anti - piracy

Post Page Advertisement [Top]


          பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா.....!(தீபாஸ்-ன்)
                                   அத்தியாயம்-08
                                      
வெளியில் காரில், கணக்கு வெங்கிகாக காத்திருந்த நிலவரசனுக்கு கோபம் அவரின் மேல் எழுந்தது. ஏனெனில் அவனுக்கு பதினாறுவயதில்  தனது பெரியப்பாவிடம் வந்ததில்  இருந்தே அவளின் தந்தையை பார்க்க வரும் கீதவாணியின் துருதுரு கண்களும் அவளின் தந்தையிடம் அவள் கொஞ்சி பேசும் அழகும் முயல்குட்டிபோல் அங்குள்ள மற்றவர்களை கண்டு பதுக்குயபடி செல்லும் சுபாவமும் கண்ட நிலவரசனுக்கு அவளைகன்டதும் வம்பிழுத்து அவளை தன்னுடன் பேசவைக்க மிகவும் பிடிக்கும்.

அவன் அங்கு வந்து நான்கு வருடம் இருக்கும், அப்பொழுது அவள்  தந்தைக்கு சாப்பாடு டிபன் கேரியர் கொண்டுவந்தாள் எப்பொழுதும் போல் தன் கண்ணில் படாமல் பதுங்கி கொண்டு போனவளை கண்டுகொண்ட நிலவரசு ஓய் முசகுட்டி கையில என்ன  இங்க கொண்டுவா...! என்று அவளை அதிகாரமாய் கூப்பிட்டான்.

தன்னை பிடித்து வம்பிழுக்கத்தான் இப்பொழுதும் நிலவரசு கூப்பிடுகிறான் என்பதனை உணர்ந்த கீதவாணி அவன் கூப்பிடுவதைக்கண்டு ம்...கூம் என்றபடி வேகமாக எட்டுவைத்து அவனை கடந்து செல்ல முயன்றாள்.

அவளை செல்லவிடாமல் எட்டி அவள் கையில் வைத்திருந்த சாப்பாட்டு கூடையுடன் அவளை பிடித்து இழுத்து சுவற்றில் அவளை சாய்த்து நிற்க வைத்து அவள் ஓடிவிடாதபபடி இரண்டு பக்கமுன் கைகளை சுவற்றில் வைத்து அவளை சிறை செய்தான்.

பின் அவளிடம் என்ன அவ்வளவு தைரியமாகிடுச்சா கூப்பிட்டா நிக்காம போற என்று பொய்கோபத்துடன் கேட்டான்.

அந்தநேரம் உள்ளிருந்த கணக்கு வெங்கி தற்செயலாக வெளியில் வந்தவர் இருவரையும் பார்த்து கோபம் கொண்டார். ஆனால் நிலவரசன் அப்பொழுதே தனது முதலாளியின் தொழில் வாரிசு என்று தெரிந்ததாலும் அவனின் பலமும் புத்திக்கூர்மையும் அவனை பகைத்துகொண்டால் தனது பொழப்பு போய்விடும் என்பதற்காகவும் தனது கோபத்தை அவனின்மேல் காட்ட முடியாத கோபத்தில் கீதா... என்று தன் மகளை சத்தமாக கோபத்துடன் அழைத்தார்.

சாந்தமான கணக்கு வெங்கியின் இத்திடீர் கோபக்குரலை கேட்ட நிலவரசன் கீதவாணியை மறந்து திரும்பினான். அவளும் தன்தந்தையின் கோபத்தில் பயந்தபடி அப்பா... என்றபடி அவரின் அருகில் விரைந்தாள்.

மகள் தன் அருகில் வந்ததுமே. கோபத்தில் பளார் என்று அவள் கன்னத்தில் அடித்த வெங்கி உன்ன இங்கெல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல பிறகெதுக்குவந்த என்று கர்ஜித்தார்.

அவர் அறைந்ததும் அதிர்ச்சியில் கன்னத்தில் கைவைத்தவாறு இல்லப்பா அம்மாதான் உங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரச்சொனாங்க என்றாள்.

அவள் கையில் உள்ள கூடையை பார்த்தவர் உங்க அம்மாவுக்கு அறிவேயில்லை ஒருநாள் நான் சாப்பிடாமல் இருந்தால் ஒன்னும் செத்துப்போயிடமாட்டேன். நீ இங்கிருந்து போ முதல்ல என்று கூறினார்.

கீதவாணியை வெங்கி அடித்ததை பார்த்தவன் உள்ளம் துடித்துவிட்டது. அவன் இருபதுவயது வாலிபன் எனவே வெங்கி தன்னை அவர் மகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக எண்ணிவிட்டு அதற்கு தன்னை பேசமுடியாமல் அந்த கோபத்தை அவரின் மகளிடம் காண்பிகிறார் என்பதை அவன் புரிந்துகொண்டான்.

அதிலிருந்து கீதவாணியை பார்க்கும்போதெல்லாம் பேசத்துடிக்கும் உதடுகளை கட்டுபடுத்திகொள்வான். தன்னை இத்தனை வருடம் வேலை நேரத்தில் கூட இருந்து பார்க்கும் கணக்கே தன்னை புரிந்துகொள்ளாமல் தன் பெரியய்யா உடன் வைத்திருக்கும் ரவுடிகள்போல் தன்னையும் நினைத்துக்கொண்டத்தை நினைத்து வருத்தமுற்றான் .

அன்றிலிருந்து அவன் தன்னை சுற்றியிருக்கும் தடியர்களும் பெண்களை கண்ணியமில்லாமல் பேசுவதற்கும், பார்பதற்கும், நடந்துகொள்வதற்கும் அனுமதித்ததில்லை. தன்னை சுற்றி உள்ளவர்களை வைத்துத்தான் தன்னையும் எடைபோடும் உலகம் என்பதை புரிந்துகொண்ட நிலவரசு தான் ஏற்றுள்ள பணியில் தன்னை முரடனாக, அடிதடியில் கைதேர்ந்த கிரிமினலாக பார்ப்பதை தன்னால் மாற்ற முடியாது. அதுதானே தொழில். ஆனால் கணக்கு போல வேறுயாரும் தன்னை பொம்பளைபொறுக்கி என்று நினைத்துவிடக்கூடாது என்பதில் கவமாக இருந்து அதில் வெற்றியும் பெற்றான்.

அப்படி தான் அன்று விளையாட்டுக்கு பேசியதையே தவறாக எண்ணி தனது மகளை அடித்த அவர் கல்யாண மாப்பிள்ளை பற்றி விசாரிக்காமல் ஒரு பொறுக்கியை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்துவிட்டு கல்யாணத்துக்கு முன்னாடியே அவனுடன் வெளியில் போக கணக்கு அனுமதித்தை நிலவரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கணக்கை தன்னுடன் கூப்பிட்டு கொண்டுபோய் மாப்பிள்ளை பார்த்துள்ள லச்சனத்தை சொல்லி திட்டவேண்டும் என்றே வெளியில் வாசலில் காரில் கார்த்துகொண்டிருந்தான் நிலவரசு.

ஆனால் உள்ளே கீதா சென்ற சிலவினாடிகளில் கேட்ட விசாலியின் கோபக்குரளும் அவளின் அழுகை சத்தமும் கேட்ட நிலவரசு பதட்டத்துடன் வீட்டிற்குள் புகுந்தான் அங்கு விசாலி தன் மகளான கீதவாணியை  சரமாரியாக கைகளினால் அடித்துகொண்டிருந்ததை பார்த்ததும் கீதவாணியின் கைப்பிடித்துதன் பின் இழுத்துக்கொண்டவன் முகம் ருத்திரதாண்டவத்தை தத்தெடுத்தது.

குடும்பத்திற்குள் தாய் மகளை அடிக்கும்போது வெளியாலான தான் ஒதுக்கிஇருக்க வேண்டும் அல்லது இருவரையும் பொறுமையாக இருக்கும் படி சொல்லவேண்டும்.  வயதுபெண்ணை உரிமையாக பிடித்து தன் பின்னே மறைத்துக்கொண்டு அவளின் தாயை மிரட்டியிருக்ககூடாது நிலவரசு. அவனும் தான் என்னசெய்வான் அவன் போகும் இடங்களில் அவன் இருக்கும் போது யாரும் குரல் உயர்த்தி பேசக்கூட அஞ்சுவார்கள். அவன் செய்யும் தொழிலில் அடிதடி மிரட்டல் பற்றாக்குறைக்கு குஸ்திசண்டை பயிற்றுவித்தல் போன்ற செயல்களில் மட்டுமே ஈடுபட்டு இருந்தவனுக்கு குடும்பத்தின் நுணுக்கமாக சூழ்நிலையை கையாளத் தெரியாமல் போய்விட்டது.

அந்நேரம் கணக்கு  தனது சின்ன மகளுக்கு அவள் கேட்ட புதுஉடை அதுவும்  அக்கா கல்யாணத்துக்கு முதல்நாள் போட்டுக்கொள்ள  வேண்டும் என்று தன் தந்தையை நச்சரித்து அவருடன் கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த இருவரும் வாசலில் கார் நிற்பதை பார்த்து அதுவும் வைட் நிற பொலிரோ காரை பார்த்து நிலவரசன் வந்திருப்பதை அறிந்துகொண்டனர்.

சின்னவர் எதுக்கு வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று தனக்குள்ளேயே சொல்லியபடி வேகமாக வீட்டிற்குள் நுழைந்த இருவரும் கண்டது ருத்ரமூர்த்தியாக நின்றிருந்த நிலவரசுவைதான்.

நிலவரசு விசாலியிடம் கொஞ்சமாவது மூளையிருக்கா.. யார்மேல கையை வைக்கிறீங்க. யாருக்கு யாரைபோய் மாபிள்ளையா பார்த்திருக்கீங்க. தப்பெல்லாம் உங்கமேல வச்சுகிட்டு அவமேல கைவச்சிங்க பிறகு இருக்கு என்று கூறினான்.

அவனின் கோபமான தோற்றத்திலும் வார்த்தைகளிலும் அதிர்ந்து நின்ற விசாலி கணக்கு உள்ளே வந்ததும் என்னங்க நம்மளை மோசம் பண்ணிட்டங்கங்க நம்ம பொண்ணு.

பொழப்புக்காக நீங்க இவுங்ககிட்ட வேலைபார்த்ததுக்கு தண்டனையா  நம்ம குல பெருமையே போச்சு. நம்ம பொண்ணுக்கு நம்ம ஜாதி ஜனத்தில அருமை பெருமையா கல்யாணம் செய்துகொடுக்க நினைச்சது நடக்காமபோயிடுச்சு சம்மந்தி வீட்டில இருந்து போன்செய்து உங்க பொண்ணு அவ லவ் பண்றவன் கூட சேர்ந்து என் மகனை அடிச்சுபோட்டுட்டு வந்துட்டா... இனி கல்யாணம் நடக்காது என்று போன்செய்றாங்க. இவள் என்னவென்றால் நீங்க பெருசா பேசுவீங்க உங்க சின்னவரு அவர் பின்னாடி வந்திறங்குரா என்று கூறினார்.

அம்மா நான் சொல்றதை கேளுங்களேன் என்று நிலவரசனின் கையில் பிடித்திருந்த தனது கையை இழுத்துக்கொண்டு பேசிய கீதவானியின் குரல் அங்கு எடுபடாமல் போய்விட்டது.

வெங்கிக்கு ஏற்கனவே நிலவரசனின் பார்வை தனது மகளின் மேல் இருப்பதை அவனே உணர்வதுக்குள் அவர் புரிந்துகொண்டார்.

குடும்பச்சூழ்நிலை காரணமாக நல்ல சம்பளத்தில் தனது குடும்ப வறுமை போக இளம்பருவத்து தோழன் மயில்சாமியிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்துகொண்டார்.

ஆனால் அவர் கணக்கெழுதுவதைத்தவிர மற்ற அடிதடியில் தன்னை சம்மந்தபடுத்தாது தூர நிற்க பலகிக்கொண்டார்.

அப்படிப்பட்டவர் தனது மகளினை வேற்று சாதிகாரன் அதுவும் அவனை பார்த்து ஊரே பயப்படும் விதமுள்ள நிலவரசுவை தனது மாப்பிள்ளையாக நினைத்துகூட பார்க்க முடியவில்லை

என்னதான் அவன் செல்வவழத்துடன் இருந்தாலும் அவனின் அடையாளம் அவருக்கு பிடித்தமானதாக இல்லை எனவே கீதவாணி படிப்பு முடிந்ததும் அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்யும் முடிவுக்கு வந்திருந்தார்.

அங்கு நிலவிய சூழலும் தனது மகளின் கை நிலவரசனின் பிடியில் இருந்ததும் தன் மனைவி சொன்ன வார்த்தைகளும் உள்நுளைகையில் கேட்ட நிலவரசுவின் வார்த்தையும் தான் எது நடக்ககூடாது என்று நினைத்தோமோ அதுவே நடந்துவிட்டதாக அவர் தவறாக புரிந்துகொண்டார்.

அதனால் விளைந்த கோபத்தில் அவரும் வார்த்தைகளை விட்டார். சின்னவரே நான் உங்களிடம் சம்பளம் வங்குரவன்தான் அதுக்காக நீங்களும் நானும் ஒன்றாகிவிட முடியாது உங்களமாதிரி ரவுடிக்கு என் மகளை கல்யாணம் செய்துகொடுக்குரதுக்கு அவளை கொண்ணுபோட்டுடுவேன் என்றவர் தனது மகளை பார்த்து உன்ன என்றபடி அவளை அடிப்பதற்கு கை ஓங்கினார்.

அவரின் வார்த்தைகளை கேட்ட நிலவரசுவின் முகம் இறுகியது.பின் அவரை பார்த்து ஓய் கணக்கு என்ன சொன்ன எனக்கு கல்யாணம் செய்துகொடுக்கவேண்டியது வந்தால் இவளை கொண்ணுபோட்டுடுவையா நீ உன் மகளுக்கு பார்த்திருந்த அந்த பொறுக்கியவிட நான் எந்த விதத்தில் குறைந்து போய்ட்டேன் இப்போ சொல்றேன் கேட்டுக்க இதுவரை உனக்கு நான் உன் மகளை பார்குறதே பிடிக்கதுன்றதுனாலதான் இத்தனை நாளா நான் ஒதுங்கியிருந்தேன்.

ஆனா... நீ என்ன சீண்டிவிட்டுட்ட, இந்த நிமிசத்தில் இருந்து இவ உன் பொண்ணு கிடையாது என் பொண்டாட்டி இந்த நிலவரசு பொண்டாட்டிமேல கை வைக்க இந்த உலகத்துல எவனுக்கும் தைரியம் கிடையாது என்றவன் அவளை பிடித்திருந்த கையை விடாமல் தன்னுடன் இழுத்துக்கொண்டு காருக்குச்சென்றான்.
                             ---தொடரும்---
Episode 07                                                 Episode 09


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib