பனி இரவில் தணலாவாய்[தீபாஸ்-ன்]
பாகம் 2
அத்தியாயம்-23
அழகுநிலா வர்ஷா பேசியத்தை மறைந்திருந்து கேட்டதிலிருந்தே தன்னால் தான் அவள் ஆதித்தை இழக்கும்படி ஆகிவிட்டது என்ற எண்ணமே அவளை வாட்டியது.
இந்த நிலையில் ஆதித் கூறிய என் உயிர் உள்ளவரை இன்னொருத்தியை இனி மனைவியாக நான் நினைத்துகூட பார்க்க மாட்டேன் என்று கூறியது மனதை சந்தோசப்படுத்தினாலும் தான் இன்னொருத்தியின் வாழ்க்கையை பறித்து வாழ்கின்றோமே என்ற துக்கமும் அவள் சந்தோசத்தில் சேர்ந்து கொண்டது .
அந்த பார்டிக்கு வரும்போது இருந்த இருவரின் மயக்கும் மனநிலை திரும்பும்போது குறைந்து போய்விட்டது.
ஆதித் அழகுநிலாவுடன் இணைந்துநடந்து காரை அடைந்தாலும், அவளுக்கு காரின் முன்கதவை திறந்துவிட்டாலும் அவனின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்துக்கொண்டு இருந்தது.
காரில் ஏறியதில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை.
அவர்கள் ஒ.எம்.ஆர் பங்களாவினுள் வந்ததும் காரில் இருந்து இறங்கி வீட்டு வாசலுக்கு வந்ததும் ஆதித் அழகுநிலாவிடம் நீ போய் தூங்கு எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு என்று கூறியவன் காரில் ஏறி கடற்கரையை அடைந்தான்.
ஆள் அரவம் இல்லாத அந்த இடத்தில் கடல்அலை அவன் காலில் மோதும்படி நின்றவன் மனதிலும் அலை அடித்தது.
பார்டியில் அழகுநிலா ரெஸ்ட்ரூம் போகிறேன் என்று கூறிவிட்டு சென்றவள் ரெஸ்ட்ரூம் போவதுபோல் சென்று சட்ரெண்டு வாசலுக்கு போவதை அவளின் மீதே விழி வைத்திருந்த ஆதித் கவனித்துவிட்டான்.
இவ எதுக்கு வெளிய போறா...? என்று அவளை தொடர்ந்து வந்தவன், அவள் யாரையோ அங்கிருந்த பீமின் பின் நின்று பார்ப்பதை பார்த்தவன் யாரை பார்க்கிறாள் என்று அடிமேல் அடியெடுத்துவைத்து அரவம் இல்லாமல் அவளின் பின்னால் நின்றவன் காதிலும் வர்ஷா மற்றும் மாதேசின் பேச்சு விழுந்தது.
ஏற்கனவே அழகுநிலா தான் வர்ஷவுடன் அன்று பேசியதை கேட்டதின் பின்பு தன்னை தவிர்த்த நிலையில், இப்பொழுது மீண்டும் வர்ஷா என் மீது கொண்ட காதலால் காயம் அடைந்ததை கேட்கும் சூழ்நிலையில் அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று கலங்கிப் போய்விட்டான்.
வர்ஷாவை தான் ஒதுக்கியதால் அவளின் மனம் காயம் அடைந்ததை பார்த்து தான் வருத்தம் கொள்வதை அழகுநிலா அறிந்து கொள்வதை அவன் விரும்பவில்லை.
அதேபோல் தன்னால் பாதிக்கப்பட்ட வர்ஷாவின் வாழ்க்கை நல்லபடி அமைந்தால்தான் தானும் நிம்மதியுடன் அழகுநிலாவுடன் வாழ்க்கையை வாழமுடியும் என்ற எண்ணமும் ஏற்பட்டது.
அவள் அப்ராட் போவதாக தெரிவித்ததை நினைவு கூர்ந்தவன், அவள் லாஸ்ட் இயர் எம் பி ஏ படித்து முடித்ததும் அவளுக்கு கேம்பஸ் இண்டர்வ்யூவில் லண்டன் கம்பெனியில் பிளேஸ்மென்ட் ஆனது.
எப்போழுது வேண்டுமென்றாலும் அங்கே அவள் ஜாய்ன் பண்ணிக்கொள்ளலாம் என்றும் அந்த கம்பெனியின் பெயரை குறிபிட்டது ஞாபகம் வந்தது
இப்பொழுதும் அவள் அங்கேதான் போவாள் என்று புரிந்துகொண்ட ஆதித் தனது மொபைலில் வெளிநாட்டில் தான் வேலை பார்க்கும்போது பழக்கமான சிம்மவிஷ்ணுவிற்கு தொடர்பு கொண்டான்.
நீண்ட நாட்களுக்குபின் ஆதித்தின் அழைப்பில் மகிழ்ச்சியடைந்த சிம்மவிஷ்ணு ஹாய் ஆதித் வாட் அ சர்ப்ரைஸ் . ஐ திங் தட் you யூ ஹேவ் சூசன் ஒன் இன்டியன் கேர்ள் அஸ் மை பியூச்சர் வொய்ப்.ஆம் ஐ ரைட் .என்று கேட்டான்.
எஸ்,யூ ஆர் ரைட் .பட் ஷி இஸ் மை எக்ஸ்-கேர்ள்பிரன்ட் என்று கூறினான் ஆதிதி .வாட்? என்று சிம்மன் யோசனையுடன் கூறியதும்
ஆதித் அவளுக்கும் அவனுக்கும் இடையில் நிகழ்ந்த காதலையும் அதில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதன் பின் அழகுநிலாவிற்கு தான் உதவியது
அதனால் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்தது. அந்நிலையில் அவள் தன்னை வெருப்பேத்துவதற்காக மாதேசுடன் இணைந்து நடனம் ஆடியது,
அதனால் அவளின் மேல் இருந்த தனது காதலை தன்னால் தொடர முடியாதளவு தன் மனது அவளை அன்னியமாக நினைக்க ஆரம்பித்தது.
அதன் பின் அழகுநிலாவுடன் நடந்த தனது கல்யாணம் வரை ஒன்றுவிடாமல் அவனிடம் கூறினான் ஆதித் .
அவன் கூறியதை கேட்ட சிம்மன் ஆதித்திடம், ஆதித் ஷி இஸ் குட். ஐ டூ நாட் க்னோ எனிதிங் ராங் வித் ஹேர். நீ எப்போதிருந்து பிளே பாயாக மாறினாய் ஆதித் என்று தமிழையே ஆங்கிலம்போல் உச்சரித்தான் சிம்மன் .
சிம்ம விஷ்ணு பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான் .அவனின் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவள் அப்பா அமெரிக்கன். அவனின் பத்தொன்பதாவது வயதில் ஒரு கார் ஆக்சிட்டேன்ட்டில் அவனது தாயை இழந்தான்.
அவன் பிறந்து வளர்ந்ததில் இருந்து அவனின் அம்மா அவனிடம் தமிழில் மட்டுமே எப்பொழுதும் உரையாடுவார் எனவே அவனுக்கு தமிழ் நன்றாக பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும் ஆனால் அவனின் தமிழ் உச்சரிப்பை கேட்டு முதலில் ஆதித் அரண்டே போய்விட்டான் .
ஆனால் பளீர் என்ற வெள்ளை நிறத்தில் முடி கருமையாக கிரீன் கலர் ஐ பாலுடன். அமெரிக்க பிரஜை என்று அவனை பார்த்ததும் அடித்து கூறினாலும் சிறிது உற்றுப்பார்த்தால் நம் இனத்தின் சாயல் அவனிடம் உள்ளதை உணர்ந்துகொள்ளமுடியும். .
அவனின் அம்மாவின் இறப்பிற்கு பின் அவனின் அன்னையின் மீதான அதிகப்படியான அன்பினை அவன் தமிழ் பெண்களிடமே தேடமுடியும் என உணர்ந்து தமிழ்நாட்டில் பிறந்துவளர்ந்த பெண்ணை மனைவியாக அடைவதையே இலட்சியமாக கொண்டு வாழ்பவன்
எனவே ஜிம்மில் அறிமுகமான ஆதித்துடன் நடப்பை ஏர்படுத்திகொண்ட சிம்மன் அவன் தமிழ்நாடு திரும்பும் போது அவனிடம் வைத்த கோரிக்கை தனக்கு தமிழ் பெண்ணை மணமுடிக உதவுமாறு கேட்டுகொண்டான்.
ஆதித் அவனின் மொபைலில் இருந்த வர்ஷாவின் போட்டோஸ் மற்றும் அவளின் குவாளிபிகேசனை கூறி அவள் அப்ராட் சென்று வேலை பார்க்க விரும்புவதை கூறி அவளின் ரெஸ்யூமையும் சென்ட் செய்தவன் அவளுக்கு ஏற்கனவே காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகியிருந்த கம்பெனியின் டையப் கம்பெனி என்று கூறி அவளுக்கு வேலைக்கு ஆபர் தருவதாக அணுகச் சொன்னான் ஆதித்.
மேலும் தன்னை தெரிந்ததாக அவளிடம் காட்டிக்கொள்ளகூடாது என்றும் தற்செயலாக அவளை சந்திப்பதுபோல் சந்தித்து அவளின் அன்பிற்கு பாத்திரமானவனாக மாறி அவளை கல்யாணம் செய்துகொள்வது அவன் சமத்து என்று கூறி தொடர்பை துண்டித்தான் ஆதித் .
ஆதித்துக்கு தெரியும் சிம்மன் வெஸ்டர்ன் கலாச்சரத்தின்படி வளர்ந்திருந்தாலும் அவனின் அம்மாவின் வளர்ப்பு அவனை அவர் இறந்ததுக்குபின்னும் தடம் புரளாமல் நல்லவனாக இருக்கவைதிருப்பதை பார்த்தவன் தன்னை விட வர்ஷாவிற்கு அவன் பொருத்தமானவன் என்றும் சிம்மனின் அழகும் ஆளுமையும் கட்டாயம் தன்னை மறந்து அவளை அவனுடன் இனைய வைக்கும் என்ற நம்பிக்கை கொடுத்தது .
மேலும் சிம்மவிஷ்ணுவிற்கு அவளின் புகைபடத்தை பார்த்ததுமே அவளை பிடித்துவிட்டது என்பதை அவனின் வார்த்தைகள் மூலம் தெரிந்துகொண்டான்.
மேலும் அவளின் குணா இயல்பை தான் கூறியதுமே அவள் மேல் சிம்மனுக்கு நல்ல அபிப்ராயமும்
என்னால் காயப்பட்டவள் என்றதும் அவளின் துயர்துடைக்க அவனின் ஆர்வம் உந்துவதையும் அவனின் பேச்சிலிருந்து உணர்ந்து கொண்ட ஆதித் கண்டிப்பாக சிம்மன் அவளின் மனதில் இடம் பிடித்துவிடுவான் என்ற நம்பிக்கை உண்டானது அது மிகுந்த நிம்மதியை கொடுத்தது ஆதித்துக்கு.
நீண்டநேரத்திற்குபின் கடற்கரையில் இருந்து அவனின் மன வெம்மையை குறைதுக்கொண்டவன் தனது காரை வந்தடைதான்.
காரில் ஏறியதும் அழகுநிலாவை காரில் இருந்து வீட்டில் இறக்கிவிடும் போது அவள் முகத்தில் இருந்த கலக்கத்தை ஒருநிமிடம் நின்றுபார்த்தவனுக்கு அப்பொழுது அவளை ஆறுதல் படுத்தும் மனநிலை இல்லாமல் வந்துவிட்டதை இப்பொழுது நினைத்த ஆதித்துக்கு வருத்தமாக இருந்தது.
ஏன் பேபி நான் உன்னை முதலிலேயே சந்திக்காமல் போனேன் அப்படி சந்தித்திருந்தால் வர்சாவின் ஆர்வமான பார்வையில் சலனம் ஆகி அவளிடம் காதலை கூறி அதன் பின் அவளை ஒதுக்கிய குற்றவுணர்வுக்கு ஆளாகாமல் இருந்திருப்பேனே என்று தனக்குள்ளேயே புலம்பியபடி வந்தவனின் கண்களின் வழியில் இருந்த பார் தென்பட்டது.
இன்று தனக்கிருகும் மனநிலையில் அதை சிறிது அருந்தி தன்னை மறந்தால் என்ன என்ற எண்ணம் உருவானது அவனின் கார் அந்த பாரின் வாசலில் சென்று நின்றது .
என்றுமே அளவாக அருந்தும் அவன் இன்று கொஞ்சம் அதிகமாகவே அருந்திவிட்டான் இருந்தாலும் தள்ளாட்டம் இல்லாமல் தெளிவாகவே எழுந்து காரினை எடுத்து கொண்டு அவனின் பங்களாவை நோக்கி விரைந்தான்
வர்ஷாவின் வீட்டில் அவளின் அப்பா கூறிய செய்தி அவளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .என்ன வர்ஷா அப்பா சொல்றேன்ல பதிலே சொல்லாமல் இருக்க என்று கேட்டார் அவளின் தந்தை .
டாட் நீங்க என்னிடம் அந்த மினிஸ்டர் மகன் நரேனை கல்யாணம் செய்ய சம்மதமா என்று கேட்டகவில்லை .அவங்க சம்பந்தம் பேசவந்தாங்க நான் சரின்னு சொல்லிட்டேன் அடுத்தமாசம் கல்யாணம் அப்படின்னு உங்க முடிவை சொல்றீங்க என்றால் என்ன அர்த்தம்.
அவள் அவ்வாறு சொல்லியதும், வர்ஷா.. இது எவ்வளவு பெரிய ஆபர் தெரியுமா? என் மகள் அதிர்ஷ்டசாலி அதனால்தான் இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து என் பெண்ணை கேட்டுவந்திருகிரார்கள் என்று நானே சந்தோசத்தில் திக்குமுக்காடி போய் இருக்கிறேன்.
இந்த மாதிரி ஒரு வசதியான செல்வாக்கான குடும்ப சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்ல நான் என்ன முட்டாளா?
நீ அந்த ஆதித்தை விரும்புவதாக சொன்ன, அந்த ஆதித்ராஜ் இப்போ எல்லோரையும் திரும்பி பார்க்கவைக்கும் அளவு பெருசா வளர்ந்து வரும் பிஸ்னஸ்மேனைதான் என் மகள் கல்யாணம் செய்யவிரும்புகிறாள் என்று சம்மதம் கூறினேன்.
ஆனால் திடீர்னு அவனுக்கு வேற ஒரு பெண்ணுடன் கல்யாணம் முடிந்துவிட்டது .
அதுதான் அவன் உனக்கு இல்லன்னு ஆகிவிட்டதே எனவே இப்போ உனக்கு இவனை மணப்பதற்கு என்ன தடை? என்று கேட்டார்.
அவர் அவ்வாறு கூறியதும் அப்பா நானே நொந்து போயிருக்கிறேன் ஆதித்தை நான் மறக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை.
அவனை நான் மறந்தபின் வேறு ஒரு கல்யாணம் செய்வதாக இருந்தாலும் இந்த நரேனை மட்டும் கட்டாயம் என் லைப் பார்ட்னராக நான் கட்டாயம் தேர்ந்தெடுக்க மாட்டேன்.
அவன் சரியான பொம்பளை பொறுக்கி எனக்கு அப்படி பட்டவன் வேண்டாம் என கூறினாள்.
அவள் அவ்வாறு கூறியதும், வசதியான வீட்டு பசங்க கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க.
இதையெல்லாம் பெருசா நெனச்சா இதேபோல் பெரிய இடத்தில் சம்பந்தம் செய்ய முடியுமா?
நான் முடிவு செஞ்சுட்டேன்! அவன்தான் என் மாப்பிள்ளை என்று கூறியவர் அவளின் மறுப்பை காதில் வாங்காமல் சென்றுவிட்டார்.
வர்ஷாவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. நான் இங்கு இருந்தால்தானே என்னை கண்ட பொறுக்கியும் கல்யாணம் செய்யச்சொல்லி கட்டயபடுத்துவீங்க.
நான் உடனே ஒருவேலையை தேர்ந்தெடுத்து உங்களை விட்டு வெளிநாட்டு போய்விட்டால் உங்களால் என்னசெய்யமுடியும் என்று நினைத்தவள்,
வேகமாக தனது அறைக்குள் சென்று கதவை அடைத்தவள் தனது மடிகணினியை எடுத்துவைத்து அவளை ஏற்கனவே செலக்ட் செய்திருந்த அந்த வெளிநாட்டு கம்பெனியில் மீண்டும் ஜாப் ஆபர் கேட்டு விண்ணப்பிக்க கணினியில் மெயிலை ஓபன் செய்தபோது அதில் அவளுக்கு ஒரு அமெரிக்கன் கம்பெனியில் இருந்து மெயில் வந்திருப்பதை பார்த்தவள் யோசனையுடன் அதை கிளிக் செய்தாள்.
வேலை தேட நினைத்து மெயிலை ஓபன் செய்தவளுக்கு வேலையில் ஜாய்ன் செய்வதற்கு உத்தரவு வந்திருப்பதை பார்த்தவள், முதலில் இன்பமாய் அதிர்ந்தாள்.
அதன்பின் யோசனையாக தான் விண்ணப்பிக்காமலே எப்படி தனக்கு வேலையில் சேர சொல்லி கூப்பிடுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தவளுக்கு அந்த கம்பெனி ஏற்கனவே தான் முன்பு செலக்ட் ஆகியிருந்த கம்பெனியின் டைஅப் கம்பெனி அது என்ற கூடுதல் தகவலையும்,
தற்போது தொடங்கப்பட்ட இந்த கம்பெனிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதையும் அதற்கு திறமைமிகுந்தவர்களை தேர்ந்தெடுக்க பார்த்தபோதுதான் உங்களின் இண்டர்வியூ ரிப்போர்ட்டை பார்த்து அதில் திருப்தியுற்று உங்களுக்கு இந்த ஆபர் வழங்கபடுவதாகவும் வேலையில் சேர விருப்பம் இருந்தால் இரண்டுநாட்களுக்குள் ரிப்போர்ட் கொடுக்கும்படி அதில் குறிப்பிடபட்டு இருந்தது.
பின் தனக்கு வேலை வழங்க முன் வந்த கம்பெனியை பற்றி அலசி ஆராய்ந்தவள் அது ஒரு நல்ல ஆபர் என்பதை உறுதிபடுத்தி கொண்டாள்.
உடனே தான் வேலையில் ஜாய்ன் பண்ணுவதாகவும் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அதை அனுப்பிய மறுநிமிடம் அவளுக்கு அடுத்த பத்து நாட்களில் கிளம்புவதற்கான புரசீஜரை மேற்கொள்ள அனைத்து தகவல்களையும் அனுப்பியது அந்த கம்பெனி.
அவ்வளவு துரிதமாக அவளுக்கு அந்த வேலைக்காக ஏற்பாடு செய்ததில் சிம்ம்விஷ்ணுவின் பங்கு இன்றியமையாததை வர்ஷா அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவள் அது தெய்வாதீனமாக தனக்கு கடவுள் கொடுத்த வேலை அது என்று மகிழச்சியடைந்தாள். .
ஆதித் கதவை திறந்ததும் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துகொண்டிருந்த அழகுநிலா, மனதினுள் அப்பாடா... வந்துட்டார் என்று நிம்மதியுடன் தான் பார்த்துகொண்டிருந்த டிவியை அணைத்துவிட்டு நான் உங்களுக்கு குடிக்க பால் எடுத்துகொண்டு வரவா என்று கேட்டாள்.
அவன் மணியை பார்த்து நைட் 12 க்கு மேலே ஆகிடுச்சு தூங்காம எதுக்கு இன்னும் எனக்காக உட்கார்ந்துகொண்டு இருகிறாய் என்று கூறியவனின் முகத்தை பார்த்தவள் அதிர்ந்தாள்,
அவன் கண் இரண்டும் கோவைப்பழம் போல் போதையால் சிவந்திருந்தது.
பேசிக்கொண்டே தனது அருகில் வந்தவனின் வாயில் இருந்து வந்த ஆல்ககாலின் மனம் வேறு அவன குடித்திருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தியது.
எனவே அவள் கோபத்துடன் நீங்க குடிச்சிருக்கீங்க இந்த பழக்கம் எல்லாம் உங்ககிட்ட இருக்கும் என்று நான் நினைத்துகூட பார்த்ததில்லை,
ஏன் ஆதித்... இந்த பழக்கம் உங்க உடல்நலத்தை கெடுத்துவிடும், இனிமேல் இதுபோல் குடிக்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்ங்க என்று அவனின் முன் கை நீட்டினாள் அழகுநிலா .
அவளின் உரிமையாக அந்த அதட்டலை பார்த்ததும் ஆதித் போதையில் நிதானம் இழந்தான்.
அவனின் கண்கள் கண்ணியமில்லாமல் அவளின் மீது அலைபாய்ந்தது அதில் ஈர்க்கப்பட்டவன் அவளின் நீட்டிய கைபிடித்து வெடுகென்று இழுத்தான்.
அவனில் அந்த செயலில் அதிர்ந்து அவனின்மீது இழுத்தவேகத்தில் மோதியவளை தன்னுடன் சேர்த்து அணைத்தபடி ஷோபாவில் விழுந்தவன் வாடி என் பொண்டாட்டி,
ஓகே... இனி எனக்கு அந்த போதை வேண்டாம். ஆனா அதுக்கு பதிலா நீ எனக்கு போதையாக மாறனும் டீல் ஓகே வா என்று கேட்டபடி அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கினான்.
அவனின் வார்த்தையை கிரகித்தவளின் இதயம் வேகமாக துடித்தது.
ஆதித் அவளிடம் கணவன் என்ற உரிமையை நிலைநாட்ட விரும்புவது அவளுக்கு புரிந்தது.
அழகி அவனை உயிராய் நேசிப்பதுபோல் அவனும் தன் மீது காதல்கொண்டு அதன்பின் இணைவதைதான் அவள் விரும்பினாள் .
மேலும் இன்று இருந்த அவளின் குழப்பமான மனநிலையில் அவனின் இந்த நெருக்கத்தை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
மறுத்தால் அவன் மறுபடியும் குடிப்பதை தொடர்ந்து விடுவானோ என்ற பயத்தில் அவனை விளக்கவும் அவளால் இயலவில்லை.
மறுப்பில்லாத அவளின் நிலையை கண்டு மதுபோதையையும் மீறி தன் மனைவியின் மீது உண்டான போதையில் அவளை கையில் அள்ளிக்கொண்டு கட்டிலை அடைந்தான். பின் அவளையும் அடைந்தான் .
ஆதிகாலையில் புரண்டு படுக்க முயன்ற ஆதித்தின் நெஞ்சினில் ஒன்றி அவனை கட்டிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த அகுநிலாவை உணர்ந்த ஆதித்தின் தூக்கம் சொல்லாமல் கொள்ளாமல் விடை பெற்றது,
இரவில் அவளுடன் தான் கூடுவது போன்று கனவு கண்டது கனவல்ல நிஜம் என்பதனை அவளுடன் அவன் படுத்திருந்த நிலை உறுதிபடுத்தியது .
அந்த நிஜம் அவனுக்கு நெஞ்சினில் எல்லையில்லா சந்தோசத்தை கொடுத்தது. என் பேபி என்று அவளின் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான் .
அதில் உறக்கம் கலைந்த அழகுநிலா தான் அவனை கட்டிக்கொண்டு தூங்குவதை உணர்ந்து வெட்கத்துடன் விலக முயன்றாள். அவளை விலகவிடாமல் பிடித்துகொண்ட ஆதித் தாங்க்ஸ் பேபி என்றான் .
அவன் எதற்கு நன்றி கூறுகிறான் என்பதனை உணர்ந்துகொண்ட அவளுக்கு மேலும் முகம் சிவந்தது எனினும் இரவு அவன் குடித்துவிட்டு வந்து அவளுடன் கூடியது அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது.
அவளின் முகத்தையே பார்த்துகொண்டிருந்த ஆதித்துக்கு முதலில் வெட்கத்தில் சிவந்த அவளின் முகம் பின் எதையோ யோசித்து வாடியதை கண்டவன் சாரி... பேபி என்றான் .
அவன் சொன்ன தாங்க்ஸ் ,சாரிக்கும் எந்த பதிலையும் சொல்லாமல் அவனை விட்டு விலகி தன்னை போர்வைக்குள் சுற்றியபடி எழுந்தவள் சிதறிக்கிடந்த தனது உடைகளை எடுத்துகொண்டு ரெஸ்ட்ரூமினுள் சென்று மறைந்தாள்.
அழகுநிலா அவனிடம் முகம் கொடுத்து பேச வெட்கம் கொண்டுதான் சென்று விட்டதாக நினைத்தான்.
ஆனால் பாவை அவளுக்கோ அவன் போதையில் தன் மனநிலை அறியாமல் ஆட்கொண்டது சற்று கோபத்தை கொடுத்தது.
ஆனால் அவன் தன்னிடம் சாரி கேட்டதுமே அவள் கோபம் பரந்தோடிப் போனது. ஆனால் அவனின் மீது வருத்தம் மனதின் ஓரம் இருந்தது,
ஆனால் அவன் அவளை எடுத்துகொண்டது அவளுக்கு அவனின் மீது மேலும் உரிமையை அதிகப்படுத்தியது. அவளும் அவனும் ஒன்றாகிவிட்டதுபோன்ற ஒரு பிரமை அவளுக்கு உண்டானது.
அவள் சென்றதும் அவன் தனது மொபைலை எடுத்து கால் செய்து அழகுநிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கான வேலையை செய்த திருப்தியில் புன்னகையுடன் எழுந்தவன் அவனின் அம்மாவை ஹாஸ்பிடலில் இருந்து தனது வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவதற்கு கிளம்ப நினைத்து எழும்போது அழகுநிலா தன்னை தூய்மைப் படுத்திகொண்டு தலையில் ஈரம் சொட்ட நைட்டியில் வந்தாள்.
அவளை பார்த்தவனுக்கு இரவில் போதையில் அரங்கேறிய சங்கமம் மறுபடியும் இப்பொழுது வேண்டும் என்ற தாபம் எழுந்தது. ஆனால் அவளை தொட்டால் ஹாஸ்பிடல் போவதில் தாமதமாகிவிடும் என்ற நிதர்சனத்தில் பெரு மூச்சு உண்டானது.
எனவே ரசனையுடன் அவளை பார்த்தபடி விசில் அடித்தான் அவனை பக்கா ஜென்டில்மேனாக பார்த்தவள் இப்பொழுது லோக்கல் ரவுடிமாதிரி விசில் அடித்தபடி மேய்ச்சல் பார்வையை பாத்தது ஆச்சரியமும் அவனின் பார்வையாலேயே கூசி சிலிர்த்த அவள் வெட்கமும் கொண்டாள்.
அவளின் பாவனையில் மேலும் அவளின் பால் ஈர்க்கப்பட்ட ஆதித், ஏய் பொண்டாட்டி அசத்துரடீ.... உன் கிட்டவந்தேனா அப்படியே பச்சக்குன்னு உன் கூட ஒட்டிக்குவேன் அப்புறம் ஹாஸ்பிடல் போக டைம் ஆகிடும். சோ! போய்ட்டுவந்து உன்ன வச்சுக்கிறேன் என்று அவளை பார்த்துகூறிகொண்டே பாத்ரூம் நோக்கிச் சென்றான் .
அவன் அவ்வாறு கூறியதும் அவனை பார்த்து வாயை சுளித்து வக்கனைத்தவள் வெளியில் பார்க்க டீசண்டா ஜென்டில்மேன் போல இருந்துகிட்டு இப்போ பாரு பார்வையை லோக்கல் ரவுடிமாதிரி என்று முனுமுனுத்தாள்.
அவள் கூறியதும் ஆமாம் நானும் ரவுடிதான் அதுக்கு இப்போ என்ன செய்யணும்கிற! பொண்டாட்டிகிட்ட ரொமான்ஸ் ரவுடியாகத்தான் நடந்துக்கிடணும் உன்கிட்ட பொறுக்கித்தனம் பண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பேபி என்று கூறியவன் ஒற்றை புருவம் தூக்கி சிரித்த படி கூறியவன் கண்ணடித்துவிட்டு கிளம்பச் சென்றான்..
----தொடரும்----

Nice
ReplyDeleteதேங்க்ஸ்பா
DeleteNice
ReplyDeleteThanks Kundavi.
DeleteNice
ReplyDelete