anti - piracy

Post Page Advertisement [Top]


           பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா....!(தீபாஸ்-ன்)        
                                அத்தியாயம்-04
                                 

காரினுள் ஏறுவதற்கு முன் கீதாவிற்கு வாசல்வரை வந்துவிட்டு இவர் உள்ளே வராமலேயே அப்படியே கிளம்பினால் எப்படி...? ஒருநிமிடம் வீட்டிற்குள் வந்து அப்பா அம்மாவிடம் பேசிவிட்டு வந்துவிடலாம் என்று சொல்வோமா...! என்று திறந்திருந்த கார் கதவை பிடித்தபடி அவனிடம் தனது மனதில் உள்ளதை சொல்ல தயக்கத்தோடு ஜெனார்த்தனை பார்த்தாள்.

ஜெனார்த்தன் என்ஜினை அமர்த்தாமல் அவள் ஏறுவதற்காக காத்திருந்தவனுக்கு அவளின் தயக்கம் எரிச்சலை கொடுத்தது. எனவே சுரித்த முகத்துடன் கெட் இன் கீதா, டைம்ஸ் அப் என்று கூறினான்.

வீட்டோடு கல்யாணம் உறுதி செய்தபோதுதான் முதன் முதலில் அவனை பார்த்தாள் கீதவாணி அன்று கூட அவன் தான் அவளிடம் ஒருசில வார்த்தை பேசியிருக்கிறான் அவ்வாறு அவன் பேசிய வார்த்தையும் இவளுக்கு அசவுகரியத்தையே கொடுத்தது. ஏனென்றால் இதுவரை அவள் பழகிய வரை அவள் அறிந்த குடும்ப ஆண்களின் கண்ணியமான பேச்சை மட்டுமே கேட்டிருந்தவளுக்கு முதல் முறையாக ஜெனார்த்தனன் அதை உடைத்து கண்களினால் அவளை கபளீகரம் செய்வதைப்போல் பார்த்துகொண்டு சூப்பர் ஸ்ரெக்சர் உனக்கு இதை இப்படியே கல்யாணத்துக்கு பிறகும்  மெய்ண்டெய்ன் செய்யணும் ஒகேயா...? என்று கூறியதை கேட்ட கீதாவிற்கு  எப்படி ரியாக்ட் செய்யவென்றே தெரியவில்லை.

அவளுக்கும் தனக்கு வரும் கணவனை பற்றிய எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். தனக்கு கணவனாக வருபவன் தன்னை அன்பால் நெருங்கவேண்டும். ரசிக்கவேண்டும் என்றே ஒவ்வொரு பெண்ணும் நினைப்பாள். ஆனால் அவன் தன்னை அன்பாய் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, அவளுடையவன் அவன் என்று கீதவானியின்  மனம் ஏற்றுக்கொள்ளும்  முன்பே தனது மேனியில் அலைபாய்ந்த அவனின் பார்வை கீதாவிற்கு அசவுகரியத்தையே கொடுத்தது.

இன்று அவனுடன் தனியே வெளியில் செல்லும் நிலை வந்தபோது தனக்கு அவன்தான் வருங்காலக் கணவன் என்று ஆகிவிட்டது எனவே மனதளவில் அவனை கணவனாக ஏற்றுகொள்ள தன்னை தயார்படுத்திகொள்ளவேண்டும் என்று நினைத்தே கிளம்பினால். சகஜமாக அவனுடன் பேசிப்பழக முயற்சிக்கவேண்டும் என்று தனக்குள்ளாக கூறிக்கொண்டதாலேயே அவனை உரிமையாக வீட்டிற்குள் ஒருநிமிடம் வந்துவிட்டு பின் கிளம்புவோமே... என்று கேட்க நினைத்தாள்.

ஆனால் அவனின் சுரித்த முகத்தை பார்த்ததும் நினைத்ததை கேட்கமுடியாமல்  அவளின் தயக்கம் கட்டிபோட்டது. எனவே எதுவும் கூறாமல் அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்ததும் கார் வேகமெடுத்தது.

கார் கிளம்பியதுமே அழகான கீதாவின் அருகாமை ஜெனார்த்தனுக்கு உல்லாசமான மனநிலையை தந்தது. ஹாய் பியூட்டி இப்போ நாம் போவது நம் மேரேஜ் பிக்ஸ் ஆனதுக்கு என் பிரண்ட்ஸ்க்கு பார்டி கொடுக்க. இப்போ என்னை விட்டு தள்ளி உட்கார்ந்திருப்பதைபோல் அவங்க முன்னாடி இருக்ககூடாது சரியா? என்று கேட்டான்.

அவன் கூறியதற்கு சரி என்று சொல்லவும்  முடியாமல், முடியாது என்று சொன்னாள் தவறாகிவிடுமோ என்று பயந்து வார்த்தை வராமல் இல்ல... இல்ல...என்ற வார்த்தக்குமேல் வேறு வார்த்தை வராமல் தடுமாறினாள்.

அவளின் நெர்வஷ்ஷான நிலைமையை கண்டவன். ஏய் எதுக்கு இப்படி பயப்படுற... ரிலாக்ஸ். என்று கூறியபடி ஒருகையால் டிரைவ் செய்துகொண்டே மற்றொரு கையை எட்டி அவளின் முதுகுக்கு பின் நுழைத்து இடுப்போடு பிடித்து அவளை தனக்கருகில் இழுத்து அமர்த்தியவன் நாம ரெண்டுபேரும் இப்படி நெருங்கி பழகிவிட்டோமென்றால் உனக்கு இந்த நெர்வஸ் போயிடும் என்றான்.

அவனின் இச்செயலை எதிர்பார்க்காத கீதாவிற்கு படபடப்பாகிவிட்டது. தனது மேனியில் இருந்த அவனின் கையை விலகியபடி ஐய்யோ...! டிரைவ் செய்துகிட்டு இருக்கீங்க. ரோட்டை பார்த்து ஓட்டுங்க என்று அப்போதைக்கு அவனிடம் இருந்து தப்பிப்பதற்கு அவ்வாறு கூறினாள்.

ஏனோ! அவன் தனது வருங்கால கணவன் தான் என்றாலும் இன்னும் கல்யாணம் ஆகாத நிலையில் அவனின் செயல் அத்துமீறலாக அவளுக்கு தோன்றியது. ஆனால் தன்னுடைய மறுப்பை நேரடியாக சொன்னாள் அவனின் மனம் காயப்பட்டு அதனால் இன்னும் பத்துநாளில் கணவன் மனைவியாக ஆகபோகும் தங்களின் உறவில் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயமாகவும் இருந்தது.

ஜெனார்த்தனன் வீட்டின் ஒரே வாரிசு. கையில் காசும், அவனைபோன்றே பணக்கார வீட்டு களிசடைகளின் நட்பும் அவன் அன்னையை தவிர மற்ற அழகான பெண்கள் அனைவரும் போதை பொருளாகவே நினைக்க வைத்தது.

இந்நிலையில் முன்னணி நடிகையின் மகள் கனிஷ்காவின் நட்பு அவனுக்கு கிடைத்தது. அவனது நட்பு வட்டாரத்தில் அழகான கேர்ள் பிரண்ட் கொண்டவன் என்ற பொறாமை பார்வை அவனை மேலும் அவளுடன் நெருங்கி பழக தூண்டியது.

கனிஷ்கா அவனைவிட இரண்டு வயது பெரியவள் என்றாலும் சிறுத்த இடையுடன் சிக்கென்ற மாடன் உடையில் சிவந்த நிறத்தில் இருந்த கனிஷ்காவிற்கு ஜெனார்த்தனின் ஒரேபிள்ளை செல்வந்தன் போன்ற குவாலிபிகேசன் அவளுக்கு பிடித்தமானதாக இருந்தது.

அவளுக்கு வரைமுறையற்ற அவளின் அம்மாவின் வாழ்க்கை முறையில் இரண்டாம் தாரமாக இருக்கும் தனது தாயின் மகள் என்ற அடையாளம் பிடிக்காமல் போனது.

ஏனோ அவளுக்கு சினிமா துறை அவளின் அம்மாவை வெளியுலகத்தில் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனம், பார்வையால் பிடிக்காமல் போனது. கனிஷ்காவை சினிமாவில் இழுத்துவிட அவள் அம்மா முயன்றபோது அவள் எனக்கு நடிக்க பிடிக்கவில்லை என்று கூறி பெரிய பிஸ்னஸ்மேனின் மனைவியாக முதல் மனைவியாக ஆனால்தான் சமூகத்திலும் நான் மதிப்பாக வாழமுடியும் என்று கூறினாள்.

அதற்கு அவளின் அம்மா பெரிய இடத்தில் இருந்தெல்லாம் முறைப்படி அதுவும் இரண்டாம்தாரமான சினிமா நடிகையான என் மகளை கல்யாணம் கட்டிக்கொள்ள முன் வர மாட்டார்கள். நீயா ஏதாவது பனக்காரனா பார்த்து கவிழ்த்து கல்யாணம் செய்துகொண்டால்தான் உண்டு என்று கூறினாள்.

அதை வேதவாக்காக எடுத்துகொண்டு கனிஷ்கா பேகும் இடங்களிலெல்லாம் பணக்கார வீட்டு பசங்களை ஈர்க்க முயன்று வெற்றியும் பெறுவாள். ஆனால் அந்த ஆண்கள் அவளிடம் தங்களின் தேவை முடிந்ததும் கல்யாணம் என்று இவள் பேசப்போவதை புரிந்துகொண்டு கழட்டி விட்டுவிடுவர்.

இந்த முறை அப்படி அவள் தேர்ந்தேடுத்தவன்தான் ஜனார்த்தனன். ஜனார்த்தனின் தந்தைக்கு இவ்விசயம் தெரிந்ததும் கனிஷ்காவை கல்யாணம் முடிப்பேன் என்று மகன் கூறிவிடுவானோ என்ற பயம் வந்துவிட்டது. மகனின் கண்கள் அவளின் அழகின் மேல்தான் என்பதை புரிந்துகொண்டவர்கள் அவளை விட அழகான பெண்ணை மகனுக்கு கல்யாணத்திற்கு பார்த்தால் மட்டுமே அவனை கனிஷ்காவிடமிருந்து மீட்க்க முடியும் என்பதை உணர்ந்தனர்.

அவ்வாறு அவர்கள் அழகான பெண்ணை தேடியும்  எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ஒரு கல்யாண வீட்டிற்கு மகனுடன் சென்ற ஜனார்த்தனின் அம்மா,  கல்யாணப் பொண்ணுக்கு தோழியாக இருந்த மிக அழகான  தோற்றத்தில் கீதவாணியை கண்டார். தன் மகனின் பார்வையும் அவளை தொடர்வதை கண்ட அவள் கீதவாணியை பற்றி விசாரித்து ஏழ்மையான குடும்பம் என்றாலும் நல்ல குடும்பத்தில் படித்தபெண் என்பதை தெரிந்தவர்கள் அவளையே மருமகளாக கொண்டுவர முயன்று இதோ கல்யாணத்திற்கு பத்திரிகை வைக்கும் வரை வந்துவிட்டது.
episode-03                                ---தொடரும்---         episode-05

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib