ஒளிதருமோ என் நிலவு...! [தீபாஸ்-ன்]
அத்தியாயம்-14
பூஜைஅறையில்
சாமிக்கு பூப்போட்டுக்கொண்டு இருந்த ஜானகியும் விரைந்து ஹாலுக்கு வந்தாள்,
அங்கு சோபாவில் சற்றுமுன் வந்து அமர்ந்து வேலாயுதமும்
அன்றைய நியூஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தார்.
என்ன என்ற
பார்வையை தாங்கியபடி அண்ணாந்து அவனை பார்த்தனர் இருவரும்.
ஆதித்தையும் அவனின்
அருகில் கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் தனது வலியை பொறுத்துக்கொண்டு
நின்றிருந்த அழகுநிலாவின் முகத்தையும் பார்த்து,
என்ன ஆதித் இப்போ
எதுக்கு அம்மானு சத்தம் போட்ட... என்று கேட்டாள் ஜானகி,
அழ்குநிலாவைப்
பார்த்து நீ எதுக்குமா கோபமா இருக்க என்று கேள்வியை தொடுத்தார்.
அதற்க்கு அவள், இதுக்குத்தான்
ஆண்ட்டி நான் எப்படி அவர் ரூமிற்குப் போய் எழுப்ப என்று கேட்டேன்.
நீங்கதான்
சொன்னீங்க எனக்கு முட்டிவலி மேலும் இன்னும் கோவில்படிவேறு ஏறனும்,
அவன் ரூம்
மாடியில் இருப்பதால் தானே உன்னை போய் எழுப்பச்சொல்கிறேன் என்று கட்டாயப்படுத்தி
இவர் ரூமிற்கு என்னை அனுப்புனீங்க.
ஆனா அவர் ரூமிற்கு
போன என்னை என்று சொல்லிக்கொண்டு போனவளின் குரல் தேய்ந்துபோய் நின்றது ஆனால்
மனதினுள் , அங்கு நடந்ததை முழுவதுமாக சொல்ல சங்கோஜம் உண்டானது..
எனவே அவன் தன்னை
கை பிடித்து இழுத்ததை கூறாமல் அதன் பின் நடந்ததை மட்டும் கூறநினைத்து திரும்பவும்
குரலுயர்த்தி பேசினாள்.
நான்
சங்கடப்பட்டமாதிரியே ஆகிடுச்சு ஆண்ட்டி , நான் என்னமோ இவர் ரூமிற்கு ஆசைப்பட்டுப் போனதுபோல்
இவர் என்னை திட்டுறாரு ஆண்ட்டி என்றவள்,
தனது காயத்தை
தடவிக்கொண்டே கோபமாக அவனை பார்த்து பல்லைக் கடித்தபடி கூறினாள்
அவள் கூறியதை
கேட்ட ஆதித் கண்களால் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே என் போனில்
கூப்பிட்டிருக்கலாமே என்றான்.
அதற்கு ஜானகி
நானும் ஆறுமணியில் இருந்து உனக்கு போன் போட்டு பார்கிறேன் ரிங் போய் கட்டாயிடுது.
நீ எடுக்கற பாடா தெரியல.
மணிவேறு ஏழு
முப்பது ஆகிடுச்சு. கோவிலுக்கு வேறு போகணும். அதனால்தான் அவளை உன்னை எழுப்ப உன்
ரூமிற்கு அனுப்பினேன் என்றாள்.
என்னது போன்
செய்தும் நான் எழுந்துக்கலையா? எனக்கு போன் அடித்த சவுண்டே கேட்கலையே என்றவனுக்கு,
அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. மாடியில் உள்ள ஜிம்மில் போனை வைத்துவிட்டு எடுக்க
மறந்து கீழே ரூமிற்கு வந்துவிட்டது .
சாரிம்மா... போனை
ஜிம் ரூமில் வைத்துவிட்டு மறந்து வந்துட்டேன். ஒரு டென் மினிட்ஸில் குளிச்சுட்டு
வருகிறேன் என்றவன்,
அழகுநிலாவின் முறைப்பை
பார்த்து, ஆ....மா பெரிய இவ!, நான் கைப்பிடிச்சு
தெரியாம இழுத்ததுக்கு கர்ப்பே பறிபோனதை போல் முறைச்சு பார்க்கிறதபாரு என்று
நினைத்தபடி அவளின் பார்வைக்கு எதிபார்வை கொடுத்தபடி தனது ரூமிற்குள் சென்று கதவை
மூடிக்கொண்டான்.
அழகுநிலாவை
பார்த்து ஜானகி, குளிச்சுட்டு நேற்று போட்ட நைட்டியுடனேயே இருகிறாய் நீ, வா...,
வந்து ட்ரெஸ் மாத்து என்றாள்.
ஆண்ட்டி நேற்று
நான் உடுத்தியிருந்த சேலையெல்லாம் மண் மற்றும் இரத்தக்கரையாக இருந்ததே,
நேற்று எனக்கு
கொடுத்த மெடிசின் டோஸ் அதிகம்போல,அத்தோட அடிபட்டதால் இரத்தம் வெளியேறியதாலோ என்னவோ என்னை
அறியாமல் அதை துவைத்துப் போடாமல்
உறங்கிவிட்டேன்.
பாத்ரூமில்
குளிக்கும் போது நான் துவைப்பதற்காக அங்கு கழட்டிவைத்திருந்த என் சேரியை
பார்த்தேன் காணவில்லை என்று சொல்லியபடி அவளின் அருகில் வந்தவள் கவலையுடன் கூறினாள்.
அதற்கு ஜானகி
அதையெல்லாம் நேற்று இரவே வேலம்மாள் துவைத்து காயவைத்து விட்டாள்.
ஆனால் உன்
சேலையில் சில இடத்தில் கிளிசல்களும் இரத்தக்கறையும் உள்ளது அதை உடுத்த முடியாது.
உன் சட்டைக்கு
மேட்சாக என்னிடம் உள்ள சேலையை எடுத்து நீ தங்கியிருக்கும் ரூமின் கட்டிலில்
வைத்திருக்கிறேன் போய் அதை உடுத்திக்கொண்டுவா, நான் நீ வைப்பதற்கு பூ
எடுத்துவருகிறேன் என்றாள்.
அழகுநிலாவிற்கு
அவளின் தற்போதைய சூழலின் காரணமாக அவளின் அந்த உதவியை மறுக்கமுடியவில்லை
மேலும் நான்
இவர்களின் இந்த அன்பிற்கும் உதவும் குணத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என
மனதிற்குள் மறுகினாள்.
நாம் ஏதோ ஓர்
வகையில் இவர்களிடம் நன்றிக்கடன் பட்டுக்கொண்டே போகிறேனே... என்று நினைத்தபடி அவள்
தங்கயிருந்த அறைக்கு வந்து கதவை தாழிட்டவள், கட்டிலில் இருந்த தனது சட்டைக்கு
பொருத்தமாக ஜானகி எடுத்துவைத்திருந்த
சில்க் காட்டன் புடவையை கையில் எடுத்தாள்,
அந்த சேலையின் விலை
அதிகமாக இருக்கும் என்று தெரிந்தது.
ஆனாலும்
உடுத்துவதற்கு நீட்டான பினிசிங் இருக்கும் என எண்ணிக்கொண்டவள் இவ்வளவு காஸ்ட்லி சேலையை
எப்படி உடுத்துவது என்று தயங்கிக்கொண்டே, அதை உடுத்தி கண்ணாடிமுன் நின்று தலை
சீவுவதற்காக சீப்பை எடுத்து சீவ முயன்றாள்.
ஆனால் அவள் தலையில்
இருந்த காயம் சீவ முடியாமல் வலியையும் கை தூக்கி சீவமுடியாமல் சோல்டரில் உள்ள
இரத்தக்கட்டு வேறு படுத்தியதாலும் விரித்துவிட்ட கூந்தலை பின்னலிட முடியாமல் ஒரு
ரப்பர் பேண்டை மட்டும் கஷ்டப்பட்டுபோட்டுவிட்டு ஜானகியிடம் வந்தாள் அழகி.
அவளுக்காக பூவை
எடுத்துவைத்திருந்த ஜானகி அவள் வரும்போது அவளின் அழகை கண்டு தன மகனுக்கு
பொருத்தமாக அழகாக இருக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்தாள்,
அவளின்
நீண்டமுடியை பின்னாமல் போன்டிடெயில் போட்டு வந்ததை கண்டவள் என்ன அழகி தலையை
பின்னவில்லையா? பின்னி பூவைத்தால் அழகாக இருக்கும்
இந்தக்காலத்தில்
இவ்வளவு நீளமாக முடியுடைய பெண்களை பார்ப்பது அரிது என்று கூறினாள் ஜானகி.
அவள் அவ்வாறு
கூறியதும், உங்களுடைய இந்த பாராட்டு என் அம்மாவுக்குத் தான் ஆண்ட்டி.. நான்
அம்மாவிடம் முடி கீழே ஒன்றுபோல இல்லை கொஞ்சம்
லெவல் செய்து வெட்டிக்கொள்கிறேன் என்றால் கூட அலோவ் பண்ணமாட்டாங்க என்றவள்,
எனக்கும் சேலை
உடுத்தி பின்னல் போட்டு பூ வைக்கத்தான் ஆசை ஆனால் என் தலையில் உள்ள காயத்தாலும்
சோல்டரின் வலியின் காரணத்தாலும் என்னால் பின்னமுடியவில்லை என்று கூறினாள்.
என்னிடம்
சொல்லவேண்டியதுதானே! வா, நான் பின்னிவிடுகிறேன் என்ற ஜானகி , அவளை ஸ்டூலில் உட்காரவைத்து அழகாக பின்னி
பூவைவைத்தவள் அவளுக்கு நெட்டிமுறித்து என்கண்ணே பாட்டும் போல இருகிறாய் நிலா!
என்றவள்,
ஆனால் இந்த
சேலைக்கு நீ போட்டிருக்கும் நகை பொருத்தமாக இல்லையே என்றவள் ஏற்கனவே பூவுடன் அவள்
போடுவதற்கு அன்று காரில் வைத்து தனக்காக வாங்கியது என்று கூறி ஆதித்கொடுத்த
[வர்சாவிற்கு மாலில் வாங்கிய நகையை] நகையை எடுத்துவைத்திருந்தவள் இதை போட்டுக்கோ
அழகுநிலா இந்த நகை நீ உடுத்தியிருக்கிற சேலைக்கு பொருத்தமாக இருக்கும் என்று
கூறினாள் ஜானகி.
அவள் கூறியதை
கேட்ட அழகுநிலா அச்சோ.... ஆண்ட்டி! எனக்கு இது வேண்டாம் ப்ளீஸ்... என்னை
வற்புறுத்தாதீர்கள் என்று வழக்காடிக் கொண்டிருக்கும்போது குளித்து முடித்து பனியன்
சாட்ஸ்சுடன் கீழே தனது பெற்றோரிடம் ஆசிவாங்கி புதுஉடை வாங்கி போடுவதற்காக கீழே
வந்தான் ஆதித்.
அவன் வருவதை
பார்த்த ஜானகி, ஆதித் நீயாவது இவளிடம் சொல்லேன், இந்த சேலைக்கு அன்று நீ எனக்கு
வாங்கி கொடுத்த நகை பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி போடச் சொன்னால் வாங்கி போட
மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்.
நீ சொன்னால்
போட்டுக்கொள்வாள். அவளை இதை போடச்சொல்லேன் என்று கூறினாள் ஜானகி. .
காலையில்
எழுந்ததும் இன்று நடந்த நிகழ்வின் தாக்கத்தில் முதலில் “சே அவகூட இப்படி ஆகிடுச்சே” என்று நினைத்தவன்.
பின் அவளை இழுத்து
அணைத்தபோது உணர்ந்த மென்மையில் சும்மா பூப்போல தான் இருக்கிறாள் என்று ரகசியமாக
அந்த உணர்வை ரசித்தவன், அப்பா மோகினி மாதிரி இழுக்கிறாள் அவட்ட ஜாக்கரதையாக
இருக்கணும் என்று நினைத்தபடி ஏதோ ஒரு கலவையான உணர்வுடன் உதட்டில் புன்னகையுடன்
கீழே இறங்கிவந்த ஆதித் அவளை உட்காரவைத்து அவனின் அம்மா பூ வைத்து சிரித்த
முகத்துடன் அவளுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே வந்த அவனுக்கு மன நிறைவை
கொடுத்தது.
ஆனால் கீழே
இறங்கியபின் இருவருக்குள்ளும் ஏதோ வாக்குவாதம் நடப்பதை பார்த்தவன் எதுக்கு...?
என்று மனதில் உதித்த கேள்வியுடன் அவர்களின் அருகில் வந்தவனிடம்,
ஜானகி காண்பித்த
அந்த நகை வர்சாவையும் அதை தொடர்ந்து நேற்று நடந்த நிகழ்வையும் அவனுக்கு ஞாபகப்படுத்த
திரும்பவும் ஆதித்துக்கு அழகுநிலாவின் மனதை காயப்படுத்தும் வெறியைக் கிளப்பியது.
ஏம்மா.. அவளை போய்
கட்டாயப்படுத்துறீங்க இந்த காலத்தில் யார் உதவி செய்தவர்களுக்கு நன்றியுடன்
இருக்கிறார்கள், இவளிடம் அதை எதிர்பார்த்தால் நாம் ஏமார்ந்துதான் போவோம் என்றான்.
அவன் அவ்வாறு
கூறியதும் அழகுநிலாவிற்கு அவனின் முகத்தின் கடுமையும், தான் நன்றி மறந்தவள் என்று
கூறிய வார்த்தையும் கேட்டு சுறு சுறு என்று கோபம் ஏறியது.
இப்போ எதுக்கு
இவர் என்னை பார்த்து நன்றி மறந்தவள் என்று கூறுகிறார் ஆண்ட்டி,
நாங்க
கிராமத்துகாரங்க எனக்கு நீங்கள் இவ்வளவு பெரிய உதவி செய்திருகிறீர்கள் என்ற விஷயம்
என் குடும்பத்திற்கு தெரிந்தால் நான் மட்டும் அல்ல என் குடும்பமே உங்களை குல
சாமியாக வரிந்து கட்டி ஏழு தலைமுறைக்கும் உங்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்று
அவங்களிடம் சொல்லுங்க ஆண்ட்டி என்றாள்.
அவள் அவ்வாறு
கூறியதும் ஹா.... நாங்களும் பார்க்கத்தானே போகிறோம், இனி வரும் நாட்களில் உன்
நன்றி விசுவாசம் எப்படி பட்டது என்று ஒரு புருவம் உயர்த்தி அவளின் மேல் தீவிரமான
ஒரு பார்வையை செலுத்தியபடி கூறினான் ஆதித்.
அவர்களின்
வாக்குவாதத்தை மேலும் தொடரவிடாமல் ஜானகி இரண்டுபேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா...
என்றவள், ஆதித்தை பார்த்து
இப்போ எதுக்கு
ஆதித் நன்றி அது இது என்று பேசுற அவளை இதைப் போடச்சொல்லு அது போதும் எனக்கு என்றாள்.
உடனே அதுதான்
போடச்சொல்றாங்கள்ள சும்மா சீன போட்டாமல் வாங்கிப்போட்டுக்கோ என்றான் ஆதித்
திரும்பவும் அதை
போடமாட்டேன் என்று கூறினால் அதற்கு குதர்க்கமாக வேறு ஏதாவது ஆதித் பேசினாலும்
பேசுவான் என்று நினைத்தபடி என்னால் கை தூக்கி போடமுடியாது ஆண்ட்டி நீங்களே நல்லா
கொக்கி விலகாத மாதிரி போட்டுவிடுங்க என்றபடி போடுவதற்கு தோதாக காண்பித்தபடி
அமர்ந்தாள்.
ஜானகியும் அந்த
பூவடிவ நெக்லஸ் மற்றும் தோடுடன் ஒரு
கையில் பிரேஸ்லெட்டும் போட்டவள் அவளின் வலதுகையில் அவளின் வளையலையும் போட்டுவிட்டாள்.
பின் அவளை
தள்ளிநின்று பார்த்தவள், வந்ததும் உனக்கு திரிஷ்டி சுத்தி வைக்கணும் என்று கூறினாள்.
அப்பொழுது ஆதித்,
ஏற்கனவே சாதாரன உடையிலேயே மயக்கும் மோகினி போல் இருப்பாள்.
இதில் இப்படி அம்மா
அவளை அழகுவேறு படுத்துறாங்க.பாவம் என்னை போன்ற ஆண்
ஜென்மங்கள் எத்தனை பேர் தலை கிறுகிறுத்து போகப் போகிறார்களோ தெரியலப்பா! என்று
மனதிற்குள் நினைத்தவன்
வெளியில், ஏம்மா
அவளே சரியான பட்டிக்காடு இவளை போய் யாராவது கண் வைப்பார்களா?
நீங்க வேறு
சுத்திப்போடனும் என்று ஜோக் அடிச்சுக்கிட்டு இருக்குறீங்க என்றான்.
அவளின் மேல்
தனக்கு உண்டான மயக்கம் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் அழகுநிலாவை
வேண்டுமென்றே காயப்படுத்தும்படி கூறினான்.
அப்பொழுது கிளம்பி
ஹாலுக்கு வந்த வேலாயுதம் தானும் ஜானகியும் ஆதித்துக்கு வாங்கிய பரிசு மற்றும்
அவனுக்கு புது உடையையும் ரூமில் குளித்து கோவிலுக்கு புறப்பட்டுவிட்டு எடுத்துவந்த
வேலாயுதம் ஜானகியிடம் கொடுத்து அவனிடம் கொடு ஜானகி என்றார்.
அதை கையில்
வாங்கிய ஜானகியின் காலில் விழுந்து ஆசி வாங்கப்போன ஆதித்தை ஒருநிமிஷம் பொறுங்க ஆண்ட்டி என்று
தடுத்தாள் அழகுநிலா
உடனே எதுக்கு நிலா..?
என்று கேட்ட ஜானகியிடம் அதென்ன ஆண்ட்டி தம்பதி சகிதமா அங்கிள்கூட சேர்ந்து நின்று
புதுசு கொடுத்து உங்க மகனை ஆசிர்வதிக்காமல் தனியாக நீங்கமட்டும் எப்படி? என்றவள்
அங்கிள் போய் ஆண்ட்டிகூட சேர்ந்துநில்லுங்க ரெண்டுபேரும் சேர்ந்து கொடுத்து ஆசி கூருங்க என்றாள்
உடனே ஆதித்
எதுவும் கோபப்பட்டு அங்கிருந்து போய்விடுவானோ? என்ற பதட்டம் இருவருக்கும்
தொற்றிக்கொண்டது.
எனவே ஜானகியும்
வேலாயுதமும் கலவரத்துடன் ஆதித்தை பார்த்ததும்
அவன் அவர்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டான்.
மேலும் ஏனோ அழகுநிலாவின்
முன் அவனுக்கு தனது பெற்றோரை விட்டுக்கொடுக்க முடியவில்லை.எனவே
அவரையும் சேர்ந்து
நிக்கச்சொல்லுங்கமா என்று ஜானகியிடம் கூறினான். அவன் அவ்வாறு கூறியதும் வேகமாக ஒரே
எட்டில் ஜானகியுடன் இணைந்து நின்ற வேலாயுதத்திற்கு உணர்ச்சி பெருக்கில் கைகள்
நடுங்கியது.
ஜானகிக்கு
ஆனந்தத்தில் கண்ணீரே கண்களில் நிரம்பி வடிய ஆரம்பித்தது.
உதட்டில்
புன்னகையுடன் கண்களில் கண்ணீருடன் உங்க புள்ளைக்கு கொடுக்க எதுக்குங்க கை
நடுங்கனும் புள்ள காலில் விழுந்துட்டான் ஆசி கூறுங்க என்று கூறினாள் ஜானகி.
கீழே அவர்களின்
காலில் விழுந்த ஆதித்தின் கரத்தில் ஜானகியின் கண்ணீர் பட்டதும் நிமிர்ந்து பார்த்த
ஆதித்தின் கண்களிலும் கண்ணீர் தளும்பியது.
ஆனால் அதை வலியவிடாமல்
கட்டுப்படுத்துவதை பார்த்த அவனது பெற்றோருக்கு அன்றைய அவனது பிறந்தநாள் அவர்களின்
வாழ்கையில் மறக்கமுடியாத ஒரு ஆனந்த நாளாக அமைந்த சந்தோசத்துடன் நிறைந்த மனதுடன்
ஆசி வழங்கினர்.
பின் இருவரும்
சேர்ந்து பரிசு மற்றும் உடை அடங்கிய பையை அவனிடம் கொடுத்தனர்.
அதை வாங்கியவன்
திரும்பி தனது அறைக்கு போகும் போது அழகுநிலாவை பார்த்து மனதிற்குள் உன்னை
அறியாமலே எனக்கு செலுத்தவேண்டிய
நன்றிக்கடனை இப்பொழுது அடைத்துவிட்டாய் பெண்ணே.
ஆனால் அது உனக்கு தெரியாது
என்று நினைத்தவன் தனது அறைக்குள் உடைமாற்ற சென்றான்.
வேலாயுதத்திற்கு
மனத்தினுள் பல குழப்பங்கள் ஏனென்றால் ஆதித் வர்சாவை காதலிக்கும் விஷயம் அவருக்கு
ஏற்கனவே தெரிந்திருந்தது
ஜானகியிடம் அதை
சொல்லி ஆதித்துடன் பேசவைத்து வர்சாவுடன்
அவனது கல்யாணத்திற்கு நிச்சயம்
செய்துவிடலாம் என்றும்,
மாதேஷ் இவனுக்கு
ஒருவருடம் மூத்தவன் என்றாலும் இன்னும் அவன் தன காலில் நிற்க ஆரம்பிக்கவில்லை, எனவே
முதலில் ஆதித்துக்கு கல்யாணம் முடித்துவிடலாம் என்று நினைவுடன் வீட்டிற்கு வந்தார்
.
ஆனால் அவர்
வீட்டிற்கு வந்ததும் ஜானகி, வேலாயுதத்திடம் என்னங்க நாம அன்றைக்கு ஜவுளிக்கடையில்
ஆதித்துடன் பார்த்தோமே அழகுநிலா அவள் கூட வேலை பார்ப்பவருடன்
பைக்கில் வரும்பொது வேப்பேரி ரோட்டில்
வைத்து சின்ன ஆக்சிடென்ட் ஆகிடுச்சுங்க
நல்லவேளை நம்ம
ஆதித் உடனே ஸ்பாட்டுகுப் போய் அவளை ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்சில் கொண்டுசென்று அடிபட்ட தலையில் தையல் போட்டுவிட்டு
எனக்கு போன் பண்ணினான்
நான்தான் அவளை
ஹாஸ்டலில் தனியாக விடவேண்டாம் இங்க கூப்பிட்டுவா என்று சொல்லிவிட்டேன்.
நம்ம ரூம்
பக்கத்து ரூமில்தான் அவளை தங்க வச்சுருகிறேன். கடவுள் புன்னியத்தில் அடி
ரொம்பப்படாமல் தப்பிச்சுட்டா என்றாள்.
அவள் கூறியதைகேட்ட
வேலாயுதம் என்னம்மா வயசுப்பொண்ணை போய் வீட்டில் கூப்பிட்டுவச்சிருக்க,
அவள் வீட்டில்
தகவல் சொல்லி அனுப்பியிருக்கணும் அல்லது ஹாஸ்பிடளில் தங்க வச்சு நர்ஸ் போட்டு
பார்த்துக்கிட்டு இருக்கலாம் பின்னாடி எதுவும் பிரச்சனையாகிவிடப்போகிறது என்றார்.
அவர் கூறியதை
கேட்ட ஜானகி நான் ஒன்றும் அடுத்தவீட்டுப் பெண்ணை ஒன்றும் கூப்பிட்டுக் கொண்டு
வரவில்லை
நமக்கு மருமகளாகப்
போகும் பெண்ணைத்தானே அழைத்து வைத்து கவனிக்கிறேன். ஆக்சிடென்ட் விஷயம் தெரிந்தால்
அவர்கள் வீட்டில் பயந்து அவளை வேலை பார்க்க வேண்டாம் என்று ஊருக்கு கூப்பிடுக்கொண்டு
போய்விடுவார்கள்
அதனால் சொல்லவேண்டாம்
என்றாள். என் மருமகளை எப்படிங்க தனியா ஹாஸ்பிடலில் விடுவது என கேட்டாள்
அவள் கூறியதை
கேட்டதும் நீ என்ன சொல்ற ஜானகி ஆதித் இந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்யப்போவதாக
உன்னிடம் சொல்லிட்டானா?
என்று
குழப்பத்துடன், “தனக்கு அவன் வர்சாவை காதலிப்பதாக கிடைத்த தகவல் தவறானதோ” என்ற யோசனையுடன்
கேட்டார்.
அவர் அவ்வாறு
கேட்டதும் ஜானகி சொன்னாள், அவன் வெளிப்படையாக ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் நானே
கண்டுபிடித்துவிட்டேன். உங்களுக்குத் தெரியுமே அன்னைக்கு ஜவுளிக்கடையில் கூட
அவளுக்கு அவன் ட்ரெஸ் எடுத்துக் கொடுத்திருப்பதாக கூறினான்.
ட்ரெஸ் மட்டும்
எடுத்துக்கொடுக்கவில்லைங்க நகையும் அவளுக்காக வாங்கியிருகிறான்.
ஆனால் இரண்டுபேருக்கும் கொஞ்சம் சண்டை போல. எனவே அந்த
நகையை எனக்கு வாங்கியதாக என்னிடமே கொடுத்துவிட்டான்.
இங்க பாருங்க அந்த
நகையை என்று அழகுநிலவை அதை போட கொடுப்பதற்கு எடுத்துவைத்திருந்த நகையை காட்டி இது
நான் போடுற மாதிரியா இருக்கு என்று மாடனாக இருந்த அந்த நகையை காண்பித்தார் .
தன் மனைவி கூறியதை
கேட்ட வேலாயுதம் வர்சாவை பற்றி கூறவந்ததை சொல்லவேண்டாம். அழகுநிலாவை பற்றி
முழுவதுமாக தெரிந்தபின் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம் எனறு முடிவெடுத்தார்
அதன்பின் அவர் அழகுநிலாவின்
தோற்றத்தையும் நடவடிக்கையும் ஆராய்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்
மேலும் அவள்
தன்னையும் ஆதித்துக்கு ஆசிர்வாதம் கொடுக்க சொல்லச் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டார்.
மேலும் ஆதித்தும்
அவள்முன் தன்னை உதாசீனப்படுத்த முடியாமல் தயக்கத்துடன் அதற்கு உடன்பட்டதை
பார்த்தவருக்கு, தனது மகனுக்கும் அழகுநிலாவின் மேல் ஈர்ப்பு உள்ளதை உணர்ந்துகொண்டார் .
அவளின் அலட்டல்
இல்லாத எழிமையான பேச்சும் கண்ணியமான உடையும் வீட்டு வேலைகளில் இயல்பாக ஜானகிக்கு
உதவிசெய்த விதமும் நேர்த்தியான பழக்கமுள்ள மிடில்கிளாஸ் வீட்டுப்பெண் என்பதை
பறைசாற்றியது.
மேலும் ஆதித்துக்கு
உள்ள ஸ்டேடஸ்க்கும் இப்பொழுது உள்ள அவனின் தொழில் உலகத்திற்கும் இந்த அப்பிராணிப்
பெண் எப்படி அவனுக்கு பொருத்தமாக உள்ளதாக நினைத்து அவன் தேர்ந்தெடுத்தான் என்று
நினைத்துக்கொண்டு இருக்கையில்
நிமிர்ந்து தனது
மனைவியின் முகம் பார்த்த வேலாயுதம் கம்பீறமும் அழகும் அவர்களின் பொருளாதாரத்தில்
இருந்து வருவதில்லை. அவர்களின் மனம் மற்றும் செயல்கள் மூலமே அது கிடைப்பதென்பதற்கு
உதாரணமாக இருக்கும். தன் மனைவியை பார்த்து ரசனையாக மாறியது அவரது பார்வை
உடனே என்னங்க
அப்படி பார்க்குறீங்க! என்று முகம் சிவக்க கேட்டவளிடம், எப்படி ஜானகி இன்னும்
முதல்முறை உன்னை பார்த்தபோது இருந்த அதே ஈர்ப்புடன் என்னை இழுக்கற என்றவர். சற்று
முகம் வாட “உன் மதிப்பு நான் உன்னை
கவர்ந்ததால் தான் சற்று மங்கிவிட்டதோ?” என்று கவலையுடன் கேட்டார்.
அவரின் கவலையை
போக்கும் விதமாக உதட்டில் உறைந்த சிரிப்புடன் அப்படி இந்த ராஜா என்னை துரத்தி
பிடிக்காவிட்டால் இன்று நான் ஒத்தை மரமாக
தனித்திருந்திருப்பேன் என்று சொன்னதும் அவள் சொன்னதை ஏற்கும் வகையில்
தலையாட்டியபடி ம்....அது என்னவோ உண்மைதான் என்றார்.
அழகுநிலாவிற்கு
இதென்னடா அவங்க மகனுக்கு தம்பதி சகிதமா நின்று ஆசி கொடுக்கச் சொன்னதுக்குப் போய்
இவங்க எல்லோரும் ஓவரா ரியாக்ட் கொடுக்கறாங்களே! என்று நினைத்துக்கொண்டு
இருக்கையில் அவளை பார்த்து திரும்பிய ஆதித்தின் பார்வையில் இதுவரை இல்லாத ஏதோ
அவளுக்கான ஒரு சேதி இருப்பதாக தோன்றியது அழகுநிலாவிற்கு. அவளை பார்த்துக்கொண்டே
மாடிக்கு உடை மற்றப்போன ஆதித்தையே பார்த்து நின்ற அழகுநிலா
அவள்
மனதிற்குள்ளேயே என்ன? இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்
என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவளின் தோளில் உணர்ந்த ஜானகியின்
ஸ்பரிசத்தில் அது அடிபட்ட இடம் ஆதலால் ஸ்...ஆ என்று வலியில் சத்தம் எழுப்பியபடி
திரும்பிபார்த்தாள் அழகுநிலா
உடனே என்னமா
அங்கேயும் அடிபட்டுள்ளதா? நான் தெரியாமல்
அங்கேயே தட்டி கூப்பிட்டுவிட்டோனோ! என்று பதறியபடி கேட்டார் ஜானகி
சோல்டரில் லேசாக
அடிபட்டிருக்கு ஆண்ட்டி, அதனால் தான் நீங்கள் தட்டியதும் லைட்டா வலிச்சுடுச்சு
என்றாள்.
அழகுநிலா நாம இன்னைக்கு
வீட்டிலேயே சாமிகும்பிடுவோமா! காயத்துடன் உன்னை அலைய வைப்பதா? என்று தயக்கத்துடன்
கேட்டார் ஜானகி
நேற்று இரவு அவளை
குளித்து மாற்று உடையை அவளுக்கு கொடுத்த ஜானகி அவளுக்கு இரவு உணவு அவள் தங்கியிருந்த
அறைக்கே அழகியின் சோர்வைப் பார்த்த ஜானகி எடுத்துபோய் கொடுத்தாள்.
அழகி குளித்துவந்ததும்
ஜானகி கொடுத்த உணவை சாப்பிட்டுக்கொண்டே,
எப்படி ஆண்டி நீங்க சரியாக நான் ஆக்சிடென்ட் ஆன நேரம் எனக்கு போன் செய்தீங்க என்று
அழகுநிலா கேட்டாள்.
அதற்கு ஜானகி,
நான் தான் ஏற்கனவே உன்னிடம் ஆதித்தின் பிறந்தநாளின் முதல்நாள் உன்னை போனில் அழைப்பேன்
என்று கூறியிருந்தேனே!
நாளை ஆதித்தின்
பிறந்தநாள். அதற்கு வந்துவிடு என்று அழைப்தற்காக
போன் செய்தேன் என்றாள்
அவள் கூறியதும் ஆண்ட்டி
அப்போ நாளை பார்ட்டி அரேஞ் பண்ணுவதில் நீங்க பிசியாக இருக்கும்போது நான்வேறு உங்களுக்கு
தொந்தரவாக இப்போ இங்குவந்து விட்டேனோ!
என்று தவறு செய்த பிள்ளைபோல் முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்டதும்
ஜானகி அச்சச்சோ.... அப்படியெல்லாம் நீ நினைக்காதே நிலா, நாங்க எப்பொழுதும் அவன்
பிறந்தநாள் அன்று காலையில் கோவிலுக்குப் போய்விட்டு வந்து வீட்டில் வடை பாயாசத்தோடு
முடித்துகொள்வோம்.
வெளியாட்களை
எல்லாம் அழைத்து கொண்டாடும் வழக்கம் இல்லை .என்ன.... நீ இப்படி அடிபட்டுவந்திருப்பதால்
நாளை கோவிலுக்கு மட்டும் போகமுடியாது. அதனாலென்ன வீட்டில் இருந்தபடி சாமிகூம்பிட்டுக்
கொள்ளலாம் என்று கூறினாள்.
அவள் கூறியதுமே
அழகுநிலா தன்னால் அவர்கள் கோவிலுக்குப் போவது தடைபடக்கூடாது என்று இரவே
முடிவெடுத்துவிட்டாள்.
எனவே காலையில்
ஆறுமணிக்கே முழித்தவள் அவளது அடிபட்ட இடம் வலித்தாலும் அதை வெளியில் காண்பிக்காதவாறு
குளித்து சிரித்தமுகத்துடன் சமையல் அறைகுச் சென்றாள்.
அங்கு காலையில்
தனது மகனுக்கு பிடித்த உணவு மற்றும் கேசரி வடையை தயாரித்துக்கொண்டு இருந்த
ஜானகிடம் வந்தவள் அவளுக்கு சமையலில் உதவிபுரிய ஆரம்பித்தாள்.
ஜானகி, அச்சோ!
அடிபட்டு வந்தபிள்ளை ரெஸ்ட் எடுக்காம எதுக்கு இங்கவந்து வேலை பார்க்கிற. நீ போய்
படு. நான் உனக்கு குடிக்க பால் எடுத்துக்கொண்டு வருகிறேன், என்று கூறினாள் ஜானகி
ஆண்ட்டி எனக்கு வலியெல்லாம்
இல்லை. அதுதான் நேற்றே தையல் போட்டு மருந்து மாத்திரை கொடுத்து என்னை ஒரே நாளில்
எழுந்து ஓடுறமாதிரி நீங்களும் உங்க மகனும்
தேத்திடீங்களே என்றவள்,
உங்கள் மகனுக்கு
இன்று பிறந்த நாள் அதனால் தடபுடலா
விருந்தே ஏற்பாடு செய்றீங்க போல நானும் சேர்ந்து உங்களுக்கு சமையில் ஹெல்ப் செய்தால்
எல்லோரும் வேகமாக கிளம்பி காலையில் கோவிலுக்கு போய்,
உங்க புள்ளைக்கு நிறைந்த
ஆயுளை கொடுக்கச்சொல்லி கடவுளை கும்பிட்டுவிட்டு அவர் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு
ஒரு ஒன்பதுமணிக்கு வீட்டில்வந்து காலை சாப்பாட்டை முடித்துவிடலாம் என்றாள்.
அவளை தலைமுதல்
கால்வரை பார்வையை செலுத்தி ஆராய்ந்த
ஜானகியை பார்த்தவள்
அச்சோ ஆண்ட்டி “ஐ
ஆம் ஓகே” என்று தன்னை முன்னும் பின்னும் திருப்பி
அவளிடம் காண்பித்து கோவிலுக்கு கிளம்ப அவளை ஒத்துக்கொள்ள வைத்ததாள் அழகுநிலா.
ஆண்ட்டி
எத்தனைதடவை சொல்லிட்டேன் எனக்கு காரில்கூட போக முடியாதாளவு ஒன்றும் அடிபடவில்லை என்றாள் புன்னகையுடன்.
அவள் கூறியதும்
சரி நிலா கோவிலுக்கு போகலாம் ஆனால் நீ என்னை அத்தைன்னு சொல்லு ஆண்ட்டின்னு
சொன்னாள் எதோ அன்னியமாக தோன்றுகிறது நீதான் நம் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாயே
என்றாள்.
அவள் அவ்வாறு
கூறியதும் புன்னகைத்துக்கொண்டே எனக்கு உதவி செய்த காரணத்திற்காக உங்கள் மகனுக்கு
ஏற்கனவே பிரச்சனை வந்துவிட்டது “என்று மனதினுள் அவளால் ஏற்கனவே ஆதித்துக்கும்
அவனது காதலிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது என்பதனை மனதில் வைத்துக்கூறினாள்”
மேலும் எனக்கும்
என்நிலமை தெரியும். நீங்கள் வேண்டுமானால் பெருந்தன்மையாக என்னை உங்கள் வீட்டில்
ஒருத்தியாக நினைக்கலாம் ஆனால் என் இடத்தை நான் மறக்கக் கூடாது இல்லையா ஆண்ட்டி
என்றாள்..
அவள் அவ்வாறு
கூறியதும் ஜானகி ச்..சு அது என்ன என் இடம், என்நிலமை என்று கூறுகிறாய்…, அதெல்லாம் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை எனக்கு.
உன் கள்ளமில்லா
பேச்சிற்கும் உன் அழகிற்கும் உள்ள மதிப்பு உனக்குத்தான் தெரியவில்லை. நான் முடிவு பண்ணிட்டேன் நீ என்னை அத்தையென்று தான் கூப்பிடனும் என்றாள்
அவர்கள் இருவரும்
பேசும்போது அங்குகிளம்பி வந்த ஆதித்திடம் ஆதித் இவள் நான் சொன்னாள் எதுவும்
ஒத்துக் கொள்ளமாட்டேன் என்கிறாள்,
அப்பொழுது கூட நீ
சொன்னபிறகுதான் நகையைக் கூட வாங்கி போட்டாள், அதேபோல் இப்போ நீ சொன்னால்தான் என்னை
அத்தைன்னு சொல்லுவாள் போல அத்தைன்னு கூப்பிடச்சொல்லு ஆதித் என்றார்.
அம்மா நீங்கதானே
சொன்னீங்க எங்க ஊருப் பொண்ணு ஒன்னுக்குள்ள ஒன்னு என்று பிறகு ஏன் என்னை இடையில்
இழுக்குறீங்க! என்றவன்,
தனது மொபைலை
இயக்கிக் கொண்டே நான் போய் இன்னோவாவை எடுக்கிறேன் ட்ரைவர் வேண்டாம் என்று கூரியவன்
தனது மொபைலை ஆன் செய்து அதில் பேசிக்கொண்டே வெளியில் சென்றான் .
ஏனோ அழகுநிலாவிற்கு
ஆதித் அவ்வாறு கூறிச்சென்றது தான் அவன் அம்மாவை அத்தை என்று கூப்பிடுவதில்
அவனுக்கு விருப்பம் இல்லையோ என்றும்
மேலும் இதற்குமுன்
அவன் கூறிய “சரியான பட்டிக்காடு இவளுக்குப் போய் திரிஷ்டி சுத்திப்போடனும் என்று
சொல்லி சிரிப்பு மூட்டுறீங்க” என்று கூறியதும் ஞாபகம் வந்தது.
மேலும் “வர்சாவின்
வழுவழு சருமமும் மாடலான அவளின் தோற்றமும் நினைவு வந்தது”
அவ்வளவு அழகான
லவ்வர் இருக்கும் போது என்னை பார்த்தால் அப்படித்தான் ஆதித்துக்குத் தோன்றும்
என்று நினைத்தவள்,
ஆதித்துக்கு நான்
அழகாகத் தெரியவேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை., தான் ஒன்றும் அவனின்
கம்பீரத்தைக் கண்டு அசரமாட்டேன் என்றும் தனக்குத்தானே கூறிக்கொண்டாள் .
ஜானகி அழகுநிலாவிடம்
இந்த அர்ச்சனை கூடையை எடுத்துக்கோ, என்று அழகிய வேலைபாட்டுடன் வெங்கலத்தினாலான தேங்காய்
பழம் பூ அடங்கிய கூடையைக் கொடுத்தாள்.
அதை வாங்கியவள்
அவளுடன் சேர்ந்து காருக்கு நடந்துகொண்டே அந்த கூடையின் அழகை கண்டு ஆண்ட்டி இந்த கூடை சூப்பரா இருக்கு என்று அதன் அழகை
வர்ணித்துக்கொண்டே இருவரும் சிரித்தபடி காருக்கு வந்தனர்.
ஜானகி அழகுநிலாவை
நீ முன்னால் உட்கார்ந்துக்கோ அழகி நான் மாமாவுடன் பின்னாடி உட்கார்ந்துகொள்கிறேன்.
நாம் மூணுபேரும் பின்னாடி உட்கார்ந்தால் என் மகனை பார்த்து யாரும் ட்ரைவர் என்று
சொல்லிடப்போறாங்க என்று கூறினாள் ஜானகி.
ஆதித் அவன் அம்மா
சொன்னதற்கு அவங்களை முறைக்க முடியாமல் அழகுநிலாவைத்தான் முறைத்துவைத்தான்.
அதனால் அவனின்
அருகில் தான் உட்கார்வதை விரும்பாமல்தான் அப்படி முறைக்கிறான் என்று தவறாக
புரிந்துகொண்ட அழகுநிலா,
ஆண்ட்டி! நான்
உங்க கூடவே பின்னாடி உட்கார்ந்துகொள்கிறேனே.... என்று கூறியதும்
ஆதித் கோபமாக அழகுநிலாவை
பார்த்து, அவங்க சொன்ன மாதிரி என்னை டிரைவர்னு மத்தவங்க நினைக்கனுமோ அம்மணிக்கு,
ஒழுங்கா முன்னாடி
உட்கார் என்று கடுப்புடன் கூறினான்.
நீ முன்னால்
உட்காருமா என்று அவளிடம் கூறிய ஜானகி, பின்னால் உள்ள கதவைத் திறந்து அதில்
உட்கார்ந்திருந்த வேலாயுதத்தின் அருகில் உட்கார்ந்தவள் ஆதித்திடம், நான் கிண்டல்
செய்ததுக்கு அவகிட்ட ஏண்டா கத்துற.
பாவம் அவ முகமே வாடிப்போயிடுச்சு
பார் என்றவள், அவன் திட்டுவதை எல்லாம் கண்டுக்காதமா. அவன் அப்படித்தான் எப்பவும்
பிஸ்னஸ்... பிஸ்னஸ்... என்று அழைந்துகொண்டு அதிகாரம் பண்ணிக்கொண்டு திரிவதுபோல்
வீட்டுலயும் இருப்பான் என்றாள்.
அதன்பின் அழகுநிலா
அருகில் ஆதித் என்ற ஒருவன் இருப்பதையே கண்டுகொள்ளாமல் லேசாக பின்னல் திரும்பி உட்கார்ந்தபடி
ஜானகியுடன் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாள்
ஆனால் ஆதித் தான்
ஒவ்வொருமுறை அவள் கலகலத்து ஜானகியுடன் பேசி சிரிக்கும் போது தெரிந்த அவளின்
அழகையும் அதில் இருந்த உயிர்ப்பையும் கண்டவன் டிரைவிங்கில் ஒருகண்ணும் அவளின் மீது
ஒரு கண்ணுமாக இருந்தபடி கோவிலுக்கு முன் காரை நிறுத்தினான்.
கார் நின்றதும் என்னங்க
அதற்குள் கோவில் அடிக்குள்ள வந்துருச்சா ,
நான் நிலா கூட பேசிகிட்டே வந்ததில் கார் வந்து சேர்ந்ததே தெரியவில்லைல
என்று வேலாயுதத்திடம் கேட்டாள்..
அவரும் தாங்கள்
இத்தனை தடவை கோவிலுக்கு வரும்போது ஒரு கடமை உணர்ச்சியுடன் மனதில் இறுக்கத்துடன்
வரும் இந்த பிரயாணம் அழகுநிலாவின் மூலம் இந்தமுறை எல்லோர் இறுக்கமும்
குறைந்து இந்த பயணம் இறகுபோல் மனம் லேசாக
இருப்பதாக உணர்ந்தார்.
எனவே ஜானகியிடம்
ம்...ஆமாம் என்றவர், இதற்குத்தான் பெண்பிள்ளை இருக்கும் வீடு கலகலப்பாக இருக்கும்
என்கிறார்கள் போல என்றார்.
ஆனாலும் இந்தக்காலத்தில்
இப்படி குடும்பத்தோடு இணைந்து உயிரோட்டமாக வைத்திருக்கும் அழகுநிலாவைப் போன்ற
பெண்ணை பார்ப்பது அரிதுதான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார். .
கோவில் வந்து
இறங்கியதும் அழகுநிலாவின் மொபைல்ஒலிஎழுப்பியது
அதனை எடுத்தவள்
ரமேஷ் இப்போ வலி எதுவும் இல்லை
ஆனா கொஞ்ம் டையர்ட்
ஆக இருக்குது இன்னைக்கு நான் ஆபீஸ் வரமுடியாது என்னுடைய ஆபீஸ் மெயிலில் எனக்கு
அடிபட்டதை மென்சன் செய்து இன்று லீவ் சொல்லியிருக்கிறேன் என்று சொன்னவள்.
ம்..காலையிலேயே
சுமதியிடம் ஹாஸ்பிடல் வரவேண்டாம் என்று சொல்லி இன்று விடுமுறை எடுத்ததையும் இன்பார்ம்
பண்ணிடேன்.
நீங்க ஆபீஸ் போனதும்
நம்ம பாஸை பார்த்து என்நிலமையை சொல்லிவிட்டு என்ன சொன்னார் என்று எனக்கு போன்
பண்ணுங்க என்றவள் தொடர்பைத் துண்டித்தாள்.
அப்பொழுது அந்த
கோவிலின் படியேறும் போது சிறிது தூரம்வரை சிரமம் தெரியவில்லை.
ஆனால் பாதி தூரத்தைக்
கடந்ததும் அவளது முட்டியில் இருந்த காயமும், காலை வலி நிவாரனி இன்னும் உணவு
உண்ணாததால் போடவில்லை என்பதாலும் வலியும் சோர்வும் அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.
மெதுவாக அவளுடன்
பேசியபடி படி ஏறிக்கொண்டிருந்த ஜானகி அவளின் முகச்சினுக்கத்தை வைத்து
என்ன நிலா சேர்ந்து
போயிட்ட இப்படி வேர்த்துக் கொட்டுதே என்றவள், ஆதித் என்று முன்னால் சென்றுகொண்டிருந்தவனை
கூப்பிட்டாள்.
ஆதித்தும்
முன்னால் சென்றாலும் அவனது கவனம் முழுவதுவும் இவர்களிடமே இருந்ததால் கூப்பிடவுடன்
அருகில் விரைந்துவந்தவன் என்ன ஆச்சு என்று அழகுநிலாவிடம் கேட்டவன்
ஒரே நிமிடத்தில்
அவளது முகத்தைப் பார்த்தே அவளின் நிலைமையை உணர்ந்துகொண்டான்.
அம்மா நேற்றுதான்
அடிபட்டு வந்தவளை, இன்றே இப்படி நாம கூப்பிட்டுக்கொண்டு வந்தது தவறு இப்போ அவஸ்தை
அவளுக்குத்தான் என்றான்.
அவன் கூறியதை
கேட்டதும் அழகுநிலா, அச்சோ.. எனக்கு ஒன்றும் இல்லை இலேசாக அடிபட்டயிடம் வலிக்குது.
நான் இங்கே
உட்கார்ந்துகொள்கிறேன் நீங்க போய் சாமிகும்பிட்டு வந்துவிடுங்கள் என்று அங்கு படிஏறுபவர்கள்
இளைப்பாற அமைக்கப்பட்டிருந்த கல் இருக்கையை காட்டி அவள் கூறினாள்.
ஆனால் ஆதித்துக்கு
அங்கிருந்த பிச்சைகாரர்களின் அருகில் தனியாக அவளை விட்டுச்செல்ல மனம் ஒப்பவில்லை.
மேலும் தங்களை
சிலர் தொடர்வதுபோல் அவன் உணர்ந்தான்.
எனவே ம்..கூம் இவ்வளவு
தூரம் வந்தாச்சுல்ல இன்னும் கொஞ்ச தூரம்தான் நடக்கனும் என்றவன், அவளின் மறுபுறம்
வந்து நின்றவன் அவளை தாங்கிபிடித்தபடி, வா ஏறிடலாம் அங்கபோய் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துவிட்டு உனக்கு கொஞ்சம் சாப்பிட எதாவது கொடுத்தால் கொஞ்சம் சரியாகிவிடும்
என்றவன் தன்னுடன் அவளை சேர்த்து தாங்கியபடி படி ஏற ஆரம்பித்தான்.
ஜானகியும்
கவலையுடன் இப்படி நீ கஸ்ட்டப்படுவாயோ! என்றுதான் நான் இன்று வீட்டிலேயே சாமிகும்பிட்டுக்
கொள்வோம் என்றேன் என்று கூறியபடி அவளும் வேலாயுதத்தின் கை பிடித்து படியேற
ஆரம்பித்தார்
அழகுநிலாவிற்கு
அவன் தன்னை அவனுடன் சேர்த்து தாங்கியபடி படிஏற பிடித்ததும் ஒருநிமிடம் அவன்
ஸ்பரிசத்தில் நடுங்கிவிட்டாள்.
ஆனால் அவன் தனக்கு
உதவுவதற்காகத்தான் இப்படி பிடித்துக்கொண்டு ஏறுகிறான் என்பது மண்டையில் உரைக்க,
ஆபத்துக்கு பாவம் இல்லை. கடவுளே! யாரும் தெரிந்தவர்கள் இவருடன் நான் ஏறும் கோலத்தைப்
பார்த்துவிடக்கூடாது என்று வேண்டுதல் வைத்தாள்.
ஆனால் அவளின் வேண்டுதல்
கடவுளின் காதில் விழாமல் போய்விட்டது.
அந்த படிக்கட்டில்
இறங்கிகொண்டிருந்த முரளிதரன் கண்களில் அழகுநிலா யாரோ ஓர் ஆணின் தோளில் சாய்ந்துகொண்டும் அவன் அவளை தாங்களாக
பிடித்துக்கொண்டும் ஏறும் காட்சி கண்ணில் விழுந்ததும் கோபத்தில் அவனின் கண்
சிவந்தது.
நேற்று
சாயந்தரம்தான் அவன் வீட்டில் அழகுநிலாவை பெண்பார்க்க வரும் புதன்கிழமை வரச்சொல்லி
சொல்லியிருப்பதாக போன் செய்து சொல்லியிருந்தார்கள்
அவன்
குட்லாம்பட்டியில் உள்ள அவன் பெரியப்பா வீட்டிற்கு கடந்த நான்கு ஆண்டாக வருடா
வருடம் அவர்களின் ஊரில் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்கு போகும்போதெல்லாம் அவனின்
கண் அழகுநிலாவையே சுற்றிச்சுற்றி வரும்
ஆனால் அவள் தன்னை
ஒரு ஜீவன் பார்ப்பதையே உணராமல் தனது தோழிகளுடன் கலகலத்துக் கொண்டிருப்பாள்
அது கிராமம்
ஆதலால் அவளின் கருத்தை கவர்வதற்கு தான் முயன்றால் தர்ம அடிதான் கிடைக்கும் என
தெரிந்து கொண்டான்.
எனவே அவன் அவளின்
பெரியப்பா மகனிடம் அது யாருடா இந்த பட்டிகாட்டில் தேவதைபோல இவ்வளவு அழகா ஒரு
பொண்ணு இருக்கும் என்று நான் நினைச்சுகூட பார்க்கவிலையே.... என்று கேட்டான்
அவன் அழகுநிலாவைத்தான்
கேட்கிறான் என்று தெரிந்துகொண்ட அவன் தம்பி, அண்ணே! அது இந்த ஊரு பெரியவீட்டு
பொண்ணு.
அது காலேஜில்
படிக்குது இப்படி நீங்க முறைச்சு பாக்குறத அவங்க அண்ணன்காரன் பார்த்தால் நீங்க இஞ்சினியர்
என்றுகூட பார்க்கமாட்டான்,
உங்களை பொலிபோட்டுடுவான்.
இது டவுன் இல்லை கொஞ்சம் அடக்கிவாசிங்க என்று கிண்டலுடன் கூறினான்.
ஆனால் தொடர்ந்து
இந்த நான்குவருடமும் தனது ஊர் பொங்கலுக்கு வரும் தன அண்ணன் முரளிதரனின் கண்
அழகுநிலாவைய் தேடுவதை அவன் அறிந்து கொண்டான்.
எனவே அழகுநிலாவின்
வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை தேடுகின்ற விபரம் அறிந்துகொண்ட முரளிதரனின் தம்பி,
தன அண்ணனும் படித்து சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினேயராகத்தானே இருக்கிறான்
அவனுக்குத்தான் அழகுநிலாவின்
மீது நோக்கம் இருகிறதே எனவே அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் என்ற விபரத்தை அவனின்
காதில் போட்டுவைபோம். அவன் சமத்து, முடிந்தால் பெரியவர்கள் மூலம் பேசி திருமணம்
செய்துகொள்ளட்டும் என்று அவனுக்கு போனில் தெரிவித்தான்.
ஏற்கனவே முரளிதரன்
இந்தவருடம் அவள் படிப்பு முடித்திருப்பாள், எனவே பொங்கலுக்கு ஊருக்குப் போகும்போது
தன் பெரியப்பாவிடம் பேசி அவர்கள் வீட்டில் தனக்கு அவளை பெண் கேட்கச்சொல்லலாம்
என்று நினைத்திருந்தான்.
இந்நிலையில் அவன்
தம்பி அவனுக்கு போன் செய்து அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விபரம் கூறியதைக்
கேட்டதும் தாமத்திக்காமல் உடனே செயலில் இறங்கிவிட்டான்.
தனது அம்மா
அப்பாவிடம் சொல்லி உடனே குட்லாம்பட்டிக்கு போய் தனது பெரியப்பாவை கூப்பிட்டுகொண்டு
அழகுநிலாவின் வீட்டில் சம்பந்தம் பேசச்சொல்லி முடுக்கிவிட்டான்.
நேற்று இரவு போன்
செய்த அவனது தாய் குட்லாம்பட்டியில் இருந்து போன்செய்தாள்,
இரண்டுபேர் வீட்டிலும்
சேர்ந்து போய் ஜாதகம் பார்த்ததாகவும் ஜாதகம் பொருந்தியுள்ளதால் அவர்களும்
பெண்கொடுக்க சம்மதித்துவிட்டதாகவும வரும் புதன் கிழமை பெண்பார்க்கும் படலத்திற்கு
ஏற்பாடு செய்யட்டுமா? அன்றே பேசி கல்யாணத்தேதியை
முடிவு செய்துகொள்ளலாமா? என்றும் கேட்டார் உடனே தன சம்மதத்தை தெரிவித்துவிட்டான்
முரளிதரன் .
அதில் மகிழ்ந்து
போன முரளிதரன் நல்லபடியாக திருமணப் பேச்சு முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றிகூறவும்
மேலும் திருமணம் நல்லபடி நடந்து முடியவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிசொல்லவே
இன்று காலையில் சென்னையில் வேலைபார்க்கும் அவனும் கோவிலுக்கு வந்திருந்தான்.
சாமிகும்பிட்டுவிட்டு
சந்தோசத்துடன் படியில் இறங்கிவந்தவனின் கண்களில்தான் அழகுநிலாவை நெருக்கமாக வேறு
ஒரு ஆணின் அருகில் கோவில் படிகளில் கண்டவன் கனவு சுக்குநூற்றாக சிதறியது.
----தொடரும்----

This comment has been removed by the author.
ReplyDeleteNice and all our novels are very interesting
ReplyDeletethank you Vasu
Delete