பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா....! (தீபாஸ்-ன்)
அத்தியாயம்-2
நிலவரசு
தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவர் கொடுத்த பத்திரிக்கையை வாங்கிகொண்டான். கல்யாணச்செலவுக்கு
பெரியவர்கிட்ட மட்டும்தான் கேக்கணும் என்று நினைக்காதீங்க எதுனாலும் தயங்காமல் என்னிடம்
கேளுங்க. பெருசு எதுவும் உங்க வீட்டு கல்யாணத்தபத்தி என்னிடம் சொல்லலையே.... என்று
கூறினான் நிலவரசு.
இல்ல
தம்பி... பெரியவர்கிட்ட கல்யாணத்தேவைக்கு எதுவும் நான் கேட்கல அதனால் உங்களுக்கு
விஷயம் சொல்லவேண்டிய அவசியமில்லாமல் போயிருக்கும். மேலும் மாப்பிள்ளை வீட்டில் வரதட்சனை
எதுவும் கேக்கலை. என் மகள் ஆறுமாதம் முன் நடந்த அவங்க பெரியம்மா பொண்ணு
கல்யாணத்தில், அவளை பார்த்த மாப்பிள்ளை வீட்டார், பெண் பிடித்துவிட்டது நீங்கள்
எதுவும் போட வேண்டாம் பெண்ணை கொடுத்தால் மட்டும் போதும் என்று திரும்பத்திரும்ப
கேட்டு வந்தாங்க.
மாப்பிள்ளை
பையன் வீடு வசதியான இடமாக இருக்குதே என்று யோசித்தேன். வீட்டில கீதா அம்மாவுக்கு
இந்த இடத்தில் கீதாவை கொடுக்க ரொம்ப ஆசை. நம்மலால சம்மந்தி அந்தஸ்த்துக்கு
நெருங்கி பழக முடியாவிட்டாலும். நம்ம மகளின் வாழ்க்கை செழிப்பா ஆகிடுமில்ல என்று
கூறினாள். ஒருவகையில் அவள் ஆசையும் நியாயமாகவே எனக்குத் தெரிந்தது. எனவே விரும்பி
அவங்களா வரும்போது நாம ஏன் வேண்டாம் என்று சொல்லனும் என்று முடிவு செய்தது
கல்யாணம் வரை வந்துருச்சு.
மாப்பிள்ளை
வீட்டில் கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவங்களே செய்திட்டாங்க. அவங்க
எதுவும் செய்யச்சொல்லி சொல்லாவிட்டாலும் நம்ம
பொண்ணு வாழபோற வீட்டில் மதிப்பா இருக்கனுமில்லையா? அதனால் அவளுக்கு செய்துவைத்திருந்த நகையோட அவங்க அம்மா
நகை சின்னவளுக்கு வைத்திருந்த நகை எல்லாம்
புதுபிச்சு மொத்தமா இப்போ கீதாவிற்கே போட ஏற்பாடு செய்திட்டேன். இன்னும் கொஞ்சம்
சீர் செய்றதுக்கு ஒரு லட்சம்வரை பணம் தேவை படுது நேத்து நைட்டு தான் பெரியவர்கிட்ட
கேட்டேன் இன்னைக்கு காலையில் தருவதாக சொன்னார். அப்படியே அவர் இப்போ வீட்டை விட்டு
வர முடியாததால் அவருக்கு பதில் நீங்க முன்னின்னு எல்லா உதவியும் செஞ்சுடுவீங்கனு
சொன்னார் என்றார்.
அதற்கு நிலவரசு
அவரிடம், காலையில அய்யா வீட்டிற்கு நான் வரும்போது அமவுண்டு கொண்டுவந்து
கொடுக்கிறேன் என்றான். அப்பொழுது மணி கடையில் இருந்து வாங்கி கொண்டுவந்த காபியை
எடுத்துக்கோங்கசார் என்றபடி வெங்கியின் புறம் நீட்டினான்.
மறுப்பேதும்
சொல்லாமல் அவன் கொடுத்த டீயை அவர் வாங்கி பருகிகொண்டிருகும்போது தனது கையில்
இருந்த பத்திரிக்கையை பார்த்தான். அதில் PNJ மில் ஓனர் பத்மநாபன் மகன்
ஜெனார்த்தனன் மாப்பிள்ளை என்று பார்த்ததும் நிலவரசனின் முகம் யோசனையை
தத்தெடுத்தது.
PNJஓனர் பத்மநாபன்
மகனா மாப்பிள்ளை! இந்த பையன் ஜெனார்த்தனும் மினிஸ்டர் ரெங்கராஜனின் மகனும் ஒண்ணாத்தானே
சுத்துவாங்க. பெரிய எடமாத்தான் பேசிமுடிச்சிருகீங்க. என்றவன்,
மனதிற்குள்
காசுபார்டி எப்படி கணக்கு வீட்டில சம்மந்தம் செய்றாங்க... கீதவாணி அழகுதான்
ஆனாலும் வசதியில்லாத கணக்கு வீட்டில் வலியவந்து சம்மந்தம் பேசுராங்கன்னா ஏதாவது
பையனிடம் வில்லங்கம் இருக்கும்.
மினிஸ்டர் ரெங்கராஜனின் மகன் பக்கா அயோக்கியன்
அவனோட சிநேகிதன் தானே இந்த ஜெனார்த்தனன். என்று யோசித்துக் கொண்டிருகும்போது
வெங்கி டீ குடித்துமுடித்தவர் அப்போ நான் கிளம்புறேன் தம்பி என எழுந்தார்.
சரி
கணக்குபிள்ளை பத்துமணிக்கு அய்யா வீட்டிற்கு நான் வரும்போது அமோவுன்ட் தருகிறேன்
பாப்போம் என விடைகொடுத்தான் நிலவரசு.
கீதவாணி தனது அம்மா விசாலியிடம் ஏம்மா இப்படி செய்றீங்க நீ வச்சிருகிறதே
அந்த ஒரு செயின்தான் அதையும் எனக்கு போட்டுவிட்டுட்டீனா நாளும் கிழமையும்னா நீ எத போட்டுப்ப. எனக்கு
பின்ன ஒருத்தி இருக்கா வீட்டில் உள்ள மொத்தத்தையும் எனக்கே போட்டுட்டா அவளுக்கு
என்ன செய்வீங்க?
அதுதான்
அவங்க வீட்டில் எனக்கு எதுவும் போடச்சொல்லி கேக்கலயில்ல எனக்குன்னு வாங்கி
வச்சிருக்கிற பதினைந்து பவுன் இருக்கே அத மட்டும் நான் கொண்டுபோறேன் என்று
சொன்னாள்.
அவள்
அவ்வாறு கூறியதும் விசாலாச்சி உனக்கு என்னடி தெரியும் ரொம்ப பேசாம கல்யாணப்பொண்ணா
லச்சணமா இரு.நானே நாம நெனச்சு பார்க்க முடியாத இடத்தில் சம்மந்தம் அமைந்திருக்கு
என்ற சந்தோசத்தில் இருக்கேன். அவங்க, பேசி முடிவானதும் உன் கழுத்துல போட்டுவிட்ட
அந்த ஒரு நகையே நாங்க உனக்கு போடுற நகையைவிட பவுன் அதிகம்.
நானே உன்
அப்பாவிடம், பெரியவர்கிட்ட நம்ம இந்த வீட்டுமேல கொஞ்சம் கடன் கேட்டு வாங்கி இப்போ
போடுற முப்பது பவுனோட ஒரு பத்துபவுன் கூட போட்டுற முடியாதான்னு கேட்டுட்டு
இருக்கேன். போற இடத்தில் நீ மதிப்பா வாழனும் இல்லையா! என கேட்டார்.
அவர்
அவ்வாறு கூறும் போது அவளது தங்கை தேவிஸ்ரீ அக்கா உனக்கு கல்யாணம் முடியறதுக்குள்ள அப்பா
கூட என்னையும் சேர்த்து இந்த அம்மா ஒன்னும் இல்லாமல் நடுத்தெருவுல நிக்கவைக்க
பிளான் போடுறாங்க என்றாள்.
அடி
சின்ன கழுத... என்ன வார்த்தை சொல்ற என்று கோவமுடன் கூறினாள் விசாலாச்சி.
அவ
சொல்றதில் என்ன தப்பிருக்கு? குடியிருக்கிற வீட்டை போய் அடகுவச்சு கடன்
வாங்குறேன்னு சொல்றீங்களே மா, அதுவும் யாருட்ட பயில்வானிடம் அதுதான் ஊருக்கே
தெரியுமே அவர்ட்ட சொத்த அடகுவச்சவன் எவனும் சொத்தை மீட்டதே இல்லை என்று.
குடியிருக்கிற வீட்டை போய் அடகு வைக்கணும் என்று எப்படிமா நீ நினைக்கலாம். அப்படிமட்டும்
நீ செய்யச்சொல்லி அப்பாவை கட்டாயப்படுத்தினா நான் கல்யாணமே வேண்டாம் என்று சந்நியாசம்
போயிடுவேன் பார்த்துக்கோ என்றாள்.
அவள்
அவ்வாறு கூறியதும் ஊர் ஆயிரம் சொல்லும். உங்கப்பா அங்கனதான கணக்கெழுதுகிறார். நீ
சொல்றமாதிரி நடந்ததெல்லாம் பதினைந்து வருசத்துக்கு முன்னால எப்ப பெரியவர் வெளியில்
போக முடியாம முடங்குனாரோ அவர் தம்பிபுள்ள நிலவரசன் பொறுப்பெடுத்தானோ அப்போயிருந்து
நியாயமாத்தான் நம்ம போன்ற சாமானியர்களிடம் கொடுக்கல் வாங்கல் பண்றாங்க.
நிலவரசு
தம்பி நம்மள போன்றவர்ளிடம் இரக்கம்தான் படுவார். பெரியபணக்கார முதலைகளிடமும்
அரசியல்வாதிகளிடமும் தான் அவரின் செயல்பாடுகள் பங்கரமாக இருக்கும் என்று
கூறியிருக்கிறார் உங்க அப்பா.
நீயும்
அப்பாவும் வேணும் என்றால் அந்த நிலவரசுவை நல்லவன் என்று சொல்லிக்கோங்க அவனை
பார்த்து ஊரே பயப்புடுது. நல்லவனை பார்த்து எதுக்கு ஊர் பயப்படனும் என்று
அவர்களிடம் சொன்னவள் மனதிற்குள் அவனும் அவன் பார்வையும் நம்ம அப்பாதானே அவங்கட்ட
வேலை பார்கிறார் என்னமோ நான் கண்ணில்
படும்போதெல்லாம் என்ன இங்கன நிக்கற... அக்கன நிக்கிறனு... ஒரே அதிகாரம்
செய்துகிட்டு ஆளையும் மூஞ்சியும் பாரு என்று சொல்லிக்கொண்டாள்.
episode-01 தொடரும். episode-03

No comments:
Post a Comment