anti - piracy

Post Page Advertisement [Top]


                         ஒளிதருமோ என் நிலவு....? [தீபாஸ்-ன்]
                                    அத்தியாயம்-09
                                    

அவள் கோபத்தில் அவனின் முகத்தை முறைத்துப் பார்க்கையில் அவள் எதிர்பாராமல் போட்ட  பிரேக்போட்டான்.

அதனால் அவள் முன்னால் உள்ள டேஸ் போர்டில் இடிக்கிற மாதிரி போய் கடைசி செகண்டில் சுதாரித்து தன் தலை அடிபடாமல்  தப்பித்து அதிர்ச்சியுடன் அவன் முகம் பார்த்தாள்.

அவன் முகத்தை பார்த்ததும் ஆதித் கூறினான் கடை வந்துருச்சு இறங்கு என்றபடி டோரை திறந்து அலட்சியமாக  இறங்கினான்.
    
ஜானகி தன் மகன் தன்னிடம் கொடுத்த செக்கை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தால் உள்ளே வந்த வேலாயுதம் தான் வந்ததை கூட கவனிக்காமல் கையில் ஏதையோ வைத்து பார்த்துக்கொண்டிருந்த ஜானகியின் அருகில் வந்து அமர்ந்தார்
    
பக்கத்தில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்த ஜானகி வந்துட்டீங்கலா...? எனக்கு உங்க கார் சத்தம் கேட்கவே...! இல்லையே.! என்றாள்.
    
அவர் அவளின் கையில் இருந்த செக்கை தன் கையில் வாங்கிக்கொண்டே நீதான் இதை பார்த்துக்கொண்டு ஏதோ நினைப்பில் இருந்ததால் என் கார் ஆரன் சத்தம் உனக்கு கேட்கவில்லை என்றார். .
    
அந்த செக்கை பார்வையிட்டவர் என்ன ஆதித் பிஸ்னஸ் ஆரம்பிக்க கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துட்டானேன்னு வருத்தமா இருக்கா...? என்று கேட்டபடி ஜானகியின் கரத்தை ஆதரவுடன் பிடித்தார்.
    
அவன் கடைசிவரை இப்படி ஒதுங்கியே இருந்துருவானோன்னு பயமா இருக்குதுங்க, நம்மள அவன் ஏத்துக்கவே மாட்டானா? என்று வருத்தத்துடன் கேட்டாள் ஜானகி
    
நீ வருத்தப்படாத ஜானகி அவனுக்கு நம்மமேல் அன்புயில்லாமல் இல்லை. ஆனா நான் செய்ததை அவனால் ஏத்துக்க முடியல.

உன் வளர்ப்பு அவன், அதனால் தான் தப்புசெய்தது தகப்பன் சாமியே ஆனாலும் அதை அவனால் தண்டிக்காமல் விட முடியல.

இதுவும் கடந்து போகும், நீ இப்படியே இத நெனச்சுக்கிட்டே இருந்தா டிப்ரஷன் தான் ஏற்படும்,

வா எனக்கு பசிகுது உன் கை சாப்பாட்டை சாப்பிட்டு ஒருமாசம் மேல ஆச்சு சாப்பிட்டுவிட்டு அடுத்த வாரம் வருகின்ற ஆதித்தின் பிறந்த நாளுக்கு அவனுக்கு உடையும் ஏதாவது பரிசும் வாங்கிவரலாம் என்றார்.
   
அவர் பசிக்குது என்ற உடனேயே சுறுசுறுப்பானவள், வாங்க நான் வேற வந்த மனுசரை கவனிக்காம பசியோட உட்காரவச்சுட்டேன், நீங்க வருவீங்கன்னு போன் பண்ணியதால உங்களுக்கு பிடிச்சதா சமச்சு வச்சிருக்கேன் என்றபடி டைனிங் டேபிளுக்கு சென்று அவருக்கு தட்டை எடுத்து வைத்தாள்.

அவரிடம் நான் ரெடியாத்தான் இருக்கேன் நீங்க சாப்பிட்டதும் போய் ஆதித்துகு பிறந்தநாள் உடை எடுத்துவரலாம் என்றபடி அவருக்கு பார்த்து பார்த்து அருகில் உட்கார்ந்து பரிமாறினாள்.
  
சாப்பிட்டு முடித்ததும் என்னங்க இப்பத்தான் வந்தீங்க உடல் அசதியாக இருக்கும் நாளைக்கு கடைக்கு போகலாமா..? என்று கேட்டார் ஜானகி

அவள் அவ்வாறு கூறியதும், இதுதான் ஜானகி, இந்த அக்கறைதான் ஜானகி என்னை இன்னும் உயிர்ப்போட வச்சுருக்கு என்றவர்,

என்னை சுற்றி இருக்கிறவங்க தேவையை பூர்த்தி பண்ணவே என்னை கொண்டாடுறாங்க. ஆனா! நீ மட்டும் தான் என்னோட தேவை அறிந்து எனக்காக எல்லாம் பண்ற என்றார்
    
பின் டையர்டாகத்தான் இருக்கு ஆனாலும் இந்த தடவை என்னால் ரெஸ்ட் எடுக்க நேரம் இல்லாமல் வேலையையும் இழுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.

நாளைக்கு உன்னை வெளிய கூப்பிட்டுபோக நேரம் இல்லாமல் போய்விடும் அதனால் ஒருமணிநேரம் குட்டி தூக்கம் போட்டுட்டு வருகிறேன். மதியம் சாப்பிட்டு கிளம்பலாம் என்றார்

சற்று படுத்ததெழுந்து சாப்பிட்டு  ஜானகியிடம் இப்போவே போகலாம் வா என்று அழைத்தது வந்திருந்தார்  அந்த ஜவுளிகடைக்கு .

அவர்கள் உள்ளே நுழைந்து ஆண்களுக்கான ஆடைபகுதிகுப் போய் உடை எடுத்துவிட்டு வெளியில் வரும் போது கீழே இருந்த பெண்களுக்கான் உடை பகுதியில் ஆதித்தை பார்த்தாள் ஜானகி,  

அவனுக்கு ட்ரெஸ் பிடிச்சிருக்கா என்று கேட்டுவிடலாம். பிடிக்கவில்லை என்றால், இப்போதே மாற்றி எடுத்துவிடலாம் ஆனால் இவன் எதற்கு பெண்கள் உடை பகுதியில் நின்றுகொண்டிருகிறான் என்று நினைத்தபடி, நம்ம ஆதிங்க! வாங்க என்று அவரையும் கைப்பற்றி இழுத்தபடி அவனை நோக்கி வந்தாள்.
  
அப்போது டிரையல் ரூமினுள் சென்று புது டாப்பை உடுத்திக்கொண்டு ஆதித்தின் கோர்ட்டை கழட்டி கையில் வைத்துக்கொண்டு ஆதித்திடம் வந்தவள் இந்தாங்க உங்கள் கோர்ட் என்று கொடுத்தாள் ஆழகுநிலா.

அதை ஆதித் வாங்க கை நீட்டும் போது அவனின் அருகில் சென்ற ஜானகி யார் இந்த பெண் ஆதித், ரொம்ப லச்சணமா இருக்காளே! என்று அழகுநிலாவை பார்த்து கேட்டார் .
   
திடீர் என்று அங்கு தனது அம்மாவை எதிர்பார்க்காத ஆதித் அழகுநிலாவின் கையில் இருந்த அவனுடைய கோர்ட்டை வெடுக்கெண்டு பறித்து ஜானகியின் ஆர்வமான் பார்வையில், அச்சோ.... என்று நொந்தவன்.

அம்மா கற்பனையை பறக்கவிடாதீங்க அது ஜஸ்ட் எனக்கு தெரிந்த பொண்ணுமட்டும் தான். அவளுக்கு ட்ரெஸ் வாங்கத்தான் கூடவந்தேன் என்று சொதப்பலாக பதில் அளித்தான்.
      
அழகுநிலாவிற்கு ஜானகியை பார்த்தவுடனே, எப்பா... இவன் அம்மா கூட எவ்வளவு அழகா இருக்காங்க. பார்த்தவுடனே மரியாதையுடன் அந்த வயதிலும் இளமை பொலிவோடு இருக்கிறார்கள் என்று மனதினுள் நினைத்தவள் ஆதித்தின் சொதப்பலை கவனிக்கத்தவறி தன்னை போய் அழகுன்னு சொல்றாங்களே! நம்மளை கிண்டல் பண்றாங்களோ? என்று யோசனையுடன் இருந்தவள் ஆதித்தின் வார்த்தைகளை கவனிக்க மறந்தாள்.
    
தன் மகனின் தடுமாற்றமான வார்த்தையை பார்த்ததும் ஜானகி எவ்வளவு கம்பீரமான ஆணையும் மனம் கவர்ந்தவள் பக்கத்தில் இருந்தால் அசடு ஆகிடுறாங்க என்று சரியாக இருவரையும் தவறாக நினைத்தாள்.

தன் மகனை மேலும் அவர்களுக்குள் உள்ள உறவை பற்றி கேட்டு சங்கடப்பட வைக்கக்கூடாது. எப்படியென்றாலும் ஓர் நாள் என்னிடம் சொல்லித்தானே ஆகவேண்டும் என்ற நினைப்புடன் அழகுநிலாவின் கைபிடித்து உன் பேர் என்னமா..? நான் ஆதித்தோட அம்மா என்று பேச்சை அழகுநிலாவிடம் வளர்த்தாள்.
    
ஏனோ அழகுநிலாவிற்கு பார்த்தவுடனேயே ஜானகியை பிடித்துவிட்டது. கழுத்தில் போட்டிருந்த தாலிக்கொடியின் முகப்பிலும், காதில் இருந்த எட்டுக்கள் தோடும், கையில் இருந்த ஒற்றை வரிசை வளையலின் ஜொலிப்பும், வைரங்கள் என்று பறை சாற்றி அவளின் செல்வநிலையை காட்டினாலும் அவள் முகத்தில் இருந்த சாந்தமும் தன்னிடம் வாஞ்சையாக பேசும் தோரணையும் மொத்தமாக அழகுநிலாவை ஜானகியின் அபிமானியாக மாற்றிவிட்டது.
     
என் பெயர் அழகுநிலா ஆண்ட்டி. சார் என்று ஆதித்தை பார்த்து கூற வாய்திறந்தவள் அவன் தன்னை காரில் வைத்து சார் என்று கூறியதை கிண்டல் செய்தது ஞாபகம் வர, இவர் எனக்கு டாப் வாங்கிகொடுப்பதற்காக இங்க கூட்டி வந்தார் ஆண்ட்டி என்றாள்.
     
இப்பொழுது ஆதித் அழகுநிலாவை முறைத்துப்பார்த்தான் அவங்க உன் பேர் மட்டும் தான் கேட்டாங்க. தேவையில்லாமல் அவர் என்று என்னை பார்த்து ஏன் இங்க வந்தோமென்று கேட்டார்களா..? என்று மனதினுள் நினைத்தபடி அவளை முறைத்துப் பார்த்தான்

உடனே இப்போ எதற்கு அழகுநிலாவை முறைக்கிற அவன் கிடக்குறான், இங்க பாரு, அடுத்தவாரம் வருற ஆதித் பெர்த்டேக்கு இப்போதான் ட்ரெஸ் எடுத்தோம். நல்லா இருக்கா பார்த்துச் சொல்லு பிடிக்காட்ட மாத்திடலாம் என்று அழகுநிலாவிடம் அந்த உடையை காண்பித்தாள் ஜானகி .
      
உடனே பக்கத்தில் நின்ற ஆதித், அம்மா..... அத எதுக்கு அவகிட்ட கேக்குறீங்க எனகுத்தானே எடுத்தீங்க, நீங்க எது எடுத்தாலும் எனக்குப் பிடிக்கும் என்றான்.
      
அவன் அவ்வாறு கூறியதும் அதுதான் பிரச்சனையே! நீபாட்டுக்கு நான் உனக்கு எடுத்துக்கொடுக்கும் ட்ரெஸ் உனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒண்ணுமே சொல்லாமல் வாங்கிகுவ,

அதனால் தான் நான் அழகுநிலாட்ட கேட்டேன். நான் அந்த காலத்துக்காரிதானே, அழகுநிலானா உனக்கு  பிடிச்சதை இந்தக்கால பெண் என்றவிதத்தில் தெரிந்து வைத்திருப்பாள் என்றாள்.
     
அவர்கள் அருகில் நின்று மூன்றுபேரையும் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த வேலாயுதத்தை பார்த்து ஆண்ட்டி பின்னாடி நிக்கிறது யாரு? அங்கிள் தானே!, ஆண்களோட டிரஸ் பத்தி ஆண்களுக்குத்தான் தெரியும். சோ! உங்க அபிப்ராயத்தை அவங்ககிட்ட கேளுங்க என்று கூறினாள் அழகுநிலா.
   
அப்படியா சொல்ற! அப்போ நான் எடுக்கும் போது அவரிடம் அபிப்ராயம் கேட்டுத்தான் எடுத்தேன். அப்போ இது ஆதித்துகு பிடிக்கும் என்றாள்
   
அப்பொழுது வேலாயுதத்தின் மொபைல் ஒலி எழுப்பியது அதனை அட்டன் செய்தவர் அதில் உள்ளவர் கேள்விகேட்டதற்கு ம்..கூம் என்னால் இப்பொழுதே அங்க வர முடியாது. நான் என் பேமிலியோட பர்சேசில் இருக்கேன்.

உங்களால் ஒரு டூஅவர்ஸ் வெயிட் பண்ண முடியுமா? என்று கூறிக்கொண்டு இருந்தார். அதனை பார்த்த ஜானகி என்னங்க உங்களுக்கு அவசர வேலை இருந்தால் நீங்க போங்க நான் ஆதித் கூட வீட்டிற்கு போய்விடுவேன் என்றாள்.
  
அவள் அவ்வாறு கூறியதும் அப்போ சரி என்று கூறியவர், போனில் இன்னும் அரை மணி நேரத்தில் தான் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவதாகச் சொல்லி ஜானகியிடம் நான் இரவு வீட்டிற்கு வந்து விடுவேன் என்றவர், பொதுவாக ஆதித்துக்கும் அழகுநிலாவுக்கும்  ஓர் தலை அசைவுடன் சென்று விட்டார்.
ஆதித்துடைய அப்பாவை அழகுநிலா அங்கிள் தானே என்று கேட்டதில் இருந்து வாய்க்கு பூட்டு போடுக்கொண்டான் ஆதித் .


அவனுக்கு ஏனோ அழகுநிலாவின் முன் தேவையில்லாமல் தங்களின் குடும்பத்திற்குள் இருக்கும் பினக்குகளை காண்பிக்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

மேலும் அவரின் அப்பா விடை பெறுவதற்காக தலையாட்டும் போது கவனிக்காததுபோல் நின்று கொண்டான் . அவர் கிளம்பியதும்,
அம்மா போகலாமா! என்றவன், அழகுநிலாவைப் பார்த்து குட்பை என்று சொல்லியவன் திரும்பி நடக்கமுயன்றான்.
     
ஆனால் ஜானகியோ, என்ன ஆதித்? கூட கூட்டிட்டு வந்த புள்ளையை இப்படித்தான் அம்போவென விட்டுட்டுப் போவதா? நீ வாம்மா அழகுநிலா நாங்கள் போகும் போது உன் வீட்டு வாசலில் உன்னை இறக்கிவிட்டுட்டுப் போறோம் என்று அவளையும் கூட அழைத்தாள்.
      
வேணாம் ஆண்ட்டி. நீங்க போங்க. நான் போய்விடுவேன் என்று மறுத்தாள் அழகுநிலா.

அதற்கு ஜானகி, “என்ன அழகி என் பையன் என்னை பார்த்ததும் உன்னை கழட்டிவிட்டுவிட்டான் என்று நீ என்னை மனதிற்குள் திட்டவா?

நீ என் உடன் வந்தேதான் ஆகணும் என்றபடி, அவளின் கையை பிடித்து தன்னுடன் விடாமல் கூட்டிகொண்டே சென்றால் ஜானகி.
      
ஆதித்துக்கு தனது அம்மாவின் செயல் கோபத்தை உண்டாக்கியது. ஜானகியை கடிந்து பேசமுடியாமல் அதற்கும் அழகுநிலாவைத்தான் மனதிற்குள் “அவங்க இழுத்துட்டு வந்தா இவளும் வந்துரதுதானா என்று திட்டியபடியே அவளை முறைத்துப் பார்த்தான்.
      
அவன் முறைத்துப்பார்த்ததும் இவங்க அம்மா இழுத்துட்டுவந்தா அவங்களிடம் சொல்வதுதானே! எதற்கு என்னை முறைத்துப்பார்கிறார்? என்று நினைத்தபடி அவனைப் பார்த்தாள்.
        
அழகுநிலா, தன மகனின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்த ஜானகி அவன் முகத்தை எதற்கு பார்க்கிற. உன்னை இப்போ கூப்பிடுவது நான்தான். அவன் சம்மதிக்கணும் என்ற அவசியம் இல்லை என்றவள் குரலில் அத்தனை ஒட்டுதல் இருந்தது அழகுநிலாவின் மேல்.
         
உடனே அழகுநிலா, “கேட்டுக்கிட்டாயா? என்ற மிதப்பான பார்வை ஒன்றை அவனின் மேல் செலுத்தியவள், ஆதித்தை பார்த்து நான் ஆண்ட்டிக்காகத்தான் உங்க காரில் வருகிறேன் என்று சொல்லியவள் ஜானகியோடு கை கோர்த்தபடி நடந்தாள்.
         
அப்பொழுது ஜானகி அழகுநிலாவிடம் ஆதித் இதுவரை நட்பு என்று யாருடனும் நெருங்கி பழகி நான் பார்த்ததில்லை. அதுவும் பெண் தோழி உண்டு என்று அவனே சொன்னால் கூட  நம்பமாட்டேன். எனக்கு அவனை மற்ற பிள்ளைகள் போல் நண்பர் வட்டத்துடன் கலகலப்பாக பார்க்கவேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. இன்றுதான் எனக்கு தெரிந்தவள் என்று உன்னை அறிமுகப்படுத்தி இருக்கிறான். என் மகனை அவன் தொழில் வட்டமில்லாத நட்பு வட்டாரத்தில் உன்னை சந்தித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது  என்றாள்.
        
அவள் அவ்வாறு சொல்லவும் ஒரு நண்பர் கூட இல்லாத அவ்வளவு டெரர் பீசா உங்கள் மகன் என்று கண்களை உருட்டி பயப்படுவதுபோல் அழகுநிலா கூறியதும்,

போக்கிரி பொண்ணு என்னிடமே என்மகனை கேலி செய்கிறாயா? உன்னை..... என்று செலமாக ஓர் அடி முதுகில் கொடுத்தால் ஜானகி .
      
அச்சோ... ஆண்ட்டி பூப்போன்ற கையை வைத்தா அடிப்பது எங்கே காமிங்க உங்க கை கன்றிவிட்டதா பார்க்கலாம், என்றாள் அழகுநிலா .
     
அவள் அவ்வாறு கூறவும், சிரித்தபடி ஓர் விரலை காட்டி பத்திரம் என்று கூறினாள்.
அதற்கு  அழகுநிலா ‘சரண்டர் என்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு கூறியதும் ஜானகி கலகலவென சிரித்தாள்.

அச்சிரிப்பில் அழகுநிலாவும் இணைந்துகொண்டாள் பின் ஜானகி சொன்னாள் நீயும் பூப்போல இருப்பதால் எனக்கு சேதாரம் இல்லை இன்று அவளை ரசனையுடன் பார்த்தபடியே சொன்னாள்..
     
ஆதித்துக்கு தனது அம்மா இப்படி கலகலப்பாக ஒருவருடன் பேசி இதுவரை பார்த்ததில்லை. முகம் முழுவதும் சிரிப்புடன் பேசிக்கொண்டு இருக்கும் தன் அம்மாவை பார்த்தவனுக்கு அழகுநிலாவின் சுபாவம் தன தாயை மகிழ்விப்பதை உணர்ந்தான்.

இவள் இருக்கும் இடம் உயிர்ப்புடன் இருக்கும் என்னையுமே சரிக்கு சரி இவளுடன் பேசவைத்துவிட்டாள் தானே! என்று நினைத்து புன்னகையுடன்  அவர்களை முன்னால் நடக்கவிட்டு பின்னால் சென்றான் ஆதித்.
     
காரில் ஏறியதும் ஆதித்துடன் முன்னால் அமர்ந்திருந்த ஜானகி அழகுநிலாவை பார்த்து திரும்பி உட்கார்ந்தபடி வீட்டிற்கு வந்து இரவு உணவை முடித்துபின் உன்னை ஆதித் உன் வீட்டில் விடச்சொல்கிறேன் என்றாள். அதற்கு அழகுநிலா.
      
அச்சோ! ஆண்ட்டி..... ஹாஸ்டலில் எட்டுமணிக்குள் நான் இருக்கவேண்டும் அதற்குபிறகு செல்லவேண்டுமானால் நான் முன்பே தகுந்த காரணத்தை சொல்லி  பெர்மிசன் வாங்கியிருக்க வேண்டும்.

இப்போவே 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது மன்னிச்சுக்கோங்க ஆண்ட்டி. உங்கள் வீட்டிற்கு என்னால் இப்போ வர முடியாது என்றால் அழகுநிலா .
        
நீ ஹாஸ்டலிலேயா இருகிறாய்?  இங்க நீ எந்த காலேஜில்? படிக்கிற பொண்ணா? என்று கேட்டாள்
        
நான் ஒன்னும் ஸ்டூடன்ட் இல்லை ஆண்ட்டி, நான் சாப்ட்வேர் இன்ஜினியராக்கும். இங்க வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்க்கிறேன் ஆண்ட்டி. என ஊர் குட்டலாம்பட்டி என்றும், அவள் தங்கியிருக்கிற ஹாஸ்டலின் பெயரையும் கூறினாள் அழகுநிலா.
        
அவள் ஊரின் பேரை சொன்னதுமே ஜானகிக்கு தான் சிறு வயதில் தந்தையின் ஊரான வாடிப்பட்டிக்கு அருகில் இருந்த குட்லாடம்பட்டிக்கு அவரின் நண்பரின் வீட்டு விசேசத்திற்கு  குடும்பத்துடன் சென்ற போது  அருவிக்குச் சென்று குளித்த நியாபகம் வந்தது.
       
அவள் கூறியதை கேட்ட ஜானகி, உங்க ஊரின் பேரிலேயே அங்க அருவி இருக்குள்ள! நான் சிறுபிள்ளயாக இருந்த போது அங்கு சென்று குளித்த நினைவு இருக்கு என்று கூறியதும் அழகுநிலாவிற்கு உற்சாகம் வந்துவிட்டது.
   
உங்களுக்கு என் ஊரைத்  தெரியுமா! அங்க யாரு வீட்டிற்கு வந்தீங்க சொல்லுங்க.... சொல்லுங்க..... என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள்.
   
அவளின் உற்சாகம் கண்டு சிரிப்புடன் ஜானகி கூறினாள், நான் சிறுவயதில்  இருக்கும் போது  அங்கு வந்தது அதற்கு பின் வீட்டிற்குகு வந்த சில மாதங்களிலேயே அப்பா தவறியதால் அம்மாவுடம் தொண்டாமுத்தூருக்கு மாமா வீட்டுடன் வந்துவிட்டேன்.

அதற்குப்பின் வாடிபட்டிக்கும் எனக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது அப்பாவின் நண்பரின் பேரும் எனக்கு நியாபகம் இல்லை என்று கூறியவள் அழகுநிலாவை பார்த்து ஆனாலும் நீண்ட காலத்திற்குப் பின் என் அப்பாவின் சொந்த ஊரின் அருகில் இருக்கும் உன்னை பார்த்தது எனக்கு சந்தோசமாக இருக்கிறது, சரி உங்க ஊரில் உன் வீட்டில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என கேட்டதும்
    
அழகுநிலா தனது அம்மா ராசாத்தி பற்றியும் அவரின் அடாவடித்தனமான அன்பான அடக்குமுறை பற்றியும் அதில் இருந்து காக்கும் தனது பாசமிகு அண்ணன் குமரேசனை பற்றியும் தனது செல்ல மருமகனான அண்ணன் மகன் மற்றும் மதினி  பற்றியும் கூறியதோடு நில்லாமல் அவர்களில் காடு பற்றியும் அதில் இருக்கும் பம்புசெட்டு குளியலின் சுகத்தை பற்றியும் குட்லாடம்படி அருவியின் அழகு பற்றியும் மேலும் வாய் ஓயாமல் பேசுவதை பார்த்த ஜானகிக்கு அவளின் கொட்டும் அறிவிபோன்ற தன்மையால் ஈர்க்கப்பட்டாள்.

அவளுடன் பேசும்போது உற்சாக அலை அருகில் உள்ளவர்களையும் தொற்றிக்கொள்வதை உணர்ந்தாள், தனது மகனின் இருக்கமான மனநிலையை இவளால் இயல்பாக மாற்றிவிடமுடியும்  என எண்ணினாள்.
    
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அழகுநிலாவின் ஹாஸ்டலுக்குமுன்பு ஆதித் காரை நிறுத்தினான் விடுதியின் முன் கார் நின்றதும் உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் நன்றி ஆண்ட்டி நான் வருகிறேன் என்றாள் அழகுநிலா.
    
அழகுநிலா உன் போன் நம்பர் கொடு அடுத்தவாரம் சனிக்கிழமை என் மகனின் பிறந்த நாளுக்கு என் வீட்டிற்கு நீ கண்டிப்பா வரனும் முதல் நாள் உனக்கு போன் செய்து  நியாபகப் படுத்தனும் என்றால் ஜானகி .
      
ஆதித் அதற்கு ஜானகியிடம் “அம்மா, ஏன்மா அவளுக்கு ஆயிரம் ஜோலி இருக்கும் என் பிறந்தநாளுக்கு எல்லாம் புதுசா என்ன ஆட்களை கூப்பிடும் பழக்கம் என்றான்
      
நான் பல வருஷம் கழித்து என் அப்பா ஊருகாரப் பெண்னை பார்கிறேன் மேலும் நீ எனக்கு அறிமுகப்படுத்தியது எல்லாம் உன் தொழில் சம்மந்தமானவர்கள் இவள் ஒருத்திதான் அதற்கு விதிவிலக்கு மேலும் எனக்கு இவளை நிரம்ப பிடித்து விட்டது என்றவள்.
    
அழகி, நீ கண்டிப்பா எனக்காக என் மகனின் பிறந்த நாளுக்கு என் வீட்டிற்கு வந்துதான் ஆகணும், இவனிடம் உன் மொபைல் நம்பர் கேட்டால் ஏதாவது சாக்கு சொல்லி கொடுக்காமல் தவிர்த்துவிடுவான். உன் நம்பர் சொல் என்று கேட்டாள். 

ஏனோ அழகுநிலாவால் அவளிடம் அதற்கு மேலேயும் மறுக்க முடியவில்லை எனவே தனது மொபைல் நம்பரை அவளிடம் கூறியவள் விடை பெற்று இரங்கி விடுதி காம்பவுன்டுக்குள் நுழைந்தாள்
      
அவள் இரங்கி  சென்றதை பார்த்துக்கொண்டே தனது காரை ஸ்டார்ட் பண்ண பார்த்த ஆதித் டேஸ் போர்டின் மேல் இருந்த அவளின் வளையலை பார்த்து அவளிடம் கொடுப்பதற்காக

“ஒரு நிமிஷம் மா என்றவன் அதை எடுத்துக்கொண்டு வேகமாக இரங்கி அவனும் காம்பவுன்டுக்குள் வந்து அவள் அந்த பில்டிங்கிற்குள் நுழையும் முன் வேகமாக இரண்டு எட்டில் அவளிடம் வந்தவன் “ஏய் இந்தா உன் வளையல் என்றான்.
      
அவள் தன் முன் ஏய்...! என்ற படி வந்த ஆதித்தை பாத்து அவன் கையில் உள்ள வளையலை பார்த்தவள், கொஞ்சம் இருங்க நான் என் ரூமிற்கு போய் இந்த ட்ரெஸ்சிற்கு உண்டான பணத்தை எடுத்துவந்து உங்களிடம் கொடுத்துவிட்டு என் வளையலை வாங்கிகொள்கிறேன் என்றாள்.
      
திரும்பவும், ஆதித் அவளிடம்  ஏய்..! என்னால எல்லாம் இங்க நின்னுட்டு இருக்க முடியாது முதல உன் வளையலைப் பிடி என்றவன் அவளின் கையை பற்றி அவளின் வளையலை அதில் திணிக்கப் பார்க்கும் போது அவளின் கையில் இருந்த அந்த நரேனின் மொபைலை பார்த்தவன் யோசனையுடன் நின்றான்
     
அவன் தன்னை ஏய்... ஏய்... என்று கூறியதிலேயே கோபப்பட்டிருந்த அழகுநிலா இப்பொழுது அவன் தன் கையைப் பிடித்தபடி நின்றதை பார்த்ததும் முதல்ல கையை விடுங்க,

அதென்ன உதவி செய்தவரே என்று நினைத்தால் ரொம்ப ஓவராத்தான் போறீங்க இந்த ஏய் என்று கூப்பிடுறது இப்படி கையைப் பிடித்து பேசுறது எல்லாம் என்னிடம் வச்சுக்காதீங்க என்று பட பட என பொரிந்தாள்.
      
அவள் கூறியதும் தன கைப்பிடியை வேகமாக விளக்கிகொண்டவன் வார்த்தைகளில் நெருப்புப் பறக்க “ஆமா நீ பெரிய கிளியோபாட்ரா சரியான பட்டிக்காடு உன்னை போய் கையை பிடிச்சு இழுத்துட்டாலும்.... என்னமோ என் அம்மா ஊர் காரியே இந்த போன் மேட்டரில் ஏதாவது உதவமுடியுமா..? என்று பார்த்தால் ரொம்பத்தான் பேசுற நீ என்றான் ஆதித்.
     
அவன் அவ்வாறு கூறியதும் அழகுநிலாவிற்கு ஒருமாதிரி போய்விட்ட்டது ,எனவே ஆமா நான் பட்டிக்காடு தான் எனக்கு தெரிந்த நாகரிகம் எல்லாம் உடையில் நாகரிகம் என்ற பேரில் அரைகுறையாக உடுத்துவதை தான் நான் அனாகரிகமாக நினைக்கிறன்.

அதேபோல் ஆண் பெண் நட்பை மதித்தாலும் தேவையில்லாமல் யாரும் என்னை தொட்டுப்பேசுவதை கண்ணியகுறைவாக நினைப்பவள் நான், உங்களுக்கு நான் அழகானவளாகத் தெரியனும் என்ற அவசியம் எனக்கில்லை என்றாள்.
    
அவளில் கருத்து அவனின் சிந்தனையோடு ஒத்திருப்பதை நினைத்தவனுக்கு அவளில் மேல் மேலும் நல்ல அபிப்ராயமே உண்டானது.

அவள் பேசிமுடிக்கும் முன்பே சரண்டர் என்று கூறுவதை போல் கையை உயர்த்திய ஆதித் போதும் போதும்  இனி உன் கையை தொட்டுப்பெசமாட்டேன் என்று கூறிய பாவனையில் ஓர் நிமிடம் ஸ்டன் ஆகி அப்படியே நின்று விட்டாள் அழகுநிலா.
   
அவள் நின்றதை பார்த்து உதட்டில் ஓர் முறுவலுடன் தன் ஒற்றை புருவத்தை அசால்டாக தூக்கியபடி  என்னை சைட் அடித்தது போதும் அந்த மினிஸ்டர் மகனின் போனை என்னிடம் கொடுக்கிறாயா நான் கொண்டுபோய் உன் வீடியோவை டெலிட் செய்து உன்னிடம் கொடுக்கிறேன் என்றான் ஆதித்.

அவனை தான் சைட் அடிப்பதாக கூறியதும் தன் மேலேயே அழகு நிலாவிற்கு கோபம் வந்தது.

தன்னை பார்த்து பட்டிக்காடு என்று சொல்பவனை வெட்கம் கேட்டு நான் பார்த்ததால் தானே இவன் என்னை இலக்காரமாக நினைத்து பேசுகிறான் என்று மனதிற்குள் நினைத்தவள் முகத்தை கடுமையாக வைத்தபடி,

தேவைஇல்லை என் பிரச்னையை இனி நானே பார்த்துக்கொள்வேன் நீங்கள் இதுவரை எனக்கு  செய்த உதவிக்கே என்னால் பிரதி உபகாரம் எதுவும் செய்யமுடியாமல் கில்டியாக பீல் பண்றேன்

இனிமேலும் உங்களை என்பொருட்டு கஷ்டப்பட வைக்க என்னால் முடியாது நான் வருகிறேன் என்றவள் விருவிருவென அந்த பில்டிங்கினுள் சென்று மறைந்தாள்.
                     
                   -----தொடரும்-----



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib