anti - piracy

Post Page Advertisement [Top]

நீலநிலா[ஆதன்-னின்    
பாகம்   
அத்தியாயம்- 15

                                                                           


விதியின் சதி!

காலை எட்டு மணிக்கு வானதியின் மொபைல் சிணுங்கியது. அதிசயமாய் எட்டு மணியாகியும் வானதி உறங்கிக்கொண்டிருந்தாள்.

மொபைலின் அழைப்பு மணிக்கேட்டு கண்விழித்து கடிகாரத்தை பார்த்தப் பொழுது. அவளுக்கே அதிர்ச்சியாய் இருந்தது! கையில் மொபைலை எடுத்த போது டாடி என்று காட்டி அடங்கியது.

வானதியே வரதராஜனுக்கு போன் அடித்தாள்.

"டாடி எங்க இருக்கிங்க திருச்சி  ஏர்போர்ட் மா"!

"கார் அனுப்ப நைட்டே சொல்லிட்டன் டாடி கார் வந்திருக்கும் பத்ரமா வாங்க"என்ற வானதி போனை கட் செய்துவிட்டு. டிரைவருக்கு போன் அடித்தாள் எதிர்முனையில் பவ்யமாய் ஹலோ மேடம் என்றது டிரைவரின் குரல்.

"டிரைவர் அப்பாவுக்கு உடம்பு முடியல போல. டிராபிக் கொஞ்சமா இருந்தா வண்டிய வேகமா கொண்டு வந்துருங்க" என்ற வானதி போனை கட் செய்தாள்

அடுத்த முக்கால் மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்த வரதராஜன் நேராக அறைக்குச் சென்று படுத்தார். ஆனால் வானதியால் அப்படி இருக்க முடியவில்லை. வரதராஜன் அறைக்குள் சென்றாள்.

அறைக்குள் சென்றவள் அவர்  கழுத்தில் கையை வைத்து பார்த்தாள் காய்ச்சல் கொதித்தது. தும்மல், ஓயாத இருமல் வேறு!

"டாடி எழுந்து நில்லுங்க"

" ஏம்மா கொஞ்சம் படுக்கிறன்"

" டாடி எழுந்து நில்லுங்க"னு கடுமையாகச் சொன்னதும் வரதராஜன் முடியாமல் எழுந்து நின்றார்.

டிரைவரை அழைத்த வானதி வரதராஜனை காருக்கு அழைத்து வரச்சொன்னாள். வரதராஜன் மறுக்க மறுக்க காருக்கு அழைத்து வரப்பட்டார்.

ட்ரைவர் "எங்க போறதுங்கமா?! " என்றான்

"சிட்டிக்குள்ள ஹாஸ்பிடலுக்கு போ என்றாள் வானதி. வண்டிய நகர்ந்தது.

"வண்டிய நீங்க முடியற அளவு வேகமா ஓட்டுங்க" என்றாள் வானதி கார் சீறியது….

திருச்சி நகரத்துக்குள் பிரபல ஹாஸ்பிடல் முன் கார் நிற்க அந்த ஹாஸ்பிடலின் மெடிக்கலில் உயர்ரக மாஸ்க் ஒரு டஜன் வாங்கி வர பணம் தந்து அனுப்ப குழப்பமாக மெடிக்கலுக்கு போனார் டிரைவர், போன டிரைவர் வாங்கி வந்தார்.

மூனு பேரும் மாஸ்க் அணிந்துக்கொண்டு எங்க போகனும் மேடம் என்றார் டிரைவர்!

"ஜி. எச் போங்க"என்ற வானதியின் மொபைல் சிணுங்கியது. காரும் கிளம்பியது!

"சொல்லு வெற்றி"

"என்ன பண்ற"

"அப்பாவுக்கு உடம்பு முடியல அதான் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கேன்"

" என்னாச்சு எங்க இருக்க நான் வந்திடறேன்"

"வேண்டாம் வெற்றி மொபைலை மட்டும் ஆன்ல வை. நான் கட் பண்றன் என்றவள் கட் செய்தாள்.

ஓபி வார்டுக்கு சென்றவள் அங்கிருந்த பெண்ணிடம்…..

"இவர் என் பாதர். கொரோனா இருக்குமோ என்ற டவுட் இருக்கு ஸோ செக் பண்ணனும்.
டாடி சென்ட்ரல் மினிஸ்டருக்கு போன் பண்ணுங்க டீன்கிட்ட பேசச் சொல்லுங்க" என்று வானதி சொல்ல ஓபியில் இருந்த பெண் மிரண்டாள்.

உடனே வீல் சேர் வந்தது. வரதராஜன் சென்ட்ரல் மினிஸ்டரிடம் பேச உடனடியாக டீனிடம் பேச டீன் எதுவா இருந்தாலும் சிறப்பா பார்த்துடலாம்னு உறுதியளித்ததை மினிஸ்டர் கால் பண்ணி வரதராஜனிடம் சொல்ல, வரதராஜன் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முக்கால் மணி நேரம் கழித்து வானதியிடம் டீன் வந்து கொரோனாவுக்கான அறிகுறிகள் அதிகமாவே இருப்பதை சொன்னார்.

"ஓகே ஸார் என்னையும் என் டிரைவரையும் தனிமைப்படுத்துங்க. அடுத்து நாங்கள் ட்ரைவர் வரை மொபைல் பயன்படுத்திக்க அலவ் பண்ணனும்"

"ஓகே நோ ப்ராப்ளம் நீங்க அட்மிட் ஆகுங்க என்றதும் அவுளுக்கான அறையில் அட்மிட் ஆக. டிரைவரும். அட்மிட் ஆக வெற்றிக்கு போன் அடித்தாள்….

"ஹலோ வானதி"

"வெற்றி அப்பாவுக்கு கொரோனா அட்மிட் ஸோ நானும் டிரைவரும் அட்மிட்"

" என்ன சொல்ற வானதி" என்று அதிர்ச்சியடைந்தான் வெற்றி.

"இங்க பாரு வெற்றி இன்னும் ஒரு மணி நேரத்தில் நீ வெற்றி சுதாகர கூட்டிக்கிட்டு, உங்க. எங்க வீட்ல தகவல் சொல்லிட்டு, யாரையும் இங்க வர வேண்டாம்னு அழுத்திச் சொல்லு,

 அப்புறம் எங்க மூனுபேர் மொபைலுக்கான சார்ஜரை மறக்காம எடுத்துக்கோ நேகாவிடம் கேள் டிரசையும் மூனு பேருக்கும் எடுத்து தருவாள். சீக்கிரம் வெற்றி" என்றாள் வானதி.

வானதி சொன்னதை அப்படியே செய்தான் வெற்றி. ஆரம்பத்தில் அனைவரும் பயந்தாலும் பின்பு வானதி சொல்லச் சொல்லவும் அமையானார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பிய ப்ளைட் முதல் கடையா பார்த்த ஆள், வந்த ப்ளைட் வரை விசாரணை நடந்து முடிந்தது வரதராஜனிடம்!

வானதி மீண்டும் போன் அடித்தாள் வெற்றிக்கு 

"வெற்றி எங்க இருக்க"

" நீ சொன்ன்படி செஞ்சிட்டன். சார்ஜர் எடுத்தாச்சி. சுதாகர் கூட இருக்கார். "

"இங்க வந்தா எங்களை நீங்க பார்க்க முடியாது. சார்ஜர் வேணும் ஸோ இங்க வந்து இந்த நம்பருக்கு போன் பண்ணு இது சிஸ்டர் நம்பர் அவங்க சார்ஜரை. எங்களுக்குத் தந்துருவாங்க"

"ஓகே வானதி" என்றான் வெற்றி.

முள்வேலியில் செந்தாங்கல்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சமூக நலத்துறை மற்றும் காவல் துறை செந்தாங்கல்லை சுற்றி வளைத்து சீல் வைத்தது. மைக் மூலம் மக்களுக்கு உண்மை நிலவரம் சொல்லப்பட்டது. செந்தாங்கலுக்கு மட்டும் ஒருவாரம் 144 போடப்பட்டது. உடனடியாக அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. செந்தாங்கலுக்கு உள்ள வர அனுமதி உண்டு செந்தாங்கலில் வீடு இருந்தால். ஆனால் வெளிய போக அனுமதியில்லை.

பக்கத்து ஊர்களுக்கும்  தீவிரமாக பயப்படத் தேவையில்லை என்று போலீசாரால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஹாஸ்பிடலுக்கு சென்ற வெற்றி வானதி கொடுத்த நம்பருக்கு போன் செய்து ஓபியில் நிற்பதாக கூறினான். அந்த சிஸ்டர் வர கொண்டுவந்த பொருட்களைக் கொடுத்தான். அவரவர் பொருட்கள் அவர்களிடம் போய்ச் சேர்ந்தது.

தனக்கிருக்கும் செல்வாக்கால் இதை பெரிய நியூஸ் ஆக்காம இங்க பார்த்துக்கொண்டார் வரதராஜன்.

டிரைவருக்கு போன் செய்தாள் வானதி!

" ஹலோ மேடம்"

" எதுக்கும் பயப்படாதிங்க. நான் இருக்கேன். எங்களுக்கு தர ட்ரிட்மென்ட், புட் உங்களுக்கும் கிடைக்கும். உங்க சம்பளம் இரண்டு மடங்கா உங்க வீட்டுக்கு போய் சேர்ந்திடும். உங்க வீட்டு அக்கவுண்ட் நம்பரை சுதாகருக்கு அனுப்பி வைச்சிடுங்க. பயம் மட்டும் பயப்படாதிங்க. போன் உங்க கையிலதான் இருக்கும். வீடியோகால் அப்படி இப்படினு வீட்டோட சந்தோசமா பேசுங்க அப்பதான் அவங்க பயப்படாம இருப்பாங்க ஓகேவா" என்று தைரியப்படுத்தினாள் வானதி…..

அடுத்து சுதாகருக்கு போன் அடித்தாள் வானதி.

"ஹலோ மேம்"

" கூட யார் இருக்காங்க? எங்க இருக்கிங்க?"

" மூனுபேருமே மேம் ஹாஸ்பிடலுக்கு வெளிய மேம்"

" சரி சத்தமில்லாத இடத்துக்கு மூனு பேரும்,வந்து அவுட் ஸ்பீக்கர் வைங்க" என்றாள் வானதி….

அப்படியே செய்தான் சுதாகர்…

" ஹாய் அறிவு எப்படி இருக்க"

" நல்லா இருக்கேங்க உடம்ப பார்த்துக்கோங்க எதுனாலும் நாங்க இருக்கோம்"

" ஏ மேன் ஏன்
சோகமா பேசற! ஹலோ வெற்றி !"

" சொல்லு வானதி?!"

" எனக்குலாம் ஒன்னுமில்லை டாடிக்குத்தான் ப்ராப்ளம் அதை சரி பண்ணிடலாம். நான் டிஸ்சார்ஜ் ஆகற வரை நீ திருச்சியில ரூம் போட்டு இரு. நீங்கலாம் பக்கத்துலயே இருக்கற பீல் எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்" என்றாள் வானதி.

"சரி வானதி இருக்கோம்" என்றான் வெற்றி….

"ஹலோ சுதாகர்"

"எஸ் மேம்"

" அட்மிட்ல இருக்க எங்க மூனு பேருக்கும் என்ன டயட்னு டாக்டர்கிட்ட கேட்டுட்டு நல்ல ஸ்டார் ஹோட்டல்ல ஹை ஜீனியக் புட்டா வாங்கு.
நல்ல ஹிஸ்ட்ரி புக்ஸ் ம் பொன்னியின் செல்வன் வாங்கிடு. ஸ்கூல் படிக்கறப்ப சில பேஜஸ் படிச்சிருக்கேன். உங்களுக்கு நீங்க மூனு பேரும் ஒரே ரூம்ல தங்கற மாதிரி நல்ல ஹோட்டலா பார்த்து ரூம் போடு"

"ஓகே மேம்"

"ஆங் அப்புறம் எங்க மூனு பேருக்கும் ஓரிஜனல் ஹெட் செட் தேவை வாங்கி குடுத்திடு."

" ஓகே மேம்"

"சரி நான் வைக்கறன் மூனு பேருக்கும் பை" என்று போனை கட் செய்தாள் வானதி……

அடுத்து வீட்டிற்கு போன் செய்து எல்லாரையும் பயம் இல்லாம இருக்க வைத்தாள். தைரியமாக பேசினாள். வரதராஜன் பத்துநாளில் டிஸ்சார்ஜ் ஆயிடுவார்னு நல்லதிற்காக பொய் சொன்னாள்…….

போதி மரமான தனிமை!

ஏதாவது முக்கியமான விசயம் என்றால் மட்டுமே போன் தனக்கு செய்ய அனுமதித்தாள். எதுவாய் இருந்தாலும் தானே அழைப்பதாய் சொல்லி இருந்தாள்.

 இப்படியே ஒருவாரம் ஓடி இருந்தது.

இந்த ஒருவாரத்தில் அவள் வெளியில் மற்றவர்களிடம் பேசியது குறைவு….. அவளைப் பற்றி அவளே ஆராய்ச்சி செய்தாள். அவளுடைய நிறை குறை. அவளால் எதை மாற்றிக்கொள்ள முடியும் முடியாது என்று மிகச்சரியாக உணர்ந்தாள்..

அடுத்த வாரத்தில் பேச்சு மிகவும் குறைந்து சிந்தனை அதிகமாகியது. ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே வெளியில் பேசினாள்.

இதே வேளையில் வரதராஜனும், டிரைவரும் வேகமாகவே தேறி வந்தார்கள். வரதராஜன் மட்டும் ஒருமாதம் அட்மிட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். இன்னும் மூன்று நாளில் வானதியும் டிரைவரும் டிஸ்சார்ஜ்..,...

வானதி என்ற குந்தவை இப்பொழுது ஆழ்ந்து அனுபவப்பட்ட ஒரு அரசிபோல் காணப்பட்டாள். நிதானமான பேச்சு சந்தோசத்தை அளவாக வெளிப்படுத்துதல் துக்கமென்றாலும் எளிமையாக சகித்தல் தற்காலிக மகிழ்ச்சிகளை புறந்தள்ளுதல் என்று ஒரு வீரத்துறவி போல் மாறி இருந்தாள். செந்தாங்கலில் இருந்தவர்களை சென்னைக்கு மாற்றினாள்.

இன்று டிஸ்சார்ஜ் நாள்.
அதற்கான வேலைகளை சுதாகர் வெற்றி செய்த்துக்கொண்டிருக்க,
அறிவு நேகாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தான்…..
வெற்றி இன்று தனிமையா ஒரு நிமிடம் கிடைத்தாலும் தன் மனதில் இருப்பதை சொல்லிவிடலாம் என்று உறுதியாக இருந்தான்.

ஒரு வழியாக மதியமாக வானதியும் ட்ரைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அனைவரும் காரில் ஏற டிரைவர் சீட்டிலிருந்த சுதாகர் விழித்தான்.

"மேம் எங்க போக"

"செந்தாங்கல்" என்றாள் வானதி..

அனைவருக்குமே ஆச்சரியம் வண்டி செந்தாங்கல் நோக்கி பறக்க….. முக்கால் மணி நேரத்தில் கார் ஆற்றங்கரையில் நின்றிருந்தது. சுதாகர் . டிரைவர் காரிலிருந்து இறங்கி போய் மரத்தடியில் நின்றார்கள்……

வானதி பேசினாள்!

"இந்த ஊருக்கு பேக்டரி கட்ட வந்தன் இப்ப கோவில் ஸ்கூல்னு கட்டறன்." என்றாள் வானதி!

"இந்த ஊர் உன்னை மறக்காது வானதி என்றான்" வெற்றி…..

"நான் என்ன இராஜஇராஜ சோழனா ஹஹஹஹஹ. மறந்தாலும் கவலையில்லை" என்று கூலாக சொன்னாள் வானதி….

"நீ இங்க ஒரு வாரம் இருந்துட்டு போலாமே வானதி" என்றான் அறிவு

"இருக்கலாம்தான் ஆனா மற்றவங்க நோய் அது இதுனு பயப்படுவாங்க. இதே ஓரு மூனு மாசம் கழிச்சி வந்தா மக்கள்கிட்ட பயம் இருக்காது இயல்பா இருப்பாங்க. திரும்ப வந்து தங்குவேன் கோயில், ஸ்கூல் வேலைக்காக" என்ற வானதி தொடர்ந்தாள்…

"அறிவு நேகாவ பத்ரமா பார்த்துக்கோ அவ அப்பாவி அப்பா இல்லாம வளர்ந்த பொண்ணு"

" நேகா சொன்னுச்சா" என்றான் அறிவு….

"நேகாவோட காயம்பட்ட உதடு சொன்னுச்ச என்று வானதி சிரிக்க வெற்றி அடப்பாவி என்றான்…..

"வெற்றி மனித வாழ்க்கைப்பற்றி எனக்கு தெளிவு வந்துருச்சி. அதுக்கு நீதான் காரணம்
தேங்க்ஸ்"என்றாள் வானதி…..

"உன்கிட்ட முக்கியமான விசயமா"னு வெற்றி இழுக்க…….

"அதுக்கு இங்க வேலை இருக்காது வெற்றி. நான் இங்க வந்து தோற்கல ஜெயிச்சுதான் இருக்கன். உன் மனசை ஜெயிச்சுதான் இருக்கன்" என்று வானதி சொல்ல குசி ஆனான் வெற்றி. வானதி மேலும் தொடர்ந்தாள்….

"இந்த வெற்றி இனிக்குது. ஆனா எனக்கில்லை என் ஈகோவுக்கு. ஹாஸ்பிடல் தனிமையில் என்னால் எதெல்லாம் முடியாதுனு தீவிரமா யோசிச்சன். அதுல தெளிவா தெரிஞ்சது என்னால என் ஈகோவ விட முடியாதுனு"

" வானதி உன் மனசுல காதல் இருக்கு என் மனசிலயும் இருக்கு. நீ இப்ப இருக்க குழப்ப நிலைமையில முடிவெடுக்காத" என்று கனிவா கெஞ்சாத குறையா வெற்றி சொன்னான்.

" இல்ல வெற்றி இப்பதான் நான் தெளிவா இருக்கன். நேகா சுமதியைப்பற்றி நேற்றுதான் சொன்னாள். உனக்கு அவதான் சரியான ஆளு. நான் கிடையாது"னு வானதி சொல்ல அறிவு ஆச்சரியத்தோட பார்த்தான்.

"இப்ப என்ன சொல்ல வர வானதி" என்றான் வெற்றி…

" நான் மற்றவர்களுக்கு வெண்ணிலா ஆனா எனக்கு நான் நீலநிலாதான். என் ஈகோ உன்னை எந்த காலத்திலாவது முழசா காயப்படுத்தி நோகடிச்சிரும். உண்மைய சொல்லனும்னா நீ நல்லா இருக்கனும்னு விரும்பறன். ரெண்டாவது உன்மேல இருந்த காதல் உணர்வு இப்ப எனக்கில்லை. ஸோ நீ கட்டாயப்படுத்த மாட்டனு நம்பறன் ஏன்னா நீ ஜென்டில் மேன்"

"இல்ல மாட்டேன்" என்றான் வெற்றி….

"அறிவு காருக்கு வெளியபோய் சுமதிக்கிட்ட கல்யாணத்துக்கு வெற்றி சம்மதம் சொல்லியாச்சுனு சொல்லிட்டு வா என்று அனுப்பி வைத்தாள் வானதி.

வெற்றி எதிர்பாராத கணத்தில் அவன் இதழ்களில் ஆழமாக முத்தம் ஒன்றை தந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தாள் வானதி. அதிர்ச்சியில் உறைந்த வெற்றி அப்படியே இருக்க. அறிவு மீண்டும் காரில் ஏறினாள்….

"வெற்றி இது என் ஞாபகத்திற்காக எனக்காக. உனக்கில்லை இத நீ மறந்திரு" என்று வானதி சொல்ல அறிவுக் குழம்பினான் வெற்றி தெளிந்தான்.

"சரி நேரமாகுது நாங்க கிளம்பறோம் அவர்களை வரச்சொல்லு வெற்றி" என்று
வெற்றியை அனுப்பிவிட்டு. அறிவிடம் பேசினாள்..

"உனக்கும் நேகாவுக்கும் கல்யாணம் நிச்சயம் என் தலைமையில் நடக்கும். இப்போதைக்கு ஓரு ஆறுமாதம் அவ என்கூட இருக்கட்டும் ஓகேவா" என்றாள் வானதி..

"ஒரு வருசம்னாலும் ஓகே வானதி" என்று அறிவுச்சொல்ல காரில் சுதாகரும், டிரைவரும் ஏறினார்கள். அறிவு இறங்கினான்….

வெற்றியின் முகத்தை உற்று பார்த்த வானதி பை என்றாள்,
அறிவிடமும் பை சொன்னாள்…

கிளம்புவதற்காக கார் நகரவும் எண்ணற்ற பல எண்ண அலைகளோடு பறந்துச் சென்றது
அந்த இரும்பு பட்டாம்பூச்சி                                      முற்றும்!

3 comments:

  1. எதிர்பாராத முடிவு..

    ReplyDelete
  2. வானதி வெற்றியோட சேர்த்து வச்சுருக்கலாம் .... அவ இதற்கு முன் அவ தான் யார் சொல்லும் கேட்கமா இருந்த அப்புறம் வெற்றிய புரிந்து கொண்டு அவனோட சந்தோஷமாக இருந்தாலே அப்புறம் எப்டி அவ கோவமே எதிரினு சொல்ற அவனுக்காக அவ லட்சியத்தைய விட்டவ கோவத்த விடமாட்டால..... வெற்றி அவளை நல்ல பார்த்துவன் அவனோட சேர்த்து வச்சுருக்கலாம்

    ReplyDelete

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib