பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை....![தீபாஸ்-ன்]
அத்தியாயம்[முதல் பாகம்]-27
வானவராயர்
தன்னை கை நீட்டி அடிப்பார் என்று கனவில் கூட பத்மினி நினைக்கவில்லை.
வீட்டு முற்றத்தில்
அங்காங்கே வேலையாட்கள் நின்றுகொண்டிருக்க தன் செயலை கேவலமாகப்பேசி அடித்த அவரின் அடியால்
எரிந்த கன்னத்தைவிட அவளின் மனம் தீப்பட்டதுபோல் எரிந்தது.
நான் ராஜேஷ்
கூட சினிமா போனேன்ற காரணத்திற்காக ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லியிருந்தாலும் நான்
கவலை பட்டிருக்க மாட்டேன்.
ஆனா உங்க
கூட கல்யாணமாகி இந்த ஆறு மாசம் நான் வாழ்ந்த வாக்கையில் உங்களுக்காக உங்க
காதலுக்காக நான் என் உடை, பழக்கவழக்கம் அத்தனையும் மாத்தியதற்கு நல்ல பலன்
கிடைச்சிருச்சு..!
ஒரு
நண்பன் கூட வெளியில் சினிமா போனதால உங்கமேல நான் வச்சுருக்கற அன்பையே இத்தனைபேர்
முன்னாடி என்னைய கைநீட்டி அறைஞ்சு கேவலப்படுத்தீட்டீங்க்கல்ல.
இத இந்த
அவமானத்த என்னால மறக்க முடியாது என்று கத்திவிட்டு ரூமிற்குள் சென்று
கதவடைத்துகொண்டாள் பத்மினி.
அவள்
ரூமிற்குள் போகும் போதே ஏய்...பத்மினி என்று கூறியபடி அவளின் பின்னாலேயே ரூமிற்குள் செல்வதற்குள் கதைவடைத்துவிட்டதால் படபடப்வேண்டு
கதவை தட்டினார்.
அப்பொழுது
தம்பி என்றபடி வந்து அவரின் கைப் பிடித்தார் தேவகி. அக்கா அவ செஞ்சது தப்புன்னு
கூட அவளுக்கு புரியலையே நான் அறைஞ்சத பெருசா எடுத்து பேசிட்டு உள்ளப்போயிருக்காக்கா
ஏதாவது செஞ்சுகிட்டா... என்று பதறினார்.
அதற்கு தேவகி
நீவேற தம்பி நீ நினைக்கிறதுபோல அவள் தற்கொலை எல்லாம் பண்றவ கிடையாது இப்போ நீ அவளை
அடிச்சது சரிதான்.
அங்க
ஊருல இருக்கறப்போ அவ அப்பாவோட செல்லத்தில் ஆடிகிட்டு இருந்தா என்னால எதுவும் செய்யமுடியல
நீதான் அவளுக்கு லாயக்கு. ஒன்னுரெண்டுநாளில் எல்லாம் சரியாகிடும். நீ வா உனக்கு சாப்பாடு
எடுத்து வைக்கிறேன் என்று இழுத்துக்கொண்டு போய்விட்டாள்.
சாப்பாட்டில்
கைவைத்த வானவராயருக்கோ இரண்டு வாய் கூட உள்ளே இறங்க மறுத்தது.
தன் மேல்
பத்மினிக்கு உள்ள பிரியத்தை உணர்ந்தவர்
வானவராயர். ஆனாலும் அவள் ராஜேசுடன் சினிமா போனதை அவரால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
அதுவும் ஒரு வார்த்தை கூட தன்னிடம் கேட்காமல் வீட்டின் பெரியோர்களின் வார்த்தைக்கு
மதிப்பு கொடுக்காதன் விளைவு
அவரின்
காதுப்படவே மனைவியின் நடத்தையை விமர்சித்த ஊர்க்காரர்களின் பேச்ச்சு அவரை
ரணப்படுத்தியது.
இத்தனைகாலம்
தன் முன் குரல் உயர்த்தி பேசக்கூட முயலாத மக்களையே இவ்வாறு பேசவைத்துவிட்ட தன
மனைவியின் செயலில் ஆத்திரம் மிக உண்டானது.
அதனால்,
தான் இப்போது இருக்கும் சூழலில் பத்மினியிடம் பக்குவமாக பேசமுடியாது என்ற
எண்ணத்திலும் மேலும் கோபத்தில் அவளை இன்னும் இரண்டு அடி அடித்துவிடுவோமோ என்ற
பயத்தில் வீட்டில் இரவு தங்காமல் அவரது பண்ணைக்குச் சென்றுவிட்டார்.
ரூமிற்குள்
இருந்த பத்மினிக்கு தன் அம்மா பேசிய பேச்சு காதில் விழுந்து இன்னும் மனம்
காயப்பட்டுப்போனாள்.
தேவகி
இங்கு வந்த பிறகு சேதுபதியின் உடல்நிலையால் மிகவும் வருத்தத்தில் இருந்தாள்.
மேலும் பத்மினியிடம்
அங்கிருப்பதுபோல் இங்கு இருக்காதே பத்தூ, அப்பாவிற்கு முடியாத நிலையில் என்னால்
தனியாக அந்த ஊரில் வைத்தியம் செய்ய நான் எவ்வளவு சிரமப்பட்டேன்.
இந்த ஊர்
நம்ம சொந்த ஜனங்க என் தம்பி பக்கத்தில்
இருப்பதால் என்னால கொஞ்சம் தெம்பா இருக்க முடியுது.
வீட்டு
நிலைமையை புருஞ்சு உன்ன பெத்தவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கனும் என்ற எண்ணம்
இருந்தால் இந்த ஊருக்கு ஏத்தமாதிரி நீ கொஞ்சம் மாற்றிக்கொள்ளனும் என்று
கூறியிருந்தாள்.
அவளும்
இத்தனை நாள் தன்னை தாங்கிய தன் தந்தையின் உடல்நிலை குறித்து வருத்தத்தில்
இருந்ததால் அவளின் தந்தைக்காக என்று டெல்லியில் போடும் உடைகளில் முட்டிவரை இருக்கும்
கவுன் மற்றும் மிடி ஆகியவற்றை தவிர்த்து துப்பாடவுடன் சுடிதார் மற்றும் லாங்
ஸ்கேர்ட் மற்றும் கையுள்ள டாப் முதலியவற்றை அணியத்துவங்கினாள்.
தனது
தந்தையின் அருகில் அவரின் கடைசி நாட்களில் அருகில் இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக
இங்கேயே இருக்க ஆரம்பித்தவள்
வானவராயரின்
மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் கல்யாணத்திற்கு சம்மதம் கொடுத்தவள் அதன் பின் அவன் வாங்கிகொடுத்த
புடவை காதலால் என்று அப்பொழுது நினைத்தது இப்பொழுது அதுவும் தன்னை அவர்களின்
அடக்குமுறைக்குள் வைத்திருக்க செய்ததாகவே அவளுக்குப் பட்டது. தான் மட்டுமே அவரை
முழு அன்போடு காதலித்திருக்கிறோம்.
ஆனால்
தனிமையில் அவரின் இச்சையை தனித்துகொள்ள என் மேல் அன்பு உள்ளதுபோல் நடித்துவிட்டு
மற்றவர்களின் முன் அவர் கண்டிப்பாக இருந்தது இப்போ அவருக்கு தன் மேல் அன்பில்லாத
செயலாக அவளுக்குப்பட்டது.
அத்துடன்
மற்றவர்களின் முன் தன்னை அறைந்ததால் அவள் அடைந்த அவமானம் அவளுக்கு பெரிதாகப்பட்டது.
என்
அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்னதான் கட்டிய புருசனாக இருந்தாலும்
இப்படி காட்டுவாசிமாதிரி மத்தவங்க முன்னாடி என்னை அடிக்க விட்டுறுப்பாரா என்ற
அழுகை எழுந்தது.
சே...
இந்த காட்டுவாசிக இருக்கிற இடத்தில் நான் ஒருநிமிஷம் கூட நிக்கக்கூடாது என்று
கோபத்தில் அவளுக்கு தேவையான பொருட்களை சூட்கேசில் எடுத்துப் பூட்டியவள் இரவு நேரத்தில்
வீட்டைவிட்டு வெளியேறினாள்.
அவ்வாறு
வெளியேறிய பத்மினியை எதிர்பார்த்து, ராஜேஷ் காருடன் அந்த ஊரின் வெளியில் இருந்த
பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான்.
ராஜேஷ்
பிளான் செய்து காய் நகர்த்தியே பத்மினியை சினிமா கூட்டிச்சென்றான்.
அவளிடம்
நண்பன் என்ற போர்வையில் பழகியவன் அந்த ஊரில் இருந்த அவனின் இளந்தாரி நண்பர்களிடம்
வேறுவிதமாகவே இருவருக்கும் உள்ள உறவை அவர்கள் நினைக்கும் படி பேசி வைத்திருந்தான்.
மேலும்
அவன் சினிமா பத்மினியுடன் போவதை முன்கூட்டியே தன் நண்பர்களிடம் சொல்லிவைத்திருந்தான்.
எனவே பத்மினி அவனுடன் வெளியில் போன மறுநிமிடம் விஷயம் காட்டுத்தீ போல் அவ்வூரில்
பரவியது.
இவ்வாறு
தான் செய்வதால் வானவராயருகும் பத்மினிக்கும் இடையில் சண்டை எழும் என்பதை அவன்
புரிந்து வைத்திருந்தான்.
மேலும்
தன் ஊர் பெண்கள் போல் இல்லாமல் இதெற்கெல்லாம் மனம் உடைந்து தற்கொலை செய்யக்கூடிய
பெண் அவள் இல்லை என்பதுவரை அவளை பற்றி புரிந்து வைத்திருந்தவன்
ஒன்றை
மட்டும் அவளை பற்றிய புரிதலில் அவன் தவறிவிட்டான் அவன் ஆசைப்படி அவளை வானவராயரிடம் இருந்து
பிரித்தால் தனக்கு இணங்க வைத்துவிடலாம் என்று எண்ணிவிட்டான்.
பத்மினி
அவனுடன் நண்பன் என்ற முறையில் இயல்பாக பேசி பழகினாலும் ஓரளவுக்குமேல் இதுவரை அவனை
நெருங்க விட்டதில்லை.
அவனின்
பார்வை தவறுதலாக கூட அவள் அறிந்து அவனால் அவளை ரசிக்க முடிந்ததில்லை. அவ்வாறு தன்னுடைய எண்ணம் அவளுக்கு தெரியவந்தால்...
அதன்
பின் அவனுடன் பழகும் பழக்கத்தையே நிறுத்திவிடுவாள் என்று பயந்தே அவளிடம் நல்லவன்
வேஷம் போட்டுகொண்டிருந்தான்.
எப்படியும்
இருவருக்குள்ளும் சண்டை வந்து தன்னால் அவனில்லாமல் வாழமுடியும் என்ற அவளின் படித்த
தன்னம்பிக்கை தூண்டி அவளை பெட்டியைதூக்கிகொண்டு வானவராயரின் வீட்டைவிட்டு
வந்திடுவாள் என்று கணித்தே காருடன் காத்திருந்தான்.
அதேபோல்
தூரத்தில் அவள் வருவதை கண்டதும் தன் முகத்தை சோகமாக வைத்துகொண்டு காரில்
அமர்ந்திருந்தவன் அவள் அருகில் வந்ததும் காரைவிட்டு இறங்கி பத்தூ... என்று
அழைத்தான்.
வீட்டைவிட்டு
கோபத்தில் தனியே பெட்டியோடு கிளம்பி வந்தவளுக்கு இரவு நேரத்தின் தனிமை
அச்சுறுத்தியது பத்தரை மணி கடைசி பஸ் வரும் என்ற செய்தியை அறிந்தவள் அந்த பஸ்
பிடித்து கோயம்புத்தூர் வந்து அங்கிருந்து டெல்லிக்கு டிரைன் டிக்கட் எடுத்து
புறப்பட்டுச்சென்று விடவேண்டும் என்றே கிளம்பி வந்தாள்.
ஆனான்
இரவு அவளை பயமுடித்தியது அப்படிபட்டவளின் முன் காரிலிருந்து இறங்கிய ராஜேஷை
பார்த்ததும் இருளுக்கு துணைக்கு ஆள் கிடைத்த தைரியம் அவளுக்கு வந்தது.
நீங்களா..?
என்று கேட்ட பத்மினியிடம், சாரி பத்மின் நான் நண்பன் என்ற முறையில் உன்னை சினிமா
கூப்பிட்டுகொண்டு போனது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது
இப்பொழுது
பார் என்னால் உனக்கும் உன் ஹஸ்பெண்டிற்கும் பிரச்சனை வந்துருச்சு .சோ... இனிமே
இந்த ஊரில் நான் இருந்தா உங்க மரேஜ் லைப் பாதிக்கும் என தெரிந்ததால் நான்
ஊரைவிட்டு போக முடிவெடுத்து கிளம்பிட்டு இருக்கேன் என்றவன்.
அது சரி
பத்மினி என்ன இந்த நேரம் பெட்டியுடன் நீ தனியா வருற என்று அவளின் முன் நடித்தான்.
நானும்
இனி இந்த காட்டு மிராண்டி கும்பலுக்குள் வாழவிருப்பம் இல்லாமல் கிளம்பி வந்துட்டேன்
ராஜேஷ். நீங்க கோயம்புத்தூரா போறீங்க ராஜேஷ் ? என்னை ரயில்வே ஸ்டேசனில் கொஞ்சம்
இறக்கி விட்டுடுங்களேன் என்று கூறினாள் பத்மினி.
அவள் அவ்வாறு
கூறியதும் என்கிட்டபோய் பெர்மிசன் கேக்குற பத்தூ, என்னை ரயில்வே ஸ்டேசன் கூட்டிட்டுபோ
ராஜேஷ் என்று உரிமையா கேக்கணும் பத்மினி
என்றபடி அவள் ஏற காரின் முன்பக்க கதவை அவளுக்கு திறந்துவிட்டான்.
சற்றுதள்ளி
அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த அவனது நண்பர்களிடம் பத்மினி
அறியாமல் ஒற்றை கையை தூக்கி காண்பித்துவிட்டு சுற்றி வந்து டிரைவர் இருக்கையில்
அமர்ந்தவன் காரை ஓடவிட்டான்.
தீரன் அந்த ரூமிற்குள் வந்தபோது கூறிய வார்த்தைகள் யாழிசையின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்ததால் அவனின்
அருகாமையை அவளால் வெறுக்கவே முடிந்தது
ஆனால் அவனின் தழுவலில் இருந்து மீள இயலாமல் போனது அவளின்
உடல் நிலையால்
அவனின்
உஷ்ண முத்தத்தாலும் அவனின் மேனித் தகிப்பாலும் அவளின் உடல் இயல்பிற்குத் திரும்பிக்கொண்டிருக்கும்
போதே தீரனின் கைகளின் தேடலில் அவன் தன்னிலை இழக்க ஆரம்பித்ததையும் உணர்ந்தவள்
காதில் அவனின் வார்த்தகள் எதிரொலித்தது,
சுரணை
வந்த கை மற்றும் கால்களினால் தன் இப்பொழுது இழந்துவிட்ட பலத்திலும் கூட கடுமையாக
அவனிடம் எதிர்ப்பு காண்பிக்க முயன்றாள்.
அவளின்
ஒத்துழையாமையின் தன் மயக்கிதிலிருந்து வெளிவந்தவன் திரும்பத்திரும்ப அவளிடம் தான்
தவறாகவே நடந்துகொள்வதை உணர்ந்து தனது அணைப்பில் இருந்தவளை பட்டென்று விட்டு விளக்கி
எழுந்து கட்டிலைவிட்டு இறங்கினான்.
பின்
அவளின் முகம் காணாமல் திரும்பி நின்றபடி ஆர் யூ ஓகே நவ் என்று கரகரத்த குரலில்
கேட்டான்.
அவனுக்கு
பதில் கூற விரும்பாத யாழிசை, தன் உடம்பில்
இன்னும் தெம்பு திரும்பாதநிலையில் கலைந்திருந்த தன்னுடையை திருத்தநினைத்து வேகவேகமாக
சரிபடுத்தவேண்டும் என்ற உந்துதலில் செயல்பட்டவளின் கரங்கள் இப்போது குளிரினால்
அல்லாமல் இரவு முழுவதுவும் குளிரில் இருந்த பாதிப்பினால் உண்டான பலவீனத்தில்
நடுங்கியது.
தான்
பேசியதற்கு பதில் வராததால் திரும்பிப்பார்த்தவனுக்கு அவளின் நடுக்கம் கண்ணில் பட
அவளுக்கு உதவும் எண்ணத்துடன் ஒரு எட்டு அவளை நோக்கி வைத்தான்.
தீரன்
தன்னை நோக்கி ஒரு அடி வைத்ததை கண்டதும் கண்களில் பயத்துடன் அவள் பின்னால் ஒரு
எட்டு தள்ளிச்சென்றாள்.
அவளின்
கண்களில் தெரிந்த பயம் ஏனோ தீரனின் நெஞ்சை பலமாகத் தாக்கியது. எனவே கண் மூடி நின்று
தனது மனதில் எழுந்த வலியை முழுங்கியவன் .நோ...நோ...நான் வரல நீ ரிலாக்ஸ் ஆகிக்கோ
என்றவனுக்கு டென்சனில் சிகரட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
அதற்குமேல்
அங்கு நிற்க விரும்பாமல் சிகரட்டை எடுத்து லைட்டரின் உதவியுடன் பற்றவைத்தவன்.
கபோர்டில் ஒரு டிசர்ட் எடுத்து போட்டுக்கொண்டு தன்னை சீற்படுத்திகொண்டு அவளை
திரும்பி பார்க்காமல் அந்த அறையை விட்டு அவன் வெளியில் வந்தான்.
அந்த
அறையை விட்டு அவன் வெளிச்சென்றதும் ஏனோ தெரியவில்லை யாழிசைக்கு கத்தி அழுகவேண்டும்
என்ற உந்துதலில் வாய்விட்டு கதறி அழுதாள்
தான் கடத்தப்பட்டது
தன்னை காணாமல் தன் அப்பா பாட்டியின் நிலை
மற்றும் தீரனின் மேல் உள்ள கோபம் அவனின் மேற்கொண்ட செயலால் சற்று மட்டுப்பட்டு
அவனின் மேல் இருந்த காதல் சற்று மேலிருந்த நேரம் நேற்றைய இரவில் அவனின் பார்வையில்
தான் எத்தனை கீழாக இறங்கியிருக்கிறோம் என்ற தவிப்பு அதனையும் சேர்ந்து அவள் மனதில்
அழுத்தம் கூடி அவளை அழுகையில் தள்ளியது.
அறையை
விட்டு வெளிவந்த தீரனுக்கு அடுக்கடுக்காய் வேலைகள் ஆக்ரமித்துகொண்டன .
அதில்
இன்று காலை வரவிருக்கும் வகுலாவை அழைத்து கொண்டுவந்து எங்கு வைக்க என்ற குழப்பம்
எழுந்தது.
ஏனோ இப்பொழுது
அவர்கள் இருக்கும் மகேஷ் மல்கோத்ராவின் மூலம் இருந்து கிடைத்த தனது பாதுகாப்பு
கோட்டையாக மாற்றிய இந்த இடத்திற்கு தங்களின் திட்டத்தில் சம்மந்தமில்லாத நபர்களை
கூட்டிக்கொண்டுவர வேண்டாம் என்று நினைத்திருந்த வேளையில் வகுலாவை எங்கு தங்க வைக்க
என்ற கேள்வி எழுந்தது.
கோயமுத்தூரில்
யாழிசைக்காக அவன் வாங்கிய வீடு மட்டும்தான் இவர்களுக்கு இருக்கும் இன்னொரு
பாதுகாப்பான இடம்.
எனவே
அவளை அங்கு கூட்டிபோய் வீட்டுச்சிறையில் வைக்க தீரன் ஏற்பாடு செய்தான்.
வகுலாவை ஏற்போர்ட்டில்
பார்த்தபோது அவள் ஹாய் தீரா என்று ஆர்வத்துடன் வந்தவள் அவளின் அம்மா கூறியிருந்த
அவரின் அம்மாவழிச் சொந்தமான வெங்கடேசன்
என்பவரையும் கண்கள் தேடியது.
ஆனால்
அந்த வெங்கடேஷ் என்பவன் பாதிவழியிலேயே ஒரு சிறு ஆக்சிட்டென்டில் மாட்டிக்கொண்டார்.
வெளிப்பார்வைக்கு
அது சாதாரண சின்ன ஆக்சிடென்ட் ஆனால் உண்மையாகவே தீரனால் பிளான் செய்யப்பட்டு
நடைபெற்ற விபத்து என்பதை மற்றவர்கள் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
அவளை
ரிசீவ் பண்ண தீரன் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மேலும் பிராங் அவளை
இந்தியா அனுப்பும் போது தீரனுக்கு எதிராக அவளை செயல் படும்படி கூறி அனுப்பிய
செயலுக்கு
வகுலா
தீரனை அணுகுவது அவ்வளவு எளிதல்ல என்றே நினைத்திருந்தனர் வகுலாவும் பிராங்கும்.
ஆனால்
அதற்கு மாறாக அவனே தன்னை பிக்கப்பண்ண வந்திருப்பதாகவும் தன் அம்மா விசாலி போன்
செய்து தகவல் அளித்ததாகவும் தீரன் சொன்னதில் மகழ்ச்சியடைந்தாள்.
தனது
அம்மாவின் வார்த்தையை தட்டமுடியாமல் வந்திருப்பவனைக் கண்டு தனது செயலை எளிதாக
முடித்துவிடலாம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டுகொண்டாள்.
மேலும்
அதற்கு அடித்தளம் போடும் நோக்குடன் தாங்க் யூ தீரா என்றபடி அவனை அணைக்க வந்த
வகுலாவின் மேனி தன் மேல் படாதவாறு தள்ளிச்சென்று தனது கையை அவளுக்கு நீட்டி வெல்கம் டூ இந்தியா என்று
கூறினான்.
தனது
ஹக்கை ஏற்காத தீரனை வித்தியாசமாகப் பார்த்தபடி என்னை கூட்டிட்டுபோக வெங்கடேசன் அங்கிள் ஏற்போர்ட் வருவதாகத்தானே
என்னிடம் சொன்னாங்க என்றவள்
அவளின் போன்
இங்கிருக்கும் சிம் கார்ட் போட்டால்தான் work ஆகும் என்பதால் கேன் ஐ யூஸ் யுவர்
மொபைல் தீரன் நான் அங்கிள்ட்ட ஒரு வார்த்தை பேசிவிடுகிறேன் என்றாள்.
அப்போது
சற்று திரும்பி அவனின் டீமில் உள்ள ஒருவன். யாரோ ஒருவனைப்போல் சற்று தள்ளி
நின்றுகொண்டிருந்தான்.
தீரன்
கைவிரலால் ஏதோ சைகை செய்த மறுநிமிடம் விரைந்து அவனிடம் வந்த அவனிடம் கிவ் யுவர்
போன் எ பியூ மினிட்ஸ் டு டாக் பார் வகுலா என்றான்.
அவன்
அவ்வாறு கூறியதும் உங்க போனுக்கு என்ன ஆச்சு தீரன் எனக்கேட்டபடி யோசனையுடன்
தீரனின் ஆள் அவளிடம் கொடுக்கும் மொபைலை வாங்கினாள்.
காரில்
இருக்கு வகுளா என்றான் தீரன். அவள் அந்த அங்கிள் வெங்கடேசனுக்கு தன் போனில் இருந்த
மொபைல் நம்பரை பார்த்து டயல் செய்தாள்
ஆனால் அப்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததாக
தெரியவந்ததும் வேறு வழியில்லாமல் தீரனுடன் அவனின் காரில் ஏறினாள்.
வகுளா
பிளைட்டில் இருந்து இறங்கியதிலிருந்து அவள் தீரனுடன் அவனின் காரில் ஏறும் வரை அந்த
ஏர்போர்டில் இருந்த அமைச்சர் ரெங்கராஜன் ஏற்பாடு செய்திருந்த ஆளின் மூலம் பிராங்கிர்க்கு
லைவாக விஷயம் சேர் செய்யபட்டுக்கொண்டிருந்தது.
தீரன் ஏர்போர்டுக்கே
ஒரு பிளான் போட்டு தன் டீமுடன் தான் வந்திருந்தான். அங்காங்கே ஏர்போர்ட்டில்
பயணிகளை ரிசீவ் செய்யும் ஆட்களைப்போல் தீரனின் ஆட்கள் நின்றுகொண்டு வகுலாவையும்
தீரனையும் யாராவது நோட்பண்ணிக் கொண்டிருகிறார்களா? என்றும் அவர்களை அணுக
முயல்கிறார்களா? என்றும் கவணித்துக் கொண்டிருந்தனர்.
அதேபோல்
கவணித்ததில் வகுலாவையும் தீரனையும் நோட்பன்னிகொண்டு அவர்களுடன் வெளியில் வந்த அந்த
மினிஸ்டரின் ஆள் தனது மொபைலில் அங்கு நடந்ததை அப்படியே ஒப்பித்தான்.
அவன்
கூறியதை கேட்ட பிராங்கிற்கு ஷி ஷூட் நாட்
கோ வித் தேட் டீரன். ஹேய் மேன் நீ அவள் பேரை சத்தம்போட்டு கூப்பிட்டு அவளை அவன்
காரில் ஏறாமல் தடுத்தி நிறுத்தி உன் மொபைலை அவளிடம் கொடு நான் பேசுறேன் என்று
கூறினான்.
பிராங்
கூறியதும் கத்த முயன்ற மறுநிமிடம் அவனை
நோக்கி வந்த தீரனின் ஆள் ஹாய் பிரதாப் என்று ஒருகையால் அவனின் தெரித்தவன் போல்
இழுத்து தன்னோடு அணைத்தவன்.
தனது
கையடக்கத் துப்பாக்கியை அவனின் வயிற்றில் வைத்து அழுத்தியபடி தாழ்ந்த குரலில் டோன்ட்
மூவ், சுவிட்ச் ஆப் யுவர் போன் அப்படி செய்யாட்ட உன் உயிர் உன் உடம்பில் தங்காது
என்று கூறினான்.
அவனின்
செயலில் படபடப்பான அந்த மினிஸ்டரின் ஆள் மொபைலை அவன் கூறியதுபோல் ஸுவிச்ஆப்
செய்தான்.
தீரனின்
காரில் வகுளா ஏரிய மறுநிமிடம் கார்வேகமெடுத்தது. ஏர்போட்டைவிட்டு தாண்டிய உடனே
தீரனின் துப்பாக்கி வகுலாவின் நெற்றிபொட்டில் இருந்தது அவளின் லக்கேஜெல்லாம் அந்த
காரில் டிக்கியில் ஏற்றப்பட்டிருந்தது.
உன்
ஹேண்ட்பேக்கில் நீ காதில் போட்டிருக்கிற தோடு முதல் கழுத்தில் கையில் போட்டிருகிற
எல்லா ஆர்னமன்சையும் கழட்டிபோடு கொஞ்சதூரத்தில் கார் நின்றதும் உன் ஹேண்ட்பேக்கை
இந்த காரில் விட்டுட்டு நீ மட்டும் என்னுடன் இந்த காரிலிருந்து இறங்கி வேறு காரில்
என்னுடன் ஏறனும் என்று அழுத்தமான குரலில் கூறினான் தீரன்.
-----தொடரும்-----

No comments:
Post a Comment