ஒளிதருமோ என் நிலவு...?” [தீபாஸ்-ன்]
வணக்கம் நட்பூக்களே: நான் “பெண்ணே என் மேல் பிழை” கதையைத் தொடர்ந்து எழுதிய இரண்டாம் நாவல் “ஒளிதருமோ
என் நிலவு...?”வை நாளையில் இருந்து தீபாஸ் தளத்தில் தொடராக கொடுக்க உள்ளேன் .
போன கதைக்கு உங்களின் ஆதரவை
கொடுத்ததுபோல இந்தக் கதைக்கும் உங்களின் ஆதரவை கொடுக்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கதையின் கதாநாயகன் ஆதித்தராஜ்
.தனது சொந்த வாழ்கையில் சிறுவயதில் அடைந்த அவமானங்களை வெகுமதியாக மாற்ற உழைப்பால் தொழிலில் மாபெரும் வெற்றிபெற்றான்.
உழைப்பின் சோர்வை போக்க வர்ஷினி என்னும்
மாடல் அழகியிடம் காதலால் தஞ்சம் அடைகிறான் ஆனால் அவனின் வன்மையான காதல் அவளுக்கு
மூச்சுமுட்டியதால் மனஸ்தாபத்தில் பிரிகின்றனர் அந்த சூழ்நிலையில் நம் கதையின்
நாயகி கிராமத்தில் பிறந்துவளர்ந்து சென்னையில் வேலைக்கு வரும் அழகுநிலாவுடன் ஆதித்துக்கு பழக்கம்
ஏற்படுகிறது. அதன் பின் எவ்வாறு இருவரும் வாழ்கை படகில் இணைகிறார்கள் என்பதை கதையை
வாசித்து தெரிந்துகொள்ளுங்கள். என்றும் நட்புடன் உங்கள் தோழி தீபாஸ்.

No comments:
Post a Comment