anti - piracy

Post Page Advertisement [Top]


         ஒளிதருமோ என் நிலவு...! [தீபாஸ்-ன்]
                   அத்தியாயம்-16
                           

தன் அம்மாவுடன் செல்லும் அழகுநிலாவை பார்த்தபடி பின்னால் சென்ற ஆதித்திற்கு அவளின் அறன்டமுகம் மனதை என்னவோ செய்தது. 

அவனின் செயலுக்கு அவனையே மனதுனுள் கடிந்த ஆதித், அழகுநிலாவிடம் தான் இன்னும் தனது மனதை உணர்த்தாத இந்தநிலையில் அவளின்மேல் இவ்வாறு  ஆளுமையை செலுத்தினால் அவளால் தாங்கமுடியாது என்பதை உணர்ந்தான்.

ஆதித் அவளிடம் இனி உணர்ச்சிவசப்பட்டு இதுபோல் கோபத்தை காண்பிக்கக்கூடாது என முடிவெடுத்தான். .

இப்பொழுது அவள் இருக்கும் மனநிலைமையில் நான் அவளை விரும்புவதாக சொன்னால் ஒரேயடியாக அவள் தன்னைத் தவிர்க்கவும் வாய்ப்புள்ளதை உணர்ந்தவன், இப்போதைக்கு அவளிடம் நட்பாக மட்டும் அணுகவேண்டும் என முடிவெடுத்தபடி டைனிங் டேபிளில் உட்கார்ந்து, ஜானகி பரிமாற தட்டில் உள்ளதன் ருசி கூட உணராமலே சாப்பிட  ஆரம்பித்தான் .
     
அழகுநிலாவிற்கு ஒரு வாய் உணவுகூட உள்ளே இறங்கவில்லை.  சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்வேகத்தில் தட்டில் உள்ளதை இயந்திரத்தனமாக உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள்.
     
இருவரின் முகத்தையும் ஆராய்ந்த வேலாயுதம், என்ன..? என்று கேள்வியை கண்களாலேயே ஜானகியிடம் வைத்தார் .அதற்கு அவளும் தெரியவில்லை என்று கூறியவள், ஆதித் கோபமாக உள்ளதாக சவுன்ட் இல்லாமல் உதட்டசைவில் அவரிடம் கூறினாள்.
     
கோவில் போகும்போது இருந்த கலகலப்பான சூழல் சாப்பாட்டு மேஜையின் முன் மாறி அமைந்து விட்டதை கவனித்த வேலாயுதம் அழகுநிலாவிடம் பேச்சை வளர்க்கும் விதமாக “அழகுநிலா உனக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தை உன் வீட்டில் சொல்லாமல் மறைப்பது நல்லது இல்லைமா,

உன்னை திரும்ப சென்னைக்கு வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்று பயந்து நீ சொல்லாததாக ஜானகி சொன்னாள் ஆனால், இப்படி மறைத்தது அவங்களுக்கு தெரிந்தால் உன்மேல் நம்பிக்கை வைத்து அவங்க உன்னை வேலைக்கு அனுப்பியிருப்பதையே  தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கு.
அதனால் இனிமேல் எதுவென்றாலும் உன் வீட்டில் பேசி புரிய வச்சுக்கோ... மறைப்பது நல்லதல்ல என்றார்.
     
ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்த அழகுநிலாவிற்கு அவரின் வார்த்தைகள் மேலும் குற்றவாளியாக்கியது அவளை.

நீங்க சொல்றது ரொம்ப சரி அங்கிள், அதனால்தான் நான் இப்போ உடனே புறப்படணும் என்ற முடிவுக்கு வந்தேன்.

சாப்பிட்டுவிட்டு நான்  என் ஹாஸ்ட்டலுக்கு போய் ஊருக்குப் போவதற்கு எல்லாம் எடுத்து வைக்கப்போகிறேன். .

நாளைக்கே எனக்கு லீவ் கேட்டு ஊருக்குப்போய் எல்லாத்தையும் அண்ணனிடம் சொல்லிவிடப்போகிறேன் என்றாள்.

பாவம் அவளால் அவள் எடுத்த முடிவை செயல்படுத்தமுடியாதபடி விதியின் கையில் அவள் வாழ்க்கை பயணிக்கப்போவதை அவள்   அறியவில்லை.
       
மாதேஷ் மற்றும் நரேனும் தீவிர ஆராய்ச்சியில் இருந்தனர்.  நரேன் கூறினான் “டேய் உன் அப்பாவிடம் சொல்லி அந்த ஆதித்தை கொஞ்சம் அடக்கி வைக்கச் சொல்லலாம் இல்லையா, நான்கூட முதலில் அவன் யாரோ பெரிய கொம்பன் என்று பயந்து போய் இருந்தேன்

இப்போதானே தெரியுது அவன் உன் அப்பாவின் என்று மேலே சொல்லப் போகையில் மாதேஷ் அவனை “கொஞ்சம் நிறுத்தறயா இதுக்குமேல அவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பை பற்றிப் பேசுன பிரண்டுன்னு கூட பாக்கமாட்டேன் அடிச்சு பல்லக் கழட்டிடுவேன்என்றான்
    
நீ அன்னைக்கு ஜானகி பில்டர்ஸ் எம் டி ஆதித்தராஜ்னு சொன்னதுமே அது இந்த எருமைதான்னு நான் கண்டுபுடுச்சுட்டேன்.
ஆனா நீ நினைக்கிற மாதிரி பிரச்சனை இப்போ சிறுசாகல அவனுக்கு மட்டும் அந்த மொபைலில் இருக்கிற வீடியோசில் நான் அப்படி இருக்கிறது தெரிந்தால் உடனே ஆப்புதான் என்றான்.
   
இப்போ என்னடா செய்ய பேசாம அவளை தூக்கிடலாமா..? என்றதும், மாதேஷ் ஆமா நீ ஆள் வச்சு அவளை அட்டாக் பண்ணின லச்சனத்தை பார்த்தேன்தானே என்றவன்,

அவள் இப்போ ஆதித்தின் வீட்டில் இருக்கிறாள். அங்கிருக்கும் வரை அவளை நாம் எதுவும் செய்யமுடியாது. முதலில் அங்கிருந்து அவளை கிளப்பணும் என்றவன் அவளை வெளியில் கொண்டுவர ஒருவழி செய்றேன் என்று வசந்திற்கு போன் பண்ணினான்.
     
அவன் எடுத்ததும், டேய் வசந்த் நம்ம நியூ பில்டிங் ஸ்டார்ட் பண்றதுக்கு பூமிபூஜையை புதன்கிழமை செய்வதாகத்தானே பிளான் போட்டோம்.
ஆனா இப்போ என்ன செய்ற ஜானகி கன்ஸ்ட்ரக்ஷனுக்கு போன்போட்டு எங்க ஜோசியர் நாளைக்கு பூமிபூஜை போட்டு பில்டிங் வொர்க்கை தொடங்கச்சொல்றார்

அதற்கான ஏற்பாட்டை நாளைக்கே ஏற்பாடு செய்யுமாறு சொல்லுடா! அப்படியே அவங்களுக்கும் நமக்குமான அக்ரீமென்ட்டையும் அப்பவே சைன் பண்ணிடலாம் என்று சொல்லி ஏற்பாடு செய்ற  என்று கூறி தொடர்பை  துண்டித்தான். பின் அழகுநிலாவிற்கு தொடர்புகொண்டு பேச ஆயத்தமானான்.
      
அழகுநிலா சாப்பிட்டுவிட்டு அவள் போடவேண்டிய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு ஜானகி கொடுத்து போட்டிருந்த நகைகளை கழட்டிவைத்துவிட்டு தன்னுடையதை போட்டுக்கொண்டவள் கிளம்பி தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு ஜானகியிடம் வந்தவள்,

“இந்தாங்க ஆண்ட்டி என்று நகையை கொடுத்தாள். “இப்போ எதுக்கு இதை கலட்டுன நீயே போட்டுக்கோ அழகுநிலா என்று சொன்னாள் ஜானகி, உடனே “ம்....கூம் நீங்க கட்டாயப்படுத்தி போடச்சொன்னதால் தான் போட்டேன் ஆண்ட்டி,
     
என் அம்மா சொல்வாங்க  ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்று. நீங்க என்னடானா தங்க நகையை போய் இப்படி தூக்கி கொடுக்குறீங்க

என்றவள் அங்கிருந்த மேஜையில்  அந்த நகைக்குரிய பெட்டி இருந்ததை பார்த்து  அதில் நகையை வைத்து மூடி அங்கேயே அதை வைத்து “பத்தரமா எடுத்து வைங்க என்றாள்.

பின்  அங்கிருந்த வேலாயுதத்திடமும் வருகிறேன் ஆண்ட்டி என்று சொல்லியவள் ஆதித்தியம் விடை பெறுவதற்காக தேடினாள்.
      
அவன் அவனுடைய ரூமிற்கு சென்னு கார்சாவியை எடுத்துக்கொண்டு கையில் சுழற்றியபடி வந்தவன் “.வா உன்னை டிராப்பண்றேன் என்று கூறினான்.
      
அவன் கூறியதை கேட்டதும் சற்றுமும் அவன் தன்னிடம் கோபம்கொண்டு பேசிய பேச்சு ஞாபகம் வந்ததால் இனி எதற்கும் இவனின் முன் நிற்கக் கூடாது என்ற முடிவெடுத்தாள்.
     
எனவே வேகமாக  “இல்ல வேண்டாம்.... உங்களுக்கு ஏற்கனவே நான் நிறைய தொல்லை கொடுத்திட்டேன்.
நானே கால்டாக்சிக்கு போன் செய்து போய்கொள்வேன் என்றவள் தனது மொபைலை எடுத்து டயல் செய்யப்போகும்போது அதை டக்கென்று பறித்து அனைத்து அவள் கையில் கொடுத்தான் ஆதித்
     
பின் அவளிடம் “எனக்கு உன்னை டிராபன்னுவது ஒன்றும் பிரச்சனையில்லை நான் உன் ஹாஸ்டல் பக்கம்தான் போகிறேன். அப்படியே உன்னை அங்கு இரக்கிவிடபோகிறேன், அதனால் ரொம்ப சீன போடாமல் ஒழுங்கா வா என்று முன்னால் நடக்க ஆரம்பித்தான்.

அதற்குமேல் மறுக்கமுடியாமல் அவனை தொடர்ந்து செல்ல ஆரம்பித்த அழகுநிலா  ஜானகியிடம் “போய்ட்டுவருகிறேன் ஆண்ட்டி என்று கூறினாள்.
        
அதற்கு ஜானகி  “நீ வீட்டிற்கு கிளம்புவதாக சொன்னதால்தான் உன்னை போகவிடுறேன், இல்லையென்றால் இப்போ இருக்கிற உன் உடல்நிலைக்கு உன்னை தனியாக அனுப்பவெல்லாம் மாட்டேன் என்று கூறியபடி அவளுடன் வெளியில் வந்து காரில் அவள் ஏறும்வரை உடன் இருந்து அனுப்பிவைத்தாள் ஜானகி.
        
கார் கிளம்பியதில் இருந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த அழகுநிலா, கொஞ்சநேரத்தில் அவள் அவன் முகத்தை முகத்தை பார்ப்பதை உணர்ந்த ஆதித்  என்ன கேட்கணும் என்று நினைக்கிறாயோ அதை கேட்டுவிடு என்று கூறினான்.
       
அவன் அவ்வாறு கூறியதும் ஒருவித தயக்கத்துடன் “இல்லை, நீங்க உங்க வீட்டில் வைத்து என்னை நன்றி விசுவாசமில்லாதவள் என்று கோபமாக என்னிடம் பேசினீங்களே!
எதை வைத்து என்னை நன்றி விசுவாசமில்லாதவள் என்று நீங்க சொல்றீங்க என்று கேட்டதும் காரை கிரீச் என்று சடன் ப்ரேக் போட்டும்போதே அதை லாவகமாக சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன்,
கோபமாக அவளின் அருகில் சென்றான், அவனின் செயலில் பயந்துபோய் தன் கையில் வைத்திருந்த பேக்கை இருக்கப்பிடித்தபடி கதவோடு ஒன்றினாள் அழகுநிலா.
     
அவளின் கை பிடித்துத் தன் அருகில் இழுத்தான் ஆதித், .அதனால் அழகிக்கு ஏற்பட்ட  அந்த பயத்தையும் மீறி கூறினாள் “இதோ இப்படிதான் எதற்கெடுத்தாலும் என்னை தொட்டுப்பேசுறீங்க ,
நீங்க எனக்கு உதவிசெய்தவர் தான் அதற்காக இப்படி என்னை தொட்டுப்பேசுவது எனக்கு பிடிக்காது என்று ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருகிறேன்.
ஆனா நீங்க எதுக்கெடுத்தாலும் நான் ஒரு பெண் என்பதனை மறந்து இப்படித்தான் என்னை ட்ரீட் பன்றீங்க  என்று படபடவெண்டு பொரிந்தாள்
      
ஆதித் அவளின் கைபிடித்து தன அருகில் இழுத்ததுமே அவனின் இழுவையில்  அருகில் வந்ததும் அவள் பொரியத்துவங்கியவுடன்  அவள் முகத்தை பார்த்தபடி இருந்தவன் அவள் பேசிமுடித்ததும் “திட்டி முடிச்சாச்சா? என்று கூறிய ஆதித்  அவளின் கையில் இருந்த பேக்கை வெடுக்கென்று பறித்தான்,
பிறகு  அதனை திறந்து அதன் உள்ளிருந்த நரேனின் போனை தேடி எடுத்தவன் அவளுடைய  பேக்கை மறுபடி அவளின் மடியில் தூக்கிப்போட்டான் .
      
அழகுநிலாவை பார்த்து உன்மடியில் இருக்கிற இந்த பேக்கை எடுக்கப்போனால் என்னமோ உன்னை கற்பழிக்க நான் வருவதுபோல் கதவுகிட்ட பம்மிக்கிட்டு போஸ் கொடுத்த!
அதனால் கடுப்பாகித்தான் உன்னை கையைபிடித்து அருகில் இழுத்து உன் பேக்கை பிடுங்கினேன் என்றவன் சரியான பட்டிக்காடு என்று கூறினான். 
இப்போ உனக்கு என்ன பிரச்சனை நான் உன்னை தொட்டுப் பேசுவதா..? அல்லது இந்த மொபைலா..? நீ இப்போ என்னையும் அந்த மினிஸ்டரின் மகனைப்போல் பொறுக்கி என்று நினைத்து பேசுகிறாயா?  என்று கோபமாக பொரிந்தான்  
     
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீதான் வந்து மாலில் என்னை துரத்திடு ஒருத்தன் வந்தான்னு என்னை கட்டிப்பிடிச்ச.
அதனால்  எனக்கும் என் லவ்வராக இருந்த வர்ஷாவிற்கும் இடையில் பிரச்சனை வந்துருச்சு. 
ஆனால் உனக்கு  உதவி பண்றதுக்காக கோவிலில் உன் கையைபிடிச்சு கூட்டிப்போனதால உனக்கு இப்போ பிரச்சனை வந்ததுபோல் சீனப் போடடுற! என்று அவன் பதிலுக்கு கோபப்பட்டு சிலிரித்து பேசினான்.
       
அதற்கு “ஆமா... ஆமா... இந்த மொபைளால் எனக்குப்  பிரச்சனைதான் அதில் இருந்து தப்பிக்க உங்களிடம் தஞ்சம் புகுந்ததால் உங்களுடைய லவ் வாழ்க்கையிலும் பிரச்சனை...
நீங்கள் எனக்கு உதவப்போய் கோவில் வாசலில் நம் இருவரையும் எனக்கு வீட்டில் பார்த்திருக்கும் மாப்ப்பிள்ளை பார்த்ததால் எனக்கு மேலும் பிரச்சனை....
போதும் இனி எதற்கும் உங்களிடம் வந்து நான் உதவிகேட்டு நிற்கப்போவதில்லை, இதுவரை நீங்க எனக்குச் செய்திருக்கிற உதவியையும் என்நிலையையும் இனி என் வீட்டில் மறைக்கப் போவதில்லை.
இனி எதுவந்தாலும் என் வீட்டில் சொல்லி அவர்களுடன்  சேர்ந்து நான் சமாளித்துக் கொள்வேன்...
உங்களின் லவ்வர் பேர் என்ன சொன்னீங்க... ம்...வர்ஷா தானே நான் அவங்களை சந்தித்து நடந்ததை சொல்லி உங்கள் இருவரையும் சேர்த்துவைப்பது என்பொறுப்பு என்று படபடவென்று பொரிந்தாள் அழகுநிலா.
      
அவளின் வார்த்தைகளில் ஒருநிமிடம் உறைந்திருந்த  இருவரையும், அழகுநிலாவிற்கு மாதேசிடம் இருந்து வந்த மொபைல் அழைப்பு  மீட்டது. .
அழகுநிலா அதனை எடுத்து காதிற்குகொடுத்ததும் “மிஸ் அழகுநிலா என்று மாதேசின் குரலில் ம்...நான் தான், நீங்க...? என்றதும்
“ஐ அம் யுவர் பாஸ் மாதேஷ் என்று கூறினான். உடனே விறைப்பாக அமர்ந்தபடி சொல்லுங்க பாஸ் எனக்கு சின்னதா அடிபட்டிருப்பதால் நான் இன்னைக்கு லீவில் இருக்கிறேன் ஆபிஸ் மெயிலில் நான் அதை இன்பார்ம் செய்திருந்தேனே! என்று கூறினாள் அழகுநிலா.
    
 உடனே “யா... நான் பார்த்தேன் அதனால்தான் இப்பொழுது உங்களுக்கு போன் பண்ணினேன், இலேசான காயம் என்றுதானே நீங்க மென்சன் பண்ணியிருக்கீங்க
“சோ நாளைக்கு கட்டாயம் நீங்க ஆபீசிற்கு காலை ஒன் அவர் முன்னாடியே வந்திருக்கணும்
நம்ம புது பில்டிங் காண்ட்ராக்டில் நாளை பூமிபூஜையின் போது ஜானகி கண்ஸ்ரக்சனுடன் அக்ரீமென்ட் சைன் ஆகப்போகுது,
அதற்குரிய டாக்குமென்ட் ரெடிபண்ணனும். “சோ நாளைக்கு நீங்க கண்டிப்பா வந்துதான் ஆகணும். இது என்னுடைய ஆர்டர். என்று கூறியவன் தொடர்பை துண்டித்தான்.
     
அவள் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவளின் பேச்சினில் விழைந்த தாக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொண்ட ஆதித்,
அவள் பேசி முடித்ததும் “லுக் அழகுநிலா  நீ சொல்வதுபோல் இதோட நமக்குள்ள உள்ள எல்லா தொடர்பையும் நாம் விட்டுவிடலாம்,
அதனால் எனக்கு ஒன்றும் இல்லை ஆனால் நீ மாட்டியிருக்கும் பிரச்சனைக்கு  காரணமானவன் லேசுப்பட்டவன் கிடையாது.
மனசாட்சியில்லாதவன். அதிகாரம், பணபலம் எல்லாம் உள்ள ஒரு பக்கா கிரிமினல் அரசியல்வாதி,

உன் வீட்டு ஆட்களால் அவனை மோதி கண்டிப்பா மீளமுடியாது உனக்கு என்மேல் நம்பிக்கை இருந்தால் இந்த மொபைலை என்னிடம் கொடு.

ஐ திங்க் அன்னைக்கு உனக்கு நடந்த அந்த வீடியோ இதில் இருப்பதற்காக மட்டும் இதனை இவ்வளவு தீவிரமாக உன்னிடம் கேட்டு அந்த மினிஸ்டரின் மகன் தொந்தரவு செய்யவில்லை என்றும், இதில் அவனின் ரகசியம் ஏதோ ஒன்று மாட்டியிருக்கும் என நான் நினைக்கிறேன்.  

நான் மட்டும்தான்  இப்போ உனக்கு உதவ முடியும் என்று கூறியவன், “யோசித்து உன் பதிலை சொல்லு என்று அவளிடம் அந்த மொபைலை திரும்ப கொடுத்து காரை அவளது ஹாஸ்ட்டலை நோக்கி விரட்டி அதன் முன் நிறுத்தினான். .
       
ம்...நீ இறங்கலாம் என்று அவன் கூறியதும் அவள் கையில் இருந்த அந்த மொபைலை பாவமாக முகத்தை வைத்தபடி அவனிடம் நீட்டினாள் அழகுநிலா,
அவன் அதை வாங்காமல் என்ன என்று தனது ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வி எழுப்பினான் .
       
உங்கமேல் எனக்கு நம்பிக்கை இருக்கு உங்களை தொந்தரவு செய்றது தப்புதான். இருந்தாலும் ப்ளீஸ்.. நான் கோபமாக உங்களிடம் பேசியதால் இப்போ நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிடாதீங்க என்று பாவம்போல் கூறினாள்.
       
அவளது குழந்தைத் தனமான செய்கையை மனதிற்குள் ரசித்தாலும் முகத்தை உர்...ரென்று வைத்துக்கொண்டு, அவள் நீட்டிக் கொண்டிருந்த அந்த மொபைலை டக்கென்று பிடுங்கி,
ஹெல்ப்பண்ணி தொலைக்கிறேன். என் அம்மாவின் பிரியமானவளாக ஆகி தொலைச்சுட்ட, என்று வார்த்தைகளை போட்டவன், என்ன இன்னும் உட்கார்ந்துகிட்டே இருக்கிற, காரை விட்டு இறங்கு  என்று சத்தமிட்டான் .
        
அவனின் வார்த்தையை கேட்டதும் இதோ இறங்கிட்டேன் என்றவள், டோரை திறந்து இறங்கிய மறுநொடி விர்ரென்று ஆதித்தின் கார் பறந்து சென்றது .
      
ஆதித் அவனது கம்பெனியின் சாப்ட்வேர்  அனைத்தையும் கவனித்துக் கொள்ளும்  நண்பனான ஜேம்சை, அழகுநிலாவை இறக்கிவிட்டதுமே போய் பார்த்தான்.
ஆதித் அவனின் உதவியுடன் நரேனின் மொபைலில் இருந்த அழகுநிலாவிற்கு தொல்லை கொடுத்த அந்த வீடியோ பதிவை நீக்கச் சொன்னதும் நீண்ட போராட்டத்திற்குப்பிறகு அதை ஓபன் செய்து அதில் இருந்த வீடியோ பதிவை பார்த்த இருவரும், ராஸ்கல்ஸ் எதையெல்லாம் ரெகார்ட் பண்ணியிருக்கிறாங்க என்ற கோபம் ஏற்பட்டது .
       
மேலும் நடிகையுடனான போட்டோசில் மாதேசும் இணைந்து இருப்பதையும் மேலும் நரேனுடன் மாதேசும் இருந்த போட்டோஸ் பார்த்ததும் ஆதித்தின் புருவம் யோசனையில் நெரிந்தது.
       
காலை எழுந்தபின்புமே இன்று புதிய ஒப்பந்தத்திற்கு சைன்செய்ய   கிளம்பியவன் மனம் யோசனைலேயே இருந்தது.
        
ஏனெனில் புதிய காண்ட்ராக்ட் ஒப்பந்தம் செய்வது குறித்து டீடைல்ஸ் பற்றி விசாரித்தபோது தான் ஆதித்துக்கு அந்த  வசந்த் சாப்ட்வேர் கம்பெனியில் மாதேசும் பார்ட்னர் என்று தெரிந்துகொண்டான்.
மேலும் அதில் தான் அழகுநிலா வேலை பார்க்கிறாள் என்பதை ஹாஸ்பிடலில் வைத்து ரமேசுடன் பேசும் போது ஆதித் தெரிந்து கொண்டான்.
         
இந்த நிலையில் நரேனின் மொபைலில் இருந்த மாதேசின் போட்டோஸ் அழகுநிலா ஆபத்தின் கூடாரத்திலேயே வேலை செய்வதாகப் பட்டது.
மேலும் தான் அவர்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கூடுதல் கவனமுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் கொடுத்தது.
மேலும் அவர்கள் அழகுநிலாவை அந்த மொபைலில் உள்ள ரெகார்ட் மூலம் பிளாக்மெயில் செய்யமுடியாது ஏனெனில் அந்த பதிவு அடங்கிய அந்த போனின் மெமரி கார்டையே உடைத்து போட்டாகிவிட்டது.
மேலும் அதிலிருந்த மினிஸ்டர் மற்றும் நரேன் மாதேசுகு எதிரான ரெகார்டுகளை தானும் தனது போனில் காபி செய்துகொண்டதால் அவர்களின் குடுமிதான் தன்னிடம் வசமாக மாட்டியிருப்பதை உணர்ந்துகொண்டான் ஆதித்.
        
ஆனால் இந்த விபரங்கள் யாவும் தனக்கு தெரியும் என்பதை அழகுநிலாவை அவர்களின் பிடியில் இருந்து வெளியில் கொண்டுவந்தபிறகுதான் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
அதற்குமுன் தெரிந்தால் அவர்களின் கோபம் தற்போது அவர்களிடம் வேலைபார்க்கும் அழகுநிலாவிற்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று பலவாறு யோசித்துக்கொண்டே பூமிபூஜை நடக்கும் இடத்திற்கு செல்லும்முன் தான் ரெடி செய்திருந்த ஒப்பந்தத்தை ஒருமுறை சரிபார்த்தான் .      
       
மறுநாள் காலை அழகுநிலா காலையில் சீக்கிரமே ஆபீசுக்குள் நுழைந்தாள், அவள் வருவதற்கு முன்பே வசந்த் வந்திருந்தான்,
அவள் வந்ததும் “குட்மார்னிங்  சார் என்றதும், அவளை ஏறிட்டுப் பார்த்தவன் , வந்தாச்சா இந்தாங்க இந்த பைலை எடுத்துக்கோங்க  என்றவன், இன்னும் ஹால்ப் ஆன் அவரில் இதில் இருக்கிற டீடெய்ல்ஸ் எல்லாம் நோட் பண்ணிட்டு ரெடியா இருங்க.
நாம எல்லோரும் நம்ம நியூ பில்டிங் சைட்க்கு போகணும் என்று சொல்லியவன், பிசியாக மொபைலில் பேசியபடி வெளியில் சென்றான். .
        
அரை மணிநேரத்திற்குள் வசந்துடன்  மாதேசும் அங்கே வந்தனர். வசந்த் இன்னும் அவள் வேலை செய்துகொண்டிருப்பதை பார்த்ததும், என்ன இன்னும் நோட் பண்ணி முடிகலையா..? என்று கேட்டான்
இதோ முடிச்சுட்டேன் என்று அழகுநிலா கூறினாள். அவளின் அருகில் வந்த மாதேஷ்  அவள் எடுத்துவைத்திருந்த  குறிப்பை பார்த்துவிட்டு அன்னைக்கு நீங்கதானே நம்ம பில்டிங்கட்டித்தர வந்த கொட்டேசனை பிரிண்ட் எடுத்து கொடுதீங்க என்று கேட்டான்.
ஆம் என்னும் விதமாகா அழகுநிலா தலை அசைத்ததும், ஜானகி பில்டர்சிடம் தான் நான் அக்ரீமென்ட் சைன் பண்ணப்போறோம். “சோ அந்த லேண்ட் பற்றிய டாகுமென்ட் எல்லாம் இந்த பைலில் இருக்கு.
நான் அங்கு கேட்கும்போது கரைக்டா எல்லாம் இதில் உள்ளவாறு சொல்லனும் என்றவன், போகலாம் என்றபடி முன்னால் நடக்க ஆரம்பித்தான்.
        
அவனின் பின்னால் சென்ற அழகுநிலாவிர்க்கு ஏனோ அந்த வேலை பிடிக்கவில்லை, ஆனால் தான் வேலை பார்க்கும் இடத்தின் முதலாளியின் பேச்சை மறுக்கும் நிலையில் அவள் இல்லையே!
எனவே மனதிற்குள் சாப்ட்வேர் ஆன எனக்கு பி.ஏ வேலை பார்க்கும் நிலை வந்துவிட்டதே என்று நொந்தபடி வாசலுக்கு சென்றாள்.
       
அப்பொழுது அவளின் முன் வந்த ரமேஷ் அவளை பார்த்ததும் அழகுநிலா இன்னைக்கே நீங்க எதுக்கு வந்தீங்க? தலையில் இருந்த காயம் எப்படி இருக்கு? இன்னும் உங்க கேப் வரலேயே எப்படி வந்தீங்க? என்று பேச்சுக் கொடுத்தான்.
        
முன்னால் போய்கொண்டிருந்த மாதேஷ் நின்று அவர்கள் இருவரையும் பார்ப்பதை அறிந்த அழகுநிலா, பாஸ் என்னை வேகமாக வரச் சொன்னதால் வந்துட்டேன் நியூ பில்டிங் கட்டப்போற சைட்டுக்கு போவதற்கு கிளம்பிக் கொண்டிருகிறேன் என்றாள்.
         
அவள் அவ்வாறு கூறியதும், ஹாய் நீங்களும் அங்கதான் போறீங்களா? என்கூட வாங்களேன் என்றவன், அவள் அரண்ட முகத்தை பார்த்ததும் பைக்கில் இல்லப்பா! என் வீட்டில் உள்ள மாருதி காரை எடுத்துட்டு வந்திருக்கிறேன் பயப்படாம வாங்க என்று கூறினான். .
      
அப்பொழுது அவனின் பின்னால் இருந்து மாதேஷ் அவங்க எனக்குத்தான் பி.ஏ உங்க கூட அவங்களை கூப்பிட்டுப்போனால் எனக்கு யார்  பி.ஏ வேலை பார்ப்பது? என்று கேட்ட மாதேசின் குரலில் அதிர்ந்து திரும்பிப்பார்த்தவன்
சாரி.... சார் நான் அவங்க தனியா போறாங்கனு நினைத்து கேட்டுட்டேன். நீங்க போங்க அழகுநிலா நான் பின்னால் வருகிறேன் என்று சொல்லியவன், விழுந்தடித்துக்கொண்டு உள்ளே உள்ள பயோ மெட்ரிக் மெசினில்  தன விரலை பதிப்பதற்கு விரைந்தான்.
                        ----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib