ஒளிதருமோ என் நிலவு...! [தீபாஸ்-ன்]
அத்தியாயம்-04
வேலாயுதம்
மஞ்சுளாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை, இன்று காலை சாப்பிட
மேஜையில் உட்கார்ந்தவர் தனக்கு பரிமாறிய மஞ்சுளாவிடம் உன் மகன் சென்னையில் தொழில்
தொடங்க ஓர் இடம் பார்த்திருப்பதாக சொன்னாயே அந்த இடத்தை பேசி முடிச்சாச்சு. அந்த இடம் முழுவதுமே
மாதேஷ் பெயரிலேயே நாளைக்கு ரெஜிஸ்டர்
பண்ணிவிடலாம் என்று அவனிடம் சொல் என்றார் .
அந்த பிரச்னைக்கு பின்
தன் கூட முகம் கொடுத்து பேசாத தன் கணவர் தன்னிடம் பேசியதும், மேலும் தான் கேட்டதுபோல்
தன் மகனுக்கு தொழில் தொடங்க இடமும் வாங்கி கொடுத்து விடலாம் என்றதும் மஞ்சுளாவிற்கு சந்தோசமாக
இருந்தது .
முகம் முழுவதுவும்
சிரிப்பாக இன்னும் கொஞ்சம் பொங்கல் போடவாங்க என்று கூறியவள், “நீங்கதான் நான் கேட்டதுக்குப்
பிறகு சென்னைக்கே போகவில்லையே பிறகு
எப்படிங்க, அவன் பார்த்த இடம் பற்றி உங்களுக்கு தெரிந்து பேசி முடிச்சீங்க,” “மாதேஷ் எதுவும்
உங்ககிட்ட போன் பண்ணி டீடைல்ஸ் சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டானா” என்று கேட்டாள்.
அவன் என்னைக்கு என்கிட்டே
நல்லபடியா பேசியிருக்கான்? இங்க
உள்ளவங்க எப்படி அவனை என்கூட நல்லபடி பேச விடுவாங்க? என்று தன் மாமியாரை ஓர்
பார்வை அழுத்தமாக பார்த்தபடி கூறினார்.
பிறகு எப்படிங்க? என்று
கேட்டாள் மஞ்சுளா,
அவளின் மேல் ஓர் பார்வையை
செலுத்தியவர் இதைக்கூட என்னால் இருந்த இடத்தில் இருந்து தெரிஞ்சுக்க முடியலைன்னா
நான் பெரியஆள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இல்லை என்றவர்,
நான் சொல்றதுக்கெல்லாம்
மாதேஷ் சரி சொன்னா அவனுக்கு அந்த இடத்தை நாளை காலையில் அவன் பெயரில் ரெஜிஸ்டர்
பண்ணி கொடுக்கின்றேன் என்று சொல்லு என்றார் .
முதலில் நாளைக்கு
ரெஜிஸ்டர் பண்ணலாம் என்று கூறி தன்னை இணக்கமாக பேசவைத்துவிட்டு இப்போ எதுவோ அவர்
சொல்வதற்கெல்லாம் சரி சொல்லணும் என்று சொல்கிறாரே..! ஏதோ வில்லங்கமான ஒன்றை கூறப் போகிறார் என்பதை உணர்ந்த மஞ்சுளா.
நீங்க முதல்ல சொல்லுங்க என்று முயன்று தன் குரலில் கடுமையை காட்டாதவாறு கூறினாள்.
அவன் அவனுடைய பிரன்ட் வசந்த்
கூட சேர்ந்துதான் கம்பெனி ஆரம்பிக்க பிளான் போட்டுருக்கான். அந்த வசந்த் பையன்
திறமையானவன்தான். ஏற்கனவே பிசினெஸ்
செய்துகிட்டுதான் இருக்கான் .
என்ன! இன்னும் கொஞ்சம்
அவன் பிஸ்னஸ்பார்கிறதை விரிவா பார்க்கணும் என்று நினைக்கிறான் ஆனால் செய்றதுக்கு
நிறைய காசு வேணும், பயபுள்ளைக்கிட்ட அவ்வளவு காசு இல்ல.
அதனால் தான், நம்ம பையனை
பார்த்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா செலவ பகிர்ந்து லாபத்தையும்
பகிர்ந்துகிடலாம் என்று பிளான் போட்டு இடம் பார்திருக்கிறார்கள்.
ஆனா! நான் என்ன
சொல்றேன்னா, காசு முழுவதுவும் நம்ம பையனே போடட்டும் அந்த வசந்தை வொர்கிங் பார்ட்னராக
இருக்கச் சொல்லலாம்,
நம்ம மாதேஷ் அப்பப்ப அங்க போய் பார்த்துக்கொள்ளட்டும் மத்தபடி அவன்
இங்கிருக்க பிஸ்னசை இங்க
இருந்து பார்த்துக்கிட்டா போதும், இதுக்கு சம்மதம் என்றால் அந்த இடத்தை அவன்
பேருக்கு நாளையே ரெஜிஸ்டர் பண்ணிடலாம் கேட்டுச் சொல்லு என்றவர் கைகழுவ எழுந்துச்
சென்றுவிட்டார்.
அவர் சென்றதும், டைனிங்
டேபிளின் சேரில் உட்கார்ந்து யோசனையுடன் இருந்த மகளின் அருகில் வந்து அமர்தார்
மனோன்மணி. தன் தோளில் தொட்ட அம்மாவை
திரும்பிப் பார்த்த மஞ்சுளா, அவர் சொல்றது போல் மாதேஷை சென்னையில் ஆரம்பிக்கப்
போகும் தொழிலுக்கு முதல் போடச்சொல்லி அவன் நண்பனை வொர்கிங் பார்ட்னராக இருக்கச்
சொல்லிடலாமா அம்மா . இங்கிருக்கிற பிசினசை அவன் இங்க இருந்தாத்தானே கத்துக்கிட்டு
காப்பாத்த முடியும் என்று கூறினாள்
அவள் கூறியதை கேட்ட
மனோன்மணி உன் புருஷன் வெளியில மட்டும் பிசினஸ் பார்க்காம குடும்பத்துக்குள்ளேயும்
அந்த திருக்கை கொண்டுவந்து உன்னை மடக்கிட்டாரு மஞ்சு. நீ இன்னும் விபரம் தெரியாதவளாகவே
இருந்தால் எப்படி? என்றாள்
என்னம்மா சொல்றீங்க!
எனக்கு கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்களேன் என்றாள் மஞ்சுளா.
அடியே உன் மகன் அங்க
இருக்கிறது, உன் புருசனுக்கு அவளை பார்க்கப் போவதற்கு இடைஞ்சலா இருக்குது. இவர்
அங்க போனதும் விஷயம் கேள்விப்பட்டா இவன் நேராவே அவரை பார்க்கப் போகுற சாக்கில்
அங்க இருக்கிற அவளையும் அவ மகனையும் உரசிப்பார்த்துடுவான்றதால அவனை சென்னையை விட்டு நகட்டப் பாக்குறாரு! நீ
பிடி கொடுத்துடாத என்றாள்.
சென்னையில்.....,
மாதேஷ்க்கு அவனின் தந்தை தனக்கு போட்ட
கண்டிசனை தனது அம்மா போனில் சொன்னதில் இருந்து செய்வதறியாது தவித்தான், ஏற்கனவே இதுவரை தான் அவர்களின்
குடும்ப பிசினசை பார்க்காமல் என்ஜாய் செய்தது பொருக்காதுதான் தன் தந்தை தன்னை
கூப்பிட்டுவைத்து ஒன்னு ஒழுங்கா வந்து எல்லாத்தையும் பார்த்துக்கோ..., இல்லாட்டி
நான் உன் கிரிடிட்கார்டு,டெபிட் கார்டு மற்றும் உனக்கு செலவுக்காக ஆபீசில் அக்கண்வுன்டில்
எடுக்கும் பணம்
எல்லாவற்றையும் முடக்கிவிடுவேன், கையில் காசு இல்லாமல் இருந்தாத்தான்
உனக்கு உழைத்து சம்பாதிக்கணும் என்ற எண்ணம் வரும் என்று கூறினார்
அவர் கூறியதை தான்
அலட்சியப்படுத்தியதால் அவர் சொன்னபடி செய்து என் கையில் காசு இல்லாமல்
செய்துவிட்டார்.
பின் பாட்டிதான்
அவர்களின் டெபாசிட்டில் இருந்து எனக்குப் பணம் கொடுத்து என்னை இக்கட்டில் இருந்து
காப்பாற்றினார்கள்
ஆனால் ஒருமாதம் கழித்து
பாட்டியே ஏன்கன்னு! நீ கொஞ்சம் தொழிலை பார்க்கக் கூடாத என்று புலம்ப
ஆரம்பிச்சுடுச்சு.
பிறகு நான் தான் அந்த
ஆதித் மட்டும் சுயமா தொழில் செய்து சம்பாதிக்கிறான் நான் மட்டும் என்ன குறைச்சலா
எனக்கும் பணம் வாங்கிகொடுங்கள் நானும் அவனைவிட முன்னேறி காட்டி அப்பா முகத்தில்
கரியை பூசிக்காண்பிக்கிறேன் என்று கூறி இங்க வந்து சென்னை வாழ்க்கையை சந்தோசமாக
பாட்டி காசில் என்ஜாய் பண்ணிட்டு
இருந்தேன்.
ஆனால் கையில் இருக்கும்
காசு குறையும் நேரம் இந்த வசந்தை பார்த்தேன். அவன் பிஸ்னசை விரிவுபடுத்தக் கையில்
காசு இல்லாமல் முளித்துக்கொண்டிருந்ததையும் பார்த்தேன்.
அவனுடன் பார்ட்னராக
சேர்ந்து பிசினஸ் செய்ய பணம் போடுறேன் என்று கொக்கியை போட்டேன், பட் முதல் மட்டும்
தான் நான் போடுவேன், லாபத்தில் எனக்கு பங்கு நீ கொடுத்திடனும் என்றும் அவன் தொழிலை பார்த்துக்கொள்ள நான் தொழில்
செய்கிறேன் என்ற பேரில் வாழ்கையை என்ஜாய்
பண்ணலாம் என்று பார்த்தால் விடமாட்டார் போல என்ன செய்ய அவர் சொல்வதற்கு சரி
சொல்லிவிடுவோமா...? என்ற யோசனையுடன் காரில் சென்றவன் அந்த ஷாப்ட்வேர் கம்பெனியின் முன்
காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
அவன் நேராக எம்.டி
வசந்தன் என்ற பெயர் போட்ட அறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைகையில் எதிரில்
இருந்தவனிடம் கோபமாக வசந்த் கத்திக்கொண்டு இருந்தான்.
டேய் இது நான் பிசினெஸ்
பண்ணும் இடம், நம்ம பிரண்ட்ஷிப் எல்லாம் நாம் வெளியில் மீட் பன்னும் போது தான்,
இங்கவருகின்ற ஜோலியெல்லாம் வச்சுக்ககூடாது. வா! எதுனாலும் நாம் வெளியில் போய்
பேசலாம் என்று வசந்த் எதிரில் உட்கார்ந்திருந்த நரேனிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.
கதவு திறக்கும் அரவம்
உணர்ந்து யார் என்று பார்த்தனர் வசந்தும் நரேனும்
மாதேஷை பார்த்ததும் தனக்கு
சப்போர்ட்டுக்கு ஆள் வந்த சந்தோசத்தில் டேய் மாதேஷ் வசந்த்தை பாரடா எனக்கு ஓர்
இக்கட்டான நிலைமை இவனால் உதவ முடியும் ஆனால் செய்ய மாட்டேங்கிறான் நீ கொஞ்கம் ஹெல்ப்
பண்ண சொல்லுடா என்று கூறினான் நரேன்.
அவன் கூறிக்கொண்டு இருக்கும்
போதே மாதேஷ் நீ இவனுக்கு சப்போட் பண்ணாத. வா வெளியில் போய் மத்ததை பேசலாம் என்றவன்
தனது அசிஸ்டென்டை அழைத்து செய்ய வேண்டிய வேலைகளை செல்லி விட்டு வெளியில் வந்தனர்
வெளியில் வரும் போது
மாதேசிடமும் வசந்திடமும் பின்னால் தன்னை
மறைத்து குனிந்தபடி வந்த நரேன். நான் சொல்கின்றவளை இரண்டு பேரும் பார்த்துக்கோங்க மத்ததை
வெளியில் போனதும் சொல்கிறேன் என்றான்
கண்ணாடி தடுப்புக்கு
அந்தபக்கம் உட்கார்ந்து கம்யூட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அழகுநிலாவை
இருவருக்கும் அடையாளம் காண்பித்தான் .
மூன்று பேறும் வெளியில் வந்ததும்
அருகில் இருந்த ரெஸ்டாரெண்டுக்கு சென்றதும் இப்பொ சொல்லு அவளை எதுக்கு அடையாளம்
காண்பித்த என்று கேட்டார்கள் மாதேஸும்,வசந்தும் .
அந்த நரேன் என்பவன் வேறு
யாரும் இல்லை ஹோட்டலில் வைத்து அழகுநிலாவிடம் வம்பிளுத்தவன் தான் அவன்.
நரேன், இரண்டு நாள்
முன்புதான் தனது மற்ற நண்பர்களுடன் அருகில் இருந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு
போனதும் அங்கு அழகுநிலாவின் துருதுருப்பிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு தன்
நண்பர்களிடம், சபலத்தால் அவளை தொட்டுப்பார்க்க விரும்புவதாக பெட் கட்டி அது போல்
சரியாக எல்லாம் நடந்து முடிக்கும் நேரத்தில் குறுக்கே ஒருவன் வந்து அத்தனை
சந்தோசத்தையும் கெடுத்ததோடு அல்லாமல் தனது மொபைலையும் பறித்து அழகுநிலாவிடம்
கொடுத்த விபரத்தையும் கூறினான்.
அவன் கூறி முடித்ததும்
வசந்த் டேய் நீ யாரு என்று தெரிந்துமா உன் மேல் ஒருவன் கை வைத்தானா? என்று கேட்டான்,
ஆமாம்’ அந்த நரேன் மினிஸ்டர்
காந்தனின் மகன் . டேய் நான் யார் என்பதை சொன்ன பிறகு தான்டா அவன் என்னை அடித்தான்.
பிறகு அவனை பத்தி விசாரித்தபோதுதான் தெரிந்தது அவன் பேர் ஆதித்தராஜ்
ஜானகிபில்டரின் எம் டி என்று தெரிந்து கொண்டேன்.
என் அப்பாவிடம் அவன்
என்மேல் கை வைத்துவிட்டான் என்று சொன்னேன்
என்றான்.
நரேனின் “மனதிற்குள்
அன்று தான் ஆதித்தின் பெயரைச் சொல்லி தான் விசாரித்ததை வைத்து அவன் யார் என்று சொன்னதும்,
அவர் தன்னை அடிக்க வந்துவிட்டார்.
திகைத்து போய் நின்ற
நரேனிடம் அவனின் அப்பா யார் கூடபோய்
மோதிட்டு வந்திருக்கிற, நம்ம புது
பார்ம்ஹௌசிற்கு பிளான் போட்டு கட்டிக்கொடுத்தவன் அவன் தான்.
அந்த வீட்டின் ரகசியம்
முழுவதுவும் தெரிந்தவன் அவன்தான் அவனை பகைத்துக்கொள்வது நமக்கு நாமே ஆப்பு
வைத்துக் கொள்வதுபோல் என்று கூறியதை நினைத்தான்”
நரேன் அப்படி
நினைத்துக்கொண்டு இருக்கையில் மாதேஷ்க்கு ஆதித்தராஜ் ஜானகி பில்டர்ஸ் எம்.டி என்ற பேர்
கேட்டதும் “தன் அப்பாவின் இரண்டாம் வீட்டின் மகன் அவன் என்பதை தெரிந்துகொண்டான்”
இவனுக்குத்தான் ஏற்கனவே
வர்ஷா கூட லவ் ஓடிட்டு இருக்கு என்று பார்த்தால் இப்போ இன்னொரு கிளாசிக் புயூட்டிக்காக
இவன் கூட சண்டை வேறு போட்டிருக்கிறான் எப்படித்தான் இவனுக்கு மட்டும் அழகான
பொண்ணுங்க எல்லாம் செட் ஆகுதோ..? என்று மனதிற்குள் கடுப்பாக யோசித்துக்கொண்டு
இருந்தான்.
வசந்த்.... என்னடா இரண்டு
பெறும் சைலன்ட் ஆகிட்டீங்க, என்றதும் தங்களின் யோசனையில் இருந்து மீண்டு
இரண்டுபேரும் பார்த்ததும், வசந்த் நரேனிடம் அதுதான் உன் அப்பாவிடம் சொல்லிடீயே
அவனை உன் அப்பா சும்மாவா விடுவார் என்று கேட்டான்.
அவன் அவ்வாறு சொல்லியதும்,
நீவேற! ஏன் கடுப்பை கிளப்பற என் அப்பா
என்னடா என்றால் என்னையே அடிக்க வந்துட்டார்! என்றவன், ஏன் அவர் தன்னை அடிக்க
வந்துவிட்டார் என்ற உண்மை காரணத்தை மறைத்து அவர்களிடம் அந்த ஆதித்தராஜ் தலைவருக்கு வேண்டிய ஆளாம். “அவனை
பகைத்துக்கொண்டால் தலைவரை பகைத்துக்கொள்வது போல்!” என்று என்னை அடக்கி வாசிக்க சொல்லி
அரட்டுகிறார் என்றான்.
சரிடா , இப்போ என்ன போன்
தானே போச்சு, உனக்கு என்ன அது ஒரு மேட்டரா மாசம் ஓர் போன் மாற்றுகிறவன் தானே
நீ. அதை என் ஸ்டாப் அழகு நிலாவிடம்
திரும்ப வாங்கப் போய் திரும்ப ஏதேனும் பிரச்சனை அந்த ஆதித்தராஜ் பண்ணினால் பிறகு
உன் அப்பா உன்னை உண்டு இல்லைன்னு செய்துடப்போறார், இந்த மேட்டர இதோட விட்டுரு
என்றான் வசந்த்.
அவன் அவ்வாறு கூறியதும்
டெண்சனான் நரேன் வசந்திடம் டேய் வசந்த் போன் எனக்கு முக்கியமில்லை ஆனால் அதில்
நான் பெட் கட்டி எடுத்த போட்டோஸ்
வீடியோஸ் எல்லாம் இருக்கு அது தான்டா பிரச்சனை
என்றான்.
அவன் சொன்னதும் என்ன....?
நீ அதையெல்லாம் சேவ் பண்ணியா வச்சிருக்க... என்று வசந்த் மாதேஷ் இருவரும் கோரசாக
பயந்த குரலில் கேட்டனர்.
மாதேஷ் மற்றும் வசந்த்
,நரேன் மற்றும் இன்னும் சில பணக்கார வீட்டு பசங்கள் எல்லோரும் காலேஜில் ஒன்றாக படிக்கிறேன்
என்ற பெயரில் சுற்றித்திரிபவர்கள்.
அவர்கள் எல்லோரும் படித்தது
ஓர் தனியாரின் செல்வந்தர்கள் வீட்டு பசங்கள் அதிக
டொனேசனும், பீசும் கட்டி படிக்கும் ஓர் கல்லூரி.
அவனுடைய செட்டில் வசந்த்
மட்டும் ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் மெரிட்டில் டொனேசன் மட்டும் இல்லாமல்
ஆனால் பீஸ் அதிகம் கட்டி அவன் ஆசைக்காக அவனது பெற்றோர் அந்த காலேஜில்
கஷ்ட்டப்பட்டு அவனை சேர்த்தார்கள்.
அங்கு வசந்துக்கு
மாதேஷின் நட்பு கிடைத்தது ஓர் விதத்தில் அவனுக்கு சந்தோசமாக இருந்தது. ஏனெனில்
மாதேஷ் வசந்தின் குடும்ப சூழலைப் புரிந்து
கொண்டு அவனுக்கு அவன் ஏழ்மை தெரியாதவாறு தனது நட்பு வட்டத்துக்குள் அவனுக்கான்
செலவுகளையும், உடை போன்ற விசயங்களையும் தானே பூர்த்தி செய்தான்,
அதற்கு பதிலாக வசந்த்
அவனுக்கு பாடத்தில் நோட்ஸ் எடுக்க செமஸ்டர் டைமில் தனது குறிப்பு கொண்டு அவனுக்கு
எக்ஸாமில் பாஸ் ஆகும் விதத்தில் உதவி புரிந்தான்.
மாதேஷ் ஒன்றும்
மூளையில்லாதவன் கிடையாது. ஆனால்! ஒழுங்காக வகுப்பு அட்டன் பண்ணாமலும் அப்படியே வந்தாலும்
அசால்டாக நோட்ஸ் எடுக்காமலும் காலேஜ் வாழ்க்கை என்பது அனுவிப்பதற்கென்றே வாழ்பவன்.
அவ்வாறு இருந்த போதும்
எக்ஸாம் டைமில் சுருக்கமாக வசந்த் கூறும் பாடக் குறிப்புகளை புரிந்து கொண்டு அரியர் இல்லமால் பாஸ்
செய்வற்குன்டான புத்தியும் அதற்காக உதவும் வசந்தினை தக்க வைப்பதற்கு லக்சூரியஸ்
வாழ்க்கை வாழ வசந்துக்கும் சேர்த்து பணம்
செலவு செய்வது ஒன்றும் அவனுக்கு பெரிய
விஷயமாக இருக்கவில்லை.
மாதேஷ், சிறுவயதில் தன்
பாட்டியின் முழு பராமரிப்பில் வளர்ந்தவன் அவன் சிறியவனாக இருக்கும் போது அவனின்
பள்ளியிலேயே அவரின் அப்பாவின் மற்றொரு மனைவியின் மகனான தன்னை விட ஒரு வயது
சிறியவனான ஆதித்தும் படித்தவிசயத்தை முதலில் அறியாமல்தான் இருந்தான்.
ஆனால் ஓர் நாள் தனது
தந்தையின் கார்களில் ஒன்றில் தனது வீட்டு டிரைவர் ஓர் பையனை ஸ்கூலில் வந்து
இறக்கிவிடுவதை தற்செயலாக் பார்த்தான்
மாதேஷ் .
அவன் வேகமாக தனது டிரைவரை
கூப்பிடுவதை டிரைவர் கவனிக்காமல் சென்று
விடுகிறான் உடனே உள்ளே சென்று கொண்டிருந்த அந்த பையனிடம் போய் யார் டா நீ? எப்படி
என் அப்பா காரில் வந்து இறங்குகிறாய்?
என்று விசாரித்தான் அதற்கு அவன் அது ஒன்றும் உங்க அப்பா கார் கிடையாது. என்
அப்பா கார் .
நான் இன்று ஸ்கூல் பஸ்ஸை
மிஸ் பண்ணிட்டேன் அதனால்தான் என் அப்பா காரில் வந்தேன் என்று கூறினான். அவன்
சொல்வதை பார்த்து குழம்பியபடி சாயங்காலம் வீட்டிற்கு போனதும் தனது பாட்டியிடம்
அன்று நடந்ததை கூறினான் மாதேஷ் .
ஏற்கனவே மனோன்மனிக்கு தன்
மருமகன் இன்னொரு பெண்னை மணந்திருக்கும் விஷயம் தெரிந்தும் அதை கண்டிக்க முடியாமல்
வேதனையில் இருந்தவருக்கு தன் பேரன் அந்த சிறுவன் பற்றிக் கூறியதும் அது தன்
மருகனின் இரண்டாம் மனைவியின் பிள்ளை என புரிந்து கொண்டார்.
எனவே தன்னால் தன்
மருமகனையும் அவரின் இரண்டாம் மனைவியையும் தண்டிக்க முடியாத ஆத்திரத்தை தன் பேரனின்
மூலம் அந்த சிறுவனை காயப்படுத்துவதில் தணிக்க எண்ணினார்.
எனவே அவனது
பாட்டி,மாதேஷிடம் அந்த பையன் ஆதித்தின் அம்மா பெயர் ஜானகி, அவன் ஒன்றும் உன் அப்பாவின் வாரிசு
கிடையாது நீ மட்டும் தான் உன் அப்பாவின் வாரிசு. அவன் உன் அப்பாவின்
வைப்பாட்டியின் மகன் என்று கூறினாள்
அவனுக்கு அந்த சிறு
வயதில் தன் தந்தைக்கு வைப்பாட்டி ஒருத்தி இருக்கிறாள் என்று தெரிந்ததும் எதுவோ
புரிந்த மாதிரி இருந்ததது. இருந்தாலும் தன் பாட்டியிடம் வைப்பாட்டி என்றால் என்ன?
என்று கேட்டான்.
அதற்கு உன் அப்பாவிடம்
நிறைய காசு இருக்குதுள்ள அது தெரிந்து
அவரிடம் இருக்கும் சொத்து, பணத்திற்காக சிமிட்டி உன் அப்பாவை மயக்கி அவகூட தங்க
வச்சுகிடுறா. அதனால்தான் அவ வப்பாட்டி என்றாள்.
உடனே அப்போ நம்ம அப்பாவை அவங்களே
வச்சுகிடுவாங்களா பாட்டி? என்று கேட்டான்.
அதனை கேட்ட மனோன்மணி அவனிடம், நானும் உன் அம்மாவும்
அப்படி விட்டுடுவோமா…?, நம்ம மாதிரி
பணக்கார வீட்டுல உள்ள ஆம்பளைங்க என்ன தான் வப்பாட்டி வச்சுகிட்டாலும் பொது
இடத்துக்கு பொண்டாட்டியைக் கூட்டிட்டு போனாதானே மதிப்பு, என்று கூறி அந்த அறியா
சிறு வயதில் அவனது மனம் என்னும் குளத்தில் கல் எரிந்து கலக்கி விட்டாள் மனோன்மணி.
அதனால் மாதேஷின்
பார்வையில் பெண்கள் என்பவர்கள் ஆண்களை தன் அழகால் மயக்கப் பார்பவர்கள் என்ற தப்பான
எண்ணம் பதிந்தது. எனவே பெண்களை அவன் பார்க்கும் கண்ணோட்டம் வளர வளர வேறுவிதமாக
மாறியது, அதற்கேற்றார் போல் அவனுக்கு
கையில் நிறைய காசும் சேர்க்கையும் அவனை தடம் புரள வைத்தது.
கல்லூரியில் வாழ்கை
அனுபவிக்க என்ற எண்ணம் உள்ள செல்வந்தர் வீடு கன்றுக்குட்டிகளுடன் இணைந்து கொண்டான்.
அதில் நரேனுக்கு
எப்பொழுதும் போனில் அழகான பெண்களின் அசந்தநேரம் வெளிப்படும் அங்கங்களை பெட் கட்டி
போட்டோ எடுக்கும் பழக்கம் இருந்தது, அதனால் தான் அவனின் போனில் போட்டோஸ் வீடியோஸ்
டெலிட் பண்ணவில்லை என்று தெரிந்ததும் அதிர்ந்தனர் அவனது நண்பர்களான மாதேசும்
வசந்தும்.
மேலும் அவர்கள் கேங்
உள்ளாசமாக இருக்கும் போதும் நரேனின் போட்டோ எடுக்கும் பழக்கத்தால் அதையும் சூட்
செய்திருந்தான் தன் போனில்,
உடனே மாதேஷ் “டேய் போன
மாதம் நாம் ரெசார்ட் போனபோது சூட் பண்ண போட்டோசும் அதில் தான் இருக்கா..?” என்று டெண்சனாக
கேட்டான்.
அவன் ம்... என்று
சொன்னதும் ஆடிப்போய்விட்டான் மாதேஷ்.
உடனே வசந்த் என்னடா
விஷயம் என்ன ரெசார்ட்! போட்டோஸ்! என்று சொல்றீங்க எதுவும் எக்குத்தப்பான போட்டோஸ்
அதில் இருக்கா என்று கேட்டான் ?
அவன் கேட்டதும் போடா
சாம்பாரு நீ தான் மேட்டர் பண்றதுள்ள
எல்லாம் கலந்துக்கிடமாட்டியே
போன மாதம் டிஸ்கோத்தே
போனோமா,அப்ப அந்த ஆக்டர் ரம்யா வந்திருந்தா செம ஹாட்டா இருந்தா நம்ம நரேனை ஏற்கனவே
மினிஸ்டர் மகன் என தெரிந்து வைத்திருந்தாள்.
எனவே லேசாக அவகிட்ட பேசி கரைக்ட்
பண்ணி ரெசார்டுக்கு தள்ளிட்டு போய் என்ஜாய் பண்ணினோமா! அப்பா இந்த நரேன் லூசு
எப்பவும் போல் நாங்க சேர்ந்து என்ஜாய் பண்றத செல்பி எடுத்தான்
அப்போவே நான் உசார் ஆகி
இவனை அதை என் கண் முன்னாடி டெலிட் பன்னச்சொன்னேன். ஆனா இவன் என்னவோ சொல்றான் என்று
மூட் அவுட்டாகி கூறினான் .
என்னதான் அயோக்கியர்களாக
இருந்தாலும் தொழிலதிபர்களின் பையன்களும் அரசியல்வாதிப் பையன்களும் நடிகையுடன்
செய்யும் தவறுகள், போட்டோவுடன் நெட்டில் வெளியேறினால் காட்டுத் தீ போல் பரவி
சமுதாயத்தில் அவர்களுக்கு ஏற்படும் தலையிரக்கத்தை
நினைத்து கதிகலங்கி போய்விட்டனர் மூவரும்.
இப்பொழுது புரியுதா வசந்த் அதை ஏன் அவளிடம் இருந்து வாங்கணும் என்று
சொல்கிறேன் என்றான் நவீன். ஆனால் அந்த
போட்டோசை அவளால் பார்த்திருக்க முடியாது ஏனென்றால் என் போனை ஆன்செய்ய என்னை தவிர
மற்றவர்களால் முடியாது மேலும் அவள் கைக்கு போனதில் இருந்து அது சுவிட்ச்டு
ஆப்பிலேயே இருக்கு என்றான்.
அவன் கூறியதை கேட்டு
மாதேஷ் ஆத்திரத்தில் நான் அப்போவே அதை டெலிட் பண்ணச் சொன்னேனே என் கண் முன்னாள்
தானே டெலிட் பண்ணின
என்றதும் நரேன் அதுதான் டெலிட்டான
வீடியோசை ரெக்கவர் செய்வதற்கு சாப்ட்வேர் இருக்கே அதை திரும்ப கொண்டுவந்தரலாம்
என்று தெரிந்ததனால் தான் உன் கண் முன்னே டெலிட் செய்து பின் அதை ரெக்கவர்
பண்ணிவிட்டேன் என்றான் நரேன் .
அன்று அவர்கள் ஓர்
இரண்டாம் கட்ட நாயகியை நைட் கிளப்பில்
இருந்து நேரடியாக அந்த ரெசார்டுக்கு கூட்டிச்சென்று கூத்தடித்திருந்தனர் அது
மட்டும் வெளியில் லீக் ஆனால் அவ்வளவு தான் என்று தலையில் கை வைத்து
உட்காந்துவிட்டனர்.
பாவம் அழகுநிலா
கழுகுகளின் பார்வை வட்டத்தில் விழுந்துவிட்டாள் அவர்களிடம் இருந்து அவள் தப்பிப்பாளா..?
அல்லது மனிதப் போர்வைக்குள் இருக்கும் அந்த மிருகங்களின் முகத்திரையை அவள்
கிழித்தெறிவாளா..?.
----தொடரும்----

Very Nice ud
ReplyDeleteThank you Vasanthi.
Delete