anti - piracy

Post Page Advertisement [Top]

                                                     உங்களுடன் தீபாஸ் கதைகள்
                      விழியோரத் தேடல் நீ




நட்பூக்களே எனது முதல் கதைப் புத்தகம் வெளியிட கதையில் சில மாற்றம் மற்றும் எடிட்டிங் போன்றவைகள் செய்து முடிக்க கடந்து பத்து நாட்களாக நேரம் செலவழித்ததால் தளத்தில் தொடர்களை என்னால் உங்களுக்குக் கொடுக்க முடியவில்லை,

இப்பொழுது அதற்குரிய எல்லா செயல்களும் நிறைவடைந்துவிட்டதால் இனி இன்று இரவிலிருந்து எப்பொழுதும்போல் தளத்தில் தொடர்களை அப்லோடு செய்துடுவேன்ப்பா எப்பொழுதும் போல் உங்களின் ஆதரவை கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

மேலும் என் கதை பெண்ணே என்மேல் பிழை சற்று மாற்றிப் புதிய பொலிவுடன்.விழியோரத் தேடல் நீ என்ற பெயரில் இன்னும் ஒரு நாள் சென்று Amazon kindle லிலும் அதனைத்தொடர்ந்து ஒருவாரம் சென்று புத்தகவடிவிலும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

நான் புத்தகம் வெளியிட வேண்டும் என்று அனுகியவுடன் மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்று அன்புடன் அரவணைத்த ATM ன் விஜயஸ்ரீ பத்மநாபன் அவர்களுக்கும் அவர்களின் ஆதரவால் எனக்கு எடிட்டிங்கில் உதவிய மலர் இந்திரா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் நட்புடன் உங்கள் தீபாஸ்


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib