ஒளிதருமோ என் நிலவு....! [தீபாஸ்-ன்]
அத்தியாயம்-05
அன்று காலையில்
ஆதித் எழுந்ததும் நேற்று தன் அம்மாவிடம்
கொடுப்பதற்கு எடுத்து வைத்திருந்த அந்த ஒன்றேகால்கோடி ரூபாய் செக்கை எடுத்து
சரிபார்த்து மேஜையில் வைத்தவன் பின் காலைக் கடன்களை முடித்து வெளியில் வந்து உடையுடுத்தி
கண்ணாடி முன் நின்றவனின் மனம் நேற்று தான் மீட்டிங்கில் இருக்கும் போது, விடாது
போன் செய்த வர்சாவை நினைத்தபடி முகத்தில் ஓர் சிரிப்பைய் உதிர்த்தவன், “யப்பா!
பிஸ்னசை ஹேண்டில் பண்ணுவதை விட இவளை சமாளிக்கறது தான் பெரிய விசயமாக இருக்கு” என்று வாய்விட்டே
கூறினான்.
பின், இப்போ
அவளுக்கு போன் செய்யவில்லை என்றால் பிசியா இருக்கும் போது தொந்தரவு பண்ணுவா என்று
நினைத்தபடி தனது மொபைலை எடுத்து அவளை அழைத்தான்.
தூக்க
கலக்கத்துடன் போனை எடுத்த வர்ஷா சோம்பல் கலையாத குரலில் போனில் குட் மார்னிங் ஆதித்.என்றதும்
ஆதித் தனது முத்தத்தை இச்.... என்று அழுத்தமாக போனில் அவளுக்கு கடத்தியவன், “ஸ்வீட்
மார்னிங் பேபி”! என்றான் .என்ன நீங்க நான் நேற்று அத்தனை தடவை போன் செய்தும் பிசி... பிசி..
என்று சொல்லி நான் சொல்லவருவதை கேட்காமல் வைத்துவிட்டு இப்பொழுது மட்டும் என்ன
கொஞ்சல்... என்று கேட்டாள்.
நீ கால் பண்ணும்
போது ஒரு முக்கியமான் மீட்டிங்கில் இருந்தேன். அதனால் தான் பேச முடியல பேபி என்று
பொறுமையாக அவளிடம் பேச நினைத்தாலும் அவனது குரலில் எரிச்சலின் சாயல்
எட்டிப்பார்த்தது.
நேற்று ஆதித்
தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்று கோபத்தில் இருந்த வர்ஷாவிற்கு இன்று காலையிலேயே
அவன் அழைத்து பேசவும் கொஞ்சம் தனிந்திருந்தது
ஆனால் அவனின்
பொறுமை இழந்து பேசும் குரலின் அடையாளம் கண்டு கொண்ட வர்ஷாவால் மட்டுப்படுத்த
முடியாமல், நேற்றைய கோபம் வார்த்தையால் வெளிப்பட்டது.
ஆக்சுவலா நான்தான்
உங்க மேல எரிச்சல் படனும் ஆதித். பட்,
நீங்க ஏன் எரிச்சல்படுகிறீர்கள்...? என்ன அதுக்குள்ள நான் உங்களுக்குப் போர்
அடித்துவிட்டேனா..? அவ்வளவு கஷ்ட்டப்பட்டு ஒன்றும் நீங்க என்னிடம் பேச வேண்டாம்
என்றாள்.
அவள் டென்சனானதும்
யேய்...! வர்ஷா காலையிலேயே மூட் அவுட் ஆக்காதே..! நான் நல்ல படியா உன் கூட பேசி
உன்னை கூல் செய்யத்தான் இப்போ போன் பண்ணினேன், நீயும் தான் கொஞ்சம் என்னை புரிந்து
நடக்க ட்ரை பண்ணு வர்ஷா.
நான் பிசியா
இருக்கேன்னு சொன்ன பிறகும் நேற்று திரும்பத் திரும்ப போன் பண்ணின, அதை ஞாபகப்
படுத்துனா எரிச்சல் வராதா...? ஓகே பேபி, இப்போ சொல் நேற்று எதற்கு எனக்கு போன்
பண்ணின என்று கேட்டான் ஆதித்.
ஆதித் சிங்கம்
போன்றவன். யாரிடமும் இதுவரை அவன் தனிந்து பேசியதில்லை. அவனுக்கு ஏற்ப மற்றவர்களை
ஆட்டுவிப்பவன். ஏனோ வர்ஷவிடம் இந்த அளவு அவன் இறங்கிபேசியதே அவளை அவனின்
சரிபாதியாக ஆக்க நினைத்ததினால் தான்.
அவனின் குணம்
வர்ஷாவிற்கு இத்தனை நாள் பழக்கத்தில் அறிந்ததுதான் இருந்தாலும் அவளும் இதுவரை
யாரையும் அனுசரித்து நடக்கும் பழக்கம் இல்லை. ஆதலால் ஆதித்தின் அடக்குமுறை மனதின்
ஒருபுறத்தை சிலிர்த்தெழவைத்தாலும் காதல்
கொண்டுள்ள மற்றொரு புறம் அவனுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வைத்தது வர்ஷவை .
எனவே தனது கோபத்தை
தற்செயலாக ஒத்திப்போட்டவள், கொஞ்சும் குரலில் ஆதித்...நேற்று ரோஸி சொன்னா, மாலில்
உள்ள டைமண்ட் ஷோ ரூமில் லேடஸ்ட் கலக்சென்ஸ்
வந்திருக்குதாம்
அவளுக்கு முன்
அதில் உள்ள பெஸ்ட் ஐ நான் வாங்கனும் என்று நினைத்தேன் அது தான் நீங்க போன் கூட
பேசமுடியாமல் இருந்தீங்களே! பிறகு எப்படி என் கூட ஷாப்பிங் உங்களால் வரமுடியும்
என்று தான் அவளுக்கு முன் வாங்க முடியாத ஏக்கத்தை குரலில் வழியவிட்டபடி அவனிடம்
கூறினாள்.
அவளில் ஏக்கத்தை
போக்கும் விதமாக, என்னோட பேபி எதுக்கும் ஏங்க கூடாது. டுமாரோ ஆப்டர்நூன் நான் ப்ரீ
தான் அப்போ போகலாம் ரோஸி வாங்குவதை விட பெஸ்ட்டாக நான் உனக்கு வாங்கிக்
கொடுக்கிறேன் அப்படி வாங்கி கொடுத்தால் என்னை ஸ்பெசலாக கவனிக்கணும் என்று ஹஸ்கி
வாய்சில் அவளிடம் கூறினான்.
நோ... ஆதித் ஒன்லி
கிஸ் மட்டும் தான். வேற எக்ஸ்படேசன் வச்சுகிடாதீங்க ஆதித். அப்படி நிறைய எதிர்பார்த்தா எனக்கு நம்
கல்யாணத்துக்குப் பிறகே நீங்க வாங்கி கொடுங்க என்றாள்.
அவனிடம் பதில் இல்லாது
அமைதியாக இருந்த போனை பார்த்து தான் கூறியது அவனை கோபப்படுத்திவிட்டதோ..? என
நினைத்தவள் அவனை சமாதானபடுத்தும் நோக்கத்துடன்
ஸ்வீட் டார்லிங்ல
கோபமா, பதிலே காணோம். நான் அல்ரா மாடனாக இருந்தாலும் சில விசயங்களில் நீங்க எப்படி
இப்படித்தான் இருக்கணும் என்று விடாப்பிடியாக இருக்கிறீர்களோ
அதோ போல் இந்த விசயத்தில்
கல்யாணம் முன் ஓர் லிமிட் வரைதான் அலோவ் பண்ணுவேன். நான் இப்படித்தான் ஆதித் உங்களால் வெய்ட் பண்ண
முடியாட்டி உடனே நம்ம மேரேஜ்க்கு ஏற்பாடு
செய்யுங்க என்றாள் வர்ஷா.
வர்ஷா, ஆதித்
எல்லை தாண்ட நினைக்கும் போது எல்லாம்
கல்யாணத்தை பற்றி பேசி அவனுக்கு தடை விதித்து விடுவாள். ஏனோ! அவன் அவளிடம்
காதல்கொள்வதில் இருந்த வேகம் கல்யாணம் என்று வருகையில் குறைவது போல்
அவளுக்குப்பட்டது .
அது அவளுக்கு
கொஞ்சம் சஞ்சலத்தை கொடுத்திருந்தது மேலும் அவளின் மேல் அவன் காண்பிக்கும்
அடக்குமுறை வேறு அவளுக்குள் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் ஆதித் அவளைத்தான்
கல்யாணம் செய்யப்போகிறோம் என்பதில் உறுதியாக இருந்தாலும் இப்பொழுது அவன்
ஏற்றிருக்கும் வேலை முடியும் வரை அவனால் கல்யாண ஏற்பாட்டில் முழுவதுமான
ஈடுபாட்டுடன் இருக்க முடியாது என்பதால்தான்
கல்யாணத்தை கொஞ்சம் தள்ளிப்போட நினைத்திருந்தான்
மேலும் அவனது
கல்யாணத்திற்கு கட்டாயம் அப்பாவை உடன் கூப்பிட்டுத்தான் எல்லா ஏற்பாடுகளையும்
செய்யவேண்டும் என்று அவள் அம்மா ஜானகி அவனிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தாள்
நீ உன் அப்பாவை
இதுவரை எதற்கும் எதிர்பார்க்கவில்லை என்பது, நான் காசுக்காக அவரை மணக்கவில்லை
என்று காண்பித்து என் கெளரவத்தை காப்பாத்தியதோ! அதே போல், உன் தந்தை அவர் தான்
என்பதை சபையில் காண்பித்து என் கற்புக்கு களங்கம் ஏற்படாமல் காப்பதுவதுவும் உன்
கடமையே என்று கூறியிருந்தாள்.
தன்னை போலவே தோற்றத்தில் இருக்கும் வேலாயுதத்தை தான் அப்பா
இல்லை என்று கூறினால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் என்றாலும், இது வரை அவரின் பெயரையோ
அல்லது தந்தை அவர் என்று தான் சென்னை வந்ததில் இருந்து யாரிடமும் அவன் கூறியதில்லை
தான் யாரிடமும் நெருக்கமாக பழகினால் அவர்களிடம் தனது குடும்ப விபரத்தை பகிர்ந்து கொள்ள
வேண்டியிருக்குமோ? என்ற காரணத்தால் பெர்சனலாக விசயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு
யாரையும் அவன் நெருங்கி பழக அனுமதித்ததில்லை.
ஆனால் தான் பிஸ்னசில்
கால் பதித்து அதில் நன்கு வளர்ந்து வருவதை பொறுக்கமுடியாத அவனின் தொழில் எதிரிகள்
அவனது பெர்சனல் வாழ்க்கையை கையில் எடுத்து கதைகட்ட முயன்றபோது கூட,
அதை வேலாயுதம்
தானாகவே முன் வந்து சில பத்திரிக்கையில் ஆதித் தன மகன் என்று கூறி அவர்களின் பேச்சுக்கு
முற்றுப்புள்ளி வைத்தார்.
அப்பொழுது வேறு
ஓர் பத்திரிக்கையில் இருந்து இளம் தொழில் அதிபர் விருது ஆதித் பெற்றதற்காக பேட்டி
எடுக்க வந்த நிரூபர், விசமமாக! நீங்கள்
தொழிலில் இந்த வயதில் இவ்வளவு பெரிய உட்சத்தை தொட்டதற்கு உங்களின் தந்தையின்
சப்போர்ட்டும் அவரின் வழிகாட்டலுமே காரணம் என்கிறார்கள் அது உண்மையா? என்ற கேள்வி
எழுப்பினான்.
அதற்கு திமிராக,
என் பிறப்புக்கு மட்டும் தான் அவர் காரணம் மற்றபடி எனது வாழ்க்கையில எனக்கும்
அவருக்கும் வேறு தொடர்பு எதுவும் நான் வைத்துக்கொலவில்லை என்று பேட்டி கொடுத்தான்.அப்படிப்பட்டவன்
,
இப்பொழுது
மட்டும் கல்யாணத்திற்காக அவரிடம் போய், எனக்கு தந்தை என்ற ஸ்தானத்தில் சபையில்
நில்லுங்கள் என்று கேட்க அவனுக்கு வாய்வரவில்லை.
ஆனால் எப்போது
தான் அவரை அப்பா என்று கூப்பிட்டு, சபையில் அவரை நிறுத்துவோம் என காத்திருந்தார் .
அவரை ஆதித் தள்ளி நிறுத்தும் போது அவர் மனம் காயம் படுவதையும் உணர்ந்தே.. இருந்தான்.
வெளியில் அவருக்கு
தான் தண்டனை கொடுப்பதாக நினைத்து அவரை தள்ளி வைத்தாலும் மனதினுள் அவனுக்கும்
அவரின் மேல் அன்பு இருக்கத்தான் செய்தது.
வர்ஷாவின்,
ஸ்வீட்டார்லிங் கோபமா? என்ன.. பதிலையே காணோம் என்ற குரலில் சுயநிலை அடைந்த ஆதித் நத்திங் பேபி.
நம்ம மேரேஜுக்கு
கொஞ்சம் வெய்ட் பண்ணு. எனக்கு கொஞ்சம் வேலை முடிக்க வேண்டியிருக்கு அதை
முடித்ததும் டும்....டும்... தான் பிறகு உன்கிட்ட
மற்றதுக்கெல்லாம் நான் எதுக்கு அனுமதி கேட்கனும் இப்போ நீ தராததுக்கும்
சேர்த்து வட்டிபோட்டு நான் வசூலித்துக்கொள்வேன்.
ஓகே டுமாரோ
ஆப்டர்னூன் 3 மணிக்கு உன்னை பிக்கப் பண்ணிக்கொள்கிறேன் பை பேபி என்றவன், போனை கட்
செய்து பாக்கெட்டில் போட்டவன் தன அம்மாவிடம் கொடுக்க எடுத்து வைத்திருந்த அந்த
செக்கை எடுத்து கொண்டு கீழே டைனிங் ரூமிற்கு வந்தான்.
கிளம்பிட்டாயா
ஆதித் என்று கேட்டபடி அங்கு வந்த ஜானகி முகம் மகிழ்ச்சியை பிரதிபலித்தது. அதனை பார்த்த ஆதித்
என்ன இன்று உங்க முகத்தில் பல்ப் எரியுது. என்ன உங்க ஆள் வருகிறாரா? என்று
கேட்டான் ஆதித்.
அவன் அவ்வாறு
கேட்டதும் போடா போக்கிரி, நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன். நீ உட்காரு!
உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று அவனுக்குப் பரிமாறிய ஐட்டங்களை
பார்த்ததுமே அவனுக்கு இன்று இருக்கும் உணவு வகைகளை கண்டு அவன் நினைத்தது சரிதான் என்பது போன்ற ஓர்
பார்வையை தனது அம்மாவிவ் மீது செலுத்தியவன்.
அது என்ன உங்க
வீட்டுக்காரர் வரும்போது எல்லாம் அடை தோசை காரச்சட்டினி, வடைன்னு அமர்களப்
படுத்துறீங்க இல்லாட்டி எனக்கு வெறும் சத்துமாவு கூழ், புரூட் சளெட் மட்டும் பண்றீங்க! என்று
வேண்டுமென்றே சீண்டினான்.
அவன் அவ்வாறு
சொன்னதும், டேய் ஆதித்! நான் உனக்கு விதவிதமாய் சமைத்தால் கோபப்பட்டாய், டயட்
என்று ஒரு லிஸ்ட்டை கொடுத்து அது தான்
வேண்டும் என்று என்னை மிரட்டினாய், இப்போ இப்படி சொல்ற! என்று கேட்டார்.
அதற்கு
சிரிப்புடன், சும்மா உங்களை கலாய்க்க சொன்னேன், டெய்லி இப்படி சாப்பிட்டா உங்க
புருஷன் மாதிரி எனக்கும் தொப்பை வந்துரும், சோ எனக்கு இப்படி டெய்லி செய்து
என்னுடைய பெர்சனால்டியை ஸ்பாயில் செய்திறாதீர்கள் என்று கூறி வயிறு நிறைய
சாப்பிடும் மகனை பார்த்து உழைக்கிற பிள்ளை இப்படித்தான் சாப்பிடனும். நீதான் டயட்
என்ற பேரில் உன் வயித்துக்கும் வாயிற்கும் வஞ்சனை பண்ற என்று கூறினார்
கைகழுவியபடி அவரது
பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டே வந்தவன், தன் பாக்கெட்டினுள் இருந்த அந்த செக்கை
எடுத்து அவன் அம்மாவிடம் கொடுத்தான் .
என்னது அது...
என்று பார்த்த ஜானகி, அது ஒன்றரை கோடி ரூபாய்கான காசோலை என்பதை அறிந்து
வருத்தத்துடன் என்னப்பா இது! என்று கேட்டாள்
அதற்கு, அம்மா!
இந்த பணம் நான் பிசினஸ் ஆரம்பிக்கும் போது நீங்க உங்கள் நகைகள் மற்றும் வீட்டை
அடகு வைத்து எனக்கு கொடுத்த ரூபாய் தான், நான் கடனாகத்தான் அன்னைக்கு வாங்கினேன் உங்களிடம் என்றான்.
அவன் அவ்வாறு
கூறியதும் ஏண்டா இப்படி சொல்ற நீ!. என் பெயரில் வாங்கி கொடுத்திருக்கும் வீட்டின்
மதிப்பு, நான் உனக்கு தொழில் துவங்க கொடுத்த இந்த தொகையை விட அதிகம். அப்படி
இருக்க நீ இதை எனக்கு திரும்பிக்கொடுக்கிறேன் என்று சொல்வது எனக்கு வருத்தமாக
இருக்கு ஆதித் என்றார்.
அம்மா அன்னைக்கு
நான். உங்கள் பணம் என்று நீங்கள்
கொடுக்கும் போதே நான் வாங்க
மாட்டேன் என்று தான் சொன்னேன்.
ஆனால், அந்தநேரம்
பார்த்து உங்கள் புருஷன் வந்து நீங்கள் எப்படி அவரின் வாழ்கையில் வந்தீர்கள் என்று
உங்களின் பிளாஷ் பேக் கதையை என்னிடம் சொல்லி
நான் உங்களை நினைத்து கொஞ்சம்
நெகிழ்ந்திருக்கும் போது நீங்கள் சாவு அது இது என்று என்னை கூறி ப்ளாக் மெயில்
செய்து என்னை இந்த பணத்தை வாங்க வச்சுட்டீங்க.
ஆனால் அப்போவே
நான் சொன்னேன் கடனாத்தான் நான் வாங்குகிறேன் என்று .மேலும் நான் சம்பாதிக்க
ஆரம்பித்த உடனேயே இதை உங்க கிட்ட கொடுக்கணும் என்று தான் நினைத்தேன்.
ஆனால்! முதலிலேயே
கிடைத்த லாபத்தை எடுத்துவிட்டால் ரொட்டேசனுக்கு பணம் பத்தாது என்று தான் ஒவ்வொரு
ப்ராஜெக்ட் செய்யும் போதும் ஓர் குறிப்பிட்ட அளவு லாபத்தின் ஒரு பகுதியை எடுத்து
வைத்து மொத்தமாக சேர்ந்ததும் உங்ககிட்ட கொடுக்கிறேன் .
நீங்க இதை
வாங்காவிட்டால் நான் கஷ்ட்டப்பட்டு ஆரம்பித்து இவ்வளவு தூரம் வளர்த்த இந்த தொழிலை
உங்களின்பேரில் எழுதி வைத்துவிட்டு நான் இந்த தொழிலில் இருந்து விலகி வேறு புதியதை
முதலில் இருந்து ஆரம்பிக்கும் படி ஆகிவிடும் என்று குரலில் உறுதியாக கூறினான் .
அவள் மனது வலிக்க,
அந்த காசோலையை வாங்கிகொண்டார் .அதன் பின் என்னப்பா இப்படி சொல்கிறாய் என்னிடம்
உள்ளது எல்லாம் எனக்குப் பிறகு உனக்குத்தானே என்று கூறினார் ஜானகி
அதற்கு ஓர் கசந்த
புன்னகையுடன் அது உங்களுடையது என்று நீங்கள் சொன்னாலும் அது எல்லாம் மிஸ்டர்
வேலாயுதம் உங்களுக்கு வாங்கிக்கொடுத்ததுதான். அதை நான் எப்பொழுதும் தொட்டுகூட பார்க்கமாட்டேன் என்றவன்.
ஓகே மா..... பை
எனக்கு நேரமாய்விட்டது நான் கிளம்புகிறேன் என்று கூறி அவன் வாசலுக்கு வரும் பொது
அவனின் தந்தை வேலாயுதத்தின் கார் அங்கு வந்து நின்று அதிலிருந்து இறங்கினார் அவர்.
இறங்கியவர்
ஆவலோடு அவனின் முகம் பார்த்தார். அவர்
பார்வையை பார்த்ததும் மனதினுள் நீங்களும் பதினெட்டு வருசமாக நான் அப்பா என்று
கூப்பிட மாட்டேன் என்று தெரிந்தும், என் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்து விடாதா என்று ஏக்கத்துடன் பார்ப்பதை
நிறுத்தவே மாட்டேன் என்கிறீர்களே..!
இது தான்
உங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை. இது எனக்கும் வருத்தமே.. என்று நினைத்தபடி
அவரது முகத்தை பார்த்துக்கொண்டே தனது காரினுள் ஏறி அமர்ந்தவன் அதனை வேகத்துடன்
எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
ஆதித்தின் மனம்
ஏனோ இன்று தன அம்மாவிடம் பேசிய
பேச்சுக்குப் பின்னும் தனது அப்பாவின் ஏக்கமான பார்வையை கண்டும் நீண்ட
நாளுக்குப் பின் திரும்பவும் இன்று கடவுளை
சபித்தது,
எதற்கு எனக்கு
இந்தநிலை என் மேல் பாசமான அம்மாவும் அப்பாவும் இருந்தும் என்னால் அவர்களின்
முறையற்ற திருமணத்தால் நான் அடைந்த அவமானத்தால், அவர்களை புறக்கணித்து என்னை நானே
தனிமைப் படுத்திக்கொள்ளும் நிலையை, உறவுகளை பற்றி புரிந்தும் புரியாமலும் இருந்த
அந்த எட்டாம் வகுப்பு குழந்தை பருவத்திலேயே கொடுத்தாய் என மருகினான்.
ஏனோ இன்று தனது
ஆபீஸ் போய் தனது வேலையில் ஈடுபாட்டுடன் செய்யமுடியும் என தோன்றவில்லை. எனவே தனது
பி.ஏவை மொபைலில் தொடர்புகொண்டு இன்றைக்கு தனக்கு முக்கியமான சந்திப்புகள் எதுவும்
இல்லையென்பதை உறுதிபடுத்திக்கொண்டு இன்று தன்னை எதற்கும் தொந்தரவு பண்ணவேண்டாம்
என்று கூறியவன் முதல் முதலில் அவனுக்கென்று அவன்
கட்டிய பங்களாவிற்கு வந்தான்.
அவனின் காரை
பார்த்ததும் முதலாளி என்பதை அறிந்து கொண்ட வாட்ச்மேன் கதவை விரிய திறந்துவிட்டான்.
காரை அதற்குரிய இடத்தில் பார்க் பண்ணாமல் வாசிலிலேயே நிறுத்திவிட்டு உள்ளே சென்ற
தனது முதலாளியை அதிசயமாக பார்த்தான் வாட்ச்மேன்.
ஏனெனின்
எப்பொழுதும் வந்தவுடனேயே காரை அதன் செட்டில் நிறுத்தி சுற்றிலும் உள்ள
தோட்டத்தையும் மற்ற இடங்களையும் பார்வையிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதனை
கண்காணித்து ஏதாவது கொஞ்சம் சரியில்லாமல் இருந்தால் வேலையாட்களை ஓர் பார்வையிலேயே
அதனை சரிசெய்ய வைத்துவிட்டு பின்புதான் அவனின் அறைக்கு செல்வான்.
ஆனால் இன்று
எதையும் கண்டுகொள்ளாமல் காரை அப்படியே விட்டுச் செல்லும் தன் முதலாளியை பார்த்தவன்
அதிசயப்படாமல் என்ன செய்வான்?.
தனது அறைக்கு
வந்தவன் அங்கிருந்த பிரிட்ஜில் இருந்து மதுவை எடுத்தான் அவனின் மனம் தனிமையை
வெறுத்தது அப்பொழுது அவன் கண்களுக்குள் தெரிந்தாள் வர்ஷா. அவன் உதடு அவனை அறியாமல்
பேபி ஐ நீட் யுவர் கம்பேனியன்,
ஆனா நீ இப்போ
உன்னை எனக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டய்யலவா? , சோ ஐ வில் டேக் இட்
என்று மது பாட்டிலை எடுத்தவன் அதனை கோப்பையில் கூட விடாமல் அப்படியே தொடையில்
சரித்தான். பழைய நினைவுகளில் இருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ளவேண்டும் என
முயன்றான்
ஆனால் அந்தோ
பரிதாபம் உள்ளே சென்ற மது அவனுக்கு மயக்கத்தை தராமல் தனிமையில் பழையநினைவுகளையே...
அசை போட வைத்தது.
மதுவின் போதையால்
அவன் வாய் தன அம்மாவிடம் பேசுவதுபோல் புலம்பியது. .அம்மா நான் உங்கட்ட சும்மா
சொன்னேன் நீங்க எனக்கு கொடுத்த பணத்தை நான் உங்களுக்கு திரும்பிக்கொடுக்கணும்
என்று நினைக்கவே இல்லை ஆனால் உங்க புருசனின் மூத்த மகன் அவன் பேர்
என்ன......ம்.....மாதேஷ் அவனை திரும்ப இங்க பார்த்த பிறகு கொஞ்ச காலமாய் நான்
மறந்திருந்த அவனின் வார்த்தைகள் திரும்ப ஞாபகம் வந்து என்னை கொல்லுதே என்றவனின்
எண்ணம் பின்னோக்கிச்சென்றது.
Episode 04 ----தொடரும்----

Very Nice ud
ReplyDeleteSuper Vasanthi Thank you pa.
Delete