anti - piracy

Post Page Advertisement [Top]

மெல்ல திறந்தது மனது (ஆதன்-னின்)
                                                

அத்தியாயம் 23
"!சரிம்மா நான் கிளம்பறேன். நேரம் இருக்கப்ப நீயும் தம்பியும் நம்ம ஏழு வீதிக்கும் பத்திரிக்கை வைச்சிடுங்க இது உங்க பொறுப்பு" என்றார் சண்முகம்!

"இதை நாங்க பார்த்துக்கறோம்பா நீங்க கவலையை விடுங்க. ஆனா வியாபாரம் சம்பந்தமான ஆளுங்களுக்கு நீங்கதான் பத்திரிக்கை வைக்கனும்" என்றாள் நாச்சியா!

"நான் சேலம் போய்ச் சொந்த பந்தங்களுக்குப் பத்திரிக்கை வைச்சிட்டு வந்ததும் நீ சொன்ன இடங்களுக்கு நானே நேரா போய் வைச்சுக்கறேன்மா" என்றவர் வாசுவிடம் திரும்பினார்…

" வாசு கல்யாணம் ரிசப்சன்னு கடைக்கு நாலுநாள் லீவு விடவேண்டி வரும். அதுவரைக்கும் மற்றவேலைகள் அதிகமா இருந்தாலும் கடைக்கு லீவ் விட்டா நல்லா இருக்காது! நான் உங்க அம்மாக்கிட்ட சொல்லிடறன். ரிசப்சன் முடியற வரைக்கும் நீ இங்கையே தங்கிடு" என்று சண்முகம் சொல்ல.

"சரிங்கையா" என்று வாசு சொல்ல நிம்மதியாய் கிளம்பினார் சண்முகம்!

"டே வாசு உன் பேண்ட், சர்ட் சைஸ் சொல்லுடா" என்று நாச்சியா கேட்கவும். வாசு சைஸ்சை சொன்னான்….

"சரி தேவா ஒரு ரெண்டு வீதிக்குப் பத்திரிக்கை வைச்சிட்டு கல்யாணி அம்மாவ கூட்டிக்கிட்டு டிரஸ் எடுக்கக் கிளம்புவோமா?" என்றாள் நாச்சியா!

"ஏன் மீனாட்சி அம்மாவும், உமாவும் வந்தா ஏத்துக்க மாட்டியா"னு தேவா கேட்க ஆச்சர்யமான நாச்சியா.

"எப்படித் தேவா உங்க அப்பாவ மீறி வருவாங்க?" என்று நாச்சியா கேட்க.

"வா எப்படி வருவாங்க"னு காட்டறேன்னு புல்லட்டை ஸ்டார்ட் செய்ய நாச்சியா ஏறிக்கொள்ள. தேவா வீட்டுக்குப் புல்லட் விரைந்தது…..

தேவா காலிங்பெல்லை அழுத்த கதவைத்திறந்த ரேகாவிற்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி…

"கொஞ்சம் நகரு வாசல் மறைக்குது"னு ரேகாவை நகர்த்திவிட்டு நாச்சியோவோடு வீட்டிற்குள் நுழைந்தான்…..

ரெண்டுபேரையும் பார்த்த மீனாட்சிக்கும், உமாவுக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. மீனாட்சி வந்து நாச்சியாவின் தலையில் கை வைத்து நெட்டி முறிக்க, உமா நாச்சியாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு சோபாவில் அமர வைத்தாள். நாச்சியா நெகிழ்ச்சியால் செய்வது அறியாது ரேகாவின் பக்கத்தில் அமர்ந்தவள் ரேகாவை பார்த்துச் சினேகிதமாய்ப் புன்னகைக்க ரேகாவோ முகத்தை டிவியில் வைத்துக்கொண்டாள்!

"அம்மா, உமா , கல்யாணத்திற்காக டிரஸ் எல்லாம் எடுக்கப் போறம். நீங்களும் உமாவும் சீக்கிரம் கிளம்புங்க. உமா இன்னைக்கு நீ காலேஜிக்கு லீவ் ஓகேதான?" என்றான் தேவா…

"டன்ணா கிளம்பறோம் கலக்கறோம்"னு உமா உடைமாற்ற கிளம்ப, ரேகா எழுந்து தன் ரூமிற்க்குள் சென்றாள்!

"ம் உன் பெரிய பொண்ணு நடக்கறத அப்பாக்கிட்ட போட்டுக்குடுக்க ரூமுக்குள்ள போகுது"னு தேவா சொல்ல. அவளை விடுடா என்றாள் மீனாட்சி!

"ஏன் தேவையில்லாம அவங்கள குறை சொல்ற தேவா"னு நாச்சியா சலிச்சிக்க,

"வெய்ட் பண்ணி பாரு அம்மா மொபைலுக்குப் போன் வரும்" என்று தேவா ஆரூடம் சொல்ல…

"அப்பாவ மீறி எப்படித் தேவா அம்மா வருவாங்க" என்று சந்தேகத்தோட நாச்சியா கேட்க,

"அம்மா காந்திய வழி போராளி. பத்து நாள் ஆனாலும் பேச மாட்டாங்க, சாப்பிட மாட்டாங்க. அப்புறம் ஹாஸ்பிடல்ல ஐசியூலதான் சேர்த்தனும். ஸோ அம்மா ஒரு முடிவெடுத்தா அப்பா அதுல பெருசா தலையிட மாட்டாரு. நான் வீட்ட விட்டு வெளிய போனாத்தான் இந்தக் கல்யாணம் நடக்கும்னு அம்மா என்னை வெளிய விட்டிருக்காங்க, பொறுந்திருந்து பார்" என்றான் தேவா!

இந்த நேரத்தில் ரேகா சந்திரசேகருக்கு போன் செய்து வீட்டில் நடக்கும் எல்லா விசயத்தையும் போட்டுக்கொடுக்க அவருக்குக் கோபம் சுர்ரென்று ஏறியது…. நீ போனை வை நான் மீனாட்சிக்கிட்ட பேசிக்கறேன்னு அவர் சொல்ல போனை கட் பண்ணிவிட்டு ஒன்னும் தெரியாதவள் போல ஹால் சோபாவுக்கு வந்து நாச்சியா பக்கத்துலயே அமர்ந்தாள் ரேகா!

"அப்புறம் அப்பாக்கிட்ட போட்டுக்கு குடுத்திட்டு வந்துட்டியா பொம்பள நாரதரே"னு தேவா கேட்க.

"என்கிட்ட பேசற வேலையெல்லாம் வைச்சுக்காத, நீ வந்த வேலையை மட்டும் பார்"னு சொன்ன ரேகா மறுபடியும் டிவி பார்ப்பது போல் நடிக்க ஆரம்பித்தாள்!

அடுத்த நொடி சந்திரசேகரிடமிருந்து மீனாட்சிக்குப் போனில் அழைப்பு வர சலித்துக்கொண்டே அட்டெண்ட் பண்ணினாள் மீனாட்சி….

போனில் பேச்சுவார்த்தை காரசாரமாகப் போய்க்கொண்டிருக்க மீனாட்சி கடைசியில் உறுதியாகச் சொன்னாள்…

"அவன் நான் பெத்த நம்ம பையன் நீங்க வரதும் வராததும் உங்க இஷ்டம். ஆனா அவன் தேடிவந்து கூப்பிட்டு இருக்கான் பெத்த நான் எப்படிப் போகாம இருக்க முடியும். ஊர்ல இருக்கவங்க புள்ளைய வித்துட்டதா பேசவா?

இப்ப போகும் பொழுதும் பணத்த எடுத்துட்டுதான் போவேன். தாலிக்கொடிக்கு கல்யாண புடவைக்கு நான் சேர்த்தி வைச்சிருக்கக் காசை குடுத்துதான் வாங்குவேன் போனை வைக்கறங்க"னு மீனாட்சி போனை கட் பண்ண,

நாச்சியாவுக்கு ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியங்கள் ஏற்படச் சந்தோச உணர்வு அவள் முகத்தில் ஜொலிக்க, ரேகா முகமோ பொறாமையில் கோபத்தில் கடுகடு என்று மாறி இருந்தது!

எல்லாரும் கிளம்பித் தயாராகி நிற்க, ரேகாவிடம் போன தேவா அவளுக்குக் கீழ் அமர்ந்து அவள் முகத்தைத் தாங்கி,

"நடந்த எல்லாத்துக்கும் நானே காரணமா இருந்துட்டு போறேன். தப்பு என் மேலயே இருக்கட்டும். கிளம்பு வா போலாம்"னு அன்பா தேவா கூப்பிட, அழுகையை அடக்க முடியாத ரேகா அறைக்குள் சென்று கதவைச் சார்த்திக்கொண்டாள்…..

சரி இதற்கு மேல் பேசி பயனில்லை என்று முடிவானதும், தேவா கார் புக் செய்யக் கார் வந்தது. நேராக விக்கி வீட்டுக்குப் போய்க் கல்யாணி, விக்கியை ஏற்றிக்கொண்டு பெரிய பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகளை நோக்கி கார் விரைந்தது….

சந்துருவுக்குப் போன் பண்ணி வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லிக் குமுறிய ரேகா. கடைசியாகத் தேவாவே வந்து பேசியதைச் சொல்லும் போது சற்று இரக்கப்பட்டுப் பேச, சந்துரு உசார் ஆனான்…

"தேவாவுக்கு உண்மையாவே பாசம் இருந்திருந்தா பர்ஸ்ட்டே கூப்பிட்டிருக்கனும், எதுக்கு டீஸ் பண்ணனும், எதுக்குக் கடைசியா கூப்டனும். எல்லாம் தன்னை யோக்கியமா காட்டிக்கத்தான் ரேகா இதையெல்லாம் நம்பாத" என்று ஏத்திவிட்டான் சந்துரு!

ரேகா எனும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறத்தொடங்கியது....

அத்தியாயம் 24 

சந்துரு மேலும் மேலும் ரேகாவை மூளைச்சலவை செய்து அவள் குடும்பத்தின் மீது வெறுப்பை உண்டாக்க செய்திருந்தான்!...

"ரேகா போனவங்க திரும்பி வர எவ்வளவு நேரமாகும்?! என்று மெல்ல காயை நகர்த்தினான்…..

" தெரியல சந்துரு எப்படியும் மதியத்துக்கு மேல ஆகும்" என்று ரேகா சொல்ல…

" நீ பார்க்குக்கு வாயேன் நேரா பேசலாம்"னு சந்துரு சொன்னதும் அவளுக்குள் திடிர் பரவசம் தொற்றிக்கொண்டது…

நீங்க வெளியபோய்ச் சந்தோசமா இருந்தா என்னால வெளியபோய்ச் சந்தோசமா இருக்க முடியாதானு குடும்பத்தினரை பழிவாங்குவதாய் நினைத்துச் சந்தோசப்பட்டுக் கொண்டாள் ரேகா…

"ஒரு அரை மணி நேரத்தில் வரேன் சந்துரு" என்றவள் எளிமையாகத் தயாராகிப் பார்க்கை நோக்கி வேகமாக நடந்தாள்…..

பார்க்கிற்கு ஏற்கனவே வந்துவிட்ட சந்துரு பணம் கேட்டு யாரோ ஒரு பெண்ணைப் போனில் மிரட்டிக்கொண்டிருக்க இவள் அருகில் வந்ததைக்கூடக் கவனிக்கவில்லை.

போனை கட் செய்து திரும்பிய சந்துருவுக்கு ரேகாவை பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது!

"ஏய் எஎஎப்ப ரேகா வந்த"என்று குளறிய குரலில் சந்துரு கேட்க….

"நீங்க பணம் கேட்டு யாரையோ மிரட்டிக்கிட்டு இருந்திங்௧ளே அப்ப"னு ரேகா சிரிக்கவும். சட்டெனச் சுதாாித்தவன் அவள் நம்பும் விதமாக ஒரு பொய்யை தயார் செய்தான் சந்துரு….

"ப்ரெண்ட் ஒருத்தன் பத்தாயிரம் பணம் வாங்கி ஒரு வருசமாச்சு. இப்ப நல்ல வேலைக்குப் போயும் திரும்பத்தர மாட்டங்கறான். அதான் கொஞ்சமை போர்சா பேச வேண்டியதா போச்சு"

"நீங்க எல்லாரையும் நம்பிடறிங்க சந்துரு சீக்கிரமா"னு ரேகா சந்துருவுக்குக் கிளாஸ் எடுத்தது, ஆடு ஓநாய்க்கு அகிம்சையைச் சொல்லிக்குடுப்பதைப் போல இருந்தது. மனதிற்குள்ளயே சிரித்து க்கொண்டான் சந்துரு!


அப்படியே பேச்சு தேவா , நாச்சியா பக்கம் திரும்பியது!

"ரொம்பப் பண்றா அந்த நாச்சியா ஆனா முகத்த மட்டும் நல்லவ மாதிரி வைச்சுக்கிறா, நமக்கு இந்த மாதிரி நடந்துக்க வரல சந்துரு"

"அவங்களாம் தினம் ஒரு முகமூடி போடறவங்க ரேகா! உனக்குத் தெரிஞ்ச விசயங்கள்ல பத்துல ஒரு பங்குக்கூட அந்த நாச்சியாவுக்குத் தெரியாது. அதெல்லாம் வீட்டு உயிரி ரேகா. உன்ன மாதிரி உலகத்துக்காக, உரிமைக்காக, பெண்களுக்காகத் துணிஞ்சு பேசற ஆள் கிடையாது அவளாம்" என்று புகழ்ச்சி மழையைப் பொழிந்து விட்டான் சந்துரு…..
அதில் நனைந்து குளிா்ந்தவள்..

" ஆனா இதுங்கதான் திடீர்னு பெரிய போராளி மாதாரி பேமஸ் ஆகிடறாங்க"னு தன் பொறமையை மறைக்க முடியாமல் ஆதங்கமாய்ச் சொன்னாள்…

"இந்த உலகம் நல்லவங்கள நம்பாது ரேகா. பிரச்சினை நடந்த அன்னைக்குச் சிவா டீசன்டாதான் அப்ரோச் பண்ணி இருக்கான். இவதான் அதைப் பிரச்சினையாக்கி தன்னை ரொம்ப நல்லவள்னு காட்டி இருக்கா"னு அள்ளி விட்டான் சந்துரு….

"ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குனு ஒரு ஆண் சொல்றதுல எந்தத் தப்புமே இல்ல. இவ ஓவர் ஸீன் பார்ட்டி சந்துரு. ஒருநாளைக்கு இவளுக்கு நம்ம நாலேட்ஜ் லெவல் என்ன. சொசைட்டியில எவ்வளவு மரியாதை என்னனு காட்டறன். பேஸ்புக்ல சொசைட்டியில எவ்வளவு பெரிய ஆளா இருக்கறவங்களாம் நமக்கிட்ட நாம சொல்றத கேட்டு சரினு போறாங்க, நம்ம வொர்த் என்னனு இவளுக்குத் தெரியல"னு சொன்ன ரேகாவை,

அட பேஸ்புக் பைத்தியமேனு மனசுக்குள்ளயே சிரிச்சிக்கிட்ட சந்துரு இவள புகழ்ந்துதான் மடக்கி படுக்கையில தள்ள முடியும்னு முடிவு பண்ணிக்கிட்டு அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

"நீங்க கூட ஒரு கட்டுரையில பிடிச்சிருந்தா ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸ் வைச்சிருக்கறது எந்த விதத்துல தப்புனு எழுதி இருந்திங்க. அதைலாம் படிச்சி புரிஞ்சிக்கற மூளை இவங்களுக்குக் கிடையாது ரேகா. அதையெல்லாம் படிச்சாங்கனா நீங்க விபச்சாரத்துக்குத் தூண்டறிங்கனு சொல்லுவாங்க"னு அவளின் தற்பெருமை அனலைக் கூட்டினான்….

"ஹஹஹ நிச்சயமா சந்துரு" என்றவள் அந்த டாபிக்கை அத்தோடு முடித்துக்கொண்டாள்!

"சரி ரேகா வெயிலுக்கு அப்படியே ஐஸ்கிரீம் பார்லர் போயிட்டு கிளம்பலாமா" என்று அவளை வார்த்தையில் இழுத்தான் சந்துரு…..

"யா டைமும் ஆச்சுப் பட் உங்கக்கூடப் பேசினது ஒரு ரிலீப்பா இருக்கு சந்துரு" என்றவள் ஐஸ்கிரீம் பார்லர் போகத் தயாரானாள்!

இவளுக்கு இன்னும் ஒரே மாசம்தான் டைம் அதுக்குள்ள எப்படியாவது இவளை அடைஞ்சிரனும்னு டார்க்கெட்ட பிக்ஸ் பண்ணினான் சந்துரு. கரெக்ட்டான இடத்துல இவ சிக்கிகிட்டா போர்ஸ் பண்ணியாவது அனுபவிச்சி வீடியோஸ் எடுத்தரனும் என்று தன் மனதிற்குள் முடிவு செய்துக்கொண்டான்!
…………

காரை கட் செய்துவிட்டுத் துணிக்கடையில் புகுந்தவர்கள் மேய ஆரம்பித்தார்கள் தேவா பாவமாய் ஒரு சேரில் அமர்ந்திருக்க அந்தப் பக்கம் ரிசப்சன் வரை துணியெடுக்கக் கடையையே புரட்டிக்கொண்டிருந்தனர்…..

கல்யாணத்துக்கான துணியை எல்லாம் மத்தவங்கள எடுக்கச் சொன்ன உமா ரிசப்சனுக்கு அவதான் செலக்ட் பண்ணுவனு உறுதியா சொல்லிட்டாள். உமா இப்ப அந்த வேலையில பிஸியாக இருந்தாள்!

விக்கியை நம்பவே முடியல, பொம்பளைங்களை விட மோசமா கடையைப் புரட்டிக்கொண்டிருந்தான்…,. வாசு முதல் கொண்டு விக்கி வீட்டுக்கு வரை எல்லாருக்கும் துணியை ஒருவழியா எடுத்து முடித்திருந்தார்கள்…… ஆனால் உமா ரிசப்சனுக்கான துணியை எடுக்க மட்டும் கொஞ்சம் லேட்டானது!

அடுத்து தாலிக்கொடி வாங்க நகைக்கடைக்குள் புகுந்தவர்கள் அரைமணி நேரத்தில் ஐந்து பவுனில் தாலிக்கொடி வாங்க, கெளரவமாக மீனாட்சி பணத்தைக் கொடுத்தாள்.

"முறையா தாலிக்கொடி நாங்கதான் வாங்கனும், அதை வாங்கிக் குடுத்துட்டேன் மனசு இப்ப நிம்மதியா இருக்கு" என்ற மீனாட்சியின் முகத்தில் ஒரு தெளிவும் நிம்மதியும் நிரம்பி இருந்தது!

இந்தத் தெளிவையும். நிம்மதியையும் சந்துருவோடு சுற்றும் ரேகா நிலைக்க விடுவாளா?!...

அத்தியாயம் 25 

சந்துருவுடன் வெளியில் சென்ற ரேகா வீட்டிற்கு யாரும் வரும் முன்பே வீட்டிற்குள் வந்து பதுங்கினாள்!

மணி நாலாகியிருக்கும் போது கல்யாணத்திற்காக எடுக்கப்பட்ட துணிகளை எடுத்துக்கொண்டு வீடு வந்து சோ்ந்தனா்!

"ரேகா அக்கா தேவாவோட கல்யாணம் அன்ட் ரிசப்சனுக்காக உனக்கு எடுத்த டிரஸ் இந்தா வாங்கிக்கோ" என ரேகாவிடம் உமா கொடுக்க அடுத்த நொடி அந்தத் துணிப்பை ஹால் தரையில் பறந்துவந்து விழுந்தது. மீனாட்சி இது எதையும் கண்டுக்கொள்ளவில்லை. உமா அமைதியாக ரேகா வீசீ எறிந்ததை எடுத்துச் செல்ப்பில் வைத்தாள்!

வீட்டில் எப்படியும் இன்னைக்குப் புயல் அடிக்கும் என்பதை உணர்ந்திருந்த மீனாட்சி எது நடந்தாலும் நடக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம்னு உறுதியோட இருந்தாள்…..

உமா பாவம் அப்பா வீட்டிற்கு  வந்த பின்னால் என்ன நடக்குமோ என்று கலக்கமாய் இருக்க…… காபி போட்ட மீனாட்சி தனக்கும் உமாவுக்கும் மட்டும் காபியை எடுத்துட்டு வந்து ஹால் சோபாவில் அமர. ஏற்கனவே பொறாமையால் பொங்கித் தவித்துக் கொண்டிருந்த ரேகாவிற்குச் சண்டை போட சரியான வாய்ப்பாக இது கிடைக்க அதையே பற்றிக் கொண்டு தன் வாய் போரை தொடங்கினாள்….

"நீ எதுக்கு  என்னைப் பெத்த?! என்று மீனாட்சியிடம் நேராக ரேகா கேட்டாள்…..

"அதை நினைச்சு உன்னை மாதிரியே நானும் வருத்தப்படறேன் இப்ப" னு திருப்பி வெட்டெனப் பதில் சொன்னாள் மீனாட்சி!

"ஏன் எனக்கும் காபி எடுத்துக்கிட்டு வந்திருந்தா உன் கெளரவம் குறைஞ்சிடுமா?! என்று ரேகா கேட்க….

"உமா கொடுத்த துணியைப் பெருந்தன்மையா வாங்கியிருந்தா உன் கெளரவம் குறைஞ்சிடுமா?! னு மீனாட்சி திருப்பிக் கேட்க. ரேகாவால் மேற்கொண்டு பேச முடியாதாதால் அமைதியனாள். ஆனால் மீனாட்சி விடாது பேசினாள்….

"இந்தக் குடும்பம் அமைதியா நகரனும், உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னுதான் நீயும் உங்கப்பாவும் பண்றத பேசுறத எல்லாம் பொறுத்துக்கிட்டு இருக்கேன்.. நீ பேசற மாதிரி ரெண்டு மடங்கு என் வீட்ல பேசினவதான் நானும்.
ஆனா உன்னை மாதிரி பெத்தக்கிட்ட திமிராவும் நடக்கல, விரோதியா பார்த்தவ இல்ல.

நீ என்னைக்குக் குடும்பத்த குடும்பமா பாக்கறியோ அப்பதான் நான் உன்ன ஒரு மனுசியாவே பார்ப்பேன். முதல்ல நீ மாறு" என்ற மீனாட்சி சந்திரசேகர் வந்ததும் நடக்கப் போற யுத்தத்தை எதிர்கொள்வதற்காக ஹால் தரையில் படுத்து ஓய்வெடுக்க ஆரம்பித்தாள்!

மணி ஆறாகச் சந்திரசேகர் சோர்வாக வீட்டிற்குள் நுழைய, ரேகா நடக்கப் போறதை கவனிக்க ஆர்வமானாள்!

மீனாட்சி எதுவும் பேசாமல் அமைதியாகக் காபியை கொண்டுவந்து கொடுத்தாள் அப்பவும் சந்திரசேகர் எதுவும் பேசவில்லை…..

சண்டை போடறதுக்கான எந்த அறிகுறியும் அவரிடம் இல்லை. மாறாக ரொம்பச் சோர்வாக இருந்தார். மீனட்சிக்கு தன் கணவரை பார்க்க பாவமாக இருந்தது!

மீனாட்சியே மெதுவாய் பேச்சை ஆரம்பித்தாள்!

"அரசல் புரசலா வீதியில இருக்கறவங்களுக்கு நம்ம வீட்டு விசயம் வெளிய தெரிஞ்சிருக்கு. உங்களை ஒரு கொடுமைக்காரரா மத்தவங்க பார்க்கறத என்னால ஏத்துக்க முடியாது…..

நான் அவங்கக்கூடக் கிளம்பி போனதையும். திரும்பி வந்ததையும் அக்கம் பக்கத்துல எல்லாரும் பார்த்தாங்க, அவங்க நேத்து வரை நினைச்சது பொய்யா போச்சு.

நான் சேர்த்து வைச்ச காசுல கல்யாண புடவை, தாலிக்கொடி ஐந்து பவுன்னு நம்ம தரப்புல செய்ய வேண்டிய முக்கியமானதை செஞ்சிட்டு வந்துட்டேன்.

ஆனா நான் சேர்த்தி வைச்சாலும் அது நீங்க சம்பாதிச்ச பணம். அதுவும் நேர்மையா சம்பாதிச்ச பணம். நீங்க விருப்பப்படலனாலும், வரலைனாலும் உங்க சார்பா உங்க கெளரவம், மரியாதையை நான் விட்டுக்கொடுக்காம செஞ்சிட்டு வந்துட்டேன்"னு பொறுமையா அமைதியா. அவரோட வீக் பாய்ன்ட்டான கெளரவம், மரியாதையைக் காப்பாத்திட்டனு மீனாட்சி பேசவும்,

சோர்வா இருந்த சந்திரசேகர் முகத்துல ஒரு கெளரவம் பெருமை மின்னியது!

"செய்யறதுனு முடிவாகியிருச்சி அதைச் சேர்த்தியே நல்ல விலையில செஞ்சிருக்கலாமே"னு சந்திரசேகர் சொல்ல. ரேகாவுக்கோ அதிர்ச்சி. ஆனா மீனாட்சி முகத்தில் எந்தச் சலனமும் இல்லை!

"போதும் போதும் கொஞ்சம் கூடப் பொறுக்காம அவதான் முக்கியம்னு போனவனுக்கு இவ்வளவு செஞ்சதே பெருசு, கல்யாணம், ரிசப்சன்னு சும்மா தலையைக் காட்டிட்டு வந்தா போதும்"னு மீனட்சி பட்டும்படாமல் சொல்ல, தன் பொண்டாட்டி தன்பக்கம் நிக்கறா என்ற பூரிப்பு அவர் வார்த்தையில் வெளிப்பட்டது!

" சரி சரி கல்யாணம், ரிசப்சனுக்குப் போனமா வந்தமானு இருக்கனும்"னு சந்திரசேகர் சொல்லிவிட்டு எழுந்து அறைக்குப் போக.முழுவதுமாய் உடைந்தாள் ரேகா!

"இதுதான்டி என்னோட முப்பது வருச தாம்பத்தியத்திற்கான அர்த்தம். அவர்கூட எப்ப சண்டை போடனும், எப்ப சமாதானமா போகனும், எதை எப்படிப் பேசனும்னு நல்லாவே தெரியும். நீயே பார்த்திருப்பியே போற போக்குல கல்யாணம், ரிசப்சனுக்குப் போக அவர் வாயாலயே சொல்ல வைச்சேன்னு... ஏ சில் வண்டு இனியாவது ஒழுங்கா குடும்பத்தோட சேர்ந்து இருக்கக் கத்துக்க"னு ரேகாக்கிட்ட சொன்ன மீனாட்சி அவளுக்குக் காபியை இப்பக் கொண்டு வந்து கொடுத்துட்டு போனாள்.

சந்திரசேகர் அறையில் இருக்க அவருக்காக எடுத்த டிரஸ்ஸை உமா கொடுக்கப் பிரித்துப் பார்த்தவர் பீரோவில் வை என்றதோடு நிறுத்திக்கொண்டார்!

விக்கி வீடே அல்லோகலப்பட்டது…..

எடுத்துக்கிட்ட வந்த துணியை எல்லாம் தனித்தனியா பிரித்து எடுக்க வசதியாய் வைத்தார்கள்….

விக்கியும் தேவாவும் மொட்டை மாடியில் இருக்க மேல வந்த நாச்சியா….

"தேவா நான் கடைக்குக் கிளம்பறேன். காலையில் வரேன். பாவம் வாசு காலையில இருந்து அவன் மட்டுமே கடையைப் பார்த்துக்கிட்டு இருக்கான்?னு சொல்ல…..

தேவா அவளை விட்டுட்டு வர கிளம்ப…..

"இல்ல தேவா நீ விக்கியோட பேசிக்கிட்டு இரு நான் அப்படியே ஒரு வாக்கிங் மாதிரி கிளம்பறேன்"னு சொன்னவள் எல்லாருக்கும் பை சொல்லிவிட்டு வாசுவுக்காக எடுத்த மூனு செட் துணியோடு வீதியில் இறங்கி நடந்தாள்!...

அத்தியாயம் 26 

கடைக்குப் போன நாச்சியா ஒரு அரைமணி
நேரம் மட்டும் கடைய வாசுவை பார்த்துக்கச் சொல்லிவிட்டுப் போய்க் குளித்துவிட்டு டீ போட்டு எடுத்துக்கிட்டு வந்து வாசுக்கிட்ட குடுத்து சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளச் சொன்னாள்……

"பரவாயில்லைக்கா நான் கடையிலயே இருக்கேன்"னு வாசு சொல்ல…

"பிரிச்சி பாருடா"னு அவனுக்கு எடுத்துக்கிட்டு வந்த துணிகளைக் கொடுக்க,

வாசு அவன் வயசுக்கே உண்டான ஆர்வத்தோட பையைப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

"அக்கா மொத்தம் மூனு செட்டாக்கா?" என்றான் கண்கள் விாிய ஆச்சா்யம் கலந்த சந்தோஷத்தில்…..

"ஆமாடா வைச்சி போட்டுக்கோ. உங்க அம்மாவுக்கு எடுக்க மறந்துட்டேன். நாளைக்கு எடுத்துத்தரேன் சரியா" என்றாள் நாச்சியா,

"சரிக்கா அம்மா ஒன்னும் கோவிச்சிக்காது" என்ற வாசுவை வாஞ்சையோட பார்த்த நாச்சியா,

"உன்ன மாதிரி எனக்கொரு தம்பியோ அண்ணனோ இருந்திருந்தா இந்நேரம் நானும் படிச்சிட்டு, எந்தவித பிரச்சினையும் இல்லாம கல்யாணம் பண்ணியிருப்பேன்டா. அப்பாவையும் கடையையும் அண்ணனோ தம்பியோ பார்த்திருப்பாங்க" னு சலிப்பாகச் சொல்ல…..

"சரி விடுக்கா நான் இருக்கேன் இப்ப தேவா அண்ணனும் வரப்போறாா்ல"னு வாசு சொல்ல,

உண்மையாகவே அதுவரை இருந்த மனபாரமெல்லாம் வாசு எதார்த்தமாகச் சொன்ன வார்த்தைகளால் பறந்து போய் உற்சாகமானாள் நாச்சியா….

"சமைக்கட்டுமா இல்ல கடையில வாங்கிக்கலாமாடா"னு நாச்சியா கேட்க,

"நீ டயர்டா இருப்பக்கா கடையிலயே வாங்கிக்கலாம்"னு வாசு சொல்ல அவன் தலையைச் செல்லமாய்க் கலைத்துவிட்ட நாச்சியா. அவன்கிட்ட காசுக்கொடுத்து கடைக்கு அனுப்பி வைத்தாள்!
…………….

சோபாவில் அமர்ந்திருந்த சந்திரசேகருக்கு தோசையைக் கொண்டு வந்த மீனாட்சி,

"ஏங்க"

"ம் சொல்லு மீனா"

"நம்ம சைடுல முக்கியமான சொந்த பந்தங்கள ஒரு இருபது பேரையாவது கூப்பிடலாங்க"

"நான் அவங்க முன்னாடி அவமானப்பட்டு நிக்கறத நீ பாக்க ஆசைப்படற அப்படித்தான மீனா?"

"இல்லங்க" என்று மீனாட்சி இழுக்க…..

"நீங்க வீட்ல எல்லாரும் போயிட்டு வாங்க நான் அதைத் தடுக்கல, சொந்தக்காரங்கள, என்னைய கூப்டாத" என்று கடுமையாகச் சந்திரசேகர் சொல்ல பேச்சை மாற்றினாள் மீனாட்சி…

"உங்களுக்கு எடுத்த துணியைப் பார்த்திங்களா?"

" ம் ம் பார்த்தேன்" என்று ஏனோ தானோவென்று சந்திரசேகர் பதில் சொல்ல, காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது…..

கதவைத் திறந்தாள் தேவா நின்றுக்கொண்டு இருந்தான்……

"என்னம்மா முழிக்கிற உள்ள வரலாம்தானே"னு சிரித்தப்படியே தேவா கேட்க…

"வாடா நாயே ஆளப்பாரு"னு மீனாட்சி முன்னே நடந்தாள்…

தேவாவை பார்த்ததும் சந்திரசேகர் தலையைத் திருப்பிக்கொள்ள, தேவா எந்தச் சங்கட்டமும் இல்லாமல் இயல்பாகச் சோபாவில் அமர்ந்தான்.

"என்ன விசயமாடா வந்த"னு மீனாட்சி சத்தமா கேட்க,

"அம்மா இந்த வீதிக்கு மட்டும் பத்திரிக்கையை நீங்க கொடுங்க, ஏன்னா இந்த வீதியில அப்பாவுக்குனு ஒரு பேர் இருக்கு, இந்த வீதியில வந்து நானும் நாச்சியாவும் பத்திரிக்கை கொடுத்தா அது அப்பா கெளரவத்துக்கு நல்லதா இருக்காது" என்று தேவா நிறுத்த…

"அந்தப் பத்திரிக்கையை வாங்கு மீனா" என்று சந்திரசேகர் சொல்லவும் மீனாட்சிக்கு அளவில்லாத சந்தோசம், எதுல கை வைச்சா சந்திரசேகர் மடங்குவாருனு மீனாட்சி மாதிரி தேவாவுக்கும் நல்லா தெரியும்.

பத்திரிக்கை பிரித்துப் படித்து விவரங்களைப் பார்த்த சந்திரசேகர் பத்திரிக்கையைச் சாமி ரூமில் மீனாட்சியை வைக்கச் சொல்ல மீனாட்சிக்கு தலைகால் புரியவில்லை சந்தோஷத்தில்…. உமா ஒருபக்கம் நடக்கிறத காமெடியாய் பார்க்க, ரேகாவுக்கோ தன் குடும்பம் மொத்தமும் எதிரியாய் பரம விரோதிகளாக மனதில் தோன்ற ஆரம்பித்திருந்தது!

"சரிம்மா நான் கிளம்பறேன்" என்று தேவா சொல்ல.,

"இருடா சாப்டுட்டு போ"னு மீனாட்சி சொல்ல சந்திரசேகர் எந்த வித உணா்ச்சியையும் முகத்தில் காட்டிக்கொள்ளமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாா்.

ரேகாவை வெறுப்பேத்தறதுக்காகவே "சரிம்மா என்ன சமைச்ச?" என்றான் தேவா!

"நாம வெளிய அலைஞ்சிட்டு வந்ததால ஒரே அயர்ச்சிடா தேவா அதான் இட்லி, தோசைதான்" என்றாள் மீனாட்சி

"சரிம்மா அப்படினா ஒரு முட்டை, ஒரு, ஆனியன் தோசை, ரெண்டு சாதா தோசை" என்று கூலாகச் சொல்ல இப்பொழுதுதான் சந்திரசேகர் கோபமாக ஆரம்பித்தார். அதை ஒரு விசயமாவே தேவா கண்டுக்கொள்ளவில்லை.

உமா தோசைகளை வரிசையாகக் கொண்டுவர சொன்ன எண்ணிக்கையைத் தாண்டி தோசைகளை வயித்துக்குள்ள இறக்கிக்கொண்டு இருந்தான் தேவா. ஒருவழியா சாப்பிட்டு முடித்தவன் மீனாட்சி உமாக்கிட்ட போயிட்டு வரேனு சொல்லிட்டு சந்திரசேகர் கிட்ட வந்தான்…..

"அப்பா நான் கிளம்பறேன். நீங்க என் கல்யாணத்துக்கு வரனும்னு ரொம்ப ஆசைப்படறன்…. நீங்க கட்டாயம் வரனும். நான் போயிட்டு வரேன்பா" என்று தேவா சொல்ல சந்திரசேகரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை…..

அடுத்து ரேகாக்கிட்ட போனவன் "ஹே லூசு மனசுல எதையும் வைச்சிக்கிட்டு கல்யாணத்துக்கு வராம இருந்திடாத புரியுதா" என்று உரிமையோடு சொல்லிவிட்டு கிளம்பினான்…..

"இவன் கொஞ்சம் கூட வருத்தப்படறதாவே தெரியலையே மீனா" என்றார் சந்திரசேகர்.

"அவன் என்னங்க தப்புப் பண்ணினான் வருத்தப்பட?!னு மீனாட்சி கேட்க…..

"எக்ஸாம்ல பெயில், கையில வேலையில்லை, யாரோ உழைச்ச காசுல கல்யாணத்த தடபுடலா பண்ணிக்கறான். இதுக்கும்லாம் வருத்தப்பட வேணாமா மீனா" என்று சந்திரசேகர் சொல்ல…..

"மனுசங்கள விடச் சாதி பெருசுனு வயசுல மூத்தவங்க நினைக்கறத விடவாங்க அவன் தப்பு பண்ணிட்டான்"னு மீனாட்சி சொல்லிவிட்டு சந்திரசேகர் பதிலுக்குக் காத்திருக்காமல் அடுக்களைக்குள் ஒழிந்துக்கொண்டாள்!

எதுவும் பேசாமல் அப்படியே எதையெதையோ யோசித்தப்படியே சோபாவிலயே படுத்துவிட்டார் சந்திரசேகர்.

யோசித்துத் திருந்தினால் நல்லதுதான். ஆனால் விதி என்ன நினைக்கிறதோ?!!!...

                                                 ----தொடரும்----



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib