anti - piracy

Post Page Advertisement [Top]


     பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை...!           [தீபாஸ்-ன்]
     அத்தியாயம்[இரண்டாம்பாகம்]- 31
                       

தீரன் ஹோட்டலில் மினிஸ்டர் ரங்கராஜனிடம் பேசிவிட்டு அவர் சென்றதும் அடுத்த நிமிடம் கிளம்பி பார்ம் ஹவுஸ்க்கு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நடக்கபோகும் விபரீதத்தை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என யோசித்துக்கொண்டே காரை டிரைவ் செய்துகொண்டிருந்தான்.

அவனது காரின் முன்புறமும் பின்புறமும் சற்று இடைவெளிவிட்டு இருக்கார்கள் பயணிப்பதை கண்டுகொண்டான்.

அவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது. தான் இந்தியா வரும் போது இங்குள்ள ரைட்சைட் டிரைவிங்கிற்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டும் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்சுடனும் வந்தானென்றாலும் இங்கு அவன் வந்தபின்  தனித்து டிரைவ் செய்ததில்லை.

இங்கு வந்த போது சி.என்.ஜி ஏற்பாடு செய்திருந்த காரில் அவர்கள் ஏற்பாடு செய்த செக்யூரிடி டீமிலிருந்த டிரைவர் டிரைவ் செய்து பயணித்தான்.

அதன் பின் அவர்கள் அறியாமல் மாதவனின் உதவியில் கார் பயணம் மேற்கொண்டான்.

இப்பொழுதோ  பொருளாதார அடியாட்களின்  பணிகளுக்கு எதிராக தீரனின் தலைமையை ஏற்று அவனோடு கைகோர்த்து பணியாற்ற அவனுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத அவனின் டீம் ஆட்களில் காரோடியாக ஒருத்தர் வருவர்.

ஆனால் வகுலாவை கோயம்புத்தூர் வீட்டில் வைத்துவிட்டு ஹோட்டலுக்கு மினிஸ்டரை சந்திக்கப் போகும்  போது தனது டீமில் உள்ளவர்களை கூட்டிக்கொண்டு போனால் யார் என்று சி.என்.ஜி ஸ்பை ஆட்கள் கண்டுகொண்டால் பிரச்சனை என்று அவன்  தானே காரை ஓட்டிக்கொண்டு ஹோட்டலுக்கு வந்தான்.

அதேபோல் அவன் தனது குழுவுடன் ஆலோசிக்க விரைந்து தானே கார் ஓட்டிச் சென்றுகொண்டிருக்கும் போது தன்னை இரு கார்கள் முன்னும் பின்னும் தொடர்வதை கண்டவன் தனது மொபைலில் மாதவனை தொடர்பு கொண்டான்.

அவன் அவ்வாறு தொடர்பு கொண்ட பத்துநிமிடத்திலேயே நான்கு கார்கள் தீரனின் கார் பயணம் செய்யும் இடத்திற்கு அருகில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

அதில் இரு கார்கள் தீரனின் காரின் முன்பக்கமும் அதன் பின்பக்கமும் முளைந்தது மட்டுமல்லாமல் தீரனைத் தொடர்ந்த கார்களின் டயர்களுக்கு அடியில் ஆணிகள் அறைந்த கட்டைகளை லாவகமாக  வீசி டயர்கள் பஞ்சராக்கப்பட்டது.

எனவே அக்கார்கள் பஞ்சர் ஆனதால் தீரனை தொடர்ந்து வர முடியவில்லை.

கொஞ்சதூரம்  அவனுடன் பயணித்த மற்ற நான்கு கார்களும் வேறு எந்த கார்களும் தீரனை தொடரவில்லை என்பதை கன்பார்ம் செய்திட்டு அவனைவிட்டு விலகிச்சென்றது.

அவன் ஹோட்டலில் இருந்து வந்ததுமே நேராக தனது ரூமிற்குத்தான் சென்றான்.

ஏனெனில் அவன் போகும் போது யாழிசையை விட்டுச்சென்ற நிலை அவனின் மனதிற்குள் உறுத்திக்கொண்டு இருந்தாலும் செய்யவேண்டிய பணிகளில் அவசியத்தை முன்னிட்டு அவளின் நினைவை அழுத்தியே வைத்திருந்தான்.

தனது சகாக்களுடன் பேசும் போது யாழிசை மற்றும் மிதுனனை அருகில் வைத்து பேசவேண்டியதற்காக யாழிசையை கூப்பிட நினைக்கும்போதே அவள் உடல்நிலை சரியாகி தங்களின் பேச்சுக்களை கவனிக்கும் தெம்பு அவளுக்கு இப்பொழுது வந்துவிட்டதா..?

இல்லை இன்னும் பனிஇரவினில் கிடந்ததினால் விழைந்த சுகவீனத்துடன்தான் உள்ளாளா...? என்ற கேள்வியுடனே தனது அறையில் இருந்த அவளை பார்க்க அவனின் ரூமிற்குச் சென்றான்.

அவன் கதவை திறந்து உள்வரும்போதே அவனின் கண்கள் கட்டிலில் அவள் இல்லாததையும் மெத்தை விரிப்புகள் தாறுமாறாக தலையணை மூளைக்கு ஒன்றாக இருப்பதை  கண்டு அறையை துளாவியது.
கபோர்ட் திறந்திருந்தது அதில் அவன் ஹேங் பண்ணியிருந்த உடைகள் எல்லாம் தரையில் சிதறிக்கிடந்தது.

அதை கண்டு கலவரத்துடன் அவன் முக்கியமான பேப்பர்ஸ் மற்றும் டாகுமென்ஸ் மற்றும் தனது உபயோகத்திற்கு தன்னிடம் பாக்கெட்டில் அவன் வைத்திருந்த கைதுப்பாக்கி தவிற அவனின் மற்றொரு துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த கபோர்டை பார்த்தான்

அது அவன் டிரஸ் கபோர்ட்போல் திறந்தில்லாமல் மூடியே இருந்தது என்றாலும் வேகமாக அதன் அருகில் போய் இழுத்துபார்த்தான்.
அது கீ கொண்டு அவன் லாக்கிட்டு சென்றது போல் அப்படியே திறக்காமல் இருந்தது.

அப்படியிருந்தும் பயத்துடன் தனது வேலட்டை எடுத்து அதில் வைத்திருந்த கார்ட் கீயை எடுத்து கபோர்டின் அது திறக்க அமைக்கபட்டிருந்த இடைவெளியில்  விட்டு திறந்தவன் அனைத்தும் அப்படியே அதுஅது  இடத்தில் இருப்பதை கண்டு நிம்மதியுடன் லாக்கிட்டு நிமிர்ந்தவனின் அருகில் ஆள் அரவம் வருவது உணர்ந்து  நிமிர்ந்து பார்த்தான்.

கபோர்டில் அவன் உடைகளுடன் வைத்திருந்த புதூ டீசெர்ட் மற்றும் டிராக்சூட்டை யாழிசை உடுத்தியிருந்தாள் கைகளை கட்டியபடி தலையை விரித்துவிட்டு .காய்ச்சலாலோ ஜலதோசத்தாலோ மூக்கின் முனி சிவந்து , கண் இமைகள் லேசாக தடித்து அவனை முறைத்து பார்த்தபடி இருந்தாள்.
அவனின் ஹால்ப் ஸ்லீவ் டீசர்ட்டை உடுத்தியிருந்தாள். அது அவளின் முக்கால் கையாக இருந்தது .

தொளதொளப்பை மறைப்பதற்கோ என்னவோ அவளின் வயிற்றின் கீழ்பகுதியில் டீசெர்ட்டை முடிச்சு போட்டிருந்தாள்.

அவனின் முழுகால் சட்டையை ஒருகாலில் கரண்டைக்கு சற்று மேலும் மற்றோருகாலில் முட்டிக்கு சற்று கீழும் மடித்துவிடப்படிருந்தது.

அவளின் கோலம் அந்நிலையிலும் தீரனை ஈர்க்கவே செய்தது.ஆனால் அதனை வெளிக்காட்டாமல் முறைக்கும் அவளின் கண்களை உற்றுப்பார்த்தான்.

அவனின் பார்வையையில் இருந்த ஏதோவொன்று நேர்கொண்டு பார்க்கமுடியாமல் அவளை அசெளகரியப்படுத்தியது.
இருந்தாலும் திடமாய் இருப்பதுபோல் அவனிடம் காட்டிகொள்ள நினைத்தாள்

எனவே சுவற்றை பார்த்தபடி  உங்க ரூம் இருக்கிற லட்சனத்தை பாருங்க 

நீங்க பூட்டியிருக்க அந்த கபோர்ட்டை உடைச்சு திறந்து அதிலுள்ளதை எல்லாம் இழுத்துபோட்டு கிழிக்காமல் ஏன் இருக்கேனா உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கத்தான்.

இதுக்குமேலேயும் என்னை உன்னோட இந்த ரூமில் அடைச்சு வச்சா என்னோட அடுத்த டார்கெட் என்றவள் மூடியிருந்த அந்த காபோர்டை சுட்டிக்காட்டி அதுதான் என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் யூ....என்றபடி கர்ஜித்தவன்     ஓருகையால்  அவளின் இடுப்பின் பின்புறம் கைகொடுத்து முரட்டுத்தனமாக தன்னுடன் சேர்த்துப்பிடித்து மறுகையில் அவளின் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி அவளின் முகம்நோக்கி குனிந்தவன் கடைசி நிமிடத்தில் நிதானித்து அவளை அருகில் இருந்த பெட்டில் விழும்படி தள்ளிவிட்டு சோபாவில் போய் பொத்தென்று அமர்ந்தான் .

எப்பொழுதும் எதிலும் திடமாக தடுமாறாமல் எதிர்கொள்பவன் சூரியனைப் போன்று சுட்டெரிக்கும் தன்மையுள்ள தீரன் ஒரு கல்லூரி படிக்கும் சாதாரண பெண்ணிடம் மட்டும் தன்னிலை இழப்பது எதனால் என்று யோசித்தபடி யாழிசையை ஆராய்ச்சியுடன் பார்த்தான்,

அவள் தள்ளிவிட்டதும் பொத்தென படுக்கையில் விழுந்தவள் தன் மேல் அவன் பாயபோகின்றானோ என்ற பயத்தில் உருண்டு மறுபுறம் இறங்கி நின்று அவனை பார்த்தாள்.

ஆனால் அவனோ அவள் நினைப்பதுபோல் அவளின் மேல் பாயாமல் சோபாவில் அமர்ந்து தலையை தனது இருகரங்களில் தாங்கி கண்மூடியிருப்பதை கண்டவளுக்கு அப்பாடா என்ற எண்ணம் எழுந்தது.

ஆனால் மறுநிமிடமே ம்,,,கூம் நம்பாதே யாழி, அவன் மேல நல்ல அபிப்ராயத்தை எப்போவுமே வச்சுக்காத. அவன் உன்னிடம் நடந்துகொண்டதை அதுக்குள்ளேயே மறந்துதுடாதே என்று அவள் மனம் எச்சரித்தது எனவே முகத்தை உர்ரென்று வைத்தபடி அவனை முறைத்துப்பார்த்தாள்.

கண்ணைத்திறந்து பார்த்த தீரன் அவள் தன்னை முறைத்துக்கொண்டு நிற்பதை பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது.

ஆனால் அவளின் முன் சிரித்தால் இப்போ அவளின் இச்சிறுபிள்ளை தனமான கோபம் அதிகரிக்கத்தான் செய்யும் என நினைத்தவன்.

ஹே பேபி..! என்ன முறைக்கிற, கம்... கம் உனக்காக ஒரு டஜன் டிரஸ் நம்ம ஸ்டீபன் ரெடிசெய்து கொடுத்திருக்கிறான் என்று கூறியபடி கட்டிலைச் சுற்றி அவளிடம் வந்தவன் அந்த கட்டிலின் கீழே இருந்த டிராயரை திறந்து அதில் அடுக்கி வைத்திருந்த உடைகளை காட்டி இதில் ஒன்றை போட்டுட்டு என் கூட ஹாலில் நடக்கபோகும் மீடிங்கில் கலந்துகொள்ள நீ வருகிறாய்.

நீ இப்போ போட்டிருக்கும் டிரஸ் எனக்கு ஒகே. ஆனா இதை எனக்கான டிரஸ் என்று என் கூட இருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும்
இந்த டிரஸ்சிலேயே என்னுடன் நீ அங்கு வந்தால் நம்ம ரெண்டுபேரும் சம்திங் சம்திங் முடிச்சு அவசரமா கிளம்பி மீடிங்குக்கு வந்ததா நினைப்பாங்க,

அப்படி நினைப்பதில் உனக்கு அப்ஜெக்சன் இல்லையென்றால் இப்படியே என் கூட மீட்டிங் ஸ்பாட்டுக்கு நீ வரலாம் என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும் வேகமாக அடுகியிருந்த டிரஸ்சில் ஒன்றை எடுத்தவளிடம் தீரன் கூறினான் மீட்டிங் முடிந்த பிறகு இதில் உள்ளது எல்லாம் எடுத்து கபோர்டில் அடுக்கிடு என்று கூறினான்.

ஆனால் அவன் பேசுவதை காதில் வாங்காமலே அங்கிருந்த பாத்ரூமிற்குள் உடை மாற்றச்சென்றாள்

அது ஒரு கால்வரை கவர்செய்திருந்த பிராக் மாதிரியான உடை தீரனின் உடைக்கு இது எவ்வளவோ மேல் என்று நினைத்தபடி அதை போட்டுகொண்டு வெளியில் வரும் முன் கண்ணாடியில் பார்த்தாள்

சுடிதார் தான் அவள் பெரும்பாலும் உடுத்துவாள் அதன் டாப் மாதிரிதானே என்ன அதை விட இது கால்வரை மறைத்திருக்கு என்று எண்ணியபடிதான் அதை போடிருந்தாள்.

வெளியில் வந்தபோது அவளை நன்றாக பார்க்கச்சொன்ன தனது விழிகளை கஷ்டப்பட்டு அடக்கி வா போலாம் என்றபடி முன்னாள் நடந்தான்.

அவனின் பின்னாலேயே வந்தவளுடன் தற்போது மிதுனன் இருக்கும் அறைக்கு தீரன்  நுழைந்தான் சற்று நேரத்து முன்புதான் தீரனின் டீமில் இருந்த மருத்துவர் ஒருவர் அவனின் தலையின் காயத்திற்கு டிரஸ்ஸிங் செய்துவிட்டு வெளியில் செல்லவும் இருவரும் அவனின் ரூமிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

உள்ளே வந்தவள் உங்க காயம் எப்படியிருக்கு மிதுனன்? டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டபடி அவனின் அருகில் போய் அவனின் காயம்பட்ட இடத்தில் போட்டிருந்த காயத்தை தொட்டுப்பார்த்தாள்.
ஏனோ தீரனுக்கு மிதுனனை யாழி தொட்டு பேசுவதை கண்டு கடுகடுவென இருந்தது.

அவள் சகமனித அக்கறையில்தான் விசாரித்தாள் ஆனாலும் மிதுனனுக்கான அவளின் அக்கறை தீரனுக்குள் பொறாமை என்னும் நெருப்பை பற்றவைத்தது.

எனவே யாழியின் அருகில் நின்றிருந்த தீரன் அவளின் இடுப்பில் கைபோட்டு தன்னுடன் சேர்த்து பிடித்தபடி உங்க ஹெல்த் இப்போ ஓகேயாக இருக்குன்னு டாட்கர் சொன்னார் மிதுனன், .

சோ...! ஒரு மீட்டிங்கில் எங்க கூட கலந்துக்க வாங்க என்றபடி அவனின் பதிலை கூட பெறாமல் தன்னுடன் யாழியையும் இழுத்துக்கொண்டு திரும்பி நகர்ந்தான்.

யாழிசை அவனின் செய்கையை அதுவும் மிதுனனின் முன்பான தீரனின் செய்கையில் மிகவும் சங்கடமாக உணர்ந்தாள்

அவன் தன்னை பற்றியிருந்த கையை எடுத்துவிட அவனுடன் இழுபட்டுக்கொண்டே முயன்றாள். அப்பொழுதும் அவன் விடாததால் நன்கு வலிக்கும்படி அக்கையில் கிள்ளினாள்.

ஆனால் அவள் கிள்ளிய இடம் கன்றி போனதுதான் மிச்சம் சிறிதும் அவன் பிடி விலகவில்லை.

அவர்களின் பின்னால் வந்த மிதுனன் தீரனின் பொறாமையை கண்டுகொண்டான்.

மேலும் யாழிசை கிள்ளுவதில் அவன் கை கண்டிசிவந்தாலும் தீரனின் பிடி விலக்காததை மட்டுமல்ல அவனின் கன்றி போன கையின் வழியை  சற்றும் காண்பிக்கவுமில்லை அதற்கான கோபம் அவனிடம் துளியும் அவளின் மேல் உண்டாக்கவுமில்லை என்பதை கண்டவன்

அவனின் ஒற்றை பார்வைக்கும் ஒரு விரல் அசைவிற்கும் அவனின் டீமில் உள்ளவர்கள் அடிபணிவதைப் பார்த்தவன்தான் மிதுனன்.

அவனிடம் நெருங்கி நின்று பேசக்கூட அஞ்சவைக்கும் அவனின் கம்பீரமும் அவனின் திமிரான உடல் மொழியும் எதிராளியை துளைக்கும் அச்சுறுத்தும் கண்களும் கொண்டவனாக இருக்கும் தீரன்

யாழிசையை காணும் போது மட்டும் அவனின் கண்விழி விரிவடைந்து அதில் காதல் கசிவதை பார்த்தான்.

அப்படி காதலிக்கும் அவளை ஏன் இத்தனை பயங்கரமான நிலைக்கு அவன் தள்ளினான் என்ற யோசனையுடன் மற்றவர்கள் கூடியிருந்த இடத்திற்கு தீரனின் பின் மிதுனன் வந்தடைந்தான்.

அங்கு வந்து தீரன் தனது சகாக்களுடம் பேச்சு வார்த்தையை ஆங்கிலத்தில் மேற்கொள்ளும் முன்பு மிதுனனிடமும் யாழிசையிடமும் தான் இன்று ஹோட்டலில் மினிஸ்டர் ரங்கராஜனை சந்தித்த விஷயத்தை கூறி ஆரம்பித்தான்.

ரங்கராஜன் வானவராயர் ஏற்பாடு செய்திருக்கும் போராட்டக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு விண்ணபித்திருப்பத்தையும் ஆனால் அனுமது  கேட்ட நேரத்திற்கு சற்று முன்பு அனுமதி இல்லை என்று மருத்துகூற கமிசினரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினார்.

அவ்வாறு மறுத்தாலும் அவர்கள் கண்டிப்பாக அப்போராட்டகூட்டத்தை நடத்தும்  முடிவை எடுக்குமாறு அவர்களில் உள்ளவர்களை கொண்டே அழுத்தம் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதையும் கூறினார்.

அதனால் அமைதிவழியில் போராட்டக்கூட்டம் கலைக்டரிடம் மனுகொடுக்கச்செல்வார்கள்

அவ்வாறு மனு கொடுக்கச்செல்லும் போது அவரது ரங்கராஜனின் வருங்கால மருமகனாகிய கலெக்டர் அப்போது கலெக்டர் ஆபீசில் இருக்கமாட்டார் என்றும்

ஆனால் அக்கூட்டம் நடப்பதற்கு கலெக்டர் தடை வித்தித்திருந்த நிலையில் நடக்கும்  போராட்டக் கூட்டத்தை அடக்க போலீசும், அதிரடி படையையும் ரெடியாக இருக்கும்.

கலெக்டர் அலுவலகத்தை போராட்ட கூட்டம் நெருங்கும் வேலை தங்களின் ஆட்களை போராட்ட கூட்டத்துடன் கலக்கவிட்டு கலவரத்தை உண்டாக்கபோவதாகவும்

அவ்வாறு கலவரம் உண்டாவதால் ஏற்பாடு பண்ணியிருக்கும் பொலீஸ் டீம்கொண்டு கூட்டத்தில் துப்பாக்கி சூட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யபடிருப்பதாகவும்

அதில் சூட்டிங் செய்பவரின் குறி போராட்டகாரர்களில் சி.என்.ஜிக்கு எதிராக செயல்படுபவர்களில் முக்கியமானவர்களின் மேல் இருக்கும் படி  திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினான் .

அவன் கூறியதை கேட்ட இருவரும் அதிர்ச்சியடைந்தனர், மிதுனன், “மிஸ்டர் தீரன்...  பிளீஸ் இந்தமாதிரி சம்பவம் நிகழக்கூடாது எப்படியாவது இதை நிறுத்திடுங்க!” என்று படபடத்தான்

அதற்காகத்தான் இந்த மீட்டிங் மிதுனன் என்றான் தீரன்.

சத்திய மூர்த்தி தவிர வேறு யாரையும் தீரன் அவனின் இப்போதைய இடத்திற்குள் வரவழைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

ஏனெனில் சத்திய மூர்த்தி அவருக்கென்று தனிப்பட்ட குடும்பத்தை கொண்டிருக்கவில்லை.

தனது தம்பி மகனான மிதுனன் தன்னைப்போலவே சமூகசீர்திருத்தவாதியாக இருந்ததாளோ என்னவோ அவனின் மீதுமட்டுமே அவருக்கு சமூகத்தை தாண்டிய பாசப்பினைப்பு இருந்தது.

மற்றபடி அவன் தேர்ந்தெடுத்த நபர்களில் யாரிடமும் அவன் தன்னையும் தனது டீமையும் வெளிபடுத்த விரும்பவும் இல்லை வெளிபடுத்துவது பாதுகாப்பாகவும் இருக்காது என்பது அவனின் கருத்து.

எனவே தனது தந்தையாகிய வானவராயரையும் மற்றவர்களையும் அந்த ரெசார்ட்டுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் கோயமுத்தூர் வீட்டில் அழைத்துப் பேச முடிவெடுத்தான்.

எனவே தீரன், மிதுனனிடம் நீங்க இப்போ நான் உங்களிடம் சொல்லிய முழு விபரத்தை, மிஸ்டர் வானவராயரிடம் சொல்லாமல் அவரை இங்கு போரட்டகூட்டம் நடக்கும் போது பிரச்சனை உண்டாகப்பூவதை கூறி அது சம்பந்தமாக பேச அவருடன் அவருக்கு நம்பிக்கையான இன்னும் இருவரை கூப்பிட்டுகொண்டு ஒரு அட்ரஸ் எழுதிய பேப்பரை அவனிடம் கொடுத்து அங்கு வரச்சொல்லி சொல்லச்சொன்னான்.

மிதுனன் வானவராயரிடம் பேசியதை ஸ்பீக்கரின் மூலம் கேட்டதில் இருந்து தன்னை சந்திக்க வரும் வானவராருடன் யாழிசையின் அப்பாவும் வருவார் என்பதை அவன் கண்டுகொண்டான்.

அவர்களின் கண்ணில் யாழிசையை காண்பிக்காவிட்டால் சலசலப்பு உண்டாகும் எனவே தன்னுடைய வார்த்தையை காதுகொடுத்து அவர்கள் கேக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் சூழல்வரலாம்.  

எனவே அதை தவிர்க்க யாழிசையை அவர்களின் முன் நிறுத்தி பின் பேச  முடிவெடுத்தான்.

அதற்குப்பின் அவர்களின் முன்னிலையில்  தனது டீமிடம் நடக்கபோகும் துப்பாக்கி சூட்டை எப்படி எதிர்கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களின் உயிரை காப்பாற்ற என்று டிஸ்கஸ் செய்து ஒரு முடிவிற்கு வந்தான் தீரன்.
                 ---தொடரும்----

2 comments:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib