பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா....!(தீபாஸ்-ன்)
அத்தியாயம்-09
நிலவரசன் அவளை பிடித்து இழுப்பதை கூட உணராமல் அவன்
இழுத்த இழுவைக்கு அவனின் பின்னால் சென்ற கீதவாணியை காரில் இழுத்துப்போட்டவன் நேராக
தனது இல்லத்திற்கு வாகனத்தை செலுத்தச்சொன்னான்.
அவனது உள்ளம் இன்னும் கோபத்தால்
கொந்தளித்துக்கொண்டு இருந்தது.போகும் வழியிலேயே தனது மொபைலை எடுத்தவன் தனது
கிராமத்தில் உள்ள தனது அம்மாவை தொடர்புகொண்டான்.
ஊரில் நிலவரசனின் அம்மா காந்திமதி மொபைலை அட்டன்
செய்து “யய்யா... சொல்லுய்யா நிலவு நல்லா இருகியாய்யா... என்று கேட்டார்.
அதற்கு நிலவரசு அம்மா நீ தினமும் என்னிடம்
எப்பய்யா கல்யாணம் செய்துகொள்ளப்போபறேனு கேட்பல்ல நாளைக்கு எனக்கு கல்யாணம்
அக்காவையும் தங்கச்சியையும் அவங்க குடும்பத்தோட கூட்டிட்டு இன்னைக்கு இரவே அங்கன
இருந்து புறப்புட்டு வந்துருங்க என்றான்.
ஏய்யா என்னய்யா சொல்ற! திடுதுப்புன்னு நாளைக்கு
கல்யாணமுன்னு சொல்ற ஏ... ராசாவுக்கு ஊரு அடைக்க பந்தல் போட்டு மூனுநாள் சொந்த பந்ததுக்கு
விருந்துவச்சு நம்ம ஊரு குலதெய்வத்தின் முன்னால உன் கல்யாணத்தை முடிகனுமுன்னு நான்
கனவு காண்டுட்டு இருக்கிறேன்.நீ என்னடானா பொசுக்குனு நாளைக்கு கல்யாணம்
புறப்பட்டுவானு சொல்ற? என்ன விஷயமுன்னு சொல்லுராசா? என்றார்.
அம்மா கிளம்பி வா வந்ததும் சொல்றேன்.நீ பாட்டுக்கு
ஊர் அடைக்க கூப்பிட்டுகொண்டு வந்துடாதே. இன்னும் பெருசுட்ட விஷயத்தை சொல்லல நீ
நம்ம அக்கா தங்கச்சி குடும்பத்தை மட்டும் கூட்டிக்கொண்டு நேரா பெரிசுவீட்டுக்கு
வந்துடு. நீ வந்தபிறகுதான் பெருசுட்ட பேசணும் என்றவன் வேறு எதுவும் விளக்கம்
சொல்லாமல் தொடர்பை துண்டித்தான்.
அதன் பிறகு மறுநாள் அருகில் இருந்த முருகன்
கோவிலில் காலை கல்யாணத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் மொபைலிலேயே ஏற்பாடு
செய்தான்.
கீதவாணி தன்னிலையடைந்து பின் நிலவரசனின் மொபைல்
உரையாடல்களை கேட்க கேட்க அதன் சாராம்சம் உணர்ந்தவள் அதனை ஏற்றுகொள்ள முடியாமல் தத்தளித்தாள்.
மொபைலில் பேசிமுடித்த நிலவரசன் அதனை தனது சட்டை
பயில் வைத்தபடி அருகில் அமர்ந்திருந்த கீதவானியின் முகத்தில் தனது கண் பதித்தான்.
நிலவரசன் தன்னை பார்த்தவுடன் தயக்கத்துடன் நீங்க
ரொம்ப அவசரபடுறீங்க எங்க அப்பா மேல் உள்ள கோபத்துக்காக என்னை கல்யாணம் செய்ய இப்ப
நினைக்கிறீங்க. அவசரப்பாடாதீங்க கொஞ்சம் நிதானமாக யோசிச்சு முடிவெடுங்க என்றாள்
கீதவாணி.
அவள் பேசியத்தை கேட்ட நிலவரசு சரி இப்ப என்ன
என்னைய யோசிக்க சொல்ற? உங்க அப்பா சொல்றதுபோல உன்னை கல்யாணம் கட்டிக்கொள்ள எனக்கு
தகுதி இருக்கா இல்லையா என்பதை பற்றியா? இல்ல நான் கேக்குறதுக்கு நீயும் தான்
கொஞ்சம் யோசிச்சு பதிலை சொல்லேன்.
உன் அப்பா உனக்கு பார்த்து வைத்திருந்த அந்த
ஜெனார்த்தன் படிப்பில் வேண்டுமானால் என்னோடு பெரிய ஆளா இருக்கலாம். ஆனால்
பணத்திலும் பண்பிலும் அவன் என் கால் தூசிக்கு சமம்.
சிவத்த தோளோடு அப்பன் சம்பாத்தியத்தில் சொகுசாக வாழ்கை
வாழ்ந்துகொண்டு பெண்களை போக பொருளாக பார்க்கும் அந்த ஜெனார்த்தன் போன்று வெளியில்
ஹீரோ முகமும் உள்ளே பக்கா வில்லன்னுமாக இருபாவனை விட.
படிக்கிற வயசுலேயே சுயமா உருவாகி சொத்துபத்து
நானே சேர்த்துக்கொண்டு நான் இப்படித்தான் என்று வெளிப்படையாக அடியாட்களை
வைத்துகொண்டு வேலைசெய்ற நான் பார்வைக்கு வேண்டுமானால் பெரிய ரவுடியா தெரியலாம்
ஆனால் என்னை சுத்தி இருக்கிற பெண்களை அது உறவாக இருந்தாலும் தெரியாதவர்களாக
இருந்தாலும் கண்ணியமா மரியாதையோடு நடந்துகொள்ளும் நான் பண்பானவன் தான்.
அதேபோல எப்ப என் வாயினால் உன்னை என்
பொண்டாட்டின்னு நான் சொல்லிட்டேனோ! இனி இந்த ஜென்மத்துக்கு நீதான் என்பொண்டாட்டி
அதை மாத்த இனி யாராலும் முடியாது என்று கூறினான்.
அவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே அவனின்
வீட்டின் முன் கார் நின்றது காரில் இருந்து இறங்கிய நிலவரசன் தன் பின்னால் கீதவாணி
இறங்காததை கண்டு ஓய் என்ன கார்லயே உட்கார்ந்திருக்க மகாராணிக்கு இறங்கி
வரச்சொல்லணுமோ என்று கேட்டான்.
சிறுவயதிலேயே அவனை கண்டு பயத்தில் பதுங்கி
பதுங்கி செல்லும் கீதவாணிக்கு இப்பொழுதும் அடிமனதில் அவனின் மேல் நிலவிய பயம் மேலெழுந்து
அவனின் வார்த்தைக்கு எதிர்வாதம் செய்யவிடாமல் தடுத்துவிட்டது.
கீதவாணி நிலவரசனுடன் சென்றதும் கணக்கு வெங்கி
தள்ளாடியபடி அமர்ந்தார். உடனே தேவி ஸ்ரீ அப்பா... என்றபடி பிடித்து அவரை
அமரவைத்தவள் அம்மா போய் தண்ணீர் கொண்டுவாங்க என்றவள் அவர் எடுத்துகொள்ளும் பிரசர்
மாத்திரையை வேகமாக எடுத்துவந்தாள்.
விசாலி அவள் கொடுத்த மாத்திரையை பதட்டத்துடன் வெங்கியை
முழுங்க வைத்தாள். தேவிஸ்ரீ வேகமாசென்று பேனின் ஸ்பீடை அதிகரித்துவைத்தாள். சற்று
நிதானத்துக்கு அவர் திரும்புவதை கண்ட தேவி ஸ்ரீ அப்பா நான் ஆட்டோ வரச்சொல்றேன் ஹோஸ்பிடல்
போலாம் கிளம்புக்க என்று சொன்னாள்.
அதை கேட்ட கணக்கு தலையை அசைத்து மறுத்தபடி இப்போ
கொஞ்சம் பரவால்ல. ஹாஸ்பிடலெல்லாம் போகவேண்டாம். ஆனா இனி எனக்கு நீ ஒருத்திதான்
மகள். இனி இந்த குடும்பத்துக்கும் அவளுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று கூறினார்.
அவர் கூறியதை கேட்டு விசாலி கண்ணீர் வடிக்க
தேவிஸ்ரீயோ இல்லப்பா எனக்கு அக்காமேல் நம்பிக்கை இருக்கு. மாப்பிள்ளை வீட்டில் போன்
செய்ததை வைத்து மட்டும் நாம தவறா அவளை நினைக்ககூடாது. அம்மா அக்கா உன்னிடம் நாங்க
வருவதுக்கு முன்ன என்ன சொன்னா என்று கேட்டாள்.
அவள் அவ்வாறு கேட்டதும் தான் விசாலிக்கு தான்
அவசரபட்டுடோமோ என்ற எண்ணம் எழுந்தது எனவே குற்ற உணர்வில் சம்மந்தி வீட்டில் போன்
பேசி வைக்கும்போது உள்ள வந்தாளா... கல்யாணம் நடக்காதுன்னு அவங்க சொன்னதில் நான்
அதிர்ந்துபோய்... பதற்றத்தில்... பத்திரிகை வைக்க ஆரம்பித்தபின் கல்யாணம் நின்றால்
நம்ம ஜாதி ஜனம் முன்னால பெரிய அவமானம் நம்ம குடும்பத்துக்கு வந்திடுமே.... என்ற
ஆத்திரத்தை அவளை கண்டவுடன் இந்த அவமானம் தேவையா? செத்துபோ... என்று சொல்லி அவளை
அடிக்க ஆரம்பித்தேன்.
அவள் பேசிய எதையும் நான் அந்த அதிர்ச்சியில்
காதில் வாங்கவில்லை அப்போ சின்னவர் திடீர்னு வந்து அவள் கையை பிடித்து உரிமையாய்
இழுத்து அவரின் பின்னாடி நிறுத்திவைத்து என்னை திட்டவும் மேலும் ஆத்திரமாகிய நான்
சம்மந்தி போன்ல கீதாவின் லவ்வர்னு சொன்னது இவரைதானோ என்று சந்தேகப் பட்டுவிட்டேன்.
அந்த நேரத்தில்தான் நீங்க ரெண்டுபேரும் வந்தீங்க அதன் பின்னாடி என்னனமோ ஆகிடுச்சே....
அச்சோ! கடவுளே என் குடும்பத்துக்கு ஏன் இப்படி ஒரு சோதனை என்று கூறினாள் விசாலி.
அப்போ நீங்க அக்காவிடம் அவள் தரப்பு நியாயம் கேட்கவில்லை, அப்பா நாம அவசரபட்டுடோம்.சின்னவரை கண்டாலே ஏற்கனவே
அக்காவுக்கு உதறலும் பயமும் ஏற்படும். கோபத்தில் அவர்வேற அக்காவை பொண்டாட்டினு
சொல்லிட்டு இழுத்துட்டு போறாரு பாவம் அக்கா.... என்று கூறியவள் மேலும் தொடர்ந்து
சொன்னாள்.
அவள் போன இடத்தில் என்னமோ பெருசா நடந்திருக்கு.
அக்கா இங்க வந்திருந்த கோலத்தை நீங்க ஏன் யோசிக்கவில்லை. அவள் மேலே போட்டிருந்த
சட்டை ஒரு ஆணின் சட்டை அதுவும் அதை பார்க்க சின்னவர் நிலவரசனின் சட்டை போல
தெரியுது. அப்போ எதுவோ பெரிய மானபிரச்சனையில் இருந்து அவளை காத்திருக்கலாம்
சின்னவர் வீட்டிற்கு அவளை பத்திரமா கொண்டு விட்ட அவரை சூழ்நிலையில் நீங்க குற்றவாளியாக்கியிருக்கீங்க.
அவர் கோபத்தில் தெறிக்க விட்ட வார்த்தை
கேட்டீங்கல்ல அது “இப்போ சொல்றேன் கேட்டுக்க இதுவரை உனக்கு நான் உன் மகளை
பார்குறதே பிடிக்காதுன்றதுனாலதான் இத்தனை நாளா நான் ஒதுங்கியிருந்தேன். ஆனா... நீ
என்ன சீண்டிவிட்டுட்ட, இந்த நிமிசத்தில் இருந்து இவ உன் பொண்ணு கிடையாது என்
பொண்டாட்டி என்றார்.நீங்க அவரை சுமத்திய குற்றத்துக்கு பழிவாங்க அக்காவை கல்யாணம்
அவர் செஞ்சுகிட்டா அவள் வாழ்க்கை என்னவாவது? என்றாள்.

No comments:
Post a Comment