பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா...!
வணக்கம் நட்பூக்களே ;
நான் ஒருசில நாட்களில்
என்னுடைய புதிய கதை பேசும் கண்ணுக்கு
என்னை புரியாதா.....! என்ற தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை உங்களுக்கு கொடுக்க உள்ளேன்.அதனை தொடர்ந்து
தினந்தோறும் அடுத்தடுத்த அத்தியாங்களை கொடுக்க உள்ளேன்.இக்கதையின்
நாயகன் :நிலவரசு.
நாயகி:கீதவாணி.
அதிரடியான
நிலவரசனுக்கு முயல்குட்டிபோன்ற சுபாவம் கொண்ட கீதவாணியின் மேல் காதல் வருகிறது. அக்காதலால் அவளின் வாழ்கையில்
உண்டாகும் மாற்றங்களையும் அதில் மிரண்டு போய் பதுங்கும் முயல்குட்டியை நிலவரசன்
தன்னுடைய அன்பால் தன்னிடம் நெருங்க வைக்கிறான்.
கீதவாணி அதிரடியாய்
தனது வாழ்வில் புகுந்த சிங்கம போன்ற நிலவரசனின் மென்மையான மறுபக்கத்தை உணர்ந்து
அவனின் அன்பிற்கு கட்டுபடுகிறாள். பின்பு கீதவாணி வேட்டையாடும் சிங்கம் போன்ற குணமுள்ள
நிலவரசனை தனது காதலால் சமூகத்தில் மதிப்புமிக்க மனிதனாக மாற்றி, அவனை பார்த்து
பயத்தால் மரியாதை கொடுத்தவர்களை அவனின் நல்ல குணத்தால் மரியாதை கிடைக்குமாறு
செய்கிறாள்.
இந்த கதையை என்னுடைய
பாணியில் குடும்பம் பாசம் அன்பு காதல் முதலியவை கலந்த கலவையாக கொடுக்க உள்ளேன்
.நண்பர்களே இக்கதைக்கு உங்களின் ஆதரவுகளையும் கருத்துக்களையும் என்னுடன்
பகிர்ந்துகொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் என்னுடைய முதல்
கதை பெண்ணே என்மேல் பிழை இது
வேறு ஒரு தளத்தில் ஒருவருடம் முன் வெளிவந்தது அக்கதையை மீண்டும் புதுபொலிவுடன் நாளையில்
இருந்து இத்தளத்தில் பதிவிடப்போகிறேன் அதனையும் படித்து உங்களின் கருத்துக்களை
மறக்காமல் கொடுக்கும் படி என் நட்பூக்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
என்றும் நட்புடன் ,
தீபாஸ்.
Hi mam,love ur stories.i lik 2 read ur story பெண்ணே என்மேல் பிழை" in this site,cn u give?
ReplyDelete