பனி இரவில் தணலாவாய் [தீபாஸ்-ன்]
பாகம் 2
அத்தியாயம்-20
ஜானகி விழித்திருக்கும் போது எல்லாம் அவளின் அருகில் அழகுநிலா இருந்து, நேற்றுபோல ஜானகியுடன் பேசினாலும் அவளின் மனது இன்று கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது.
காலையில் ஆதித் தன்னிடம் கூறியதையே அவள் மனம் திரும்பத்திரும்ப நினைத்துப் பார்த்தது.
அவள் காலையில் குளித்துவிட்டு ரெஸ்ட் ரூமை விட்டு வெளிவந்ததும் அவளை பார்த்த ஆதித் “ஏய் அழகி நாளைக்கு நீ மிசஸ் ஆதித்தராஜ் ஆகிவிடுவாய்..!”.
உன் வீட்டில் எங்க அப்பா போய் பேசி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிட்டாங்க, டுடே நைட் உன் வீட்டில் உள்ளவர்கள் பிளைட்டில் கிளம்பி இங்க வந்துடுவாங்க.
சோ! நிறைய வேலை இருக்கு. நீ தான் இன்னைக்கு முழுவதும் அம்மாகிட்ட இருந்து பார்த்துக்க போற,
நான் அம்மாட்ட ஏற்கனவே இதப்பத்தி பேசிட்டேன் என்று கூறியவன், ஓகே பேபி...! என்று இயல்புபோல இரு கைகளையும் விரித்தபடி அவளிடம் ஹக் பண்ணி விடை பெரும் எண்ணத்துடன் அருகினில் வந்தான் .
அவன் தன்னிடம் நாளை இருவருக்கும் கல்யாணம் என்று கூறியதுமே அவளுக்கு இன்பமா? துன்பமா? பயமா? அல்லது அதுக்குள்ளேயா...! என்ற படப்படப்பா? என்று புரியாத ஒரு நிலைக்கு ஆளானவள்,
அவன் தன்னை இயல்புபோல அணைக்க வருவதை கண்டதும் அனிசை செயல் போல் அவன் கையில் அகப்படாதவாறு ஆ... என்ற சாவுண்டே இல்லாமல் வாயைதிறந்து கூறி கண்ணை விரித்து ஒரு எட்டு பின்னால் நகர்ந்தாள்.
அவள் தன்னுடைய அணைப்புக்குள் அடங்க மறுத்து பின்னால் நகர்ந்த விதத்தையும் அவளின் முகத்தையும் பார்த்தவன், தனக்குள்ளேயே அவசரப்படாதடா ஆதித்.... என்று கூறியவன். அழகியிடம்,
சரி, உன்கிட்ட வரல ரிலாக்ஸ்..... என்று சொல்லியவன் நான் கிளம்புறேன். நைட் வந்து நம்ம ப்ரோகிராம்ஸ் பற்றி உன்னிடம் சொல்கிறேன்,
வா அம்மாகிட்ட சொல்லிட்டு நான் கிளம்புகிறேன் என்று ஜானகி இருந்த வார்டிற்கு அவளுடன் வந்தான்.
வந்தவன் அவன் அன்னையிடம் சொல்லி விடை பெற்றவன், நீ அம்மாகிட்ட இரு அவங்க தூங்கும் போது ரூமிற்கு போய் ரெஸ்ட் எடு என்று கூறியவன் பை... என்று சொல்லிவிட்டு விரைந்து வெளியேறிவிட்டான்.
ஆதித், இருவருக்கும் திருமண உடை முதல் தாலிவரை சகலத்தையும் தானே வாங்கியவன், அவள் அன்று போட்டுக்கொள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை அவனே வாங்கினான்.
பின் ஊரில் இருந்து வரும் அழகுநிலாவின் வீட்டாருக்கு தன் வீட்டின் கெஸ்ட் ஹவுஸில் தங்குவதற்கு தோதாக சுத்தம் செய்துவைக்கச் சொன்னவன், திருமணம் முடிந்துடன் அவனது திருமண அறிவிப்பை இருவருடைய புகைப்படத்தோடு பத்திரிக்கையில் வெளிவருவதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து கொண்டிருந்தான் .
நேற்றைவிட இன்று ஜானகி பேசுகையில் கொஞ்சம் தெளிவாக இருந்தது அழகுநிலாவிற்கு மகிழ்ச்சியை தந்தது.
நேற்று முழுவதுவும் அழகுநிலா ஜானகியுடன் பேசியதற்கு மாறாக இன்று ஜானகி அதிகம் அவளுடன் பேச முயன்றாள்.
நாளை நடக்கும் கல்யாணத்தை பற்றியே அவளின் பேச்சு இருந்தது. அழகுநிலாதான் அவரை அதிகம் பேசியே ஓய்ந்துபோகாமல் பார்த்துக்கொள்ள அதிகம் மெனக்கெட வேண்டியிருந்தது.
அப்பொழுது ஜானகி கூறினாள், “இந்த கல்யாணத்தை என் உடல்நிலையை காரணம் காட்டினால்தான் உன் வீட்டில் காரியம் சாதிக்கமுடியும் என்பதை உன் மாமா புரிந்துகொண்டுதான் உன் வீட்டில் பேசியிருப்பார்” என்று கூறியதை கேட்ட அழகுநிலாவும் தன வீட்டில் இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பார்கள் என்று நினைக்கவில்லை. இப்பொழுது ஜானகி கூறியபிறகு அவர் சொல்வதுவும் சரிதான் என்று நினைத்துக்கொண்டாள்.
அழகுநிலா யோசனையுடன் இருப்பதை பார்த்த ஜானகி என்ன அழகி....! உன் கல்யாணம் எப்படியெல்லாம் பார்த்துபார்த்து செய்யனும் என்ற ஆசை உனக்கு இருந்திருக்கும் இப்படி அவசரமாக பண்ணுவது உனக்கு வருத்தமாக இருக்கிறதா? என்று கேட்டார்
அதற்கு அழகி அப்படியெல்லாம் இல்லை அத்தை! இரண்டு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் என் கல்யாணம் நடப்பதே எனக்கு சந்தோசத்தை தருகிறது என்று கூறினாள்.
அதன் பின், தான் அங்கிருந்தால் அதிகம் பேசி அவரின் உடல்நிலையை மோசமாக்கிக் கொள்வார்களோ! என்ற எண்ணத்தில் கொஞ்சம் சோர்வுடன் இருப்பவளை பார்த்த ஜானகி,
இப்படி ஹாஸ்பிடலில் என்னை கவணிக வைத்து சேர்வாகிவிட்டேனே கல்யாணப் பெண்ணை...! போய் ஓய்வு எடு. நாளைக்கு பிரெஸ் ஆக இருக்கனும் என்று கூறி அவளே அழகியை ரூமிற்கு போகச்சொன்னாள்.
கதவைத் திறந்தவள் ரூமிற்கு செல்வதற்கு இரண்டு அடி எடுத்துவைத்ததும் அவளிடம் வேகமாக வந்தான் கருப்பு நிற உடையணிந்து உடல் பருமன் மிகுந்த ஒருவன்.
அதேபோல் மேலும் ஒருவன் அங்கு நிற்பதையும் பார்த்தவள் பயத்துடன் அவனை பார்த்தாள்.
மேடம் ஆதித் சார் உங்களை தனியாக எங்கும் செல்ல விடக்கூடாது என்று சொல்லியிருகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருகும் போது அவளின் மொபைல் ஒலி எழுப்பியது.
எதிரில் நின்றவன் சொல்வதை நம்புவதா? வேண்டாமா? என்று யோசனையுடன் தனது மொபைலை எடுத்ததும் ஆதில் ஆதித் அழைப்பதை அறிந்ததும் நிம்மதியான மனதுடன் அதனை அட்டன் செய்தாள்.
எடுத்த உடனேயே பேபி! உனக்கு பாதுகாபிற்காக ரூம் வாசலில் இரண்டு பேர் இருப்பார்கள் நீ எங்கு போனாலும் உன்னுடன் பாதுகாப்புக்கு வருவார்கள் அவர்களை பார்த்து பயந்துவிட்டதே! தனியா எங்கும் போகாதே! என்று கூறியவன் அம்மா எப்படி இருக்கிறார்கள் அழகி? என்று கேட்டான்
நல்லா இருக்காங்க. இப்போதான் அவர்களுக்கு தூக்கம் வருவகாருவதாக சொல்லி என்னை ரெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுபினர்கள் என்று கூறிக்கொண்டே அவள் தங்கியிருந்த அறைக்கு முன் நிண்று கதவை திறந்தாள்.
அப்பொழுது அந்த பாடிகார்ட் ஆசாமி ஸ்டாண்டர்டீசில் விறைப்பாக நின்றபடி இருப்பதை பார்த்துக்கொண்டே கதவை உள்ளுக்குள் லாக் போட்டவள்,
என்னங்க நான் என்ன வி.வி.ஐ.பியா முதல்ல நீங்க போட்டுருக்கிற பாடிகார்டை இங்கிருந்து போகச் சொல்லுங்க! என்னமோ பெரிய மினிஸ்டருக்கு பூனைப்படை காவலா விறைப்பா நிக்கிறமாதிரி ரூமுக்கு முன்ன நின்றுகிட்டு இருக்காங்க, இது எனக்கு ரொம்ப ஓவர இருக்குது என்றாள்.
அவள் சொல்லி முடித்த மறுநொடி, ஏய்..... இனி இப்படித்தான். இந்த ஆதித்தோட வொய்ப் என்றால் லேசா நீ! பொக்கிசம் தான்....! என்று கூறியவன், “என் தொழில் எதிரிகளாலும் , அந்த மினிஸ்டர் காந்தனாலும் உனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு அழகி. எப்பொழுதும் என் பாதுகாப்பு ஏற்பாட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டதே புரியுதா”? என்று கூறினான் .
அவன் அவ்வாறு கூறியதும் மறுக்க முடியாமல் ம்...என்று ஒப்புதலாக அவனிடம் கூறினாலும் இதுபோன்ற பாதுகாப்பு அவளுக்கு அசெளகரியத்தையே கொடுப்பதாக இருந்தது .
அவள் டல்லாக பேசவும் அவளின் மூடை மாற்றும் விதமாக, யேய்... உனக்குத்தான் நிறைய பிரண்ட்ஸ் இருப்பதாக நீ சொல்வாயே நாளைக்கு காலையில் சிவன் கோவிலில் வைத்து 9;30 நம்ம கல்யாணத்துக்கு இன்வைட் செய்துடு.
பிறகு, உனக்கு கல்யாணத்திற்கு எடுத்த சாரி, ஜூவல்ஸ் எல்லாத்தோட போட்டோசும் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன், வாங்கும்போது உன் அபிப்ராயம் கேட்க கால் பண்ணினேன், நீ அம்மா கிட்ட இருந்ததினால் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்ப போல,
இப்போ பார்த்து ஏதாவது மாத்தணும் என்றால் பிப்டீன் மினிட்ஸ்குள்ள சொல்லு. அதுக்குள்ளே சொன்னா மட்டும்தான் என்னால் மாற்ற முடியும் என்று கூறியவன், ஓகே பேபி நைட் 11:30 க்கு உன் வீட்டில் இருந்து வருகிறவர்களை ரிசீவ் செய்து தங்க வச்சுட்டு முருகன் மாமாவை டுடே நைட் ஹாஸ்பிடலில் இருக்கச்சொல்லிவிட்டு உன்னை வீட்டிற்கு கூப்பிடுக்கொண்டு வர வருகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே எனக்கு முக்கியமான கால் வருது, பை! கிளம்பி ரெடியா இரு என்றவன் தொடர்பை துண்டித்துவிட்டான் .
அழகுநிலாவின் அண்ணி வாணிக்கும் இது தான் முதல் விமானப்பயணம் எனவே மனதிற்குள் இங்க பாருடா ஓடுகாளிக்கு வந்த வாழ்வ...
ஏரோபிளேனில் டிக்கட் போட்டு கூப்பிட்டுப்போகிற பணக்காரனாத்தான் புடுச்சிருக்கா! பிறகு என்ன வீட்டில் உள்ள நகை எல்லாம் இந்த அத்தை அவளுக்கே கொடுத்திடனும் என்று தூக்கிட்டு வந்துட்டாங்க.
அடியாத்தி...! எம்பது பவுனு நகை சேத்து வச்சுருக்கேன்னு என்கிட்ட இத்தனை நாள் மூச்சு விட்டுச்சா இந்த அத்தைகாரி.
நான் கல்யாணம் முடிச்ச இந்த மூணு வருஷம் எத்தனை நல்லதுக்கு போயிருப்பேன் ஒருதடவையாவது இத போட்டுப்போ..... என்று என் கண்ணில் காமிச்சிருக்குமா இந்த அத்தை,
என்று நினைத்தபடி அந்த விமான பயணத்தை அனுபவித்துக்கொண்டு வந்தவள், வாணி அங்க எங்க வேடிக்கப் பார்த்துகிட்டு இருக்க புள்ளைய வாங்கு அம்மாட்ட இருந்து, அவங்களால தூக்கிட்டு நடக்க முடியல நான் போய் சாமான்களை எடுத்துட்டுவருகிறேன் என்று கூறி நகர்ந்தான்.
அதற்குள் வாசலுக்கு தன் மகனை வாங்கிகொண்டு வந்தவர்களின் முன்பு ஆதித்தின் ட்ரைவர் வந்து நின்றான்.
அவன் மொபைல் வீடியோவில் அழகுநிலாவின் அம்மா மற்றும் அண்ணன் அண்ணி புகை படத்தை ஆதித் அனுப்பியிருந்தான் அவன் அடையாளம் தெரிந்துகொள்ள.
ஏ புள்ள வாணி இங்கிட்டு நிப்போம் குமரேசன் வரட்டும் சேர்ந்து போவோம் என்றபடி ஓரமாக நின்றவர்களின் அருகில் வந்த ஆதித்தின் ட்ரைவர் வணக்கம் அம்மா என்னை ஆதித் ஐயா உங்களை கூட்டிக்கொண்டு வர அனுப்பிவைத்தார் என்றான்.
அதற்குள் குமரேசன் அங்கே வந்ததும், இங்க பாருங்க நமக்கு கிடைக்கிற மரியாதையை,
நம்ம தகுதிக்கு மீறி இந்த அழகுநிலா அவளுக்கே அவள் மாப்பிள்ளையைத் தேடிகிட்டதால நாம முதல்முதலா மாப்பிள்ளை வீட்டிற்கு வருகிறோம்,
அப்படியிருந்தும் நம்மளை மதிச்சு கூப்பிட சம்பந்திதி வீட்டில் இருந்து ஒருத்தரும் வராம வேலைக்காரனை விட்டு கூப்பிட்டுக்கொண்டு வரச்சொல்றத,
கல்யாணத்துக்கு முன்னாடியே ஜோடிபோட்டுகிட்டு மாப்பிள்ளை வீட்டில் இருந்தா நமக்கு இப்படித்தான் மரியாதை கிடைக்கும் என்று வாணி கூறினாள்.
குமரேசா அவளை வந்த இடத்தில வாயமூடிகிட்டு இருக்கச்சொல்லு..., நாம போனமா கடமைய முடிச்சமா! கிளம்புனும்மானு! இருக்கணும்.
என்னை மீறி போனவள என்னால் மன்னிச்சு ஏத்துக்க முடியாது. அதுக்காக இவளை அப்படியே விட்டா ஊருல உள்ளவங்க ஓடிபோய்ட்டளா உன் மவனு.. கேட்டுடகூடாது.
அதுக்கு நாமே கல்யாணம் முடிச்சுவச்சமாதிரி தெரியனும் என்ற ஒரே காரணத்துக்ககத்தான் அவளுக்கு செய்யவேண்டிய கடமையை செஞ்சு முடிச்சுட்டு போக வந்திருக்கிறேன் என்றாள் ராசாத்தி.
குமரேசனுக்கு, ஆதித்தின் வீட்டில் இருந்து சமாதானம் பேசவந்ததுமே கொஞ்சம் தங்கைமேல் உள்ள கோபத்தை மட்டுப்படுத்தியிருந்தான்.
நம்ம தங்கை இந்த காலத்துப்பொண்ணு, நான் என் தங்கை என் பேச்சை மீற மாட்டாள் என்று கண் மூடித்தனமாக இருக்காமல் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து பேசுவதற்குமுன் அவளிடம் தனியாக பேசி அவள் மனதில் உள்ளதை அறிந்து அதன் பின் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருக்கணும்.
திடீர்னு அவளிடம் கலந்து பேசாமல் நானே ஏற்பாடு செய்யப் போய்தான் அந்த மாப்பிள்ளை இவளை நோட்டம் பார்த்து என்னிடம் சொல்லி அதன் பின் எனக்கு தெரியவந்து. நிச்சயம் பேசிய வீட்டாருக்கு பதில் சொல்லி அவமானப்படும் படி ஆகிவிட்டது.
எப்படியோ! காதலித்து ஏமாறாமல் அவள் மேல் உண்மையான அன்புள்ளவனை காதலித்திருகிறாளே. எப்படியோ! என் தங்கை நல்லா இருந்தா போதும் என்று நினைத்துக்கொண்டான்.
ஆதித்தின் வீட்டு வாசலில் கார் நின்றதும் காரை விட்டு இறங்கிய அனைவரையும் வேகமாக வந்து ஆதித் வரவேற்றான்.
வாங்க வாங்க நானே ஏர்போர்ட் வந்து உங்களை கூப்பிட வருவதாகத்தான் இருந்தது. கடைசி நேரத்தில் என் கிளையண்டை பார்க்கவேண்டிய அவசர வேலை வந்துவிட்டது.
அப்பா உங்களுக்கு அடுத்த ப்ளைட்டில் வந்துடுவார் என்றவன் வேலம்மாளிடம் எல்லோரையும் வீட்டின் பின்புறம் அமைந்திருந்த கெஸ்ட் ஹவுஸிற்கு கூப்பிட்டுக்கொண்டு போகச்சொன்னான்.
ஆத்தித்தின் மேல்தட்டு தோரணையும் அவ்வீட்டின் செல்வச்செளிப்பயையும் அவனின் கம்பீரத்தை பார்த்து மனதிற்குள் மலைத்து போய் நின்றிருந்த ராசாத்தியிடம்,
ஆதித், எல்லோரும் பிரெஸ் ஆகிவிட்டு வாங்க சாப்பிடலாம் என்றான்.
இரவு மணி11:45 ஆகியிருந்தது அவன் அவ்வாறு கூறியதும் இது என்ன...! மாப்பிள்ளை பையன் எல்லோரையும் பிரிசு ஆகிட்டு வந்து சாப்பிட சொல்றாரே. ஒருவேளை கல்யாணத்துக்கு பரிசு வாங்கிட்டு வந்திருக்கச் சொல்கிராரோ! என்ற யோசனையானாள் ராசாத்தி,
தன் மகனிடம் மாப்பிள்ளை தம்பிட்ட சொல்லு குமரேசா.... பரிசெல்லாம் வாங்க நேரம் இல்லை. ஆனா அவளுக்கு சேர்த்துவச்ச நகை நட்டெல்லாம் சீரா கொடுக்க கொண்டுவந்திருக்கிறோம். சபையில் தாம்பாளத்தில் வச்சு கொடுத்துடுறோம்.
இப்போ சாப்பிடமுடியாது காலையில் எப்போ கல்யாணம் எங்க வச்சுனு சொன்னீங்கன்னா.... புறப்பட தோதா இருக்கும் என்றார் ராசாத்தி .
ராட்சாத்தி திடீர் என்று சீர் ,பரிசு, நகை, நட்டு என்று பேசவும் இப்போ நான் இவங்கட்ட எப்போ சீர் கேட்டேன் என்று எண்ணியபடி நீங்க அழகியை எனக்கு கல்யாணம் செய்து கொடுப்பதே பெரிய சீர்தான்.வேறு எதுவும் வேண்டாம் என்று கூறியவன்,
காலையில் 9:30 முகூர்த்தம் சிவன் கோவிலில் வைத்து, நாம இங்கிருந்து ஒரு எட்டுமணிக்கு கிளம்பி போனா சரியாக இருக்கும் என்றவன், “வேலம்மாள் இவங்க சாப்பாட்டு வேண்டாம் என்றதால் குடிக்க என்னவேண்டும் என்று கேட்டு செய்து கொடுங்க” என்று கூறியவன்,
அவங்க எல்லோரிடமும் பொதுவாக உங்களுக்கு எது வேண்டுமென்றாலும் இவங்ககிட்ட கேளுங்க நான் போய் அழகியை ஹாஸ்பிடலில் இருந்து கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன் என்றுச் சொன்னான்.
அப்பொழுது குமரேசன், “இப்போ உங்க அம்மா எப்படி இருக்காங்க மாப்பிள்ளை”? என்று கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் ம்..இப்போ கொஞ்சம் பெட்டர் ஆக இருக்காங்க. நாளைக்கு கல்யாணத்துக்கு அவங்களால மண்டபத்துக்கு வரமுடியாதுன்னு நினைக்கிறேன்.
கல்யாணம் முடிந்ததும் நேரா ஹாஸ்பிடல் போய் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கணும் என்று கூறினான்.
பின் நான் இப்போ போய் அழகிய கூப்பிட்டுகொண்டு வருகிறேன் என்று கூறி வெளியேறிவிட்டான்.
அவன் சென்றதும் வேலம்மாள் வாங்க என்று பொதுவாக கூறியவள், அவர்களின் லக்கேஜை அங்கிருந்த மற்ற வேலைக்கார்களை தூக்கிவரச்சொல்லி அந்த வீட்டின் பின்னால் உள்ள கெஸ்ட் ஹவுஸ்கு கூட்டிக்கொண்டு போய் தங்க வைத்தார்.
அப்பொழுது வாணி வீட்டின் செழுமையும் ஆதித்தின் உருவத்தையும் அவனின் செல்வந்த நிலையும் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பு மறைந்து, ஓடிவந்தவளுக்கு இவ்வளவு பெரியவீடில் வாழ்வா.. என்று நினைத்துக்கொண்டாள்.
ஹாஸ்பிட்டலில் டுயூடிக்கு இருந்த இரவு மருத்துவரை நேரில் சென்று பார்த்த ஆதித்,
நாளை நடக்கவிருக்கும் கல்யாணத்திற்கு ஜானகியை கூப்பிட்டுப்போக முடியுமா? அவர்களின் உடல் அதை தங்குமா? என்று ஆலோசனை அழகுநிலாவையும் கூட வைத்துக்கொண்டு கேட்டான்.
அவர் முடியாது ஆதித்! அவங்க எங்க கண்காணிப்பில் இருந்துகொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
“இப்பொழுது பேசுவதை வைத்து நலமாகிவிட்டது என்று நீங்கள் நினைப்பது தவறு” என்று கூறிவிட்டார்.
எனவே ஆதித் ஓகே டாக்டர், நாங்க கல்யாணம் முடிந்ததும் அம்மாவிடம் இங்கு வந்து ஆசிர்வாதம் வாங்கிகொள்கிறோம் என்று கூறியவன், அழகுநிலாவை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச்செல்ல முயன்றான்.
அப்பொழுது அழகி கூறினாள், வீட்டு ஆட்கள் யாரும் அத்தையின் அருகில் இல்லாமல் எப்படி போவது ? என்று கேட்டாள்.
அவளின் வீட்டு ஆட்கள் வந்திருக்கும் இந்த நிலையிலும் அவர்களை சந்திக்க வேகம் காட்டாமல் தன அம்மாவை பற்றி அவள் அக்கறை கொள்வதைக் கண்ட ஆதித் அவளை சொந்தத்துடன் பார்த்தான்.
பின் கூறினான், இன்னும் ஒருமணிநேரத்தில் அப்பாவும், உடன் முருகன் மாமாவும் வந்துவிடுவார்கள் அதுவரை எதுவும் அவசரதேவை என்றால் அதை கவனிக்க ஆட்களை நியமித்துவிட்டேன்.
நீ வா..., நிறைய வேலை இருக்கு. மேலும் நைட் நேரமாகிவிட்டதால் அம்மா தூங்கத்தானே செய்வார்கள் என்று கூறியபடி அவளை கூட்டிக்கொண்டு காரில் ஏறினான் ஆதித்.
தயக்கத்துடன் அம்மா அண்ணன் எல்லோரும் வந்துட்டாங்களா? உங்களுடன் நல்லபடி பேசினார்களா ? என்னை என் அம்மா கேட்டார்களா? என்று தொடர்ந்து கேள்விஎழுபினாள் அழகி.
அவளில் தொடர்ச்சியான கேள்வியில் ஒருநிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்த ஆதிதுக்கு, அவள் வீட்டில் இருந்து வந்தவர்கள் தன்னை பார்த்தவுடன் அழகியை கேட்பார்கள் தேடுவார்கள் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான்.
ஆனால், வந்ததும் அவளை பற்றி எதையும் அவர்கள் விசாரிக்கவில்லை அது அவளின் மேல் உள்ள கோபத்தால் என்று புரிந்துகொண்டான்.
அவர்கள் கடமைக்காக அழகியை தாரை வார்க்க வந்திருகிறார்கள். விரும்பி கல்யாணம் முடிக்க வரவில்லை என்பதை அவர்களின் பேச்சிலேயே உணர்ந்துகொண்டான். அதை கூறினால் வருத்தப்படுவாள் என்று நினைத்துக்கொண்டான்.
எனவே அதனை கூறாமல், இல்லை அழகி, நான் ஏர்போர்ட் போய் அவங்களை கூப்பிட்டுக்கொண்டு வர முடியல. வேலை வந்துருச்சு ஆனா அவங்க வருவதற்கு கார் அரேஞ் பண்ணியிருந்தேன் அதில்தான் வந்தாங்க.
ஆனால் வீட்டிற்கு அவங்க வருவதற்கு ஒருநிமிடம் முன்னால் வந்து அவங்களை வரவேற்று தங்கவைத்து, உடனே உன்னை கூப்பிட்டுக்கொண்டு போக வந்ததால் வேறு எதுவும் அவங்ககூட பேச நேரம் இல்லை என்று கூறியவன்,
காரை அங்கிருந்த ஒரு பெரிய லேடீஸ் பியூட்டி பார்லரின் முன் நிறுத்தினான் இங்க எதுக்கு நிறுத்துறீங்க..! நேராக வீட்டிற்குபோகலாமே, என் வீட்டில் இருந்து வந்தவங்க காத்துகொண்டு இருப்பார்கள் என்று கூறினாள்.
உடனே ஆதித் போலாம் பேபி , நாளைக்கு உனக்கு பிரைடல் மேக்கப்போட புக் செய்திருக்கிறேன் அவங்களை இப்போ நம்ம கூட கூப்பிட்டுக்கொண்டு போகத்தான் வந்திருக்கிறோம் என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் என் பேர் அழகுநிலா அதென்ன பேபி [மனதிற்குள் இப்படித்தானே அந்த வர்ஷாவை கூப்பிட்டிருப்பான் என்னாலெல்லாம் அவள்மாதிரி இருக்கமுடியாது. என்று தேவையில்லாமல் அவள்மேல் பொறாமை எழுந்தது] என்னை பார்த்தா பாப்பா மாதிரியா இருக்கு என் பேர் சொல்லி கூப்பிடுங்கள் என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும் முகத்தில் புன்னகையுடன் தன் ஒற்றை புருவத்தை தூக்கியபடி உன் முகத்தை பார்த்தால் பப்பா... போலத்தான் இருக்கு!
ஆனால்...! என்றவனின் பார்வை அவளின் உச்சியில் இருந்து உள்ளம் கால்வரை பயணித்து ரசனையுடன் கிரங்கும் குரலில் கூறினான்,
உன் வளைவு சுழிவுகளைப் பார்க்கும் போது பெண் அதுவும் அழகான பெண் என்று என்று ஒத்துக்கொள்கிறேன்.
நீ சொல்லு இப்போ! உன் முகத்தை பார்த்து பேபி என்று கூப்பிடவா..? அல்லது உன்... என்று மேலே அவன் கூறவருவதைக் கேட்டு விபரீதமாக எதையோ அவன் சொல்லப்போவதை உணர்ந்து,
எட்டி அவன் வாயினில் தன் கையால் பொத்தி அச்சோ... நீங்க என்னை பேபின்னே கூபிடுங்கப்பா...! வேற ஒன்றும் நீங்க சொல்லவேண்டாம் என்று படபடப்புடன் கூறினாள்.
அவள் தன் வாய் மேல் வைத்த கரத்தை அதை அசைய விடாமல் தனது கையால் அழுத்திப்பிடித்தபடி அதில் அழுத்தமாக முத்தமிட்டான் ஆதித்!
அதனை எதிர்பார்க்காத அழகுநிலா வெடுகென்று தனது கையை உருவியவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்து போய்விட்டது.
எட்டி அவள் கன்னத்தை தொட ஆதித் போனபோது மேக்கப் கிட் அடங்கிய பேக்குடன் ஒருபெண் காரின் கதவை தட்டவும் அதில் இருக்கும் நிலை உணர்ந்து தன்னகுள்ளே சிரித்தபடி பின்னால் இருந்த காரின் கதவை திறந்து அந்த பெண்ணிடம் ஏறும்படி கூறினான் ஆதித்.
அவள் ஏறியதும் இவங்கதான் பொண்ணா சார்..! என்று கேட்டதும், ஆதித் ஆமாம். நாளைக்கு இவங்களுக்கும் எனக்கும்தான் கல்யாணம் என்று ரசனையுடன் அவளைப் பார்த்துகொண்டே கூறியவன் காரை லாவகமாக ரோட்டில் விரட்டினான்.
கார்வீட்டில் நின்ற உடனே அழகி ஆதித்திடம் அம்மா எங்க தங்கியிருக்காங்க? பின்னால் உள்ள கெஸ்ட் ஹவுஸ்லயா? என்று கேட்டதும், யா... பேபி என்று ஆதித் கூறினான்.
அவர்களை பார்க்கும் அவசரத்துடன் இறங்கிய அழகுநிலவை பார்த்த பியூடீசியன் மேடம்.. கொஞ்சம் உங்களுக்கு மசாஜ் பண்ணனும் அப்பத்தான் நாளைக்கு பிரஸ் ஆக தெரிவீங்க, மேலும் மெகந்திவேறு போடனும் என்று அவள் போவதை தடுக்கப் பார்த்தாள்.
ஆதித்..! அம்மாவை பார்த்துட்டு வந்துருவேன் அவங்களை கொஞ்சம் வெய்ட் பன்னச்சொல்லுங்களேன்! என்று கூறினாள்.
உடனே ஆதித், நோ பேபி..! கல்யாணம் முடிச்சதும் பேசலாம். நீ ரொம்ப டயர்டா இருக்க என்று கூறினான்.
ஏனெனில் ஆதித்துக்கு அவளின் குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்தவுடனே அவர்கள் அழகுநிலவை பற்றி எதுவும் தன்னிடம் விசாரிக்கவில்லை என்று நோட் செய்துகொண்டவன் அவர்கள் இன்னும் அவளின் மேல் கோபமாக இருப்பதை உணர்ந்துகொண்டான்.
எனவே, இப்பொழுது அவள் அவர்களை பார்த்தால் கண்டிப்பாக சுமூகமாக பேசமாட்டார்கள்.
அதனால் அவளின் மனம் கஷ்டப்படும் என்பதற்காகவே அவ்வாறு கூறியவன் மேலே தன்னுடைய அறையிலேயே அவளை தங்க வைக்கவும் அவன் கீழே உள்ள ஒரு அறையில் தங்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தான்.
அவன் அவ்வாறு கூறியதும் ஓகே ஆதித், நான் வாங்க.. என்று கேட்டுவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என்றவள், கெஸ்ட் ஹவுஸ்சை நோக்கி சென்றேவிட்டாள்.
அங்கிருந்த வேலையாளிடம் இவங்களை ஹாலில் உட்காரவையுங்க நான் வந்துவிடுகிறேன் என்று அவளின் பின்னாலையே ஆதித்தும் சென்றான்.
அம்மா... என்ற சத்தத்துடன் உள்ளே அழகி வருவது தெரிந்ததும் ராசாத்தி கண்ணை இருக்க மூடி தூங்குவதை போல் படுத்துக்கொண்டாள்.
அம்மா.... என்று வந்தவள், அங்கிருந்த கட்டிலில் ராசாத்தி படுத்திருப்பதை பார்த்து மீண்டும் அம்மா என்று சத்தம் கொடுத்தபடி சென்றாள்.
அவள் எழுந்துகொள்ளாததை பார்த்தவள் திரும்பவும் அம்மா.... என்று கூப்பிட்டபடி எழுப்பபோகும் பொது அவளின் பின் விரைவாக வந்த ஆதித்,
ஏய் எதுக்கு இவ்வளவு தூரம் ட்ராவல் செய்து அலுப்பா தூங்குரவங்களை எழுப்புற? காலையில் எழுந்ததும் உன்னை பார்க்க வரப்போராங்க என்று கூறி அவளின் கை பிடித்து வெளியில் கூப்பிட்டுக் கொண்டுவர முயன்றான் ஆதித்.
அழகுநிலா தன்னை பார்த்து பேசுவதற்கு தன் வீட்டார் ஆவலாக காத்திருப்பார்கள் என்றே ஓடிவந்தாள்.
ஆனால்..... அப்படி இல்லாமல் தூங்குவதுபோல் தெரியவும் என்னை கூப்பிட்டுகொண்டு வருவதாக சொல்லிவிட்டு இவர் வந்ததாகதானே சொன்னார்.
இத்தனை நாள் நான் என்ன செய்தேன்! எங்கிருந்தேன்! என்று என்னை கேள்விகேட்காமல் எப்படி இவங்களால் தூங்க முடிஞ்சது என்று கவலையுடன் அண்ணனையாவது பார்த்து பேசிவிட்டுவருகிறேனே என்று அடுத்திருந்த அறைக்கு போவதற்காக திரும்பினாள்,
அவளை இழுத்துக்கொண்டு வெளியில் வந்த ஆதித், யேய்... அறிவு இருக்காடீ.. இப்போ நைட் ஒருமணியாகப்போகுது. அவங்க குடும்பமா கதவை பூட்டி தூங்குறாங்க இப்போ போய் டிஸ்டப் பண்ணலாமா? என்று கேட்டான்.
என் அண்ணன்தானே எந்நேரமானாலும் அவனுடன் பேசுவேன். அதை அவர் தொந்தரவாக எல்லாம் நினைக்க மாட்டாங்க என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும், “அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டே அவங்க அப்படி சொன்னாலும் இந்த நேரம் அவங்களை டிஸ்டப் பண்ணுவது நாகரீகம் இல்லை அழகி”,
நானெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு நைட் ஒருமணிக்கு மேல என் வொய்ப் கூட எப்படி இருக்கணும் என்று நினைப்பேனோ அது மாதிரிதானே மத்தவங்களும் இருப்பாங்க,
அவங்களை டிஸ்டப்பன்னலாமா? என்று அவளை திசை திருப்புவதற்காக அவளின் கை பிடித்து தனது அருகில் இழுத்து மெதுவாக ஹஸ்கிவாய்சில் அவளிடம் கூறினான்..
அந்த ஹாலில் இருந்த சீரோ வாட்ஸ் அலங்கார லைட்டின் வெளிச்சத்தில் யாருமற்ற இடத்தில் அவனின் உடையில் இருந்து வந்த பெர்பியூம் வாசமோ அல்லது அவனின் சூடான ஸ்பரிசமோ எதுவோ ஒன்று அவளை பேச்சில்லாமல் உறையச் செய்தது.
அவளின் நிலையை அறிந்த ஆதித், ஓரு மயக்கும் புன்னகையுடன் நீ இப்படியே பார்த்துக்கொண்டு நின்றால் உன்னை நான் தூக்கிட்டுத்தான் போக வேண்டியிருக்கும், உனக்கு அப்ஜெக்க்ஷன் இலையென்றால் நான் தூக்கிட்டு போகவா...? என்று கேட்டான் ஆதித் .
அவன் அவ்வாறு கேட்டு தூக்குவதற்காக கை கொண்டு சென்றதும், அடியாத்தி வேணாம்! வேணாம்! நானே வருகிறேன் என்றவள், அவன் தனது அண்ணனை எழுப்பக்கூடாது என்று காரணம் கூறவும் அவளால் அதன் பின் அவன் அண்ணனை எழுப்ப சங்கடமாக இருந்ததால், வீட்டார்களிடம் பேசமுடியாத ஏக்கத்தோடு ஆதித்தின் பின்னால் நடந்தாள்.
மறுநாள் மணவறையில் தன் அருகில் அமர்ந்திருந்த அழகுநிலாவை பார்த்தான் ஆதித், அழகுப் பதுமையாக உட்கார்ந்திருந்தாள்.
ஆனால் அவளின் முகம் அந்த மகிழ்ச்சியை பிரதிபலிக்கவில்லை. காலை எழுந்தது முதல் தனது வீட்டாருடன் பேச அவளும் முயன்றுதான் பார்த்தாள்.
ஆனால் ராசாத்தியோ செய்யவேண்டிய கடமையை மட்டும் செய்தாள். அழகியின் முகத்தை பார்க்கவே இல்லை.
அவள் அண்ணனும் அவன் அம்மா அளவு இறுக்கமாக இல்லாவிட்டாலும் எப்படி இருக்கீங்க அண்ணா? என்று நடுங்கிய குரலுடன் கேட்ட அவளிடம் பதில் கூறாமல்,
வாணி, நம்ம எல்லோரும் நால்லா இருக்கோம்னு சொல்லிபுடு. பிறந்த இடத்தின் மானத்தை காத்துல பறக்கவிட்டமாதிரி அவளையும் நம்ம குடும்பத்தைவிட்டு நாம பறந்து போகவிட்டுடோம்னு சொல்லு என்று ஜாடையாக கணத்த இதயத்துடன் பேசினான்.
அவனிடம் அப்பொழுது தனது நிலையை விளக்க முடியாமல் கல்யாணத்திற்கு ரெடியாக இருந்தவளால் வேறு எதுவும் பேசமுடியவில்லை.
ஆனாலும் அவள் வீட்டாரின் இந்த புறக்கணிப்பு, அதுவும் கண் முன்னே நின்றுகொண்டு செய்வதை அவளால் தாங்க இயலவில்லை.
ஆனால் தன் வருத்தத்தை வெளிப்படையாக காண்பிக்க முடியாமல் மணப்பெண்ணாக நின்றுகொண்டிருந்தாள்.
ஆதித்தும் அவளின் மனவருத்தத்தை உணர்ந்தே இருந்தான். இருந்தாலும் அவனாலும் அப்பொழுது அவளுக்கு ஆறுதலோ! அவளின் வீட்டாரை சமாதானப்படித்தி அழகுநிலாவுடன் பேசவைபதற்கான சூழலோ இல்லாததால் அவளுடன் நெருங்கி நின்று அவளுடன் பேச்சுகொடுத்து அவளை இயல்பாக்க முயன்றுகொண்டிருந்தான்.
சாமி பாதத்தில் வைத்து பூஜை செய்த மாங்கல்யத்தை அய்யர் எடுத்துக்கொடுத்த தாலியை அழகுநிலவின் கழுத்தில் கட்டினான்.
கோவிலுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதித்தின் பி.ஏ. முருகன் மற்றும் வேலாயுதத்தின் குடும்ப வகையில் என்று சிலபேர் மட்டுமே கோவிலுக்கு வந்திருந்தனர்.
மற்றவர்களை அவனது ஓ.எம்.ஆர் வீட்டின் விருந்திற்கு அனுப்பியிருந்தான் ஆதித்தின் பிஏ. அங்கு அவர்களுக்கு கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.
ஆதித்துக்கு அழகுநிலாவை மனைவியாக ஏற்றுகொண்ட அந்த நொடியை அனுபவித்து மகிழ்ந்தான்.
ஆனால் அழகுநிலாவோ தன் அம்மா மற்றும் அண்ணனின் முகத்திருப்பளால் அவளின் மனதைப் பாரம் அழுத்தியது.
அவளால் அவள் ஆதித்தின் மறுபாதியானதை முழுவதுமாக உணரக்கூட முடியவில்லை. இயந்திரம்போல் இருந்தது அவளின் செயல்..
ஜானகி ஹாஸ்பிடலில் இருந்ததால் முதலிலேயே அய்யரிடம் அவன் அன்னை ஹாஸ்பிடல் இருக்கும் விஷயத்தைக் கூறி கல்யாணத்தின் போது உறவுகளை வைத்து செய்யும் சடங்குகளை தவிர்த்து கெட்டிமேள சத்தத்துடன் மாங்கல்யம் ஆதித் அழகியின் கழுத்தில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்யாணம் முடிந்ததும், கடவுளை வணங்கிவிட்டு வேலாயுதத்திடம் ஆசிர்வாதம் வாங்கியவர்கள் ராசாத்தியிடம் ஆசிர்வாதம் வாங்க முயன்றபோது அதெல்லாம் வேண்டாம் தம்பி என்று ஆதித்திடம் கூறியவள்,
தாம்பாளத்தில் அழகுநிலாவிற்கு சேர்த்துவைத்திருந்த நகை மற்றும் ஒருலட்சம் ரொக்கப்பணத்தை இருவரின் முன்னும் வாங்கிக்கொள்ளும்படி நீட்டினாள்.
அழகி அதை வாங்க மறுப்பாக தலையசைத்தபடி என்கூட நீ முதலில் பேசும்மா... என்று மேலும் பேசமுயன்றவளை ஆதித் அவளின் கை பிடித்து தன் கையோடு சேர்த்துக்கொண்டு எனக்கு உங்க ஆசீர்வாதமும் உங்க பொண்ணும் மட்டும் போதும். வேற எதுவும் வேண்டாம் என்று அவளை பேசவிடாமல் முந்திக்கொண்டு சொன்னான்.
உடனே ராசாத்தி, நான் என் கடமையை செய்றேன் தம்பி. இதெல்லாம் அவளோடது. அவங்க அப்பா அவள் பிறந்தபோது இதெல்லாம் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி வைத்தது.
உங்கள் வசதிக்கு இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் என்னை போன்ற சம்சாரி வீட்டில் எண்பது சவரன் நகை சேர்ப்பது என்பது எளிதல்ல.
இது அவங்க அப்பாரு மக கல்யாணத்தை சிறப்பா செய்றதுக்கு சேர்த்தது. வேண்டான்னு சொல்லாதீங்க என்றாள்.
அதற்கு மேல் மறுக்கமுடியாமல் அழகுநிலாவை அதனை வாங்கிகொள்ள அனுமதித்தான்.
எங்களுக்கு திருநீறு பூசிவிடுங்கம்மா என்று அழகுநிலா காலில் விழுந்ததும் ஒரு எட்டு பின்னால் நகர்ந்துகொண்டாள் ராசாத்தி.
அழகுநிலாவிடம் பேசாமல் ஆதித்திடம், சாமிசன்னதியில முடிச்ச கல்யாணத்திற்கு அந்த கடவுள் அருள் கிடைக்கும் தம்பி, உங்க வீடுக்காரம்மாவை எழுந்திரிக்கச் சொல்லுங்க என்றவர் தனது மகனின் அருகில் நின்றுகொண்டாள்.
தன் அம்மாவின் இந்த புறக்கணிப்பால் கண்களில் கண்ணீர் நிரம்பி தழும்பியது அழகிக்கு. அவள், தன் அம்மாவிடம் விளக்கம் அளிக்க முயன்றநேரம் வேலாயுதம் கோவிலில் வைத்து வேறு பேச்சுவார்த்தைகளை தவிர்க்கும் நோக்கத்த்டன் அவர்களின் அருகில் வந்தவர்,
“அழகுநிலா இப்போ வேற எதுவும் பேசவேண்டாம். இங்க ஆதித் கல்யாணம் நடக்கப்போவதை தெரிந்த பிரஸ் காரங்க இங்க வந்துவிட்டர்கள், நம்ம ஆட்கள் வெளியில் அவங்களை சமாளித்து கொண்டிருகிறார்கள். இப்போ ஜானகியிடம் ஆசிர்வாதம் வாங்க புறப்பட வேண்டும்”.
ஆதித்.... என்று கூறியவர், சம்மந்தியம்மா...! ஜானகி உங்களை பார்க்கணும் என்று சொன்னார்கள். நீங்களும் அழகியின் அண்ணனும் எங்களுடன் ஹாஸ்பிடலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சமூதாயத்தில் பெரியமனிதர் தன்னிடம் வைக்கும் கோரிக்கையை தட்ட முடியாமல் ராசாத்தி குமரேசன் மற்றும் வாணியுடன் மருத்துவனைக்கு வர கிளம்பினர்.
அதில் மகிழ்ந்த அழகுநிலா, ஆதித் ப்ளீஸ்.... நான் அம்மா அண்ணன் கூட காரில் வருகிறேனே! எனக்கு அவங்க கூட பேசணும் என்று கேட்டாள்.
அழகுநிலா அவர்களின் வீட்டாரை பார்த்ததில் இருந்து தன்னை பார்க்கும் போது தோன்றும் அவளின் கண்களின் மின்னல் தொலைந்து போனதை உணர்ந்திருந்த ஆதித்துக்கு அவளின் கண்களில் தன்னைப்பார்த்து ஏற்படும் அந்த மின்னலை மீட்க்க விரும்பினான்.
ராசாத்தியும் குமரேசனும் வந்ததில் இருந்து அவளிடம் முகம் கொடுத்து பேசாததை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு ஒட்டாத தன்மையுடன் கடமையை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் அவர்கள் இருப்பதையும் புரிந்து கொண்டான்.
அதனால் அழகுநிலாவின் மனம் காயம்படுவதை பார்த்து தற்போது எதுவும் செய்யமுடியாத சூழலின் இருந்த ஆதித்,
இவளுக்காக இங்க நான் ஒருத்தன் தவித்துகொண்டிருகிறேன். இவள் என்னடா.... என்றால் அவளுடன் முகம் திருப்புபவர்களுடன் போகணும் என்று சொல்கிறாளே! என்று கடுப்புடன் நினைத்துக்கொண்டான்.
எனவே, ஏய்.. இப்போதான் தாலிகட்டியிருக்கிறேன் அதுக்குள்ள விட்டுட்டு உன் அம்மாபின்னாடி போகணும்னு நினைக்கிறேயே! என்னை பார்த்தா உனக்கு எப்படியிருக்கு? என்று கடுப்புடன் கேட்டான்.
அப்பொழுது அவர்களின் அருகில் வந்த வேலாயுதம் என்ன ஆதித் மருமகளிடம் கோபமாய் பேசுகிறாய்? என்று கேட்டார்.
ஆதித் பேசும் முன் மாமா நான் ஹாஸ்பிடல் வரும்போது, அம்மா, அண்ணன் கூட காரில் வருகிறேன் என்று சொல்கிறேன் இவர் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார்.
நான் அவங்களிடம் தனியா பேசணும் அதற்கான சந்தர்பம் நேற்றில் இருந்து முயற்சிக்கிறேன் எனக்கு கிடைக்கவே இல்லை என்று கூறினாள்.
அப்பொழுது அவர்களிடம் வந்த குமரேசன் எந்த ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறீர்கள் நானும் அம்மாவும் வர டாக்சி வந்துருச்சு, எங்களுக்கு மதியம் 2மணிக்கு ஊருக்கு போக பஸ் டிக்கட் எடுத்தாச்சு.
அதனால் சீக்கிரம் மாப்பிள்ளையின் அம்மாவை போய் பார்த்துட்டு கிளம்பனும் என்று சொன்னதும் ஹஸ்பிடலின் பெயரை கூறிய வேலாயுதம் அழகுநிலா நீயும் அவங்க கூட ஹஸ்பிடளுக்கு அவங்க காரிலேயே வந்துவிடு என்று கூறினார்.
அவர் கூறியவுடன் முன்னாள் நடந்துகொண்டிருந்த அவர்களின் வீட்டாரோடு வேகமாக எட்டுவைத்து இணைந்து, அம்மா...! உங்க கூட நானும் ஹாஸ்பிடல் வருகிறேன் என்று கூறி வந்ததும் ராசாத்தி அப்படியே நின்றுவிட்டாள்.
ஏலே குமரேசா.. இனி ஒருதடவ இவ வாயால என்னை அம்மானு கூப்பிடக்கூடாது. ஊருக்குள்ள என்னை பார்த்து உன் மக எவனையோ காதலிச்சுகிட்டு சுத்துராளாமே.. என்று நாக்குமேல பல்லப்போட்டு என் முன்னே பேசாதவ கூட பேசவச்ச அன்னிக்கே என் மவ செத்துட்டா,
இப்போ நான் இங்க வந்து இவளுக்கு கல்யாணம் முடிச்சுவச்சதுக்கு காரணம் இவளோட ஞாபாகப்படுத்துற எதுவும் என் வீட்டில் இருக்கக் கூடாது. அதெல்லாம் இவகிட்ட சேர்த்துட்டு இவள தல முழுகிட்டுப் போவத்தான் வந்தேன்.
இவ நம்ம கூட காருல ஏறினா நான் ஆஸ்பத்திரிக்கே வர மாட்டேன். இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நம்மளால வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்க்கமுடியாதுன்னு அவளுக்கு அவளே மாப்பிள்ளை தேடினாளோ அப்போவே அவ செத்துட்டததா நினச்சுட்டேன் என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும் விக்கித்து போய் அப்படியே நின்றுவிட்டாள் அழகுநிலா. அவர்களின் பின் வந்த ஆதித் அவளின் கை பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு அழகி.
அவங்களை கண்டிப்பா உன்னுடன் சமாதனப்படுத்தி பேசவைப்பது என்பொறுப்பு என்று தொய்ந்து போய் அமரப்போனவளை தன்னுடன் சேர்த்து பிடித்தபடி கூட்டிவந்தவன்,
புதுமணத் தம்பதிகளுக்காக அலங்காரம் செய்த புத்தம்புது சிகப்புநிற இன்னோவாவில் அவளுடன் ஏறி ஹாஸ்பிடலில் இறங்கினான்.
வழிநெடுக்க தன்னை மறந்து தன்னை தாங்கி கொண்ட ஆதித்தின் தோளில் முகம் புதைத்து தனது துக்கம் தீர அழுதபடி வந்தாள்.
அவள் அம்மா பேசிய பேச்சு அவள் மனதை ரணமாக்கி இருந்ததால் அவளின் துக்கம் குறையவே இல்லை. இறங்கும் இடம் வரை கண்ணீரும் நிற்கவே இல்லை .
ஹாஸ்பிடலில், இறங்கு அழகி..! என்று ஆதித் சொன்னவுடனே நேரா என்னை ரூமிற்கு கூப்பிட்டுக்கொண்டு போங்க ஆதித்.
அத்தை என்னை இப்படி அழுத முகத்துடன் பார்த்தால் கவலைப் படுவார்கள் அது அவர்களின் உடல்நிலையை பாதிக்கும். நான் கொஞ்சம் முகத்தை கழுவியபின் அத்தையிடம் போகலாம் என்றாள்.
அவளின் மனம் புண்பட்டிருக்கும் இந்த நிலையிலும் தனது அம்மாவிற்காக யோசிக்கும் அவளின் தன்மையில் வெகுவாக அவளின் பால் ஈர்க்கப்பட்டன் ஆதித்.
எனவே நெகிழ்ச்சியுடன், ஓகே பேபி! வா போகலாம் என்று கூறியவன், மனதினுள் அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் பிறந்தது.
மேலும் அவளின் வீட்டில் உள்ளவர்களுக்கு அழகியின் மீதுள்ள கோபத்தை போக்கி அவளுடன் அவர்களை பேசவைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அதன்பின் முகம் கழுவி அழுததுதெரியாமல் மேக்கப் செய்து வேகமாக ஜானகி இருந்த ரூமிற்கு வந்தார்கள் ஆதித்தும் அழகுநிலாவும்.
வெளியில் அவர்களுக்காக காத்திருந்தனர், வேலாயுதமும் அழகுநிலாவின் அம்மா வீட்டாரும்.
அவர்கள் வந்ததும் உள்ளே சென்ற ஆதித்தையும் அழகுநிலாவையும் பார்த்த ஜானகிக்கு ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் வடிந்தது.
அழகுநிலாவும் சிரிப்புடன் எங்களை ஆசீர்வாதம் செய்ங்க அத்தை என்று ஆதித்துடன் படுத்திருந்த அவளின் பாதம் தொட்டு வணங்கினார்
இருவரின் கைகளையும் ஒன்றாக தன் கைகளுக்குள் சேர்த்து பிடித்தபடி என் மகனை ஒரு தேவதை பெண்ணிடம் ஒப்டைத்துவிட்டேன். இனி எனக்கு எந்த கவலையும் இல்லை என்றாள்.
அம்மா.. என்னம்மா.. உங்க மருமக வந்ததும் என்னை டம்மி பீசாக மாத்திடீங்களே! இது உங்களுக்கே நியாயமா? என்று கண்களில் திரண்ட நீருடன் உதட்டில் புன்னகையுடன் பதில் கொடுத்தான் ஆதித்.
அவரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வேலாயுதத்தை பார்த்து என்னங்க சம்பந்தி வீட்டாரை கூப்பிட்டுக்கொண்டு வரவில்லையா? என்று கேட்டதும், சற்று தள்ளிநின்ற ராசாத்தி மற்றும் குமரேசன் வாணியை பார்த்து ஏன் அங்கேயே நின்னுட்டீங்க வாங்க என்று வேலாயுதம் கூப்பிட்டார்.
ராசாத்தியை பார்த்ததும் சம்பந்தி என்று மலர்ச்சியுடன் கூப்பிட்டதும், தன்னை அறியாமலேயே ராசாத்தி வேகமாக அவளின் அருகில் வந்து கை பிடித்து எல்லாம் சரியாபோயிடும். அந்த மீனாச்சி ஆத்தா உங்களை நீண்ட ஆயுளோடு பார்த்துப்பா என்று கூறினாள்.
உடனே புன்னகையுடன் உங்க மகளை எனக்கு மருமகளா அனுப்பியதே அந்த மீனாட்சி கடவுள் தான்.
இதுயாரு...... அழகுநிலாவின் அண்ணனா.. என்று பக்கத்தில் நின்ற குமரேசனை பார்த்து கேட்டதும்,
ஆமா இது என் மவன் குமரேசன், மருமகள் வாணி, இது என் பேரன் என்று குமரேசன் கையில் இருந்த குட்டிப் பையனை அறிமுகப்படுத்தினாள் ராசாத்தி.
கல்யாணக்கோலத்தில் தன் பிள்ளையை பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படதால் அவளுக்கு பல்ஸ் கொஞ்சம் எகுற ஆரம்பித்ததை அங்கிருந்த நர்ஸ் கவனித்தாள்.
எனவே, போதும்.... போதும்.... அவங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம். பல்ஸ் நார்மலாயில்லை. எல்லோரும் கொஞ்சம் வெளியில் போகிறீர்களா? அவங்களுக்கு மருந்து கொடுக்கணும் என்று சொல்லவும் எல்லோரும் வெளியில் வந்து விட்டனர்.
வெளியில் வந்ததும் ராசாத்தி, அப்ப நாங்க வாரோம் தம்பி என்று ஆதித்திடம் சொல்லியவள் வேலாயுதத்திடமும் நாங்க வாரோம் அய்யா! என்று சொல்லிவிட்டு விடைபெற்று அழகுநிலாவை திரும்பி கூட பார்க்காமல் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்ததும், குமரேசன், இருமா நாங்களும் வரோம் என்று பொதுவாக எல்லோரிடம் நாங்க கிளம்புறோம் என்று கூறியவன், வா... வாணி என்று தன் மகனை கையில் ஏந்தியவன் அவர்களின் பதிலை கூட கேட்காமல் வேகமாக எட்டுவைத்து வெளியேறிவிட்டான்.
அதற்குள் ஆதித்தின் பி.ஏ, பாஸ்.... ஆப்டர்நூன் ஆகிடுச்சு லஞ்ச் டயத்திற்குள் இங்க வந்துடுவீங்களா? என்று கேட்டதும்,
அங்கு போகவேண்டிய கட்டாயம் உணர்ந்து, அப்பா.. ஓ.எம்ஆர் பங்களாவில் என் வொர்கர்ஸ் எல்லோருக்கும் லஞ்ச் ஏற்பாடு செய்திருக்கிறேன் போகணும் என்று ஆதித் கூறியதும்,
நீ போய் அங்க கவனிப்பா அழகுநிலாவிற்கு கொஞ்சம் மாற்றம் தேவை. நான் இங்கே பார்த்துகொள்வேன். நாளைக்கு நீங்க ஹாஸ்பிடல் வந்தா போதும் என்று அனுப்பிவைத்தார் வேலாயுதம்.
அழகுநிலா உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமைதியாக அவனுடன் பயணமானாள் அங்கு சென்றதும் அவனின் வொர்கர்ஸ் அவர்களுக்கு வாழ்த்து கூறி பரிசுகள் கொடுத்தனர்.
அப்போது அழகுநிலா தனது துக்கத்தை காண்பிக்காமல் மறைத்தபடி ஆதித்துக்காக கொஞ்சம் சிரித்தபடி அதில் பங்கு கொண்டாள்.
எல்லோரும் சாப்பிட உட்கார்ந்ததும் அவளை தன அறைக்குள் கூப்பிட்டுகொண்டு வந்தான் ஆதித். அவ்வளவு நேரமும் அழுகக்கூட முடியாமல் இருந்த சூழலில் இருந்தவள் தனியாக வந்ததும் அழுகை வெடித்துக்கொண்டு வர தேம்பிதேம்பி அழுக ஆரம்பித்தாள்.
ஆதித்துக்கு எவ்வாறு அவளை தேற்றுவது என்றே தெரியவில்லை. கொஞ்சநேரம் நான் இருக்கிறேன் அழகி!
அவங்களுக்கு நடந்தது தெரியாது. நீ அழுதால் என்னால் தாங்க முடியவில்லை. ப்ளீஸ்..... பேபி அழுகாதே என்று கூறினான்.
அம்மா என்னுடன் பேசாமல் போய்விட்டார்கள் ஆதித். இனி என் வீட்டார் என்னை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்களா? என்னிடம் விளக்கம் கூட கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லையே! என்று கூறியவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அழுவதை குறைத்து, தேம்பியபடி அவள் இருக்கவும், ஆதித் அவன் பெட் ரூமிலிருந்த சோபாவில் அவளை அமரவைத்தவன் அவளின் கலைந்திருந்த தலையை ஒதுக்கிவிட்டபடி கூறினான்,
“எல்லாமும் மாறும் அழகி. சீக்கிரமா அவங்க உன்னை புரிந்துகொள்வார்கள். இப்போ உன் வாழ்கை என்னோடு. என் பேபி எப்பொழுதும் அழுகக் கூடாது என்று கூறியவன்,
அங்கு பிளாஸ்கில் இருந்த பாலை அவளுக்கு டம்ளரில் ஊற்றி நீ சரியா சாப்பிடல. இதையாவது குடி என்று நீட்டினான்.
அதை கையில் வாங்கி கொண்டவள் குடிக்காமல் அதனை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருப்பதை பார்த்த ஆதித் பிளாஸ்கை மூடி வைத்தவன் அங்கிருந்த பெரிய கீபோர்டின் முன் போட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தவன் அதன் மேல் மூடியிருந்த துணியை விலகினான்.
அவளின் கவலையை போக்கி உனக்காக நான் இருக்கிறேன் என்று உணர வைப்பதற்காக அந்த கீபோர்டை மீட்டி இசை எழுப்பினான்
அந்த இனிமையான சத்தத்தில் அவனை நிமிர்ந்து அழகி பார்த்ததும், அவளை காதலுடன் பார்த்தபடி உனக்கு நானிருக்கிறேன் என்று கண்களால் கூறிவிட்டு இசையுடன் அவளை அமைதிபடுத்த பாட ஆரம்பித்தான்.
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒருகதை என்றும் முடியலாம்
முடிவினில் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...... .
அவன் பட ஆரம்பித்ததுமே அவளும் தன் வாழ்கை தொடரின் அடுத்த அதியாயத்துல் ஆதித்துடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்த்துகிறான் என்பதை புரிந்துகொண்டாள்.
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்....
அவனின் அந்த வரிகளில் ஏற்கனவே என்னை தாங்கிக் கொண்டவன்தானடா நீ... என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்?
கண்ணீரை... நான் மாற்றுவேன். .
அவனின் அந்த வரிகள் தன் கண்ணீரை துடைப்பதுபோல் இருந்ததும், அவளும் அமர்ந்த இடத்தை விட்டு எழுந்து அவனின் அருகில் போய் நின்று தன் கண்ணீரை துடைத்தபடி இனி அழமாட்டேன் என்று கூறினாள்.
அதில் சிரித்தவன்,
வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே.... புதுஅழகிலே...
நானும் இணையலாம்.
என்று கூறியவன், மனது அவளுடன் வாழும் வாழ்கையை மனதினுள் அசை போட்டுப்பார்த்தது
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை என்றும் முடியலாம்
முடிவினில் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே.....
அவளோடு சேர்ந்து வாழும் வாழ்கையை நினைத்துப் பார்த்தவனுக்கு அவனுடயவள் என்ற சொந்தத்துடன் ஆவலில் அழகியின் ஒரு கைபிடித்து தன் அருகில் இழுத்து அவளின் கைகளை தனது கழுத்தை வளைத்து பிடிக்குமாறு வைத்துக் கொண்டவன்,
வாழ்வென்பதோ... கீதம்
வளர்கின்றதோ... நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
அவனின் அன்பில் கட்டுண்ட அழகி தன்னை மறந்து அவன்மேல் சாய்ந்து கண் மூடி நின்று அவன் குரலை ரசித்தாள்.
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்.
அவளின் அருகாமையும் தன்மேல் கொடியென படர்ந்திருந்த அவளின் நிலை அவனை பித்தனாக்கியது எனவே அவளைத்தன் முதுகோடு சேர்த்து தன் கையை பின்னால் கொண்டுபோய் பிடித்தபடி எழுந்து திரும்பி அனைத்தவன்,
நதியிலே புது புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ..... இன்று
இணைந்தது.... இன்பம் பிறந்தது.
என்று பாடியபடி அவளை கைகள் இரண்டிலும் தூக்கியவன் தனது படுக்கையில் அவளுடன் விழுந்தான்.
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை என்றும் முடியலாம்
முடிவினில் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே....
அவளும் அவனை அனைத்தபடி கண் மூடியவள் அவளின் பாட்டு தாலாட்டலாக மாற்றி அவளை அமைதிபடுத்தி உறங்கவைத்தது அவள் உறங்கியதும் அவனும் அவளை அணைத்தவாறே உறங்கிவிட்டான். .
---தொடரும்---

Very nice, waiting for next ud
ReplyDelete