பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா...!
(தீபாஸ்-ன்)
அத்தியாயம்-15
நிலவரசனுடன் காரில் அவனின் அருகில் புது
மனைவியாய் அவனுக்கே அவளாய் அமர்ந்திருந்த கீதவானியின் மேல் நிலவரசனின் பார்வை அழுத்தமாக
பதிந்தது.
அவனுக்குள் உல்லாசம் பிறந்தது. தன்னை
இஷ்டப்பட்டு மணந்தாலோ இல்லை இயலாமையில் இணைந்தாலோ அதுபற்றியெல்லாம் கவலை இப்பொழுது
அவனுக்கு இல்லை.
தான் ஆசைப்பட்ட காதலியே தனக்கு மனைவியாக
தன்னுருகில் இருப்பதை பார்பதோடு இல்லாமல் தொட்டு உணர்ந்து அனுபவிக்க ஆசைப்பட்டான்.
எப்பொழுதும் அவனை சுற்றியிருக்கும் அவனின்
கண்ணசைவில் செயல்புரியும் தடிதடியாக பாசக்கார பவுன்சர்கள் உடன் இல்லாமல் காரில்
பயணிப்பது கடந்த இரு நாட்களாக கீதவாணி
உடன் அவன் இருந்த இவ்விரண்டு நாட்களில் தான்.
அவர்களின் முன்பு மட்டுமல்ல மற்றவர்களின் முன்பும்
இதுவரை பெண்ணாசையை துறந்தவன் போன்று ஒரு மாயையை ஏற்படுத்தி வைத்திருந்த
நிலவரசனுக்கு கல்யாணப் பெண்ணாய் தன் அருகில் கீதவாணி இருந்தும் விரைப்புடனே
இருக்கவே முடிந்தது.
தனது பெர்சனல் யூசுக்கு வைத்திருக்கும் பொலிரோவில்
தனது சகாக்களுடன் வளம் வரும் நிலவரசன் நேற்றே அக்காரை தனது சகாக்களிடம் ஒப்படைத்து
விட்டான். அவர்களுடனே ஓர் குடும்பம் போன்று வாழ்ந்தவன் நேற்றே கதிரிடம் அவனும்
கீதவாணியும் பயணிக்க தனி காரை வாங்க கூறிவிட்டான்.
இன்னும் நம்பர் கூட வாங்காத அந்த காரை கதிர்
தனது உடன் பிறவா அண்ணனும், முதலாளியும், அபிமானியுமான நிலவரசனின் கல்யாணம் முடிந்ததும்
தம்பதிகளாக புதுசா அலங்கரிக்கப்பட்ட காரில் முதல் பயணத்தை தொடங்க ஏற்பாடு
செய்திருந்தான்.
கீதவாணி அவளுக்காக அவன் வாங்கியிருக்கும் இந்த
காரினை பற்றி அறிந்திருக்கவில்லை. இப்பொழுது அவனின் முகத்தில் தோன்றிய அவளை
அனுஅனுவாக ரசிக்கும் அவன் பார்வையும் அவள் சட்டை செய்யவில்லை.
அவளுக்கு எப்படியும் நிலவரசன் இக்கல்யானத்தை
நடத்திவிடுவான் என்ற நிச்சயம் தெரிந்ததால் அது பற்றிய கவலையோ பிரமிப்போ அவளுக்கு
இல்லை. ஆனால் தனது அம்மாவும் அப்பாவும் எப்படியாவது தனது திருமணத்திற்கு வந்து
ஆசீர்வாதம் செய்துவிட மாட்டார்களா? என்று எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றம்
கிட்டியதாலோ என்னவோ அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. தனது தங்கை கூட யாரோ வேற்று
மனிசிபோல தன்னை விட்டு தன் பெற்றோருக்கு பயந்து சென்றது அவளின் கண்ணுக்குள்ளேயே
நின்றது.
இவாறாக இருவரும் வேறு வேறு மனநிலையில் இருதனர்.
எனவே காரில் அமைதியே குடிகொண்டிருந்தது.
அச்சூழலை எளிதாக்க அவளின் கவனத்தை தன் மீது திருப்ப
நினைத்த நிலவரசன், ஓய் முசகுட்டி கார் புடுச்சிருக்கா நம்ம கல்யாணத்துக்கு வாங்கியது
என்றான்.
அவள் அறிந்த வயதிலிருந்து சீண்டுவதற்கு அவளை
கூப்பிடும் ஓய் முசகுட்டி என்றதை கேக்கும்போது, அப்பொழுது நான் ஒன்னும் முசகுட்டி
கிடையாது கீதா என்று வெடுக்கென்று பேச எண்ணம் வரும் அவளுக்கு.
ஆனால் பயத்தின் காரணமாக அதை வெளிபடையாக கூறாமல்
மனதினுள் சொல்லிக் கொள்பவளுக்கோ நிலவரசனின் அருகில் இருப்பதால் ஏற்படும் தயக்கம் பயம்
எல்லாம் மஞ்சள்தாலி அவன் கையால் வாங்கியதால் விளைந்த மேஜிக்கால் அவளை விட்டு
தகர்ந்திருந்தது.
எனவே வெடுக்கென்று நான் ஒன்றும் முசகுட்டி கிடையாது.
கீதா.. கீதவாணி முன்னாடி உங்ககிட்ட பயந்துகிட்டு இருக்கிறமாதிரி இனி இருக்க
மாட்டேன் கீதானு என் பேர் சொல்லி மட்டும்தான் கூப்பிடனும் என்றாள்.
அவளின் இவ்வெடுக் பேச்சில் கவரப்பட்ட நிலவரசன்,
ஹா..ஹா..ஹா.. என்று சிரித்தபடி ஒரு கையால் காரை ஓட்டியவன் இன்னொரு கையை நீட்டி
அவளின் முதுகுபக்கம் கை நுழைத்து தன்னுடன் சேர்த்து இறுக்கி பிடித்து அவளின் இடையின்
மென்மையை கையால் அழுத்தி சோதித்தவன் சும்மா புசுபுசுன்னு முசகுட்டி மாதிரிதானடி
இருக்க என்னைக்குமே நீ எனக்கு முசக்குட்டிதான்
என்று தாபத்துடன் கூறினான்.
அவனின் இத்திடீர் தாக்குதலையும் அவனின் முரட்டு
பிடியையும் கண்டு மிரண்டாள் கீதவாணி. இத்தனை களோபரத்திள் முடிந்த அவர்களின்
கல்யாணத்தில் அடுத்து இருவரும் இடையே
நடக்கவிருக்கும் சங்கமத்தை பற்றி அவள் துளியும் இப்பொழுது நினைத்து பார்க்கும்
நிலையில் இல்லை .
எனவே அவனின் பிடியில் இருந்து வலுகட்டாயமாக
தன்னை விலக்க முயன்றாள்.
அவளின் செயலில் அவனின் முரட்டு குணம்
வெளிவந்தது. ஏய் நான் உன் புருஷன் தானடீ அதென்ன உங்க அப்பன மாதிரியே நீயும் ஓவரா
பண்ற என்றான்.
அவனின் இப்பேச்சு அவளுக்கு ரசிக்கவில்லை எனவே
சுல்லென்று அவளும் வார்த்தைகளை விட்டாள்.
என் தோப்பனார் கண்டாலே ஆகாதுன்றவர். அவா பொண்ணை
எதுக்காம் தொட்டு படுத்தனும் என்று அவன் கைகளின் அழுத்தத்தால் ஏற்பட்டிருந்த
அவஸ்த்தையில் இருந்து தப்பிக்க கூறினாள்.
அவளின் இந்த பேச்சு அவனுக்கு ரசிக்கவில்லை. அவன்
தான் அவளை அவள் குடும்பத்தாருடன் சம்மந்தபடுத்தி பேசி அவளையும் அவ்வாறு பேசவைத்தான்
என்பதை வகையாக மறந்தான்.
ஏய்... என்ன சொன்ன உங்காப்பாவோட பொண்ணா நீ. நேத்தே
என்ன சொன்னேன். இப்போ நீ என் பொண்டாட்டியா முழுசா எனக்கே சொந்தமாயிட்ட ஆமா தெரியாமத்
தான் கேக்குறேன் நேத்து அம்மாவும் பெரியம்மாவும் நீ பொறந்த வீட்டுக்கு போய் கல்யாணத்துக்கு தாம்பாளம் வச்சு அழைத்தாங்க.
நீ பெறந்த வீட்டில் நீ நல்லா இருக்கணும் என்று
நினைத்திருந்தால் வந்து உன்னை மனசார வாழ்த்தியிருக்கனுமில்ல அவர் மாப்பிள்ளையாக
பார்த்திருக்கும் ஜெனார்த்தனுடன் மகளின் கல்யாணம் முடிந்தால் தான் அவன் கொளரவம் நிலைக்கும்
என்று நான் ஹாஸ்பிடலில் இருக்கும் போது என் முன்னாடியே அந்த பொருக்கி ஜனார்த்தனை
கூட்டிட்டு வந்தவன் தானே உன் தவப்பனார்.
மக வாழ்க்கையை விட வரட்டு கொளரவம தான் பெருசின்னு நினைக்கிற உன்
தவப்பனாரை பற்றி என் முன்னால் இனி பேசுன தொலைச்சு போடுவேன் தொலைச்சு என்று அவளிடம்
கூறினான்.
இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால்
காயப்படுத்தி தங்களுக்குள் இருந்த அன்பையும் காதலையும் வெளிபடுத்த தெரியாமல்
முறைத்தபடி நிலவரசனின் வீட்டின் முன் காரில் இறங்கினர்.
நிலவரசனின் வீட்டின் முன் கார் வந்து நின்றது
நேற்று போலில்லாமல் இருவரையும் சோடியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்தனர் அவனின் உடன்
பிரபுக்கள்.
நிலவரசனின் அக்கா சரசுவிற்கு தன்னுடைய நாத்தனாரை
தன் தம்பிக்கு மனம் முடித்து வைத்து அவனுடனான தனது உறவை காரணம் காட்டி கோடிகளில்
புரளும் தம்பிக்கு கல்யாணம் செய்து வைத்தால் பிறந்த வீட்டில் சீர் என்ற பேரில்
அவனிடம்மிருந்து முடிந்தவரை பணம் கறந்துவிடலாம் என்றும் .தனது புருசனின்
வருமானதில் அவரது தங்கைக்கு நிறைய சீர்
செய்ய முடியாது என்று கூறி நாத்தனாரின் கல்யாணச்செலவில் இருந்து தப்பிவிடலாம்
என்றும் கனவு கண்டு இருந்தது கீதவாணியாள் தகர்ந்தது அவளின் மேல் வன்மத்தை சரசுக்கு
உண்டாக்கியிருந்தது.
எனவே அவள் கீதவாணியை நோகடிக்கவும் முடிந்தால்
விரட்டவும் ஏதாவது உபாயம் கிடைக்காதா! என காத்திருந்தாள்.
நிலவரசன் இத்திருமணம் நடந்த காரணத்தை மேலோட்டமாக
பார்த்தால்.அவன் ஒன்றும் கீதவாணியை காதலித்து ஒன்றும் கைப்பிடிக்கவில்லையே கீதவானியின்
அப்பாவின் முன்கோபத்தால் அவரை பழிவாங்க மகளை இழுத்துவந்த தம்பி வேறு வழியில்லாமல் இழுத்துவந்துவிட்டு
இனி விட முடியாத சூழலில் தானே அவளை திருமணம் முடித்திருக்கிறான்.
இந்நிலையில் இருவருக்குள்ளும் புரிதலோ அன்போ உண்டாக கால அவகாசம் தேவைப்படும் அதற்குள்
தன்னால் முடிந்த டார்சர் செய்து அவளை துரத்திவிட வேண்டும் என்று நினைத்தால் சரசு.
இந்நிலையில் காரில் இருந்து இறங்கிய இருவரும் புது தம்பதிகள் போல இல்லாமல் கடனே என்று ஆரத்தி
சுற்றும் போது நின்ற விதத்தை கண்ட சரசுக்கு அப்பாடா... என்றிருந்தது.
அவனது வீட்டிற்குள் வந்ததும் அத்தனை நாள்
வெறுமையாக இருந்த ஹாலில் ஜிம்மின் ரிசப்சன் பகுதியிலும் மற்ற இடங்களிலும் போட்டிருந்த
சேர்களை, இன்று திருமணத்துக்கு வருபவர்கள் அமர்வதற்காக கதிர் போட்டிருந்தான்.
அதில் அவனது தங்கை கணவரும் நிலவரசனின் தோழனுமாகிய சங்கர் அமர்ந்து அவனது சகலை
சரசுவின் கணவர் நாகுவோடு பேசிகொண்டிருந்தார்.
வீட்டின் வெளியில் இருந்த பெரிய வெட்டவெளியில்
சார்மியானா பந்தலிட்டு டேபிள் சேர் போடப்பட்டு நிலவரசனின் உறவுக்கும் அவனது
சகாக்களுக்கும் சாப்பாடு அரேஞ் செய்யபட்டிருந்தது மற்றவர்கள் புதூ தம்பதிகள்
வந்ததும் சாப்பிட போய்விட,
வீட்டிற்குள் வலதுகாலை வைத்துவந்த தன் மருமகளை சமையல்
அறையின் மூலையில் வெறுமையாக இருந்த கபோர்டில் புது குத்துவிளக்கு சாமி படங்களுடன்
உண்டாகியிருந்த திடீர் பூஜை அறையில் விளக்கேற்றச்சொல்லி புது தம்பதிகளை கடவுளை
வணங்க்கச் சொன்னாள் நிலவரசனின் அன்னை காந்திமதி.
நிலவரசனின் அறை கதவின் சாவி இதுவரை அவன் யாரிடமும்
தந்ததில்லை அவனுகென்று வீடு, ஜிம் போன்றவை இருந்தாலும் முதல் முதலில் பால் காய்ச்சும்
போது வந்ததுதான் காந்திமதி அவ்வீட்டிற்கு அதன் பின் நிலவரசன்தான் அவன் வீட்டவர்களை
பார்க்க்க அவன் ஊர் செல்வானே தவிர மற்றவர்கள் இங்கு வந்தாலும் அவனது பெரியப்பா
மயில்சாமி வீட்டிற்கு தான் வந்து போன் செய்வர், போய் அவர்களை சந்தித்து பட்டும்
படாமலும் பேசுவான் நிலவரசு.
சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்து அக்குடும்பத்தாரின்
தேவைகளை நிறைவேற்ற பணம் ஏற்பாடு செய்து கொடுக்கும் கடமையை இன்றுவரை தவறாது
செய்துவருவதாலோ என்னவோ அவனின் வீட்டார்கள் அவனை அனுகினாலே பணத்தேவையாகத்தான்
இருக்கும் என்ற எண்ணமே அவனின் மனதினுள் பதிந்து போனது.
நிலவரசனின் அம்மா காந்திமதியோ கணவன் இல்லாத
நிலையில் மகனின் வருமானத்தை கொண்டே மேடேறி மகள்களை கரை சேர்க்க முடியும் என்ற
நிதர்சனம் காரணமாக மகனை மகனாக அரவணைக்க மறந்து கடவுளாக தள்ளிவைத்து தாங்க
ஆரம்பித்ததாலோ என்னவோ சாமி... ராசா... அய்யா... என்ற வார்த்தைகளோடு அவனை தகப்பன்
சாமியாக மாறி தனித்து நிறுத்திவிட்டாள்.
அவளின் மனதில் மகனின்மேல் அளவுக்கதிகமாக
அன்பிருந்தாலும் மனத்தால் இரும்பாகியிருந்த தன் மகனிடம் அன்பை வெளிபடுத்த முடியாமல்
அடக்கி வைத்திருந்த காந்திமதி அவனின் மனைவியாக வந்துள்ள கீதவாணியிடம் அத்தனை
அன்பையும் கொட்டிவிடநினைத்தாள்.
எனவே சாமி கும்பிட்டுவிட்டு ஹாலுக்கு வந்ததும்
எய்யா நிலவு இன்னைக்கு ஒருநாள் இங்கன தங்கிட்டு நாளைக்கு காலையில் நீயும்
மருமவளும் எங்களோடேயே ஊருக்கு வந்துருங்க ராசா.
இங்கன வீடு வெறும் வீடா கிடக்கு. குடுத்தனம் செய்ய
சாமான்சட்டு எதுவும் இல்ல. என்று மேற்கொண்டு பேசிக்கொண்டுபோன காந்திமதியை.
அம்மா... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இப்போ என்
வேலையெல்லாம் விட்டுபுட்டு ஊருபக்கம் நான் வர முடியாது. எதுவும் முன்னக்கூடியே
யோசிச்சு செய்யல. திடீர்னு கல்யாணம் ஆகிடுச்சு சாமான் சட்டு எது... எது...
வாங்கனும்னு அவகூட பேசி லிஸ்ட் போட்டு கொடுத்துட்டு ராத்திரியே நீங்க எல்லோரும் ஊருக்கு போக
ரெடியாயிடுங்க நானே இங்கன எப்பவும் போல எனக்கானத பார்த்துக்கொள்வேன் என்றான்.
அவன் அவ்வாறு கூறவும் இதுவரை அவனின் முன் எதுவும்
மறுத்து பேசாமல் பழகி இருந்த அவனின் குடும்பத்தாருக்கு எவ்வாறு அவனின் முடிவை
மாற்றி தங்களுடன் கூட்டிக்கொண்டு போய் ஊர் சொல்லாமல் முடித்த கல்யாணத்தை தங்கள்
ஊர் காரர்களின் வாயில் அவல் ஆக்காமல்தடுக்க.
தங்களது குலதெய்வ சந்திதியில் மாலைக் காணிக்கை கொடுக்கவைத்து. ஊருக்கு கறிவிருந்து
ஆக்கிப்போட்டு வம்புக்காரர்களின் வாயை மூட
வைக்கவும், அவனை யார் சம்மதிக்க வைக்க என்று காந்திமதி மனதினுள் மருகியபடி இருக்க,
செம்பருத்தி தனது கணவனை நீங்க பேசுங்களேன் என்
அண்ணனிடம் என்று பார்வையலாயே கோரிக்கை வைத்தாள்.
தனது மனைவியின் பார்வையை புரிந்துகொண்டு பேசப்போன
சங்கரை முந்திக்கொண்டு சரசு கூறினாள்.
ஏன் தம்பி இந்த ஊருக்கு நானும் உன் மாமாவும்
எத்தனை தடவை வந்துருக்கோம் ஆனா ஒரு தடவை கூட உன் இந்த வீட்டிற்கு வந்து போனதில்லை.
இப்போதானே உன் கல்யாணத்தை வச்சு எங்களால் உள்ள நுழைய விட்டுருக்க. தகப்பன் சாமியா
எங்களுக்கு ஆயிரம் சீர் செய்து பவுசா கட்டிகொடுத்துட்டு இன்னைக்கு ஒண்ணுமில்லாம
ஒருத்திய போய் கட்டிட்டு வந்து நாங்க புகுந்த வீட்டுல எங்கள தலை நிமிந்து நடக்க
விட்டாம செய்துட்ட.
சரி நம்ம தம்பியால போன மானத்தை நாமதான்
நிமிர்த்தனுமுன்னு ஊருக்கு கறிவிருந்து ஆக்கிப்போட்டு நாள் நட்சத்திரம் பார்க்காம
முடிச்ச உங்க கல்யாணத்திற்கு குலதெய்வத்தின் முன்னாடி நம்ம பூசாரி கிட்ட
குறிகேட்டு நாள்குறிச்சு உங்க ரெண்டுபேரையும் குடித்தனம் செய்ய இங்கன அனுப்பனும்
என்று நெனச்சா இப்படி பொசுக்குனு ஊருக்கு
எல்லோரும் கிளம்பச் சொல்லிட்ட என்று கூறினாள்.
தனது அக்கா சரசு பேச ஆரம்பித்த வார்த்தைகளே
நிலவரசனுக்கு உவப்பானதாக இல்லை.
எனவே என்னம்மா வீட்டில புதுசா நான் பேசறதுக்கு
மறு பேச்செல்லாம் கேக்குது. என் பொண்டாட்டிய பார்த்து ஒண்ணுமில்லாம வந்தவன்னு எப்படி
சொல்லலாம்.
பொண்டாட்டி கொண்டுவருற சீருல குளிர்காய நான்
ஒன்னும் கையாலாகதவன் கிடையாது.அவளை தாழ்த்தி பேசறதும் என்னை பேசுறது போலத்தான்
என்று கர்ஜித்தான்.
இனியும் அவர்களின் முன் இருந்தால் என்னதான் இருந்தாலும்
தனது உடன் பிறப்புக்களை அதுவும் தனது கல்யாணத்திற்காக வந்திருப்பவர்களை கோபத்தில்
வேறு எதுவும் பேசிவிடுவோமோ என்ற எண்ணத்தில் வேகமாக தனது அறை கதவை திறந்து உள்சென்று
கதவை அடைத்துகொண்டான்.
இவர்களின் இவ்வுரையாடல்களை கேட்டுகொண்டிருந்த
கீதவாணிக்கோ தன்னை நிலவரசனின் அக்கா பேசியவிதம் மிகவும் வருத்தியது என்றாலும்,
அதன் பின் நிலவரசன் கூறிய வார்த்தை அவளுக்கு நிறைவாக இருந்தது. ஆனால் அவ்வாறு
பேசிவிட்டு தன்னை அம்போன்னு அவர்களிடமே விட்டுவிட்டு ரூமிற்குள் சென்றுவிட்டவன்
பின்னால் அத்தனை பேர் முன் செல்ல தயக்கமும் அங்கிருந்தவர்களிடம் ஒன்ற தயக்கமும்
ஏற்பட்டது
நிலவரசன் சரசுவின் வார்த்தையில் கோபம்கொண்டு
செல்லவும் அவனின் அம்மாவும் தங்கை செம்பருத்தியும் அங்கு நின்று கொண்டிருந்த கீதவாணியை
மறந்து சரசுவிடம் எகிற ஆரம்பித்தனர்.
இங்க பாரு சரசு நீ பேசத்தெரியாம பேசி என் புள்ள
மனச கஸ்டப்படுத்திட்ட என்று கூறிய காந்திமதியிடம்,
அம்மா... அக்கா பேசத்தெரியாம பேசுச்சுனு நினைக்கிரயாக்கும்
என்று கூறிய செம்பருத்தி, அக்கா வேண்டும்
என்றேதான் பேசுச்சு அவ நாத்தனார அண்ணன் கல்யாணம் செய்யாமாட்டேன்னு சொன்னத மனசுல
வன்மமா வச்சுத்தான் பேசுச்சு. என் புருசன
பக்குவமா அண்ணாட்ட பேசி ஊருக்கு கூட்டிபோக நினைச்சேனே எல்லாம் இவளால
கெட்டுப்போச்சு என்றாள்.
அவங்க இருவரும் பேசுவதை கேட்ட சரசு நல்ல இருக்கே
நீங்க இரண்டுபேரும் பேசுறது அவன் ஊருக்கு வரமாட்டேன்னு சொன்னப்போ யாரும்
வாயத்தொறந்து கூப்பிட பயந்துட்டு இருந்தப்ப நான், என் தம்பி என் மேல
கோபப்பட்டாலும் பரவால்லன்னு பேசுனதுக்கு என்னையே குத்தம் சொல்வீர்களா என்று
ஆளாளுக்கு ஒன்று பேசினார்.
இவர்கள் சண்டை போடுவதை பார்த்துகொண்டு இடையில்
எதுவும் பேச பயந்தபடி நின்றுகொண்டிருந்த கீதவாணி கிளிக் என்ற நிலவரசு இருந்த
அறையின் கதவு திறக்கவும் அத்திசை பார்த்து திரும்பினாள்.
ஆனால் சண்டையிட்டுக் கொண்டிருந்த யாரும்
நிலவரசன் கதவை தொறந்து பார்ப்பதை கவனிக்காமல் இருந்தனர்.
ஒருநிமிடம் அவர்களின் சண்டையும், அங்கிருக்கும் நிலைமையை கண்டு பயந்துபோய் நின்றுகொண்டிருந்த
கீதவாணியையும் கண்ட நிலவரசன் நிறுத்துங்க என்று சத்தமாக கர்ஜித்தான்.
அவனின் சத்தத்தில் அங்கிருந்த அனைவரின்
மூச்சுகூட விட மறந்து நின்றுவிட்டனர்.
எல்லோரும் போய் சாப்பிட போங்க சாப்பிட்டு முடிக்கிறதுகுள்ள
ஊரில் உங்க எல்லாரையும் கொண்டுபோய் சேர்க்க நான் ஏற்பாடு செய்திருக்கிற கார் ரெடியா
வாசலில் நிக்கும் எல்லோரும் அதில் கிளம்பிடனும் என்றவனை ஏக்கமாக காந்திமதி
பார்த்தார்.
அவரின் பார்வையில் இருந்த ஏதோவொன்று நிலவரசனின்
நெஞ்சை அசைத்து பார்த்தது. எனவே ஒரு பெருமூச்சு எடுத்து தன்னை சமாளித்தவன் அவன்
அம்மாவை பார்த்து ஊருக்கு உனக்காக ஒருநாள் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வருவேன். இப்போ
நீ எல்லோரையும் கூட்டிட்டு ஊருக்கு கிளம்பு என்றவன் .
கீதவாணியை பார்த்து, ஓய்... இங்க நின்னுட்டு
என்ன பண்ற உள்ளவா என்று கூறியவன் கதவை அடைக்காமல் கீதவாணி வருவதற்கு திறந்து வைத்தபடி
உள்ளே திரும்பிச் சென்றான்.
Episode 14 -----தொடரும்---- Episode 16

No comments:
Post a Comment