங்க அன்னதானம் செய்வதாக வேண்டி இருப்பதாக சொன்னார்
ஜானகி.
அழகுநிலாவிற்கு
அவரின் அன்பும் ஆதித்தின் உதவியும் மூச்சுமுட்டும் அளவிற்கு நன்றிக்கடன்
அவர்களிடம் பட்டதுபோல் இருந்தது. உணர்ச்சியில் வார்த்தை வர மறுத்தது.
கரகரத்த தனது குரலை
கஸ்டப்படுத்தி மறைத்து உங்களை மாதிரியும் உங்களின் மகன் மாதிரியும் நல்லவர்கள்
உதவி எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு ஆயுசுக்கும் கடமை
பட்டிருக்கிறேன். எப்படி என் கடனை அடைக்கப்போகிறேன்
என்று எனக்கு தெரியல. கோபுரத்திற்கு
குடிசையால் என்ன உதவிடமுடியும் என கேட்டாள்.
அதனை கேட்ட ஜானகி
அசடு மாதிரி பேசாதே அழகி, மனுசமக்கள்
ஒருத்தருக்கொருத்தர் உதவறது போய்...
பெரிசா பேசிட்டுயிருக்க.
சரி உன்வீட்டிற்கு
உனக்கு ஆக்சிடன்ட் ஆனா விஷயத்தை சொல்லிட்டீங்களா உன்னை கூட்டிப்போக எப்ப உன்வீட்டில் இருந்து வரப்போறாங்க? என்று
கேட்டாள்.
அவள் கேட்டதும்
அச்சோ!... ஆன்ட்டி வீட்டிற்கெல்லாம் சொல்றமாதிரி பெருசா எனக்கு எதுவும் அடிபடல,
அம்மாவிற்கு தெரிந்தால் என்னை வேலையும்
வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று இப்போவே ஊருக்கு கூப்பிட்டுபோக நிற்பாங்க. நான்
ஒருவருஷம் கண்டிப்பா வேலை பார்ப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப்
போட்டிருக்கிறேன் என்று சொன்னாள்.
அவள் கூறியதை
கேட்டதும், யோசனையுடன்.... “போனை ஆதித்திடம் கொடு அழகுநிலா” என்றாள்.
எதற்கு கொடுக்கச் சொல்கிறாள்
என்று தெரியாமல் போனை ஆதித்திடம் நீட்டினாள் அழகுநிலா
வாங்கி ஆதித்
காதில் போனை வைத்ததும், ஆதித் டிஸ்சார்ஜ் ஆனதும் அழகுநிலாவை இங்கேயே கூட்டிக்கொண்டு
வந்துவிடு.
இந்த நேரத்தில்
ஹாஸ்ட்டலில் தனியா அவளை விடமுடியாது. ஒரு இரண்டுநாள் கவணித்து பின் அவளை
அனுப்பலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் குறுக்கே பேசவந்த ஆதித்திடம், நீ
எதுவும் மறுத்துச் சொல்லகூடாது ஆதித்.
எனக்கு அழகுநிலாவை
ரொம்ப பிடிச்சிருக்கு. மேலும் ஒரே ஊர்காரங்க ஒருத்தரை ஒருத்தர் கஷ்ட காலத்திற்கு
உதவுவதுதான் மனித தர்மம் ஆதித், என்றவர் மொபைலை வைத்துவிட்டார்.
அப்பொழுது
அழகுநிலாவின் மொபைலுக்கு சுமதியின் அழைப்பு வந்தது. அது ரமேசிடம் இருந்ததால் ரமேஸ் அதை அட்டன்
செய்தவன் அந்த பக்கமிருந்து சுமதி நிச்சயவிழா ஆரம்பிக்கப்போகுது ஏன இன்னும் வரல
என்று கேட்டதும் ரமேஷ், நிச்சயதார்த்தப் பெண்ணான அவளை சங்கடப்படுத்தவேண்டாம்
என்பதற்காக,
சிஸ்டர் நானும்
அழகுநிலாவும் பைக்கில் வந்தபோது ஒரு சின்ன ஆக்சிடென்ட் தலையில் லேசாக அழகுநிலாவிற்கு
அடிபட்டுவிட்டது. நாங்க ஹாஸ்பிடலில் இருக்கிறோம் என்று கூறியதும்
அந்தபக்கம் இருந்த
சுமதி பதட்டத்துடன் அச்சோ... என்ன ஆச்சு இப்போ. என்னால் அங்க வர முடியாது நிச்சயம்
முடிந்ததும் நானும் விசுவும் வருகிறோம் என்றாள்.
அதனை கேட்ட ரமேஸ்,
‘சுமதி’ சீரியஸ் எதுவும்
கிடையாது இன்னைக்கு உங்க வாழ்கையின் முக்கியமான நாள் என்று கூறிக்கொண்டு இருக்கும்போது,
குடுங்க ரமேஸ் நான் பேசுறேன் என்று
வாங்கிய அழகுநிலா,
சுமதி... எனக்கு
இலேசான அடிதான் நீயும் விசுவும் சந்தோசமாக இருக்கணும் இன்னைக்கு நீ இங்க வருவது
சரியில்லை. நானே நாளைக்கு உன்னை வந்து பார்க்கிறேன் என்றவள் தொடர்பைத்
துண்டித்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்
போதே அவளுக்கு தலையில் ஸ்கேன் பார்த்த விபரத்தை நர்ஸ் கையில் சுமந்தபடி டாக்டருடன்
அவளுடைய அறைக்கு வந்தவர்
அதித்திடம் ஷி இஸ்
நார்மல், தலையில் அடிபட்டதில் காயம் மட்டும் கொஞ்சம் டீப்பா இருக்கு, அழகுநிலாவின் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை
என்றவர், காயம் கொஞ்சம் பலமாக இருப்பதால்
ஆறுவதற்கு தையலும் போட்டிருக்கிறோம் .
மேலும் ரத்தம்
மிகவும் வெளியேறிவிட்டதாலும் மேலும் உடலில் அங்காங்கே சிராய்ப்பு காயம் உள்ளதால்
கொஞ்சம் காயம் ஆறும்வரை சத்தான ஆகாரம் சாப்பிடும் படியும், நீங்க விருப்பப்பட்டால்
இங்கே கிளினிக்கில் இன்று தங்கலாம் ஆனால் கட்டாயம் தங்கவேண்டும் என்று அவசியமில்லை
என்று கூறினார்.
அவர் கூறியதும்
அழகுநிலா பதில் கூறும் முன்பே, இல்ல டாக்டர்
அம்மா வீட்டிற்கு கூட்டிவரச்சொன்னார்கள் அவங்க கவனித்துக் கொள்வார்கள் நாங்க டிஸ்சார்ஜ் ஆகிக்கொள்கிறோம்
என்று கூறியதும்,
நர்ஸ்.. அப்படினா
இவங்களுக்கு தேவையான மெடிசின் எல்லாம் எழுதி கொடுத்துவிட்டு பில் செட்டில் பண்ண டீடைல்டு
கொடுத்திடுங்க என்றவர்,
அழகுநிலாவிடம்,
டேக்கேர் என்றபடி ஆதித்துடன் பேசிக்கொண்டே வெளியில் சென்றார்.
ஆதித்தின்
பேச்சில் அதிர்ச்சியான அழகி அவனிடம் மறுத்துபேச முயன்றதை கவனிக்காதவாரு டாக்டருடன்
வெளியில் சென்றதைப் பார்த்தபடி,
ம்...கூம்
அதெப்படி அவங்கவீட்டுக்கு நான் போவது. நான் மறுத்துப் பேசப்போவதை கவனித்தும்
கவனிக்காததுமாதிரி இப்படிப் போறாரே என்ற எண்ணியபடி அவன் போன பக்கமே பார்த்தபடி
இருந்த அழ்குநிலாவை,
அவன் வெளியே
சென்றதும் ரமேஷ் அழகுநிலாவிடம், ஆதித்
என்று மொட்டையாக ஏன் சொன்னீங்க அழகுநிலா .
ஜானகி பில்டர்சின்
ஓனர் ஆதித்தராஜ் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை. எவ்வளவு பெரிய ஆள் அவர்.
அவரே நேரில் வந்து
உங்களுக்காக இத்தனை செய்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக நீங்க அவங்களுக்கு
மிகவும் முகியமானவர்கலாகத்தான் இருக்கவேண்டும் என்று பிரமிப்புடன்
சொல்லிமுடித்தான்
என்னது ஜானகி
பில்டர்ஸ் எம் டி ஆதித்தராஜா? அவன் கூறிய செய்தி அவளுக்கு புதிது என்று கற்பூரம்
ஏற்றி சத்தியம் செய்தால்கூட ரமேஷ் இப்போ நம்ப மாட்டான் என்று அவனது பார்வையில்
புரிந்துகொண்ட அழகுநிலா,
அவனுக்கு எப்படி
புரியவைப்பது என்று வார்த்தைகளை யோசித்து வாய் திறக்கும்போது அங்கு பிரசன்னமானான் ஆதித்.
----தொடரும்----

No comments:
Post a Comment