ஒளிதருமோ என் நிலவு....! [தீபாஸ்-ன்]
அத்தியாயம்-13
எனக்கு டைம் ஆகிடுச்சு, வா முதல்ல... உன்ன வீட்டில் அம்மாகிட்ட சேர்த்திட்டு நான் கிளம்பனும் என்று அவசரப்படுத்தியவன் ராமேசை பார்த்து நாங்க கிளம்பறோம் உங்களுக்கும் நிறைய காயம்பட்டிருக்கு கவனிச்சுக்கோங்க என்றான்.
அழகுநிலாவிற்கு சுர்... என்று கோபம் எழுந்தது. என்னிடம் அபிப்ராயம் கேட்காமல் அதெப்படி அவங்க வீட்டிற்கு என்னை கூட்டிப்போகும் முடிவை எடுக்கலாம்,
இவர். பெரிய இவராக இருக்கலாம்! எனக்கு ஆபத்தில் உதவியவராக இருக்கலாம், அதுக்காக ஒரு கல்யாணம் ஆகாத பெண் கூப்பிட்டவுடன் வந்துவிடுவேன் என்று எப்படி நினைக்கலாம் என்ற கோபத்துடன்,
ரமேஷ்.. அவர் கூட நான் அவங்க வீட்டிற்கு போகல என்ன ஹாஸ்டலில் விட்டுடுங்க என்று அவள் கூறியதும்,
அவளை முறைத்துக் கொண்டு பேசத்தொடங்கும் போது, அவர்கள் ரூமிற்குள் வந்த நர்ஸ் அவளின் கையில் இருந்த வெயின் நீடிலை அகற்றிவிட்டு அவளுக்கு கொடுத்திருந்த மெடிசின்களை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என விபரித்து தலையில் இருக்கும் கட்டை இரண்டு நாள்சென்றதும் மாற்றவர வேண்டும் எனச் சொல்லி வெளியேறினாள்.
அவள் போனதும் அவளின் முன் தனது மொபைலை நீட்டிய ஆதித், அம்மா லைன்ல இருக்காங்க அவங்களிடமே நீ உங்க வீட்டிற்கு நான் வரமாட்டேன் என்று சொல்லிவிடு என்றபடி கொடுத்தான்.
தயக்கத்துடன் அதனை வாங்கி காதில் அழகுநிலா வைத்தவுடனே,
ஜானகி அவளிடம், நிலா இந்த ஆன்ட்டி வீட்டிற்கு நீ வருவதற்கு யோசிக்கலாமா?
இந்த நிலையில் உன்னை தனியாக ஹாஸ்ட்டலில் விட்டுட்டு இருக்க என்னால் முடியாது, நீ கண்டிப்பா இங்க வந்துதான் ஆகணும்
ஆதித்கிட்ட மறுத்துச் சொல்லாதே. அவனுக்கு உன்னை சமாதானம் செய்ற பொறுமை எல்லாம் கிடையாது.
என் மேல் நம்பிக்கை இருந்தால் நீ மறுப்பு ஏதும் சொல்லாமல் அவனுடன் கிளம்பிவா என்றவர்,
அவள் பேச வாய்ப்பு கொடுக்காமலே தொடர்பை துண்டித்தார்.
அழகுநிலாவிற்கு தான் போகாமல் இருந்தால் ஜானகியை அவமதிப்பதுபோல் ஆகிவிடுமோ! என்ற தயக்கம் ஏற்பட்டது.
மேலும் இது ஒன்றும் கிராமம் கிடையாது ஆதித்ஒன்றும் தனியாக அந்த வீட்டில் இல்லையே! அவங்க வீட்டில் பெரியவங்க இருக்காங்க.
சோ! போறது ஒன்றும் தப்பில்லை என்று தன்னை சமாதானப்படுத்தியவள் ஆதித்திடம், ஆனட்டி நான் வராட்டி வருத்தப்படுவாங்க அதனால் நான் உங்க கூட வருகிறேன் என்றாள்.
அவள் கூறியதை எப்பொழுதும் போல் தன் ஒரு புருவ உயர்த்தலுடன் ஏற்றுக்கொண்டவன்,
ரமேஷ், நீங்க வீட்டிற்கு போக டாக்சி எதுவும் அரேஞ் பண்ணவா? என்று கேட்தும், இல்ல சார் நான் என் பிரன்டை வரச்சொல்லி போன் பண்ணியிருக்கிறேன்
இப்போ அவன் வந்துடுவான், என்றபடி அழகுநிலாவை எழுந்து வரச் சொல்லி தலை அசைவுடன் அந்த ரூமை விட்டு வெளிச்செல்ல திரும்பும் போது அழகுநிலா தனது படுக்கையை விட்டு எழுந்தாள்.
ரத்தம் நிறைய வெளியேறியதாலும், உடலின் அசதி மற்றும் வலியாலும் நின்றவுடன் தலைசுற்றி விழப்பார்த்தவளை,
ஏய்.... பார்த்து என்று கூறியபடி விரைந்துவந்து தாங்கிப்பிடித்தான் ஆதித்.
பின் அவளை தாங்கியபடி நடக்க ஆரம்பித்தான் .முதலில் தன் இயலாமையால் அவனை தாங்கிப்பிடித்து நடக்க ஆரம்பித்த அழகுநிலா பின் சற்று முயன்று தன் காலை ஊன்றி நடக்க ஆரம்பித்த பிறகு அவனிடம்
இப்போ நானாவே வருகிறேன். இப்போ தலை சுற்றல் சரியாகிவிட்டது என்று அவன் பிடித்திருப்பதால் ஏற்பட்ட சங்கடத்துடன் முனுமுனுத்தாள்.
அந்த நேரம் ரமேசின் நண்பன் அங்கு அவர்களை எதிர்கொண்டு வந்தவன் என்னடா ஆச்சு உனக்கு ஒன்றும் அடி ரொம்ப கிடையாதுள்ள என்றவன்
நீ சொன்ன உன் கலீக் அழகுநிலா எப்படி இருக்காங்க என்றான்
அழகுநிலாவைக் காட்டி, இதோ இவங்கதான் தலையில் கொஞ்சம் காயம் பட்டிருக்கு ஆனா பயப்படறமாதிரி இல்லை என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவளை தாங்கி பிடித்திருந்த ஆதித்தை பார்த்த அவன் ஆதித்தை அடையாளம் கண்டுகொண்டான்.
பார்த்தவன் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது. ஏனெனில் ஆதித்தை பற்றி அறிந்தவன் அவன்.
வர்சாவின் நண்பர்கள் வட்டத்தில் உள்ளவன் அவன். வர்சாவை தவிர வேற எந்த பெண்களையும் நெருங்க விடாத கண்ணியவான் என்றும் அவனின் திறமையின் மீதும் வளர்ச்சியின் மீதும் பிரமிப்பு மிக்கவன் அவன்.
அவன் அழகுநிலாவை தாங்கி பிடித்து நடந்து வந்துகொண்டிருப்பதை பார்த்தவனுக்கு அவர்களின் உறவை தவறாக விமரிசிப்பதற்கு மனம் தயங்கினாலும்,
மற்றொரு மனமோ இவரின் உயரத்திற்கு அம்மா தங்கை மற்றும் அவனுடையவளை தவிர மற்ற யாரையும் இப்படி தாங்கி பிடிக்கும் ஆள் இல்லை என்ற உண்மை உரைக்க,
ஹாய் சார் நீங்க ஆதித்த ராஜ் தானே ஐ ஆ,ம் வினோத் என்றவன் கண்கள் ஆராய்ச்சியோடு இருவரையும் தழுவியதை கண்ட இவருவரும்,
தங்களை அறியாமலே விலகி நின்றனர், உடனே ஆதித் யா ,ஐ ஹேவ் சம் அர்ஜென்ட் வொர்க், சோ ஐ அம் லீவிங் என்றவன் ரமேசின் பக்கம் திரும்பி,
அப்போ நீங்க உங்க நண்பன் கூட கிளம்புங்க நாங்க வருகிறோம் என்றவன் அழகுநிலாவிடம் இங்க நில்லு நான் காரை எடுத்து வந்துவிடுகிறேன் என்றபடி விரைந்தான்
அழகுநிலாவிற்கு தன்னால் ஏற்கனவே ஆதித்தின் காதல் வாழ்க்கையில் பிரச்சனை வந்துவிட்டது.
இப்பொழுது அவருடன் வீட்டிற்கு போவதால் மேலும் தொந்தரவாகவும் சுமையாகவும் இருக்கும் எனப் புரிந்ததால் பெரும் தயக்கம் சூழ்ந்தது.
எப்படி அவனைக் கோபப்படுத்தாமல் மறுத்துக் கூறுவது என்ற யோசனையுடன் அவள் அங்கு நின்றுகொண்டிருக்கும் போதே ஆதித்தின் கார் அவளின் முன் வந்து நின்றது.
இயந்திரம்போல் அதில் ஏறும் போது ரமேஷ் வேகமாக அவளிடம் வந்து இதோ உன் பேக் அழகுநிலா,
இதில் அந்த போன் பத்திரமாக இருக்கு. ஆதித் சார்கிட்ட இதை கொடுத்திடுங்க அழகுநிலா.
சார் இந்த பிரச்சனையை ஈசியா சமாளிச்சுடுவார். உடம்பை கவனிச்சுக்கோங்க என்று கூறியவன் சென்றுவிட்டான்.
அவன் கூறியதைக் கேட்டபடி ஆதித்துடன் காரில் ஏறியவளுக்கு ஏனோ ஜானகி சொல்லை மீறி அவனிடம் பேச பயமாக இருந்தது.
காரில் ஏரியதில் இருந்து அவன் அழகுநிலாவின் பக்கமே திரும்பாமல் தனது காதில் ஹெட் போனை பொருத்தியவன் தனது பி.ஏவிடம் அவனது பிசினஸ் பற்றிய பேச்சுகளில் மூழ்கிக்கொண்டே ட்ரைவிங் செய்து கொண்டிருந்தான்.
அவனது கையில் கார் குலுங்கல்கள் இல்லாமல் விமானத்தில் பறப்பது போன்ற வேகத்துடன் சாலையில் ஓடியது. அவனின் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும் வரை அவனது பிஸ்னஸ் பேச்சும் முடிவதாக இல்லை.
கார் வந்து நின்றதும் ஆரன் கொடுத்தான் அப்பொழுது ஓடிவந்த வீட்டு வேலை கார அம்மாவிடம் இவங்களை கைப் பிடிச்சு அம்மாகிட்ட கூட்டிப்போங்க,
தலையில் காயம்பட்டிருக்கு. அவங்க பேக்கையும் வாங்கிக்கோங்க. எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை காரணமாக வெளியே போக வேண்டியிருக்கு என்றவன்
அழகுநிலாவின் பக்கமிருந்த கார் டோரை ரிமோட்டின் உதவியால் திறந்து, உள்ள அம்மா இருப்பாங்க நீ போ என்று கூறியதும் காரை விட்டு அழகுநிலா இறங்கினாள்.
அதற்குள் வாசலுக்கு வந்த ஜானகி வேகமாக படி இறங்கி அழகுநிலாவின் அருகில் வருவதற்குள் காரை ரிவேர்சில் எடுத்து திருப்பிய ஆதித் அம்மா பை என்று கை காட்டிவிட்டு சென்ற மகனை முறைத்தபடி,
பாரு இவன உன்னை கூட்டிட்டுவந்தவன் உள்ள கூட வராமல் அப்படியே ஓடுறத. அவன் அப்படிதான் நிலா, நீ ஒன்னும் மனசில் வச்சுக்காத என்றவள், அவளின் தலையில் இருந்த கட்டையும், ஓய்ந்து போன அவளின் தோற்றத்தையும் பார்த்தவள் கைத்தாங்கலாக அவளை பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தாள்.
ஆதித்
டிரைவிங்கில் கார் வேகமாக பறந்த அதே வேகத்தில், அவனது மனமும் பின்னால் சென்றது.
அழகுநிலாவை மயக்கத்தில் பார்த்தபோதிலிருந்து தன் மனம்
துடித்தது முதல், அவள் விழும்போது தாங்கிப் பிடித்தபோது உணர்ந்த மென்மையும், அவள் தன்னை நிலைபடுத்தியபின்
கூச்சத்துடன் சேர்ந்த நடுக்கமும்,
தனது அருகாமையில்
உண்டான தவிப்பை தாங்கமுடியாமல் தானே நடந்துகொள்வதாக ஒலித்த அவளில் மெல்லிசை போன்ற
குரலும், அவனை தடம்புரள வைத்தது.
அவனுக்கு அவனின்
மேல் கோபம் எழுந்தது. ஏற்கனவே தான் வர்ஷாவை காதலித்துக் கொண்டிருகும்போது இன்னொரு
பெண்ணின்மேல் தனக்கு ஈடுபாடு வருவதை நினைத்தவனுக்கு,
தான் அவ்வளவு
பலவீனமானவனா? தன் தந்தையை மட்டும் ஏற்கனவே ஒருத்தியுடன் குடும்பம் நடத்தும்போது,
தன் அம்மாவை சூழ்நிலையில் கை பற்றினாலும் அதுவும் குற்றம் என்று அவருடன்
முகம்கொடுத்து பேசாமல் இருந்துகொண்டு,
தானும் அவரை போல்
வேலைதானே பார்கிறேன் என்ற சுயவெறுப்பு அவனின்மேல் ஆதித்துக்கு உண்டானது .
இனி அழகுநிலாவை
அருகிலேயே சேர்க்கக் கூடாது,
அம்மாவிற்கு உடனே
வர்ஷாவை அறிமுகப்படுத்திவைத்து தங்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லவேண்டும்.
அப்பொழுதுதான்
தேவையில்லாமல் என் ஊருக்காரப் பெண் என்று உறவு கொண்டாடிக்கொண்டு அழகுநிலாவை
வீட்டிற்கு அழைத்துப் பேசுவதை வர்ஷாவிற்கு பிடிக்காது என்று கூறி தடுக்கமுடியும்
என சிந்தனை எழுந்தது.
ஆனால் அதற்குமுன்
தன்னுடன் அன்று மாலில் அழகுநிலாவை பார்த்தது முதல், கோபம் கொண்டு தன்னுடைய போன்
அழைபைக் கூட அட்டன் பண்ணாமலும்,
வாட்ஸ்அப் மற்றும்
வேறுவழிகளில் தொடர முயன்றாலும் அதை ஏற்காமலும் தவிர்க்கும் வர்ஷாவின் செயல்வேறு
அவனுக்கு பெரும் இம்சையாக இருந்தது.
இவள் ஒழுங்கா என்
மனசை புரிந்து நடந்துகொண்டால், என்னை உலகஅழகி வந்து மயக்கினால் கூட மயங்கமாட்டேன்.
ஆனா எப்போபார்த்தலும்
இவள் கூட மல்லுக்கட்டிக்கொண்டே என்னை இருக்கவைக்கிறாள்.
நான் அவளின் அழகு
மற்றும் என்மீதான தூண்டில் பார்வையை மட்டும் கண்டு எனக்கு பொருத்தமில்லாத பெண்ணை
தேர்ந்தெடுத்துவிட்டேனோ? என்று ஒருநிமிடம் குழம்பிப்போனான்.
ம்...கூம்ம்ம்ம்
இது சரிப்பட்டுவராது வார்ஷா இந்தநேரம் எங்க இருப்பா என்று யோசித்தவன், தனது
பி.ஏவிற்கு போன் செய்து இன்னும் ஐந்து நிமிடத்தில் வார்ஷா எங்கு இருக்கிறாள் என்று
தெரிவிக்கும்படி கூறி தனது மொபைல் தொடர்பை
துண்டித்தான்.
அவனின்
மனஅலைச்சலுக்கு கடிவாளமிட நேராக தன்னுடைய பீச் ஹவுஸ்க்கு வந்து உள்ளேயே போகாமல்
அதன் அருகில் இருந்த கடற்கரைக்கு சென்று அதில் எழும் அலைகளை பார்த்தவாறு தன மனதினை
சமன்படுத்த முயற்சிசெய்து கொண்டிருந்தான்.
ஆதித்தின் பி.ஏ
சங்கர், தனது பாஸ் ஆதித்தின் பேச்சில் ஒருநிமிடம் உறைந்து போய் நின்றுவிட்டான்.
ஏனெனில் அவனுக்கு அவனது பாஸ் ஆதித்திடம் வேலைக்கு வருவதற்கு முன் அவனைப் பற்றி
எதுவும் தெரியாது.
ஆதித் தொழில்
ஆரம்பித்த காலம் முதல் அவனுடனே இந்த எட்டுவருட பயணத்தில் அவனின் தீயான உழைப்பையும், அவனது அறிவையும் எதிராளிகளை எளிதில் வென்று முன்னேறி இன்று சிகரத்தில்
நின்றிருக்கும் அவனின் உழைப்பின் மூலம் சிகரம் தொட்டு இருக்கும் ஆதித்தின்
அடிமையாகவே தன்னை வரிந்து கட்டிக்கொண்டிருப்பவன் சங்கர் .
ஆனால் இதுவரை
ஆதித் தனது தொழில் அல்லாத மற்ற எதற்கும் தன்னை ஏவியது இல்லை.
அப்படிபட்டவன்
ஆதித்தின் காதலி இருக்கும் இடதை அறிந்து ஐந்தே நிமிடத்தில் சொல்! என்று சொன்னால்
ஆச்சரியத்தில் உறைந்து நிற்காமல் என்ன செய்வான்?
ஆனால்
ஒருநிமிடத்திலேயே தன்னை நிலைபடுத்தி கொண்டவன், அவர்களது கிளையன்ட் டீடைல்ஸ்சை
எடுத்து அதில் வர்ஷாவின் குளோஸ் நண்பர்கள் மூன்று பேரின் தொலைபேசி நம்பர்களை
குறித்தான்.
அதில் ஒருவனை தொடர்புகொண்ட
சங்கர், சார் வர்ஷா மேடம் கால் ரீச்ஆகல அவங்கட்ட உங்க மொபைலை கொடுக்குறீங்களா?
என்று அவனுடன் வர்ஷா இருப்பது தனக்கு தெரியும் என்பது போல பேச்சுக்கொடுத்தான்
சங்கர்
அதற்கு அவன்,
நீங்க யாரு? என்று கேட்டதும் நான் ஆதித் சார் பி ஏ,
சார் ஒரு
முக்கியமான பிஸ்னஸ் விசயமா தொடர்புகொள்ளனும்,
ஆனா பாஸை மொபைலில்
ரீச் பண்ண முடியல அதனால்தான் வர்ஷா மேடத்திடம் சொல்லி பாஸை காண்டாக்ட் பண்ணலாம்
என்றுதான் கேட்டேன் என்று கூறினான்.
வர்சாவின் அந்த
நண்பன் தற்போது வர்சாவுடன் இல்லையென்றாலும் அவள் தனது மற்ற நண்பர்களுடன் சென்னை
லீலா பேலஸ் ஹோட்டலில், ஓர் பார்டியில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் விபரத்தையும்
அவளின் போன் நம்பரையும் ஆதித்தின் பி.ஏ தானே கேட்கிறார் என்ற எண்ணத்திலும்
கொடுத்தான்.
உடனே சங்கர்
ஆதித்துகுப் போன் பண்ணி வார்சா லீலா பேலஸ் ஹோட்டலில் இருக்கும் விபரத்தை கூறிவிட்டு
அதற்குமேல் வேறு எதுவும் கேட்காமல் அவன் நேரில் இருபதுபோல் பவ்யமாக சொல்லி
வைத்தான்.
ஆதித் ஒரு மூச்சை
ஆழ்ந்து இழுத்து வர்சாவை மீட்செய்யும் போது, அவள் என்னை டெண்சன் செய்யாமல்
புரிந்து நடந்துக்கிடணும் என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தவன் அவள் இருக்கும்
இடத்திற்கு தனது காரில் ஏறி பயணத்தை மேற்கொண்டான்.
அங்கு வர்ஷா,
ஏற்கனவே அன்று மாலில் ஆதித்தை இன்னொருத்திக்கூட நெருக்கமாக பார்த்ததை
ஜீரணிக்கமுடியாமல் அதை தனது நட்பு வட்டத்தில் கூட தெரிவிக்க மனதில்லாமல் வெதும்பிக்கொண்டு இருந்தாள்.
இந்த நிலையில்
சற்றுமுன் வர்ஷாவின் முன் வந்த வினோத். வர்ஷா
டுடே ஐ மெட் ஆதித் இன் தி ஹோஸ்பிட்டல் என்றவன்,
ஆதித்தின் காரில்
அழகுநிலா ஏறுவதுபோன்ற காட்சி அடங்கிய புகைப்படத்தையும் ஆக்சிடென்ட் ஆன அழகுநிலாவை
அவனே நேரில் வந்து தாங்கிப் பிடித்து கொண்டு வந்ததை, தான் பார்த்த விசயத்தை சொல்லி
யார் அந்த அழகுநிலா? என்று கேள்வியும் கேட்டான்
அதில் கடுப்பான
வார்ஷா அவனிடம் ஆத்திரத்தில் ம்...ஆதித்தின் செட்டப் போதுமா…? என்று கடுப்புடன் கத்திவிட்டாள்.
உடனே வினோத் ,வாட்...?
ஐ ஆம் சாரி வர்ஷா.
நான் உன்னை
டென்சனாக்கணும் என்று கேட்கவில்லை.
நான் பார்ட்டிக்கு
கிளம்பிக்கொண்டு இருக்கும்போது என்னுடைய நண்பன் ரமேஷ் போன் செய்து அவனுக்கும் அவன்
கலீக் அழகுநிலாவும் பைக்கில் வரும் போது சின்ன ஆக்சிடென்ட் ஆகிவிட்டது,
ஹாஸ்பிடலில்
இருக்கிறேன், என்னுடைய பைக் ஆக்சிடென்ட் ஆன இடத்தில் இருந்து போலீஸ் எடுத்து
சென்று விட்டார்கள்.
சோ! என்னை வந்து
பிக்கப் பண்ணி வீட்டில் ட்ராப் பண்ணிடுன்னு போன் செய்தான். அங்க போனபிறகுதான்
தெரிந்தது அவனுடைய கலீக் அழகுநிலாவிற்கு உதவுவதற்காக ஆதித்தே நேரில்
வந்திருப்பதால் உனக்கும் தெரிந்த பெண்ணாக இருக்குமோ என்று கேட்டுவிட்டேன்.
இப்படி நீ
ரியாக்ட் கொடுப்பாய் என்று தெரிந்திருந்தால் கேட்டிருக்கமாட்டேன். சாரி வர்ஷா
என்றபடி விலகிச்சென்றான்..
அவர்கள்
பேசிக்கொண்டிருக்கும் போது அவளின் பக்கத்தில் இருந்த ரோசி வர்ஷாவை பார்த்து,
என்ன வர்ஷா
எங்ககிட்டெல்லாம் கை கொடுத்தா கற்பு பறிபோய்விடும் ரேஞ்சில் உன் ஆள் பிலிம்
காட்டினாரு.
இப்போ....
என்னடான்னா... மெயின் பிச்சரா உன்னை
காட்டிட்டு செகண்ட் ரோல் ஒன்ன பிளே
பண்றாரு ஆதித்.
எனக்கு அப்போவே
தெரியும் இந்தமாதிரி ஓவரா சீன போடுகிறவன் எல்லாம்
பக்கா ப்ளேபாயாகத்தான் இருப்பாங்க என்று சொன்னாள்.
அவள் கூறுவதைக்கேட்ட
வர்ஷாவிற்கு ஆதித் மேல் கொலைவெறியும் அதேபோல் திடீரென்று தன்னுடைய மதிப்பு தனது
நட்புவட்டத்தில் கீழிறங்குவது போன்ற பிரமையும் உண்டானது.
அப்பொழுது அங்கு
நடப்பதையெல்லாம் ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த மாதேஷ், வர்ஷாவின் அருகில்
நிதானமாக நடையுடன் வந்துகொண்டே ரோசியை பார்த்து,
இவ்வளவு
மதிப்புமிக்க அழகான வர்ஷாவை தக்கவச்சுக்க ஆதித் உங்கமுன் சீன போட்டிருக்கிறார்.
பாவம் ஆதித்துக்கு
தெரியவில்லை, வெட்டி சீனில் எமார்ந்து போகும் முட்டாள் கிடையாது இந்த வர்ஷா,
என்றவன் வர்ஷவிடம்
கமான் புயூட்டி!
சியர்அப்” என்று கூறியபடி
அங்கிருந்த இசைவெள்ளத்தில் ஜோடியாக ஆடிக்கொண்டிருந்த மற்றவற்களுடன் அவளையும்
தன்னுடன் ஜோடியாக இணைத்து ஆடுவதர்க்காக தனது கைநீட்டி அவளை அழைத்தான் .
வர்ஷா இதுவரை
பார்டிகளுக்கு என்ஜாய் செய்ய வந்தாலும் அவள் ஹாட்டிரிங்சை சாப்பிடமாட்டாள். கூல்
ட்ரிங்ஸ் கூட அவள் வாங்கி வைத்திருப்பதைத்தான் குடிப்பாள். .
மேலும் தனது ஆண்
நண்பர்களுடன் பட்டும் படாதவாறும் சந்தர்ப்பத்தின் காரணமாக கைகுலுக்குவாள்.
அதேபோல் நாசூக்காக
ஆண்களின் ஹக்கை பட்டும் படாமலும் அனைத்ததுபோல் பாவனைகாட்டி தவிர்க்கும்
வித்தையையுக் கற்றுவைத்திருந்தாள்.
எப்பொழுது ஆதித்தை
காதலிக்க ஆரம்பித்தாளோ! அதிலிருந்து அந்த மாதிரி போலியான தலுவல்களைக்கூட அவள் செய்தது
கிடையாது.
ஆனால் இப்பொழுது
மாதேஷ் அவளை ஆடுவதற்கு கைநீட்டி அழைத்த நேரம், சரியாக ஆதித் அங்கே எண்டர் ஆகி
தன்னைப் பார்த்து வருவதை கவனித்த வர்ஷா தன்னை நண்பர்கள் மத்தியில் அவமானப்படுத்திய
ஆதித்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு
இதுவரை அவள் செய்யாத
செயலை செய்ய முடிவேடுத்து ஆதித்தை பார்த்துக்கொண்டே கைநீட்டிய மாதேசின் கைப்பற்றி
எழுந்து அவனுடன் ஆடுவதற்கு தோதாக அவனின் தோளில் ஒருகையைப் போட்டாள் வர்ஷா.
ஆதித் அந்த பார்டி
ஹாலினுள் நுழைகையிலேயே அவனின் பார்வைவட்டத்தில் விழுந்தது “மாதேஷ் ஓர் கையை அவளின்
முன் நீட்டி ஆட அழைக்கும் காட்சிதான்”.
அப்பொழுதே
ஆத்திரம் பொங்க அவனை பார்த்தபடி முன்னேறியவனுக்கு முகத்தில் செருப்படி விழுந்ததுபோல்
இருந்தது வர்ஷாவும் அவனுடன் இணைந்து ஆடுவதற்கு தன்னை பார்த்தபடி எழுந்து அவன் தோளில்
கையை போட்டது.
உடனே ஆதித்தின் கை
அவர்கள் இருவரையும் .அறைய துடித்தது ஆனால் தொழிலில் தன்னை பெரிய வெற்றியாளனாய் ஆக்கியதில் விழைந்த அவனது நிதானம் அவ்வாறு
செய்யவிடாமல் ஆதித்தை தடுத்தது.
உள்ளுக்குள்
பொங்கிய கோபத்தை வெளியில் தெரியாமல் மறைத்து உதட்டில் அவர்கள் இருவரையும் பார்த்து
இகழ்ச்சியான புன்னகையை கொண்டுவந்தவன்,
மேலும் நடையில்
நிதானத்தையும் வருவித்தபடி அவர்களின் அருகில் நெருங்கினான். மாதேஷின் தோளில்
இருந்த அவளது கையை சுட்டிக்காட்டியபடி இருவரையும் பார்த்து இது எதுக்கு என்னை
பழிவாங்கவா? அல்லது... என்றவன் வர்ஷாவின் கண்ணை பார்த்தபடி உன்னை நீயே
கேவலப்படுத்துவதற்காகவா? என்று கேட்டான்.
அவன் அவ்வாறு
கேட்டது வர்ஷாவுக்கு சுருக்கென்று மனதில்
முள் தைப்பதுபோன்ற வலியைக் கொடுத்தது. அவள் முகம் அதன்பின் கோபத்தால் சிவந்தது. .
வர்ஷாவும் அவன்
கூறியபடி அதே அழுத்ததுடன் வார்த்தைகளை
கொட்டினாள். நீங்க மாலில் ஒருத்தியை கட்டிப்பிடித்துக்கொண்டு
இருந்தது, உங்களை கேவலப்படுத்திக்கிடவா? என்றவள்,
அச்சோ! நீங்கலெல்லாம்
ஆண்பிள்ளைகள் எப்படினாலும் இருக்கலாமம்ல...! என்றவள், ஆனால்! உங்களுக்கு வரும்
பொண்டாடி மட்டும் கைபடாதரோஜாவா இருக்கணுமோ?
இங்கபாருங்க
ஆதித்தராஜ், என்னைக்கு இன்னொருத்தியோட நெருக்கமா உங்களைப் பார்த்தேனோ இனிமேல்
எனக்கு அட்வைஸ் செய்யும் தகுதியை என்னிடம் இழந்துவிட்டீர்கள் என்றாள்.
பின் ஆதித்தின்
மேல் அலச்சியமான பார்வையை வீசியவள் , கம்மான் மாதேஷ், லெட் ஸ்டார்ட் வித் டான்ஸ்.
என்றதும்,
ஆதித் ஏய்...!
என்று கர்ஜித்தவன் உண்மைதெரியாமல் நீ எல்லைமீறிட்ட “அதுவும் இவனுடன்” இனி நீயே தேடி என்னிடம் வந்தாலும் எனக்கு நீ
வேணாம் டீ...., என்றவன் விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான்.
ஆதித்
வீட்டிற்குள் நுழைந்தபோது இரவு பத்தரையை
கடந்திருந்தது. எட்டுமணிக்கு வீட்டிற்கு வந்து அழகுநிலாவை இறக்கிவிட்டு
போனதற்குப் பின் இப்பொழுதுதான் வீட்டிற்குள்
புயல்வேகத்தில் நுழைந்தான்.
அழகுநிலாவிற்கு
ஹாஸ்பிடலில் வலிதெரியாமல் இருக்க போட்டுவிட்ட ஊசிமருந்து மாத்திரைகளின் உதவியால்
அவள் கண்கள் சொருகுவதை பார்த்த ஜானகி அவள்
வந்துவுடனேயே அவளின் சேலையில் இருந்த இரத்தக் கரையைப் பார்த்தவள் தன்வீட்டு வேலைகாரி
வேலம்மாவிடம் பணம்கொடுத்து அவள் மாற்றுவதற்கு நைட்டி வாங்கிவரச் சொல்லியிருந்ததாள்.
அவள் வரும்வரை
நிலாவிடம் பேச்சுக்கொடுத்தவள் அவள்
வாங்கிவந்ததும் அவள் உடையை மாற்றச் சொல்லிவிட்டு
தனது ரூமிற்கு அருகில் இருந்த அறையில் அவளை படுக்கச்சொல்லியவள் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.
பேசிக்கொண்டிருக்கும்போதே
மருந்தின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்திற்கு அவள் சென்றதை பார்த்த ஜானகி, அந்த அறையின்
கதவை வெறுமனே சாத்திவைத்தவள் ஹாலில் அமர்ந்து ஆதித்தின் வருகைக்காக காத்து இருந்தாள்.
ஆதித் நடையும்
அவனது முகமுமே அவன் கோபத்தில் இருப்பதை உணர்த்த ஜானகி இப்போ எதுக்கு ஆதித் இத்தனை
கோபம், எதுவும் பிரச்சனையா என்று கேட்டாள்.
தனது அம்மாவிடம்
ஒன்றுமில்லை அம்மா! ஒரு நம்பிக்கைத் துரோகியை இப்போது பார்த்துவிட்டு வந்ததால்தான்
கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டேன் என்றான்.
அவன் கூறியத்தைக்
கேட்ட ஜானகி யாருப்பா அது? உனக்கு எதுவும் கஷ்டம் கொடுத்துவிட்டார்களா? என்று
தவிப்புடன் கேட்டார்
அவர் அவ்வாறு
கேட்டதும் என் கிளையன்ட் தான்மா அவருடன் இனி பிஸ்னஸ் பண்ணகூடாது என்று
முடிவெடுத்து இருவருக்கும் இடையில் இனி எந்த சம்பந்தமும் இல்லையென்று சொல்லிவிட்டு
வந்துவிட்டேன்.
சரி உங்க ஊரு பொண்ணை
எங்க காணோம்? என்று அழகுநிலாவின் மேல் தனக்கு கோபம்
என்பதை மறைத்து புன்னகையுடன் கேட்டான் .
அவன் அவ்வாறு
கேட்டதும் அதென்ன எனக்குமட்டும் தான் அவள் தெரிந்தவள் என்கிற மாதிரி நீ கேட்கிற?
என்னுடைய கேர்ள் ப்ரென்ட் அழகுநிலா எங்க என்று கேட்கவேண்டியதுதானே! என்று அவனை
கிண்டலுடன் பார்த்தபடிகேட்டாள்.
அவள் அவ்வாறு
கேட்டதும் மனதிற்குள் இவங்கவேறு எனக்கு அவள்மேல் உள்ள கோபம் தெரியாமல் என்னுடன்
அவளை ஜோடிசேர்கிறார்கள் என்று நினைத்தவன்
வெளியில் தன்
அம்மாவை பார்த்து மழுப்பலான ஒரு சிரிப்புடன் நம்ம பஞ்சாயத்தை எல்லாம் பிறகு
வைத்துக்கொள்ளலாம்.
முதலில் எனக்கு
சாப்பாடு போடுற வழியைப் பாருங்க. பசி வயிற்றைக்கிள்ளுது என்று அவளது கவனத்தை
திசைதிருப்புவதற்காக கூறினான் .
பசி என்று மகன்
கூறியதும் மற்றபேச்சை நிறுத்திவிட்டு சாப்பாட்டு எடுத்துவைக்க விரைந்தாள் ஜானகி.
ஜானகி சாப்பாட்டை
எடுத்து தட்டில் பரிமாறுவதற்குள் ரெப்ரஸ் ஆகி சாப்பாடு மேசையின் முன் அமர்ந்த மகனை,
நாளைக்கு உன்
பிறந்த நாள். ஞாபகம் இருக்கிறது தானே! எப்பொழுதும் போல் காலை ஆறுமணிக்கே எழுந்து
ரெடியாகிவா!
வீட்டில்
சாமிகும்பிட்டுவிட்டு கோவிலுக்கு போகணும் அவரும் காலையிலேயே வந்துவிடுவார் என்று
கூறினாள்.
அவன் பிறந்தநாள்
அன்று தனது தாய் தந்தை கொடுக்கும் புதூ
உடையை உடுத்தி மேலும் அவர்கள் கொடுக்கும் பரிசை பெற்று ஆசிவாங்கி அவர்களுடன் கோவிலுக்குச்
செல்லும் பழக்கம் ஒன்றை மட்டும் அவன் மாற்றியதில்லை.
ஆனால் தனது
சிறுவயதில் கலகலப்பாக பெற்றோருடன்
துள்ளிக்குதித்து வாய் ஓயாமல் தனது அப்பாவுடன் பேசிக்கொண்டு போகும் ஆதித்,
சென்னை வந்தபிறகு
வேலாயுதம் கொடுக்கும் பரிசை கூட தனது அன்னையின் கையில் கொடுத்தால் மட்டுமே
வாங்குவான்.
மேலும் இருவருடன்
கோவிலுக்குச் சென்றாலும் கூட போகும் போதிலிருந்து வரும்வரை மௌனம் ஒன்றை மட்டுமே
கடைபிடிப்பான்.
அந்த நினைவு வர,
சரி என்று வாய் முணுமுணுத்தாலும் அவன் வாய் அம்மா அவ எங்க காணும்? சாப்பிட்டுவிட்டாளா?
என்று அழகுநிலாவை பற்றி அறிந்து கொள்ளக் கேட்டான்.
அவளா? எவப்பா..?
வேலம்மா ஒன்பதுமணிக்கே வீட்டுக்கு போய்விட்டாளே. அதென்ன வேலைகாரியானாலும் வயதில்
பெரியவங்களை அவ.. இவனு.. பேசுறது என்று வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள்.
அவள் அவ்வாறு
கேட்டதும் அம்மா....! நான் ஒன்றும் வேலம்மாளை கேட்கவில்லை அவங்க இந்நேரம் போயிருப்பார்கள்
என்று தெரியும் அழகுநிலாவைக் கேட்டேன் என்று கூறினான்.
மனதிற்குள்
சிரித்தபடி அப்படிவா வழிக்கு! என்று நினைத்தபடி, அவளுக்கு மாத்திரை மருந்தின்
காரணமாகவோ அல்லது இன்னைக்கு நிகழ்ந்த அசம்பாவிதத்தின் காரணமாக ஓய்ந்துபோய்
பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிட்டா என்றாள்.
சாப்பிடாமலையா?தூங்கிவிட்டாள்
மாத்திரைவேறு போடனுமே! என்று கூறியவனை பார்த்து புன்னகையுடன் அதெல்லாம்
சாப்பிடவைத்து மாத்திரை போடவச்சாச்சு. என் பொறுப்பில் இருப்பவளை நான் கவனிக்காமல்
இருப்பேனா...!.
உன்னை பார்த்தால்
ரொம்ப டையர்டாக தெரிகிறது போய் தூங்கி ரெஸ்ட் எடு அப்பத்தான் காலையில் எழுந்துக்க முடியும்.
இன்று உனக்கு ரொம்ப அலைச்சல் வேற என்றபடி அவன் சாப்பிட்டதை ஒதுக்க ஆரம்பித்தாள்.
அவனும் எழுந்து
மாடியில் இருக்கும் தனது அறைக்கு போகும் போது, அழகுநிலா இருந்த அறையை கடப்பதற்கான
நேரத்தில் அவனின் கால் சற்று தயங்கியது.
தன் அம்மா என்ன
செய்கிறார்கள் என்று திரும்பிப்பார்த்தான் அப்பொழுது ஜானகி சமையல் அறைக்குல்
செல்வதை பார்த்தவன்,
நிலா இருந்த
அறையின் கதவை தள்ளிப்பார்த்தான் அது திறந்ததும் டக்கென உள்நுழைந்தவன் அவள் விழித்திருந்தால்
அவளால் தனக்கும் வர்ஷாவிற்கும் இடையில் விழுந்த விரிசலுக்கு அவளை காய்ச்சி எடுக்க
நினைத்து அவளின் படுக்கை அருகில் சென்றான்.
ஆனால் அவளோ
ஆழ்ந்த் உறக்கத்தில் குழந்தைபோல் முகத்தை வைத்துக்கொண்டு பால்நிற கால்களின்
தரிசனத்தோடு குமரிகளுக்குரிய வளைவு நெளிவுகளுடன் தூங்கும் அழகில் ஈர்க்கப்பட்டான்.
அவளை வார்த்தையால்
வதைக்க வந்தவன். மெய்மறந்து ஒருநிமிடம் நின்று அவளின் அழகைய் ரசிக்க ஆரம்பித்தான்.
பின் தனது தவறு
புரிய தன்மேலேயே கோபம் கொண்டு விருட்டென்று அவளின் அறையைவிட்டுவேளியேறி தனது
அறைக்கு விரைந்தான்.
ஆனால் அங்கு
வந்தபின்பும் அவனின் மனதை சாந்திப்படுத்த அவனுக்கு இயலவில்லை.
அவன் ஒன்றும்
குடிக்கு அடிமையானவன் கிடையாது, இருந்தபோதும் எப்பொழுதாவது தொழில் நிமித்தம்
நடக்கும் பார்ட்டிகளில் இலேசாக சிப் செய்ய ஆரம்பித்தான்.
இப்பொழுது அவனுடைய
கடினமான பொழுதுகளில் கொஞ்சம் தனிமையில் சிறிது குடிக்க ஆரம்பித்திருந்தான்.
தான் பார்த்து
பார்த்து வடிவமைத்த வீட்டிற்குச் சென்று அங்கு
வர்ஷாவுடன் வாழ்க்கைத் தொடங்க வாங்கிய தனது அறையில் அவளின் தாக்கம்
தகிக்கும்போது அதை தணிக்க கொஞ்சம் குடிக்க ஆரம்பித்திருந்தான்.
இன்றும் அதேபோல்
அவனது மனம் வர்ஷாவினால் அடைந்த ஏமாற்றம், அது ஏற்படக் காரணமான அழகுநிலாவின் மேல்
உருவான தடுமாற்றம்,
திரும்பவும்
மாதேஷின் முன் உண்டான அவமானம் போன்ற அழுத்தத்தால் அதை குறைக்க குடியை கையில்
எடுக்க மனம் பரபரத்தது. அவனின் அந்த வீட்டுச்சாவியை கையில் எடுத்துவிட்டான் அங்கு
செல்வதற்காக
ஆனால்.. நாளை
காலையில் தனக்காக தன் பிறந்தநாள் ஆசிவழங்க அம்மா ஆசையுடன் இருப்பது நினைவில்வர சாவியை அது
இருந்த இடத்திலேயே வைத்தவன் தனது வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பகுதியில்
உருவாகியிருந்த ஜிம்மிற்கு சென்று அவன் உடல் நோகும் வரை காட்டுத்தனமாக பயிற்சி மேற்கொண்டான்.
பின் சோர்ந்தநிலையில்
குளித்து பெட்டில்விழுந்தவன் உடல் ஓய்விற்குச் சென்றாலும் அவனின் நினைவுகள்
கனவுகளாகி அவனின் கண்முன் விரிந்தது .
மறுநாள் காலை
தன்னை எழுப்பிய கை பிடித்து தூக்கத்தில் தன்னை நோக்கி இழுத்தான் ஆதித்.
அது கனவென்ற
நினைப்பில், ஆனால் அச்சோ..! என்றவள் அவன் இழுத்தவேகத்தில் அவனின்மேல் விழுந்த நிலா
தனது காயத்தில் அவன் உடல் உரசியதால் ஆ....என்ற சத்தத்துடன் விடுபட போராடினாள்.
அதில் முழித்தவன்
தன் மேல் முகத்தை வலியால் சுளித்தபடி தனது
கையணைவிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருந்த அழகுநிலாவை பார்த்ததும் வேகமாக தனது
பிடியை தளர்த்தினான்.
உடனே வில்லில்
இருந்து விடுபட்ட அம்புபோல் அவன் பிடியில் இருந்து தன்னை இழுத்தபடி கட்டிலில்
இருந்து குதித்தவள் கீழே விழுவதுபோல் சென்று கடைசி நிமிடத்தில் அழுத்த முயன்று
கால்ஊன்றி நின்றவள் அவனை கோபமாகப் பார்த்துப் பேச முயன்றாள்.
அவளை முந்திக்கொண்ட ஆதித், யேய்... என் ரூமிற்குள்
எப்படி நீ வரலாம். அறிவில்லாமல் இப்படித்தான் கொஞ்சம் இடம்கொடுத்தால் மடத்தை
பிடிக்கும் வேலையை நீ பார்கிற,
இந்த அம்மா உன்னை
எப்படி இங்கே வரவிட்டார்கள் என்றவள் அவள் பதில் கூற வருவதைக் கேட்காமல் அவன்
ரூமைவிட்டு வெளியே வந்தவன் அம்மா என்று கத்தினான்.
---தொடரும்---

No comments:
Post a Comment