ஒளிதருமோ என் நிலவு...![தீபாஸ்-ன்]
அத்தியாயம்-08
ஓர் ஹாஸ்பிட்டல் கட்டிக்கொடுப்பதற்காக கிளையண்டுடனான அக்ரீமென்ட் சைன் ஆனதற்கு அந்த ஸ்டார் ஹோட்டலில் ஓர் கெட்டுகதருடன் கூடிய பிஸ்னஸ் மீட்டிங்கில் இருந்த ஆதிதுக்கு வர்சாவிடம் இருந்து மெசேஜ் வந்தது.
ஓர் ஹாஸ்பிட்டல் கட்டிக்கொடுப்பதற்காக கிளையண்டுடனான அக்ரீமென்ட் சைன் ஆனதற்கு அந்த ஸ்டார் ஹோட்டலில் ஓர் கெட்டுகதருடன் கூடிய பிஸ்னஸ் மீட்டிங்கில் இருந்த ஆதிதுக்கு வர்சாவிடம் இருந்து மெசேஜ் வந்தது.
இன்று மதியம் அவன்
கூட்டிப்போவதாக சொன்ன ஷாப்பிங்கிற்காக
கிளம்பி அவனின் ஆபீஸ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக அதில் இருந்தது.
தன்னுடைய பி.ஏவை
கண் பார்வையில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கச் சொல்லிவிட்டு வர்சாவிற்கு பதில்
மெசேஜ் அனுப்பினான்.
அதில் தற்போது அவன்
இருக்கும் ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கு வந்து ரிசப்சனில் ஓர் பத்து நிமிடம்
காத்திருக்குமாறும், அதற்குள் மீட்டிங்கை முடித்துவிட்டு அவளை பிக்கப்
பண்ணிக்கொள்வேன் என்றும் இருந்தது.
மீட்டிங் முடிந்து
தான் உடுத்தியிருந்த கோர்ட்டைகூட மாற்ற நேரம் இல்லாமல் அத்துடனே வர்சாவை நோக்கி
வேகமாக ரிசப்சனுக்கு வந்தான்.
அங்கு அவளின்
தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த வார்சா ஆதித் வந்ததும் அவளின்
தோழிகளுக்கு பை சொல்லிவிட்டு அவர்களின் முன் கெத்தாக ஆதித்தின் கையை பிடித்து
அவனுடன் காரை நோக்கிச் சென்றாள்.
ஆதித்தும் அன்றைய
பிஸ்னஸ் அக்ரீமென்ட் நல்லபடி முடிந்ததால் சந்தோசமாக அவளுடன் கை கோர்த்தபடி தனது
காரில் அந்த மாலின் வாசலில் இறங்கிக் கொண்டான்.
அவன் காரைவிட்டு
இறங்கியதுமே அங்கு விரைந்து வந்த செக்யூரிட்டி காரை பார்க்செய்ய அவனிடம் கார் கீயை வாங்கிக் கொண்டு சென்றான் .
வர்சாவுடன் அந்த
மாலின் மூன்றாவது தளத்தில் உள்ள அந்த டைமண்ட் ஷோ ரூமிற்குச் சென்றான்.
அங்குள்ள டைமண்ட்
கலெக்சன் அனைத்தும் அவ்வளவு அழகாக இருந்தது. வர்சாவிற்கு, எதை எடுக்க எதைவிட என்றே
தெரியாமல் குழம்பினாள்.
அருகில் இருந்து
அவளின் தடுமாற்றத்தை பார்த்து, நான் செலக்ட் பண்றேன் வர்ஷ் என்றவன் அவளின்
கழுத்தில் வைத்துப்பார்த்து ஐந்தே நிமிடத்தில் பூவேலைப்பாடுடன் டைமண்ட் நெக்லஸ்
மற்றும் அதற்கு பொருத்தமான் பூவடிவ டைமண்ட்தோடு ,மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை
தேர்ந்தெடுத்தான்.
“சூப்பர் ரொம்ப
அழகா இருக்கு ஆதித். ஆனால் பட்ஜெட் நான் வைத்திருப்பதைவிட அதிகமாக இருக்குது”
என்றாள்.
அவள் கூறியதை
கேட்ட ஆதித், “யேய்....! என் பர்சை காலி பண்ண பிளான் போட்டுத்தானே என்னை
கூப்பிட்டுவந்தாய் பிறகு ஏன் உன் பட்ஜட் பற்றி பேசி சிரிப்பை வரவைக்கிற” என்றான்
ஆதித்.
அவன் செலக்ட்
செய்த நகைகளை போட்டு கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டே “தி கிரேட் பிஸ்னஸ் மேன் ஆதித்தராஜ் தன்
லவ்வருக்கு செலவுபண்ண யோசிப்பாரா என்ன?” என்று கேட்டபடி மையலுடன் அவனைப் பார்த்துச்
சிரித்தாள்.
அவளின்
சிரிப்பினில் தன்னை வீழ்த்தப் பார்க்கும் அவளினின் செயலைப் பார்த்தவன், “அதுதான் இதை வாங்கிக் கொடுத்தாலும் நீ என்
ஆசையை இப்போ நிறைவேற்றி வைக்கப் போவதில்லையே? பிறகு ஏன் சிரித்து மனுசனை
கிளப்பிவிடுற!”
என்று அவளின்
கன்னத்தை லேசாக வலிக்கும படி கிள்ளியவன், வருகிறாயா பேபி..... நாம் கல்யாணத்திற்கு பிறகு வாழப்போற
வீட்டிற்கு உன்னை கூப்பிடுப்போகிறேன்
அப்படியே....
எப்படி வாழ்வோம் என்று ரிகர்சல் காட்டட்டுமா?”
என்று கண்ணடித்து கூறியபடி அவளை
ரசித்தான் .
அவனின் செயலை
ரசித்தபடி “ம்...கூம்..”என்று கூறியபடி தலையை மறுப்புடன் ஆட்டியவள் அவன் கண்களின்
மேய்ச்சல் பார்வையில் தடுமாறி பின் அதனை அவனிடம் இருந்து மறைக்கும விதமாக
“பில் பே
பண்ணிட்டு வாங்க நான் ரிங் கலெக்சனை
ஒருதரம் பார்த்திட்டு வருகிறேன்” என்று
எழுந்தாள்.
ஆதித் பில் பே
பண்ண கவுண்டர் சென்றான் வார்சா ரிங் செக்சஸனில் ஆதித்துகு சர்ப்ரைஸ் கிப்டு
கொடுக்க, இரண்டு இதயம் நடுவில் ஓர் வைரத்துடன் கூடிய அழகான மோதிரத்தை அவனுக்காக
வாங்கினாள்.
இதுவரை அவனிடம்
இருந்துதான் அவள் பரிசு வாங்கியிருக்கிறாள்.
ஆனால், அவன் தன் தோழிகளிடம் கைகொடுப்பதை கூட தவிர்ப்பதையும் தன்னைவிட அதிக
வசதிபடைத்த செல்வச் சீமாட்டி பெண்கள் வழிய
அவனிடம் பேசவந்தாலும் ஓர் பார்வையிலே
அவர்களை எட்டிநின்று பேசக் கட்டளையிட்டத்தையும் பார்த்திருந்த வர்சாவிற்கு
அவனின்மேல் காதல் பொங்கியது.
மேலும்
அப்படிபட்டவன் தான் அருகில் இருக்கும்போது சந்தர்பம் கிடக்கும் போதெல்லாம் தன்னை
உரசிப்பார்ப்பதும் தன்னை வேண்டி தாபத்துடன் அழைப்பு விடுப்பதையும் பார்த்தவள்,
மனதிற்குள் “ஸ்வீட்
ராஸ்கல்” என்று அவனை
கொஞ்சிகொண்டாள் மேலும் தன அழகின்மீது அவனின் மையலில் கர்வம் கொண்டாள்.
அழகுநிலா, அந்த
மாலின் நுழைவு வாசலுக்கு வரும் போதே
அவளுக்கு அந்த மிரட்டல் ஆசாமியிடம் இருந்து போன் வந்தது.
அதை எதிர்பார்த்தே
இருந்த அழகுநிலா அவனிடம் ‘நான் உன் மொபைலுடன் வந்துட்டேன். நீ எங்க இருக்கிற?”
என்று கேட்டாள்
உடனே அவன், “மேல ஜூவல்லரி ஷோ ரூம்கள் இருக்கிற தேர்டு ப்ளோர்க்கு
வா, அங்கதான் கூட்டம் இல்லாமல் இருக்கும்” என்று தொடர்பை துண்டிக்கப்
போனவனிடம் “போனை வச்சிடாத நான் கொஞ்சம்
உன் கூட பேசணும்” என்றாள்.
“எக்ஸ்கலேட்டரில் மேல
வந்துகிட்டே என்கூட பேசு” என்றான்,
அழகுநிலா, அவன்
கூறியதை பொருட்படுத்தாமல் லிப்டினுள் மேலே தேர்ட் புளோர் போக ஏறிக்கொண்டே பேச
ஆரம்பித்தாள்.
அவள் பேசும்முன், “நான்
உன்னை லிப்டில் வரச்சொல்லலை அதில் உன் பக்கத்தில் ஆளை நிறுத்திக்கொண்டு எதுவும் நீ
பேசவேண்டாம் மேல வந்ததும் பேசலாம்” என்றான் .
அதற்கு அழகி, “நான்
செகண்ட் ப்ளோரில் லிப்டில் இருந்து வெளியில் வந்து தேர்டு ப்ளோருக்கு நீ சொன்ன
எக்ஸ்கலேட்டேர்ரில் வருகிறேன்,
நான் சொல்வதற்கு
நீ என்ன சொல்கிறாய்? என்று பார்த்தபிறகு
தான் உன்னை சந்திப்பேன்” என்று அவள்
சொல்லி முடிப்பதற்குள் லிப்ட் செகண்ட் ப்ளோரில் நின்றது.
அவளும்
வெளிவந்துவிட்டு எக்ஸ்கலேட்டரின் பக்கம் சென்று கொண்டே அவனிடம் பேச்சு கொடுத்தாள்.
“ம்...சொல்லு”
என்று கூரியவனிடம் , உன் மொபைலை உன்னிடம்
கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் அதற்குமுன்
நீ அன்று என்னை சூட் பண்ணிய வீடியோ பதிவை நானே என் கையாலேயே டெலிட் பண்ணனும்” என்றாள்.
அவள் அவனிடம்
பேசிக்கொண்டே கண்களை சுற்றிலும் அழைய விட்டாள். “பின் நான் தேர்ட் புளோர்
வந்துட்டேன் நீ எங்கு நிற்கிறாய்?” என்று கேட்டாள்.
அதற்கு அவன்
அப்படியே ரைட் சைடில் வா என்று கட்டளையிட, ரைட் சாட்டில் கண்களை அழையவிட்டபடி
வந்தாள்.
அப்போது அங்கிருந்த டைமண்ட் ஷோ ரூமின் கண்ணாடி
தடுப்புகளுக்கு பின் கவுண்டரில் பில் பே பண்ணிக்கொண்டு இருந்த அன்று தனக்கு
ஹோட்டலில் உதவிய ஹேன்ட்சம் ஹீரோவை
பார்த்தாள்.
இவன் அவனா..?
என்று கண்கள் தெரித்துவிடுவதுபோல் அவனை பார்த்துக்கொண்டு நடக்கையில் அவளை நோக்கி
வந்த நரேனும், இவள் யாரை அப்படிப் பார்க்கிறாள் என்று நோட்டம் விடுகையில் ஆதித்தைப் பார்த்துவிட்டான்.
உடனே டக்கென்று
அங்கு சென்ற படிக்கட்டின் மறைவில் மறைந்து நின்றவன் அழகுநிலா அந்த படிக்கட்டை தாண்டும்
போது அவளின் கை பிடித்து தனக்கருகில் இழுத்து அவளின் வாய் பொத்தியவன்,
“நீ மட்டும்தான்
தனியா வரணும் என்று சொன்னேன். ஆதித்தராஜை எதற்கு வரச்சொன்ன?” என்று கர்ஜித்தவன்”
அவள் கையில் இருந்த ஹேன்ட்பேக்கை பறித்தான்.
“ஏய்... என்பேக்கை
குடு நானே உன் போனை எடுத்துத்தருவேன்.
ஆனால் நான் சொன்னதுபோல் என் வீடியோ ரெக்கார்டை டெலிட் செய்ய வேண்டும் என்றாள்
ஆனால் அவள்
கூறுவதை அவன் பொருட்படுத்தாமல் மற்றவர்கள் பார்க்கும் முன் அவளிடம் இருந்து போனை
எடுத்து ஓடிவிடவேண்டும் என்று நினைத்தான்.
எனவே அவளுக்கு
எட்டாதவாறு பேக்கை தூக்கி பிடித்து, ஜிப்பை அவிழ்த்து அதினுள் கைவிட்டு போனை அவன்
எடுக்கப் பார்க்கும் போது அவள் பிடித்து இழுக்க, பேக் தலைகீழாக கவிழ்ந்து அதில்
இருந்த பணம் சில்லரையுடன் அந்த மொபைளும் கீழே விழுந்தது
நரேன் அதனை
எடுக்கும் முன் அதனை வேகமாக குனிந்து எடுத்த அழகுநிலா வேகமாக ஓடபார்த்தாள்.
அப்பொழுது எட்டி
ஓடும் அவளை, பிடிக்கப் பார்த்தவனின் கையோடு அவளின் சுடிதாரின் துப்பட்டா மட்டுமே
மாட்டியது சிட்டாக பறந்த அழகுநிலாவை துரத்திவந்தான்
எங்கே அவன் அந்த
வீடியோ பதிவை டெலிட் செய்யாமல் தன்னிடமிருந்து பிடுங்கி போய்விடுவானோ! என்ற
பயத்தில் வேகமாக ஓடி ஆதித் இருந்த கடைக்குள் போய் அதித்தின் கையை பிடித்து
காப்பாத்துங்க... காப்பாத்துங்க... சார் என்று பதட்டத்துடன் கூறியவளையும், அவளின்
பின்னால் கையில் அவளின் துப்பட்டாவுடன் கண்ணாடி கதவின் அருகில் வேகமாக வந்த நரேனையும் பார்த்தான்.
அந்த ஸ்டாலின்
வாசலுக்கு ஓடிவந்த நரேன் ஆதித்திடம் அவள் சரன்புகுந்ததை கண்டவன் அவன் பார்வையில்
இருந்து வேகமாக வேறுபுறம் ஓடி மறைந்தான்.
துப்பட்டாவை
பிடித்து இழுக்கும் போது அவளின் சுடிதாரையும் எட்டி பிடித்து இழுத்ததினால் தோள்
பகுதியில் தையல் கிழிந்து தொங்கிய அவளின் உடையை மற்றவர்களின் பார்வையில் இருந்து
மறைக்க தன்னுடன் அவளை இழுத்து அனைத்த ஆதித்,
நீ அன்னைக்கு
ஹோட்டலில் பார்த்தவ... தானே! என்று கேட்டான் .
அதற்கு ஆமாம் என்று தலை ஆட்டிக்கொண்டே தன்னை காப்பாற்றச்சொல்லி ஆத்தின்
கைப்பற்றி கேட்டாலும் அந்த பதட்டத்திலும் அவன் தன்னை இழுத்து அணைத்ததும் அன்னிச்சை
செயல்போல அவனை தடுக்க முயன்ற அழகுநிலாவிடம்
உன் ட்ரெஸ்
கிழிந்து இருக்கு என்று சொல்லி அவளை தன்னுடன் அணைப்பதுபோல் பிடித்து கிழிந்த
உடையில் தெரிந்த அவளின் உடலை
மறைத்தபடி என்ன ஆச்சு என்று கேட்டான்.
அதற்கு
அவன்..அவன்..மொபைல்..அன்னைக்கு என்று பதட்டத்தில் கைகால் நடுங்க பேசமுடியாமல் வார்த்தைகள் அவளின் வாயில்
தந்தியடிப்பதை பார்த்த ஆதித் அவளின் பதட்டத்தை
தணிக்கும் விதமாக முதுகில் தட்டிக்கொடுத்தான்.
அப்பொழுது
அவனுக்கு ஆசையாக ரிங் வாங்கிவிட்டு சர்ப்பிரைசாக அவனுக்கு கொடுக்க அங்கிருந்த
சேல்ஸ்மேன் மூலமாக கவுண்டரில் நின்று கொண்டிருக்கும் ஆதித்துக்குத் தெரியாமல் அந்த
ரிங்கிற்கான் பணத்தை செலுத்தி பேக் செய்து வாங்கியவள் கவுண்டரில் நின்று
கொண்டிருந்த ஆதித்தை நோக்கிப் போனாள்....
ஆனால் ஆதித் ஓர்
அழகிய இளம் பெண்ணை அணைத்தபடி நின்ற காட்சி மட்டுமே அவளின் கண்ணில் தெரிந்தது. அதனை
பார்த்த வர்ஷா அதிர்ந்து நின்றது ஒரு நிமிடம் மட்டுமே...
அடுத்த செகண்ட்
ஆதித்....! என்று கோபத்துடன் கத்தினாள். அவளின் கோபக்குரலில் தான் நிற்கும் நிலையை
பார்த்து அவள் தன்னை தவறாக நினைப்பதை யூகித்த ஆதித் அழகுநிலாவை தள்ளி நிறுத்த நிறுத்த
முனைந்தான் .
ஆனால் அவன்
விலகினால் தன்னுடல் மற்றவரின் காட்சிப் பொருளாகிவிடும் என்ற எண்ணத்தில் அவனை விலகவிடாமல்
பிடித்து அவனுடன் ஒன்றினாள் அழகுநிலா.
தன் குரல்
கேட்டதும் பதட்டத்துடன் அவளை விளக்க முயன்ற ஆதித்தின் செயலையும் ஆனால் அதற்கு அவள்
விடாமல் அவனை இழுத்து அணைப்பதையும் பார்த்த வர்ஷா ஆதித்தை கோபத்துடன் பார்த்தாள்.
ஆதித்தோ, “பயத்துடன்
தன்னிடம் ஒன்றும் அழ்குநிலாவின் நிலைமையை
உணர்ந்து தன் நிலையை மாற்றாமல் அப்படியே நின்று கொண்டு,”
சே.. சே... வார்சா நீ நினைக்கிற மாதிரி இல்ல என்று
விளக்கம் கூறமுயன்றான், ஆனால் அவனின்
வார்த்தையை கேட்காமல் யூ சீட் பிராடு, ஐ ஹேட் யூ... என்று கூறியபடி
கண்ணீருடன் விறுவிறுவென நடையும், ஓட்டமும்,
அத்திரமுமாக கதவை திறந்த வர்சாவிக்கு
ஆதித்தின் வார்சா
என்ற கத்தல் காதில் விழவேயில்லை. வெளியேறியவளின் மனது கொதித்தது. இத்தனை நாள் என்
முன்னே மற்ற பெண்களை தொட்டு கூட பேசமாட்டேன் என்பதை போல் பாசாங்கு செய்திருக்கிறான்
பாவி! எப்படி
ஏமார்ந்து போய் இருந்திருக்கிறேன் என்றபடி
வெளிவந்தவள் வாசலில் நின்ற டாக்சியை கையசைத்து அழைத்து அதில் ஏறி
சென்றுவிட்டாள்.
ஆதித்துக்கோ
வார்சா தான் சொல்ல வருவதை கூட கேட்கும் பொறுமை இல்லாமல் ஓடியது கோபமாக மாறி, பின்
எல்லாம் இவளால் தான் என்று தனது கையணைப்பில் நின்றிருந்த அழகுநிலாவின் மேல் அது
திரும்பியது .
தன்னை ஒட்டி நின்ற
அழகு நிலாவை பிடித்து தள்ளிவிட்டான். கீழேவிழுந்த அழகுநிலா தன கையில் பற்றியிருந்த
மொபைலுடன் கையால் கிழிந்த இடத்தை மறைத்துக்கொண்டே விழுந்தவளுக்கு அவமானமும்
அதே நேரம் தன்னால்
அவனுக்கும் அவன் காதலிக்கும் இடையில் பிரச்சனை வந்துவிட்டதே! என்ற குற்ற
உணர்ச்சியுடன், ஆதித்.. என்று வர்சாவால் அழைக்கப்பட்ட
தன்னை காப்பாற்ற முயன்ற ஆதித்தை விட்டு தனியாக அந்த மாலைவிட்டு கடக்க பயத்துடனும்
மலங்க மலங்க..விழித்தாள்
அழகுநிலாவின்
தோற்றத்தை கண்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன், அவன் சர்ட்டுக்கு மேலே
போட்டிருந்த கோர்ட்டை கழட்டி தோளில்
போட்டுகொண்டு அழகுநிலாவின் அருகில் சென்று அவளின் கை பிடித்து எழுப்பிவிட்டவன்
அந்த கோர்ட்டை அவளின் உடை மேலே போடச்சொல்லி கொடுத்தான்.
பின் கோபமாக அந்த
ஷோரூமின் பில் செக்ஸனில் நின்று கொண்டிருந்த ஆளிடம் என்ன உங்க மாலில் வந்து
பர்சேஸ் செய்யவந்திருக்கும் பெண்ணை ஒருவன் துரத்திவருகிறான், நீங்கள்
செக்யூரிட்டியை அலார்ட் பண்ணாமல் சும்மா நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு
இருக்குறீர்கள்? என்று கர்ஜித்தான் .
அவ்வளவு நேரம்
அங்கு நடந்து கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருத அவன், சாரி சர்! இதோ
என்று போனின் மூலம் அவன் சொன்னது போல் செக்யூரிட்டி அலார்ட் செய்துவிட்டு தன
கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இருவரையும் ப்ளுகலர் சர்ட் போட்டு இந்த லேடியை
துரத்தி கொண்டு வந்தவன் லெப்ட் சைடு ஓடினான் போய் தேடுங்கள் என்று சொன்னான்.
அந்த ஸ்டாலின்
லெப்ட் சைடு இருந்த கோல்ட் ஜுவல்லரி ஷாப் நரேனின் அப்பா பினாமி பேரில் வாங்கி
நடத்தும் கடை.
நரேன் ஆதித்தை
பார்த்ததும் வேகமாக லெப்ட் சைடு இருந்த அவனின் கடைக்குள் சென்றவன் அதன் கல்லாவில் இருந்த அவனின் வேலைகாரனிடம்
இரண்டு ஸ்டாலுக்கு அடுத்து இருக்கும் படிக்கட்டில் ஓர் லேடீஸ் ஹன்ட்பேக்கும் அதில் இருந்து சிதறிய பொருட்களும் இருக்கும்
அதனை யாரும் பார்பதற்குள் அகற்றிவிடுமாறு கூறினான்.
பின் கடைக்குள்
இருந்த பெர்சனல் அறைக்கு சென்று அவளின் துப்பட்டாவை ஒரு பையினுள் மறைத்து
வைத்துவிட்டு தான் போட்டிருந்த உடையும் மாற்றிவிட்டு சிலிப்பரை கழட்டிவிட்டு ஷூ
மாற்றிவிட்டு கண்ணாடியுடன் தனது ஹேர்ஸ்டைலயும் மாற்றிவிட்டு கொண்டான்.
அங்கு விரைந்து
வந்த செக்யூரிட்டீஸ் அந்த மாலில் இருந்த மூன்று ப்ளுகலர் சர்ட் போட்டவர்களை
காண்பித்து அவர்களா? என்று அழகுநிலாவிடம் கேட்டனர்,
அவள் இல்லை என
கூறியதும் ஆதித் மூன்றாம் ப்ளோரில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவினை பார்த்தால்
அவன் எங்கு செல்கிறான் என்பதை கண்டுகொள்ளலாம் என கூறியதும் கேமரா கண்ரோலிங்
அறைக்கு சென்று பார்த்தனர்
ஆனால் மூன்றாம்
தளத்தில் இயங்கிகொண்டிருந்த கேமரா மட்டும் ஒருமணிநேரத்திற்கு முன்பே ஆப் செய்துவைக்கப்பட்டிருந்தது
மேலும் அழகுநிலா
தனது பேக்கும் அதில் இருந்த பொருட்களும் அங்கிருந்த படிக்கட்டுகளில்
சிதரிக்கிடப்பதாக கூறியதும் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அப்படி எந்த
பொருளும் அங்கு இல்லை. .
பின் எதுவும்
செய்யமுடியாமல் பர்சை ஒருவன் திருட முயன்றதாக சொல்லி ஓர் கம்ப்ளைன்ட் மட்டும்
ஆதித் அழகுநிலாவின் சார்பில் எழுதிக் கொடுத்தான். பின் இருவரும் அந்த மாலின்
வாசலுக்கு வந்தனர்.
அங்கிருந்த
செக்யூரிட்டியிடம் தனது காரை எடுத்து வரும்படி கூறி டோக்கனை கொடுத்தான் ஆதித்.
காத்திருக்கும் வேளையில்,
ஆதித் தன் கையில் இருந்த, வர்சாவிற்காக பில்போட்டு வாங்கிய நகைப் பையை
வெறித்துப்பார்த்தான்.
அதனை பார்த்த
அழகுநிலா குற்ற உணர்வுடன், சாரி... என்னால் தானே மேடம் உங்க கூட கோவிச்சுகிட்டு
போய்டாங்க! சாரி சார்.... என்னை அவங்கிட்ட கூட்டிட்டுப்போறீங்களா? நான் நடந்ததை
அவங்களிடம் சொல்கிறேன் என்று வருத்தத்துடன் கூறினாள்.
அவள் அவ்வாறு
கூறியதும், கோபத்துடன் ஏய்......! நீ உன் வேலையப் பார்த்துட்டு போ. இனி ஒருதடவை
பிரச்சனையை இழுத்துகிட்டு என் முன்னால்
வராமல் இருந்தாலே போதும்.
அதென்ன! அந்த
இடத்தில் அத்தனை பேர் இருக்கும்போது என்கிட்ட மட்டும் உனக்கு ஹெல்ப் கேட்க
தோனுச்சு என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?
என்றவன்,
இனி உன்
பிரச்சனையை நீயே பார்த்துக்கோ என்று சொல்லிக்கொண்டு இருக்கையில், அவனதுகாரும் வந்துவிட
அவளை கண்டுகொள்ளாமல் வேகமாக அந்த காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தவன் காரை
திருப்பும் பொது அவளின் தோற்றத்தைக் கண்டான்.
அவனின் கோர்ட் அவளின்
முழங்காலுக்கு சற்று மேல் வரையும் சோல்டர் இரங்கி கை அவளது கையை முழுவதுவும்
முழுங்கி அவளின் விரல்கள் தாண்டி நீட்டிகொண்டிருந்தத்தையும் கண்டான்.
மேலும் அந்த
கலவரத்தில் அவளிடம் இருந்த பர்சும் தொலைந்ததால் அவளிடம் இப்பொழுது வீட்டிற்கு
டாக்சி பிடித்து போகக் கூட பைசா இல்லை என தெரிந்தவனுக்கு, கலங்கிய அவள் முகம்
கண்டதும் மேலும் அநாதரவாக ஏனோ அவளை விட்டுவிட மனது இல்லாமல் காரை நிறுத்தி
கண்ணாடியை இறக்கிவிட்டு அவளை வரச்சொல்லி கையசைத்தான் .
அவ்வளவு நேரமும்
அவனின் காரையே வெரித்துப் பார்த்தவள் அவன் கையசைத்துக் கூப்பிட்டதும், அவன்
அவளுக்கு உதவவே கூப்பிடுகிறான் என்பதை உணர்ந்துகொண்டடாள். எனவே அவளும் அவன் காரை
நோக்கிச்சென்றாள்.
ஆனால் சற்று முன்
அவன் அவளிடம் கடுமையாக் பேசியதால் இனி மேலும் அவனின் உதவியை பெற்று அவனுக்கு
இடஞ்சல் தரக்கூடாது என்ற முடிவுடன் அவன் பேசுவதற்கு முன்னே,
இல்ல சார்..
இதுவரை நீங்கள் எனக்குச் செய்திருப்பதே பெரிய உதவி இனி நான் பார்த்துக்கொள்வேன்.
நீங்கள் யாரோ ஒருத்தியான எனக்காக இனி சிரமப்பட வேண்டாம்! என கண்ணில் நீர் தேங்கிய
விழிகளுடன் அவனிடம் கூறினாள்.
தனது உதவியை அவள்
மறுப்பதாக சொன்னதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே கொஞ்சம் பொறு.
அதென்ன நீ பாட்டுக்கு உனக்கு உதவுவதற்காகத்தான் நான் கூப்பிடுகிறேன் என்று நீயாக
முடிவெடுக்கலாம்.
நான் கூப்பிட்டது
என் கோர்டுக்காக அதன் விலை தெரியுமா உனக்கு? எய்டீன் தவுசன்ட் அதை வாங்கத்தான்
உன்னை கூப்பிட்டேன். அதை தா..... என்று கை நீட்டினான்
இதை
எதிர்பார்க்காத அழகுநிலா! அதை கழட்டினால் தன் மானம் போகும் என்பதனை உணர்ந்து,
வேண்டுமென்றே என்னை டீஸ் பண்ணுகிறான்! என்று சட்டென்று கோபத்துடன் தன் கையில்
போட்டிருந்த தங்க வளையலை கழட்டி அவனிடம் நீட்டினாள்.
அவள் தன்னிடம்
நீட்டிய வளையலை பார்த்தபடி எனக்கு வளையல் போடும் வழக்கம் எல்லாம் கிடையாது! என்னை
பார்த்தால் உனக்கு பொம்பளை மாதிரி தெரியுதா?
என்றான்.
அவனின் சீண்டலில்
துடுக்குத்தனமாக பேசமுயன்ற நாவை அடக்கி, மனதினுள் அவன் உனக்கு இருதடவை பெரிய
ஆபத்தில் உதவியவன், அதனால் அவனின் பேச்சை பொறுத்துக்கொள் என்று மனதினுள்
சொல்லியபடி... வெளியில்
சாரி சார்! நீங்கள் என் மானத்தைக் காக்க கொடுத்திருக்கும்
இந்த கோர்ட்டின் மதிப்பு உங்களுக்கு வெறும் பதினெட்டாயிரம் தான்! ஆனால், எனக்கு
இந்த கோர்ட் என் உயிருக்கும் மேலானது. ஆதனால் என்னால் இதை இப்பொழுது கொடுக்க முடியாது
இதற்கு ஈடாக எனது
இந்த மூன்று பவுன் தங்க வளையலை உங்களுக்கு கொடுக்கிறேன் உங்களின் முகவரி கொடுங்கள்
என் ஹாஸ்டலுக்குப் போனபிறகு இதை மாற்றிவிட்டு துவைத்து இஸ்திரி போட்டு உங்களிடம்
சேர்த்துவிடுவேன் என்றாள்.
அவள் பேசிக்கொண்டு
இருக்கும் போதே ஆதித் காரின் தனக்குப் பக்கத்து சீட்டின் கதவை எட்டி திறந்தவன்
அவளை பார்த்து அந்த சைடு வந்து ஏறு.. என்று கூறினான்.
நான்தான் எனக்கு
உங்க உதவி இனி தேவையில்லை என்கிறேனே! பிறகு என்ன சார் உங்களின் காரில் ஏறச்
சொல்கிறீர்கள்? என்றாள் அழகுநிலா
உடனே அதுதான் இனி
என் உதவி உனக்குத் தேவையில்லையே! பிறகு எதற்கு என் கோர்ட் உனக்கு. இந்த மாலுக்குள் திரும்ப காரை
பார்க்பன்னி போய் உனக்கு டாப் வாங்கணும் என்றால் விடிந்துடும்
பக்கத்தில்
இருக்கிற ரெடிமேட் கடைக்கு கூட்டிட்டு போறேன், அங்க உனக்கு ஒரு டாப் வாங்கிகொண்டு
டிரையல் ரூமில் மாற்றிவிட்டு என் கோர்ட்டை எனக்கு கொடுத்திடு நான் பாட்டுக்கு
என்வழியில் போறேன் நீ உன் வழியில் போ...... என்றான்.
அவன் அவ்வாறு
கூறியதும், அந்தப்பக்கம் வந்து காரில் ஏறியவள் கதவை அறைந்து மூடினாள்.
பின் ஆதித்திடம்
டாப் வாங்க என்னிடம் காசு இல்லை எனவே அவள் கையில் வைத்திருந்த வளையலை டேஸ்
போர்டின் மேல் வைத்தவள் இதை வைத்துக்கொண்டு டாப்பிற்கான பணத்தை நீங்களே
கொடுத்துவிடுங்கள் ஸார் என்று கூறினாள்.
கார் புறப்பட்டு
சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். நம் அழகுநிலாவினால் அந்த அமைதியை
பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.
அவனின் முகத்தை
ஓரக்கண்ணால் பார்த்தவள், அவன் தன்னை கவனிக்கவில்லை என நினைத்து செமையா அழகாத்தான்
இருக்கிறார்!
அனால் கொஞ்சம்
சிரிப்பும் கண்ணில் கொஞ்சம் சாந்தமும் இருந்தால் இவன் தான் உலக அழகன். ஒருவேளை
மாலில் இவருடன் கோவித்துக்கொண்டு போன இவரோட அந்த அழகியோடு இருக்கும் போதாவது
கொஞ்சம் சிரிப்பாரோ!
எப்பா அந்த
பொண்ணும் இவருக்கு ஏத்தமாதிரி என்ன ஒரு அழகு செம ஜோடி பொருத்தம் தான், சே என்னால்
ரெண்டு பேருக்கும் பிரச்சனை வந்துடுச்சே! என்று அவனின் முகத்தை பார்த்தபடியே
மனதிற்குள் பல கதைகள் பேசிக்கொண்டு வந்தாள் .
என்ன என் முகத்தை
பார்த்து இவ்வளவு பெரிய இளிச்சவாயனாக இருக்கிறானே! என்று நினைகிறாயா? என்றான்.
ம்...கூம்...உங்களை
போய் இளிச்சவாய் என்று குருடன் கூட சொல்லமாட்டான் சார்.... என்று அழகுநிலா
சொல்லியதும் .
பிறகு என்ன
நெனச்சு என்ன பார்த்த சைட் அடிக்கிறையா? என்று தன ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கி
கேட்டான்.
அவளும் அன்று
ஹோட்டலில் பார்த்தபோதும் சரி, இன்று மாலில் பார்த்த போதும் சரி, அவன் பேசும் போது
இடையிடையே அவன் ஒற்றை புருவத்தை அசால்டாக மேல் எழுப்பி கேள்விகேட்பதை வழக்கமாக
கொண்டிருப்பதை பார்த்தால் அவ்வாறு அவன் செய்வது அவனுக்கு இன்னும் கம்பீரத்தை
கொடுப்பததையும் உணர்ந்தாள்.
இவருக்கு,
பார்பதற்கு சைட் அடிக்க ஏத்தமாதிரி அழகா இருக்கோமென்ற கெத்து இருக்கு. அன்னைக்கு
என்ன பார்த்து கன்றி புரூட் என்று சொன்னவனை நான் சைட் அடிப்பதாக ஒத்துக்கொள்வதா?
என்ற ஈகோ மனதில் எட்டி பார்க்க....
உங்களுக்கு...
பார்க்கிற எல்லா பொண்ணுங்கலும் உங்களை சைட் அடிகிறாங்கனு நெனப்புத்தான் சார்.
நான் ஒன்றும்
உங்களை சைட் எல்லாம் அடிக்கவே இல்லைப்பா, நானும் என்னிடம் இந்த போனை அந்த அயோக்கியன் கேட்டதில் இருந்து
எப்படியாவது என் வீடியோ பதிவை இதில் இருந்து டெலிட் செய்துவிடனும் என்று டிரை
பண்றேன்
ஆனால் அது ஓபன்
பண்ண பிங்கர் பிரின்ட் கேட்குது. வேறு வழியில் நான் முயன்றும் ஆப்பரேட் செய்யமுடியலையே!
அன்னைக்கு எப்படி
நீங்க இதன் ரெகார்டை என்னிடம் ஓடவிட்டு காண்பிச்சீங்கனு கேட்கலாமா என்று
பார்த்தேன் என்றாள்.
ஆதித் உயர்ந்த
இடத்திற்கு வந்தபின் அவனிடம் இயல்பாக பேசும் பெண்கள் குறைந்த எண்ணிக்கையே.
.கண்களில் தூண்டிலோடும் பேச்சில் குழைவோடும் இருப்பவர்களையே அதிகம் சந்தித்ததனாலோ
என்னவோ! வர்சாவைத் தவிர மற்ற பெண்களை ஓர் கடுமையான பார்வையால் எட்ட நிற்கவே
வைத்தான் ஆதித்.
அழகுநிலாவின்
இயல்பான பேச்சு ஏதோ ஒருவகையில் ஆதித்தை ஈர்த்தது. அவள் நான் உங்களை சைட் எல்லாம் அடிக்கவே
இல்லப்பா! என்று போட்ட அழுத்தமான வார்த்தைகளிலேயே அவள் பொய் சொல்வதை உணர்ந்த
ஆதித்துக்கு உதட்டில் இளமுறுவல் அரும்பியது.
அதன் பின் அவள்
கூறியதை கேட்டவன் நீ உண்மையிலேயே சாப்ட்வேர் இஞ்சினியர்தானா..? என்று கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும்
ஹலோ சார்... நானெல்லாம் காம்பஸ் இண்டர்வியூவிலே சாப்ட்வேர் ஜாப்பிற்கு செலக்ட் ஆனவளாக்கும்.
என்னை பார்த்து எப்படி நீங்க எப்படி டவுட்டாகலாம்?
என்று முறைப்புடன் கேட்டாள்.
அவள் பேசும் தோரணை
ஆதித்துகு சுவாரஸ்யத்தையும் மேலும் பேச்சை வளர்க்கும் ஆர்வத்தையும் கொடுத்தது.
எனவே அவளிடம்,
உங்க பீல்ட்டில அவங்க கூட வேலை பார்க்கிறவங்களை எவ்வளவு வசயசானவங்கலாக இருந்தாலும்
பேர்சொல்லி அதன் முன் ‘மிஸ்டர்’ போட்டுத்தான் கூப்பிடுவாங்க.
ஆனால் நீ என்னை
மூச்சுக்கு முந்நுறுதடவை சார் போட்டுக் கூப்பிடுற என்றதும், அதற்கு பதில் பேச முயன்றவளை
ஸ்....என்று
சத்தம் கொடுத்து வாயில் ஓர் விரலை வைத்து நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை.
பேசிமுடிக்கும் முன் இடையில் புகுந்து பேசுவது எனக்கு பிடிக்காது என்று சொல்லியவன்,
அப்பறம் அன்னைக்கு
ஹோட்டலில் ஏற்கனவே ஆன் பண்ணி போன் ரெக்கார்டு மோடில் ஓடிக்கொண்டு இருந்ததால் அதில்
வீடியோ ரெகார்டை உனக்கு காண்பிக்க முடிந்தது இதுகூட தெரியாம நீ எல்லாம் சாப்ட்வேர்
இஞ்சினியர்னு சொன்னால் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்? என்றான்.
ஹி..ஹி.. என்று
ஓர் அசட்டுச் சிரிப்பை அவனுக்கு முன் உதிர்த்தவள், ஆமால்ல அது ரெகார்ட் மோர்டில்
இருந்ததுள்ள நான் அதை யோசிக்கவே இல்லையே என்றாள்.
இவனிடம் பார்க்கும்
போதெல்லாம் பல்ப் வாங்கிக்கிட்டே இருக்கோமே என்று மானசீகமாக் தலையில்
கைவைத்துக்கொண்டவள் பின் கடுப்புடன் அவன்
வாயில் விரலை வைத்து
ஸ்....இடையில் பேசாதே
என்று அதிகாரதோரணையில் பேசும் போதே, எப்பா! பயங்கர ஸ்டிக்ட் ஆசாமியா இருப்பான் போல,
இவன்கிட்ட வேலை பார்கிறவங்க செத்தாங்க.
நமக்கு ஹெல்ப் செய்தவர்னு
பார்த்த ரொம்பத்தான் அதிகாரம் தூள்பறக்கு என்று மனதில் அவனை அர்சனை செய்தபடியே வெளியில்
வெகுளியாக முகத்தை வைத்துக்கொண்டு,
இல்ல நானும்
அன்னைக்கும் பார்கிறேன் இன்னைக்கும் பார்கிறேன் அதென்ன என்னைய நீ,வா,போ என்றே
மரியாதையில்லாமல் கூப்பிட்டுப் பேசுறீங்களே!
நாம் ரொம்ப மதிச்சு சார் போட்டுக் கூப்பிட்டாலாவது கொஞ்சம் திருந்திருவீங்கனு
கூப்பிட்டுத்தான் பார்கிறேன் ஆனால் எங்கே திருந்தரமாதிரி தெரியலயே! என்றாள்.
அவள் அவ்வாறு
சொன்னதும் எப்பா..... என்ன வாய் இவள பெத்தாங்களா? அல்லது செஞ்சாங்களா? என்று
மனதிற்குள் நினைத்தவன் வெளியில் கெத்தாக முகத்தை வைத்துக்கொண்டு அவளை மிதப்பமாக்
ஓர் பார்வை பார்த்தபடி,
என்
ரேஞ்சுக்கெல்லாம் உன்க்கு உதவி செய்றேன்னு
என் அருகில் நிற்கவைத்ததே
பெரியதப்பு. இதுல வாங்க, போங்கனு மரியாதையா வேறு சொல்லணுமோ?
சரிதான் போடீ...
என்று கூறினான் கடைசியாக சொன்ன போடி என்ற
வார்த்தையை மட்டும் சவுண்டு இல்லாமல் அவளின் முன் உதடு அசைவில் புரிந்துகொள்ளுமாறு
தெளிவாக கூறினான்
அவன் அவ்வாறு
கூறியதும் கோபத்துடன் அவனை கொதிக்கும் உள்ளத்தோடு முறைத்துப் பார்த்து திட்ட
போகையில், காரை சடன் பிரேக் போட்டு
நிறுத்தினான்.
-----தொடரும்------

Very Nice update
ReplyDeleteThank you Vasanthi
Delete