anti - piracy

Post Page Advertisement [Top]


         ஒளிதருமோ என் நிலவு...! [தீபாஸ்-ன்]
                  அத்தியாயம்-15


ஒருவழியாக சன்னதியை அடைந்து சாமி கும்பிட்டுவிட்டு அர்ச்சனை முடித்து பிரகாரம் சுற்றிவரும் நேரம் அங்கு அழகுநிலாவை பாலோ செய்துவந்த நரேனின் ஆட்கள் ஆதித்தின் குடும்பத்துடன் அழகுநிலா படியேறும் காட்சி மற்றும் காரைவிட்டு இறங்கும் காட்சி எல்லாவற்றையும் போட்டோ எடுத்து நரேனுக்கு வாட்சப்பில் அனுப்பினர்.
            
நேற்று இரவே அவர்களின் முயற்சி தோல்வியடைந்ததால் நரேனும் மாதேசும் அவர்கள் அரேஞ் செய்திருந்த ஆட்களை மாதேஷ் தங்கியிருந்த அந்த நட்சத்திர ஹோட்டல் ரூமில் வைத்து ஆத்திரத்துடன் வசவால் குளுப்பாடிவிட்டு
பின் மூடவுட்டில் அங்கேயே ஒன்றாக தூங்கி எழுந்தவற்களுக்கு காலையில் வாட்சப்பில் வந்த அந்த போட்டோ, மேலும் அவர்களை கலவரப்படுத்தியது.
          
மாதேஷ்க்கு, தன தந்தையுடன் ஆதித் மற்றும் ஜானகியும்  கூட அழகுநிலா இருந்த அந்த ஸ்டில் அவனுக்குள் பெரும் நெருப்பை பற்றவைத்தது.
அவனுக்கு உடல்முழுவதும் பற்றி எறிவதுபோல் இருந்தது. அதில் ஆதித்தின் அருகில் அழகுநிலா இருப்பதுபோன்று வந்த போட்டோவை தன் வாட்சப்பிற்கு சென்ட் செய்தவன் மனதிற்குள் என் அம்மா இருக்கும் இடத்தில் இருந்த ஜானகியையும் தன்னுடைய இடத்தில் உள்ள ஆதித்தையும் கண்டவன் ஆத்திரத்துடன்,
டேய் ஆதித்.......  உன் அம்மா எப்படி என் அப்பாவைத் தட்டிப்பரிச்சாங்களோ  அதேபோல் வர்சாவை உன்னைவிட்டு பிரிச்சுட்டேன். இந்த அழகுநிலாவையும் உன்னிடமிருந்து பிரிக்காட்டி நான் மஞ்சுளாவின் பிள்ளையில்லடா....... என்று மனதினுள் கூறிக்கொண்டான் .
            
வீடு வந்த பின்பும் அழகுநிலாவிற்கு...., கோவில் படி ஏறும் போது ஆதித் தன்னை பிடித்து கூட்டிக்கொண்டு சென்றது எதோ ஒரு புரியாத பயத்தையும் நடுக்கத்தையும் கொடுத்தது.
அந்த நேரத்தில் தன்னை யாரோ பார்ப்பதுபோன்று உள்ளுணர்வு கூறியதால் நிமிர்ந்து பார்த்த அழகுநிலாவிற்கு, தன்னை கண் சிவக்க பார்த்துக்கொண்டிருந்த அவனை கண்டதும் தன்னை அறியாமல் அவள் ஆதித்தின் பிடியில் இருந்து திமிறி விலக முயன்றாள்.
        
ஆனால் அவளை  ஒழுங்காக வா என்ற ஆதித்தின் அதட்டல்குரல் தடுத்தது.
அவள் மனதிடம் கூறினாள் அவன் உன்னை ஆசையாக ஒன்றும் அப்படி கூட்டிக்கொண்டு ஏறவில்லை என்னை  விட்டால் ஏறமுடியாமல் மயங்கி கீழே விழுந்து தூக்கிக்கொண்டு போகும் படி செய்துவிடப்போகிறாய் என்று சொல்லி,
மேலும் அவனுடன் தன்னை இறுக்கி பிடித்து கூட்டிச்செல்லும் ஆதித்தின் பிடியில் இருந்தவள், தன்னை கோபக்கண்ணுடன் பார்த்தவன் யார் அவன எங்கோயோ பார்த்த ஞாபகம்... என்று யோசித்தபடி படியேறினாள்.
    
கோவில் சென்று வீடுவந்த அழகுநிலாவிற்கு எதோ தவறு செய்வதுபோல் மனம் படபடத்தது,
ஆதித்தின் வீட்டில் தான் தங்கியிருக்கும் விபரம் தன் வீட்டில் தெரிந்தால் நினைக்கவே பயமாக இருந்தது.
மேலும் யார் அவன் தன்னை அப்படி முறைத்துப்  பார்த்தனே! எங்கோ அவனை பார்த்தமாதிரிவேறு தோன்றுகிறதே! என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் அவளின் மொபைல் தன்னை  எடேன் என ஒலிஎழுப்பியது .
      
அதனை எடுத்துப் பார்த்த அழகுநிலா, தனது வீட்டில் இருந்து தான் போன் என்றதும் படபடக்கும் மனதோடு எடுத்து ஹலோ.. என்றதும் அவளின் அம்மா ராசாத்தி ஆத்தி!... அழகி! நல்லா இருக்கியா புள்ள,
என்ற வாஞ்சையான குரல் கேட்டது அவளின் அன்பொழுகும் குரலில் தனது குற்ற உணர்வு அதிகரித்தது போல் இருந்தது. 
நான் நல்ல இருக்கேன்மா! வீட்டில எல்லோரும் நல்ல இருக்கிறீங்களா? என்று கேட்டாள்.

ரொம்ப சந்தோசமா இருக்கோம் டீ அழகி! உனக்கு கல்யாணம் கூடிவந்துருச்சு. நம்ம மேலத்தெரு மாணிக்கம் தம்பி மவனுக்கு உன்னை கேட்டு வந்தாங்க ஜாதகம் எல்லாம் பார்த்தாச்சு பொருத்தம் இருக்குனு சொல்லிடாங்க.  
வரும் புதன்கிழமை உன்னை பொண்ணுபார்க்க வீட்டுக்கு வருகிறாங்க நீ என்ன பண்ற இன்னைக்கு வெள்ளிகிழமைதானே! நாளைக்கு சாயந்தரம் உன் அண்ணனை அனுப்புறேன் ஒருவாரம் லீவ போட்டுட்டு கிளம்பி வா... என்று கூறினாள்.
     
அவள் பேசிக்கொண்டிருக்கும் போது அவளின் அண்ணன் குமரேசன், என்னிடம் கொடுமா நான் பேசறேன் தங்கச்சிகிட்ட என்று போனை வாங்கினான் குமரேசன்.
தனது அண்ணனின் கைக்கு போன் சென்றதை அறிந்ததும், என்ன அண்ணே ஒருவருஷம் நான் வேலை பார்த்தபிறகுதானே கல்யாணப் பேச்சு பேசணும்  என்று சொல்லியிருந்தேனே...  தீடீர்னு இப்படி சொன்னால் எப்படி என்றாள்.
      
அவள் கூறுவதை கேட்ட குமரேசன், அழகி உனக்கு  வேலை பார்க்கணும் அவ்வளவுதானே.
நான் மாப்பிள்ளையிடம் நேத்தே போனில் பேசிட்டேன் அவரும் சாப்ட்வேர் இஞ்சினியராக சென்னையில்தான் வேலை பார்க்கிறார். நீ வேலைக்கு போவதற்கு முழு சம்மதத்தை தெரிவித்து விட்டார்.
நீகூட மாப்பிள்ளையை பார்த்திருக்கலாம் அழகி. நம்ம ஊரு பொங்கலுக்கு மேலத்தெரு மாணிக்கம் மாமா வீட்டிற்கு விருந்தாளியா வாட்ட சாட்டமா ஒரு இஞ்சினியர் பையன் ஒருத்தர் வருவாருல்ல,
அவர் தான் மாப்பிள்ளை. உன்னை திருவிழாவில் பார்த்துட்டு பிடிச்சிருக்குனு கேட்டு வந்தாங்க. நல்ல சம்பந்தம் நாம அறிஞ்ச இடம். அதுதான் பேசிமுடிச்சுட்டோம் எனக் கூறினான். .
     
தனது அண்ணன் கூறியவுடன்தான் இன்று கோவிலில் தன்னைப் பார்த்து முறைத்துப்பார்த்தது அவன் தான். ஆமா! அவன்தான் அந்த மாப்பிள்ளை.
நாம திருவிழாவில் கலந்துகொள்ளும் போதெல்லாம் அங்கங்கே நின்று தன்னை அவன் பார்த்திருப்பதை தான் கண்டும் காணாததுமாக போன நினைவு அவளுக்கு வந்தது. அவளின் இதயத்துடிப்பு நின்றுவிடுவதைப்போல் ஒருநிமிடம் அதிர்ச்சியில் பேச வார்த்தை கூட வராமல் அப்படியே இருந்தாள்.
    
அழகி... அழகி... லைன்ல இருக்கியா நீ? என்று திரும்பத்திரும்ப குமரேசன் கூப்பிட்ட பிறகே கடிணப்பட்டு முயன்று ம்ம்ம்.. லைனில்தான் இருக்கேன் என்றாள் .
    
குமரேசன் நினைத்துவிட்டான், கல்யாணப்பேச்சு எடுத்ததும் மாப்பிள்ளை இவர்தான் என்று தெரிந்ததும் தங்கைக்கு கூச்சத்தில்தான் சிறிது நேரம் பேச்சு வரவில்லைபோல என நினைத்தவன்,
சரிடா! அப்போ அண்ணன் நாளைக்கு சாயந்தரம் உன்னை கூப்பிட வந்திடட்டுமா? என்று கேட்டான்
    
உடனே அண்ணே! ஒருவாரம் உடனே லீவ் கொடுக்கச் சொன்னால் மாட்டாங்க நீ செவ்வாய்கிழமை சாயந்தரம் வா நான் உன்கூட வர கிளம்பி இருப்பேன் என்று கூறியவள்,
அண்ணே எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்குது சாயங்காலம் பேசுறேன் என்று சொன்னவள் தொடர்பைத் துண்டித்து தலையை பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள் .
வீட்டிற்குள் வந்ததும் தனது அறைக்கு செல்வதற்காக படியேறிய ஆதித்திடம் ஜானகி  “ஆதித் நான் சாப்பாடு எடுத்துவைக்கிறேன் சாப்பிட்டுவிட்டு மற்றதைப் பார் என்று கூறினாள்.

   
ம்...வைங்கமா இதோ ஐந்து நிமிசத்துல வந்துவிடுகிறேன் என்று தனது அறைக்கு வந்த ஆதித் கட்டிலில் அமர்ந்தான் அவனது இலவம்பஞ்சு தலையணையை எடுத்து அதன் மென்மையை உணர்வதற்காக தடவிப் பார்த்தான்.
அந்த மென்மையோடு  காலையில் கோவில் படிஏறுகையில் உணர்ந்த அழகுநிலாவின் மென்மையை  தன்னை அறியாமல்  ஒப்பிடுபார்த்தது அவன் உள்ளம். .
    
நோ..! என்று வாய்விட்டு கூறியபடி அந்த தலையணையை தூக்கிப்போட்ட ஆதித், தனது மனம் அவளின் பால் ஈர்க்கப்படுவதை நினைத்து தன்னை பற்றிய சுய அலசலில் ஈடுபட்டான். .
    
அழகான வர்சாவின் கண் அவனின்மேல் விழுவதைக் கண்ட ஆதித்துக்கு அவ்வழகை தன்னுடையதாக்க ஆர்வம் எழுந்தது .
அதற்கு காரணம் வர்சாவின் தூண்டில் பார்வையே. மேலும் அவளும் தன்னை போலவே  நினைப்பதை உணர்ந்தவனுக்கு எளிதாக கிட்டியவள்தான் வர்ஷா.
    
வார்ஷா தன மேல் எதற்காக கோபம் கொண்டாளோ அந்த தவறை தான் நிஜம் ஆக்கிவிடுவோமோ? என்று நினைக்கும் போதே  மனக்கண்ணில் வர்ஷா மாதேசுடன் இணைந்து நின்ற காட்சி தோன்றியது.
அவளை மாதேசுடன் ஒன்றாக பார்த்தவுடன் அவளை தூக்கி எறிவது அவனுக்கு எளிதாக இருந்ததை உணர்ந்தான்.
பின்பு இப்பொழுது  அழகுநிலாவை தேடும் தன் மனம் அவளும் எதோ ஒருவகையில் பொய்த்துப்போனால் என்று நினைக்கும் போதே ஆத்திரம் பொங்கியது.
“கொன்னுடுவேன் என்று வாய்விட்டு கூறினான். தன்னைமீறி ஒரு விரலைக் கூட அழகுநிலாவை அசைக்க விட கூடாது விட மாட்டான் இந்த ஆதித் என முனுமும்னுத்தான் .
    
வார்ஷா அவனை கவர முயலாமல் இருந்திருந்தால், ஆதித் கண்டிப்பாக அவளை திரும்பி கூட பார்த்திருக்கமாட்டான்.
ஆனால் அழகுநிலா கண்டிப்பாக தனக்கு தூண்டில் பார்வை வீசவில்லை ஆனால் அவள் இருக்குமிடம் நோக்கியே தன கண்ணும், மனமும்  செல்கிறதே.
ஆனால் அவள் தன்னை பார்க்கும் பார்வையில் நன்றி உணர்வு மட்டுமே நிறைந்திருப்பதை உணர்ந்த ஆதித், அந்த கண் தன்னை காதலாக பார்க்கவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது.
     
அவனின் மனம் போன போக்கை பார்த்து அவன்  மேலேயே வெறுப்பு உண்டானது ஆதித்துக்கு.
இது இல்லையென்றால் அது என்று உடனே மனதை மாற்றிக்கொண்ட நான் என் தந்தைக்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும்? என்று மருகினான்
     
மேலும் கண்டதையும் அவனது மனம் தரிகிடத்தோம் போட்டு ஆடிக்கொண்டிருக்கையில் அவனது மொபைள் ஒலியில் அதை எடுத்து காதிற்கு கொடுத்து “சொல்லுங்க அம்மா என்று கூறினான்.
உடனே ஜானகி “ஆதி கீழே  சாப்பிட வாப்பா! வேறு வேலையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளல்லாம் என்றதும் “ம்...இதோ வந்துவிட்டேன் என்றவன் மொபைலை அனைத்து  தம் முகத்தை நீர் அடித்து கழுவி டவலில் துடைத்தவன் கீழே இறங்கிவந்தான்.
      
அழகுநிலா இருக்கும் அறையை கடந்து செல்லும் போது உள்ளுக்குள் இருந்து அவள் பேசும் சத்தம் கேட்டதும் ஆதித் “என்ன இவ சாப்பிட வராம யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று தயங்கி நின்றவன் காதில் அழகுநிலா கூறிய
“என்ன அண்ணே! ஒருவருஷம் கழித்துத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்றதற்கு சரியென்று சொன்னீங்க, இப்ப என்னடானா.... உடனே கல்யாணம் அப்படின்னு சொல்றீங்க என்ற அவளின் வார்த்தையில் முகம் ருத்தரதாண்டவமானது வேகமாக அவளிருந்த அறைக்குள் நுழைந்தான் ஆதித்,
       
அழகுநிலாவின் முகத்தை ஆராய்ந்தபடி முன்னேறியவனுக்கு அவளின் பதட்டமான முகபாவனை கண்டதும் அவளின் பதட்டத்தை எப்பாடுபட்டாவது குறைக்கவேண்டும் என எண்ணம் தோன்றியது.
பின் அவள் தன் மொபைலில் கூறிய  “ஒருவாரம் லீவ் எல்லாம் தர மாட்டாங்க செவ்வாய்கிழமை வாங்க அண்ணா நான் கிளம்பியிருக்கிறேன் என்று கூறியதை கேட்டதும், அவளின் பதட்டத்தால் சற்று குறைந்திருந்த  அவனின் கோபம் திரும்ப, மீண்டும் ரவுத்திரத்தை பூசிக்கொண்டது அவனது முகம்.
         
அழகுநிலாவிற்கு கோவில்படியில் தான் ஏறும்போது ஆதித்துடன் தன்னை முரளிதரன் பார்த்ததே நினைவில் எழுந்தது.
அவளுக்கு முரளிதரனுடன் தனக்கு  திருமணம் நின்றுவிடுவதை பற்றி கவலையில்லை.  
ஆனால் அதற்காக அவன் தனது வீட்டில் கூறும் காரணம்...., அடுத்த ஆணின் அருகில், தான் நெருக்கமாக இருந்ததாக பார்த்ததாக அவன் தன வீட்டில் கூறினால் அது தன் கிராமம் முழுவதுவும் பரவினால் நினைக்கும்போதே நெஞ்சம் பதறியது  நிலாவிற்கு.
     
அந்த நேரத்தில் அவளின் அருகில் கோபத்துடன் கேட்ட ஆதித்தின் குரலில், செயலில் மேலும் கதிகலங்கி போனாள்.
தலையை பிடித்து உட்கார்ந்திருந்த அழகுநிலாவின் நாடியை தனது இருவிரலால் அழுத்திப்பிடித்து நிமிர்த்தியவன் உட்கார்ந்திருந்தவளின் முகம் நோக்கி குனிந்து அவளின் முகத்தை கோபப்பார்வை பார்த்தபடி
தெரியும் டீ எனக்கு அதனால்தான் காலையிலேயே சொன்னேன்.  இந்த காலத்தில் யாரும் நன்றி விசுவாசத்துடன் இருக்கமாட்டார்கள் என்று.
ஆனால் நான் ஒன்றும் ஏமாளி கிடையாது. என் கண் பார்வையை விட்டு ஒரு அடி எடுத்துவச்சே தொலைச்சுடுவேன் உன்னை என்று கர்ஜித்தான்.
  
அப்பொழுது   நிலா...அழகுநிலா....என்ன பண்ற என்று கேட்டபடி வந்த ஜானகியின் குரலில் டக்கென்று அவளை விட்டவன் உட்கார்ந்திருந்த அவளை மறைத்து நின்றபடி சாப்பாடு எடுத்துவச்சுட்டேனு சொன்னீங்கல்லமா,
அதனால் இவளையும் கூட சாப்பிடக் கூப்பிடவந்தேன் என்று இயல்பாக ஜானகியிடம் கூறினான்.
     
அழகுநிலா படபடவென்று துடித்த இதயத்தை  மூச்செடுத்து நிலைப்படுத்த பார்த்தபோதும் ஆதித்தின் தொலைச்சுடுவேன் உன்னை என்ற வார்த்தையும் அவனின் கோபமுகமும் பெரிதும் அவளை கலவரப்படுத்தியது.
இயல்பாய் அவன் தன்னை தொட்டுப்பேசிய விதமும், கோவிலில் தன்னை அவன் தாங்கி நடந்தபோது பார்த்த முரளிதரனின் பார்வையால் தற்போதைய தன்னுடைய நிலைமையையும் உணர்ந்தவளுக்கு ஆதிதின் மேல் கோபம் வந்தது.
    
அவள எங்க? என்று ஜானகி கேட்டதும் அவன் திரும்பி பார்த்தான் அவன் பார்வை சென்ற இடத்தை நோக்கிய ஜானகி ஆதித்தை கோபத்துடன் பார்த்துகொண்டிருந்த அழகுநிலவை பார்த்து
என்ன நிலா என்று கேட்டாள், ஜானகியின் குரலில் தன்னிலையடைந்த அழகுநிலா, நிமிர்ந்து ஜானகியின் முகம் பார்த்து ஆண்ட்டி நான் கிளம்பனும் இப்போவே கிளம்பறேன்! எனக்கு நீங்க செய்தவுதவியை எப்போதும் நான் மறக்கமாட்டேன் என்று கூறுகையில் ஆதித்தின் முகம் பார்த்தே கூறினாள் அழகுநிலா .
    
அவள் அவ்வாறு கூறியதும் ஏன்..? என்ற ஜானகியின் கேள்வியை மீறி  இப்போ ஒழுங்கா சாப்பிடவா...! பிறகு போவதை பற்றி பேசலாம் என்ற ஆதித்தின்  கோபமான வார்த்தை ஜானகியின் குரலை மழுங்கடித்தது .
    
ஆதித்தின் அதட்டலில் யோசனையுடன் அவனை பார்த்த ஜானகி “சொல்றத தன்மையா சொல்லலாம்ல ஆதித் அவளை பார்த்தாலே ஓய்ந்துபோய் தெரிகிறாள். இப்படி நீ மிரட்டினா அவள் தாங்க மாட்டாள் என்றவள்,
அழகுநிலாவை கைபிடித்து எழுப்பியபடி “நீ போகலாம் ஆனால் அதற்குமுன் நீ  சாப்பாட்டுவிட்டு மாத்திரை மருந்து எடுத்தால்தான் உனக்கு தெம்புவரும், நானும் நிம்மதியாக உன்னை அனுப்பமுடியும் என்று கூறிக்கொண்டே அவளின் கைபிடித்தபடியே சாப்பாட்டு மேஜைக்கு கூட்டிச்சென்றாள் ஜானகி .
     
ஏனோ இன்று காலையில் கோவிலில் இருந்து வரும்வரை பாதுக்காப்பாக தெரிந்த ஆதித்தின் நிழல் இப்பொழுது  அவனது கோபத்தாலும், மொபைலில் அவள் தன்னுடைய வீட்டில் பேசியபின் தனது குடும்பத்தாரின் முன் தன்னுடைய குற்றவாளி நிலையை   உணர்ந்ததாலும்  ஆதித்தின் வீடு பயத்தை கொடுத்தது. 
                    ----தொடரும்----



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib