anti - piracy

Post Page Advertisement [Top]


         ஒளிதருமோ என் நிலவு....! [தீபாஸ்-ன்]
                                   அத்தியாயம்-06
                               


மிகவும் சந்தோசமாக கவலை என்பதே தெரியாது இருந்தான் ஆதித்தராஜன். அவனுக்கு கண்டிப்புடன் இருக்கும் அவன் அம்மாவை விட செல்லமாக அவனை வைத்திருக்கும் அவன் அப்பாவைத்தான் ரொம்பவும் பிடிக்கும்.
       
அதுவும் அவன் அப்படியே அவன் அப்பாவின் உருவத்தையே உரித்து வைத்து பிறந்திருந்தான் அவரை போல் பேச்சு நடை எல்லாம் அவரை கொண்டே இருந்ததாலோ அல்லது அவரை விட புத்திசாலியாக சிறு வயதிலேயே இருந்ததாலோ அல்லது ஜானகியின் கட்டுப்பாட்டில் சிறு வயதிலேயே எல்லாவற்றிலும் ஒழுக்கமானவனாக திறமைசாளியாக  இருந்ததாலோ என்னவோ அவனின் அப்பா வேலாயுதத்திற்கு என் மகன் என்று ஆதித்தை கூறுவதில் அவ்வளவு சந்தோசக் கர்வம் வெளிப்படுவதை பார்த்திருக்கிறான். அவன் கேட்டு எதையும் அவர் மறுத்ததே இல்லை.
            
தனது அப்பா முதல்நாள் இரவு வாங்கி வந்த செஸ்போர்டில் அவருடன் விளையாடி விட்டு படுக்கைக்கு செல்ல இரவு நேரம் ஆனதால் அன்று காலை தாமதமாக எழுந்து  ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணி விட்டான் ஆதித் .
      
எனவே தந்தை காரில்  டிரைவருடன் ஸ்கூலில் வந்து இறங்கி தனது வகுப்புக்கும் போகும்போது வழி மறைத்து நின்ற தனது ஸ்கூலில் படிக்கும் மாணவன் நீ ஏன என் அப்பாவின் காரில் வந்து இறங்குகிறாய்? யார் நீ?  என்று கேட்டான்.
       
அவன் கேட்டதும் அவனை முறைத்துப் பார்த்த ஆதித் அது  ஒன்றும் உன்  அப்பா கார் இல்லை. என் அப்பா கார். நான் இன்று ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணியதால் காரில் வந்தேன் என்று கூறி விட்டு தன் வகுப்பிற்கு சென்று விட்டான்.          

ஆனால், அதன் மறுநாளில் இருந்து ஆதித்துக்கு பெரும் கோபம் ஏற்படும்படியான நிகழ்வுகள் ஸ்கூலில் அரங்கேற ஆரம்பித்தது.
      
ஆதித்தின் வகுப்பில் என்றுமே அவன்தான் பாடத்திலும் விளையாட்டிலும் முதலிடம், அவனை முந்தநினைத்து முடியாமல் அவன் மேல் கோபத்திலும் பொறாமையிலும் இருக்கும் அவன் வகுப்பில் அவனுக்கு அடுத்த மார்க் வாங்கும் சேகர் அன்று அவனை கடந்து போகையில்  உடன் படிக்கும் மற்ற பையன்களிடம் “சாடையாக ஆதித்தை பார்த்து ஏதோ கூறுவதும் அதற்கு அப்படியா…? என்னும் விதமாக ஆதித்தை அவனுடன் இருந்த மற்றவர்கள் பார்ப்பதும் தொடர்கதையாகிப் போனது .
       
அந்த விஷயம் அவன் அருகில் அமர்திருக்கும் அவன் நண்பனின் மூலம் அவன் காதுக்கு வந்ததும் ஆதித் கொதித்து போய்விட்டான். 

மதிய இடைவேளையின் போது வகுப்பைவிட்டு  வெளியேறிய சேகரின்பின் வேகமாக வந்த ஆதித் “என் அம்மாவை என்னடா சொன்ன..? அப்படி சொல்வாயா? சொல்வாயா...? என்று அடி பின்னிஎடுத்துவிட்டான் 

அவனை பதிலுக்கு அடிக்கமுயன்று, அது முடியாத காரணத்தால் சேகர் கோபமாக ஆதித்தை பார்த்து “ஆமாடா... உங்க அம்மா மாதேஷ் அண்ணாவின் அப்பாவுடைய வைப்பாட்டியாம். மாதேசின் அப்பா வேலாயுதம், அவனுக்கு மட்டும் தான் அப்பாவாம் என்று கூறினான்.
      
அவன் அவ்வாறு கூறியதும் என்ன சொன்ன என்று மீண்டும்  அவனை அடிக்க முயன்ற நேரம் அங்கு வந்த பி.இ.டிமாஸ்டர் விரைந்து இருவரையும் பிடித்து பிரித்து தனித்தனியாக முட்டி போட வைத்தார்.
      
பின் இருவரிடமும் எதற்கு சண்டை என்று கேட்டதும் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு இருந்தனர். 

சண்டைக்கு என்ன காரணம் என்று திரும்ப திரும்ப கேட்டும் இருவரும் காரணத்தை சொல்லாததால் அவர் இருவரையும் இனி இது போல் சண்டை போடக் கூடாது என்று வார்ன் பண்ணி அனுப்பினார்.
       
ஆனால் அன்று ஸ்கூல் விட்ட பின்னும் சேகர் சொன்ன வார்த்தை உலகத்தை பாதி புரிந்தும் அறிந்தும் அறியாபருவத்து ஆதித்தை மிகவும் தாக்கியது. 

அவன் மாதேஷ் யார்? என்று யோசித்துக்கொண்டும் எப்படி என் அப்பா வேலாயுதத்தின் பேரை சொல்லி அவன் அப்பா என்று கூறி என் அம்மாவை தவறாக கூறலாம் என்று குழப்பத்திலும் கோபத்திலும் வகுப்பை விட்டு வெளியில் வந்து ஸ்கூல் பஸ் நிற்கும் இடத்திற்கு போய்கொண்டு இருக்கும் போது, தனது பாட்டியுடன் அங்கு நின்று கொண்டிருந்த மாதேஷ் அவனின் முன் காலை நீட்டி வழியை மறைத்தான்.
      
பார்த்தவுடன் தனது மருமகனின் சாடையில் மாதேஷைவிட சற்று வளர்த்தியாக வந்துகொண்டிருந்த ஆதித்தராஜை பார்த்ததுமே திகுதிகு என வன்மம் ஏறியது மனோன்மணிக்கு. அவர்களின் காருக்குள் அமர்ந்தபடி மஞ்சுளாவும் அவனை பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.
       
மேலும் அந்த கார் ஆதித்தின் அப்பாவுடையது  அதை வேலாயுதம் அவர் மட்டும் உபயோகிக்க வைத்திருந்தார் மஞ்சுளாவிற்கு வேறு கார் வாங்கிகொடுத்திருந்தார். 

மேலும் அவரின்  வெள்ளைநிற பி எம் டபிள்யூ காரில் மஞ்சுளாவை எங்கும் அழைத்துப்போனதில்லை
        
அந்த குடும்பத்துடன் போவதென்றால் அவர்களிடம் உள்ள மற்ற காரில்தான் கூட்டிப்போவார். 

ஆனால் இன்று அவர் ` பி.எம்.டபிள்யூ வண்டியை சர்வீசுக்கு விட்டிருந்ததால் தனது அழுவலகத்திற்கு வேறு காரில் சென்றிருந்தார்.
        
மேலும் அவரது ட்ரைவர் முருகன் சர்வீஸ் முடிந்த காரை வீட்டில் ட்ராப் பண்ண வந்தபோது மனோன்மணி தனது பேரனிடம் காலையில் ஸ்கூல் போகும்போது சாயங்காலம் ஸ்கூல் முடிந்ததும் உன்னை கூப்பிட நான் காரில் வருகிறேன் நீ ஸ்கூல் பஸ்ஸில் ஏராதே , 

எனக்கு அந்த ஆதித்தை அப்பொழுது காட்டு என்று கூறியிருந்ததாள் தன் மகள் மஞ்சுலாவோடு கிளம்பி வெளியில் வந்தார்.
         
அப்பொழுது அவளது கணவனின் கார் சர்வீஸ் முடிந்து பளபளவென்று வந்ததும் இதில் என்னை கூட இதுவரை இவர் ஏற விட்டதில்லை இந்த காரில் அவளுடைய மகனை ஸ்கூலுக்கு அனுபியிருகிறாரே! என்ற கொதிப்புடன் முருகா காரை எடு என்று கூறியதும், தயக்கத்தோடு உங்க காரை எடுக்கவா அம்மா என்று பவ்யமாக கேட்டான்.
         
உடனே ஆத்திரத்துடன் அந்த வெள்ளை பி.எம்.டபிள்யூ காரில் விறுவிறு என்று சென்று ஏறி கதவை டமார் என்று அறைந்து சாத்தி ம்....எடு இந்த காரை என்று கர்ஜித்தாள்
        
அவளிடம் எதிர்த்துப்பேசமுடியாமல் அந்தகாரிலேயே மஞ்சுளாவையும் அவளின் அம்மா மனோன்மணியையும் ஸ்கூலுக்கு அழைத்து வந்திருந்தான் வேலாயுதத்தின் விசுவாசியான முருகன்.
     
ஸ்கூல் வரும் வரை அவனுக்கு அந்த காரில் அவரது மனைவியை கூப்பிடுவருவதற்கு தன் ஐயா தன்னை கடிந்து ஒன்றும் சொல்லமாட்டார் என்று தான் நினைத்திருந்தான் முருகன்.
     
ஆனால் ஸ்கூல் வளாகத்திற்குள் கார் நுழைந்ததுமே காரை எதிர்கொண்டு வந்த மாதேஷை பார்த்ததும் காரை திருப்பி எடுக்க தோதாக நிப்பாட்டிய முருகனுக்கு ஐயோ! சின்னய்யா ஆதித், காரையும் தன்னையும் பார்ப்பதற்குள் மாதேஷ் ஐயா வந்துவிடவேண்டுமே! என்ற பரபரப்பு உண்டானது
     
மேலும் அன்று ஆதித்தை ஸ்கூலில் இறக்கிவிட்டு திரும்புகையில் மாதேஷ் தூரத்தில் இருந்து தன்னை பார்த்து கூப்பிட்டதை நான் கவனிக்காதது போல் பாவலா காண்பித்து வந்துவிட்டேன். 

அதேபோல் இன்று ஆதித் பார்ப்பதற்குள் சென்றுவிடவேண்டும் என்று என்ஜினை அணைக்காமலே இருந்தான் முருகன்.
     
ஆனால் கார் நின்றதும் திரும்பி செல்வதற்கு தோதாக திருப்பி, பின் என்ஜினை அணைக்காமல் இருந்த முருகனை பார்த்து உடனே போகணும் என்ற அவசரமில்லை முருகா, அம்மா கொஞ்சம் இறங்கனும் என்று சொல்லி தனது அன்னையின் பக்கம் இருந்த கதவை காண்பித்து நீ போம்மா நான் இங்க உட்கார்த்தே அவனை பார்கிறேன் என்று கூறி காரின் உள்ளேயே அமர்ந்து தன மகன்  கால் நீட்டி ஆதித்தை  மறைத்ததை பார்த்தாள் மஞ்சுளா.
    
முருகனும் அதை பார்த்து அதிர்ந்தான். முருகன் தனது பத்தொன்பது வயதில் இருந்து கடந்த 20வருடமாக வேலாயுதத்தின் நம்பிக்கையான விசுவாசமான கார் ட்ரைவர் ஆதலால் அவனுக்கு தனது ஐயாவின் குடும்பவிபரம் முழுவதுவும் தெரியும் மேலும் மஞ்சுளா எப்பொழுதும் தன்னை அதிகாரத்துடனும் சற்று தள்ளி நிறுத்தி வேலை வாங்கும் மூத்த அம்மாவை விடவும், அவரின் மகன் மாதேஷ் அலட்ச்சியத்துடன் முருகா.. என்று தலையில் அடித்து கூப்பிடுவதுபோல் அதிகாரமாய் தன்னை  கூப்பிடும் சின்னையாவை விட
    
தன்னை தன குடும்பத்தில் ஒருவனாக எண்ணி முருகன் அண்ணா என்று கூப்பிடும் ஜானகியின் மீது அளவுகடந்த மரியாதையும்  அவளது மகன் “முருகன் மாமா என்று கூப்பிடும் தனது ஐயாவை போன்றே இருக்கும் சின்ன ஐயா ஆதித்தின் நடை உடை செயல் மீதும் தனி  பிரேமமே கொண்டு இருந்தான்.
      
இப்பொழுது போல் அப்பொழுது எல்லோரிடமும் மொபைல் கிடையாது. அங்கிருந்த சூழலை அவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது 

தனது பிரியமான சின்ன ஐயா ஆதித்தை தனது ஐயாவின் மூத்த மனைவியின் குடும்பம் அவமானப்படுத்துவதை தடுக்கவும் முடியாமல் தனது ஐயாவிடம் தெரிவிக்கவும் முடியாமல் மனம் வழிக்க சும்மா வேடிக்கை பார்க்கமட்டுமே முடிந்தது.
      
தன் முன் காலை நீட்டி வழிமறித்த மாதேஷை கனல் வீசும் கண்களுடன் பார்த்தான் ஆதித்
     
பின் தன் காலைகொண்டு அவன் காலை ஒதுக்கி செல்ல முயன்ற ஆதித்தை மனோன்மணி தனது பேரன்  மாதேஷிடம் 
      
இவன்தான் அந்த ஜானகியின் மகன் ஆதித்தா...? என்று அவனை அடையாளம் கண்டுகொண்டாலும் தன் பேரனிடம் கேட்டாள் மனோன்மணி
     
மாதேஷ் என்ற பேரை கேட்டதும் இன்று சேகருடன் நடந்த சண்டையில் இருந்து யார் அந்த மாதேஷ் என்று நினைத்துக்கொண்டு வந்த ஆதித்துக்கு  அவன் இவன்தானா...! என்று நினைத்தபடி அவனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மனோன்மணியையும் ஏறிட்டுப் பார்த்தான் .
“ஆமாம் பாட்டி என்று கூறிய மாதேஷிடம். மனோன்மணி  பார்கறான் பாரு பெரிய இவனாட்டம், இவனை நம்ம வீட்டு காசில இவ அம்மா நல்லா சோறு போட்டு வளர்த்திருக்கா... என்றதும்.
  
ஆதித் மனோன்மணியை பார்த்து எங்க அம்மா பெரியவங்களை எதிர்த்துபேசக்கூடாது மரியாதை கொடுக்கணும் என்று சொன்னதினால் தான் நீங்கள் என்னை இப்படி பேசியும் பொறுத்துக்கிட்டு இருக்கேன் இல்லையின்னா? என்றவன் “சற்று தள்ளி கிடந்த கல்லை காட்டி அதை கொண்டு உங்கள் மண்டையை உடைத்திருப்பேன் என்று கர்ஜித்தான்.
    
அவன் அவ்வாறு கூறியவுடன் மாதேஷ், டேய்! என் பாட்டியை பார்த்தா மண்டையை உடைப்பேன் என்று சொன்ன என்று அவனை அடிக்கப்போக அவன் தன்னை அடிக்க வருவதை உணர்ந்து டக்கென்று ஆதித் நகர்ந்துவிட மாதேஷ் நிலை தடுமாறி விழுந்தான்.
     
அதை பார்த்த மனோன்மணி தனது பேரனிடம் மாதேஷ்..... என்ற சத்தத்துடன் வர, விழுந்த வேகத்தில் எழுந்தவன் கோபத்துடன் திரும்பி ஆதித்தை அடிக்கப் போக அதற்குமுன்
    
மனோன்மணி தனது பேரன் கீழே விழக் காரணமாக இருந்த ஆதித்தின் கன்னத்தில் இடி என அறைந்து விட்டாள்.
    
அதிர்ந்தும், வழியுடனும், அவமானத்துடனும் தன்னை சுற்றி ஆதித் பார்த்தான் அங்கு சேகரும், அவனது வகுப்பு மாணவர்களும் நின்று இவர்களை வேடிக்கை பார்ப்பதை பார்த்தவன் அதன் பின் மனோன்மணியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்டு அவமானத்தில் மனம் வெந்து போனான் .
    
அவனை அறைந்ததுமட்டும் அல்லாமல் என் மக புருஷனை காசுக்காக மயக்கி வாழ்ரவ பையனை எப்படி வளர்ப்பா இப்படி ரவுடியாகத்தான் வளர்ப்பா! 

என்று தன் பேரனின் மேல் தப்பே இல்லாதது போல் ஆதித்தின் பிறப்பை கொண்டு அவனை அவமானப் படுத்தினாள் மனோன்மணி .
   
இதோபாரு விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேட்குதோ! கேடுகெட்ட உனக்கு  பி எம் டபுள்யூ கார் கேட்குதோ! இதுக்கு முன்னாடி ஒருநாள் இந்த கார்லதான் நீ வந்தயாமே.! 

உன் அம்மாகாரிகிட்ட சொல்லிவை அவ அழக காட்டி என் மகபுருஷனை மயக்கி வச்சுக்கிட்டாலும் என் மகளுக்கு பிறந்த என் மாதேஷ் தான் என் மாப்பிள்ளை வேலாயுதத்தின் வாரிசு .

சீச்சீ அடுத்தவ புருஷனை காசுக்காக கட்டிட்டு குடும்பம் நடத்துற உன் அம்மாவெல்லாம் நல்ல பொம்பளையா? என்று கூறிவிட்டு தன பேரனின் கை பிடித்து காருக்கு கூட்டிச்சென்று காரில்  ஏறினார்கள்.
   
அவர்கள் ஏறிய தனது அப்பாவின் காரையும் அதில் ட்ரைவர் இடத்தில் அமர்ந்து கண்ணீருடன் தன்னை பார்த்தபடி காரை கிளப்பிய முருகன் மாமாவையும் பார்த்தவன் அவமானத்திலும் கோபத்திலும் தனது ஸ்கூல் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான்
   
ஆனால் அவனின் சீட்டின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த சேகர், எப்படி அடி விழுந்துச்சு ஒரு அடினாலும் அப்படியே ஐந்து விரலும் பதிந்து கன்னமே வீஞ்கிடுச்சு பாரேன், 

என்னைமாதிரி நல்ல அம்மாவிற்கு பிறந்த பையனை, கெட்ட அம்மா பெத்த மகனான ஆதித் அடிச்சதினால்தான் உடனே கன்னம் வீங்குற மாதிரி கடவுள் தண்டனை கொடுத்திட்டாரு 

என்று ஆதித்தின் காதில் விழுமாறு பக்கத்தில் உள்ளவனிடம் சேகர் கூறினான் .
    
ஆதித்துக்கு அந்த பஸ்ஸில் உள்ள அனைத்து மாணவர்களும் தன்னை கேவலமாக் பார்ப்பது போல் தோன்றியது. அவனுக்கு முள் மேல் அமர்ந்து இருப்பது போல் பஸ்ஸில் கொதிக்கும் உள்ளத்தோடு அமர்ந்திருந்தான்.
     
ஸ்கூல் பஸ்ஸிலிருந்து இறங்கி வேகமாக தன வீட்டிற்குப் போனவனை  வந்துட்டாயா ஆதித்..! வா.. வா.., அம்மா உனக்குப்பிடித்த பஜ்ஜி செய்துகிட்டு இருக்கிறேன். பாத்ரூமில் டவல் போட்டுவச்சிருகிறேன் ஒருபோனி மேல ஊத்திட்டு யூனிபார்ம் மாத்திட்டு வா. அம்மா அதற்குல் உனக்கு தட்டில் எடுத்து கொண்டு வருகிறேன் என்று அவன் வந்த அரவம் கேட்டு அடுப்படியில் இருந்து சத்தம் கொடுத்தாள் ஜானகி.
    
ஆனால்  அவள் கூறியதற்கு எதற்கும் பதில் கொடுக்காமல் ஹால் சோபாவில் விரல் தடம் பதிந்து வீங்கிய முகம் கொடுத்த வலியைவிட சொல்தடம் ஏற்படுத்திய மனதின் வலியால் கண்ணில் பெருக்கெடுத்த நீருடன்  அம்மாவின் வார்த்தையை  காதில் ஏற்றாமல் அமர்ந்திருந்தான் ஆதித்.
     
தான் கூறியதும் மகன் பாத்ரூம் போகாமல் அடுப்பறைக்குள் வந்து தன்னிடம் கொஞ்சிகேட்டு, தன் கையால் சட்னிதொட்டு பஜ்ஜி இரண்டினை வயிற்றினுள் தள்ளாமல் போகமாட்டான் என்று மனதினுள் நினைத்தவள், உதட்டில் சிரிப்புடன் அப்படியே அவன் அப்பாவை போலவே நெனச்சதை சாதிப்பவன் என்று நினைத்தபடி தன மகனுக்கு தட்டில் சட்டினியோடு பஜ்ஜியையும் எடுத்துவைத்துவிட்டு அடுத்த வாழைகாய் துண்டை மாவில் தோய்த்து எண்ணையில்  போட்டவள் இன்னும் தன் மகன் வராததை நினைத்து யோசனையுடன் வாணலியில் போட்டிருந்த பஜ்ஜியை திருப்பிவிட்டுவிட்டு கையை கழுவி டவலில் துடைத்தவள் என்னையில் மிதந்த   பஜ்ஜியை எடுத்து ஏனத்தில் போட்டுவிட்டு அடுப்பை அணைத்து பின்   மகனை தேடி வந்தாள் ஜானகி .
     
வீங்கிய கன்னமும் அழுத கண்களுமாக ஹாலில் உட்கார்ந்திருந்த ஆதித்தை கண்டு பதற்றத்துடன் என்ன ஆதித்! ஏன அழுகிற கன்னத்தில் யார் அடித்தார்கள்..?என்று கேட்டபடி தன மகனிடம் சென்ற ஜானகியின் கையை பிடித்து ஆதித்
   
அம்மா என் ஸ்கூலில் படிக்கும் மாதேஷின் அப்பாவும் என் அப்பாவும் ஒருவர் கிடையாது தானே!. நீங்கள் அப்பாவை காசுக்காக ஒன்றும்..... என்று கூறியவன் மேற்கொண்டு கூறமுடியாமல் விம்மலுடன் மாதேஷின் அப்பாவின் வைப்பாட்டி இல்லையே... என்று தடுமாரிபடி கூறி முடித்தான்.
      
தனது மகன் மாதேஷ் என்று கூரியதுவுமே அதிர்ந்த ஜானகி கடைசியாக அவன் கூறிய வைப்பாட்டி என்று சொல்லை கேட்டதும்  அதிர்ச்சி விலகி கோபத்துடன் என்னசொன்ன என்று கூறியவள் அவனின் மறு கன்னத்தில் தானும் ஓர் அரை கொடுத்தார்.
       
பின் அழுதபடி நானும் அவருக்கு பொண்டாட்டிதான். இதோபார்... என் கழுத்திலும் அவர் தாலி கட்டியிருக்கிறார் என்று தன கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து அவனிடம் காண்பித்தாள் என்னை எந்த மாதிரி வார்த்தை சொல்லிவிட்டாய்? என்று கூறி தன் முகத்தில் இருகைகளாலும் அறைந்து அழுக ஆரம்பித்தார் ஜானகி
       
தான் சொன்னதற்கு மாதேஷின் அப்பாவும் தன் அப்பாவும் வேறு வேறு என்ற வார்த்தையை தன அம்மா வாயில் இருந்து வருவதற்குப் பதில் நானும் அவரின் பொண்டாட்டியே! என்ற வார்த்தையை கேட்ட ஆத்திதுக்கு கோபம், ஆத்திரம் அவமானம், என மாறிமாறி தாக்கியது தன் அம்மாவின் அருகாமையை விட்டு எழுந்து தள்ளி நின்று கொண்டவன்
     
அப்போ!.. மாதேசின் அப்பாவைத்தான் நீங்கள் கல்யாணம் செய்துகிட்டீங்களா? என்று கேள்வியை கேட்டான் ஆதித். அவனின் கேள்வியில் அடிபட்ட பார்வையோடு நிமிர்ந்து  பார்த்த ஜானகி தன மகனிடம்,
      
நான் ஆசை பட்டு ஒன்றும் அவரை கல்யாணம் செய்யவில்லை ஆதித். என்னிடம் நீ இப்படிபட்ட கேள்வியை எல்லாம் கேட்காதே ஆதித் என்னால் தாங்க முடியவில்லை, என்று கதறினால் ஜானகி.
      
பிறகு நான் யாரிடம் கேட்பது என்னை  என் ஸ்கூலில் படிக்கும் ஸ்டூடன்ட் முன் நிற்க வைத்து கேட்டார்களே எனக்கு மனசு வலிக்க வலிக்க பேசினார்களே! மாதேஷின் பாட்டி அவமானப்படுத்தினார்களே! எனக்கு அப்படியே அவமானத்தில் பூமிக்குள் புதைந்து போய்விடமாட்டோமா... என்பதுபோல் இருந்ததே. 

இனி எனக்கு மாதேசின் அப்பா வேண்டாம்...வேண்டாம் . அவரின் காசு காசுபணம் எதுவும் வேண்டாம். அதற்காகத்தானே நீங்கள் அவருடன் வாழ்வதாக கூறினார்களே!  வாங்க எங்கயாவது போவோம். மத்தவங்க காசு நமக்கு வேண்டாம் என வெறி பிடித்தவன் மாதிரி கத்தினான் ஆதித்.
       
என்னடா சொன்ன அப்பா வேண்டாமா? அப்படி சொல்வாயா? வீட்டை விட்டு வெளியில் போவோம் என சொல்வாயா? சொல்வாயா? என்ற படி அவனை கைவழிக்க அடித்து வெளுத்து பின் ஓய்ந்து அழுகையுடன்  உட்கார்ந்து விட்டார் ஜானகி .
      
இரண்டு நாளாக ஸ்கூலுக்கும்  செல்லமாட்டேன் உங்களிடம் நான் பேசவும் மாட்டேன் என்று அழுத்தத்துடன் இருந்த மகனை பார்த்த ஜானகிக்கு நெஞ்சம் வெடிப்பது போல் துக்கம் தளும்பியது .
      
இரண்டு நாளாக ஜானகியும் வேலாயுதமும் எவ்வளவோ சமாதானப் படுத்தி பார்த்தாலும் இருவரின் முகத்தைக் கூட பார்க்க மறுத்துவிட்டான் ஆதித்.
      
இன்றும் சாப்பாட்டை எடுத்து மேஜையின் மீது வைத்துவிட்டு ஆதித் சாப்பிட வாடா! நீ சரியா சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு. உன் கோபத்தை எங்க மேல் காட்டுவது போதாது என்று சாப்பாட்டு மேலேயும்  காண்பிக்காதே என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது, அதை காதில் வாங்காது எழுந்து உட்கார்ந்த இடத்தை விட்டு போகப்    போனவனைப் பிடித்து கோபத்துடன் அடிக்க ஜானகி கை ஓங்கினாள் அப்போது தூங்கி எழுந்து வந்த வேலாயுதம் ஜானகியின் கையை பிடித்து தடுத்தார்.
        
ஆதித்! நீ இப்படி பேசாமல் இருந்தால் எப்படி? உன் அம்மாவிற்கு நீயும் நானும் தான் எல்லாமே!. நீ இப்படி இருந்தால் அவளால் தாங்க முடியாது என்றார்.
       
அவர் அப்படி கூறியதும் ஆமாம்...! அவர்களுக்கு நாம் மட்டும் தான் எல்லாமே ஆனால் உங்களுக்கு அப்படியா?
       
என் அம்மா உங்களின் காசுபணத்துக்காக உங்களை எங்களோடு வைத்துக்கொண்டதாகவும் நீங்கள் எனக்கு அப்பா கிடையாது என்று என் கூடப் படிக்கும் அத்தனை பேர் முன்னாடியும் என்னை பேசியபிறகு எப்படி அசிங்கமில்லாமல் அவர்கள் கூட சேர்ந்து என்னால் படிக்க முடியும் என்றவன்,
       
ஜானகியிடம் திரும்பி அம்மா..... வாமா! நாம வேறு ஊருக்குப் போய்விடலாம் இங்க இருக்கிறவங்க என்னையும் உன்னையும் கேவலமா பார்க்கிறாங்கம்மா. நமக்கு இந்த ஊர் வேண்டாம் என்று சொல்லியபடி கதறி அழுதான்.
              
தனது மகனின் வார்த்தையில் அடிபட்ட பார்வையை தன் கணவன் மீது செலுத்திய ஜானகி நான் சொன்னேனே ஆத்திரத்தில் உண்மையை உணராமல் நீங்க என்னை தண்டிப்பதாக நினைத்து மஞ்சுளாக்கா உங்கள்   வாழ்க்கையில் இருக்கும் போது என்னையும் நிர்பந்தத்தில் நிற்க வைத்து, என்னை அக்காவிற்கு துரோகம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். 

நான் செய்த பாவத்திற்கு இன்று என் மகன் சிலுவை சுமக்குமாறு ஆகிவிட்டதே! நான் பாவி.. பாவி... என் முகத்தை அறைந்து கொண்டு கதறினால் ஜானகி,
   
அப்படி சொல்லாதே ஜானகி! என்றபடி ஜானகியின் கையை பிடித்தவர், என்னிடம் காசுபணம் அளவில்லாமல் இருந்தாலும் நிம்மதி என்பது உன்னிடமும் ஆதித்திடமும் தான் எனக்கு கிடைகிறது. என்னுடைய நிம்மதிக்காக உன்னை நான் நிம்மதியில்லாமல் செய்துவிட்டேன். நான் தான் பாவி! நீ பவித்தரமானவள் ஜானகி என்றார்.
    
பின் ஆதித்திடம் நான்  உன்அப்பாடா! என்றவர் அவனின் கை பிடித்து அங்கிருந்த ஆளுயர கண்ணாடிமுன் நிறுத்தியவர் பாருடா ,நீ என் மகன் என்பது உலகம் அறிந்த உண்மை. யார் இல்லை என்று சொன்னாலும் உண்மையை மாற்றவோ மறைக்கவோ முடியாது. 

என் மகன் நீ என்று சொல்லும் போது எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்குது தெரியுமா? உன்னை, என் ஜானகி எனக்கு கொடுத்த பொக்கிசமாக நான் நினைக்கிறேன் ஆதித் என்றார்.
      
இல்லப்பா   நீங்க எனக்கு வேண்டாம். இனி நான் உங்களை அப்பான்னு சொல்ல மாட்டேன். நானும் அம்மாவும் வேறு எங்கயாவது போறோம் எனக்கு இங்க யார் முகத்தையும் பார்க்க பிடிக்கல என்று அழுதான்.
     
கொஞ்சநேரம் அமைதியாக் இருந்த வேலாயுதம், ஜானகி திங்ஸ் எல்லாம் பேக் பண்ண ஆள் அனுப்புறேன் நீங்க இரண்டு பேரும் சென்னைக்கு கிளம்புங்க. 

நான் ஆதித் கூட போய் அவன் ஸ்கூலில் டி.சி வாங்கிட்டு வருகிறேன் என்றவர், தன் சென்னை நண்பருடன் பேசி ஆதித் அங்கிருக்கும் ஸ்கூலில் சேர்ந்து படிக்க வேண்டிய ஏற்பாடும் சென்னையில் ஜானகிக்கு அவள் பேரில் ஓர் வீட்டையும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்தார். .      
          
சென்னையில் குடியேறியது முதல் தன அம்மாவிடமும் அப்பாவிடமும் முகம் கொடுத்து பேசுவதே இல்லை ஆதித் 

அவன் தன்னையே தனிமை படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் தன்னை யாரும் நெருங்கவிட்டதில்லை அவனின் மொத்த கோபமும் அவனை யாரும் நெருங்கமுடியாத  கவசம் போன்று மாறியது. 

தேவைக்கு மட்டும் மற்றவர்களிடம் பேசுவான் படிப்பிலும் விளையாட்டிலும் தனது முழு கவனத்தை செலுத்தினான். அவனது உலகம் முழுவதுவும் தனது படிப்பு என்றானது.
     
ஆண்டுகள் பல ஓடின ஆனால் ஆதித்தராஜின் போக்கில் மட்டும் மாற்றம் ஏற்படவே இல்லை. அவன் அவனுக்கென்று ஓர் உலகை உருவாகிக்கொண்டு அதில் பயணப்பட ஆரம்பித்தான். 

அதில் தனது பெற்றோருக்கு அவன் இடம் அளிக்கவே இல்லை ஏனோ. அவனின் அப்பா ஏற்கனவே திருமணமாகி ஓர் பெண்ணுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் போது தன் அம்மாவையும் இரண்டாம் தாரமாக மணந்து வாழ்வதை அவனால் சரி என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.

                       -----தொடரும்-----

1 comment:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib