anti - piracy

Post Page Advertisement [Top]


பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை..![தீபாஸ்-ன்]
அத்தியாயம்-2-38
                             


      தீரன் தனது கை வளைவில் அவளை கொண்டுவந்தவனின் உள்ளம் அவளது மென்மையை உணர்ந்ததால் மேலும் அதில் அமிழ்ந்து போக ஆசை பிறந்தது அவன் கைகளின் அத்துமீறலில் நெளிந்தவள் மேலும் முன்னேறவிடாமல் தடுத்து நெளிந்துகொண்டே நான் கேட்டதுக்கு எதுவும் நீங்க இன்னும் ஆன்சர் பன்னல என்றாள்.

அவளின் முகச்சிவப்பும் தன்னுடைய தொடுகையில் அவள் மேனியில் எழுந்த அதிர்வும் அவனை மயக்கியது இருந்தாலும் அவளுக்கு தான் இப்பொழுது விளக்கம் சொல்லாமல் முன்னேறினால் மேலும் அவள் மனத்தால் தன்னை நெருங்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்து,

அவளை தன் மடிமீது கிடத்தி அவளின் நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கிவிட்டபடி உனக்கு என்ன... என்ன.... கேட்கணும் என்று தோணுதோ மொத்தமா இன்னைக்கே கேட்டுடு பேபி என்றான்.

தன்னை அவன் களவாட நினைக்கும் போது மயங்காது அவனை விளக்கிய யாழிசைக்கு அவனின் தாய்மையான தலை முடி கோதும் செயலிலும் தன்னிடம் அவனின் விளக்கத்தை கூற முன்வந்து சரணடைந்ததும் கண்டு அவனின் மேல் இப்பொழுது அவள் மயக்கம் கொண்டாள்

எனவே அவளின் குரலும் குழைந்தே ஹஸ்கியாகவே வந்தது.  அந்த வகுலா யாரு...? அவங்களுக்கும் உங்களுக்கும் நடுவில் என்ன நடந்ததுங்க என்று கேட்டாள். அவளின் மனம் அவனின் காதலி வகுலா என்று சொல்லகூடாது என்று ஏங்கித் தவித்தது.

அவளின் கேள்வி அதுவாகத்தான் இருக்கும் என்று தெரிந்தும் அவள் கேட்டதும் அவனின் நினைவுகளின் தாக்கத்தில் சஞ்சரித்துகொண்டே தீரன் ஒரு பெருமூச்சோடு கூற ஆரம்பித்தான்.

வகுலாவின் அம்மா விஷாலியும் என் மம்மியும் குளோஸ் பிரண்ட்ஸ் மேலும் இரண்டுபேரும் சேர்ந்துதான் டான்ஸ் ஸ்கூல் நடத்திட்டு வந்தாங்க. வீடும் மாடியில் இருந்த குட்டி போர்சனில் பத்மினியும் தீரனும் கீழ் தளத்தல் இருந்த அப்பெரிய வீட்டில் விஷாலியும் அவளின் டாக்டர் கணவனும் வசித்து வந்தனர்.

நான் பிறந்தது அங்கே அமெரிக்காவில்தான். எனக்கு என் அம்மாவை விட்டால் உறவென்று ஆண்டி என்று கூறும் மற்றொரு நபர் விஷாலி ஆண்ட்டிதான் என்று கூற ஆரம்பித்தவன்

விஷாலிக்கு மகளாக வகுலா பிறந்தபோது தன் அன்னைதவிர தான் உறவாக நினைத்த அவனின் ஆண்ட்டி விஷாலி பாப்பாவை பார்க்கும் போது எனக்கு அத்தனை சந்தோசமாக இருக்கும்.

அவன் ஐந்து வயதில் இருக்கும்போது.... பிறந்த குழந்தையாக வகுலமாளினியை பத்மினியின் தோழியும் அவளில் டான்ஸ் அக்காடமியின் பார்ட்னருமான விசாலி கையில் ஏந்தி வீட்டினுள் வந்தவளை தீரன் ஆசையாக எட்டிப்பார்த்தான்.
   
பன்னீர் ரோஜா இதழ்போன்ற கலரும் மென்மையுமாக பூப்போல இருந்த அவளை ஆவலுடன் தொட்டுபார்த்த தீரன் ஆண்ட்டி, ஷி இஸ் பிரிட்டி, ஐ லவ் ஹெர். டெய்லி நான் ஸ்கூல் விட்டு வந்ததும் பேபியை என்னிடம் கொஞ்சநேரம் தாங்க நான் அவளை பார்த்துகொள்வேன் என்றான்.

அவள் அவ்வாறு கூறிய மறுநிமிடம் விசாலியின் டெலிவரி டைம் உதவியாக இருக்க இந்தியாவில் இருந்து அங்கு வந்திருந்த விசாலியின் விதவை பெரியம்மா நல்லா இருக்கே! நோக்கு  தூக்கத்தெரியாமல் தூக்கி பிள்ளைக்கு ஒன்னுகெடக்க ஒன்னு ஆகிடுச்சோனோ யாருக்கு நட்டம். குழந்தையை தொட்டாவாளுக்கு  பொல்லாதவளாக்கும்  இந்த பட்டுமாமி என்று கூறி சத்தம்போட்டாள் .

பட்டுமாமியின் வார்த்தையில் கோபத்தில் சிலிர்த்துக்கொண்டான் தீரன். தீரன் சிறுவயதில் இருந்தே நெருப்புபோல இருந்தவன் அடிக்கடி அவன் பட்டுமாமியின் வார்த்தைகளால்  பாதிக்கப்பட்டால் நேரடியாகவே மாமியுடன் சண்டைக்கு நின்றான் .

தனது தோழியின் வீட்டில் தன்னாலும் தனது மகனாலும் பிரச்சனை வேண்டாம் என்று எண்ணி டான்ஸ் அக்காடமியின் பில்டிங்கில் இருந்த ஒரு போர்சனிலேயே குடியேறினாள்

அது இருந்த பகுதி செல்வந்தர்கள் வசிக்கும் ஏரியா அங்குதான் பக்கத்துவீட்டில் இருந்த பிராங்க்குடன் தீரனுக்கு நட்பு உருவானது.

சிறுவயதில் பிராங்கும், தீரனும் அடுத்தடுத்த வீட்டில் வசித்தார்கள் என்றபோதிலும் பிராங் தீரனுடன் சேர்ந்து விழையாட அவனது பணக்கார வீட்டு பெரியோர்கள் அனுமதித்ததில்லை. ஆனால் தனது வயதை ஒத்த தீரன் தான் படிக்கும் பள்ளியில் தனது கிரேடில் படிக்கும் தீரனின் துறுதுறுப்பும் சேட்டைகளும் பிராங்கை கவர்ந்தது

பிராங் தீரனுடைய நட்பை பெற்ற பிறகு அவனுடன் சேர்ந்து படிப்பதினால் முன்பைவிட நல்ல மதிப்பெண் பெறுவதையும் உற்சாகமாக இருப்பதையும் கண்ட பிராங்கின் பெற்றோர் முதலில் அந்தஸ்தை காரணம் காட்டி மறுத்தாலும் இப்பொழுது தீரனுடன் பழகுவதை  மறுக்கவில்லை.

ஆனால் பிராங்கிடம் அவனது பெற்றோர் கூறினர், நண்பனாக தீரனிடம் பெரும் உதவிகளுக்கு அவனிடம் பதிலுக்கு நடப்பை கொடு என்பதை கூறாமல் தீரனை யூஸ் செய்து நீ உனக்கு வேண்டியதை சாதித்துகொள், நீ நினைப்பதை தீரன் செய்யவைக்க தீரனுக்கு வேண்டிய பொருளை வாங்கிகொடுப்பதாக டீல் பேசு என்று தவறுதலாக அவனை வழிகாட்டினர்.

அன்றிலிருந்து தீரனுக்கும் பிராங்கிற்கும்  இடையில் உள்ள நட்பு டீலாகவே தொடர்ந்து. தீரனுக்கு அவனின் மூலம் பணம் மற்றும் பொருள் ஆதாயமும். பிராங் நினைப்பதை சாதிக்க தீரனை கருவியாக்கும் பழக்கமும்  இங்கு வரும் வரை பிராங்கிடம் தொடர்ந்து கொண்டிருந்தது.

தீரனின் படிப்பும் கண்ணியமான நடத்தையும் அவனின் திறமையும் கண்ட விசாலி தம்பதியினர் தனது மகள் வகுலமாலினியை தீரனுக்கு மணமுடிக்க ஆசைபடுவதாக பத்மினியிடம் கூறினார்கள்.

பத்மினி தோழி கூறியதை சந்தோசமாக ஏற்றாள். தீரனுக்கு ஏற்கனவே அவளின் மேல் சிறுவயதில் இருந்து ஏற்பட்ட ஈர்ப்பு இன்று வளர்ந்து அழகு மங்கையாக இருபவளின் மேல் ஆர்வமாக மாறியிருந்ததால் தீரனும் அக்கல்யாணம் நடக்கவேண்டும் என்றே  எதிர்பார்த்திருந்தான்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்யலாம் என்று முடிவெடுத்து அதை தெரிவித்ததும் ஆசையுடன் தீரன் அதற்கு ஒத்துகொண்டான்.

இந்நிலையில் தீரனின் என்கேஜ்மேண்டுக்கு வந்த பிராங் வகுலாவின் அழகை கண்டு ஆச்சரியமடைந்தான்.

அழகான எதையும் கண்டால் பிராங் ஆசைப்பட்டு அதனை தன்னுடையதாக ஆக்கநினைக்கும் குணத்தை அறிந்தவன்தான் தீரன். என்றபோதிலும் வகுலா ஒன்றும் பொருள் இல்லையே தான் ஆசையாக அவளை காதலிப்பது பிராங்கிற்கும் தெரியுமே தனக்கே பிராங் துரோகம் செய்ய மாட்டான் என தப்புகணக்கு போட்டான் தீரன்.

ஏற்கனவே அவனை தங்களின் நிச்சயதார்த்தத்தில் பிராங்கை பார்த்ததாலேயும். மேலும் அவனின் செல்வவளத்தையும் மீடியாவில் பிஸ்னஸ் மேகசீனில் அவனின் போட்டோஸ் வெளிவருவதையும் கண்டு இருந்த வகுலா அவனின் செல்வவளத்தையும் கேட்டு பிரமித்து இருந்தாள்.

தீரன் பிராங்கின் நண்பன் என்று தனது தோழிகளிடம் கூறுவதையே பெருமையாக நினைத்த வகுலா, பிராங்கே அவளுடன் பேச முன்வந்ததை கண்டு கிருகிருத்துப்போனாள் எனவே அவனுடன் அவளும் ஆசையாக பழக ஆரம்பித்தாள்.

பிராங்கை தான் முதலில் சந்தித்த விஷயத்தை அவள் தீரனிடம் கூறினாள். அவள் கூறியதைகேட்ட தீரன், பிராங் என்னுடைய நண்பன்தான் என்றாலும் வெளியிடங்களில் அவனை சந்திக்க நேரிட்டால் ஒரு ஹாயுடன் அவனைவிட்டு விலகிச் சென்றுவிடுமாறும் பெண்கள் விசயத்தில் அவன் உத்தமனாக இருக்கமாட்டன் என்று கூறி கண்டித்தான்.

அதை கேட்ட வகுலா, தீரனுக்கு பிராங்கின் மேல் பொறாமை மற்றும் தன் மேல் உள்ள பொசசிவ்வினால்தான் அவ்வாறு கோபப்படுகிறான் என்று நினைத்தாள். அதன்பின் பிராங்குடன் அவளின் சந்திப்பை தீரனிடம் சொல்லாமல் மறைத்து பிராங்குடன் பழக ஆரம்பித்துவிட்டாள்.

அவள் பிராங்க்குடன்  எல்லைகடந்து பழகும் விஷயம் என்னிடம் என் இமாமி போட்டோ ஆதாரத்துடன் காட்டியபோது எனக்கு உடம்பெல்லாம் அப்படியே பத்திக்கிட்டு எரிஞ்சது என்று இப்பொழுதும் அதை நினைத்து தீரன் கோபம் கொண்டான்.

அவளுக்கு என்னுடன் என்கேஜ் ஆகியிருப்பதற்கு முன்னாள் எப்படி இருந்திருந்தாலும் நான் அதை பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன்,

ஆனால் என்கூட என்கேஜ் ஆனபிறகு பப்ளிக் பிளேசில் பிராங்குடன் நெருக்கமாக இருந்திருப்பதையும் அவனுடன் ஒன் நைட் ஸ்டே பண்ணியதையும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.

எனவே அவள் கூட நடக்கவிருந்த கல்யாணம் இனி நடக்காது என்று சொல்லிவிட்டேன் அவளின்  மூச்சு காற்று கூட நான் இருக்கும் இடத்தில் இருக்க நான் அனுமதிக்க கூடாது என்று சொல்லி என்னைவிட்டு  போய்விடச் சொல்லி  கர்ஜித்தேன்.

அந்த வகுலாவிடம் நான்  எல்லைகளை கடக்க அவள் சற்றும் தடை விதிக்கவில்லையே. நெருக்கத்தை அதிகப்படுத்தவே அவள் முயற்சிசெய்திருந்தாள்.

ஆனால் நான்தான் எல்லைகளை கடக்காமல் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டேன்.

கல்யாணத்திற்கு பின்பே அவளை மொத்தமாக எடுத்துகொள்ள விரும்பினேன், அதுவே அவளுக்கு தான் செய்யும் மரியாதை என்று ஓரளவுக்குமேல் போகாமல் என்னை கட்டுபடுத்தி கொண்டேன்.

அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருந்ததுதான் என்  தவறு என்றால் அவள்..உண்மையான லவ் என்மேல் இருந்தால் எப்படி அவளால் வேறு ஒருவனுடன்... முடியும்?

தன்மேல் அவளுக்கு இருந்தது லவ் இல்லையோ...? வெறும் லஸ்ட் தானோ...! என்ற எண்ணமே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது.

ஏனோ லவ் இல்லாத லஸ்ட் எனக்கு  அருவெறுப்பாக இருந்தது. வகுலாவின் மீது கொண்ட லவ்வினாலேயே அவளின்மேல் ஆர்வமும் ஆசையும் எனக்கு உண்டானது.

ஆனால்  அவளின் நடத்தையை தெரிந்து கொண்டவனுக்கு அவளின் மேல் இருந்த ஆசை விலகி கோபம் ,வெறுப்பு ,மற்றும் ஏமாற்றம் முதலியவை உண்டாது.

போட்டோ ஆதாரத்துடன் தனது அம்மா பத்மினியிடம் காமித்தும் வெட்கமில்லாமல் இதிலென்ன தப்பு...! என்றமாதிரி அவளின் பேச்சு இருந்ததையும் என்னால் மன்னிகவோ மறக்கவோ முடியல.

அவள் என்ன சொன்னாள் தெரியுமா  பிராங்கிடம் அவள் நெருக்கமாக இருந்ததை  விமர்சிக்க தீரனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை ஆண்ட்டி என்றாள்,

ஏன்னா... அவள் என்னை அப்படி குளோசா இருக்க அவாய்ட் செய்ததில்லையாம். அவனின் பியான்ஷி நான் என்று வெறுமனே வாய்வார்த்தையாக மட்டும் சொல்லிக்கொண்டு மட்டும் நான் திரிந்தேனாம்.

பிராங் பெரிய மல்டிமில்லினியர் அவள்  ஆசைப்பட்ட இடத்துக்கெல்லாம் கூட்டிகொண்டு போய் அவள் கண் ஆசையாக பார்த்ததெல்லாம்  கேட்காமலேயே வாங்கிகொடுத்தானாம்.

அதுதான் வச்சேன் ஆப்பு அந்த பிராங்கிற்கு இப்போ பிச்சக்காரனா அந்த டெவில் மார்கிடமிருந்து தப்பிக்க ஓடிட்டு இருக்கிறான்.

அவன் கூட அவள் செல்வதை பொறாமையாக மற்றவர்கள் பார்ப்பது அவளுக்கு சந்தோசமா இருந்ததாம். இப்பவும் அவன் கூட ஓடவிட்டுருக்கணும் ஆனா விஷாலி ஆண்ட்டிக்காக பார்க்கவேண்டியிருக்கு,

அவன் அவளை  ஆசையாக பார்த்து அவளோட  அருகாமைக்கு மயங்கினான் என்று என்னிடமே சொன்னாள்.

அவளுக்கும் எனக்கும்   நிச்சயம் ஆகாததற்குமுன் அவள் பிராங் பார்த்திருந்தால் கண்டிப்பாக அவளிடம் மேரேஜ் ப்ரோபோஸ் செய்திருப்பதாக கூறியிருப்பானாம்

மேலும், என் அருகாமையில் பியான்ஷி என்ற நிலையில் இருந்தும் கூட மயங்காமல் என்னுடன் இணையாமல் ஒதுக்கிய தீரன் எங்கே?

என் அருகில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னை தொடாமல் இருக்க முடியாமல் என்மேல் காதலாக இருக்கும் பிராங் எங்கே!.

அவளை  லவ் செய்யும் பிராங்கிடம்  அவள் செக்ஸ் வச்சுகிட்டது அவளுக்கொன்றும் தவறாக தெரியவில்லை என்றாள்.

இதற்காக என்னுடன் கல்யாணத்தை வேண்டாம் என்று தீரன் மறுப்பதால் எனகொன்றும் நட்டமில்லை. இவ்வளவு நடந்தபிறகும் என்னிடம் மேரேஜ்க்கு ப்ரொபோஸ் செய்யாமல் பிராங் இருப்பதற்கு காரணம் தீரனுடன் எனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமே.

இப்பொழுது தீரனுக்கும் எனக்கும்  இடையே உள்ள திருமண நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டது என்றால் உடனே பிராங் என்னை மேரேஜ் செய்துகொள்ள சம்மதித்துவிடுவார். எனக்கு இத்திருமணம் நின்றதால் நட்டம் கிடையாது என்று வகுலா கூறியதுவரை யாழிசையிடம் கூறினான் தீரன்.

தீரன் இதுவரை அவனின் உணர்வுகளை யாரிடமும் வெளிபடுத்தியதில்லை.

கம்பீரமாக எதையும் தைரியமாக எதிர்கொண்டு தனது உணர்வுகளை யாரிடமும் வெளிக்காட்டாமல் எப்பொழுதும் கூலாக இருப்பதுபோன்று காண்பித்துக் கொள்ளும் தீரன் முதல் முதலாக யாழிசையிடம் தன் மனதில் உள்ள பாரத்தை கூறினான்.

யாழிசை ,முதலில் தீரன் அவனின் சின்ன வயது கிரஸ் என்று சொன்னதை கேட்க அவளுக்கு அவ்வளவு கஷ்ட்டமாக இருந்தது .

ஆனால் அவன் பேசும் தோரணையே அவன் வகுலாவால் காயப்பட்டிருகிறான் என்று தெரிந்ததும் அவனின் மனம் காயப்பட்டது இவளுக்கு வலிப்பது போன்ற உணர்வை கொடுத்தது.

எனவே அவனின் கை வளைவில் இருந்தவளின் கரம் அவனின் சிகையை கொத்தி அவனை ஆசுவாசபடுத்த அவளை அறியாமலேயே முயன்றது.

அதில் கொஞ்சம் மனமிளகிய தீரன் அவளின் கரத்தை பற்றி தனது நெஞ்சில் வைத்து அழுத்தி பிடித்தபடி அவனது நண்பனாலும் காதலியாலும் ஏமாற்றப்பட்டதை கேட்டு அவளின் கண்கள் கண்ணீரை சொரிந்தன.

வகுலா மேலும் முகம் தெரியாத அந்த பிராங் மேலேயும் அவளுக்கு அத்தனை கோபம் எழுந்தது

சொல்லிமுடித்து, அந்த கனத்த பாரத்தை அவளிடம் இறக்கிவைத்தவனின் கலங்கிய முகத்தை கண்டவளுக்கு அவனின் வேதனையை தான் தாங்கிகொள்ளவேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.

எனவே முதல் முதலாக அவளாக அவனின் சிரம் பிடித்து இழுத்து தனது நெஞ்சோடு சேர்த்து அழுத்திகொண்டவள் அதுதான் இப்போ நான் இருக்கேனே உங்களுக்கு அந்த சுயநல பிராணிகளோடு உங்கள் லைப் தொடரலையே என்று சந்தோசப்படுங்க தீரன்.

காசுபணம் மத்ததெல்லாம் அன்பு என்ற ஒன்றுக்கு முன் அற்பமானது என்று சாத்தான்களுக்குத் தெரியாது என்றாள்.

அவனுக்கு அவளின் அணைப்பும் ஆறுதல் பேச்சும் உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற வார்த்தையும் அத்தனை இதத்தையும் சுகத்தையும் அவனுக்கு கொடுத்தது

அவனது உதடுகள் எஸ் பேபி... ஐ.ஆம் ஆல்ரைட் நவ், என்றவன் தேகமும் அவளின் அன்பினாலும் அவளின் மனம் போன்ற மென்மையான தேக ஸ்பரிசத்தாலும் மேலும் உணர்ச்சிபிடியில் சிக்கி அவளின் அணைப்பினால் உண்டான இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் போதாமல் அவன் அவளை வளைத்து இறுக்கி தன்னோடு பொதித்துகொள்வதுபோல் இறுக்கி அணைத்தான்.

யாழிசை மனதில் குடியேறியிருந்த தீரனின் தன்னுடனான முரண்பாடான நிலைகண்டு அவனை விலக்கிவைக்க நினைத்தவள் அவனின் சரணடைதலில் மீண்டும் அவளுக்கு அவள் மனதினுள் அழுத்தியிருந்த காதல் மெல்ல எழும்ப ஆரம்பித்தது.

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறியவர்கள் தீரனின் அலோசனைபடி மிகத் தீவிரமாக தங்களிடம் கொடுக்கப்பட்ட பல பிரதிகள் எடுக்கப்பட்ட பென்டிரைவ்களில் கலவரத்தின் போது போலீஸ் மக்களை சூட் செய்ததை பல கோணங்களில் பதிவிட்டிருந்தத்தையும்

மினிஸ்டர் ரங்கராஜனின் அடியாட்கள் என்று அவர்களின் பெயரோடு மினிஸ்டரின் பின் அவர்கள் பாதுகாப்புக்காக முன்பு சென்ற போட்டோகளையும் அவர்கள் கூட்டங்களில் கலவரம் மேற்கொண்டபோது எடுத்த போட்டோக்களையும் நேம் முதல்கொண்டு மென்சன் செய்து எடுத்த வீடியோ பதிவுகளும்.

மற்றும் ரங்கராஜன் சி.என்.சிக்கு எதிராக திட்டமிட்ட பதிவுகளும் தமிழ்நாடு முழுக்க இன்டர்நெட்டின் உதவியுடன் ஒரே நேரத்தில் வாட்சப்,பேஸ்புக்,டுவிட்டர் என டிக்டாக் வீடியோ பதிவு வாயிலாக you டியூப் வாயிலாகவும் வெளியிட புறப்பட்டனர்.

மேலும் வெளியில் இவர்கள் கிளம்பிகொண்டிருகும் போது ரங்கராஜனின் வருங்கால மாப்பிள்ளை என்று சொல்லப்பட்ட தற்போதைய அந்த ஏரியாவின் கலெக்டர் தார்மீகப் பொறுப்பேற்று தனது வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மீடியாக்களின் பார்வையும் அரசாங்கத்தின் பார்வையும் நம்ம மினிஸ்டர் ரங்கராஜனின் பார்வையும் மொத்தமாக கலெக்டர் பக்கம் இருக்குமாறு மிதுனனின் மிரட்டலில் சரணடைந்த கலெக்டர் பேட்டிகொடுக்க எடுத்துக்கொண்ட நேரத்தைத்தான் வீடியோ ரிலீஸ்க்கு பயன்படுத்திகொண்டனர்.

வீடியோ வெளிவந்த மறுநிமிடம் தமிழ்நாடே கலெக்டர் பேட்டியுடன் வெளியான வீடியோக்களை கண்டு கொந்தளிச்சு போயிடுச்சு.

ஒரு ஊரை கட்டுபடுத்த மட்டுமே ராணுவத்தை இறகியிருந்த வேலையில் தனி நாட்டிற்க்கு இணையான மக்களை கொண்ட தமிழ் நாடே போலீஸ்க்கு எதிராகவும் ஆளும் கட்சி அமைச்சர் ரங்கராஜனுக்கு எதிராகவும் திரண்டு கோயமுத்தூரை நோக்கி படை எடுக்க ஆரம்பித்தது.
விஷயம் கைமீறிப்போனதால் வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டில் ஆட்சியே கலைக்கப்பட்டது.

மேலும் கலெக்டர் ராஜினாமா செய்ததால் நேர்மையான கறைபடியாத கலெக்டர் மக்களின் போராட்டத்தினால் அங்கு போஸ்டிங்க்கு வரவைக்கபட்டது.

அவரின் தலைமையில் ஒரு போலீஸ் குழு ரங்கராஜனின் தோப்பு வீட்டிற்குள்ளேயே அதிரடியாக நுழைந்தனர்.                     ---தொடரும்---

3 comments:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib