anti - piracy

Post Page Advertisement [Top]


           பேசும் கண்ணுக்கு என்னைபுரியாதா....!(தீபாஸ்-ன்)           
                          அத்தியாயம்-1
                             
             வெள்ளைநிற வேஷ்டி சட்டையில் கம்பீரமான தோற்றத்தில், கருப்பு அழகில்லை என்று யார் சொன்னது, இதோ இவனை பார்த்தபின் அந்த கருப்பு நிறமே இவனால் அழகாக மாறிவிட்டதோ என்று நினைக்கும் வகையில் இருந்தான் நம் நாயகன் நிலவரசு.
                  கம்பீரமானமான ஆண்மகன்  நிலவரசு. எப்பொழுதும் மடிப்புகுழையாத வெள்ளை வேஷ்டி சட்டையுடன் காலில் பார்க்க சாதாரமாக தெரியும் செருப்புடன் (அறிந்தவர்கள் மட்டுமே அந்த பிராண்டட் செருப்புகளின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கும்) அப்பொழுது எந்த கட்சி ஆட்சியில் இருக்கோ! அதன் கொடியேந்திய  வெள்ளைநிற பொலிரோ காரில் ஐந்தாறு அடியாட்களுடன் தான் எப்பொழுதும் காணமுடியும்  நிலவரசுவை.
                    இவனின் தயவில்லாமல் எந்த கட்சியும் தேர்தலில் நிற்க முடியாது .ஆளும் கட்சியானாலும் எதிர்கட்சியானாலும் அதன் நிதிதேவைகளுக்கும் அடியாட்களின்  தேவைக்கும் இவனிடம்தான் நிற்கவேண்டியிருக்கும் .
                  நிலவரனின் பெரியப்பா, மயில்சாமிபயில்வானின் கணக்குவழக்கை பார்க்கும் வெங்கிடு  கையில் மஞ்சள்நிற பையுடன் காலை ஆறுமணிக்கு நிலவரசுவை பார்பதற்கு அவனது வீட்டின் வரண்டாவில் காத்திருந்தார்.அங்கு நிலவும் சூழலை பிரமிப்புடன் பார்த்துகொண்டிருந்தார்.
                 மிக உயரமான காம்பவுண்டுசுவர் ஏக்கர்கணக்கில் இருந்த இடத்தை சுற்றி எழுப்பப்பட்டிருந்தது. அதனுள் இரண்டு பில்டிங் இருந்தது. அதில்  ஒன்று நிலவரசனின் வீடு, அது   சிங்கிள் பெட்ரூம் கொண்ட மேல்தட்டுவர்க்க சிறிய குடும்பம் வசிப்பதற்கு ஏற்றவகையில் இருந்தது. அதில் பெட்ரூமில் மட்டும் அதற்குரிய பர்நிச்சர்களுடன் சுத்தமாக இருந்தது. மற்றபடி அவ்வீட்டில் உள்ள ஹால், சமையலறை, வராண்டா போன்ற இடங்களில் எந்த பொருட்களும் இல்லாமல் அதேபோல் சிறு தூசு துரும்பும் இல்லாமல் இருக்கும்.
            மற்றொரு பில்டிங் இதற்கு எதிர்பதமாக பிரமாண்டமாக பெரிய அளவில் இருந்தது. அந்த அதிகாலை நேரத்தையும்  பகல்போல் காட்டக்கூடிய விளக்குகளின் ஒளியுடன் “பில்டிங் அடிக்ட் ஜிம்” என்ற எழுத்தை தாங்கியிருந்தது .அதன் முன் அமைந்திருந்த கார் பார்கிங் ஏரியாவில் அந்த அதிகாலை நேரத்தில் நின்றிருந்த அனைத்து கார்களும்  அதன் பிராண்டுகளும் தெரிவித்தது ஜிம்க்கு வந்திருப்பவர்கள் யாரும் சாமானியர்கள் அல்ல பெரும் செல்வத்தில் கொளிப்பவர்கள் என்று.
            ஆம்! நிலவரசனின் ஜிம்மில் பயிற்சிக்கென்று வருபவர்கள் நடிகர்கள், மில்லினியர்களின் வாரிசுகள், பெரிய வி.ஐ.பி கள் தான். எனவே ஜிம்மை சுற்றி பாதுகாப்பபிற்கென்று பவுன்சர்கள் ரவுன்சில் எந்நேரமும் இருந்துகொண்டு இருந்தனர். வாயிற் கேட்டில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
             தனது காலை உடற்பயிற்சியை அவனது ஜிம்மில் முடித்துவிட்டு ஜிம் இயந்திரங்களை பார்வையிட்டுவிட்டு தனது வீட்டுக்கு வரும் வழியில் ஒருவன் ஓடிவந்து, “அண்ணே..... பெருசுவீட்டு கணக்கு உங்கள பார்க்க இங்கன வந்துருக்கு” என்று பவுன்சர்களில் ஒருவன் வந்து கூறினான்.
            அதற்கு நிலவரசு கணக்கா? அது எதுக்கு என்ன பார்க்க இங்க வந்திருக்கு..! எதுநாலும்  நான் பத்துமணிக்கு பெருசுவீடுக்கு வரும்போது சொல்லாமல் இந்நேரம் வீட்டுக்கு எதுக்கு வந்துருக்காப்புல. எங்க கணக்க உக்காரவச்சுருக்க என்று கேட்டான் நிலவரசு.
           வீட்டு வரண்டாவுலதான் சேர்போட்டு உக்காரவச்சிருக்கேன் அண்ணே என்று அவன் கூறியதும். சரி நான் பார்த்துக்குறேன் என்று வீட்டை நோக்கி எட்டி நடை போட்டான் நிலவரசு.
           அவன் வரும் அரவம் கேட்டு எழுந்த கணக்கு வெங்கி, கதர் சட்டையில் நெற்றியில் பட்டை திருநீறுடன் மரியாதை தரக்கூடிய தோற்றத்தில் சிவந்த நிறத்தில் கையில் மஞ்சள் பையுடன் எழுந்து நின்றார்.
           அவர் எழுந்து நிற்பதை பார்த்தவன் உக்காருங்க கணக்குபிள்ளை பெரியவங்க நீங்கபோய் என் முன் நிக்கலாமா? உக்காருங்க என்றான்.
           இருக்கட்டும் தம்பி என்று அவர் சொல்வதை காதில் வாங்காமல் நீங்க உக்காருங்க என்றவன் மணி என்று உள்நோக்கி குரல் கொடுத்தான் வீட்டை தினமும் சுத்தபடுத்தும் மணி இன்றும் உள்ளே நிலவரசு வருவதற்குள் தனது வேலையை முடித்துவிட வேகவேகமாக வேலை செய்துகொண்டிருந்தவன்,  செய்துகொண்டிருந்த வேலையே பாதியிலேயே போட்டுவிட்டு இதோ வந்துட்டேன்... அண்ணே! என்று ஓடிவந்து வந்து நிலவரசனின் முன்னால் நின்றான்.
          வீட்டுக்கு ஆள் வந்துருக்காபுள்ள காபிவாங்கிகொடுக்காம உள்ள என்ன செய்ற? என்று நிலவரசு  கேட்டதும். நா உள்ள வேலை பார்த்துட்டு இருந்தேன் இவங்க வந்தத பாக்கலண்ணே... இதோ ஒரே நிமிசத்துல்ல வாங்கிட்டு வந்துடுறேன் என்று ஓடினான் மணி.
          வெங்கியின் புறம் திரும்பிய நிலவரசு என்ன இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க! எதுனாலும் பெருசு வீட்டுக்கு நான் வரும்போது அங்கன என்னபார்த்து சொல்லியிருக்கலாமுள்ள என்றான்.
          அவன் அவ்வாறு சொன்னதும் இல்லதம்பி பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் வீட்டில வந்து பத்திரிக்கை வைக்கிறதுதானே மரியாதை. நீங்கதான் முன்ன வந்து நின்னு முடிச்சுக்கொடுக்கணும் என்றவர் மஞ்சள் பையிலிருந்த பத்திரிக்கையுடன் சின்ன தட்டில் ஒரு ஆப்பிள், வாழை, ஆரஞ்சு எடுத்துவைத்தார்.
         இதை எதிர்பார்க்காத நிலவரசன் உங்க பொண்ணுக்கா கல்யாணம்...! அது படிச்சுகிட்டு இருக்கே சின்ன புள்ளைதான அது என்று கூறினான் நிலவரசு.
      அவளுக்கு இருபது வயசு ஆகிருச்சு தம்பி அடுத்து ஒரு பொம்பள புள்ள வேறு வச்சுருக்கேன். இப்போவே இவளுக்கு முடிச்சுட்டா நல்லதுதான்.போன மாசத்தோட காலேஜ் படிப்பு முடிச்சுட்டா. அதுதான் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டேன் என்றார் வெங்கி.
             அவர் அவ்வாறு சொன்னதும் கீதவானியின் முகம் நிலவரசனின் கண்ணுக்குள் வந்துபோனது. அவளுக்கு கல்யாணம் என்று பத்திரிகை அவர் நீட்டியதை அவனால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
              அவளுக்கு வேறொருவனுடன் கல்யாணம் என்றதும் ஏன் எனக்கு இப்படி கோபம் வருகிறது என்று ஒருநிமிடம் யோசித்தவன், அவள் எனக்குரியவள் என்று அவன் உள்ளம் பதில் உரைத்தது .அப்போ அவளை நான் விரும்புகிறேனா...! என்று அவனுக்கு அவனே கேள்வி கேட்டதும் ஆம் என்ற பதில்தான் அவனுக்கு கிடைத்தது.
          நான் அவளை விரும்பும் விசயமே எனக்கு இப்போதுதான் புரிகிறதே.
                 சின்னப்பெண் படித்த குடும்பத்தில் இருக்கும் பெண். அவளும் படித்துகொண்டிருக்கும் அழகுப் பெண் போன்ற காரணத்தை மனதில் முன்னிறுத்தி எனக்குள் அவளின் மேல் உண்டான ஆர்வத்தை நான் ஆராயாமல் விட்டுவிட்டது பெரும் தவறாகிவிட்டதே.
                  என்னிடமே வந்து என் காதலியின் கல்யாணத்தை முன் நின்று நடத்திகொடுக்கவேண்டும் என்று அவளின் அப்பா அழைத்துவிட்டுபோகிறாரே! இப்பொழுது நான் என்ன செய்ய..? என்று ஒருநிமிடம் தனக்குள்ளேயே யோசனையுடன் இருந்தவனின் முன் தட்டை நீட்டியபடி தம்பி.. தம்பி... என்று அழைக்கும் கணக்கின் குரல் அவன் கனவை கலைத்தது . 
                              தொடரும்    episode-02

1 comment:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib