பனி இரவில் தணலாவாய்[தீபாஸ்-ன்]
பாகம் 2
அத்தியாயம்-24
அழகுநிலாவை ஜானகியிருந்த வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு ஹாஸ்பிடலுக்கு வந்த ஆதித் அங்கு டிஸ்சார்ஜ் ஆக ஆயத்தமாக இருந்த ஜானகியிடம் வந்தான் .
அவன் வந்ததும் அவனின் பின்னால் அழகுநிலா வருகிறாளா! என்று எட்டி பார்த்த ஜானகி, எங்கப்பா! என் மருமகள் என்று கேட்டார்
அம்மா..., அவளை வீட்டில் உங்கள் ரூமை வேலாம்மாளுடன் இருந்து ரெடிபண்ணச்சொல்லி விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் ஜானகி, “ரூம் கிளீன்செய்ய வேலம்மாள் மட்டும் போதும் அழகிக்கு அங்க என்ன வேலை ஆதித்?” என்று கேட்டாள்
அவள் அவ்வாறு கூறியதும் “உங்க ரூமில் ஹாஸ்பிடல்காட் புதுசா வங்கி போட்டிருக்கிறேன்மா அதை உங்க ரூமில் வேலையாட்களை வைத்து செட்பன்னிகிட்டு இருக்கா..” என்று கூறினான் ஆதித்
பின்பு ஆம்புலன்சின் உதவியுடன் ஜானகி மற்றம் வேலாயுதத்தையும் சுமந்துகொண்டு ஒரு நர்சுடன் ஆம்புலன்ஸ் வீட்டை அடைந்தது.
வாசலுக்கு வந்த அழகுநிலா அத்தைக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள் ஹாஸ்பிடல் அட்மாஸ்பியரை தனது அறையில் எதிர்பார்த்திருந்த ஜானகிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஜானகிக்கு படுக்கை விரிப்பு முதற்கொண்டு அந்த அறையின் ஜன்னல் டோர் மற்றும் டேபிள் முதலியவற்றில் வீற்றிருந்த புதிய வால்ஹங்கர் மற்றும் அறையில் அவளின் படுக்கையின் அருகில் உயரமான டீ.ட்ரே
அதில் வைத்திருந்த ஸ்டாண்டில் மொபைல் மற்றும் டிவி ,ஏ.சி ஆகியவைகளின் ரிமோட் மற்றும் தண்ணீர் ஜாடி மற்றும் கட்டிலின் கீழே கால் வைத்து இறங்குவதற்கு போடபட்டிருந்த அழகு வேலைபாட்டுடன் இருந்த குட்டி ஸ்டூல்
மற்றும் இதமான பெர்பியூம் மணம் பெட்ரூமில் புதிதாக இடம்பெற்றிருந்த டிவி அவளது ஹாஸ்பிடல்காட் பக்கத்தில் எபோழுதும் இருக்கும் மரக்கட்டிலின் விரிப்பு மற்றும் கர்டன் அனைத்தும் பேபி பிங் கலரில் மேலும் அந்த ரூமின் வெளிவராண்டாவில் எப்பொழுதும் இருக்கும் டிவி ஷோபா செட்டுடன் புதிதாக ஜானகியை கவனித்துக்கொள்ள வந்திருக்கும் நர்சிற்கு டேபிளுடன் கூடிய வசதியாக உட்காருவதற்காக ஒரு சேருடன் ரம்மியமாக இருந்தது .
அம்மாற்றத்தை பார்த்த ஜானகி தனக்காக யோசித்து யோசித்து ரூமை மாற்றி அமைத்த அழகுநிலாவிடம் கூறினாள்,
“நான் வீட்டினை ஹாஸ்பிடல் காட் போட்டு மருத்துவமனைபோல மாற்றி இருப்பீங்கன்னு பயந்துகொண்டே வந்தேன், ஆனால் நீ என் ரூமை சொர்க்கம்போல ரெடிபன்னியிருகிறாயே ரொம்ப வேலையோ? என் புதூ மருமகளுக்கு”என்று கேட்டாள்.
உடனே அழகுநிலா “இதென்ன பெரிய வேலையா? நான் மட்டுமா தனியா இதெல்லாம் செய்தேன்...? கூட இங்க வேலை பார்ப்பவர்களின் உதவியுடன் செய்தேன்” எனச் சொல்லி, “என் அத்தைக்காக இதுகூட நான் செய்யமாட்டேனா” என்று கண் சிமிட்டி ஜானகியிடம் பதில் கூறினாள்.
அங்கிருந்த ஆதித்துக்கு தனது அம்மாவிடம் கண்சிமிட்டி கொஞ்சி கொஞ்சி பேசிய அழகுநிலாவினை பார்த்தவன் மனதினுள் என்கிட்ட இப்படி கொஞ்சி பேச மாட்டாளா! என்று நான் ஏங்கிபோய் இருக்கிறேன் இவ என்னடான என் அம்மாவிடம் மட்டும் கொஞ்சிட்டிருக்கா என்று அவளையே பார்த்துகொண்டிருந்தான்.
அப்பொழுது ஜானகி அழகுநிலாவிடம் “ஆதித்தை பார் நாம ரெண்டுபேரும் குளோசா இருக்கிறதை பார்த்து அவனுக்கு பொறாமையா இருக்கு” என்று சரியாக அவனின் மனவோட்டத்தை கணித்து கூறினாள்.
உடனே கெத்தாக முகத்தை வைத்துகொண்ட ஆதித் “அப்படியெல்லாம் இல்லவே... இல்லை...பா” என்று பெருமூச்சு விட்டான்.
அதற்கு அழகுநிலாவும் ஜானகியும் சேர்ந்தவாறு “நம்...பிட்டோம்” என்று கோரசாக சொன்னார்கள். .
அதனை பார்த்துகொண்டு அங்கு நின்றுகொண்டிருந்த வேலாயுதம், “என் பையன் பாவம் இரண்டுபேரும் சேர்ந்துகிட்டு அவனை கலாய்ச்சா அவனுந்தான் என்ன பண்ணுவான்” என்றார்.
அவரின் வார்த்தைகளை கேட்ட ஆதித் நீண்ட வருடத்திற்குபிறகு இயல்பாக தன்னிடம் பேசும் அவரை பார்த்து புன்னகைத்தான்.
ஜானகிக்கு தனது உடல் நிலை வீட்டிற்கு வந்ததுமே பாதி தேறிவிட்டதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது.
அத்துடன் அழகுநிலா அவளின் அருகில் இருந்து அவளை பார்த்து பார்த்து கவனித்துகொண்டதோடு மட்டுமல்லாது அவளின் மனம் அறிந்து அவளுக்கு நல்ல தோழியாக நடந்துகொண்டது ஜானகியின் மனம் சந்தோஷமடைந்து முகத்திலும் பூரிப்பைக் கொண்டுவந்தது.
வேலாயுதமும் ஆதித்தும் ஜானகியின் உடல்நிலை மற்றும் அவசரகல்யாணம் ஆகியவற்றால் தொடர்ந்து கவனிக்காமல் விட்ட தங்களது தொழில்களில் தேங்கிய வேலைகள் நிறைய இருந்ததால் வந்ததும் அழகுநிலாவிடம் ஜானகியை கவனித்துகொள்ளும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளியேறினர்.
அன்று இரவு9:30க்கு நர்சிடம் இரவு ஜானகிக்கு எதுவும் தொந்தரவு வந்தால் எந்த மாத்திரைகளை கொடுக்கவேண்டும் என்ற டீடெய்ல்ஸ் கேட்டுக்கொண்ட அழகுநிலா அவரையும் வேலம்மாளையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஜானகியுடன் அவரது அறையில் இருந்தாள்.
அன்று இரவு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்த ஆதித்தின் கண்கள் அழகுநிலாவைத் தேடியது தனது அம்மாவின் அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக உள்ளே தெரிந்த வெளிச்சத்தில் அங்கு விரைந்து சென்றான் ஆதித்,
ஜானகி அவள் பெட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்துகொண்டு சிரித்தமுகத்துடன் அழகுநிலாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
பெட்டில் அமர்ந்திருந்த வேலாயுதத்திற்கு... அவரின் முன் சிறிய டி ட்ரேயில் இரவு உணவு பரிமாரிக்கொண்டு பேசியபடி இருந்த அழகுநிலாவை கண்டவன் மனம் சிறகைபோல் சந்தோசத்தில் பறந்தது.
தானும் மற்ற குடும்பம்போல் அப்பா அம்மா உடன் ஒரேடேபிளில் சந்தோசமாக உட்கார்ந்து பேசி சிரித்து சாப்பிடகூட முடியாதவாறு அமைந்திருந்த தனது வாழ்க்கையை மந்திரகோலால் மாற்றிவிட்ட தேவதை பெண்ணாக அழகுநிலாவை அவன் கண்டான்.
கதவு திறந்து உள்ளேவந்த ஆதித் தனது மனைவியை பார்த்தபடி பிரீஸாகிநின்ற ஆதித்தை பார்த்த ஜானகி, “டேய் ஆதித்..... இங்க நானும் உன் அப்பாவும் இருக்கிறோம்.
என் மருமகளை ரூமுக்கு கூட்டிகொண்டுபோய் பாரு” என்றவர், “அழகி மாமா சாப்பிட்டு முடிக்கப் போறார் நீ போய் ஆதித்துக்கு டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்துவைமா” என்றார்.
ஆதித் வருவதை கவனிக்காமல் திரும்பிநின்றபடி பரிமாறிகொண்டிருந்த அழகி, ஜானகி “ஆதித்” என்று கூறியதும் வந்துட்டார் என்று ஆவலுடன் திரும்பி பார்த்தவள்
அவன் அவளையே பாத்தபடி நின்றுகொண்டிருந்தததில் முகம் சிவந்தது மனதிற்குள் அத்தை மாமா இருக்கும்போது வெட்கமில்லாமல் என்னையே பார்கிறதைப்பார் என்று நினைத்தவள் ஜானகியின் கிண்டலில் மேலும் சிவந்தாள்
ஜானகி அவனை டேபிளில் சாப்பாடு சாப்பிடச்சொன்னதை கேட்டதும் “அத்தை மாமாவை மட்டும் டேபிளில் சாப்பிடவேண்டாம் என்னுடன் பேசிக்கொண்டே சாப்பிடட்டும் என்று எடுத்துவந்து பரிமாரச்சொன்னீங்க,
உங்க மகனுக்கும் சாப்பாட்டை இங்கேயே கொண்டுவந்து தருகிறேன் எல்லோரோடும் பேசிக்கொண்டே அவரும் சாப்பிடட்டும்” என்றவள்
“என்னங்க இங்க உட்காருங்க நான் உங்களுக்கு சாப்பாடு தட்டில் வைத்து எடுத்துகொண்டு வருகிறேன்” என்று கூறி வெளியேறினாள்.
ம்..என்று அவளிடம் கூறியவன் உட்கார்ந்தபடி “எப்படி இருக்கீங்கமா வீட்டிற்கு வந்ததும் என் மாம் பழையபடி ஹெல்தியாக ஆகிட்டீங்கபோல உங்க மருமக கூட சேர்ந்து ரொம்ப அரட்டயடிகாமல் ஒழுங்கா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று கூறிகொண்டிருகும்போது
“அத்தை அவருக்கு நீங்க என்கூட குளோசா இருக்கிறது பொறாமையா இருக்கிறது அதனாலத்தான் ரெஸ்ட் எடுக்க உங்களை சொல்றமாதிரி நம்ம இரண்டுபேரையும் பிரிக்கப்பார்கிறார்” என்ற சொல்லியபடி “இந்தாங்க சாப்பிடுங்க” என்று தட்டை அவனின் முன் வைத்து பரிமாறினாள்.
ஆதித் அவளின் வார்த்தையைக் கேட்டு சிரித்தபடி “நீயும் அம்மாவும் சாப்டீங்களா...?” என்று கேட்டான்.
அவன் கேட்டதும் ஜானகி கூறினாள், “அழகி எனக்கு மாத்திரை போடனும் என்று சாப்பாட்டை டயத்துக்கு எடுத்துகொண்டு வந்தாள் அப்ப நான் அவகிட்ட சொல்லிட்டேன் இந்த வீட்டு ஆம்பளைங்க சாப்பிட வந்துவிடுவார்கள் என்று காத்திருக்காதே,
உன் மாமனாரும் உன்புருசனும் காலையில் வீட்டைவிட்டு கிளம்பிப்போனா எப்பொழுது வீட்டுக்கு வருவாங்க என்று சொல்லமுடியாது.
அவங்களை எதிர்பார்த்து சாப்பிடாம இருந்தா உனக்கு அல்சர் வந்துடும் அதனாலே எனக்கு சாப்பாடு எடுத்துகொண்டுவரும்போதே உனக்கும் சாப்பாட்டை எடுத்துகொண்டுவந்துடு நாம ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடனும் என்று மிரட்டி அவளையும் சாப்பிட வைத்துவிட்டேன்” என்றார்
ம்.. நீங்க சொல்றது சரிதான்மா, என்றவனிடம் வேலாயுதம் “ஆதித் உங்க அம்மா மருமக வந்ததுகுபிறகுதான் முகத்தில் இத்தனை சந்தோசத்தை காமிக்கிறா,
நான் எத்தனைநாள் நாம குடும்பமா உட்கார்ந்ர்து பேசி சிரித்தபடி சாப்பிடனும் என்றுநினைத்து ஏங்கியிருகிறேன்தெரியுமா..?
அது என் மருமகளால்தான் நிறைவேறியிருக்கு” என்று பாசத்துடன் தனது மகனிடம் சொன்னவர் மனைவியின் முகம் பார்த்து பேசிமுடித்தார்.
உள்ளேவரும்போது தான் நினைத்ததுபோல தனது தந்தையும் நினைத்திருக்கிறார் என்பதனை அவரின் பேச்சிலிருந்தே உணர்ந்தவன் காதலுடன் அழகியை பார்த்தபடியே
“நீங்க சொல்றதுசரிதான்பா என்றவன் அழகுநிலாவை வம்பிழுக்கும் நோக்கத்துடன் வந்த இரண்டு நாள்லேயே என் அம்மாவையும் அப்பாவையும் உன் கைக்குள்ள போட்டுகிட்டபோல” என்று குறும்புடன் கேட்டான்
அவன் அவ்வாறு கூறியதும், “இவரபாருங்கத்த எப்படி சொல்றாரு!” என்னை என்று சினுங்கியபடி கூறியதும் அவர்,
“ஏன்டா என் மருமகளை வம்பிழுக்கிற உன்னைமட்டும்தான் அவ கைக்குள்ள போட்டுகிடனுமாக்கும் இவ்வளவு பொறாமை உனக்கு ஆகாது ஆதித்”, என்று அழகுநிலாவிற்கு சப்போர்ட் செய்வதுபோல ஜானகியும் அவளை வம்பிழுத்தாள்.
“போங்கத்த நீங்களும் அவங்க கூடசேர்ந்துகிட்டு என்ன வம்பிழுக்கிறீங்க, அவங்க காலையில் போய்டு நைட்டுதான் வருவாங்க பகல் முழுவதுவும் நான்தான் உங்க கூட இருக்கபோறேன்
அதனால நீங்க என்கூடதான் கூட்டணி வ்ச்சுக்கிடனும் அப்படியில்லாம உங்க புள்ளகூட சேர்ந்து என்ன கலாய்சிங்க பிறகு இருக்கு”,
என்றவளிடம் வேலாயுதம்சொன்னார் “அவங்க கிடகுறாங்கமா நான் எப்பவும் உன்கட்சிதான் என்றார்.
வேலாயுதம் அவ்வாறு பேசுவதை பார்த்த ஜானகியின் கண்கள் மகிழ்ச்சியில் கண்ணீரை சொரிந்தது.
அதனை பார்த்த மூவரும் பதறியபடி என்ன ஆச்சுத்தே என்று அழகியும், அம்மா என்று ஆதித்தும், ஜானகி என்று வேலாயுதம், பதறியபடி எழுந்து அவரிடம் சென்றனர்.
அழகி சமயோகிதமாக ஜானகி எமோசன் ஆனால் அவளின் ஹர்ட் பீட்டை நார்மலாக்க அவரை அமைதிபடுத்த கொடுக்கசொன்ன டேப்லட்டை எடுத்தபடி தண்ணீருடன் அவரை அணுகி அவரை குடிக்கவைத்தாள்.
அவள் கொடுத்த மாத்திரையை மூச்சுவாங்க அவளிடம் வாங்கி முழுங்கியவள் “எனக்கு ஒன்னுமில்லை நீங்க மூணுபேரும் பதறாதீங்க” என்று மெதுவாக கூறியவள்
வேலாயுதத்தை பார்த்து “நீங்க இப்படி சந்தோசமா பேசி சிரித்து இயல்பாக பேசுறதை பார்த்து எத்தனை வருசமாச்சு, இனி எப்போதும் இப்படியே நீங்க நம்ம பிள்ளைகளோடு சந்தோசமா இருக்கணும்” என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும் ஆதித், “சரிம்மா நீங்க சொல்றதுபோலவே அப்பா இருப்பார் நீங்க எதுக்கும் எமோசனலாகாதீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க” என்று கட்டிலை அவள் படுப்பதற்கு தோதாக ஆதித் இறக்கிவிட்டதும் வேலாயுதம் போர்வையால் அவரை மூடியவர் அவளின் கைபிடித்து அமர்ந்தபடி
ஆதித் நீயும் அழகுநிலாவும் போய் படுங்க அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும் என்றவர் ஜானகியின் அருகில் அமர்ந்துகொண்டார்.
அதற்குமேல் அங்கிருந்தால் ஜானகி ரெஸ்ட் எடுக்கமாட்டார் என்பதை உணர்ந்து அங்கிருந்த சாப்பாட்டுதட்டு மற்றும் கிண்ணங்களை அழகியுடன் சேர்ந்து ஆதித்தும் எடுத்துகொண்டு அவளின் பின்னாலேயே அடுப்படிக்குள் வந்தான்.
அழகி தட்டுகளை ஒதுக்கி சிங்கிள் போட்டு கழுவுவதை பார்த்துக்கொண்டு நிலையில் சாய்ந்தபடி நின்ற ஆதித் “தாங்க்ஸ் பேபி...,” என்றான்.
“எதுக்கு” என்று அழகிகேட்டதும் “எல்லாத்துக்கும் அம்மாவை கவனிச்சுகிட்டதுக்கு, அழகான குடும்ப சூழலை எனக்கு மீட்டுக் கொடுத்ததுக்கு,
உனக்கு ஒன்று தெரியுமா அழகி! நான் அம்மாவின் ரூமிற்குள் வந்ததுமே நானும் அப்பா சொன்னதுபோல் இதேமாதிரி குடும்பமாக எல்லோரும் சேர்ந்து ஒன்றாக உட்கார்ந்து சாபிடமாட்டோமா? என்ற என் ஏக்கத்தை போக்கிய தேவதையா உன்னை அங்கு பார்த்து பிரீஸாகி நின்னுட்டேன்” என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் அழகி “எண்ணங்க இதுக்கு போய் இப்படி தாங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க!
நான் அப்படி பெருசா எதுவும் செய்யல அத்தையும் மாமாவும் என்னிடம் பாசமாக நடந்துகொள்கிறார்கள் அதனால் நானும் இயல்பாக குடும்பத்தில் கலந்து எல்லாம் செய்கிறேன் இதில் என்ன இருக்கு” என்று கூறினாள்.
அவள் கூறுவதை கேட்டதும் சிரித்தபடி அவளை ரசித்துகொண்டே மனதினுள் ‘இதுதான் அழகி இந்த இயல்புதான் என்னை உன்னிடம் தடுமாற வைத்தது.
உன் இடத்தில் வர்ஷா இருந்தால் பணியாளர்களை கொண்டு என் அம்மாவை கவனித்திருப்பாள். என் அப்பாவிடம் ஹாய் அங்கிள் என்ற வார்த்தையோடு தள்ளி நின்றிருப்பாள்.
ஆனால் என் குடும்பத்தை திரும்ப உயிர்ப்புள்ளதாக மாற்றி என்னிடம் தந்திருக்க மாட்டாள்’, என்று நினைத்தான். மேலும் மனம் ஒருவரை சிறந்தவராக எண்ணினால் அவர்களின் ஒவ்வொரு அசைவும் அழகானதாகவே தோன்றும். .
அழகி ஜானகி விருப்பத்தின் பேரில் அன்று சாயங்காலம் புடவை உடுத்தியிருந்தாள் பாத்திரம் கழுவுவதற்காக முந்தானையை கொத்தாக இடுப்பில் சொருகியிருந்தாள் அதனால் அவளின் இடையில் நீர் தெறித்து பனித்துளிகளாய் மின்னியது.
அவளை ரசித்தவன் கண்களில் அவளின் இடைவிசை இழுத்தது, எனவே அவனும் மெல்லமாக அவளில் பின் வந்துநின்றவன் அவளின் இடையில் தனது கைகளை தவழவிட்டான்.
ஏற்கனவே ஆதித் நிலையின் அருகில் நின்றபடி தன்னையே பார்த்துகொண்டிருப்பதை திரும்பி நின்று பாத்திரம் கழுவினாலும் அவளால் உணரமுடிந்தது.
அவனின் பார்வை வீச்சில் தடுமாற்றத்துடன் இருந்தவளின் இடையில் அவனின் கைப்படவும் அவள் கை தனது வேலையை நிறுத்திவிட்டது.
நெளிந்தபடி ஆதித் ப்ளீஸ் நான் பாத்திரம் கழுவனும் என்றாள் நானும் உன் கூட சேர்ந்து கிளீன் பண்றேனே பேபி என்றதும் ம்..கூம் நானே செய்துகுவேன் நீங்க போய் ரெப்ரஸ் ஆகிக்கோங்க என்று கூறியபடி அவனை விட்டு விலகி ஓர் அகல எட்டு சைடில் எடுத்துவைத்து அவனின் கையை எடுத்துவிட்டவள் டென்சனுடன் அவனை பார்த்தாள்.
அவளின் நடுக்கத்தை பார்த்தவன் அதையும் ரசித்தபடி ஓகே நான் ரூமிற்குபோய் ரெப்ரஸாகி முடிக்கறதுக்குள்ள நீ அங்க வந்துருக்கணும் என்று கூறியவன் விசில் அடித்தபடி தனது அறைக்கு செல்லும் படியில் ஏறி மறைந்தான்.
அழகுநிலாவிற்கு அவனின் பார்வையும் தொடுகையும் மயக்கத்தை கொடுத்தபோதும் எதிர்பாராமல் அன்று அவன் தன்னுடன் கூடியதில் இருந்து இன்னும் அவள் மீளவில்லை.
ரூமிற்குள் வந்த ஆதித் மனம் பெரும் சந்தோசத்தில் இருந்தது. அழகுநிலா தன் அம்மாவை கவனித்துகொண்டவிதமும் தான் இன்று வந்ததும் அவள் தன தந்தைக்கு பரிமாறிக்கொண்டு தாயுடன் சிரிப்புடன் பெசிகொண்டிருந்ததை பார்த்த ஆதித்துகு இயல்பாய் தன குடும்பத்தில் பொருந்திகொண்ட விதம் கண்டவன் தான் அவளின் மீது கொண்ட காதலை அவள் புரிந்துகொண்டுவிட்டாள் என்றே அவன் எண்ணினான் .
அவளின் வருகையை எதிர்பார்த்து இரவுடையில் காத்துகொண்டிருந்த ஆதித் இன்னும் என்ன செய்யுரா என்று எண்ணியபடி டிவியில் .சேனல்களை மாற்றி மாற்றி வைத்துகொடிருந்தவன் கடைசியில் மியூசிக் சேனலை வைத்தான் அதில் காதல் சொட்டும் பாடல்கள் ஒலிபரப்பாகிகொண்டிருந்தது..
தனது பிறந்தநாள் அன்று காலையில் அழகுநிலா தன்னை எழுப்பியதும் கனவினில் அவளையே நினைத்துகொண்டு இருந்த தான் அவள் எழுப்பவும் கனவென்ற நினைவில் அவளின் கைபிடித்து வெடுக்கென்று இழுத்ததும் மேலே விழுந்தவளை அணைத்து புரண்டது நினைவினில் வந்து அவனுக்கு புன்னகை எழுந்தது .
ஆதித்திருக்கும் அறைக்கு செல்லவேண்டும் என்ற நினைப்பே அவளுக்கு உதறலை ஏற்படுத்தியது. எவ்வளவு மெதுவாக வேலைகளை செய்தாலும் அது முடிந்தே விட்டது.
இனியும் தாமதப்படுத்த முடியாது என்ற நிதர்சனம் உணர்ந்தவள் மெல்ல அடியெடுத்துவைத்து அவனின் அறையை அடைந்தாள்.
கதவை திறந்து பார்த்த அழகுநிலா அன்றொருநாள் காலையில் தான் அவனை எழுப்ப வரும்போது எவ்வாறு படுத்து உறங்கிகொண்டிருந்தானோ அதேபோல் இன்றும் உறங்குவதை பார்த்த அழகுநிலாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் தனக்காக காத்திருக்காமல் உறங்கியது ஏமாற்றமும் எழுந்தது.
அவள் கொண்டுவந்த நீர் ஜாடியை கட்டிலின் அருகில் இருந்த டேபிளில் வைத்தவள் திரும்பிய மறுநொடி அன்றுபோல் இன்றும் அவளை இழுத்துதன்மேல் போட்டுகொண்டான்.
அதை எதிர்பார்க்காத அழகி ஆ என்று சத்தம் எழுப்ப முயன்றநேரம் அவளின் முகத்தில் மோதிய அவனின் முகம் அவளின் இதழ்தேனை ருசிக்க ஆரம்பித்தது.
முதலில் பயந்தவள் பின் அவனின் அதிரடியான முத்தத்தில் அதிர்ந்து நேரம்செல்லச்செல்ல தன்னை அவனுள் தொலைக்க ஆரம்பித்தாள்.
அவனின் முத்த யுத்தத்தில் மூச்சுக்காற்றுக்காக தவித்தவளை மூச்செடுக்க விலக அனுமதித்தான் அவனிடமிருந்து விலகி எழுந்து அவள் அமர்ந்தாள்.
அந்தநேரம் டிவியின் அரவிந்தசாமி இந்திரா திரைப்படத்தில் தனது காதலிக்கு அதிரடியாக முத்தமிட்டு ஒலிக்கும் பாடல் ஒளிபரப்பாகிகொண்டு இருந்தது தங்களின் நிலையையே அந்த பாடல் பிரதிபளிப்பதுபோல் இருவரும் உணர்ந்தனர் .
அதனை தொடர்ந்து ஆவலுடன் அவளை அணுகநினைக்கும்போது அவள் கட்டிலின் அந்தபக்கம் அவனின் கையில் அகப்படாமல் இறங்கிச்சென்று பால்கனி கதவைதிறந்து போய் இரவில் ஒளிவிடும் நிலவை ரசிப்பதுபோல் நின்றுகொண்டாள் .
அவளின் அருகில் போய் நின்றுகொண்டு அவளை ரசனையாய் பார்த்தபடி ஒலித்துகொண்டிருந்த பாடலுடன் சேந்து பாட ஆரம்பித்தான்
தொட தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
தொட தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?
மழை வர பூமி மறுப்பதென்ன?
அவளை தாபத்துடன் அணுகும் ஆதித்தை தவிர்த்து சென்றதை தாளாமல் பாட்டாலேயே அவளிடம் கேள்வி கேட்டான் .
பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?
மழை வர பூமி மறுப்பதென்ன?
தொட தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
அன்றொருநாள் இரவில் தான அவளுடன் கலந்து அவளின் நெஞ்சில் காலடி பத்தித்ததை யார் அழித்துவிட்டார் என்று கேள்வி கேட்பதுபோல் இருந்தது அடுத்துவரும் வரிகள் .
அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடி தடம் பதித்தோம்.. யார் அழித்தார்?
அவனின் சூட்சுமமான கேள்வியை உணர்ந்தவள் இந்த பூவை கொய்தவன் யார் நீதானே என்பதை
நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?....
என்று கேள்வியால் நீதானே அது என பதிலை கேள்வியாகவே கேட்டாள் படலின் வரிகளை ஜாடை காண்பித்தபடி. .
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை....
என்று அவளின் இதழை கூர்ந்தபார்த்தபடி பாடிகாட்டினான்
அவனின் பார்வை வீச்சில் சற்றுமுன் நடந்த முத்தத்தை நினைத்தவள் உதடுகளும் அடுத்த வரியை பாடலுடன் முணுமுணுத்தது.
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை....
என்று அவனின் தொடுகையை தாளாமல் அவன் மேல் சாய்ந்தபடி
தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச் சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப் பின்ன நடுக்கமென்ன
தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச் சுட நனைந்ததென்ன
என்று பாடியவளை கைகளில் ஏந்திக்கொண்டு கட்டிலை அடைந்தவன் பாடலை பாடுவதை மறந்து பாடலின் வரிகளை அவளுடன் சேந்து அனுபவிக்க ஆரம்பித்தான்
பனிதனில் குளித்த பால்மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே...
அவனின் செயலை வெட்கம் காரணமாக தடுக்க முயன்றவளிடம் கேள்விகேட்டான் அதற்கு பாட்டாகவே
மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே....
என்று பதில் கொடுத்தாள்
தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச் சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?
மழை வர பூமி மறுப்பதென்ன?
தொட தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பாடலின் முடிவில் அவளை முழுவதும் தனது ஆழுமையினுள் கொண்டுவந்து சுகித்து கிறங்கினான் ஆதித். .
இணையுடன் சுகமாய் உறங்கிகொண்டிருந்த ஆதித்தின் நிம்மதிக்கு உலைவைக்கும் செயலில் அன்று இரவு ஆதித்தின் கம்பெனிக்கு சாப்ட்வேர் ப்ரோகிராம் செய்துகொடுத்து சர்வீஸ் செய்துவரும் ஜேம்ஸ் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்
ஜேம்ஸின் தங்கை கல்யாணம் இன்று நல்லபடி முடிந்தும் அவனுள்ளம் சந்தோசத்தால் நிரம்பவில்லை அதற்குகாரணம் அவனின் அப்பா மினிஸ்டர் காந்தனின் காலேஜில் பிரபசராக வேலை பார்ப்பதால் கரஸ்பாண்டன்ட் என்ற முறையில் மினிஸ்டர் காந்தனுக்கு பத்திரிகை வைத்திருந்தார்.
மினிஸ்டர் காந்தன் தனது கம்பெனி மற்றும் காலேஜில் வேலைபாற்பவர்கள் யாரேனும் பத்திரிக்கை வைத்தால் மக்களுடன் தான் இயல்பாய் பழகுவதுபோல் தோற்றத்தை உருவாக்க அவர்களின் வீட்டு விழாவில் கலந்துகொள்வதை வழக்கமாக்கா வைத்திருப்பார்.
இந்நிலையில் தனது கல்லூரி ப்ரொபசர் வீட்டுதிருமணத்திற்கு அவர் டெல்லிக்கு போவதால் செல்லமுடியாத சூழ்நிலை உண்டானதால் தன் மகனை தன் சார்பாக அந்த கல்யாணத்தில் கலந்துகொள்ளச்சொல்லி அனுப்பியிருந்தார்
கல்யாணத்துக்கு வந்த நரேனை ஜேம்ஸின் அப்பா மாலை மரியாதையுடன் மணமக்களின் அருகில் வாழ்த்துவதற்கு கூட்டிக்கொண்டு போவதை பார்த்த ஜேம்ஸ் ஆத்திரமடைந்தான்.
இவனெல்லாம் கண்டிப்பாக வாழ்த்தவேண்டுமா? என்ற கடுப்பும் வீடியோவில் பார்த்த தங்கையை அடையாளம் கண்டுகொண்டு அவனின் பார்வை ரசித்ததை அருவருப்பாக உணர்ந்தனர். ஜேம்சுக்கும் மணமக்களுக்கும் அவனை பரபரவென்று பிடித்திழுத்து மண்டப்பத்தைவிட்டு துரத்தவேண்டும் என்ற எண்ணம் உண்டானது
அவ்வாறு செய்யமுடியாமல் அவனின் அப்பாவின் பதவியும் அவனுடன் வந்த கட்சி தொண்டர் என்ற பேரில் வந்த அடியாட்களும் அவனின் பதவியும் அவனை கட்டிபோட்டது .
எனவே கல்யாணம் முடிந்த அன்று இரவே அவனின் முகத்திரையை கிழிக்க முடிவெடுத்த ஜேம்ஸ் தன்னுடைய மொபைலில் இருந்த நடிகையுடனான அவனின் அந்தரங்கத்தை வலைதளத்தில் வைரலாக்கும் முயற்சியில் ஈடுபட்டான் அதில் அவனுடன் கூத்தடித்த மாதேஷ் மற்றும் இன்னும் இருவரும் ஈடுபட்ட அசிங்கமும் சேர்ந்து கடைபரப்பபட்டது .
மேலும் அந்த காட்சியின் பேக்ரவுண்ட் சவுண்டாக நரேனின் கேவலமான பழக்கத்தையும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் நிலையையும் காணொளியாக இருக்குமாறு இருந்தது .
ஆதித் அந்த வீடியோவை வைரலாக்கவில்லை காரணம் அன்று ஹோட்டலில் காந்தனுடனான பேச்சுவார்த்தையின் முடிவில் ஆதித் அவரை வார்ன் பண்ணியிருந்தான்.
உன் மகன் நரேனை எச்சரித்து வை இனி என் கண் அவனின் மேல் அப்போ அப்போ விழுந்துகொண்டே இருக்கும்
இதேபோல் திரும்பி பொண்ணுங்களை அவங்களுக்கு தெரியாம போட்டோ வீடியோ எடுக்கிறது சில்மிசம்பன்றது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிஞ்சது என் கிட்ட இருக்கின்ற போட்டோஸ் வீடியோசை வலைதளத்தில் விட நான் யோசிக்க மாட்டேன் அதில் இருக்கிறது உன் மகன் மட்டுமல்ல என் எதிரி மாதேசும்தான்
அதனால் அது வெளிவந்து உன் மானத்துடன் என் அப்பாவின் மூத்த பிள்ளை மானம் போவதை பற்றி நான் கவலை படமாட்டேன் என்று கூறியிருந்தான்.
இந்த வீடியோ வெளியானால் அவமானம் அதனால் கட்சி தலைமை இடத்தில் தான் பதில்வேறு சொல்லவேண்டிய நிலை ஏற்படும் என்ற காரணத்தால் ஆதித்தை ஏதாவது செய்து முடக்குற வரை இதுபோல் சில்லறைத்தனம் பப்ளிக்கில் செய்வதை நிறுத்தச்சொல்லி எச்சரித்து தன மகனை வைத்திருந்தான் மினிஸ்டர் காந்தன்.
இந்த நிலையில் அந்த வீடியோ வெளிவந்தால் அதை ஆதித்தான் செய்தான் என்ற பழி ஏற்படும் அதற்காக அந்த மினிஸ்டர் பழிவாங்கும் செயலில் ஆதித்தின் அன்பு மனைவி பாதிப்பின் விளிம்புக்கு போகக்போவதை ஜேம்ஸ் அப்பொழுது உணரவில்லை .
மறுநாள் காலை ஆறுமணிக்கே ஆதித் எழுந்துவிட்டான் இரவு முழுவதும் தூங்காமல் விடிகாலையில் கண் அசந்த அழகுநிலா ஆறுமணியானதை உணராமல் தூங்கிகொண்டிருந்தாள்.
அன்று அழகுநிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுபதற்காக அழகியின் அண்ணன் குமரேசனிடம் போனில் தொடர்புகொண்டு தான் அவனை பார்க்க விரும்புவதாகவும் அவனிடம் பேசவேண்டும் என்று கூறியும் மேலும் அழகி உங்களை பார்த்தால் சந்தோசப்படுவாள் அதற்காக நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் உங்களிடம் நான் பேசவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தான்.
இன்றுகாலை ஆறுமணிக்கு ஸ்டேசன் வருவதாக குமரேசன் கூறியிருந்ததால் அவனை பிக்கப் செய்வதற்காக எழுந்தவன் அவசர அவசரமாக கிளம்பி ஸ்டேசன் சென்றான் ஆதித் .
ஆதித்தே தன்னை பிக்கப் செய்ய வந்திருப்பதை பார்த்த குமரேசன் ஆச்சரியமடைந்தான் அதனை அவனிடம் காண்பிக்காமல் விரைப்புடனே அவனை நோக்கிவந்தான். .
கெத்தாக எப்பொழுதும் இருக்கும் ஆதித்தோ அழகுநிலாவிற்காக தனது கம்பீரத்தை குறைத்துக்கொண்டு அவனே வழிய சிரிப்புடன் வாங்க குமரேசன் என்று கூறியபடி அவனிடம் பார்மலாக கைகுலுக்குவதற்கு கை நீட்டினான்.
அவனின் உயரம் தெரிந்த குமரேசனுக்கு அதற்குமேல் அவனிடம் முகம்திருப்ப முடியவில்லை மேலும் அப்படி என்னதான் தன்னிடம் சொல்லநினைக்கிறார் என்பதனை அறிய ஆர்வமாகவும் இருந்தான்.
எனவே பதிலுக்கு அவனின் கையை பற்றி குலுக்கியவன் எப்படியிருகிறீங்க உங்க வொய்ப் நல்லா இருக்கிறார்களா? என்று கேள்விகேட்டான்.
என் தங்கை எப்படியிருக்கிறாள் என்று கேட்காமல் உங்கள் வொய்ப் எப்படியிருக்கிறாள் என்று கேட்ட அவனை பார்த்தபடி என் வொய்ப் நல்லா இருக்கிறாள்.
ஆனால் உங்களின் தங்கையாக அவள் சந்தோசமாக இருகிறாளா என்று பார்த்தால் அதற்கு பதில் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
மேலும் உண்மை என்னவென்றால் இப்பொழுது அறிமுகமான என்னாலேயே அழகிக்கும் தவறுக்கும் சம்மந்தமே இருக்காது என்பதை தெளிவாக உணரமுடிகிறதே,
ஆனால் பிறந்ததில் இருந்து அவளை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் எப்படி அவளின் செயலில் தவறு இருக்கும் என நம்பி அவளிடம் ஏன் என்று விளக்கம் கூடகேட்காமல் உங்களால் அவளை தள்ளிவைக்க முடிகிறது.
ஆனால் என்னால் என் மனைவியை பற்றிய உங்களின் தவறான எண்ணத்தை போக்காமல் இருக்கமுடியவில்லை.
அவள் பிறந்த வீட்டின் உதாசீனத்தை தாங்கமுடியாத தவிப்பை என்னால் பார்த்துட்டு இருக்க முடியாது.
என்ன நடந்தது என்பதை உங்களிடம் கூறி உங்களின் அன்பை திரும்ப அவளுக்கு மீட்டுக்கொடுப்பதை நான் அவளுக்கு செய்கிற கடமையாக நினைத்துதான் உங்களை இங்கு வரவழைத்தேன் என்று கூறியபடி காரை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.
ஒரு காபி குடித்துகொண்டே பேசலாம் பேசிமுடித்தபின் உங்களுக்கு உங்களின் தங்கைமேல் தவறு இல்லை என்று நம்பிக்கை ஏற்பட்டால் அதன் பின் அவளை பார்க்க என்னுடன் என் வீட்டிற்கு வந்து என் வொய்பை பார்க்கலாம் என்றான்
அவன் பேசப் பேச குமரேசனுக்கு அழகு நிலா ஆதித்துடனான காதலை தவறு என்று மூர்க்கமாக எதிர்க்காமல் ஏன் இப்படி செய்த என்று கேட்டிருக்கணுமோ நானும் அம்மாவுடன் சேர்ந்து அவசரப்பட்டு அழகுநிலாவை ஒதுக்கிவிட்டோமோ!
அவளிடம் ஏன் இப்படி குடும்ப மானம் போகும்படி சம்பந்தம் பேசிய வீட்டின்முன் அவமானத்தை ஏற்படுத்தினாய்?
உனக்கு மாப்பிள்ளை பார்த்து ஆசையாசையாய் கல்யாணம் செய்யணும் என்ற நினைப்பை உடைத்தாய்? என்று மனம் விட்டு பேசியிருக்கணுமோ! என்று காலம் கடந்து யோசித்தபடி அவனுடன் காபி ஷாப்பிற்குள் நுழைந்தான் .
---தொடரும்---

Nice ud
ReplyDeleteNice
ReplyDelete