anti - piracy

Post Page Advertisement [Top]


               பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை...! [தீபாஸ்-ன்]
                             அத்தியாயம்[முதல்பாகம்]-24
                                

தமிழ்நாட்டில் தோரியம் இருப்பதாக அதுவும் பெரும் அளவில் இருப்பதாகவும் என்னிடம் பிராங் கூறி காட்டிய அந்த மேப்பில் பர்டிகுலராக எங்கெங்கு இருக்கு என்ற டீடெய்ல்ஸ் மிஸ்ஸிங் ஆகியிருப்பதை நான் கவனித்தேன் எனவே அதுபற்றி பிராங்கிடம் கேட்டேன்.

அப்பொழுதுதான் பிராங் நம்ம சைண்டிஸ்ட் தன்வந்திரியை பற்றி என்னிடம் கூறினான். அவர்தான் தோரியம் தமிழ்நாட்டில் இருப்பதை சேட்டிலைட்டில்  இருந்து வந்த சிக்னல் மூலம் அறிந்துகொண்டு இன்போர்ம் செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அந்த லோகேசன் மேப்பை அவரிடம் இருந்து பெற முயன்ற போது  அவர் பைத்தியமானது போல் நடந்துகொண்டதாக கூறப்பட்டது . எனவே அவரிடம்  இருந்து அந்த குறிப்பை பெற மேற்கொண்ட சித்ரவதையில் அவர் மூர்ச்சையானார்.

எனவே பிராங்கின் ஆட்கள்  அவர் செத்ததுபோல்  நம்பியதாக  காண்பித்து அவரை குப்பைகிடங்கில் போட்டுவிட்டுவந்து அதன் பின் அவரை பாலோசெய்தனர்.

அப்போது அவரின் விசுவாசியான அசிஸ்டென்ட் நீரஜா அவரை மீட்டு தன்னிடம் அழைத்து சென்று அவரை நலமாகியதுவரை கண்காணித்து அவர் பைத்தியம் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு  திரும்ப பிராங்கின் ஆட்கள் கஸ்டடிக்கு எடுத்துவர முயன்றபோது அந்த நீரஜா அவளின் உயிரைகொடுத்து தன்வந்திரியை தப்பிக்க வைத்துவிட்டதாகவும் அவன் கூறினான்.

மேலும் அவரை பிராங்கின்  ஆட்கள்  தேடிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவரை நான் இந்தியா போவதற்குள் கண்டுபிடித்து பிராங்கின் கஸ்டடிக்கு கொண்டுவந்து அந்த டீடைள்சை அவரிடம் இருந்து கறந்துவிடுவோம் என்று என்னிடம் பிராங்  கூறினான்.

அவன் அவ்வாறு என்னிடம் கூறியதும் பிராங்கின் ஆட்கள் சைண்டிஸ்ட் தன்வந்திரியை கண்டுபிடித்து கஸ்டடிக்கு எடுப்பதற்குள் நான் முந்திக்கொண்டு நம்மிடம் சைன்டிஸ்டை கொண்டுவர முடிவெடுத்தேன்.

அதனை தொடர்ந்து சைண்டிஸ்ட் தன்வந்திரியை தேடும் பிராங்கின் ஆட்களை தீரனின்  டீம் ஆட்டகளை வைத்து பாலோ செய்தான்.

பிராங்கின் ஆட்கள் தன்வந்திரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து நெருங்கும் நேரம் தீரனின்  ஆட்கள் பிராங்கின் ஆட்களை முந்திக்கொண்டு நம் இடத்திற்கு கொண்டுவந்து விட்டோம் இதோ இப்போ அவரும் என் டீமில் ஒருத்தராக இணைந்திருக்கிறார் என்றான்.

மேலும்  இந்தியாவில் என்னுடைய  இச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய நண்பரான நியூடெக் சி.இ.ஓ மகேஸ் மல்கோத்ராதான் என்று அங்கு இருந்த மகேஷ் மல்கோத்ராவையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தினான் தீரன்.

இவர் இல்லாவிட்டால் நான் நினைத்தகாரியத்தை அவ்வளவு எளிதாக இங்கு  செய்திருக்கமுடியாது இவரை போன்ற ஒருவரின் நட்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்ட்டம்  என்று கூறினான் தீரன்.

அவன் அவ்வாறு கூறுவதை கேட்ட மகேஷ் மல்கோத்ரா எனக்கும் தீரனின் நட்பு கிடைத்தது பெரும் வரம்தான்.

நான் உலக அளவில் சிறந்த தொழில் அதிபராக திகழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் தீரனுடன் சேர்ந்து நான் என் நியூ டெக் மொமன்ஸ் உருவாக்க சந்தர்பம் அமைந்ததால்தான்.

அவரின் செயல்திறமை பணிசெய்யும் விதம் திட்டமிடும் அவரின் கூர்மூலை இதற்கெல்லாம் நான் பரம விசிறி. இப்படிப்பட்ட ஒருவருக்கு உதவமுடிவது எனது பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

மேலும் நான் பெருசா ஒன்றும் அவருக்கு  உதவியும் செய்யல அவருக்கு நான் செய்த உதவிக்கெல்லாம் எதிர்பார்க்காத அளவு அவர் லாபம் எனக்கு கிடைக்க செய்திருக்கிறார் என்றார் மல்கோத்ரா.

ஆம் இந்தியாவின் கருப்புசந்தையின்  மூலம் ஆயுதங்களை தீரன் பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்தது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மகேஷ் மல்கோத்ரா மூலம்தான்.

எனவே சத்தம் வெளியில் தெரியாமல் இங்கே இவ்வளவுபெரிய ரானுவபாதுகாப்பு தளம் போன்ற ஒரு பாதுகாப்பு உபகரங்களுடன் தீரனால் உருவாக்க முடிந்தது .

இத்தனையும் செய்யவதற்கு பெரும் பணம் தேவைப்பட்டது தீரனுக்கு. அதற்காகவே பிராங்கின் கணக்கில் இருந்த அவனின் இந்த ப்ராஜெக்ட் செயல்படுத்துவதற்கான பணத்தை யாழிசை மூலம் தீரன் கையகப் படுத்தியிருந்தான்..

அவன் கூறுவதை கேட்டதும் யாழிசை ஒருநிமிடம் பிரமிப்பில் நின்றுவிட்டாள். தன்னை பெரும் சிக்கலில் தீரன் மாட்டிவிட்டிருக்கிறான்தான்.

அவளுக்கே தெரியாமல் அவளின்  அனுமதியில்லாமல் தன்னை ரிஸ்கில் தீரன் தள்ளியிருகிறான்தான் அதற்கெல்லாம் தீரனின் மேல் யாழிசைக்கு பயங்கர  கோபம் இன்னும் இருக்குது  என்றபோதிலும்.

இப்போது அவன் கூறியதில் இருந்து  தன் பூமியை அழிக்கும் நாசவேலைக்கு எதிரான யுத்தத்தில் தன்னை அவன் ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறான் என்பது தெளிவாக புரிந்தது யாழிசைக்கு.

ஏற்கனவே அவனின் தோரணை மற்றும் கம்பீரத்தில் கொஞ்சம் மிரண்டும் அய்யாவின் மகன் என்ற புரிதலில் கொஞ்சம் எட்டிப்பார்த்த அன்பும் அவனின் காதல்வார்த்தையில் லேசான அவனின்மேல் சரிந்த மனதை யாழிசை,

தனது பூமியை அழிக்க சி.என்.ஜி சார்பில் வந்திருக்கும் அரக்கன் என்ற  செய்தியில் அவனை முற்றிலும் வெறுக்கவே முயன்றாள்.

ஆனால் அவனை தான் வெறுத்ததற்கான காரணம் இப்போ ஆட்டம் கண்டுவிட்டதை கண்டவள் உள்ளம் அவனின் மேல் காதல் வயப்பட்டுவிடுமோ என்ற அச்சம் கொண்டது.

என்னதான் அவன்  செய்கின்ற காரியத்திற்கு விளக்கம் கொடுத்தாலும் அதை செய்வதற்கு அவன் மேற்கொண்டுள்ள நெட் பேங்கிங் திருட்டு. சட்டத்துக்கு புறம்பான ஆயுதமேந்திய அன்னிய தேசத்தவருடனான கூட்டத்தின் பாஸ் என்ற தோரணை.

களங்கமில்லாத தனது வாழ்வை புயலாக சுழற்றி  மிரட்டி அவனின் ஆயுதமாக யாழிசையை யூஸ் செய்துகொண்ட செயல், முதலியன அவளுக்கு அவனின் மேல் அச்சத்தை கொடுத்தது. அவனை சுற்றியும் ஆபத்து சூழலை  அவன் நிலைமையை அவளை மிகவும் அச்சுறுத்தியது.

அவனின் மேல் வெறுப்போடு இருந்தபோது அவர்களுக்கு இடையே நடந்தது அக்ரீமன்ட் என்கேஜ்மென்ட்  என்று நினைத்து அவனை தள்ளிவைக்க முடிவெடுத்த அவளால் அவன் மனித வடிவில் வாழும் கார்பரேட் அசுரர்களுக்கு  எதிரான  வீரமிக்க போராளியாக கண்டதால் அவனின் ஹீரோ இமேஜின் மேல் காதல் உண்டானது 

இப்படி பூகம்பமாய் உள்ளவனுடன் தனது வாழ்க்கையை இணைந்துவிட்டதை நினைத்தவளுக்கு தன்னால் அவனின் இந்த அதிரடியான சூழலில் தாக்குபிடிக்க முடியுமா? என்ற ஐயம் எழுந்தது.

ஒவ்வொருதடவை அவன் வெளியில் போய்விட்டு வரும்போது உருப்படியாக வந்து சேருவானோ மாட்டானோ என்று பயத்தில் தவித்துக்கொண்டு தன்னால் இருக்கமுடியுமா? என்ற பயம் உண்டானது.

அவன் கூறுவதை பார்த்தால் அவனின் வாழ்கையில் தென்றலின் இதம் தீண்டவே போவதில்லை என்ற உண்மை புரிந்த அவளால் அதை ஏற்றுகொல்லவே இயலவில்லை.

காதலுக்கும் காதலனின் இயல்பிற்குமிடையே பூப்போன்ற உள்ளம் கொண்டவள் உழன்று வாடி வதங்கினாள்.

பேபி.... யாழி பேபி... என்று தன்னை பிடித்து தீரன் அசைத்தபோதுதான் தன்னிலையடைந்தாள் யாழிசை.

மிஸ்டர் சத்தியமூர்த்தி உன்னிடம் போய்வருகிறேனு சொல்கிறார் பார் என்று தீரன் கூறியதை கேட்டபின்பே  தனக்குள்ளேயே குழப்பத்தில் மூழ்கி சுற்றி நடக்கும் விசயங்களை கூட கருத்தில் பதியாமல் தான் இருப்பதை உணர்ந்து மலங்க மலங்க முழித்தால் யாழிசை.

சத்திய மூர்த்திக்கு யாழிசையை பார்த்து பாவமாக இருந்தது. அவளை அவர் வானவராயர் வீட்டிற்கு செல்லும் சிலநேரங்களில் பார்த்ததுண்டு ஆழமாக அவளை கவனித்து பார்க்கவில்லை என்றாலும்

பிருந்தாவுடன் சிறுபிள்ளையாக தோட்டத்திலும்  வீட்டிலும் அவள் சிறுபிள்ளையோடு சிறுபிள்ளையாக விளையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில்தான் பார்த்திருந்தார்.

முயல்குட்டி போன்ற யாழிசைக்கு சிங்கம்போன்ற தீரனுடன் முடிச்சு அமைந்துவிட்டதை நினைத்து இந்தப்புள்ள இப்படிபோய் மாட்டிகிடுச்சே.... என்று தான் அவருக்கு எண்ணத் தோன்றியது .

இருந்தாலும் அதை கூறாமல் பயப்படாம இரும்மா. நான் உன் அப்பாவிடம் வானவராயர் அய்யாவின் மகனுடன்தான் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கிறது என்றதை சொல்லி அய்யாவோடு உன் அப்பாவையும் கூட்டிகொண்டு வந்து உன்னை பார்கிறேன் தம்பி சொல்பேச்சு கேட்டு கவனமா நடந்துக்கோ என்று கூறிய மறுநொடி.

நோ மிஸ்டர் சத்தியமூர்த்தி இப்போதைக்கு நான் வானவராயர் சன் என்ற விஷயம் வானவராயருக்கு தவிர வேற யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.
நான் இப்போ என்னை என் டாடியிடம் வெளிபடுத்த நினைப்பதே சி.என்.ஜிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்கு என் அப்பாவாகிய வானவராயருக்கு உள்ளது என்பதால் தான்.

என் ஆலோசனைப்படி அவர் இந்த விஷயத்தை அணுகனும் என்பதற்காகவும் என் மாம் அவரிடம் ஒப்படைக்க சொன்ன நகைக்காகவும்தான். என்னை அவரின் மகன் என்று அவரிடம் கூட வெளிபடுத்தி கொள்கிறேன் ஆனால் அதை ரகசியமாக வெளியில் தெரியாமல் வைத்திருக்க வேண்டும் என்றான்.

சி.என்.ஜி அலை தமிழ்நாட்டில் ஓய்ந்தது என்ற நிச்சயத்திற்கு பிறகு என்னை அவரின் மகன் என்று வெளிபடுத்தவே நினைக்கிறேன் அதுவே அவர்களின் பாதுகாப்பு என்றும் கூறினான் தீரன்.

அவன் அவ்வாறு கூறியதும் தீரமிகுந்தன்  உன் அப்பாவை பற்றி உனக்கு தெரியாது நீ மகன் என்ற காரணத்திற்காக நீ சொல்வதற்கெல்லாம் சரி என்று அவர் சொல்வார் என்று நினைக்காதே. அவர் என்றுமே எதையும் சட்டபடியும் நேர்வழியிலுமே எதிர்கொள்வார் உன்னுடைய இந்த பதுங்கி பணத்தாலும் ஆயுதத்தாலும் தாக்கும் கொள்கையோடு அவர் ஒத்துபோவார் என்று எனக்கு தோன்றவில்லை.

அடுத்து என்ன செய்யலாம் என்பதை அவரை சந்தித்தபின்பே முடிவு செய்யலாம் என்று கூறியவர் மிதுனனிடம் திரும்பி, இப்போ மிஸ்டர் தீரன் சொல்வதுபோல் உனக்கு வெளியில் ஆபத்து நிறைய இருப்பதால் இங்கேயே விட்டுச்செல்கிறேன் மிதுனா என்றார் .

மிதுனன் தீரனின் பேச்சையும் அவனின் அதிரடி நடவடிக்கையை சைண்டிஸ்ட் தன்வந்திரியுடன் கூறியதை பார்த்ததும் அவனின் ஹீரோயிசத்தில் ஈரக்கப்பட்டான்.

அவனுக்கு கீழே இணைந்து பணிபுரிய அவனுக்கு உள்ளத்தில் அவ்வளவு ஆசை பெருகியது .கார்பரேட் போன்ற மிகச்சக்திவாய்ந்த எதிரிகளை வீழ்த்த தீரமிகுந்தன் போன்ற ஒரு பெர்சனால்தான் முடியும் என்ற நிதர்சனம் அவனுக்கு உரைத்தது.

எனவே அவன் பெரியப்பாவை அய்யாவிடம் எப்படியாவது அவர் மகனாகிய மிஸ்டர் தீரமிகுந்தனுடன் இணைந்து சி.என்.ஜி எதிர்ப்பு திட்டத்தை செய்ய ஒத்துகொள்ள வைங்கப்பா  .

கண்முன்னால் பார்க்க முடிந்த எதிரிகளுடன் வேண்டுமானால் நம்மால் நேர்மையாக மோதி ஜெயிக்க முடியும்.

உலகில் ஓர் மூலையில் இருந்துகொண்டு பணம் மற்றும் தந்திரத்தின் மூலம் இங்குள்ளவர்களையே நமக்கு எதிராக ஏவிவிடும் கார்பரேட்காரர்களை போன்ற தந்திரக்கார நரிகளுடன் மோத அவர்களை போன்றே யோசிக்கும் அவர்களுக்கு நிகரான மிஸ்டர் தீரமிகுந்தனுடன் சேர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனமாக இருக்கும் என்றான்.

சத்தியமூர்த்திக்கு மிதுணனை பார்த்து உனக்கு இள ரத்தமில்லையா! அதனால்தான் இப்படியெல்லாம் உன்னால் நினைக்க முடிகிறது.

இதுபோன்ற வழிகளில் இறங்கிவிட்டால் திரும்ப நார்மல் வாழ்க்கைக்குள் நம்மால் திரும்ப முடியாது. சட்டபடியும் நேர்மையாகவும் ஒளிவு மறைவில்லாத அனுகுமுறையை கடை பிடிப்பவர்களால் தான் போராட்டம், வாழ்க்கை இரண்டையும் இயல்பாக ஈடுபட்டு  வாழமுடியும்.

அய்யாவோடு கலந்து பேசியபிறகு என்னசெய்யலாம் என்று முடிவெடுக்கலாம் என்றபடி அவனிடம் விடை பெற்று வெளியேறியவரின் பின்னேயே யாழிசையை கைபிடித்து தன்னுடன் அழைத்துவந்தவன் மாதவனிடம் சென்று சத்தியமூர்த்தியை சாப்பிடவைத்து அவரை அவரின் வீட்டில் விட்டுவிடுமாறு கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு யாழிசையுடன் சென்றான்.

என்னவோ இதுவரை அவனின் அருகாமை தராத படபடப்பு இப்பொழுது யாழிசைக்கு எழுந்தது.

இன்று காலையில் கூட அவளின் கையோடு கைகோர்ந்து தோளோடு தோளுரசத்தான் இருவரும் பார்டியில்  காட்சியளித்தனர் அப்பொழுது அவளுக்கு இது தேவையா? என்ற குழப்பமும் அவனின் பியான்சியாக  சம்மதித்தது சரிதானா? என்ற கேள்வியும் அத்துடன் அவனின் சீண்டளுக்கான கோபமே அவளிடம் நிறைந்திருந்ததால் அவனுடன் இணைந்துநின்றாலும் அவளுக்கு கடுகடுப்பே நிறைந்திருந்தது.

ஆனால் தன்னவனின் திறனும், தன்மையும் உணர்ந்தவளுக்கு இப்பொழுது அவனின் அருகாமை படபடப்பை உண்டுபண்ணியது. அவனின் ஹீரோயிசத்தின் மீது அவளுக்கு அளவுகடந்த பிரமிப்பு உண்டானது அப்படிபட்டவனுடன் ஜோடியாக கைகோர்த்து நடப்பது பரவசத்தை கொடுத்தது.

அக்ரீமன்ட் கல்யாணத்தை உண்மையாக ஆகிவிடுவோமா...! என்ற ஆவல் உண்டானது. முதலில் அவனின் அதிரடியில் ஏற்பட்ட பயம் அவனின் நெருக்கத்தில் விலக ஆரம்பித்தது.

அக்ரீமன்ட் என்கேஜ்மன்டோ நிஜ என்கேஜ்மன்டோ கல்யாணமோ எதுவென்றாலும் தனது வாழ்கையில் ஒருவனுடன் தன்னை சம்மந்தபடுத்தி ஒரு சபையில் தானும் மறுப்பு கூறாமல் நின்றபின் இனி மற்றொருவனுடன் தன்னை இணைத்துகொல்லவோ.

அதற்கான தன்னுடைய தூய்மையை பரிசோதித்து காண்பிப்பதோ தன்னால் முடியாது எனவே என்னுடைய நடிப்பும் இவனே... என்னுடைய நிஜமும் இவனே... இவன் கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுதான் தனது முடிவு என எண்ணியிருந்தால்.

இந்நிலையில் தன்னவன் நல்லவன் நாட்டிற்கு நலம்புரியவந்தவன் என்று கேட்டதன்பின் அவனின் மீது தன்னவன் என்ற மயக்கம் உண்டானது. தன மனம் போகும் பாதையை கண்டவள் திடுக்கிட்டாள்.

அச்சோ... அச்சோ... அக்ரீமன்ட்  என்பதற்கு சம்மதித்துவிட்டு இப்போ போய் அவனிடம் நான் மயங்கி ஜொள்ளு விட்டு  திரிவதை அவன் கவனித்துவிட்டால் தன்னை பற்றி என்ன நினைப்பான்.

ஏற்கனவே ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு இருப்பவன் கிட்ட தமிழ் சீரியல் ஆக்டர் மாதிரி பொருத்தமே இல்லாமல் நான் இருந்துகிட்டு நான் ஜொள்ளுவேற விடுவதை அவன் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்.

கெத்தா இருந்துக்கோ யாழி... அவன் உன்னை கட்டாயத்தில் நிற்கவைத்து கடத்திக் கொண்டுவந்து வச்சு  செய்திருக்கிறான் அதனால் நீ அவனின் மேல் கோவமாக இருக்கிற அந்த கோபத்தை பறக்கவிடாமல் பிடிச்சு நிறுத்திகோ டீ... என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.

அவளை தனது அறைக்குள் கூட்டிகொண்டுவந்தவன் கதவடைத்து தன்னருகில் நின்றுகொண்டு  அறையின் அழங்காரத்தைகண்டு கண்கள்  சாசர்போல் விரிந்த நிலையில் நிறைவளைக் கண்டவன் உதட்டில் புன்னகை விரிந்தது.

ஆம்... அந்த அரை முழுவதும் ஒருவிதரோஜாவின் வாசம் மிதந்தது. வெள்ளைப்படுக்கையில் இதயவடிவில் சிகப்பு ரோஜா இதழ்களால் அலங்கரிகப்படிருந்தது. கதவிலிருந்து கட்டில் அருகில்வரை கார்பட் விரிப்புபோல் பூக்களால் நடந்துசெல்ல பூப்பாதைபோடப்பட்டிருந்தது .

தன்னைமறந்து நின்றவளை கைகளில் தீரன் ஏந்தியவுடனே தன்னிலை அடைந்து என்ன பண்றீங்க விடுங்க... என்னை என்று துல்லியவளை சிறுகுழந்தயைபோல் அடக்கி கட்டிலில் விட்டவன்.

பேபி ஹனிமூன் காட்டேஜ் செமையா இருக்குள்ள என்று அவளிடம் வம்புக்கிழுக்க கூறினான்.

என்னது... ஹனிமூனா? என்று அவனை முறைத்தபடி அவள்கேட்டதும் ஹஹஹா பயந்துட்டா? அக்ரீமன்ட் நம்ம ரெண்டுபேருக்கு மட்டுமே தெரியும். மற்ற யாருக்கும் தெரியாது இல்லையா!

அதனால்தான் என் friends இந்த ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஐ ஆம் சோ டையர்ட் நான் சவர் செய்திட்டு வந்துடுறேன் பேபி என்றவன் அந்த ரூமிற்கு சைடில் இருந்த வழியில் சென்று மறைந்தான்.

அவன் அருகில் இருந்தவரை தன்னுடைய படபடப்பை மறைத்துக்கொண்டு இருந்தவள் அவன் விலகிச்சென்றதும் அப்பாடா என்று மூச்சு விட்டாள்.

அச்சோ இவனோடு எப்படி ஒரே அறையில் தங்குவது..? அவனுக்கு நான் அருகில் இருப்பது எந்த சலனத்தையும் தரள போல, எனக்குத்தான் அவன் கிட்ட விளையாட்டா நெருங்கினால்கூட என்னவோ மாதிரி இருக்கு. கெத்த விட்டுட கூடாது யாழி... பி ஸ்டாங். என்று அவளுக்கு அவளே சொல்லியபடி அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது குளித்துவிட்டு வெறும் டவளை மட்டும் கட்டிக்கொண்டு தலையில் ஈரம் வழிய வந்தனை பார்த்தவள் வேகமாக திரும்பி அமர்ந்தவள் அச்சோ... அச்சோ.... கருமம்... கருமம். இப்படி அரைகுறையாய் வருவதற்கு உங்களுக்கு வெட்கமாய் இல்லை? என்று கூறினாள்.

அவனுக்கு அவளின் இத்தகைய பேச்சும் நடவடிக்கையும் சுவாரஸ்யமாக இருந்தது. எனவே என்னோட பெட்ரூம் நான் எப்படியும் இருப்பேன்.

உனக்கு பார்க்க ஒருமாதிரி இருந்தா கண்ணமூடிக்கோ உனக்காகவெல்லாம் என்னுடைய ப்ரீடெம்மை குறைத்துக் கொள்ளமுடியாது. வேண்டுமென்றால் பதிலுக்கு பதில் நீயும் என்னை மாதிரி பிரியா இருந்துக்கோ!

நான் ஒன்றும் உன்னை போல் அச்சோ அச்சோ.. என்று கண்ணை மூடிட்டு திரும்ப மாட்டேன்பா என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும் அவன் நின்றுகொண்டிருந்த கோலம் மறந்து என்ன சொன்னீங்க நானு...அதுவும் உங்க முன்னாடி... பிரியா இருந்துகிடனுமா என்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம் என்றவளுக்கு

அவன் சொன்னதை நினைத்து கூச்சம் மற்றும் கோபம் கொண்டு உங்கள... என்று கோபத்தில் அங்கிருந்த தலையணையை அவனின் மேல் தூக்கி எறிந்தாள்.

அவன் ஹேர் டிரையரை கொண்டு ட்ரஸ்சிங் டேபிளின் முன் நின்று தன் தலையை உலர்த்திகொண்டிருந்தனின் கையில் தலையணை பட்டதும் ஹேர்டிரையர் அவனின் மண்டையில் இடித்து கொண்டது

அதில் லேசாக வலிஎடுத்ததை வேண்டுமென்றே மிகவும் வலித்ததுபோல ஸ்..ஆ என்ற சத்தத்துடன் அந்த இடத்தை தேய்த்தான்.

அவனுக்கு உண்மையாகவே பலமாக இடித்துவிட்டதோ என்ற பதற்றத்தில் வேகமாக அவனின் அருகில் வந்தவள் இடித்த இடத்தில் காயம் எதுவும் வந்துவிட்டதோ என்ற பதட்டத்தில் அவன் தேய்த்துகொண்டிருந்த இடத்தை பார்பதற்காக அருகில் வந்து

அச்சோ... அச்சோ... சாரி எங்க பலமா பட்டுடுச்சா காயம் ஆகிடுச்சா! என்று அவனின் முன் நின்று அவனின் தலையை இழுத்து அவன் தேய்த்துகொண்டிருந்த இடத்தை பார்த்தாள்.

இதில் இருவரும் மிக அருகில் நெருக்கமாக நெருங்கியதை யாழிசை கவனிக்க மறந்தாள்.

ஆனால் இவ்வளவுநேரம் அவளின் அருகாமையால் விளைந்த அவளின் மீதான தாபத்தை கட்டுபடுத்திக் கொண்டிருந்தவனுக்கு தன் முகத்தை இழுத்து யாழிசை முகம் நிமிர்த்தி அவனின் முன் நெற்றியை ஆராய்ந்தவளின் நெருக்கமும் அவளின் சிவந்த இதழ்களும் அவனின் இளமைத் தாபத்தை தூண்டிவிட்டது.

முதல் முறை அவளை பார்த்தபோதே முத்தமிட தூண்டிய அவளின் கோவை உதடுகள் அவனை இப்பொழுதும் காந்தமென இழுக்க அன்று கிட்டிய ஏமாற்றம் அதன்பின் காரினில் கிட்டிய அவளின் முதல் முத்தம் யாவும் அவன் நெஞ்சில் விரிந்து அவன் கட்டுப்பாட்டை உடைத்து காயம் எதுவும் இல்லை என்று விலக முயன்ற அவளை விலகவிடாமல் பிடித்து அவளின் உதடோடு தனது உதட்டை பதித்தான் .

முதலில் அதிர்ந்து பின் அவனிடம் இருந்து விடுபட முயன்ற யாழிசையை அடக்குவதற்காக அவளை அவனுடன் சேர்த்து ஒருகையால் இழுத்து நகரவிடாமல் அனைத்து மறுகையால் அவளின் பின்னங்கழுத்தில் அழுத்தம் கொடுத்து அவளின் இதழுக்கும் தனது இதழுக்கும் அழுத்தம் கொடுத்து முத்தயுத்தம் நடத்ததுவங்கினான் தீரன்.
                          -----தொடரும் -----

6 comments:

  1. Very Nice Ud

    ReplyDelete
    Replies
    1. ஹாய் வசந்தா இன்று இரவிலிருந்து தொடர்ந்து update கொடுத்திடுவேன்.இத்தனைநாள் என் முதல் புத்தக வெளியீட்டு பணியில் பிசியாக இருந்ததால் epiகலை கொடுக்க இயலவில்லை எப்பொழுதும் போல் உங்களின் ஆதரவை நாடும் தீபாஸ்.

      Delete
  2. Waited for this episode for many months thanks and it's very nice

    ReplyDelete
    Replies
    1. இன்று இரவிளிருந்தி இரண்டு நாளிற்கு ஒருதடவை Epiகலை uplode செய்திடுவேன்ப்பா. இத்தனைநாள் என் முதல் புத்தக வெளியீட்டு பணியில் பிசியாக இருந்ததால் எபிகளை கொடுக்க இயலவில்லை

      Delete
  3. Replies
    1. இன்று இரவிளிருந்தி இரண்டு நாளிற்கு ஒருதடவை Epiகலை uplode செய்திடுவேன்ப்பா. இத்தனைநாள் என் முதல் புத்தக வெளியீட்டு பணியில் பிசியாக இருந்ததால் எபிகளை கொடுக்க இயலவில்லை

      Delete

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib