ஒளிதருமோ என் நிலவு...![தீபாஸ்-ன்]
அத்தியாயம்-17
அழகுநிலா காரில்
பின் சீட்டில் அமர்ந்து அவள் வைத்திருந்த அந்த அக்ரீமென்ட் டாக்குமென்டில்
முக்கியமான குறிப்புகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
ட்ரைவிங்
செய்துகொண்டிருந்த மாதேசின் அருகில் உட்கார்ந்திருந்த வசந்த் மாதேசிடம் இன்றைய
நிகழ்ச்சிக்கு தான் ஏற்பாடு
செய்திருந்தவற்றை கூறிக்கொண்டே வந்தான்.
ஓரிடத்தில் கார்
நின்றதும் எதுக்கு “இங்க நிறுத்தின மாதேஷ்” என்று வசந்த்
கேட்டான். அதற்கு மாதேஷ் என்னுடைய கெஸ்ட்
ஒருத்தரை பிக்கப் செய்வதற்காக என்று சொல்லிக்கொண்டே காரின் கண்ணாடியை இறக்கிவிட்டான்.
ஹாய்... மாதேஷ்!
என்றபடி வந்தவள் வர்சாவேதான், அவளை பார்த்ததும் அழகுநிலா இது வர்ஷா தானே என்று
அவளை பார்வையால் ஆராய்ந்தாள்.
வர்ஷா அன்று மாலில்
டைட் ஜீன்சும் கையில்லாத டிசர்ட்டும் போட்டு இருந்தவள், இன்று நெட் சேரியில் அதன்
பார்டரில் உள்ளதுபோல் அழுத்தமான சிலீவ்லெஸ் ப்ளவ்ஸ் அணிந்து அதற்கு மேட்சாக காதில்
பெரிய ஜிமிக்கியுடன் பிரீஹேர்ஸ்ட்டைலில் வந்திருத்தவளை பார்த்து
மாதேஷ்,
“வர்ஷா இது
என்னுடைய பிரண்ட் அண்ட் and பிஸ்னஸ் பார்ட்னர் வசந்த் என்று அவனின் அருகில்
அமர்ந்திருந்தவனை அறிமுகப்படுத்தினான்.
பின் அழகுநிலா உட்கார்ந்திருந்த பின்சீட்டின் கதவை
அவளுக்கு திறந்துவிட்டவன் ஏறுங்க வர்ஷா போய்கிட்டே பேசலாம் என்று கூறினான்.
பின்னால் ஏரிய
வர்ஷா தன் பக்கத்தில் தன்னை பார்த்தபடி ஒரு ஜீவன் அந்த காரினுள் உட்கார்ந்திருப்பதே
தனக்கு தெரியவில்லை என்ற பாவனையில் கால்மேல் கால்போட்டு அலட்சிய பாவனையுடன்
அமர்ந்தவள் ட்ரைவ் செய்துகொண்டிருந்த மாதேசிடம் பூஜை எத்தனை மணிக்கு தொடங்கும்
மாதேஷ்,
நீங்க சொன்ன அந்த
லான்ட் லோகேசனில் இடம் கிடைப்பது அவ்வளவு ஈசி கிடயாதுதானே! அங்க லான்ட்
வாங்கறதுக்கே பெரிய பட்ஜெட் தேவைப்படுமே! என்று மேற்கொண்டு பேசப் போனவளிடம் மாதேஷ்,
என் டாட்
நினைத்தால் எங்க வேண்டுமென்றாலும் இடம் வாங்கிவிடுவார் வர்ஷா, நான் இங்கு இடம்
வேண்டுமென்று கேட்டதும் வாங்கிகொடுத்துட்டார்,
ஆனால் இதுகூட இந்த பில்டிங்கட்ட எனக்கு லோன் அரேஞ் பண்ண மட்டும் தான் அவர் எனக்கு
ஹெல்ப் செய்வேன் என்று சொல்லிட்டார்.
இதை நான் சக்சஸ்புல்லா நடத்திக் காட்டினால்தான்
நான் சென்னையில் இருக்க எனக்கு வாய்ப்புத்தருவார்.
இல்லாவிட்டால் என்
ஊரில் இருக்கிற பிஸ்னசை பொறுப்பு
எடுத்துக்கொண்டு ஊர் பக்கம் வந்திடனும் என்று கண்டிசன் போட்டிருக்கிறார் என்றான்.
.பின் வசந்தை பார்த்து டேய்வசந்த் உன்னை நம்பித்தான் நான் இதில் இறங்கியிருக்கேன்
என்றான்.
மாதேஷ் நேற்றே
வர்ஷாவை தற்செயலாக சந்திப்பதுபோல் சந்தித்து அவளை தன் பூமிபூஜைக்கு அழைத்தான்.
முதலில்
மறுக்கத்தான் நினைத்தாள் ஏனெனில் அன்று ஆதித்துக்கு கோபத்தை கொடுப்பதற்காக
மாதேஷுடன் இணைந்து ஆட முடிவெடுத்தவள்
ஆதித் வர்ஷாவிடம்
கோபமாக பேசி வெளியேறிய மறு நொடி மாதேஷிடம்
இருந்து விலகிய வர்ஷா “சாரி மாதேஷ் ஆதித்தை கோபப்படுத்துவதற்காகத்தான் உங்களுடன்
ஆட வந்தேன் நான்.
இதுவரை ஆதித் தவிர
மற்ற ஆண் நண்பர்கள் யாருடனும் இணைந்து ஆடியதில்லை. நான் கிளம்பறேன்” என்று
வெளியேறிவிட்டாள்.
மாதேசுகு வர்ஷாவை
பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது நாகரீகமாக இருந்தாலும் ஆண்களை எட்டவே நிறுத்தி
வைப்பவள் என்று சிலநாட்கள் தொடர்ந்து அவளை கண்காணித்ததின் மூலம் தெரிந்துகொண்டான்.
பணக்கார சொசைட்டிக்கு
தேவையான நாகரிகத்தோற்றம், ஜொள்ளு பார்டிகளை எட்டவே நிறுத்தும் அவளின் தோரணை, கொட்டிக்கிடக்கும் அவளின் அழகு, இந்தமாதிரி
அழகுதேவதையின் காதலை தக்கவச்சுக்க தெரியாத முட்டாள் ஆதித் என்ற எண்ணம் அவனுக்கு
உருவாக ஆரம்பித்திருந்தது.
மேலும் ஆதித்தின்
முன் அவள் வெறுப்பை காண்பித்தாலும் அவனின் பிரிவு வர்சாவை வலிக்கச் செய்வதை
உணர்ந்த மாதேசுக்கு ஆதித்தின் மேல் பொறாமையை ஏற்படுத்தியது.
அவளை அந்த
வருத்தத்தில் இருந்து மீட்கவேண்டும் எனற எண்ணம் ஏற்பட்டது. ஏனோ! அவனை அறியாமல்
வர்ஷாவின் மேல் மாதேஷ் மையல் கொள்ள ஆரம்பித்தான்
அழகுநிலாவும் ஆதித்தின்
கைப்பிடியில் கோவில் படியேறும் போட்டவை,
வர்ஷாவிடம் காட்டி உன் அன்பிற்கு அருகதையில்லாதவன் அந்த ஆதித் என்று அவளிடம் கூறி
அவனை தூக்கி தூரப்போடுவதில் வருத்தம் கொள்ளாதே! என்று சொல்ல நினைத்தான் மாதேஷ்.
பூமிபூஜைக்கு
வர்ஷாவை மாதேஷ் இன்வைட் செய்ததும் அவள் வர மறுக்கப் போவதை உணர்ந்த மாதேஷ்
வரமுடியாதுன்னு சொல்லிடாதீங்க வர்ஷா! நான் முதல் முதலாக தனியா ஆரம்பிக்கப்போற
பிஸ்னஸ் இது,
என் அம்மா ஊரில்
இருந்திருந்தால் அவங்களைத்தான் நான் என் பில்டிங் தொடங்க முதல் கல் ஊன்ற
சொல்லியிருப்பேன். ஆனால் அவங்க இங்க இல்லாததனால் என் வெல்பிசரா என் மனசுக்கு
பிடிச்ச நீங்க வந்து அதை செய்யணும் என்று ஆசை படறேன் என்று கூறிவிட்டான்.
அவன் வார்த்தையை
மறுத்து பேசமுடியாமல் அப்படி நான் என்ன ஸ்பெசல் உங்களுக்கு என்று கேட்டவளிடம்,
தேவதைகளுக்கு அவங்க தேவதை பெண் என்று தெரியாது என்று கூறியவன்,
அதுக்குமட்டுமில்லை
ஜானகி பில்டர்ஸிடம்தான் நாங்க பூமிபூஜை ஆரம்பிக்கும்
முன் அங்கே வைத்தே அன்றைக்கு சைன்
பண்ணப்போறோம்.
அங்க வருகிற
ஆதித்துக்கு அங்கு உங்களை பார்த்து எவ்வளவு பெரிய பொக்கிசத்தை அழகு பெட்டகத்தை
மிஸ் பண்ணியிருக்கிறோம் என்று ஏங்க
வைக்கலாம்.
மேலும், இப்போ
யாருக்காக உங்களை வேண்டாம் என்று சொன்னானோ அவள் சாதாரண என் ஸ்டாப். ஆனால் நீங்க
ஒரு வி.ஐ.பி என அவங்களிடம் அன்று காண்பித்துவிடுவோம் வர்ஷா. அதற்காகவாவது நீங்க
வாங்க பூமிபூஜைக்கு என்று கட்டாயப்படுத்தினான் .
வர்ஷா அன்று
மாலில் சரியாக அழகுநிலாவை பார்க்கவில்லை. அவளின் சைடு மட்டும் பார்த்திருந்தாள்.
என்னை விடவா அவள் பேரழகியா? ஆதித்தை வீழ்த்தும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கு
அவளிடம் என்று பார்க்க ஆசை பட்டாள்.
மேலும் தனது
ஆதித்தை தன்னிடம் இருந்து பிரித்த அழகுநிலாவின் மேல் அளவுகடந்த துவேசம் பிறந்தது
வர்ஷாவிர்க்கு. எனவே பூமிபூஜைக்கு போய் தன் கோபம் தீர அவளை இகழ்ச்சி
படுத்தவேண்டும் என்ற வன்மம் பிறந்தது.
எனவே, வித் பிளசர்.
நீங்க எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கூப்பிடுவதற்காகவாவது நான்
கண்டிப்பாக வருகிறேன் என்றவள், அப்போ அங்க
உங்க ஸ்டாப் அழகுநிலாவும் உங்க பில்டர் ஆதித்தும் அங்கு நான் வந்தால் பார்க்கலாம்
தானே? என்ற கேள்வி எழுபினாள் வர்ஷா.
கண்டிப்பா
பார்க்கலாம் வர்ஷா. அதுமட்டுமில்லை இத பாருங்க என்று படியில் ஆதித் கைபிடியில் ஏறும்
அழகுநிலாவின் போட்டோவை காண்பித்தான். அதை பார்த்த வர்ஷாவிற்கு ஆதித்தின் மேல் கோபமும்
அழகுநிலாவின் மேல் வண்மமும் எழுந்தது.
மேலும் அவளை ஜூம்
செய்து பார்க்கும் போதுதான் அன்று மாலில் தனக்காக வாங்கிய நகையை
அழகுநிலா போட்டிருப்பதை பார்த்தவளுக்கு உடலெல்லாம் எரிந்தது.
அப்பொழுது மாதேஷ்
கூறினான், உங்களை போல தேவதைகளின் அருமை தெரியாதவன் இந்த ஆதித். இவன் உங்களை
விட்டுப்போனது நல்லதுக்குனு நினைத்துக்கொளுங்க. உங்களை ஆராதிக்கும் ஒருத்தன்
கண்டிப்பா உங்களுக்கு கிடைப்பான் என்று சொல்லி அவளை ஆறுதல் படுத்தினான்.
எனவே தான் வர்ஷா
இன்று கவனம் எடுத்து தன்னை சிறப்பாக பார்க்க ரிச்சாக தெரிவதுபோல் உடையும் டைமண்ட்
ஆபரணங்களும் அணிந்து நாகரிக இளவரசி தோற்றத்தில் வந்திருந்தாள்.
வார்ஷா! என்று
மாதேஷ் சொன்னதுமே அழகுநிலாவிற்கு அது ஆதித்தின் காதலிதான் என்று தெரிந்துவிட்டது.
வர்ஷாவிடம் தன்னை
ஆதித் அன்று உதவும் நோக்குடன்தான் அணைத்தான் என்பதைச் சொல்லி ஆதித்தின்மேல் தவறு இல்லை என்று கூறி
இருவரையும் சேர்த்து வைக்க இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தாள்.
ஆனால்
மற்றவர்களின் முன் அதை சொல்ல முடியாது என முடிவெடுத்து ஒரு தாளில், வர்ஷா மேடம்!
நான் உங்களிடம் தனியா பேசணும் என்று
காகித்திதில் எழுதி அவளிடம் அதை கொடுப்பதற்காக மாதேசுடன் பேசிக்கொண்டிருந்த
வர்ஷாவின் கையை தட்டினாள்.
அழகுநிலாவின்
எளிமையை கண்டவள் அவளை இகழ்ச்சியாக பார்த்தாள்.
தனது கையை தொட்ட மறுநிமிடம் வர்ஷா ஏதோ படக்கூடாத அசிங்கம் தன மேல் பட்டதுபோல் ஒதுங்கி தன் பேக்கில் இருந்து
வேகமாக டிஸ்யூவை எடுத்து அந்த இடத்தை துடைத்துகொண்டே என்ன என்ற கேள்வியை
வெறுப்பாய் அழகுநிலாவை பார்த்தபடி கேட்டாள்.
அவளின் செயலில்
அவமானம் அடைந்த அழகுநிலாவிற்கு கண்கலங்கிவிட்டது. இல்ல உங்ககூட தனியா கொஞ்சம்
பேசணும் என்று முனுமுனுத்தாள்.
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து முகத்தை சுருக்கி
என் ஸ்டேடஸ்க்கு சரிசமமில்லாதவங்க கூட நான் நின்று பேசுறதில்லை என்றாள்.
வர்ஷா
அழகுநிலாவோடு மெல்லிய குரலில் பேசுவதை
கண்டுகொண்ட மாதேஷ், உங்கள் அருகில்
உட்கார்ந்திருப்பது என்னுடைய ஸ்டாப்
அழகுநிலா என்றவன், நீங்கள் பேசுவதை பார்த்தால் ஏற்கனவே இருவருக்கும் பழக்கம் போல என்று
கேட்டான்.
உடனே வர்ஷா நோ
மாதேஷ் நான் என் ஸ்டேடஸ்க்கு ஈக்குவலா இல்லாதவர்களிடம் பழகுவதில்லை என்றாள். அதற்குமேல் அவர்களின் முன் வர்ஷாவிடம் காரில்
பேசமுடியாததால் அமைதியானாள் அழகி.
ஆதித் தன் காரை
விட்டு இறங்கியதுமே அவன் கண்ணில் தெரிந்தது மாதேசின் ஒருபக்கம் அழகுநிலாவும்
மறுபுறம் அவனுடன் கலகலத்து பேசியபடி இருந்த வர்சாவுமே,
அவன் இறங்கியதுமே
நக்கலாக அவனைப் பார்த்து தனக்கு
இருபுறமும் நின்ற பெண்களை சாடையாக
பார்த்தான்.
ஆதித்துக்கு அவன்
ஜாடையாக கூறிய, உன் முன்னாள் காதலியும், இன்னால் காதலியும் என் பக்கம் என்று
கூறுவதை உணர்ந்த ஆதித்தின் கை முஷ்டி
இறுகியது.
ஆனால் அதனை முகத்தில்
கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல் முன்னேறினான் .
வசந்த் ஆதித்
வருவதை பார்த்ததும் விரைந்து வந்து அவனை வரவேற்க சென்றான். அவனின் பின்
பார்மால்டிக்காக மாதேசும் வந்தான்.
வசந்துக்கு தான்
நினைத்திருந்த பட்ஜெட்குள் பக்காவாக வடிமைத்துகொடுத்திருந்த ஆதிட்டின் கட்டிட
வரைபடமும் பட்ஜெட்டும் மிகுந்த
திருப்தியாக இருந்தது ஏனெனில் இந்த இடத்தை வாங்கிகொடுத்திருப்பது வேண்டுமானால்
மாதேஷாக இருக்கலாம்.
ஆனால் அதில்
எழுப்பப்படும் கட்டடத்திற்கு லோன் செங்கண் செய்திருப்பது வசந்தின் பேரிலேயே
அந்த பிஸ்னசை
வெற்றிகரமாக நடத்தினால் அந்த இடமும் அந்த பிஸ்னசும் அதன் இலாபமும் இருவருக்கும் சரிபாதி.
இது வசந்துக்கு
பெரிய வாய்ப்பு. எனவே நல்லபடியாக எல்லா வேலையும் முடிய அவன் செலக்ட் செய்து
ஆதித்துடனான அக்ரீமென்ட் திட்டமிட்டபடி முடிக்கவேண்டும் என்பதில் தீவிரமாக
இருந்தான்.
அழகுநிலா ஆதித் வந்ததும் ஆர்வமான பார்வை பார்த்து தலை அசைவுடன் புன்னகை வீசி பக்கத்தில்
இருக்கும் த பாஸ் மாதேஷை சாடையாக காண்பித்து வெளியில் போனதும் பேசறேன் என்று லிப்
மூவ்மெண்டில் மற்றவர்கள் பூமிபூஜையில் ஈடுபாட்டுடன் இருக்கும் போது ஆதித்திடம்
கூறினாள்.
ஆதித்துக்கு
அவளின் ரகசிய பேச்சு அந்த செயல் ஜிவ் என்று கிரக்கத்தை கொடுத்தது. வர்சாவை தொட்டு பார்க்கவேண்டும் என்ற
ஆசை அவனுக்கு முன்பு உண்டாகியிருக்கிறது.
ஆனால் அவனை
மயக்கும் சிரிப்பும் அழைப்பும் வர்ஷாவிடம் இருக்கும். ஆனால் அழகுநிலா
அந்தமாதிரியான ஆதித்தை கவரும் எந்த முயற்சியும் எடுக்காமலே இயல்பான பேச்சிலேயே
அவனின் மனதை அவள் உணராமலேயே வீழ்த்தினாள்,
அடிக்கும் அழகுடன்
வர்ஷா அவளின் அருகில் நிற்கும் போதிலும் அவன் கண் அழகுநிலாவை மட்டும் நாடியதை
உணர்ந்தவன், எதற்காகவும் இனி எந்த சூழ்நிலையிலும் அழகுநிலாவை தன்னால்
இழக்கமுடியாது என்பதை தெரிந்துகொண்டான் .
நல்லநேரம்
முடிவதற்குள் பூமிபூஜை ஏற்பாடு ஆரம்பமானது. அங்கு வர்ஷாவை வி.ஐ.பி யாக உணரவைத்தான் மாதேஷ்.
வர்ஷவிற்கு ஆதித்
தன்னை கண்டு கொள்ளாமல் இருந்தது பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது.
அவளை ஒரு
கல்லையும் மண்ணையும் பார்ப்பதை போல பார்த்துவைப்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே
முடியவில்லை.
அதுமட்டுமில்லாமல்
வந்ததில் இருந்து அவனது பார்வை அடிக்கடி அழகுநிலாவை தொடர்வதை கண்டவளுக்கு
உடம்பெல்லம் எரிந்தது .
வர்ஷா பூஜையை
முன்னெடுத்து செய்வதில் பங்கெடுத்துக் கொண்டாலும் ஒரு கண் ஆதித்தின் மீது வைத்திருந்ததாள்.
எனவே ஆதித்துக்கும்
அழகுநிலாவிற்கும் இடையிலான ஜாடை பேச்சையும், ஆதித்தின் கண்ணில் வழிந்த
அழகுநிலாவின் மீதான ஆர்வமான பார்வையையும்
கண்டுகொண்டாள்.
முன்பெல்லாம்
ஆதித்துக்கும் வர்ஷாவிற்கும் சண்டை
வரும்போது எல்லாம் ஆதித் கடுமையாக பேசினாலும், அடுத்து அவனின் முன் வர்ஷா போய்
முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நின்றாள், ஆதித் தன் கோபத்திற்கு தன்னிலை
விளக்கம் சொல்லாவிட்டாலும் அவளுக்கு
எதேனும் காஸ்ட்லி கிப்டை நீட்டி வர்சாவை மலை இறங்க வைத்து விடுவான்.
அதே போன்று
இப்பொழுதும் காம்பிரமைசாக ஆதித் ஏதாவது
செய்வான் என்று வர்ஷா எதிர்பார்த்திருக்க, ஆதித்தோ அவளை முற்றிலுமாக புறக்கனித்தான்.
ஆனால் தன்னைவிட
அழகுநிலா எந்தவித்தத்திலும் உயர்ந்தவளாக அவளுக்கு தெரியவில்லை அப்படியிருந்தும்
அவள் மேல் ஆதித் காட்டிய ஆர்வம் அவளை காயப்படுத்தியது .
அழகுநிலா
வர்ஷவிடம் பேச பலமுறை முயன்று
கொண்டிருந்தாள், ஆதித்தின் புறக்கணிப்பில் மன அழுத்தமடைந்த வர்ஷா, அந்த
கடுப்பை ஒவ்வொருமுறை அழகுநிலா தன்னிடம்
பேச வரும் போது காட்டிக்கொண்டிருந்தாள்.
வர்சா அழகுநிலாவை
தண்ணீர் பாட்டில் எடுத்துத்தரவும், கீழே கிடந்த பேனாவை குனிந்து
எடுக்கச்சொல்லியும் அதிகாரம் செய்தாள்.
மாதேசும் செய்யேன்
என்ற பாவனையோடு பார்த்தது அழகியை பியூன் லெவலுக்கு இறக்கி அவமானப்படுத்தியது.
இதையெல்லாம்
பார்த்தும் பார்காதவாறு இருந்த ஆதித்துக்கு அழகுநிலாவின் மேல் கோபம் ஏற்பட்டது.
என்னிடம் மட்டும்
வாயாடத் தெரியுது இவ சாப்ட்வேர் இஞ்சினியர்தானே! என்னவோ ப்யூன் லெவலில் வேலை
வாங்குறாங்க? இவளும் எதிர்க்காமல் அடிமை மாதிரி இருக்காளே என்று முறைத்து பார்த்தான் அழகுநிலாவை.
அழகுநிலாவின் நிலைதான்
மோசமாக இருந்தது. ஏற்கனவே மாதேஷ் மற்றும் வர்ஷாவின் செயல் அவளை மனதளவில் மிகவும்
காயப்படுத்தியது என்றால் ஆதித் அவளை
முறைப்பதை பார்த்து இன்னும் துவண்டுபோனாள்.
அழகுநிலா ஒன்றும்
பயந்த சுபாவம் கொண்டவள் அல்ல. ஆனால் தன்னை வருத்துவது ஆதித்தின் காதலிதானே என்ற
எண்ணத்தாலும் தன்னால் காயம் அடைந்த வர்ஷா என்னை காயப்படுத்துவதன் மூலம் ஆத்திரம்
தணிக்க நினைக்கிறாள். ஆதித்துக்காக இதை பொறுத்துத்தான் போக வேண்டும் என்ற
எண்ணத்தில் இயந்திரத்தனமாக இருந்தாள் அழகுநிலா.
ஆனால், அங்கு
ஆபீசில் இருந்து வந்த சிலரில் இருந்த ரமேசுக்கு அழகுநிலாவை அவமானப்படுவதை
சகிக்கமுடியாமல் அவளுக்கு வேலையில் தன்னால் ஆன உதவிகளை செய்தான்
அப்பொழுது ஆதித்தை
பார்த்த ரமேஷ், சார் நீங்க என்று அவனிடம்
சென்றான் அவனும் நான் தான் இங்க பில்டிங் கட்டிக்கொடுக்கப்போறேன் என்றவன்,
அவனிடம் தன மொபைல்
நம்பரை கொடுத்து மற்றவர் அறியாமல் ஆபீசில்
பிரச்சனை வரும் போது ஏதேனும் அவளுக்கு உதவி தேவைபட்டால் உடனே இந்த நம்பரில்
இருந்து என்னை காண்டாக்ட் பண்ணுங்க என்று லோ வாய்சில் அவனிடன் போகிற போக்கில்
சாதாரணமாக பேசுவதுபோல் சொல்லிச் சென்றான்.
பூமிபூஜை முடிந்ததும்
பக்கத்தின் இருந்த ஸ்டார் ஹோட்டலில் ஒரு சுமால் கெட்டுகதருடன் காண்ட்ராக்டில் சைன்
செய்வதற்காக புறப்பட்டனர்.
அழகுநிலா மாதேசின்
காரில் ஏறப்போகும்போது அங்கிருந்த வர்ஷா “ஏய்” இந்தா என்று தன் பர்சில் இருந்து நூறு
ரூபாய் தாளை அவளிடம் நீட்டி நீ எங்க பின்னாடியே ஆட்டோ பிடித்து வந்திரு. லேட்
செய்து மாதேஷ்சை டென்சன் செய்திடாதே! என்றவள், மாதேஷிடம் அவள் நம் கூட காரில்
வருவது எனக்கு கம்பர்டபிளா இல்லை மாதேஷ் என்றாள்.
அவளின்
வார்த்தைகளில் குருகிப்போய்நின்ற அழகுநிலா,
இல்ல எனக்கு ரூபாய் வேண்டாம் என்னிடம் இருக்கு என்று கூறுவதை காரில்
ஏறப்போகும் ஆதித் கேட்டதும் அவனால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
வேகமாக அவளின்
அருகில் வந்தவன் வா என்று அவளின் கைபிடித்து
இழுத்துப் போய்கொண்டே திரும்பி
வர்ஷாவை எரிக்கும்படி பார்த்துக்கொண்டு போனான்.
அப்பொழுது மாதேஷ், “மிஸ் அழகுநிலா உங்களிடம் லேன்ட்
டீடெய்ல் அடங்கிய அக்ரீமன்ட்டுக்கு தேவையான டாக்குமென்ட் இருக்கு அப்படியிருக்கும்
போது எப்படி நீங்க ஆதிதிதுடன் போகலாம் என்று கூறி அவளை தடுத்தான்
உடனே ஆதித் அவள்
கையில் இருந்த பைலை பறித்து அவனின் அருகில் இருந்த ரமேசிடம் உங்க பாஸ்கிட்ட
கொடுத்திடுங்க என்றான்,
அப்பொழுதும் மாதேஷ்,
அவ என்னுடைய ஸ்டாப் என்று கர்ஜித்தான் மாதேஷ், அழகுநிலா... நீ இப்போ ஆட்டோவில் தான் வரணும் என்று ஆர்டர்
போட்டான்
உடனே அவளை தனக்கு
முன்னால் நிறுத்தி எங்கே திரும்பச் சொல்லு
என்னை மீறி அவள் நீ சொல்வதை கேட்டுவிடுவாளா? பார்த்துவிடுவோம் என்று
கூறினான் ஆதித்.
இவர்களின்
வாக்குவாதத்தை பார்த்து ஐயோ இந்த மாதேஷ்
இப்போ குழப்பம் பண்ணி அக்ரீமன்ட் சைன் பண்ணமுடியாமல் செய்திடப்போறான் என்று
வேகமாக அவனை மாதேஷ் என்று கூப்பிட்டபடி சமாதானப்படுவதற்கு வருவதற்குள்,
அழகுநிலா ஒரு அடி
பின்னால் வைத்து ஆதித்தின் அருகில் நின்றவள், மாதேசிடம் பாஸ் நான் இவர் கூட
வருகிறேன் என்று அழுத்தத்துடன் கூறினாள்.
ஆதித் அழகுநிலா தன்
அருகில் வந்து நின்றதுமே மீண்டும் அவளின்
கை பிடித்துக்கொண்டான்.
தனது கையை ஆதித்
பிடித்தஉடனே அழகுநிலா ஹஸ்கிவாய்சில் அவனிடம் கொஞ்சம் கையை விடுறீங்களா! அங்க பாருங்க...
உங்க வர்ஷா பார்கிறார்கள், என்று தன்னுடைய கையை விடுவிக்கப் பார்த்தாள்.
அதற்கு ஆதித்
இப்போ ஒழுங்கா நிக்கப்போகிறாயா? இல்ல உன்னைத் தூக்கி காருக்குள் போடவா? என
மிரட்டல் விடுத்தான் அவளை போன்றே ஹஸ்கி வாய்சிலேயே.
அவனின்
வார்த்தைகளில் அதிர்ந்து அவனை அழகுநிலா பார்க்கும்போது அந்த இடத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது அதில்
இருந்து இறங்கியவர்கள் அழகுநிலாவின் அண்ணனும் முரளிதரனும்.
ஆனால்
அழகுநிலாவும் மற்றவர்களும் வந்தவர்களை கவனிக்கும் நிலையில் இல்லை.
இறங்கிய
குமரேசனின் கண்களில் பட்டது அழகுநிலா வேறு ஒரு ஆணின் கைபிடித்து நின்று
கொண்டிருந்ததைத்தான்.
முரளிதரன்
குமரேசனிடம் சொன்னான் உங்க தங்கையை நான் கோவில் படியில் ஒருத்தருடன் நெருக்கமாக
ஏறியதை பார்த்தேன் என்றேனே, அவரின் அருகில் தான் இப்பொழுது உங்க தங்கை நிற்கிறாள்
என்றான்
அப்பொழுது மாதேஷ்
கோபமாக மிஸ் அழகுநிலா நீங்க எப்ப என்னை
மதிக்காமல் இன்சல்ட் செய்தீங்களோ
இனி என் கம்பெனியில் உங்களுக்கு இடம்
இல்லை உங்க சர்டிபிகேட்டை நீங்க எப்படி என்னிடம் இருந்து வாங்குகிறீர்கள்
என்று பார்ப்போம் என்று கண் சிவக்க மிரட்டினான் அழகுநிலாவை.
அவன் கூறியதும்
ஆதித் “நீ என்ன அவளை வேலையில் இருந்து தூக்குறது
பொறுக்கி நாயே, இனி அவ உன் அபீஸ் பக்கம் மழைக்கு கூட ஒதுங்க மாட்டாடா.
உன் கூட
சுத்துவானே மினிஸ்டர் மகன் நரேன், அவனின்
ஐ போன் இப்போ என் கையில் இருக்குடா “இனி இவள மிரட்டுவ”
ஏதாவது மிரட்டுனேனு தெரிஞ்சா அதில் உள்ள உங்க வண்டவாளத்தை உடனே உலகம்
முழுவதுவும் நெட்டில் வைரலாக பார்க்கும் படி செய்துவிடுவேன என்று கர்ஜித்தான்.
.
இதை
எதிர்பார்க்கவில்லை மாதேஷ். அந்த போன் அழகுநிலாவிடம் தான் இருக்கும். வேலையை
விட்டு தூக்குகிறோம் என்றால், மிடில் கிளாஸ்காரிதான வந்து வேலைக்காக கெஞ்சுவாள்! அப்போ நரேனை வைத்து அவளை கார்னர்
செய்து அந்த மொபைலை வாங்கலாம் என்று அவன் நினைத்துக்கொண்டு பேசினான் மாதேஷ்.
ஆனால்! அது
இப்பொழுது ஆதித்தின் கைக்கு போய்விட்டது என்று தெரிந்ததும் ஆடிப் போய்விட்டான்
அவன். அதில் தன் வீடியோவையும் பார்த்திருகிறான் என்றதும் பயம் தொற்றிக்கொண்டது அவனை.
மாதேஷ் அழகுநிலாவை
பார்த்து ஏய் அழகுநிலா நீ யார்கூட மோதுகிறாய் என்று தெரிஞ்சுதான் மோதுகிறாயா?
ஒழுங்கா அவன் கிட்ட இருந்து ஐ போனை வாங்கி கொடுத்திடு இல்லேனா பின் விளைவுகள்
மோசமாக இருக்கும் என்று அவளை நோக்கி வந்தான்.
அழகுநிலாவை தன
பின்னல் இழுத்து நிறுத்திய ஆதித் உனக்கு எல்லாம் வாயால் சொன்னா பத்தாது போல என்றவன்
தன பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து உன்னையும் உன் கூட வீடியோவோயில் இருக்கிற பொறம்போக்கு எல்லோரையும் ஊரே காரித்துப்புரமாதிரி
செஞ்சிரட்டுமா? என்று கேட்டுகொண்டே போனை இயக்க ஆரம்பித்தான்.
உடனே மாதேஷ், ஏய்....
வேண்டாம் ஆதித். அப்படியெதுவும் பண்ணிடாத என்றதும், அவன் முகத்தை வெறுப்புடன்
பார்த்த ஆதித்திடம் “ஆதித் வேணாம் இதுல இருந்து நீ ஒதுங்கிக்கோ அவளுக்காக
என்கிட்டே மோதுறதுக்கு அவ என்ன உன் வருங்காலப்
பொண்டாட்டியா? என்று அவனை போலவே மாதேசும் சிலிர்த்துக்கொண்டு பேசினான்.
அதற்கு ஆதித், “ஆமாடா” இனி
நீ இவளை உரசிப்பார்கனும் என்று நெனச்சாக்கூட உன்ன இல்லாமல் ஆக்கிடுவேன் என்று அவன் சட்டையை பிடித்து
இழுத்துக் கூறினான்.
இருவருக்கும்
இடையே நடந்த வாக்குவாதத்தை கேட்ட அழகுநிலாவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
நரேனின்
போனுக்கும் மாதேசுக்கும் என்ன சம்பந்தம் என்று அவளுக்கு முழுமையாக
விளங்காவிட்டாலும் அந்த நரேனின் போனை கைப்பற்ற முயன்றவர்களில் மாதேசும் ஒருவன்
என்றும் அந்த போனில் ஆதித் சொன்னதுபோல் வில்லங்கமான பதிவு வேறு இருக்கிறது போல என புரிந்துகொண்டவள், தான் வேலை பார்த்த இடம் தனக்கு இத்தனை ஆபத்தான
இடமா? என்று நினைக்கும் போதே அவளுக்கு படபடப்பாக வந்தது
ஆட்டோவில் இருந்து
இறங்கிய குமரேசனுக்கு அழகுநிலா ஆதித்தின் கைபிடியில் இருப்பதை பார்த்ததுமே
உடைந்துவிட்டான்
அதுவும் தான்
அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை முரளிதரனிடம் தன தங்கை நேற்று கோவிலுக்கே போகவில்லை நான் கூட அன்று பேசும் போது
ஆபீசில் தான் இருக்கிறேன் என்று சொன்னாள். அவ நெருப்பு போன்றவள் என்று கூறி
அவளிடமே வாங்க உங்களுக்கு சந்தேகம் இருந்தால் விசாரித்து விடலாம் என்று கூறி இரவே பஸ் ஏறி சென்னை வந்த குமரேசன் முரளிதரனை அழைத்துக்கொண்டு அழகுநிலா வேலை பார்க்கும்
ஆபீசுக்கு வந்தான் .
ஆபீஸ் ரிசப்சனில்
அவளை விசாரித்ததும் அவள் கம்பெனி நியூ பில்டிங் சைட்டுக்கு போயிருப்பதாக
கூறினார்கள்.அந்த அட்ரஸ் கேட்டு அங்கு வந்த குமரேசன் அங்கு நிலவிய சூழ்நிலையில்
அதிர்ந்து நின்றுவிட்டன
\
மேலும் மாதேஷ் அவ
என்ன உன் வருங்கால பொண்டாட்டியா என்று கேட்டதும், “ஆமாம்” என்று ஆதித் சொன்னதிற்கு பின்னாவது, தன
தங்கை மறுத்து ஏதாவது சொல்லுவாள் என்று ஒருநிமிடம் அழகுநிலாவை பார்த்தவன்’ அவள் அந்தமாதிரி
எதுவும் சொல்லாமல் உறைந்து நின்றதை பார்த்து
வேகமாக அவளின் அருகில் வந்தவன் அவளது கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டு
“நம்ம குடும்ப மானத்தையே கப்பலேத்திடியே!, இப்படி நீ... செய்வேன்னு நான் கொஞ்சம்
கூட எதிர்பாக்கவே இல்லையே” என்றான்
மாதேசின்
சட்டையைப் பிடித்து ஆதித் இழுத்தநேரத்தில் அழகுநிலாவை குமரேசன் அடிக்கவும் “அண்ணே” என்ற அழகுநிலாவின்
சத்தத்திலும் திரும்பி பார்த்த ஆதித் மாதேசின் சட்டையை விட்டுவிட்டு “யேய்
நீயெல்லாம் மனுசநாயா ஒரு பெண்ணை அதுவும் தங்கச்சியை போய் பிரச்சனையில் இருக்கும்
போது என்ன ஏதுன்னு விசாரிக்காம கைநீட்டுற” என்று குமரேசனை
பார்த்து கோபத்தில் கண் சிவக்க கர்ஜித்தான்.
உடனே குமரேசன்
ஆத்திரத்திடன், என் தங்கச்சி மனச கெடுத்து அவக்கூட ஊர் சுத்தனதுமில்லாம என்னைய
கேள்விவேற கேட்குற நீ?
என்று கோபத்துடன்
அவனை அடிப்பதற்கு கை ஓங்கினான் குமரேசன், உடனே அழகுநிலா வேகமாக ஆதித்தின் முன்
வந்து நின்று அண்ணே அவர்மேல நீ கைய வச்ச அடுத்த நிமிஷம் உன் தங்கையை உசுரோட
பார்க்கமாட்ட என்று தன் அண்ணன் ஆதித்தை அடித்துவிடுவானோ! என்ற பதட்டத்தில்
நெருப்பாய் நின்றாள் அழகுநிலா. .
அழகுநிலா அவ்வாறு
கூறியதும் குமரேசன் ஓங்கிய கை, இயலாமையுடன் கீழே இறங்கியது.
அழகுநிலாவிடம்
அவனுக்காக இந்த அண்ணனையே எதிர்க்க, உயிரைவிட துணியுர அளவு நீ போய்டியா அழகி?
என்றதும்,
இல்ல அண்ணே என்று
மேற்கொண்டு அழகுநிலா பேசப்போவதை தடுத்து, இனி உனக்கும் நம்ம வீட்டுக்கும் எந்த
சம்பந்தமும் கிடையாது. ஊருபக்கம் வந்து எங்க மிச்சமீதி கௌரவத்திற்கும் உளைவச்ச....
பிறகு ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டோம்! என்று கூறி விறுவிறுவென்று அவன் வந்த
ஆட்டோவில் சென்று ஏறி போயேவிட்டான் குமரேசன்.
அண்ணனின் வார்த்தைகளில்
அதிர்ந்துபோய் அப்படியே சிலையாக நின்றுகொண்டிருந்த அழகுநிலாவை பார்த்து
இளக்காரமாய் சிரித்த மாதேஷ், ஆதித்திடம்
“நேத்து வரை வர்ஷா” அவ உனக்கு போரடித்ததும் இன்னைக்கு இவ, இவபோரடித்ததும் நாளைக்கு யாரோ? உன்
அம்மா புத்திதானடா உனக்கும் என்று கூறினான் மாதேஷ் .
அவ்வளவுதான்
ஆதித்துக்கு வந்த கோபத்தில் ஒரே எட்டில் மாதேசின் அருகில் போனவன், ஒரு எத்து விட்டு அவனை சுருள விழ
வைத்தான்,
பின் அவனை
மற்றவார்கள் பிடிக்க முயன்றும் விழுந்தவனை
காலால் மேலும் இரு உதை உதைத்தவன்,
“பேசுவ என்
அம்மாவை பத்தி பேசுவ” இனி பேசின உன்னை தொலச்சுகட்டிடுவேன்
என்று திமிறிக்கொண்டு மாதேசை பின்னி எடுத்துவிட்டான்
வசந்தும் மற்றவர்களும் மிகுந்த சிரமப்பட்டு மாதேஷை
ரத்தக் காயத்துடன் மீட்டு காருக்குள் திணித்தனர் .
ஆதித் அங்கு நின்றுகொண்டிருந்த அழகுநிலாவை பார்த்தான்
கண்ணீருடன் அவள் அண்ணன் போன பாதையையே பார்த்துக்கொண்டு இருந்த அழகுநிலாவின்
அனாதாரவான நிலையை பார்த்தவன் அவளிடம் வந்தான்,
“ஏய்” அழாத. நான் இருக்கேன் வா! எல்லாம் சரியாகிடும் என்று அவளை கை பிடித்து தனது
காருக்கு கூட்டிக்கொண்டு போய் கார் கதவை திறந்து அவளை உட்காரவைத்தபோது தனக்கு பின்னால்
நின்று கொண்டிருந்த ரமேஷை திரும்பி பார்த்தவன் புருவம் உயர்த்தி என்ன என்று
கேட்டான்,
உடனே ரமேஷ், சார்!
அழகுநிலா ரொம்ப அப்செட் ஆகி இருக்காங்க. அவங்க என்னுடைய பிரன்ட். அவங்கள நல்லா
பாத்துக்கோங்க சார்! என்றான்.
உடனே ஆதித், நீங்க கவலை படாதீங்க, அவ எனக்கும் முக்கியமானவ தான் என்றவன். தன பி ஏ வை பார்த்து உங்களை இவர் என்று ரமேஷை காட்டி, நம்ம ஆபீசில் ட்ராப் பண்ணிடுவார் என்றான்.
உடனே அவன் சார்
அப்போ இன்னைக்கு நம்ம சைன் பண்ண வேண்டிய கான்ராக்ட் என்று இழுத்ததும் ஆதித்
அவனிடம் “ இந்த டீல் நல்லபடியா முடியாதுன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்” சோ லீவ் இட்
என்றான்..
ஆனால் அழகுநிலா
இவர்களின் சம்பாசனை எதுவும் கவனிக்கும் நிலையில் இல்லை.
தன் அண்ணன் தன்னை
தவறுதலாக நினைத்து விட்டுச்சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் கண்ணீர்
வடியும் கண்களுடம் தன் வீடு இனி தன்னை ஏற்காது என்பதனை ஜீரணிக்க முடியாமல்
உட்கார்ந்திருந்தாள். அவள் இருந்த கார் அவளின் ஹாஸ்டல் நோக்கி போய் கொண்டிருந்தது.
ஆதித் அவளை சமாதானப்படுத்தாமல் அடுத்து என்ன செய்ய? என்ற யோசனையுடன் ட்ரைவ்
செய்துகொண்டிருந்தான் .
---தொடரும்---

No comments:
Post a Comment