anti - piracy

Post Page Advertisement [Top]


பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை..![தீபாஸ்-ன்]
அத்தியாயம்-2-37
                          


ரங்கராஜன் தோப்பு வீட்டில் மற்றவர்கள் வெளிநிலவரங்க்களைப் பார்க்க போனதும் பிராங் பரபரப்பானான்.

காரணம் தீரன் இங்கு வந்ததை கண்டே வெளியில் இருந்த ரங்கராஜனின் நிலையை  அவன் ஓரளவு யூகித்துகொண்டான்.

மேலும் தீரன் சொல்லிச்சென்ற டெவில் மார்க் இன்னும் சில மணிநேரத்தில் தன்னை போட்டுத்தள்ள இங்கு வருவதாக சொன்னது அவனை மிகவும் கலவரப்படுத்தியிருந்தது.

எனவே அவன் வேகமாக தான் தங்கியிருந்த அறைக்குச் சென்று தன்னுடைய பொருட்களை பேக்பேக்கில் அள்ளிப் போட்டுகொண்டு மார்க் அவனை அங்கு வந்து பிடிப்பதற்குள் எஸ் ஆகிவிட அவசர அவசரமாக ரூமை விட்டு வெளியில் வந்தான்.

கலெக்டரிடம் பேசிகொண்டிருக்கும் போதே தொடர்பு கட்டாகியதால் திரும்ப இருதடவை மொபைலில் தொடர்புகொண்டு அது சுவிட்ச் ஆப் என்று வந்ததுமே எதுவோ சூழ்நிலை எல்லாம் தனக்கு எதிராக திரும்பவதுபோல் அவருக்கு தோன்ற ஆரம்பித்தது.

ஆழம் தெரியாமல் சி.என்.ஜி விவகாரத்தில் காலைவிட்டுவிட்டோமோ...?என்ற கேள்வியும் பாரின் கரன்சிக்கு ஆசைப்பட்டு இப்போ நம்மளோட பதவிக்கே பக்கம் வந்துருச்சோ என்ற யோசனையுடன் தனது மகன் சக்ரவர்த்திக்கு மொபைலில்தொடர்பு கொண்டார்.

ம்...சொல்லுங்கப்பா என்ற சக்ரவர்த்தியிடம்.’சக்ரவர்த்தி நடக்கறது எதுவும் சரியா படல நீ என்ன செய்ற வீட்டில இருக்குற முக்கியமான சொத்து பத்திரம் நகைநட்டு காசுபணத்த எல்லாம் யாரும் வந்து சோதனை போட்டாலும் எடுக்க முடியாத இடத்தில வச்சுடு

அப்படியே அம்மாவையும் தங்கச்சியையும் உங்க பாட்டி வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு நீ வெளிநாடு எங்கயாவதுபோ...! போகுறதுக்கு முன்னாடி நம்ம வக்கீல் கிட்ட ஒரு அமோவுன்ட் குடுத்துட்டு எதுவும் பிரச்சனையானா என்னை உள்ளவைக்கறதுக்கு முன்னாடி  ஜாமீன் கிடைக்கிறதுக்கு வழிபண்ணச் சொல்லு என்று கூறிக்கொண்டே அவர் உள்ளே வருவதற்கும் பிராங் கிளம்பி ரூமை விட்டு தனது பேக்பேக்குடன் வெளியே ஹாலுக்கு வரவும் நேரம் சரியாக இருந்தது.

வெளியில் வந்தவன் ரங்கராஜனை பார்த்து ஆங்கிலத்தில் நான் சென்னை போகணும் உடனே இங்கிருந்து அதற்கு ஏற்பாடு செய்ங்க என்றான் பிராங்.
உடனே ரங்கராஜன் அப்பொழுது அவனின் ஆட்களின் நிலை மற்றும் அவரது வருங்கால மருமகனின் நிலை அதனை தொடர்ந்து அவருக்கு எதிரான சூழ்நிலை மாற்றம் முதலியன  அவரை மூர்க்கத்தனமாக மாற்றியிருந்தது.

எனவே கெட்ட...கெட்ட...வார்த்தையால் பிராங்கை திட்டியவர். ஒழுங்கா இப்போ அவனை நம்பி போட்ட திட்டத்துல நான் மாட்டியிருக்சுரதுக்கு ஒரு நல்ல விலையை கொடுத்தா அவன் இங்கிருந்து உயிரோட போகமுடியும் என்று சொல்லு அந்த வெள்ளை பண்ணிகிட்ட என்று கூறினார் தனது பி.ஏவிடம்.

யாழிசை, வகுலா இருந்த அறையின் கதவை திறந்த நொடி அவளை ஏறிட்டு பார்த்த வகுலா எழுந்தமர்ந்தாள்.

மே.ஐ..கம் இன் என்று தயங்கியபடி கேட்டவளை தலை அசைவிலேயே உள்ளே வரச்சொன்னாள் வகுலா.

அவளின் கண் யாழிசையை மேலிருந்து கீழாக யோசனையுடன் அளவெடுத்துக்கொண்டிருக்க யாழிசையும் அவளை யோசனையுடன் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள்.

யாழிசையின் மருண்ட விழியும் அவளின் அரிதாரமில்லாமல் இருக்கும் அழகிய முகமும் கண்டவள் அவள் தமிழ் நாட்டுப்பெண் என்பதையும் கண்டுகொண்டாள். மேலும் தன்னிடம் பேச அவள் தயங்குவதை கண்டு,

வாங்க உக்காருங்க என்று அவளின் வீட்டில் தமிழிலேயே பேசுவதால் அவளுக்கும் தமிழ் பழக்கமான மொழியாகவே இருந்ததால் சரளமாக பேசினாள்.

அவளின் தோற்றம் கண்ட யாழிசை அவளுக்கு தமிழ் தெரியாது என்றே நினைத்தாள் யாழிசை,

ஆனால் அவள் தெளிவாக தீரனை விட சரளமாக தமிழ் பேசுவதை கண்டதும் அவளும் அவளிடம் ம்...என்று தலையசைத்தபடி அந்த படுக்கையின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்

மீட்டிங் முடியும் நிலையில் தீரனின் மொபைலுக்கு யாழிசை மேலிருந்த வகுலாவின் அறைக்குச் செல்வதாக மெசேஜ் வந்தது.

எனவே அவனால் அதற்கு மேல் அங்கு தான் நின்றால் வகுலா ஏதாவது சொல்லி குழப்பி விடுவாளோ...! என்ற டென்சன் அவனுக்கு உண்டானது. அவனுக்கே அவனின் டென்சன் திகைப்பை கொடுத்தது

ஏனெனில் உலக பொருளாதாரத்தை ஆட்டிவைக்கும் பெரும்முதலைகளுக்கே ஆட்டம் காண்பிக்கும் அவன் யாழிசையின் பொருட்டு டென்சனாவதை கண்டு அவனது உதடுகளில் இளமுறுவல் பூத்தது.

ஏற்கனவே தீரன் தனக்கு யாழிசை மீது காதல் உள்ளதை அவளிடம் சொல்லாது அவளை தன்னவளாக அவளின் மறுப்பையும் மீறி எடுத்துகொண்டதால் சஞ்சலத்தில் இருக்கும் யாழிசை மனதை மேலும் ஏதாவது சொல்லி வகுலா குழப்பிவிட்டுடுவாளோ என்ற பதட்டம் உண்டானது.

எனவே அவன் அங்குள்ளவர்களிடம் முக்கியமாகப் பேசவேண்டியதை பேசி முடித்ததான். மாதவனைக் கூப்பிட்டு கூட்டத்தை முடிக்க சில கட்டளைகளை வேகமாகச் சொல்லியவன் அங்கிருந்த வானவராயர் முதலியோரிடம் ஒரு அர்ஜன்ட் வொர்க் அதனால நான் கிளம்புகிறேன் என்று சொல்லிட்டு அவர்கள் பதிலை கூட பெறாமல் வேகமாக வந்து வகுலாவின் அறையை ஒரு மேனர்சுக்கு கூட தட்டாமல் படீர் என்று திறந்து தள்ளினான்.

ஆனால் அவன் திறக்கும் போது வகுலா யாழிசையிடம் நான் தீரனின் பியான்சீ என்று சொன்னது மட்டும் தெளிவாக அவனின் காதில் விழுந்தது.
அதனை கேட்ட தீரன் வேகமாக யாழிசையின் அருகில் வந்தவன் அவள் கையைப் பற்றி எழுபிக்கொண்டே வகுலாவை பார்த்து ஷி இஸ் மை வொய்ப். என்னோட வாழ்கை கடைசிவரை என்னுடனே இருக்கபோகின்றவள் .

யூ ஆர் மை பாஸ்ட்.. உனக்கும் எனக்கும் இடையில் உள்ளது எல்லாம் எப்போவோ முடிஞ்சுடுச்சு அதை முடிவுக்கு கொண்டுவந்ததே நீதான் இப்போ உன்னை இப்போ பிராங்கின் பிடியில் இருந்து காப்பாத்தி கூட்டிக்கொண்டு வந்ததற்கு காரணம் உன் அம்மா என்னிடம் உன்னை பத்திரமா பார்த்துக்கோ தீரா என்று சொன்னதுனாலத்தான்.

என் அம்மாவுக்கு அடுத்து நான் மதிக்கும் ஒருத்தர் ஆண்டி விசாலி அவங்களுக்காக உன்னை நான் காப்பாத்தினேன். நாளைக்கு உனக்கு USA போக பிளைட் டிக்கட் எடுத்துருக்கேன் கிளம்புற வழியைப்பாரு என்று கூறினான்.

மேலும் அவளிடம் அவ்வாறு சொல்லிக்கொண்டே யாழிசையை எழுப்பி நிறுத்தியவள் அவளின் கைகோர்த்து தன்னுடன் இழுத்தபடி வாசல்நோக்கி போய்கொண்டே எதுனாலும் என் கிட்டத்தான் நீ கேட்டிருக்கணும். இப்படி வந்து அவளிடம் கேட்பது ம்..கூம் சரிகிடையாது.என்று யாழிசையிடம் கூறுவது வகுலாவின் காதில் விழுந்தாலும் அவளின் புத்திக்குள் எட்டவில்லை.

தீரனின் இழப்பு இப்பொழுது வகுலாவுக்கு பூதாகரமாக தெரிந்தது. தீரனிடமும் அவள் இந்தியா வந்ததும் சிறைபட்டிருந்தாள். அதே நேரம் பிராங் இந்தியாவந்ததும் அவனாலும் சிறை பிடிக்கபட்டாள் வகுலா.

தீரனுடனும் சிறிதுகாலம் காதலில் இணைந்திருந்தாள். அதேபோல் பிராங்கிடமும் காதல் என்ற பேரில் காமத்தில் இணைந்திருந்தாள்.

தீரனின் காதலும் கண்ணியமாக இருந்தது அக்காதலும் அழுத்தமாக இருந்தது.அதேபோல் அவன் சிறைபடுத்தியபோது அவளைச் சுற்றி ஆண்களின் வலையத்திற்குள் இருந்தாலும் அவளின் சுதந்திரம் பறிக்கபட்டாலும் அவளின் உடமைகளை இழந்தாலும் அத்தனை ஆண்களுக்கு மத்தியில் பெண்ணவளின் பெண்மைக்கு எந்த ஆபத்தோ அத்துமீறல்களோ நடக்கவில்லை.

ஆனால் பிராங் தன்னிடம் காதல் என்றபேரில் கொண்ட கலவியிலும் கண்ணியமில்லை.அப்பொழுது அவனின் மேல் உள்ள பணமோகத்திலும் இளமைவேகத்திலும் அவனோடு இழந்திருந்த தருணங்களின் நினைவுகளை.அவன் சிறைபடுத்தியபின் அனைவரின் முன்னும் தன்னை தனது பெண்மையை துகிலுரித்திக் காட்டி அவமானமாக அவனுடன் கழித்த நாட்களை அருவருப்பாக மாற்றியதையும் நினைத்துபார்த்தாள் வகுலா.

காவல் தெய்வத்தின் கம்பீரத்தையும் கடினத்திலும் கண்ணியமும் கொண்ட தெய்வத்தின் அம்சமானவன தீரனை

அழகான தோற்றமுள்ள சாத்தானின் உள் மறைந்திருக்கும் அகோரமான முகமுள்ள பிராங்குடன் சேர்ந்து தீரனை வதைக்க நினைத்த தனது முட்டாள்தனத்தை நினைத்து வருந்தினாள்.

தீரன் யாழிசையை வகுலா இருந்த  அறைக்குள் இருந்து வெளியில் கூடிக்கொண்டுவரும் வரையே அவனது இறுகிய முகம் கண்டாள் .

வெளியில் வந்த மறுநொடி அவனின் முகம் முழுவதும் சிரிப்பு மற்றும் ஆனந்தத்திலும் மலர்ந்து போனது.

அவன் அவளின் இடுப்பில் கை போட்டு தன்னுடன் இணைத்து பிடித்து நடந்து கொண்டே ஹேய் பேப் ஆர் யூ ஜெலஸ். நீ என்னை என்னமோ பண்ற. உன்னை நினைக்கும் போதும் நீ என்னுடன் இருக்கும் போதும் எதோ ஒரு குட்பீல்.

எனக்குன்னு ஒருத்தி என் கூட கடைசிவரைக்கும் துணையா இருக்குற ஒருத்தி நீயா மட்டும்தான் இருப்பாய்...! என்று  என்னுடைய ஹார்ட் சொல்லுது.

எனக்குத் தெரியும் நீ என் மேல் கோபமா இருக்க என்று. உன்னை நான் உன்னைக் கேட்காமலே என்னுடைய பிரச்சனையில் கொண்டுவந்துட்டேன்.

என்று அவளிடம் மனம்விட்டு மெதுவாகப் பேசிக்கொண்டே அவர்களின் ரூம்வரை கூட்டிவந்துவிட்டான்.

தீரன் அழுத்தமாக அதே நேரம் அலட்டல் இல்லாமல் வகுலாவிடம் நெஞ்சில் தைக்குமாறு பேசிக்கொண்டே தன்னையும் பிடித்து இழுத்து கேள்விகேட்டுகொண்டே வகுலாவின் அறைக்குள் இருந்து வெளிவந்த தீரன்

அவளின் இடுப்பில் கைகோர்த்து அவனுடன் சேர்த்து பிடிக்கும் போது அவனிடமிருந்து விலக முயன்றவள்,

அவனின் மலர்ந்த முகமும் அதன் பின் அவளிடம் உதிர்த்த ஹேய் பேப் ஆர் யூ ஜெலஸ் என்று அவளின் மனதில் உள்ளதை அவனிடம் அவள் மறைக்க நினைப்பதை சொன்னதுமே அதிர்ந்து அவனின் முகம் பார்த்தவள்

அதன் பின் அவன் உதிர்த்த வார்களுக்கு செவி கொடுத்து அவளை அறியாமலே அவனின் குரலின் காந்தத்தில் ஈர்க்கப்பட்டு அவனோடு இணைந்து அவர்களின் ரூம் வாசல்வரை வந்துவிட்டாள்.

அவள் ரூம் விட்டு வெளியேறியதுமே ஆட்டோ லாக் ஆகியிருந்த அவர்களின் அறை அட்டை கீயை எடுத்து அதனை பொருத்தும் இடத்தில் கோர்த்தவன் மறுநிமிடம் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு டோரை கால்களால் எத்தி திறந்து உள்சென்று காலினாலேயே கதவை அடைத்தான்.

திடீரென்று தன் கால்தரையில் படாதவாறு கைகளில் தீரன் அள்ளுவான் என்று அவள் சற்றும் எதிர் பார்க்காததால் அதிர்ந்து அவனின் சட்டையே இருக்கபிடித்து அவனின் நெஞ்ஜோடு முகம்புதைத்து ஒன்றிக்கொண்டாள்.

அவன் தனக்கு மட்டும் பொல்லாதவன்தான். இருந்தாலும் அவனிடமே தன் நெஞ்சம் தஞ்சம் அடைவதை நினைத்து அவளுக்கே அவளின் மேல் கோபம் எழுந்தது.

அவனின் மேல் உண்டான விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே தத்தளித்தவளுக்கு அவன் தன்னை தூக்கியிருக்கும் விதம் கண்டவளுக்கு சில மணி நேரத்திற்கு முன் அவன் தனது கைகளில் வகுலாவை தூக்கிவந்து நினைவில் ஆடியது.

அவளை பெட்டில் விட்டவன் இப்போ தெரியுதா உன்னை தூக்கியதற்கும் அவளை தூக்கியதற்கும் உள்ள வித்தியாசம் என்றான்.

அவனின் மார்போடு தன்னை அனைத்து தூக்கிவந்ததையும் வகுலாவை சிரமப்பட்டு அவளின் அங்கங்கள் அவனது மேனியில் படுவதை தவிர்க்கும் எண்ணத்தில் துண்டாக கையில் தீரன் ஏந்தி வந்ததும் அவளின் நினைவில் ஆடி ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.

மறு வினாடியே.... ஆனா அவங்க அந்த வகுலா உங்களின் பியான்ஷி என்று சொன்னாங்க என்னையும் அப்படித்தானே என்று சொல்லபோனவளின் வாயில் தனது கை வைத்து மூடியவன்

நோ பேபி...நான் அப்படி உன்னை செய்திருக்க கூடாது. நான் முதலில் உன்னை வைத்து என் அப்பாவிடம் பேசவும் அவரிடம் என் மாம் குடுக்கச்சொல்லிய என்றவன் அவளின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை தூக்கி காண்பித்து இதையும் ஜமீனின் பரம்பரை நகையும் கொடுக்கத்தான் உன்னை அப்ரோச் செய்தேன்.

ஆனால் உன் பேங்க் பாஸ்புக் தற்செயலா என் கையில் கிடைச்சு அதை நான் எனக்கு சாதகமா யூஸ் பண்ணி என்னனென்னவோ ஆகி உன் மேல நான் பைத்தியமாகி உன்னிடமட்டும் தப்பு... தப்பா பேசி சாரி...சாரி...சாரி...பேபி.

உன்னைய சி.என்.ஜி பிரச்சனைக்குள்ள நான் கொண்டுவந்த பிறகு எனக்கு உன்னை தனியா விட முடியல அப்படி விட்டா உன்னைய இல்லாமல் ஆக்கிடுவாங்க.

அதனாலத்தான் உன்னை என் கூட வச்சுருக்க முடிவெடுத்தேன். ஆனா மனசு முழுவதும் நீ அருகில் இருக்கும் போது உன் மேல என்னை அறியாமல் உண்டான ஈர்ப்போடு போட்டி போட முடியாமல்த்தான் தப்பு தப்பா பேசுனேன்.

அதுவும் அன்னைக்கு நம்மளோட என்கேஜ்மன்ட் அனவுன்ஸ் பண்ணிய இரவு நாம் தன்வந்தரி மற்றும் உங்க அங்கிள் சத்தியமூர்த்தி எல்லோரும் பேசிய பிறகு உனக்கு என் மீது நீ வெளியே வராமல் அழுத்தி வைத்திருந்த லவ்வை உன் கண்கள் காட்டி கொடுத்துடுச்சு.

அந்த ஹேர் டிரையர் என் நெத்தியில் பட்டதா நெனச்சு நீ அன்னைக்கு உனக்கே வலிச்சமாதிரி பீல் பண்ணி உனக்கு என் மேல உண்டான லவ்வ எனக்கு உணர்த்திய நொடியும், நான் கொடுத்த முத்தத்துக்கு நீ கிறங்கி வழிந்து நின்றதும் இன்னும் என் நெஞ்சை தொட்டு காட்டி பத்திரமா இருக்கு என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும் அப்போவே என் மனசிலுள்ளதை எப்படி கண்டு புடுச்சீங்க.... என்று அவனின் அணைப்புக்குள் அவளை தீரன் கொண்டு வந்ததை கூட உணராமல் அவனின் பேச்சில் அதில் இருவருக்குமான காதலை இதுவரை பகிர்ந்துகொள்ளாத வார்த்தைகளை அவன் பேசியதில் லயித்து கேட்டாள் யாழிசை.
                        ----தொடரும்---


1 comment:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib