பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா...!(தீபாஸ்-ன்)
அத்தியாயம்-14
நிலவரசனின் செயலில் முதலில் அதிர்ந்து நின்றாலும்
அவனின் வார்த்தைகளின் அர்த்தம் அவளை இதம் அடையச்செய்தது. தன்னை யாருக்காவும்
எதற்காவும் இனி விட்டுகொடுக்க மாட்டான் நிலவரசன் என்ற உண்மை அவளுக்கு
பிடித்திருந்த்தது.
ஜனார்த்தன் மாதிரி படித்த பார்பதற்கு நாகரீகமாக
தெரிந்த அவனின் அகம் எவ்வளவு அருவருப்பானது. ஆனால் அப்ராட் போய் படிக்காமல் தமிழ்
மைந்தனின் கருப்பான கலையான ஆரோகியமான திமிரான ரவுடி இமேஜில் இருந்தாலும் அவனின்
அகம்தான் எவ்வளவு அழகானது. இவனே சிறந்தவன் என்ற எண்ணம் அவளுக்கு நிலவரசனின் மேல்
உண்டானது.
என் பெற்றோர் இல்லாமல் என்னுடைய கல்யாணம்
நடக்குவிருக்கிறதே என்ற வருத்தம் மலையளவு என்மனதினுள் இருக்குதான். ஆனால் அவர்கள்
வந்தால்தான் நான் மணவறையில் வந்து உக்காருவேன் என்று இவரிடம் நான் கூறவில்லையே.
எப்பபாரு உர்ருன்னு முகத்தை வச்சுகிட்டு எல்லோரையும் விரட்டிகிட்டு நானும்
ரவுடிதான் என்று காட்டிட்டு இருகிறதே வேலயாப்போச்சு.
ஐயோ கடவுளே இவர எப்படி ரவுடி என்ற இமேஜில் இருந்து மாற்றுவது என்று
தனக்குத்தானே கூறியவள், பின் அவளுக்கு அவளே நீ முதல அவரை உன்னிடம் நல்லபடி எப்படி
பேசவைக்க என்பதையும் அவரின் உள்ளிருக்கும் அன்பையும் எப்படி வெளிக்கொண்டுவர என்பதை
பத்தி யோசி பிறகு அவரின் இமேஜை மாத்துறதை பத்தி யோசிக்கலாம் என்று அவளுக்கு அவளே
சொல்லிக் கொண்டாள்.
பயில்வான் மயில்சாமி தனது மனைவி காமாச்சியுடன் பேச்சு வார்த்தை
நடத்திகொண்டிருந்தார். காமாச்சி நான் போய் மயில்சாமி வீட்டில் நாளைக்கு
நிலவுக்கும் கீதாவுக்கும் கல்யாணம் என்றும் அதற்கு அவர்கள் வந்து பிள்ளைகளை
வாழ்த்தவேண்டும் என்று அழைக்க போகிறேன் என்றார்.
அவர் கூறவும் காமாச்சி இங்க பாருங்க நீங்க அவங்க
குடும்பத்துக்கு சம்பளம் கொடுத்து வாழவைக்கும் முதலாளி. இதுக்கு உங்கட்ட இந்த
வீட்டிற்கு கணக்கெழுத வைத்து 35 வருசமாகுது. ஆனால் இதுவரை பச்சை தண்ணீர் நம்ம
வீட்டில அவர் குடிச்சதில்லை.
அந்தளவு மக்க மனுசங்களின் குணத்துக்கு மரியாதை
கொடுக்காமல் ஜாதிக்கு மரியாதை கொடுக்கும் அவர் நீங்க கூப்பிட்டீங்களேன்னு வர
மாட்டார். இந்த ஊரில் உங்க முன்னாடி ஒருத்தனும் தலைநிமிந்து பேசமாட்டான்
அப்படிப்பட்டவரின் வார்த்தைகளை மதிக்காத ஜாதி வெறி புடிச்சு அலைபவர் அந்த கணக்கு.
அவர் வீட்டிற்கு போய் உங்களை சூத்தரவால் என்று வெள்ளித்தட்டுல சாப்பிடுகின்ற என்
ராசாவுக்கு மூலையில் கவித்துவச்ச பாத்திரத்தில் தண்ணீர் கொடுக்கும் அந்தாளு
வீட்டுக்கு நீங்க போகக் கூடாது.
உங்களுக்கு என்ன அங்க போய் அவங்க பொண்ணுக்கு
நல்ல வாழ்க்கை நாளைக்கு அமையபோகுது வந்து ஆசீர்வாதம் செய்ங்க என்று கூப்பிடனும்
அவ்வளவுதானே நானும் காந்திமதியும் முறையா தாம்பாலத்தோட போய் அழைச்சிட்டு வருகிறோம்.
இதபத்தி வேற எதுவும் இனி நீங்க பேசகூடாது எனக்கு கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு
என்றபடி வெளியேறிவிட்டாள்.
வெளியில் வந்தவள் நிலவரசனின் அம்மா
காந்திமதியுடன் தாம்பாளத்தில் பூ, பழங்களுடன் தங்களின் காரில் சென்று கணக்கு
வெங்கியின் வாசலில் இறங்கினர்.
வீட்டின் முன்னாள் வாசலுக்கும் திண்ணைக்கும்
மரத்தால் சட்டமிட்ட கம்பிகளில் தடுப்புகள் போடப்பட்டிருந்தது. அதற்குப்பின் இருந்த
தலைவாசக்கதவு திறந்திருந்தது.
காந்திமதி மாநிறத்தில் வெள்ளை சட்டையுடுத்தி
கட்டம்போட்ட கண்டாங்கி கரையிட்ட சேலை உடுத்தி சராசரி உயரமும் உயரத்திற்கேற்ற
எடையுடன் பாதி நனைத்த முடியை கோடாலி கொண்டையிட்டி காதில் பெரிய வட்ட இலைகம்மலும்
கழுத்தில் முகப்புவைத்த ஐந்து சர செயின் புடவைக்குள் ஒடி ஒளிந்திருந்தாலும்
கழுத்து நிறைந்திருந்தது. கைகளும் கால்களும் வயக்காட்டில் வேலை செய்வதாலும்
சிறுவயதில் இருந்தே செருப்பில்லாமல் நடந்து பழகியதால் காய்த்திருந்த கால்களில்
அணிந்திருந்த சதா செருப்புடன் பக்கா வில்லேஜ் அம்மா தோற்றத்தில் இருந்தாள்.
ஆனால் காஞ்சனாவோ நாகரிகமாக சில்க் காடன்
சேலையில் வெயிலோ வேலையோ கண்டிராத பூப்போன்ற சருமத்துடன் காதில் வைரத்தோட்டுடன்
அதற்கு மேச்சாக கழுத்தில் ஆரமும் சிறிய முகப்புவைத்த மூன்று சர செயின் அணிந்து
பட்டணத்து நாகரிக பணக்கார தோற்றத்தில் இருந்த காஞ்சனாவிடம் நிலவரசனின் அம்மா இந்த
தம்பால தட்ட நீ புடுச்சு முன்னாடி போக்கா... முண்டச்சி நான் அழைத்தால் நல்லா
இருக்காது, என்று சொன்னபடி அவளின் கையில் தட்டை திணித்துவிட்டு அவளின் பின் நின்றாள்.
அந்த நேரம் தேவிஸ்ரீ வீட்டின் வாசலில் ஆளரவம்
உணர்ந்து வந்தவள் இருவரையும் கண்டு வேகமாக வாங்க என்றபடி வெளிவந்து தப்ப கதவை
திறந்துவிட்டாள்.
இவர்களின் கார் வாசலுக்கு வரவுமே அக்கம் பக்கம்
அங்கிருந்த வீடுகளின் வாசல்திறந்து பெண்கள் எட்டி பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.
உள்ளே வந்தவர்களை மரியாதை காரணமாக வாங்க என்றனர்
கணக்கும் அவரது மனைவி விசாலியும்.
அவர்களிடம் உடனே நேரடியாக காமாச்சி இந்தாங்க
மாமி நீங்களும் உங்க வீட்டுக்காரரும் சேர்ந்து நின்று இந்த தாம்பாலத்தை வாங்கிக்கோங்க
நாளைக்கு காலையில் எட்டு டூ ஒன்பது மணிக்கு பக்கத்தில் இருக்கிற முருகன் கோவிலில்
வைத்து கீதாவுக்கும், நிலவரசனுக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கோம் .
உங்க பெத்த மகளின் கல்யாணம் நீங்கள் இல்லாமல்
நடப்பது நல்லா இருக்காது கீதா ஹாஸ்பிடலில் வைத்து மனசு கஷ்டத்தில் அவ்வாறு உங்கள
பேசிட்டா. யார் பேசியது? உங்க மகதானே. அதெல்லாம் பெருசுபண்ணாம பிள்ளைகள் நல்லபடி
வாழனும் என்று வந்து ஆசீர்வாதம் செய்யுங்க என்றார்.
அவர் அவ்வாறு கூறவும் யாரு எங்க மக எங்களுக்கு
இருக்குறது ஒரே பொண்ணுதான். அது என் பொண்ணு தேவிஸ்ரீ மட்டும்தான். என்று கூறினார்
கணக்கு.
அவர் அவ்வாறு கூறவும் ஏன்னா என்று ஏதோ கூறவந்த
விசாலியை மேலே பேசாதே என்ற வகையில் ம்..கூம் என்று கையையும் தலையையும் ஆட்டி
பேசாதே என்று சைகை செய்தவர் தொடர்ந்து பேசினார்.
இருந்தாலும் இதுவரை நான் வேலை செய்த என் முதலாளி
வீட்டில் இருந்து வந்து உங்க வீட்டு விசேசத்திற்கு அழைக்க வந்திருக்கீங்க.
தொழிலாளியா உங்ககிட்ட வேலை பார்த்த எனக்கு தாம்பாளம் வச்சு கூப்பிடுற நீங்க பெரிய
மனசு உள்ளவங்களா இருந்தும் அதை ஏற்க எனக்கு அருகதை இல்லை. என் வீட்டில் ஒரு
துக்கம் நிகழ்ந்திடுச்சு துக்கம் அனுசரிக்கும்போது நல்ல விசயத்தில் கலந்துகொள்வது
சேமம் கிடையாது. அப்போ கிளம்புகிறீர்களா? என்று வெளியில் போக சொல்லாமல் சொல்வதுபோல்
இரண்டுபேருக்கும் விடை கொடுக்கும் படி தனது கை இரண்டையும் எடுத்து கூம்பி
நின்றார்.
அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் இருவரும்
கொண்டுவந்த தாம்பாளத்தை அங்கிருந்த ஸ்டூலில் வைத்துவிட்டு வெளியேறி வந்துவிட்டனர்.
மறுநாள் பக்கத்தில் இருந்த முருகன் கோவிலில்
மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாக அமர்ந்திருந்தாள் கீதவாணி. ஆனால் அவளின் கண்கள்
தனது வீட்டிலிருந்து வருகிறார்களா? என்று பாதையே பார்த்துகொண்டிருந்தது அவர்கள்
இன்னும் வரக்காணோமே! என்ற ஆதங்கத்தில் அவளின் கண்கள் பொங்கி கண்ணீர் தளும்பி
நின்றது .
மணப்பெண்ணை மணவறைக்கு அழைத்துவரச் சொன்னதிலிருந்து
மணையில் அமர்ந்திருந்த நிலவரசன் அவளின் முகத்தையே பார்த்தபடி இருந்தான்
இப்பொழுதும் மணப்பெண்ணுக்கு உரிய பூரிப்பும் சிரிப்பும் அவளின் முகம் பிரதிபளிக்காமல்
ஏக்கம் நிறைந்த முகத்துடன் இருப்பதையும் அமர்ந்தபின்னும் தான் அருகில் உள்ளதை கூட
கண்டுகொள்ளாமல் வாசலை பார்த்தபடி கண்ணீர் தளும்பிய கண்களுடன் கண்ட நிலவரசனுக்கு
தன்னை விருப்பம் இல்லாமல் கணவனாக அவள் ஏற்க்க முன்வந்துள்ளதால் இவ்வாறு
இருக்கிறாள் என்று நினைத்து மனம் காயமுற்றான்.
தேவிஸ்ரீ மட்டும் தனது பெற்றோருக்கு தெரியாமல்
வெளியில் செல்வதுபோல் தனது அக்காவின் கல்யாணத்தை காண அவசர அவசரமாக கூட்டத்தை
விலக்கி உள்வந்தாள். தனது தங்கையை கண்டதும் அவளை வரவேற்க ஆர்வத்துடன் தான் மணவரையில்
உட்கார்ந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் எழுந்து செல்ல முயன்றவளை கை பிடித்து
இழுத்து அமர்த்தினான் நிலவரசு.
அவர்களின் செயலை பார்த்தபடி கிட்டேவந்த தேவிஸ்ரீ
அக்கா நானே உன்கிட்ட வருறேன் நீ எதுக்கு எந்திரிக்க என்று கூறியபடி மணவறையில்
அமர்ந்திருந்த தனது அக்காவின் பின்னால்
வந்தவள் குனிந்து கீதவானியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளின் செயலை பொறாமையுடன் பார்த்த நிலவரசனை
பார்த்து மாம்ஸ் என் அக்காவை கல்யாணம் பன்னுறீங்கன்றதுக்காக என் அக்காவிடம் உள்ள
என் உரிமையை விட்டுகொடுக்கவெல்லாம் மாட்டேன்பா..... என்றாள்.
ஆனால் கீதாவோ தனது தங்கை நிலவரசுவிடம் பேசுவதை
கருத்தில் கொள்ளாமல் நீ மட்டும் வருற அம்மா அப்பா எங்க டீ! என்று கேட்டாள்.
அவளுக்கு பதில் கூற முடியாமல் தினறி நின்றவளிடம்
நேத்து அத்தை நம்ம வீட்டுக்கு வந்து அப்பா
அம்மாவை சமாதானப்படுத்தி கல்யாணத்துக்கு அழைக்க வந்தாங்கல்ல பிறகு ஏன்? என்று
தயங்கும் தன் தங்கையிடம் கேள்வி எழுப்பினாள்.
அவள் அவ்வாறு கேட்டதும் நிலவரசனின் முகம் மேலும்
இருகியது. நல்லவேளை அய்யர் கீதவாணியை அப்பறம் பேசலாம் இப்போ மந்திரத்தை சொல்லுங்கோ என்று கொஞ்சம் சத்தமாக சொல்லவும்
வேறு வழியில்லாமல் மற்ற சடங்குகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து கெட்டிமேளம் முழங்க
நிலவரசன் கீதவானியின் கழுத்தில் தாலியை கட்டி ஊருக்கு முன் தனது மனைவி அவள் என்ற
உறவை நிலைநாட்டினான்.
பல சொத்துக்களின் அதிபனாக நிலவரசன் இருந்தாலும்
மிக எளிமையாக அவன் தனது உற்றார் உறவுகளின் முன்னிலையில் எளிய முறையில் கல்யாணம்
ஏற்பாடு செய்து இதோ நிறைவடைந்தது.
கல்யாணம் முடிந்ததும் அனைவரும் கோவிலிருந்த
சாமியை தரிசித்துவிட்டு அவரவர்களுக்கு
உரிய வாகனத்தில் நிலவரசனின் வீட்டிற்கு பயணமாகினர்.
ஜிம் அன்று விடுமுறை விடபட்டிருந்தது அங்கு
ஐந்து நடச்சத்திர ஹோட்டலில் இருந்து வேஜிட்டேரியன் சாப்பாடின் அத்தனை வகைகளும்
விருந்திற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
திருமண ஜோடிகளுடன் கார்வரை வந்த கீதா காரில் ஏறாமல்
தன் அக்கா மாமாவிடம் விடை பெற முயன்றாள்.
கீதவாணி அவளை தடுப்பததற்குள் நிலவரசன்
தேவிஸ்ரீயை பார்த்து என்னமோ உன் அக்காவிடம் உன் உரிமையை விட்டுகொடுக்க மாட்டேன்
என்று சொன்ன! அக்கா கல்யாணத்துக்கு வந்துட்டு சாப்பிட வராமல் அப்படியே இப்போ
திரும்பி போக போறேன்னு சொல்ற என்று கேட்டான்.
அவ்வாறு அவன் கேட்டும் காரில் ஏற தயங்கியபடி
தேவிஸ்ரீ, நான் வந்து... ஒருமணி நேரம் ஆகிடுச்சு சொல்லாமல் வந்திருக்கேன். லேட்டா
ஆத்துக்கு போனா பிரச்சனையாகிடும். என் அக்காவை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வருவேன்.
வந்து என் அக்கா சமைத்ததை வயிறு முட்ட சாப்பிட்டுத்தான் போவேன் இப்போ கிளம்புறேன் கீது.
வருகிறேன் அத்திம்பேர்.... என்று கூறிவிட்டு திரும்பி அவர்கள் காரில் ஏறுவதை
பார்த்தபடி போனவளை ஏய் நில்லு என்று நிலவரசனின் குரல் நிறுத்தியது.
சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த அவனின்
பவுன்சர்களில் ஒருவனை கையசைத்து கூப்பிடவும் அருகில் வந்தவனை பத்திரமா ஆட்டோ பிடிச்சு
வீட்டில இறக்கிவிட்டுட்டு ஜிம்முக்கு வா என்றதும் சரி அண்ணே என்றபடி இங்க
நில்லுங்க தங்கச்சி ஆட்டோவோட வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவன்சென்றான்.
கீதா கனத்த மனதுடன் தேவியை பார்த்து தலை அசைத்து
விடைபெற்று நிலவரசனுடன் காரில் மட்டுமல்ல வாழ்கையிலும் பயணம் செய்ய புறப்பட்டாள்.
Episode 13 ---தொடரும்--- Episode 15


No comments:
Post a Comment