பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை..![தீபாஸ்-ன்]
அத்தியாயம்-2ம் பாகம்-32
தீரன் யாழிசையை கோயம்புத்தூர் வீட்டிற்கு அழைத்துச்செல்ல
தயாராகிகொண்டிருந்த போது ரங்கராஜன் அமெரிக்காவில் இருந்து இந்தியா
வந்துகொண்டிருக்கும் பிராங்கை ரிசீவ் செய்ய புறப்பட்டுகொண்டிருந்தான்.
தீரன் தன்னுடன் ஒரு பெண்ணை அழைத்துகொண்டு போவது தன்னை கண்கொத்திப் பாம்பாக
பின் தொடரும் பிராங்கின் ஆட்களுக்குத் தெரியவந்தால் போகிறவழியிலேயே தன்னை மடக்க
முயன்று அது வகுலாவா அல்லது யாழிசையா என்று அறிந்துகொள்ள கோயம்புத்தூர் வீட்டிற்குள் போகும் வரை
தங்களுக்கு பெரிய இம்சை கொடுக்க முயல்வர் என்று அறிந்ததால் யாழிசையை ஸ்டீபன்
உதவியுடன் ஆண்போல தெரியும் படி உடை மற்றும் ஹேர் ஸ்டைலை விக்கின் உதவியுடன் மாற்றிகொண்டிருந்தான்.
அதே நேரம் தீரனுக்கு பிராங் இந்தியா வந்துகொண்டிருக்கும் சேதியும் கிடைத்தது.
அச்சேதி கிடைத்ததும் வகுலாவின் மாமா வெங்கடேசன் வீட்டில் தற்போது
டூப்ளிகேட் வகுலா இருப்பது தீரன் இங்கு வந்தால் தெரிந்துவிடுமோ என்ற யோசனை
உண்டானது.
வெளிநாட்டிலிருந்து இங்கு வந்திருக்கும் வகுலா கடத்தப்பட்டது இன்னும்
பெரிய இஸ்யூ ஆகாமல் இருப்பதற்கு காரணம் வகுலா மாதிரி இருக்கும் ஒருத்தி அவளின் மாமா வெங்கடேசன்
வீட்டில் இருப்பதாலேயே என்பதை உணர்ந்தவன் இங்கு பிராங் வந்ததும் தன்னை இந்திய
போலீசிடம் மாட்டிவிட வகுலாவின் விசயத்தைதான் முதலில் கையில் எடுப்பான் என்று
யூகித்தான்,
அதற்கு என்ன செய்ய என்றும் யோசனை ஓடிகொண்டிருந்தது அவனுள்.
உன்னுடைய அப்பாவை பார்க்கணும் என்ற ஆசை இருந்தால் ஸ்டீபன் சொல்வதுபோல்
ரெடியாகி வா என்று கூறியவன் யாழிசையுடன் புறப்பட தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்யச்சென்றான்.
தாங்கள் இப்பொழுது இருக்கும் பார்ம் ஹவுஸ் சுற்றி தீரனின் ஆட்களில்
ஒருவன் ரவுன்ஸ் வந்துகொண்டிருந்தான்,
சந்தேகப்படும் படியும் தங்களை நோட் செய்துகொண்டும் யாரும்
சுற்றிவருகிறார்களா என்பதை சாதாரண டூரிஸ்ட் மக்கள் போன்ற போர்வையில் வெளியில்
இருந்து கவனிக்க ஆட்களை ஏற்பாடு
செய்திருந்தான்.
அந்த குழு ஆட்களை தொடர்புகொண்டு தன்னுடைய கார் இப்பொழுது பார்ம் ஹவுஸ்
விட்டு புறப்பட்டுப் போனால் தங்களின் ஏரியாவில் இருந்து சந்தேகப்படும் வகையில்
யாரும் தொடர வாய்ப்புள்ளதா என்று கேட்டு இல்லை என்று முடிவானதும் யாழிசையை தன்னுடைய காரில் கூட்டிசெல்வதற்கு பிளான் செய்தவன் மிதுணனை
இமாமியுடன் அவனை பின் தொடரும் காரில் வரச்சொல்லி சொல்லிவிட்டு திரும்பியநேரம்
தலையை விக்கின் உதவியுடன் கிராப் தலையுடனும் டீசெர்ட் ஜீன்ஸ் உடுத்தி அழகிய
மெல்லிய இப்பொழுதுதான் ப்ளஸ்டூ படிக்கும்
ஒரு சிவந்த மருண்ட பார்வையுள்ள பையனில் தோற்றத்தில் வந்துநின்ற யாழிசையை பார்த்த
தீரனின் கண்கள் அந்த உடையிலும் மறைக்கமுடியாது தெரிந்த அவளின் வளைவு சுளிவுகளை
கண்டவனின் இதழ்கள் எதையோ நினைத்து குறும்பான சிரிப்பொன்றை உதிர்த்தது.
அந்த ஒரு நிமிட யாழிசையின் மீதான தன்னுடைய குரும்புப்பார்வை பொய்யே
எனும் வகையில் அடுத்து அவனின் நடவடிக்கைகள் மாறிநின்றான். அதனைதொடர்ந்து அவர்களை
யாரும் தொடரவில்லை என்று நினைத்துகொண்டு பயணம் மேற்கொண்டான் தீரன்.
ஆனால் அவன் அங்கிருந்து கிளம்பி சரியாக பதிமூன்றாவது நிமிடம் பிராங்
கோயம்புத்தூர் ஏற்போர்ட்டில் தரை இறங்கிய நேரம் அவனின் மொபைல் செயலிழந்து இருந்த
நேரம் அவனிடம் தீரன் தன்னுடன் ஒரு குழுவை கூட்டிக்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி
பயணம் செய்துகொண்டிருக்கும் விபரத்தை தெரிவிப்பதற்காக தொடர்பு கொண்டு அது முடியாது
போனதால் என்ன செய்ய என்று யோசனையுடன் டூவீலரில் ஒருத்தன் அவர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.
அதேநேரம் யாழிசையின் அப்பா கணேசப்பிள்ளை, சத்தியமூர்த்தி மற்றும்
இன்னும் அவருக்கு நெருக்கமாணவர்கள் நம்பகமாணவர்கள் இருவருடன் கோயம்புத்தூரில் உள்ள
அட்ரசுக்கு மிதுணன் அனுப்பிய விபரங்களை வைத்து அதை நோக்கி பயணித்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் கோயம்புத்தூர் வீட்டில் இருக்கும் வகுலா பருகும் ஜூஸில்
அவள் மயக்கமடையும் வகையில் வஸ்த்து கலந்து கொடுக்கப்பட்டதை அறியாமல் பருகிக் கொண்டிருந்தாள்,
தீரனினால் அனுப்பப்பட்ட அவ்வீட்டின் வேலையாள் போர்வையில் இருந்த
இமாமியின் நண்பன் தனக்கு தீரன் இட்ட வேலையை கச்சிதமாக முடித்த திருப்தியில் அவள்
மயக்கமடைந்ததும் அக்கதவை வெளிப்புறம் இருந்து பூட்ட காத்திருந்தான்.
யாழிசையிடம் தீரன் பயணத்தின் போது இனி இப்படித்தான் யாழிபேபி என்று
தனக்கு முன்னாலும் பின்னாலும் போகும் கார்களை காண்பித்து இப்படி செக்யூரிட்டி
டீமுடன் என்னுடன் மட்டுமே உன்னுடைய
டிராவல் இருக்கும்.
நீ இதிலிருந்து எஸ் ஆகணும் என்று நினச்சு இப்போ அங்க பார்க்கும் உங்க அப்பாவிடம் நான் உங்க கூட வரப்போறேன்.
என் கூட இருக்க இஷ்டமில்லை என்று சொல்லிட்டு உன் நிலைமையை அவங்கட்ட சொன்னா ரிஸ்க்
உனக்குத்தான் எனக்கில்லை என்றான்.
நீ பணத்தை பிராங்கிடம் இருந்து கொள்ளயடிச்சேல்ல அதனால அவன் உன்னைத்தேடி இந்தியாவுக்கே இப்போ
ஏர்போர்டில வந்து இறங்கிட்டான் .
நீ என் பாதுப்பை விட்டு வெளியேறினா உன்னையும் உன்னை சுத்தி
இருக்கிறவங்களையும் முடிச்சுடுவான் அந்த
பிராங் என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் டென்சனான யாழிசை இன்னொருதடவை என்னை பார்த்து
பணத்தை கொள்ளையடிச்ச என்று சொன்னீங்க நான் பொல்லாதவளா மாறிடுவேன் என்று மூக்கின்
முனி சிவக்க கூறினாள்.
இல்லைதான் அந்த பணத்தை நீ தொட்டுகூட பார்கலதான் ஆனா அதைச் சொன்னா யாரும்
ஒத்துக்க மாட்டாங்களே பேபி.
நீ மட்டும் நான் சொல்றதுக்கெல்லாம் ஒத்துலைச்சேன்னா ஐ மீன் என் வேலை
இந்தியாவில் முடியறவரை லிவிங் டுகதர் லைப்புக்கு ஓகே சொன்னால் நான் இந்தியாவிட்டு
போகும் போது உன் லைப் டைம் புல்லா லக்சூரியஸா மில்லினியர் வாழ்க்கை வாழ நான்
ஏற்பாடு செய்றேன் என்றான்.
அவனின் வார்த்தைகள் யாழிசையின் மனத்தை அத்தனை வலிக்கச்செய்தது. தான்
வளர்ந்த விதத்தில் தன்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்கும்படி ஆகும் என்று அவன்
நினைத்துகூட பார்க்கவில்லை.
இத்தனை காலம் ஆண் பெண் இருவருக்குமான ஒழுக்கக்கோட்பாட்டில் அதாவது
திருமணமான கணவரை தவிர மற்றவர்களிடம் வார்த்தையில் கூட சற்றும் விதற்பமாகப்
பேசுவதுகூட மகா பாதகமான செயலாக போதித்து அடிமனதில் அது சரியே என்று ஊறிய
அர்த்தத்தில் வாழ்ந்து வரும் தன வாழ்க்கையின் போக்கே தீரனை கண்டதும் அவனால்
மாற்றபடுவதை கண்டு அத்தனை மனச்சஞ்சலத்துக்கு ஆளானால்.
எனவே அவள் தீரனிடம் "இனி ஒரு தடவை இதுபோல் என்னிட்ட கேட்டு என்னை உயிருடன்
கொள்ளாதீங்க மிஸ்டர் தீரன்.
உங்களின் அமெரிக்க மக்கள் கூட எங்க கலாச்சாரத்தை பார்த்து வியந்து இப்போ பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்க..
ஆனா
அங்கிருந்து இங்கு வந்தவங்க அவங்களின் வசிதிக்காக எங்க புனிதமான கலாச்சாரத்தை உல்லாசவாசிங்க
கூட கை கோர்த்து மார்டனானவங்க ரொம்ப அட்வான்ஸ் ஆனவங்கன்ற போர்வையில் போலி நாகீகத்தில் புரண்டுகிட்டு இங்கிருக்குறவங்கள மாத்திக்கொண்டிருக்கீங்க.
உங்க அம்மாவிடம் இதுமாதிரி யாராவது கேட்டிருந்தா சும்மா விட்டுருப்பீங்களா?
என்று கேள்வி கேட்டாள்.
நோ யாழி எந்த ரீசனுக்காகவும் மை மாம் பற்றி நெகடிவா எதுவும் என்கிட்டே
பேசிவிடாதே அது உனக்கு நல்லதில்லை என்றான்.
உதடு மட்டும் அசைத்து அலட்டாமல் அமைதியா ஒரு ஜெயிண்டை போன்ற தோரணையில்
பேசும் அவனின் வார்த்தைகள் மட்டும் கூர் தீட்டிய கத்தியைபோல் இருப்பதை கண்டவள்
இவன் என்னமாதிரியான ஆள் என்றும்
அவனை எதிர்க்க முடியாமல் அவனின் வார்த்தைக்கு
எதிர்வாதம் செய்ய தடை விதிக்கும் தனது அட்ரினல் சுரப்பிகளின் அதிகப்படியான
வேலையைகண்டும் அவன் மேழும் அதைவிட அதிகமாக அவளுக்கு அவள் மீதுமே கோபம் வலுத்தது.
.
அவளின் கோபன் கண்ட தீரனுக்கு புருவச்சுளிப்பு ஒன்று உண்டானது. அவன் ஹேய் இப்போ
எதுக்கு இவ்வளவு எமோஷனளாகுற. டோன்ட் ஸீன் கிரியேட் என்று நிதானமாக கூரியவன் அவளிடம்.
எனக்கு உன் மேல் ஒரு கிரஸ் உண்டாகிருச்சு. நீ என்னை டிஸ்டப் பண்ற சோ
நான் உன் விருப்பத்தை கேட்டேன். உனக்கு இஷ்டமில்லாட்டி நோ...சொல்லிடு தட்ஸால் வொய்
ஆர் யூ ஆங்ரி என்று நிதானமாக பேசினான்.
அம்புட்டு வில்லத்தனத்தையும் மனசுக்குள்ள வச்சுட்டு பார்பதற்கு
நிதானமா பெரிய ஜெயின்ட் மாதிரி அமைதியான அவனின் அராஜகத்துக்கு விளக்கம் கொடுக்கிறவனை
பார்த்தது நெஞ்சம் கொதித்தது.
அவன் தன்னிடம் இப்படி நடந்துகொள்வதற்கு அவனை ஏதாவது செய்யணும் என்ற
வெறியும்...., ஆனால் எதுவும் தன்னால் செய்யமுடியாத இயலாமையும் சேர்த்து அவளுக்கு
எரிச்சல் எரிச்சலாக வந்தது.
அதன் பின் அவனின் முகம் காண இஷ்டமில்லாமல் சாலையை வெறித்தபடி
அமர்ந்திருந்தாள் யாழி
தீரனோ மொபைலில் தன் இமாமியை அழைத்தது எல்லாம்
ஓகேயாகத்தானே போயிட்டு இருக்கு என்று கேட்டான்.
அதற்கு இமாமி ஒரு பைக் ரொம்ப நேரமா நம்மை பாலோ பண்ணிட்டே வருகிறது .மேலும்
அவன் டிரை செய்துட்டே இயர்போனில் யாரிடமோ பேசிகிட்டே வருகிறான். அதுதான் அவன் மேல்
டவுட்டா இருக்கு அவனை என்ன செய்ய என்று கேட்டான்.
ஜாக்கியிடம் சொல்லி கவனிக்கச்சொல்லு
என்று கூறிவிட்டு இன்னும் சில விசயங்களை அவனுடனும் மற்றவர்களுடனும்
பேசிக்கொண்டே கோயமுத்தூர் வீட்டை அடைந்தனர்.
கோயம்புத்தூரின் அவுட்டரில் அவ்வீடு அமைந்திருந்தது மதில் சுவர்கள்
உயரமாக உள்ளே உள்ள வீடு தெரியாதவாறு பெரிய கோட்டைச் சுவருடன் இருந்தது.
தீரனின் கார் அருகில் வந்ததும் அவ்வீட்டின் கதவுகள் திறந்துகொண்டன.
கேட்டைவிட்டு 20 அடி தொலைவில் இருந்த அவ்வீடு. வீட்டிற்குள் நுழைந்ததும் அந்த
வீட்டின் நேர்த்தியும் வடிவமும் அவ்வளவு அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது.
ஆனால் அவளின் கைபிடித்து கம் பாஸ்ட் என்றபடி அவளை இழுக்காத குறையாக
வேகமாக முன்னால் சென்றவனின் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடிவந்தவளுடன்
அங்கிருந்த ஒரு அறைக்குள் அவளுடன் நுழைந்தான்
பின் அவளிடம் “உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள இந்த மேக்கப்பெல்லாம்
கலைச்சிட்டு இந்தா” என்று ஒரு பிக் ஷாப்பறை அவளிடம் நீட்டி இந்த மேக்ஸ்சியை
போட்டுட்டு வருற.
உன்னை பார்க்க இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துடுவாங்க நீ ரெடியாகாட்ட
நான் உன்னை ரெடிபன்னவேண்டியிருக்கும் குயிக்.. என்று அவளை அந்த ரூமின் பாத்ரூமிற்குள்
முதுகைப் பிடித்து தள்ளிக்கொண்டே போய் உள்ளேவிட்டு வெளியில் வந்து கதவை அடைத்தான்.
அவள் ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவுடன் அந்த அறையில் கதவை திறந்து அவன்
முன் ஹாலுக்கு வரவும் அங்கு கேட்டில் பத்திரிக்கைகாரர்கள் கூடிவிட்டதை சொல்ல அவனை
நோக்கி மாதவன் வேகமாக வந்தான்.
அவன் வருவதை கொண்டே ஏதோ இஸ்யூ வாசலில் போய்கொண்டிருப்பதை உணர்ந்தவன்
கேள்வியாய் புருவம் உயர்த்தினான்.
சார் ரிப்போர்டர்ஸ் உள்ள ஆட்கள் இருக்கிறோம் என்றத தெரிஞ்சுகிட்டு
மினிஸ்டர் ஏவிவிட்டிருக்கார் என்றான்.
அவன் சொன்னதும் அழகுநிலா வீட்டில் இருந்து அவங்க அப்பா வரும் நேரம்
இதை எப்படி அவாய்ட் செய்ய என்று நினைத்தவன். ஒருநிமிடம் யோசித்து பின் சைண்டிஸ்ட்
தன்வந்திரி வரவழைத்திருந்த அவரின் தமிழ் நாட்டு நண்பரை அழகுநிலாவின் சார்பாக
ரிபோர்டர்களிடம் பேசச்சொன்னான்.
மற்றொருவனை மிதுனனுடன் அனுப்பி அந்த வீடு இருக்கும் தெருவின்
முக்குலேயே வானவராயர் வரும் காரை நிறுத்தி ஏதாவது மிதுனனை அவர்களிடம் இங்கிருந்த
ரிபோர்டர்களை அகற்றும் வரை பேச்சுக்கொடுக்கச் சொன்னான்.
தீரனின் டீமில் சைண்டிஸ்ட் தன்வந்திரி மூலம் சேர்க்கப்பட்ட குணசீலனுடன்
பிளாக் கலர் உடையில் பூனைபடை கெட்டப்பில் அவருக்கு பாதுகாப்பாக இருவருடன்
வெளிவந்து அங்கு குழுமியிருந்த நிருபர்களிடம் இன்னும் யாழிசை வரவில்லை என்றும்
அவர்கள் ஓரிரு நாட்களில் வந்துவிடுவதாகச் சொன்னார்கள் என்ற குணசீலன் தொடர்ந்து பேசினான்
எனவே அவங்க என்னோடு அனுப்பிய டீமோடு சேர்ந்து வீட்டின்
பாதுகாப்புக்கும் அவர்கள் வருவதற்குள் உள்ளே தகுந்த பராமரிப்பு ஏற்பாட்டை செய்யச்சொல்லி
எனக்கு வேலைகொடுத்திருக்கிறாங்க என்று கூறி அனுப்ப பார்த்தார்.
மேலும் ரிபோர்டர்கள் யாழிசையின் பியான்ஷி பற்றியும் சேர் மார்கெட் இன்வெஸ்மென்ட்
பற்றியும் அடுக்கடுக்காக கேள்வி கேட்டதையடுத்து அவரின் காதில் மாட்டியிருந்த புளூ
டூத்தின் உதவியுடன் உள்ளிருந்து தீரன் கூறிய பதில்களை அவர்களுக்கு சொல்லிவிட்டு
பாதுகாப்பு டீமின் நான்கு பேரை கொண்டு அந்த ரிபோர்டர்ஸ் கூட்டம் அகற்றப்பட்டது.
அவ்வாறு அகற்றுவதற்கு மறைமுகமாக அங்கு கூடியிருக்கும் பத்திரிகை
நிரூபர்களின் அலுவலத்தின் மேலித்திடம் மகேஸ்மால்கோத்ரா பணத்தின் மூலம் விலை பேசி
அவர்களின் நிருபர்களை அந்த பங்களா வாசலில்
இருந்து உடனே விலகிச் செல்லும்படிச் செய்யப்பட்டது.
அந்த பங்களாவின் பின்புறவாசல் மலங்காட்டோடு முடிந்திருந்ததால் அவ்வாசலை நிரூபர்களால்
அணுகமுடியாதவாறு இயற்கை அரணாக இருந்தது..
மிதுனன் தலையில் கட்டுடன் அவர்களின் கண்களில் மாட்டாமல் அப்பொழுது
வேகமாக ஒத்தையடி பாதையாக அவர்கள் செல்வதற்கு தோதாக காட்டில் ஒருவர் நடந்துசெல்ல
பாதையமைக்க கையில் இருந்த மரக்கட்டை
வெட்டும் இயந்திரம் கொண்டு அதிவேகமாக வெட்டப்பட்டு பாதை உருவாக்கப்பட்டு அக்காட்டை
விட்டு வெளிவந்து பக்கத்து தெருவை அடைந்தனர்.
மிதுனன் சொன்ன அட்ரசுக்கு பாதிவழியில் வானவராயர் வந்துகொண்டிருக்கும்
போது வந்த மொபைல் அழைப்பை யோசனையுடன் எடுத்து காதிற்கு கொடுத்தார்.
வானவராயர் அய்யா நான் மிதுனன் பேசுறேன் என்று அவன் கூறியதும்.இதோ
இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க வந்து சேர்ந்திடுவோம் மிதுனா என்று கூறினார்.
அய்யா நீங்க நேரா நான் சொன்ன அட்சுக்கு வராதீங்க. அந்த அட்ரஸ்
இருக்கிற தெருவுக்கு முன்னாடி வருற காட்டோட சேர்ந்து ஒரு வளைவு இருக்கு பாருங்க
அங்க நிப்பாடுங்க நான் நேரில் வந்து உங்களை பார்த்து பேசணும் என்றான் மிதுனன்.
எனவே அவன் சொன்ன இடத்தில் சற்று தள்ளி மரநிழலில் காரை நிறுத்தி
மிதுனனுக்காக காத்திருந்த யாழிசையின் அப்பா கணேசப்பிள்ளை மற்றும் வானவராயரும்
அவரது நண்பர்களும் அந்த ஏரியா ஊரின் கடைகோடியில் மலைபகுதியின் அடிவாரத்தில் அமைந்திருந்த அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பங்களாக்கள் இருக்கும் சூழல் மற்ற பொழுதுகளில் பேரமைதியாக இருக்கும் என்பது
புரிந்திருந்தாலும்
இன்று அவ்வாறு இல்லாமல் டூ வீலர்களில் கேமிராவும் கையுமாக
சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்வத்தையும் அதனை தொடர்ந்து போலீஸ் தலைகளும்
ஒன்றிரண்டு ஆங்காங்கே தென்படுவதைக் கண்டும் எதோ நிலவரம் சரியில்லை என்பதை மட்டும்
உணர்ந்துகொண்டனர்.
அவங்க கார் மட்டும் அனாமத்தாக நிற்பதை அவ்வாறு போகும் சிலர்
யோசனையுடன் பார்ப்பதை பார்த்த வானவராயர் நாம இங்கன இப்படி நிக்கிறது சரியில்லைன்னு
நினைக்கிறேன். போலீஸ் காரன் வந்து இப்போ எதுக்கு இங்கன நிக்கிறீங்கன்னு விசாரிக்கப்
போறான்.
அதனால வண்டியை எடுக்கலாம் மிதுனன் இங்க வந்துட்டா எப்படியும் நமக்கு போன் பன்னுவான் அப்போ
வரலாம் என்று கூறியபடி காரின் எஞ்சின் ஸ்டார்ட் ஆகிய நேரம் மிதுனனின் தலை தென்பட்டதால் அணைக்கப்பட்டது.
மிதுனனுடன் வெளிநாட்டவன் ஒருத்தனும் வந்திருந்தான் அவன் வேறு
யாருமில்லை இமாமிதான்.
நிமிர்ந்துபார்க்கு உயரத்தில் ஆப்பிரிக்காகாரனுக்கு உள்ள
முகத்தோற்றமும் நிறம்மட்டும் சற்று வெளிறி. அவன் உடுத்தியிருந்த டிராக்சூட்
மற்றும் பனியன் மறைக்க முடியாமல் தெரிந்த அவனின் எய்ட்பேக் உடலையும்
பார்த்தவர்கள் மிதுணனை விட்டு ஆச்சரியமாக அவனையே பார்த்தனர் வானவராயரின் கூட
வந்தவர்கள்.
ஆனால் கணேசப்பிள்ளை மட்டும் மிதுனன் என் பொண்ணு எப்படி இருக்கிறாள்
என்று யாழியைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் படபடப்புடன் கேட்டார்.
அதில் மிதுனனின் பக்கம் அனைவரின் கவனம் திரும்பியவேளை எல்லோரும் காரில்
ஏறுங்க கொஞ்சதூரம் டிரைவிங் செய்துட்டே பேசலாம் என்று கூறவும் காரில் ஏறினர்.
இடம் பற்றாக்குறையில் இடித்துபிடித்துகொண்டு உட்கார்ந்த நிலையில் மிதுனன்
தலை காயத்தின்மீதிருந்த கட்டை பார்த்து
நடந்த விஷயத்தை சத்திய மூர்த்திமூலம் அறிந்ததிருந்த வானவராயர்.
சத்தியமூர்த்தி வாஞ்சையுடன் மிதுனனின் அருகில் இடம் பற்றாக்குறை
காரணமாக நெருங்கி உட்கார்ந்திருந்தாலும் வாஞ்சையுடன் மிதுனனின் தலை காயத்தை
மற்றவர்கள் தெரியாமல் இடித்துவிடக்கூடாது என்று தனது கைகளால் அவன் தலையின் அருகில்
தடுப்புபோல் பிடித்திருந்தவரை பார்த்துக்கொண்டே மிதுனனிடம்.
இப்போ உன் காயம் ஓரளவு சரியாகிடுச்சா மிதுனா...?என்று கேட்டதும்
மிதுனன் கூறினான்.
எனக்கு தலையில் ரொம்ப மோசமா அடிபட்டிருந்தது. இவ்வளவு வேகமா நான் ரெகவராகி
இப்போ உங்க கூட பேசிட்டு இருக்கிரதுக்குக் காரணம் மிஸ்டர் தீரன் தான்.
அவர் டீமில் உள்ள டாக்டர்ஸ் ரொம்ப திறமையாகவும் அக்கரையோடும் தீரனின்
உத்தரவின் பேரில் என்நேரமும் அவங்களின் கண்காணிப்[பில் என்னை வைத்து
கவனித்ததால்தான் நான் வேகமா இந்த காயத்தில் இருந்து ரெகவர் ஆக முடிந்தது.
ஆனால் என்ன இப்படி காயப்படுத்திய மினிஸ்டர் ரெங்கராஜன் இப்போ சி.என்.ஜி சார்பாக
அதுக்கு எதிரா போராட்டம் செய்யப்போற நம் எல்லோர் மீதும் நடத்தபோற தாக்குதலை நினைச்சா
என் மனசே பதறுது.
என்றுகூறிகொண்டிருக்கும் போது இமாமிக்கு ரிபோர்டர்களை பங்களா வாசலில்
இருந்து அப்புரப்படுத்தியாச்சு வானவராயறையும் அவர் கூட வந்திருப்பவர்களையும்
கூப்பிட்டுக்கொண்டு வரும்படி இன்பார்ம் வந்தது .
அவன் மிதுனனிடம் எல்லோரையும் வரச்சொல்றாங்க காரை திருப்பச்சொல்லுங்க
மிதுனன் எல்லோரையும் நான் செக் பண்ணனும் அவங்கட்ட எந்த வெப்பன்சும் இல்லை என்று
பங்களாவுக்குள் நாம் போறதுக்குள் ரிபோர்ட் சப்மிட் பண்ணனும் கொஞ்சம் எல்லோரையும்
கோவாப்பரேட் பன்னச்சொல்லுங்க மிதுனன் என்றான்.
இமாமியின் வார்த்தையை மீறமுடியாமல் அவனின் தோற்றமும் என் நிலையில்
இருந்து நான் மாறமாட்டேன் என்கின்ற பாவத்தில் இருந்த அவனின் முகம் மற்றும் பாடி
லாங்க்வேஜூம் மற்றவர்களால் அவனுக்கு ஒத்துளைப்பதை மறுக்க முடியவில்லை என்றாலும்
காருக்குள் மேலும் இறுக்கமான மனநிலை அனைவருக்கும் உண்டானது.
தீரன் கொடுத்த பிக் ஷாப்பர் பேக்கில் இருந்த அந்த லாங் மேக்சி யாழிக்கு
மிகவும் பொருத்தமாக இருந்தது
அவள் அங்கமெங்கும் மூடியிருந்தாலும் அவளின் வளைவு சுளிவுகளை அப்படியே
பிரதிபளிப்பதாக இருந்தது.
எனவே மனதில் இதுக்கு மேல போட ஒரு ஷால் இருந்தால் நல்லா இருக்கும்... இப்படியே
எப்படி எல்லோர் முன்னாடியும் போய் நிக்க..! என்று யோசனையுடன் அவள் அந்த ரூமில்
இருந்த டிரஸ்சிங் டேபிளில் முன் நின்றுகொண்டு இருக்கும்போது கதவை திறந்துகொண்டு உள்ளே
வந்த தீரனுடன் ஸ்டீபனும் இருந்தான்.
தீரனோ அவளை விழுங்குவதுபோல் பார்த்தானென்றால். அவனுடன் வந்த ஸ்டீபனோ
அவளை பார்த்து “வாவ் யுவர் பியான்ஷி இஸ் கார்ஜியஸ் ஷி ஹவ் beautiful கேர்வ்ஸ்
தீரன்.யூ ஆற் லக்கி “.என்று கூறினான்.
அவனின் தொழில் முறையை கொண்டு அழகை ஆராதிக்கிறான் என்று தீரனுக்கு
தெரித்தது .
இருந்தாலும் அவன் கண்கள் அவன் மேனியின் ஆழகை ரசித்தது தீரனுக்கு
உவப்பானதாக இல்லை.
மேலும் அவன் அவ்வாறு சொல்லும் போது டிரஷிங் டேபிளின் முன் இருந்து
இவர்களை திரும்பி பார்த்த யாழிசைக்கும் ஸ்டீபன் பார்வையும் பேச்சும் உவப்பானதாக
இல்லை என்பதை அவளின் சுளித்த முகத்தை கொண்டே தெரிந்த தீரனுக்கு ஏனோ அவளின்
அச்செயல் சந்தோசத்தை கொடுத்தது.
எனவே ஓகே ஸ்டீபன் ஐந்தே நிமிசம் கூட இல்லை அவளை வேகமா ரெடி பண்ணு
என்றான் ஆங்கிலத்தில்
அவன் அவ்வாறு சொன்னதும் யாழிசை வேகமாக தீரனை பார்த்து “இங்க பாருங்க
தீரன் எதுக்கு அவர் என்ன ரெடி பண்ணனும் நானே ரெடியாகிப்பேன்.
அன்னைக்கு பார்டி இருந்தது அதனால இவர் ரெடி பண்ண ஒத்துகிட்டேன்.
இங்க வர முன்னாடி நான் வேஷம் போட வேண்டியிருந்தது அதனால அவர் என்ன
ரெடி பண்றதுக்கு நான் ஒத்துகிட்டேன்.ஆனா இப்போ அதுக்கான அவசியமில்லை நானே
ரெடியாகிப்பேன் ஆனா இந்த டிரஸ்க்கு மேட்ச்சா ஒரு ஷால் மட்டும் குடுக்கச்சொல்லுங்க
நான் இப்படியே எல்லோர் முன்னாடியும் வந்து நிற்க ,முடியாது” என்று படபடவென
பொரிந்தாள்.
அவளின் இந்த தன்மையும் எதற்காக அவள் ஷால் கேட்கிறாள் என்பதையும்
நொடியில் புரிந்துகொண்ட தீரனின் உள்ளத்துக்கு ஏனோ அவளை இன்னும் பிடித்துப் போனது.
எனவே அவன் அவளிடம் “பேபி நீ இங்க அடிக்கடி ஸ்டே
பண்ணவேண்டியிருக்கும்,
அதனால இங்க இருக்கும் போது உடுத்த டிரஸ் ஸ்டோர் செய்து வச்சிருக்கேன்... கபோர்டில் இருக்கும்,
என்னுடைய பியான்சியா எல்லோரின் முன் நிற்கும் போது ரிச்சா தெரியனும்
அதற்காகத்தான் ஸ்டீபன் கொண்டு எல்லா ஏற்பாடும் செய்தேன்.
அதோ அந்த கபோர்டில் உன் டிரஸ் கலெக்சன் இருக்கு அதில் இருந்து உனக்கு
இதன் மேல போட ஏதாவது கிடைத்தால் எடுத்துக்க.
அப்போ பார்டி தவிர மத்த நேரம் ஸ்டீபனோட ஹெல்ப் உனக்கு வேண்டாம்மில்ல
என்று கேட்டதும் அவள் தலை ஆமாம் வேண்டாம் என்னும்விதமாக ஆடியது..
இவ்வளவு நேரமும் இருவரும் தமிழிலேயே பேசிகொண்டிருந்ததால்.ஸ்டீபனுக்கு
இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் இருவரின் முகத்தையும் மாறிமாறி
பார்த்துகொண்டிருந்த ஸ்டீபனிடம்
ஓகே ஸ்டீபன் நீ போகலாம் அவளே ரெடியாகிவிடுவாள் என்று கூறி அனுப்பிவைத்தான்.
அங்கு டிரஷிங் டேபிளின் மேல் ஸ்டீபன் கொண்டுவந்த மேக்கப் கிட்டை
பிரித்து பார்த்த யாழி அதில் முகத்திற்கு மாய்சரைசர் கிரீம் மற்றும் ஐலைனர் ஆகிய
இரண்டினை மட்டும் எடுத்தாள்,
அவளின் இமைமுடியும் நீண்ட
அழகிய கண்ணுக்கு மை தீட்டி பொட்டு இல்லாததால் அதை கொண்டே நெற்றியில் சிறிய
பொட்டிட்டு அவளின் கொண்டையிட்ட கூந்தலை விரித்துவிட்டு சிறிய கேட்ச் கிளிப்பின்
உதவியுடன் முடியெடுத்து பின் செய்தவள் விரித்திருந்த முடியை போண்டிடேயில் அடக்கப் போனாள்
அவ்வளவு நேரம் அவ்வளவு துரிதமாக அவள் செய்த எளிமையான மேக்கப்பிலேயே அவளின் இயற்கை அழகு ஜொலித்ததில் ஆச்சரியமடைந்த தீரன் அவளின்
நீண்ட கருத்த அலையலையாய் புரளும் கூந்தலின் அழகை அவள் பேண்டின் உதவியில் கட்டிப்போடுவதை
பொருக்க முடியாமல் அவளின் அருகில் வந்து
தீரன் கூறினான் "ம்..கூம் இப்படியே லூஸ் ஹேராகவே இருக்கட்டும் என்று கூறிக்கொண்டிருக்கும்
போது முன் ஹாலுக்கு வானவராயர் வந்துவிட்டதுக்கான மெசேஜ் டோன் அவனுக்கு வந்தது
அதனால் அவனின் ரசனையான முகபாவம் மாற்றிவிட்டது அந்த கபோர்டில் இருந்து
ஒரு நகை பெட்டியை எடுத்து அவளின் கையில் கொடுத்தவன் நான் ஹாலுக்குப் போறேன் யாழி
என்றவன் அங்கிருந்த கார்ட்லெஸ் போனை காண்பித்து உன்னை அதில் நான் வெளியில் போன கொஞ்ச
நேரத்தில் வரச்சொல்வேன்
இந்த பாக்ஸ் எடுத்துட்டு நீ ஹாலுக்கு அப்போவே வந்துடு
என்று கூறிவிட்டு அவளின் பதிலை கூட கேட்காமல் விரைந்து வெளியேறினான்..
தீரனுக்கு வானவராயரை இப்போ நடந்துகொண்டிருக்கும் அவனின் சி.என்.ஜி
ப்ராஜெக்ட்க்கு எதிரான செயல்பாடுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்
யாழிசையின் வாழ்வை பின்னாளில் தான் சிக்கலில்லாமல் காப்பாத்தி
அப்படியே முழுவதுமா உங்களிடம் ஒப்படைத்துவிடுவேன் என்று சொல்வதற்கும்
தனது அம்மா கொடுக்கச்சொன்ன பரம்பரை நகையை அவரிடம் ஒப்படைக்கவும் தான்
அவரை வரவைத்திருக்கிறோம்
பாசப்பயிரைய் வளர்க்க இல்லை என்றும் தான் திடமாக இருக்கவேண்டும்
என்றும் அவனுக்கு அவனே சொல்லிகொண்டாலும் அவனுக்கும் மனதின் ஓரம் வானவரையரை பார்க்க அதிர்ந்துகொண்டிருப்பதை வெளியில்
துளியும் காண்பிக்காமல் விறைப்பாகவே ஹாலுக்குச் சென்றான் தீரன்.
அவன் நடந்து வரும் தோரணையை அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்த
வானவராயர் சற்று திரும்பி பார்த்தார் .
தான் ஆடா விட்டாலும் தன் தசையாடும் என்பதை
அவர் அந்நேரம் உணர்ந்தார்.
தீரன் செய்யும் வேலை அவருக்கு உவப்பானதாக இருந்தாலும் செய்துகொண்டிருக்கும்
முறையும் அதில் மற்றவர்களை ரிஸ்கான நிலையில் தள்ளியிருக்கும் செயலும் அவருக்கு
உவப்பானதாக இல்லை
எனவே அவனிடம் இலக்கம் காண்பிக்காமல் தவிப்புடன் அமர்ந்திருக்கும்
கணேசபிள்ளையின் சார்பில் அவனிடம் நன்றாக கேள்வி கேக்க வேண்டும் என்று நினைத்து
வந்ததெல்லாம் ஒருநிமிடம் அவரின் புத்தியை விட்டு எங்கோ ஓடிப்போய்விட்டது.
தன்னுடைய மகன் அதுவும் கம்பீரமான மகன் அதுவும் அவனின்
கட்டுப்பாட்டிலும் ஆழுமையிலும் ஒரு ஆர்மியை ஒத்த கூட்டத்தை
உருவாக்கிவைத்திருக்கும் அசகார சூரன் போன்ற தன்மையுள்ள அவன் அவரின் மகன்
அவனை காணும் அந்த வேலை அவருக்கு அவனின் தன்மை நிமிர்வு அழகு எல்லாம்
கண்டு தன மகன் என்ற பூரிப்பே மேலெழுந்து
அவனை தன்னுடன் ஆரத்தழுவிக் கொள்ளவேண்டும் என்ற உத்வேகமும் அவனில் தனது
முதல் மனைவி பத்மினியையும் கண்டவர் தேகம் ஒருவினாடி பரபரப்பில் அதிர்ந்து
அடங்க்கியது..
ஆனால் அவன் அருகில் நெருங்குவதற்குள் அவனின் முகத்தில் இருந்த
இறுக்கம் அவரை நிதானப்படுத்தி தன்னை கட்டுக்குள் வைத்துகொள்ள முடிந்தது.
வந்தவன் எல்லோரின் முன்பும் நின்று தமிழில் பேசினான் எல்லோருக்கும்
வணக்கம் நான் தீரமிகுந்தன் ப்ரம் அமேரிக்கா. நீங்களும் உங்களை இன்றோ கொடுத்துட்டீங்கன்னா
அடுத்து நாம் உங்க கூட்டத்தில் நடக்கபோற நம்ம எனிமிகளால் நடத்தபோற கலவரத்தை பத்தி பேசிடலாம் என்று கூறினான்.
அவன் அவ்வாறு சொன்னதும் கணேசபிள்ளை வேகமாக நாங்க பொறுமையா உட்கார்ந்து
உங்ககிட்ட பேசறதுக்கு முன்னால எனக்கு என் மகளை பார்க்கணும் என்றார்.
அவனுக்கு அவர் யாரென்று தெரிந்தது இருந்தாலும் அவன் தெரியாதமாதிரி
உங்க மகளா யார்..? நீங்க யாரை உங்க மகள் என்று சொல்றீங்க...? என்று கேட்டான்.
அதில் டென்சனான சத்தியமூர்த்தி என்னதம்பி இப்படி பேசுறீங்க அவங்க
அவங்க மகள் யாழிசையைதான்பா கேக்குறாங்க.
அவளை உங்க கூடத்தான் வச்சிருக்கீங்கன்னு அன்னைக்கு நான்கூட பார்த்தேனே
என்று கூறினார்.
அவர் கூறிய மறுநிமிசம் வானவராயரும் இங்க பாருப்பா எங்க கண்ணுள்ள அந்த
பிள்ள யாழிசைய நீ காமிச்சாத்தான் உன் கூட வேற எந்த விஷயத்தை பத்தியும் நாங்க பேச
ஆரம்பிப்போம் இலையின்னா என்று பேசிக்கொண்டே போனவரை
ஒருநிமிஷம் மிஸ்டர் வானவராயர்...! ,உங்களுகென்ன அவளை பார்க்கணும், அவ்வளவுதானே.
நான் அவளை வரச்சொல்றேன்.ஆனா அவளை இங்க இருந்து உங்க கூட கூட்டிபோக
உங்களால முடியாது என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் நீங்க இப்படி சொன்னா அதுக்கு நாங்க
பயந்துருவோம்னு நினைக்காதீங்க தீரன்.
உங்ககூட இருப்பதையோ எங்க கூட வருவதையோ யாழிசைதான் முடிவு பண்ணனும்
என்றார்.
இருவரும் முதல் முதலில் பார்க்கின்றனர் இருவரும் அப்பாவும் மகனும்
என்பது இருவருக்கும் தெரிந்தும் துளிகூட தங்களின் சலனத்தையோ அப்பா மகன் என்ற
ரீதியான உறவையோ வெளிக்காண்பிக்காமல் அழுத்தமாக பேசினர்.
தீரனுக்கு இதேபோல் வேறுயாரும் அவனின் முன் பேசியிருந்தால் முடிஞ்சா
என்னை மீறி கூட்டிட்டு போய் பாரு என்று சொல்லியிருப்பான்.
ஆனால் வானவராயரின் நிமிர்வைப் பாத்தவன் தனக்கு இந்தமாதிரியான நிமிர்வு
இவரிடம் இருந்துதான் கிடைத்திருக்கு என்று மனதிற்குள் ஓர் குரல் எழும்ப அவரிடம்
வேறு எதுவும் பேசாமல் இன்டர்காம் உதவியுடன் யாழிசைக்கு தொடர்பு கொண்டு.
அவர்களுக்கு முன் அவள் அவனுக்கு உரிமையானவள் என்று கூறாமல் கூற
நினைத்து பேப் என்று அழைத்தான்.
ஏனோ யாழிசையால் அவனின் மற்றோர் தன் மீதான அவனின் அணுகுமுறையை
பார்த்தபிறகு அவளால் அவனுடன் காதலாக இருக்க பிடிக்காமல் போய்விட்டது.
அனவே அவள் அவனின் பேப் என்ற பேபியின் சுருக்கத்தை தாங்கமுடியாமல் என்னை
இப்படியெல்லாம் கூப்பிடாதிங்க எனக்கு பிடிக்கல என்று பல்லைக் கடித்துக்கொண்டு
கூறினாள்.
தீரனின் எதிரில் இருப்பவர்களுக்கு அவள் என்ன சொன்னாள் என்பது
தெரியாதல்லவா
அந்த நிலையில் அவள் கூறியதை கேட்ட தீரன் உல்லாசமாக கம்பீரமாக கடகடவென் சிரித்தவன் ஓகே
டியர் கம் பாஸ்ட் நான் உனக்காக வெயிட்பன்னிட்டு இருக்கேன். என்றான்.
அவனின் பேச்சை கேட்டபடி முன்னால் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அவ்வளவு
நேரமும் இறுக்கமான முகத்துடன் தனக்கும் சிரிப்புக்கும் சம்பந்தமே இருக்காது என்று
இருந்தவனின் முகத்தில் அவளுடன் பேசும் பொழுது மட்டும் அவன் முகம் மலர்ச்சியாகவும்
அவன் கம்பீரக்குரலிலும் ஒரு குழைவு உண்டாகியிருப்பதையும் அவனின் கேலியான
பேச்சிலும் அவன் அவனுடையவளிடம் பேசுவதாகவே அவர்களுக்கு முடிவெடுக்கத் தோன்றியது.
அவளிடம் பேசிவிட்டு மொபைலை வைத்தவன் எக்ஸ்கியூஸ்மி என்றபடி அவள்
எழுந்து அந்த ஹாலுக்கு அருகில் வரும் நேரத்தை கணக்கிட்டு அவளை எதிர்கொண்டு
கூட்டிக்கொண்டு வர விரைந்தான்.
அவள் அந்த ஹாலின் வாசலுக்கு தன் கையில் அவன் எடுத்துவைத்திருந்த அந்த
ஜுவல்பாக்சுடன் வந்தவளின் எதிரில் நின்றவன். லோவாய்சில் அவளிடம்.,
யாழி.. நீ என்னைவிட்டு போறேன்னு சொன்னா நடக்கபோற ஆர்பாட்டத்தில் இங்க
வந்திருக்கிற எல்லோருடைய உயிரும் போய்டும் ஜாக்கிறதையா பேசு என்று கூறியவன்.
கீப் ஸ்மைல் பேபி என்றவன் ஆங்கிலேயர் பாணியில் தன் கையோடு அவள் கை
கோர்த்து ஹாலுக்கு வர அவளின் கை பிடித்து அதில் தன்னுடைய கையை கோர்த்து அவளுடன்
இணைந்து ஹாலில் உட்கார்ந்திருந்தவர்களின் முன் வந்தான்.
----தொடரும்----

No comments:
Post a Comment