பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா...!(தீபாஸ்-ன்)
நிலவரசன்
தங்களுக்கு பணம் தராமல் போக்கு காட்டிகொண்டிருந்த பிலிம் ப்ரடியூசர் ரோஷன்ரெட்டி ஹோட்டல் ரடிஷ்சனில் இருப்பதாக கேள்விப்பட்டான். எனவே தனது சகாக்களுடன் அங்கு விரைந்தான். ரெட்டியை தங்கள் இருப்பிடத்திற்கு தூக்கிகொண்டுவந்து மிரட்டி அவன் வாங்கிய பணத்துக்கு கொடுக்காமல் நிறுத்திவைத்திருந்த வட்டியையும் அசலையும் அவனிடம் இருந்து வாங்க அதிரடி நடவடிக்கை எடுக்க நினைத்திருந்தான்.
பொதுவாக
இதுபோன்று பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கும் ஆட்களை தனது ஆட்களை கொண்டுதான் தனது
இருப்பிடத்திற்கு கொண்டுவருவான்.ஆனால் இந்த ரெட்டி இந்தியாவில் இல்லாமல்
வெளிநாட்டில் உள்ள தனது மகன் வீட்டில் சென்று பதுங்கி கொண்டதால் அவனை இழுத்துக்கொண்டு வந்து
வார்ன் செய்ய இயலவில்லை.
இப்பொழுது
இந்தியா வந்திருக்கும் விபரம் தெறிந்ததும் உடனே அவனை இழுத்துக்கொண்டுவந்து திரும்ப
அவன் வெளிநாடு போய்விடாமல் சிறைவைத்து அவனது அமெரிக்காவில் உள்ள மகனை மிரட்டி
தங்களுக்கு வரவேண்டிய பணத்தையோ அல்லது பணம் வாங்கும்போது அடமானமாக வைத்த அவனது
நீலாங்கரை பங்கலாவை எழுதி வாங்கிவிட நினைத்தான்.
எனவே
அவனை தவறவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் அவன் இப்பொழுது இருக்கும் அந்த ஆடம்பர
ஹோட்டலில் இருந்து சத்தமில்லாமல் அவனை கொண்டுவரவும் நிலவரசனே நேராக அங்கு செல்ல
புறப்பட்டான்.
ஹோட்டல்
முகப்புக்கு சென்றதும் ஹோட்டலுக்குள் இருந்த நிலவரசனின் ஆள் சோமுவை மொபைலில்
தொடர்புகொண்டு ரெட்டி எந்த இடத்தில் இருக்கிறான் என்று கேட்டான். அந்த ஹோட்டலில்
உணவுவகைகள் நீச்சல் குளத்துக்கு அருகிலேயே வழங்கப்படும். ரெட்டி அங்குதான் இருப்பதாக
சோமு கூறவும் கார்நிறுத்தும் இடத்தில் தன்னுடன் வந்த ஐந்துபேரில் நான்கு பேரை
நிறுத்திவைத்தவன் கதிரை மட்டும் தன்னுடன் அழைத்துகொண்டு உள்ளே சென்றான்.
அங்கு ஒருபக்கம் போடப்பட்டிருந்த டேபிள்களை நவநாகரீகமாக உடையணிந்த இளமை பட்டாளங்கள் ஆக்கிரமித்திருந்தனர். அதில்
அமர்ந்திருந்த ஒருபெண் கீதவாணியை போலவே இருந்தால்.ஆனால் அவள் உடுத்தியிருந்த
உடையும் போட்டிருந்த மேக்கப்பும் அவள் இல்லை வேறு யாரோ என்று நிலவரசனை நினைக்க
வைத்தது. அந்த பெண் உடுத்தியிருந்த மாடல் உடை அங்கிருந்த மற்ற பெண்களை விட கொஞ்சம்
கண்ணியமாக இருந்தது. நிலவரசனுக்கு முதலில் கண்ணில் பட்டது கீதவாணிதான். ஆனால் அவளின்
அலங்காரமும் உடையும் அவள் சாயலில் உள்ள வேறொருபெண் என எண்ண வைத்தது.
சே... யாரை
பார்த்தாலும் எனக்கு அவள்போல தெரியுது.
நாகரீகம் என்றபெயரில் உணவுமேசையில் ஆண்களுடன் பெண்களும் முகம்
சுளிக்கும் வகையில் உடையோடு மதுகோப்பைகளுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவன் இதுபோன்ற
சிநேகிதம் அவளுக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று தனக்குள் கூறிக்கொண்டவன் ரெட்டியை
கண்களால் அலசினான்.
ரெட்டி
அந்த கோஷ்டி இருந்த இடத்திற்கு எதிர்புறம் நான்கைந்து ஆட்களுடன் அமர்ந்திருந்தான்.
அந்த
மேஜையின் அருகில் நிலவரசன் போனதும் சற்று தள்ளி ஒரு மேஜையில் உட்கார்ந்திருந்த
சோமு வேகமாக எழுந்துவந்தவன் பக்கத்துமேஜையில் காலியாக இருந்த ஒரு இருக்கையை தூக்கிகொண்டுவந்து
ரெட்டிக்கு பக்கம் போட்டான்.
ரெட்டி
தன் அருகில் நிலவரசன் அமர்வதை பார்த்ததும் மெதுவாக மதுவினால் ஏறிய போதை சர்...ரென்று
இறங்கிவிட்டது. நிலவரசு என்று அவர் உதடுகள் உச்சரித்ததும் நானேதான் ரெட்டி என்னை
எதிர்பார்க்கலேல என்றான் நிலவரசு.
ரெட்டிக்கு
அந்த குளிர்ச்சியான மாலைவேளையிலும் வேர்த்து ஊற்ற ஆரம்பித்தது. அவர் தன்னுடன்
வந்தவர்களின் முன் நிலவரசு ஏதேனும் சொல்லிவிடுவானோ? என்ற பயம் உண்டானது. எனவே அவருடன் அமர்ந்திருந்தவர்களிடம் எஸ்க்யூஸ்மி ஒரு டென் மினிட்ஸ் இவர் கூட பேசிட்டு வந்துவிடுகிறேன் என்றவர் நாம கொஞ்சம்
அந்தபக்கம் போய் பேசலாமா! என்று இருக்கையை விட்டு எழுந்தார் ரெட்டி.
அப்பொழுது
பின்னால் இருந்த கோஸ்ட்டி உட்கார்ந்திருந்த இடத்தில் இருக்கை தரையில் விழுந்த
சத்தம் கேட்கவும் அனைவரின் பார்வையும் அந்த இடத்திற்கு திரும்பியது.
நிலவரசனும்
அந்த திசையில் திரும்பி பார்த்தபோது கீதவாணி சாயலில் இருந்தபெண் எழுந்து நின்று அருகில்
இருந்தவனின் கன்னத்தில் அறைவது அவன் கண்ணில் விழுந்தது.
அவள்
அறைந்ததும் ஏய்..! என்று கோபத்துடன் அவன் எழுவதற்குள் அவள் வேகமாக நிலவரசன்
அமர்ந்திருந்தபக்கம் இரண்டு அடி எடுத்துவைத்தைருந்தாள்.
அப்பொழுதுதான்
நிலவரசுக்கு தெரிந்தது அது கீதவாணிதான் என்றும் அவளின் பின் வர எழுந்தவன் அவளுக்கு
நிச்சயம் செய்திருந்த ஜெனார்த்தனன் என்றும் புரிந்தது அவர்களுக்குள் நிலவரம்
சரியில்லை என்பதனையும் உணர்ந்தவனுக்கு ஏதோ அவளுக்கு பிரச்சனை என்பதை கண்டு உள்ளம்
துடித்து எழுந்தான்.
கீதவாணி
நிலவரசு உள்ளே வந்ததுமே அவனை கண்டுகொண்டாள். ஜெனார்த்தனுடன் வந்தது எவ்வளவு பெரிய
தவறு என்று தனக்குள் புலம்பிகொண்டும் பயந்தும் இருந்தவள் அங்கிருந்து எழுந்து செல்லும்
மார்க்கம் புலப்படாமல் தவித்துகொண்டிருந்தவளுக்கு நிலவரசனை பார்த்ததும் சற்று
தைரியம் உண்டானது.
ஏனெனில்
ஜெனார்த்தனன் பார்டியில் தனது ஆண்பெண் நண்பர்களுடன் இன பாகுபாடில்லாமல்
மதுகோப்பைகளில் உள்ளதை குடித்து போதை ஏறிப் போய் அமர்ந்திருந்தான். அவனது
நண்பர்கள் அவனை கீதவாணியுடன் நெருக்கமாக அமரசொல்லியும் ஹக் பண்ணு கிஸ் பண்ணு என்று
கூறியும் உற்சாகப்படுத்திகொண்டிருன்தனர்.
கீதவாணி
அவனை ஓரளவுக்குமேல் தன்னை அணுகவிடாமல் சமாலித்துகொண்டிருந்தாள் பொதுஇடத்தில்
அவனின் செயலை பழக்கவழக்கத்தை பார்த்து பயந்தும் வெறுத்தும் கொண்டிருந்தவள் எவ்வளவு
நேரம்தான் சமாளிக்க முடியும் என்று முழி பிதுங்கி கொண்டிருந்தாள்.
அவள் பயந்ததுபோலவே மதுவின் போதையோடு நண்பர்களின் வார்த்தையால்
பெண்போதைக்கும் ஆளானவன் அவளது மறுப்பை துச்சமென மதித்து அத்துமீறி அவளின்
உதடுகளில் பொதுஇடத்தில் அவனது நண்பர்களின் முன் முத்தமிட முயன்றான்.
அவனின்
அச்செயலில் அதிர்ச்சியுற்று தடுக்க வேறு வழியில்லாமல் வேகமாக எழுந்தபோதும் விடாமல்
அவளின் கைப்பற்றி தன்னை நோக்கி இழுத்தான் ஜனார்த்தனன் அவனின் பிடியில் இருந்து
தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றபோது அவள் பின் இருந்த இருக்கை அவளின் கை பட்டு
தரையில் விழுந்து ஓசை எழுப்பியது அதேநேரம் அவனிடம் மாட்டியிருந்த கையை
விடுவித்துக்கொள்ள மற்றொரு கையால் அவன் கன்னத்தில் பளார் என்று அறை கொடுத்தால்
கீதா.
episode-04 ----தொடரும்---- episode-06

No comments:
Post a Comment