anti - piracy

Post Page Advertisement [Top]


              அன்பால் கட்டிய வீடு (தீபாஸ்-ன்)        
         தன் கட்டிலின் அருகில் இருந்த டீபாயில் வைத்திருந்த போன்  ஒலி  எழுப்பியதும்  கவிதா  போனை  அட்டன் பண்ணு என்ற மகேஸ், திடுக்கென்று எழுந்தான், தன் மனைவி அவள் அம்மா வீட்டிற்கு போய் இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டன, என்பது நினைவில் வர போனை எடுத்துப்பார்த்தான்.  அது  அவன் ஆபீஸ் கிளம்ப இன்னும் முப்பது நிமிடம்  தான் உள்ளது என்று காட்டியது .

         பரபரப்புடன் கிளம்ப குளியலறைக்குள் போனவன் தொடர்ந்து பெய்யும் மழையினால் குளிர்ந்து போன காலநிலைக்கு வெந்நீர் குளியல் போட ஹீட்டர் குழாயை திருக்கினான் . சில்லென்று இருந்தது தண்ணீர்.  தன் கவிதா இருந்தால் இந்த குளிரில், குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டியிருக்காது அவன் குளிக்க போகும் முன்னரே, ஹீட்டர் ஆன்செய்து இளம் சூடான வெந்நீர் தயாராக வைத்திருப்பாள் என்று எண்ணியவுடன் அவன் மனது அவள் தனக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைவைப்பதை புறம் தள்ளியபடி குளித்து முடித்து வெளியில் வந்தவன் சாப்பிட மேஜையில் அமர்ந்தான்.

                “அம்மா சாப்பாடு வையுங்கள் ஆபீஸ்க்கு நேரம் ஆகிவிட்டது, என்று குரல் கொடுக்கவும், “இதோ கொண்டு வறுகிறேன் மகேஸ் என்ற அவன் அம்மா ஒரு கையில் ஸ்கூல் லன்ஞ் பையுடனும், ஒரு கையில் சட்டினி கின்னத்துடனும் வந்தாள் .

      சாப்பாடு மேஜையில் அவனுக்கு தட்டை வைத்துக்கொண்டு  இட்லி பரிமாறிக்கொண்டு இன்னிக்கு மதியம் ஆபீஸ் கேண்டியனில் சாப்பிட்டுக்கோ மகேஸ். நான், எனக்கும் ஷாலினிக்கும் மட்டும் பருப்புசாதம் மதியத்திற்கு வைத்துக்கொண்டேன் என்றாள்.
 .
     அப்போ! அக்காவும், மாமாவும் மதியம் என்ன சாப்பிடுவார்கள் என்று கேட்டுக்கொண்டே இட்டிலியை பிய்த்து சட்டினியில் தோய்த்து வாயில் வைத்துக்கொண்டே கேட்டான் .

     அப்பொழுது கையில் ஷாலினியை பிடித்தபடி வந்த அவனுடைய அக்கா, “இன்னைக்கு உங்கள் மாமாவின் பிரண்ட் வீட்டு விசேசத்திற்கு  நாங்கள் போவதால், அம்மா எங்களுக்கு சமைக்கவில்லை என்று கூறியபடி தன் மகளின் முதுகில் ஸ்கூல் பேக்கை மாட்டியபடி    லஞ்ச் பேக் எடுத்துக் கொண்டு “,அம்மா நான் ஸ்கூல் பஸ்சில் இவளை ஏற்றிவிட்டுவிட்டு   வருகிறேன். உங்கள் மாப்பிள்ளை வந்தால் சாப்பாடு எடுத்துவையுங்கள் என்று கூறியபடி தன் மகளை கையில் பிடித்தபடி ,பாட்டிக்கும் மாமாவிற்கும் டாட்டா காட்டிய குழந்தையை டைம் ஆகிவிட்டது வேகமாக வா ஷாலினி என்றபடி வாசலை நோக்கிச் சென்றாள்.

      கவிதா இந்த வீட்டிற்கு வந்து ஒன்ரைவருடத்தில் ஒரு முறை கூட அவன் நண்பர்களின் வீட்டு பார்டிக்கு கூட்டிப்போனதில்லை .ஏன் என்றால் அவர்கள் இருவரும் வெளியில் எங்கு கிளம்பினாலும்  தன் அம்மாவிற்கு அல்லது தன் அக்காவிற்கு  உடலுக்கு முடியாமல் போய்விடும் .ஏனோ ஒரு நொடி ஏக்கம் நிறைந்த மனைவியின் முகம் மின்னி மறைந்தது அவன் மனதில் .

      அன்று கேண்டியனில் சாப்பிட வந்த மகேஸை பார்த்த சேரன் என்னடா கல்யாணம் ஆன நாளில் இருந்து கேண்டீன்  பக்கம் எட்டிக்கூட பார்க்காதவன் இன்னக்கு இங்க சாப்பிட வந்திருக்கிற, சிஸ்டர் கூட எதுவும் பிரச்சனையா, மூன்று நாளா உன் முகமே சரியில்லை என்று கேட்டான்.

       ‘ம் வீட்டில் பிரச்சனை தான் ,கவிதாவை இன்னும் குழந்தையில்லை என்று அம்மாவும் அக்காவும்  ஏதோ சொல்லியிருப்பார்கள் போல, அவள் டாக்டரிடம் வாருங்கள் எதற்கு  ஒன்னரை வருடமாகியும் குழந்தை பிறக்காமல் தள்ளிப்போகுது என்று பார்த்துவரலாம் என்று கூப்பிட்டாள்.

     அப்பொழுது அதைகேட்டவாறு வந்த என் அம்மா என் மகன் ஆம்பளை சிங்கம் அவனைப்போய்  குழந்தையில்லை என்று டாக்டர் முன் நிற்க்கச் சொல்கிறாயா? அழகாய் இருக்கிராய் என்று ஒரு மலடியை போய் என் மகனுக்கு கல்யாணம் செய்துவச்சேன் பாரு என்னைச் சொல்லனும் என்றாள்.

       நான் எப்பவும் போல் கவிதாவை அம்மாவின்  முன், அதுதான் என் அம்மா டாக்டரிடம் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களே இந்த விசயத்தை இத்துடன் விடு  என்று கூறிவிட்டு ஆபீஸ் வந்துவிட்டேன் .

        அன்று சாயந்தரம் வீட்டிற்கு போய் பார்த்தாள் கவிதா வீட்டில் இல்லை ஏன் என்று  அம்மாவிடம்  கேட்டேன், அவள் அம்மா வீட்டிற்கு போறேன் என்று கூறிவிட்டு நீ காலையில் ஆபீஸ் போனவுடன் பெட்டியை தூக்கிட்டு போய்விட்டாள் . உன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் அம்மா வீட்டிற்கு  போனவளை வலிய போய் கூப்பிடாதே, பின் உன்னை  ஆம்பளையாக மதிக்க மாட்டாள் என்று  கூறி அவளை கூப்பிட கிளம்பிய என்னை அம்மா தடுத்துவிட்டார்கள் .

            கவிதா இதுவரை எனக்கு போனும் செய்யவில்லை நானும் ஏன் போனாய் என்று கேட்கவில்லை என்ற மகேஸ் ,எனக்கு அவள் இல்லாமல் வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை என்றான்.
 .
           அவள் கல்யாணம் முடிந்து இதுவரை என்வீட்டில் எனக்கான அத்தனையும் பார்த்துப்பார்த்துச் செய்வாள் .ஆனால் நான் ஒரு தடவைகூட அவள் எனக்காக செய்ததற்கு பாராட்டியது  கிடையாது .

            அவ்வாறு அவள் செய்வது அவள் கடமையென்று நினைப்புடன் இருந்துவிடுவேன் .ஆனால் அவள் இல்லாத இந்த மூன்று நாளில் எந்த அளவு நான் அவளை சார்ந்து இருந்திருக்கிறேன் என்பது புரிகிறது அவள் இல்லாமல் எனக்கு வீடே பிடிக்கவில்லை .

           நான் இப்பொழுது நினைக்கும் போது மனைவிக்கு நான் ஆற்ற வேண்டிய கடமையைச்  செய்தேனா? என்றால் இல்லை, என்று தான் தோன்றுகிறது என்றான்.

           அவன் கூறியதை கேட்ட அவன் நண்பன் முதலில் நீ ஆபீசில் லீவ் சொல்லிவிட்டு டாக்டரிடம் சாயந்தரம் பார்க்க அப்பாய்ன்மென்ட் வாங்கிவிட்டு சிஸ்டரை பார்க்கப் போ முதலில் உன் அம்மா பேசியதற்கு மன்னிப்பு கேள் .ஆண் என்ற கெத்தைக் குறை உன்மனைவி உன்னில் சரி பாதி என்பதை புரிந்து நடந்துகொள் என்று அறிவுரைகூறி அனுப்பிவைத்தான்.

          வீட்டின் அழைப்பு மணியில் , கதவைத்திறந்த கவிதாவின் அம்மா மகிழ்ச்சியான முகத்துடன் வாங்க வாங்க உட்காருங்கள் நான் கவிதாவை கூப்பிடுகிறேன் அவள் மாடியில் அவள் ரூமில் இருக்கிறாள் என்று கூறினாள்.

           நீங்கள் கூப்பிடவேண்டாம் அத்தை, நானே போய் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குச் சென்று கதவில் கை வைத்ததும் கதவு திறந்து கொண்டது .சத்தம் போடாமல் உள்ளே சென்றவன் தன் மனைவி கண்ணீர் வடித்த கன்னத்துடன் களைந்த ஓவியமாய் தூக்கத்திலும் சோகமாக   இருக்கும்  கவிதாவை பார்த்தவன். கனத்த மனதுடன் என்னை அடைகலமாக வந்தவளிடம் நான் மட்டும் இளைப்பாறி அவளின் துக்கத்தைத் துடைக்காமல்  நான் ஏன் இருந்தேன் ,என்று நினைத்தவன் காரணத்தை ஆராய பயந்தான்.

     அவ்வாறு ஆராய்ந்தால்  தந்தையும் தாயுமாக இருந்து தன்னை வளர்த்த தாயை குற்றம் சுமத்திவிடுவேனோ? என்று பயந்தான் .எனவே அந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டான் .

       தன் தலைகோதும் விரல்களின் ஸ்பரிசத்தில் கண் விழித்தவள், தன் கணவனின் கலங்கிய முகம் தன் எதிரில் இருப்பதைப் பார்த்தவள் கனவோ? என்று கண்ணை கசக்கி மறுபடி பார்த்தாள் .

      அவளின் செயலில் அவளின் மேல் காதல் அதிகரித்து குற்ற உணர்வில் அவன் வாய், சாரி “இனி உனக்கு எல்லா விதத்திலும் நான் சப்போர்ட்டாக இருப்பேன் என்று கூறிய கணவனை பார்த்தவள் கண்களும் கலங்கியது.

       நீங்கள் வாயாலே இதுவரை எனக்கு ஆதரவாக பேசாவிட்டாலும் உங்களின் அன்பை நான் உணர்ந்ததினால் தான் நான் இதுவரை நம் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்தேன் .

       ஆனால் அத்தை அன்று உங்கள் முன் என்னை மலடி என்று கூறியும் நீங்கள் பேசாமல் போனதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கதறியவளை தன்னுடன் சேர்த்தனைத்தவன், இனி நான் உனக்கு எல்லா வகையிலும் நல்ல கணவன் என்பதை உணர்த்திவிடுவேன், என்றவன். என் அம்மா அப்படிபேசியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன் என்றவன் .சீக்கிரம் கிளம்பு   நாம் டாக்டரை பார்க்க அப்பாய்ன்மென்ட் வாங்கிய நேரத்திற்கு இன்னும்   முக்கால் மணி நேரம் தான் உள்ளது கிளம்பு என்று அவசரப்படுத்தினான் .

       அவளுக்கு ஆதரவாக மகேஷ் பேசாத போதே தன் கணவனுக்காக உருகுபவள் இனி அவன் ஆதரவாக இருப்பேன்  என்று கூறியதை கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் .தன் மனைவியின் மகிழ்ச்சியைப் பார்த்தவன் காதலுடன் தங்கள் மூன்று நாள் பிரிவை முத்தத்தால் ஈடுசெய்தான் .
       
       இருவரின் உடல் பரிசோதனை முடிவை  பார்த்த டாக்டர் இருவருக்கும் உடலால் எந்த பிரச்சனையும் இல்லை என்றவர் குழந்தை பாக்கியத்திற்கு உடல் நலத்துடன் மனதிற்கும் இனிமையான சூழ்நிலையிருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கூறி சாதாரண விட்டமின் மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார் .

        மகேஷ் அலுவலகத்தில் ஒரு மாத விடுமுறை எடுத்து மனைவியை தேனிலவு பயணமாக கேரளாவிற்கு அழைத்துச்சென்றான் .பயணம் கிளம்பும் போது உடம்புக்கு முடியவில்லை என்று கூறிய  தாயை தன் அக்காவிடம் மருத்துவமனை கூட்டிப்போகச்சொல்லி பணத்துடன் அனுப்பிவைத்த மகேஷ் தாமதிகாமல் உடனே கிளம்பிவிட்டான் தேனிலவிற்கு கவிதாவுடன்.

        மூன்று வருடம் கழித்து !

             தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டிவிட போராடிக்கொண்டு இருந்த கவிதாவை பார்த்து மகேசின் அம்மா பிள்ளை பெத்துட்டா மட்டும் போதாது அதை நல்லா  வளர்க்கத்தெரியனும், “எதுக்கெடுத்தாலும் முரண்டு பிடிப்பதை போல் வளர்த்து வைத்திருக்கிறாய், என்று கடிந்தாள். அப்போது அதை கேட்டவாறு வந்த மகேஷ் அம்மாவை ஏதோ சொல்ல வாய்திறக்க, கணவனைப் பார்த்த கவிதா .பேசவேண்டாம் என்று சாடைகாட்டி அடக்கினாள்

      தன் அம்மாவை எதிர்த்து தனக்கு சப்போட் செய்து தன் கணவன் பேசிய பின், அவன் மனம்  அம்மாவை பேசியதற்காக  வருந்தும் ,தன் கணவனின் வருத்தத்தை காண பிடிக்காமல் தன் கணவன் தனக்காக் பேசுவதை அடக்கிவிடுவாள் கவிதா.

       மகேஷிற்கு தன் அம்மா மீது உள்ள அன்பால் அவள் செய்யும் குற்றம் பெரிய குறையாக தெரியவில்லை . கவிதாவிற்கு தன் கணவனின் மேல் உள்ள அன்பால் வீட்டில் நடக்கும் பிரச்சனை சிறிதாக எண்ணி ஒதுக்க  முடிந்தது .

      கூட்டுக்குடும்பம் அன்பினால் கட்டிய சீட்டுக்கட்டு, அவ்வன்பு குறைவதால்தான் சில குடும்பங்கள் சரியும் சீட்டுக்கட்டாக உதிர்ந்துவிடுகிறது.


                              முற்றும் .                         


2 comments:

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib