ஒளிதருமோ என் நிலவு...! [தீபாஸ்-ன்]
அத்தியாயம்-03
அந்த வொய்ட் கலர் பி எம் டபில்யூ காரின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கண் மூடிய வேலாயுதம்,
நேரா வீட்டிற்குப் போ முருகா என்று கூறினார் தனது
ட்ரைவரிடம். ஆனால் அவருக்கு வீட்டிற்கு செல்லவே விருப்பம் இல்லை.
தன் மகன் மாதேஷ் கடந்த இரு மாதம் முன்பு சென்னை போனதில் இருந்து அவருள் கவலை குடியேறிவிட்டது .
இங்கிருக்கும் காட்டன் மில்லையும், பண்ணை தொழிலையும், ஊட்டியில் இருக்கும் எஸ்டேட்டையும், தனது கோவையின் மிகப் பெறும் ஜவுளிகடலையும் மாதேஷ் கவனித்துக்கொள்வான் நாம் சென்னையில் உள்ள ஜவுளிகடயையும் தன் நண்பருடன் பாட்னராக சேர்ந்து ஆரம்பித்த மில்லையும் பார்த்துக்கொண்டு ஜானகிக்கு கடைசி காலத்திலாவது நிம்மதியை கொடுக்குமாறு சென்னையில் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
எனது நினைப்பில் இப்படி இடி விழுந்துவிட்டதே என்று மருகியபடி உட்கார்ந்திருந்தார். மேலும் இன்று காலையில் ஜானகி தனக்கு போன் செய்து மாதேஷுக்கும் ஆதித்துக்கும் இடையில் மோதல் வராமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறியதில் இருந்து அவரின் கவலை மேலும் அதிகரித்தது .
கார் வீட்டினில் வந்து நின்றது கூட உறைக்காமல் விழிமூடி அமர்ந்திருந்தவரின் பக்கம் இருந்த கதவை திறந்த முருகன், ஐயா... வீடு வந்துருச்சு என்று பயபக்தியுடன் கூறினான் .
வீட்டினுள் வந்த வேலாயுதத்திற்கு அங்கிருக்கும் ஹால் சோபாவில் அமர்ந்து அவரது மாமியார் தனது பேரன் மாதேஷுடன் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை அவரின் முகபாவனையில் இருந்தே தெரிந்து கொண்ட வேலாயுதம் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் சென்றவரின் மனம் கொந்தளித்தது .
தன் பிள்ளை மாதேஷை தூண்டிவிடுவதே இந்த கிழவிதான் என்ற கடுப்பு அவருக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவரால் தன் மாமியாரை கேள்விகேட்க முடியாது ஏனெனில் தனது மனைவிக்கு தன் அம்மாவின் மீதும் மாதேஷுக்கு பாட்டி மீதும் அப்படி ஒரு பாசப் பிணைப்பு.
மாமியாரிடம் குற்றம் சாட்டுவதுபோல் ஓர் பார்வை பார்த்தாலே வீட்டில் தன் மனைவியும் மகனும் பிரச்சனை செய்துவிடுவார்கள் என்ற பெருமூச்சோடு ரெப்ரஸ் ஆகி பாத்ரூம் விட்டு வந்தபோது அவரது மனைவி மஞ்சுளா அவர்களின் அறைக்குள் வந்தவள் இப்போதான் வந்தீங்களா? நான் தோட்டத்துப்பக்கம் இருந்தேன். வாங்க சாப்பிட என்று கூப்பிட்டாள்.
சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவரின் முன் தட்டை வைத்து சப்பாத்தியையும் குருமாவையும் எடுத்து வைத்துக்கொண்டே, நான் கொஞ்ச நேரம் முன்புதான் மாதேஷுடன் பேசினேன். அவனும் அவன் ப்ரண்டும் சேர்ந்து சென்னையில் புதிதாக எதோ கம்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று ஓரிடத்தில் இடம் பார்த்திருகிறார்கலாம் அதுக்கு பணம் ஏற்பாடு செய்யச் சொன்னான் என்று கூறினாள்
அவள் கூறியதும் தனக்குள் ஏற்பட்ட கோபத்தை தண்ணீர் குடித்து தனித்தவர் “இப்போ இங்க இருக்கிற தொழிலையே துறையால பார்க்க முடியல”, “முதலில் இங்க இருகிறத வந்து பொறுப்பு எடுத்து கவனிக்கச் சொல். பிறகு புதுசு ஆரம்பிப்பதை பத்தி யோசிக்கலாம்” என்றார்.
அவர் அவ்வாறு கூறியதும், அவள் மகனுக்கு மட்டும் சென்னையில் புதுசு புதுசா பெரிய பெரிய கம்பெனியெல்லாம் வச்சுக் கொடுத்திருக்கிறீங்கலாமே? அவள் மகன் இப்போ பெரிய ஆளாமே. புறவாசல் வழி வந்தவ மகனுக்கு செய்ய மனசுவந்துருக்கு சொத்து சுகத்தோட முறையா வந்த என் மகனுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்றீங்க என்று ஆத்திரத்துடன் கேட்டாள் மஞ்சுளா
இதுவரை தனது இரண்டாம் சம்சாரம், மகன் பற்றி மஞ்சுளா ஏதாவது சொன்னாள் அமைதியாக் போய்விடும் வேலாயுதம் இன்று ஆதித்துக்கு தான் கம்பெனி ஆரம்பிக்க உதவியதாகக் கூறியதும் கோபத்தில் தன் முன் இருந்த தட்டை தள்ளிவிட்டு எழுந்துவிட்டார்.
அவரின் செயலில் அதிர்ந்து விழித்த மஞ்சுளாவை பார்த்து என்ன சொன்ன ஆதித் கம்பெனி ஆரம்பிக்க நான் உதவினேனா?, செஞ்சுருக்கணும். நீசொன்னது போல் அவன் என்கிட்டே கேட்டிருந்தால் நான் கட்டாயம் செய்திருப்பேன் தான்,
ஆனால் அவன் என்கிட்டே கேட்க மாட்டான் டீ! அவன் படிப்புக்கு கூட நான் செலவு செய்ததில்லை அதற்கு அவன் விட்டதும் இல்லை, நீயும் உன் அம்மாவும் சேர்ந்து அவனை பார்த்து அவன் மனதை என்றைக்கு உடைத்தீற்களோ, அன்றைக்கு அவன் தன் அம்மாவை கூப்பிட்டு இந்த ஊரை விட்டுப் போய்விட்டான்.
அன்றிலிருந்து இன்றுவரை அவன் ஒரு தடவை கூட என்னை அப்பானு கூப்பிடவும் இல்லை. என்கிட்டே உரிமையாய் எதுவும் கேட்டதுமில்லை
அவன் என் மகன் டீ! ரோசக்காரன் அவன் தானா வளர்ந்த சிங்கம். உன்மகனை போல் ஒன்றும் வெட்டியாய் அப்பன் சம்பாத்தியத்தை செலவழித்து ஊர் சுற்றிக்கொண்டு இல்லை.
மாதேஷ் சென்னை போயிருகிறது சரி. ஆனா! முன்ன மாதிரி உன் அம்மா பேச்சை கேட்டு ஆதித்திடம் வம்பிழுத்து சண்டைக்கு போகாமல் இருக்கச் சொல்லு. ஏனென்றால் முன்னாடி ஆதித் சின்னவனாக இருக்கும் போது அப்பா என்று சுத்தி சுத்தி வந்து என் கைக்குள் இருந்தான் அதனால் என்னால் அவனை கட்டுப் படுத்த முடிந்தது
என்னைக்கு அவன் மனதை நீங்க உடைத்து அவனை என்னிடாம் இருந்து பிரித்துவிட்டீற்களோ! இனிமேல் உன் மகன் அவனிடம் வம்பிழுத்தால் அவன் சும்மா விடமாட்டான். என்னால் அவனிடம் இருந்து உன் மகனை காப்பாற்றமுடியாது என்றவர் வேகமாக சாப்பிடாமல் தனது அறைக்கு விரைந்தார்.
அவர் பின்னாடியே அழுகையும் ஆத்திரமுமாகச் சென்றவள், என்ன சொன்னீங்க! அவளுக்குப் பிறந்தவனை மட்டும் பேசும்போது உங்கபிள்ளைனு சொல்றீங்க நம்ம மாதேஷை மட்டும் என் பிள்ளைனு சொல்றீங்க என்றவள்,
என்ன... என்னையும் அவளை போல் அடுத்தவன் புருசனுக்கு பிள்ளை பெத்தவள் என்று சொல்றீங்களா...? என்று மஞ்சுளா ஆத்திரத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை சொல்லிமுடித்த மறுநிமிடம் வேலாயுதத்தின் கை ஓங்கி ஓர் அடியை மஞ்சுளாவின் கன்னத்தில் இறக்கியது..
ருத்ரதாண்டவ தோற்றத்துடன் கண்கள் இரண்டும் சிவக்க ஓர் விரலை உயர்த்தி கூறினார், “கோபத்தில் பேசினாலும் சொல்ற வார்த்தையை உணர்ந்து பேசணும்” என்று கர்ஜித்த வேலாயுதம் தனது அறையின் வாசலில், அவர்அடித்ததால் விதிர் விதிர்த்து நின்ற மஞ்சுளாவின் முகத்தில், கதவை அறைவது போல் ஓங்கி அறைந்து சாத்தினார்.
சாப்பாட்டு மேஜையில் தட்டு கீழே விழும் சத்தத்திலும் மருமகனின் கோபமான பேச்சிலும் மகளை தேடி வேகமாக வந்த மனோன்மணிக்கு அதிர்ந்த தோற்றத்தில் கன்னத்தில் கைவைத்தபடி நின்ற மகளை பார்த்ததும் மஞ்சுளா என்று தோள் தொட்டு உலுக்கிய அம்மாவை கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் மஞ்சுளா.
நான் செஞ்ச தப்பால என் காலம் முழுக்க நிம்மதியில்லாமல் ஆக்கிவிட்டாரே இந்த ஆண்டவன் என்று புலம்பினாள் மஞ்சுளா.
தன் மகளின் முதுகை அருகில் இருந்து ஆதரவாய் தடவியபடி, ராஜாபோல மகனை வச்சுகிட்டு நீ ஏன் கலங்கணும் மஞ்சுளா? அவ என்னதான் உன் புருஷனை மயக்கி வச்சுகிட்டாலும் அவ இரண்டாவதுதான்.
உனக்குத்தான் உன் புருஷன் மேல் முழு உரிமையும். எங்க போயிடப்போகிறார் உன் புருஷன் என்றார் மனோன்மணி.
சென்னையில்.....
அழகுநிலா வேலையின் சேர்ந்து இன்றுடன் இரண்டு மாதம் முடிந்து விட்டது. அவள் முதல்நாள் உள்ளே வரும் போது பயந்தாள் என்று அவள் ப்ராஜெக்ட் டீமில் இருப்பவர்களிடம் சொன்னால் என் காதில் பூ சுத்தப் பார்கிறாயா? என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள்.
அவள் ஆபீஸில் இருக்கும் இடம் உற்சாகமயமாக இருந்தது. தன்னுடைய பேச்சாலும் எதார்த்தமான செய்கையாலும் அதற்குள் ஓர் நட்பு வட்டாரத்தையே உருவாக்கியிருந்தாள்.
இவ்வளவு நாள் கட்டுப்பாடான சூழலில் வளர்ந்தவள். ஆதலால் இங்கு தடையில்லாமல் கிடைக்கும் சுதந்திரத்தை தன் நண்பர்களுடன் மாலுக்குப் போவது, படம் பார்ப்பது என்று ஜாலியாக அவள் வாழ்வு சென்று கொண்டிருந்தது.
என்னதான் ஆண் பெண் வேறுபாடு பார்க்காமல் தன் உடன் வேலை பார்பவகளிடம் நட்பு பாராட்டினாலும், உடையிலும் தன்னுடைய ஒப்பனையிலும் சிட்டிகேர்ள் தோற்றத்துக்கு மாறியிருந்தாலும் தனது கண்ணியம் சிறிதும் குறையாத வகையிலேயே அவளது மாற்றம் இருந்தது.
இன்று சாயங்காலம் சுமதியின் பிறந்தநாளுக்கு, விசு, பக்கத்தில் இருக்கும் ஹோட்டலின் தனது நண்பர்களுக்கு டின்னர் அரேஞ் செய்திருந்தான் .
அவன் வேறு இடத்தில் வேலைபார்த்தாலும் நேரம்
கிடைக்கும் போது சந்தித்து கொண்டு தான் இருந்தனர்.
ஹோட்டலுக்குள் நுழையும் போது அழகுநிலா சுமதியிடம் “அடியே கஞ்சூஸ் இன்னைக்கு உன் பிறந்த நாள் தானே! அப்போ, நீதானே எங்களுக்கு துட்டு செலவு பண்ணி பார்டி கொடுக்க வேண்டும்”
அது என்ன விசு செலவு செய்வது, இதை நான் ஒத்துகொள்ள மாட்டேன் என்று கூறினாள்.
அதற்கு சுமதி, நானே கஷ்டப்பட்டு எனக்கு ஒரு அடிமையை, “இன்றைய காதலன் அண்ட் நாளைய கணவன்” என்ற பேரில் விசுவை சிக்கவைத்திருப்பது எதுக்குன்னு நினைக்கிற, இப்படி எனக்காகச் செலவு செய்வதற்குத்தான் என்றாள் .
அவள் தன்னை அடிமை என்று கூறியது கூட வெகுமதியாக தன்னை
கூறியது போல் அவளை பார்த்து காதலாய் சிரித்த விசுவை பார்த்து....
அட சீ! நீயெல்லாம் எனக்கு பிரண்டுன்னு சொல்லிகொள்ளாதே விசு
,அவ உன்னை டேமேஜ் பண்றா! நீ என்னமோ உனக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது போல் இப்படி பாசமா அவளை பார்த்து
சிரிக்கற ,சகிக்கல என்றவள்.
என்ன பன்ன காலேஜ் படிக்கும் போதிருந்து உன் மானத்தை காப்பதே
என் வேலையாகப் போய்விட்டது என்று விசுவை பார்த்து சொன்னவள்,
சுமதியிடம் , என்ன சொன்ன? என் பிரன்ட் விசுவ என்ன சொன்ன? உனக்கு செலவளிக்க சிக்குன அடிமைனா சொன்ன,
ஒரு அப்ரானிப் பையனுக்கு சப்போட் பண்ணி பேச ஆள் இல்லைன்னு நினைச்சயா? நான் இருக்றேன்.
இன்னைக்கு எப்படி இந்த பில்லை நீ அவன் தலையில் கட்டுகிறாயோ அதே போல் அடுத்தமாதம் வருகிற அவன் பெர்த்டேக்கும் இன்னும் நாலுமாதம் பிறகு வருகிற என் பெர்த்டேக்கும் உன்னையே பில் பே பண்ண வைக்கல நான் அழகுநிலா கிடயாதுடீ! என்றாள்.
அதற்கு உடனே, ஏன்டீ உனக்கு இந்த பொறாமை. வேணும்னா நீயும் என்னை மாதிரி ஓர் அடிமையை ஏற்பாடு பண்ணிக்கோ!, நீ ஒண்ணும் மெனக்கெட்டு அப்படியொரு அடிமையை தேடி போக வேண்டாம் இதோ உன் பக்கத்தில் வரும் ரமேஷ் எப்படா எனக்கு அந்த அடிமை சான்ஸ் கிடைக்குமென்று இருக்கிறார், என்றாள்.
அவள் அவ்வாறு கூறவும் அந்த ரமேஷ் ஆகப் பட்டவன் அவளை நோக்கி அசட்டுச் சிரிப்பை உதிர்த்தவன் சுமதியிடம், பிரன்ட் என்றால் உங்களை மாதிரி இருக்கனும் சுமதி, என்று மேலும் ஏதோ சொல்லப் போகையில் இடையில் புகுந்த அழகுநிலா அவர்களுக்கு ரிசர்வ் செய்திருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே,
ரமேஷ்! நீங்க சுமதி சொல்வதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. அவள் லூசு என்பதை அப்பப்ப இப்படி பேசி புரூவ் பண்ணுவா, எனகுத்தெரியாதா? நீங்க என்னை உங்க உடன் பிறவா தங்கையாக நினைத்திருக்கிறீகள் என்று, வேறு எதுவும் அவனை சொல்லவிடாமல் கூறினாள்.
அச்சோ தங்கையா!! வேண்டாம் அழகுநிலா. நீங்க ஆபீசில் உள்ள முக்கால் வாசி பேரை உங்களின் அண்ணன் ஆக்கிவிட்ட மாதிரி என்னையும் அண்ணன் என்று கூப்பிட்டுவிடாதீர்கள் என் மனசு தாங்காது என்று கூறினான் .
ஆனாலும் சுமதி சொல்வதுபோல் உங்களுக்கு அடிமையாகும் பாக்கியம் எனக்கு கிட்டவேண்டுமென்றால் நான் என்ன செய்யனும் என்பதை நீங்களே கூறுங்களேன் என்று கேளிபோல் கேட்டாலும் அதில் ஓர் தீவிரமும் இருப்பதை பார்த்த அழகி சுமதியின் பக்கம் திரும்பி கோபத்துடன்,
இன்னைக்கு நீ பெர்த்டே பேபி அதனால என்கிட்டே அடிபடாமல் தப்பிச்ச. நான் வேலை பார்ப்பது உனக்குப் பொறுக்கலையாடீ! இப்படி கோர்த்துவிடப் பார்ப்பது சரியா?, என்னுடைய லெவலே வேற, என்று கணவு மிதக்கும் முகத்தோடு சொன்னாள் .
அவள் கடைசியாக் கூறிய என்னோட லெவலே வேற என்ற வாக்கியத்தை கேட்ட அவர்களுடன் வந்த இளமை பட்டாளம் ஹாய் உன்னோட எதிர்பார்ப்பு என்னனு சொல்லு... சொல்லு.... என்று நச்சரிக்க ஆரம்பித்தனர்.
ஹைட்டா, கலரா என்று அழகி சொல்லும் போது ரமேஸ் என்னைய மாதிரி கலராவா? என்று கேள்விகேட்டான்
ஹலோ ரமேஸ் கொஞ்சம் அடங்குறீங்களா? இல்லாட்டி உங்களிடம் தங்கை கோர் கீதம் நான் என்று பாட்டுப்பாட ஆரம்பிச்சிடுவேன், எப்படி வசதி என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும் கைகட்டி ஒரு கையால் வாய்பொத்தி இனி பேசமாட்டேன் என்று ரமேஸ் பாவனை செய்தான்.
அவனின் செயலில் புன்னகையுடன் நிமிர்ந்தவள் அவர்களை நோக்கி வந்த ஆதித்தனை பார்த்து தன்னையறியாமல் இதோ நம் டேபிள் நோக்கி வருகிறாரே அவரைப்போல் இருக்கனும் என்று கூறிவிட்டாள்.
ஆதித் தனது கிளைண்டுடன் அங்கு வந்திருந்தான் .உள் நுழைகையிலேயே அழகுநிலாவின் சிரித்த முகம்தான் அவன் கண்களில் பட்டது. அவளுக்கு பின் உள்ள இருக்கை தான் அவன் புக் செய்திருந்ததான்
அவளின் மேஜையின் பக்கம் வந்தவனுக்கு சிரிப்புடன் நிமிர்ந்தவள், தன்னை பார்த்து ஒருநிமிடம் இமைக்க மறந்து பின் ஏதோ தன் உடன் வந்தவர்களிடம் கூறியதும் அது தன்னைப் பற்றித்தான் என்பது அவனுக்கு சந்தேகம் இல்லாமல் தெரிந்துவிட்டது .
எனவே அவளின் பின் உள்ள மேஜையின் இருக்கையில் அமர்ந்தவன் தன்னை அறியாமல் அவளின் மேல் தன் கவனத்தையும் வைத்துக்கொண்டான்.
ஆனால் அவன் அமர்ந்திருந்த இருக்கையின் அடுத்த மேஜையில் அமர்ந்திருந்த அந்த நால்வரும் அவர்களின் அருகில் இருந்த பேரரிடம் எதோ தாழ்ந்த குரலில் கூறி கண்களால் அழகு நிலாவை ஜாடை காண்பித்து பின் அவன் கையில் ரூபாய் தாளை திணித்தது ஆதித் கண்களில் விழுந்தது .
எப்பொழுதும் பிசினெஸ்
பேச்சுவார்த்தையின் போது கவனமாக இருப்பவனின் கவனம் முதன்முதலாக எதோ ஓர் பெண்ணினால்
சிதறுவதை உணர்ந்தவனுக்கு தன் மேல் கோபம் வந்தது.
பின், அந்த கோபம் யார்
என்றே தெரியாத அழகுநிலாவின் மீது திரும்பியது, வெளியிடங்களில் இப்படித்தான்
சிரித்துப்பேசி மற்றவர்களின் கவனத்தை சிதறடிப்பதே இந்த பெண்களின் பழக்கமாகிவிட்டது
என்று தனக்குள்ளேயே கூறிவிட்டு தன்னுடன் வந்தவர்களிடம் எக்ஸ்க்யூஸ்மீ நான் கொஞ்சம்
ரெஸ்ட்ரூம் வரை போய்விட்டு வருகிறேன் என்று வந்தவன் வாஷ்பேசனில் தன் முகத்தில்
நீர் அடித்து தன்னை நிலைப்படுத்தியவன் அதன் பக்கவாட்டில் இருந்த பாத்ரூம் சென்றான் .
பேரரிடம் ரூபாயை திணித்த அவன் எதோ தனது கூட்டாளிகளிடம் வெற்றியுடன் முடித்துவிட்டுவருகிறேன் என்பதற்கு அறிகுறியாக கையை தமஸ்அப் விளம்பரம்போல் அவர்களிடம் காண்பித்தவன் ரெஸ்ட்ரூம் சென்றான்.
அவன் சென்றதும் தட்டில் கூல்டிரிங்ஸ் டிரேயுடன் வந்த அந்த பேரர் கை நழுவி அழகுநிலாவின் மேல் ஜூஸை ஊற்றிவிட்டான் .
உடன் பதறி சாரி....மேம், சாரி....மேடம் என்று கெஞ்சியவனிடம் இல்ல இருக்கட்டும் என்பவள் தன்னுடன் வந்தவர்களிடம்
சொல்லிவிட்டு ரெஸ்ட்ரூம் விரைந்தாள்.
அவளின் மேல் ஜூஸ்சை கொட்டவைத்து அவளை அங்கு இருந்த வாஷ் பேசன் இருந்த ரூமிற்கு வரவைப்பதற்கே அந்த பேரரை அந்த டேபிளில் இருந்த செல்வந்தர் வீட்டின் கழிசடைகள்
காசுக்கு வாங்கினார்கள் .
அவள் அங்கு போவதற்கு முன்பே அங்கு ரெடியாக இருந்தவன் செல் போனை அங்கு செட் செய்து வைத்தான்.
பாத்ரூமில் இருந்து வெளிவர கதவை லேசாகத் திறந்த ஆதித்துக்கு வாஷ்பேசனின் முன் நின்று
சுற்றும்முற்றும் நோட்டம் விட்ட தனக்கு பக்கத்த்து மேஜையில் இருந்தவனின் செய்கை சந்தேகத்தை கிளப்பியதால் அவன் என்ன செய்கிறான் என்பதனை பார்க்க ஒருநிமிடம் அங்கு அவன் தேங்கி நின்றான்.
அப்பொழுது அந்த பக்கத்து டேபிள்காரனின் மற்றொரு போன் ஒலிக்க எடுத்து
காதில் வைத்தவன் போனில் ம் ரெடி என்றவன், அழகுநிலா உள்நுழைந்து பக்கத்தில் வருவதை கவனியாதது போல் வேகமாகத் திரும்பி அவளின் மேல் மோதினான்
எதிர்பாராத அந்த மோதலில் அவள் நிலை தடுமாறி விழுக பார்த்ததும் அவன் வேண்டுமென்றே தானும் நிலை தடுமாறியதுபோல் பாவனை செய்தான்.
பிடிப்புக்காக அழைந்த அவளின் கரமும்.. அவனை பிடிக்க அதில் விஷமத்தோடு இசைந்து விழுந்த அவனின் உதடுகள் அவள் முகத்தில் படிந்து அழுத்தி முத்தமிடுவது போல்
பதிந்தது.
கீழே விழுந்ததின் அதிர்ச்சி மறைவதற்குள் எவனோ ஒருவனின் உதடு பதிந்த அதிர்ச்சியும் சேர ஒரு நிமிடம் ஸ்தம்பித்துபோனாள்.
அப்பொழுது அதை பார்த்துக்கொண்டு இருந்த ஆதித் விட்டில் பூச்சி என்று அழகுநிலாவை நினைத்துக்கொண்டு அங்கு விரைவதற்குமுன், நிலா புயலென அவனை தள்ளி ஓங்கி கன்னத்தில் அரைவதற்கும் சரியாக இருந்தது.
அவள் அரைந்ததும், அவன் உடனே அவளிடம் சிஸ்டர் நீங்கள் விழும் போது என்னையும் பிடித்து விழுந்ததால் இப்படி நடந்துருச்சு சாரி.. என்றான்.
இதை எதிர்பார்க்காத ஆதித் வேகமாக் ரெஸ்ட் ரூமினுள் இருந்து கோபத்துடன் வெளியே வந்து அவனை வேகமாக ஒரு உதை விட்டான்.
ஒரு நிமிடம் என்ன நடக்குது என்பதனை அவள் உணர்வதுக்குள் அங்கு நடந்த அந்த நிகழ்ச்சியில் ஒருநிமிடம் ஸ்தம்பித்து போன அழகுநிலா, ஆதித்தை ஸார் நீங்கவேறு பிரச்சனை பண்ணி கூட்டத்தை கூட்டி
விடாதீர்கள் என்று கூறியவள்
அந்த விசமியின் புறம் பார்த்து கவனம் வேண்டாமா..? இப்படித்தான் பொது இடத்தில் கவனமில்லாமல் இருந்து ஒரு பெண்ணின் மேல் இடித்து விழுந்து என்றவள், மேலே சொல்ல சங்கடப்பட்டு சொல்லாமல் அவனை
எரிப்பதுபோல் பார்த்து,
தெரியாமல் நடந்ததால இத்துடன் விடுறேன் என்று ஆங்காரத்துடன் பல்லை கடித்தபடி முறைத்துக்கொண்டு கர்ஜித்தாள்
அவளின் பாவனை ஆதித்தனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. எப்பா.... அனல் பறக்குது என்று மனதினுள் நினைத்தவன்.
அதை வெளிகாண்பிக்காமல் அவளிடம் அப்போ இந்த ரோக் உங்களை தெரியாமல் இடிச்சு உங்களோடு விழுந்து கட்டிபுடிச்சு முத்தம் கொடுத்ததெல்லாம் தற்செயலாக
தெரியாமல் நடந்துருச்சுனு நீ நினைகிறாயா...?. என்று அவனை போக விடாதவாறு சட்டை காலரின் பின்னால் பிடித்தபடி அழகுநிலாவிடம் கேட்டான்.
அழகுநிலாவிற்கு ஆதித்தின் செயல் எரிச்சலையே கொடுத்தது. ஏனெனில் அவளுக்கு தன் மேல் இருந்த ஜூஸ் கரையுடன் எதிரில் நின்றவன் விழும் போது பிடிக்கிறேன் என்று தன் இடுப்பில் கைபோட்டு தன்னை உடன் சேர்த்து இருக்க அனைத்து தன் முகத்தோடு முகம் இளைத்து கீழே விழுந்த செயல் பெறும் அதிர்வையும் அருவருப்பையும் கொடுத்திருந்தது.
அவளுக்கு எப்போதடா அந்த இடத்தை விட்டு அகன்று தன் ரூமிற்கு செல்வோம் என்றும், தன் மேல் சாக்கடை தெரித்தது போல் ஓர் அருவெறுப்பில் குளித்து அதை கழுவிவிட்டு தன்னை கொஞ்சம் இலகுவாக்கிக்கொள்ள தனிமையை நாடுவோம் என்று நினைத்திருந்தாள் பஞ்சாயத்து பன்னுகிறேன் என்ற பெயரில் இந்த அசிங்கத்தை இந்த டிப் டாப் ஆசாமி கூட்டத்தை கூட்டி அரங்கேற்றம் பண்ணிவிடுவான் போலிருக்க்கே! என்ற கோபம் ஆதித்தின் மேல் ஏற்பட்டது .
எனவே ஆதித்தை பார்த்து, “மிஸ்டர்! அதுதான் நானே அவனை வார்ன் செய்து போகச் சொல்லிவிட்டேனே, பிறகு என்ன நீங்க வெட்டியா சீன கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க” என்று எரிச்சலுடன் கேட்டுவிட்டு,
என்ன அழகான பொண்ணை பார்த்து இப்படி செய்தால் இம்ரஸ் ஆகிவிடுவாள் என்று பார்கிறீங்களா? அதற்கு வேறு ஆளை பாருங்கள் போவீங்கலா?.... வேலையை பார்த்துக்கிட்டு என்று அவன் மேல் காய்ந்தாள்.
ஆதித்தை அவள் அலட்சியப் படுத்தியதும் ரோஷத்துடன் என்னது நீ அப்படி அழகா ஒன்றும் எனக்குத் தெரியலையே.... என்று இகழ்ச்சியாக அவளை பார்த்து கூறியவன்,
என் ஸ்வீட் வர்சுக்கு முன்னால் நீயெல்லாம்.... என்றவன் வேண்டுமென்றே அவளை பார்த்து கன்றி புரூட் என்றவன் உன்னை இம்ரஸ் செய்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்றான்.
அவனை விடாமல் பிடித்தபடி இழுத்து வாஸ் பேசனுக்கு சைடில் இருந்த ஹேன்டு டிரையரின் மேல் நின்ற வாக்கில் இருந்த போனை எடுத்து அது கேமரா மோடில் இன்னும் ஓடிக்கொண்டு இருந்ததை அவளிடம் காண்பித்து இவன் ஒன்றும் தெரியாமல் உன் மீது மோதவில்லை. பிளான் பண்ணி மோதியிருக்கான் என்றவன் அதில் ரெகார்டு ஆகியிருந்த அவன் அவளை கட்டிப்பிடித்து கீழே விழுவது போல இருந்த அந்த பதிவை இயக்கி ஓடவிட்டான்.
ஆதித்தன் ஓர் கையால் தான்
அந்த ரோக்கை பிடித்திருந்தான். ஆனால் என்ன
முயன்றும் ஆதித்தனின் பிடியில் இருந்து திமிரமுடியாமல் ஈனச்செயலைப் பகிரங்கப்படுத்திய ஆதித்தனை
அந்தநிலையிலும் மிரட்ட முயன்றான் அவன் .
டேய்... நான் யாருன்னு
நெனச்ச மினிஸ்டர் காந்தனுடைய பையன் நான்.
என்ன விட்டுட்டு என் மொபைலை என் கிட்ட கொடுத்துவிடு, இல்லையின்னா என்று அவன் மேற்கொண்டு
சொல்லிமுடிப்பதற்குள்
ஆதித் கையில் உள்ள அந்த பொறுக்கியின் மொபைலை நட்டுக்குத்தலாய் பிடித்து அவனின் மண்டையில் அதை வைத்தே நட்நட்
என்று அடித்தபடி, “நீ மினிஸ்டர் பையன்னா இருந்தா பொறுக்கிவேலை பார்த்த உன்னை
சும்மா விடச் சொல்கிறாயா..?”
உன்னை விடமாட்டேன். உன்
மொபைலை இனி உனக்கு கொடுக்கவும் மாட்டேன் என்னடா செய்வ? என்றவன் அந்த மொபைலை
அழகுநிலாவிடம் கொடுத்து நீ போ என்று கூறினான்.
அவன் சொன்னதை இயந்திரம்
போல் செய்த அழகுநிலா, திரும்பி அவனை பார்த்துக்கொண்டே சென்றாள் .
அதிர்ந்த பாவனையுடன் அவனை பார்த்துக்கொண்டே செல்லும் அழகுநிலாவை
பார்த்துக்கொண்டே ஒரு கையால் அந்த பொறுக்கியை அடக்கியபடி மற்றொரு கையால் தனது
பாக்கெட்டில் இருந்த போனில் அந்த ஹோட்டலின் ரிசப்சனை தொடர்புகொண்டு ஆதித் பேசினான் .
வெளியில் வந்த அழகுநிலா
அதிர்ச்சி விலகாமல் தன் கையில் உள்ள மொபைலை கூட யாரும் பார்க்காதவாறு தன் துப்பட்டாவினுள்
மறைத்தபடி தனது இருக்கையில் அமர்ந்தாள்
அவளின் முகம் பார்த்த
சுமதி, என்னடீ! இவவளவு நேரம் ரெஸ்ட் ரூமில் என்ன பண்ணின. ஜூஸ் கரையை கூட
துடைக்காமல் ஏன் இப்படி பேய் அறைந்தமாதிரி வந்திருக்கிற என்று அவள் கேட்கும் போது
,
வெளியில் இருந்து அந்த
ஹோட்டலின் யூனிபார்ம் அணிந்த செக்யூரிட்டீஸ் இரண்டு பேர் வேகமாக ரெஸ்ட்ரூம்
விரைந்து சென்றதை பார்த்த அழகுநிலா சுமதியின் கேள்விக்கு ஒன்றுமே பதில் கூறாது
ரெஸ்ட்ரூம் பக்கமே வெறித்துப் பார்த்தாள்.
அவள் அதிர்ச்சியுடன்
ரெஸ்ட்ரூமை பார்த்துக்கொண்டே இருப்பதையும் அங்கு செக்யூரிடீஸ் விரைவதையும் பார்த்த
அந்த பொறுக்கியுடன் வந்த மற்ற மூன்றுபேறும்
ஏதோ விபரீதம் நடந்ததை யூகித்து டேபிளை விட்டு வேகமாக எழுந்து வெளியே ஓடினர்.
ரெஸ்ட்ரூமிற்குள் இருந்து அந்த பொறுக்கியை தரதரவென்று வெளியே இழுத்துவந்த அந்த
செக்யூரிட்டீசிடம் விடுங்கடா என்னை என் மேல கை வைத்தது என் அப்பாவுக்குத்
தெரிந்தால் உங்களை ஒரு வழி பண்ணிவிடுவார் என்று அவனின் கத்தலை யாரும் அங்கு
பொருட்படுத்தவில்லை.
அவர்களின் பின் ஒரு நிமிடம் கழித்து வெளியில் வந்த ஆதித் எதுவுமே நடக்காதவாறு
அசால்டாக முதலில் அவன் எவ்வாறு ஹோட்டலுக்குள் மிடுக்காக வந்தானோ! அதே போல்
வந்தவன், அழகுநிலா அங்கு இருப்பதை கண்டுகொல்லாதவாறு தனது கிளைன்டிடம் போனவன் ஸாரி!
கொஞ்சம் லேட்டாயிடுச்சு... என்று கூறியபடி அவர்களுடன் இயல்பாகப் பேச்சில் இணைந்துகொண்டான்.
அழகுநிலாவிற்கு அதற்கு மேல் அங்கு உட்காரவோ இயல்பாக இருக்கவோ இயலவில்லை. அவளின் பார்வை ஆதித்தையே
நிமிடத்திற்கு ஒரு முறை நன்றி கூறுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி சென்று
கொண்டிருந்தது.
ஆதித்தோ தன்னுடன் வந்தவர்களுடன் தனது பிசினெஸ் சம்மந்தமாக மிகவும் தீவிரமாக்
பேசிக்கொண்டிருந்தவன், பேசியபடியே அவர்களுடன் வெளியேறி சென்றும் விட்டான்.
தான் ஒரு பெண்ணின் இக்கட்டான சூழ்நிலையில் உதவியதையோ? அவளின் மேல் ஓர் பார்வை
கூட செலுத்தாமல் எதுவும் நடவாதவாறு அங்கிருந்தவாறு அழகுநிலாவை சட்டை செய்யாமல்
எழுந்து சென்றேவிட்டான்.
அதன் பின் அழகுநிலாவும் தனது தோழி சுமதியிடம் தனக்குத் தலை வலிப்பதாகக் கூறி
கிளம்பிவிட்டாள்.
எதுவோ சரியில்லை என்பதனை உணர்ந்த சுமதியும் அவளிடம் ஒன்றும் கூறாமல், விசுவை
கூப்பிடு அவளை பத்திரமாக் ஆட்டோ பிடித்து
ஏற்றிவிடச் சொன்னாள்.
எப்பொழுதும் ஆண்களைவிட பெண்களே நுன்னுணர்வு கொண்டவர்கள் எனவே சுமதி அழகியின்
மகிழ்ச்சி துடைத்த முகமும் ,அதன் பின் ஹோட்டலில் நடந்த சம்பவமும் அழகி திரும்ப திரும்ப ஆதித்தை பார்த்த
பார்வையும் எதுவோ ஒன்று நடந்துள்ளது என்பதனை யூகித்துக்கொண்டாள்.
மேலும் அதை அழகி எதோ
காரணத்திற்காக எல்லோர் முன்பும் தன்னிடம் சொல்லாமல் மறைக்கிறாள் என்பதையும்
உணர்ந்தே அவளை போக அனுமதித்தாள். அழகியிடம் ஹாஸ்டல் போனதும் எனக்கு போன் செய்துவிடவேண்டும் என்று திரும்பத்திரும்ப
கூறி விடை கொடுத்தாள்.
Episode 02 ---தொடரும்----

Very Nice ud
ReplyDeleteThank you Vasanthi
Delete