பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா...!(தீபாஸ்-ன்)
அத்தியாயம்-10
நிலவரசு அவள் அப்போதைக்கு மாற்றிக்கொள்ள அவன்
வீடு இருந்த ரோட்டிலேயே இருந்த ஒரு சிறு ரெடிமேட் கடையில் பேபி பிங் கலரில்
சில்வர் ஸ்டோன் வேலைப்பாடுடைய உடையை எடுத்து தனியாக பேகிங் செய்து கையில்
வைத்திருந்தான். அவளுக்கென்று அவன் முதன்முதலாக உடை எடுக்க சென்றது புது அனுபவமாக
இருந்தது .
நிலவரசுவை பற்றி அவன் ஏரியாவில் இருந்த
கடைகாரருக்கு தெரியாமலேயா இருக்கும். அவன் வந்ததும் கலவரத்தயுடன் வாங்க... வாங்க...
என்று கல்லாவில் உட்கார்ந்திருந்த அக்கடையின் உரிமையாளரே வேகமாக எழுந்து வந்துகேட்டவர்
என்ன உடை பார்கறீங்க சார் என்று பணிவாக கேட்டார்.
சேலை என்று கூறியவன் பின் ம..கூம் சுடிதார்
என்று மாற்றி கூறினான். யாருக்குனு சொன்னீங்கன்னா அதற்கு தகுந்தமாதிரி
காட்டச்சொல்றேன் என்று கூறியபடியே சுடிதார் பிரிவின் முன் அவனுடன் சென்றார்.
அவர் அவ்வாறு கேட்டதும் என்னோட வொய்புக்கு என்று
கூறினான் நிலவரசு அவ்வாறு அவரிடம் கூறும் போது அவனின் மனதில் அத்தனை சந்தோசம்
பிறந்தது. இன்று காலையில் கூட அவனின் மனம் கவர்ந்த கீதவாணி அவனுக்கில்லை என்பதை
சிரமப்பட்டு ஜீரணிக்க முயன்றவன் நிலவரசு. ஆனால் இப்பொழுது சூழ்நிலையின் காரணமாக
அதிரடியாக அவளை தன்னுடயவளாக தன்னுடைய வீட்டில் தானே கொண்டுவந்து வைத்திருப்பதை
நினைக்கையில் அவனின் மனம் அத்தனை நிம்மதியை உணர்ந்தது.
அவனே எதிர்பார்க்காத திருப்பம் அவனின் வாழ்வில்
அதுவும் அவனுக்கு பிடித்தமானதாக இருப்பதால் அவனுக்கு அத்துணை உல்லாசம் பிறந்தது.
என்னுடைய வொய்புக்கு என்று அவன் சொல்லும் போது அவனுடைய நாவும் இனிப்பதுபோல்
தோன்றியது அவனின் முகம் மலர்ந்துகிடந்தது.
அழகாக கண்ணில் பட்டதையெல்லாம் அவளுக்கு
வாங்கிவிட கைகள் துருதுருத்தது. ஆனால் .ம..கூம் இங்கெல்லாம் என் பொண்டாட்டிக்கு
வாங்ககூடாது இப்போ அவசரத்துக்குமட்டும் வாங்கிகொல்லாம் என்று நினைத்தாலும் அவன்
எடுத்த உடைகளோ! ஒருடஜன்.
அதில் அவன் மிகவும் விரும்பி எடுத்த உடையை
மட்டும் கையில் எடுத்துகொண்டவன் மற்றதை பேக் செய்து தனியாக எடுத்தவன், அவளை
அவ்வுடையில் காணும் ஆர்வத்தோடு வீட்டிற்கு கிளம்பினான் அப்போது அவனது மொபைல் ஒலி எழுப்பியது.
பெருசு இப்போ எதுக்கு போன் பண்ணுது ஒருவேளை
விஷயம் அதுக்குள்ள அவர் காதுக்கு போயிடுச்சோ! என்று நினைத்தபடி எடுத்தவன்
சொல்லுங்கபெரியய்யா என்றான்.
அவ்வாறு அவன் கூறும் போதே கீதவாணியை திருப்பி
அவள் வீட்டுக்கு அனுப்பிவிடு என்று
கூறக்கூடாது என்று நினைத்தான்.ஏனெனின் அவர் சொல்வதை அவனால் மறுக்க முடியாது.
அவனின் வாழ்வில் இக்கட்டான இடத்தில் இருந்து மீட்டு முன்னேறிச்செல்ல வழித்தடம்
அமைத்து கொடுத்த ஆசான் அவர். ஆனால் அவன் பயந்ததுபோலத்தான் அவரின் வார்த்தைகள்
இருந்தன.
என்ன நிலவு கணக்கோட மகளை உன் வீட்டில்
கொண்டுவந்து வச்சிருக்கியா? என்று கேட்டார் .
பெரியய்யா.... அதுவந்து.... என்று மேற்கொண்டு பேசவார்த்தகளை
கோர்க்க முயன்றவனை பேசவிடாமல் அவரே தொடர்ந்தார். வேணாம் நிலவு உனக்கு பொண்ணுகொடுக்க
மந்திரிவீட்டிலிருந்தும் பெரிய இடத்தில் இருந்தும் போட்டிபோட்டுட்டு
காத்திருக்காங்க. ஆனா அந்த லிஸ்டில் நம்ம கணக்கு இருக்க மாட்டான்.
எதோ சிறுவயசுல அறியாமல் என்னுடன்
நண்பனாயிட்டான். எங்க நட்புக்கு மரியாதை கொடுத்தே அவனை என் கூட வச்சுகிட்டேன். இதுவரை
வெளியில் பார்க்க மட்டும்தான் நாங்க முதலாளி தொழிலாளி ஆனால் அவனும் என் தேவையை
உணர்ந்து தான் நட்புக்கு மரியாதை செலுத்த தான் என்னிடம் வேலைக்கு இருக்கிறான்.
எங்க நட்பு நிலைத்திருக்க காரணம் நான் அவனோட
ஆச்சார பழக்கவழக்கத்தை மதிப்பதாலும் அவன் என் தொழில் முறையை விமர்சிக்காமல், அவனுக்கு
பிடிக்கவில்லை என்றாலும் ஒதுங்கி நின்று என் பண கணக்கை மட்டுமே பார்பதாலும் தான்.
மேலும் வெங்கி இருந்த இடத்தில் என்னிடம் வேறு
யாரும் இருந்திருந்தால் இந்நேரம் கோடீஸ்வரனா இருப்பான். ஆனால் இன்னும் சம்பளத்தை
தவிர வேற எதையும் அவன் என் கிட்ட இருந்து பெறாததால்தான் இன்னும் சாதாரண வேலையாள்
இடத்தில் இருக்கிறான்.
உன்னால இந்த நிலை மாற எனக்கு விருப்பமில்லை
புரியுதா? நிலவு என்றார்.
அவர் கூறியதை கேட்டதும் அவனின் உற்சாகமெல்லாம்
வடிந்தது போல் ஆகிவிட்டது. மேலும் அவனுக்கு ஆத்திரமும் எழுந்தது. அய்யா... அப்போ
நான் உங்களுக்கு பெருசு இல்லை அவர்தான் உங்களுக்கு பெருசு ஏன் எந்த விதத்தில் நான்
உங்க கணக்கு அவரது மகளுக்கு பார்த்திருக்கும் அந்த பொறுக்கியோட கொறஞ்சு
போயிட்டேன்.
உங்க கணக்கு அவர் மகளுக்கு அவர் பார்த்துவைத்திருந்கும் மாப்பிள்ளையோடு
ஹோட்டலுக்கு அனுப்பியிருக்கார். அந்த பொறுக்கி தான் கல்யாணம் கட்டிக்கபோர பொண்ணேனு
நினைப்பில்லாமல் அவளை பொது இடத்தில் அவன் கூட்டாளிகள் முன்பு அசிங்கம்பண்ணப்
பர்ர்த்திருக்கான்.
அப்போ அந்த இடத்தில் நான் இருக்கிறதை பார்த்து உங்க
கணக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையிடம் இருந்து தப்பிக்க என்னிடம் வர பார்த்த கீதாவை
அப்போது காப்பாத்திய நான் கெட்டவன் எனக்கு பொண்ணுகொடுத்தா உங்க நண்பரோட ஆச்சாரம்
கொறஞ்சுடும். ஆனா அந்த பொறுக்கிக்கு அவளை கட்டிகொடுத்தா கணக்கோட ஆச்சாரம்
ஜெட்வேகத்துல கோபுரத்துள ஏரிடுமோ...!
இந்த மாதிரி என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காம
என் மேல பழிபோட்டு சீன்டுனதுனாலதான் அவருக்கு பிறந்த மகள் இனி அவருக்கு
சொந்தமில்லை இனி அவ என் பொண்டாட்டின்னு சொல்லி இழுத்து கொண்டுவந்து என் வீட்டுல
வச்சிருக்கேன். இப்போ சொல்லுங்க என் பொண்டாட்டியை இனி நான் விட்டுகொடுக்கவா என்று
கேட்டான்.
நினைச்சேன் நிலவு! நீ அந்த பொண்ணை உன் வீட்டில்
கொண்டுவந்து வச்சிருக்கேனா அதுவும் கணக்கு வீட்டிலிருந்து சண்டையிட்டு தூக்கிட்டு
வந்திருக்கேனா ஏதாவது இதுபோல ஒரு காரணம் இருக்கும் என்று நான் அப்பவே யோசித்தேன்.
ஆனா கல்யாணம் என்பது அந்த பொண்ணோட சம்மந்தபட்ட
விஷயம். கோவத்தில நீ பொண்டாட்டினு சொல்லி அந்த பொண்ண நீ இழுத்து வந்திருக்கலாம்.
ஆனா உன்னை கல்யாணம் செய்யபோர அந்த பொண்ணுக்கு உன்னை கல்யாணம் செய்றதுல இஷ்ட்டம்
இருக்கனுமில்லையா? கணக்கு பண்ணின தப்புக்கு அந்த பொண்ணு என்ன செய்யும். நாளைக்கே
கணக்கு வந்து நான் நடந்தது தெரியாம பேசிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க என்று வந்தால்
என்ன செய்ய யோசி நிலவு.
எனக்கு வெங்கி நண்பன் என்றால் நீ என் மகன். அவன்
பெருசா நீ பெருசனு வந்தா நான் உன் பக்கம்தான் நிற்பேன். ஆனால் மனசில் என்
நண்பனுக்கான வருத்தம் இருக்கும் என்றார்.
அவர் இவ்வாறு கூறவும் கொஞ்சம் நிதானத்துக்கு
வந்த நிலவரசன் யோசிக்கிறேன் அய்யா. காலையில் அம்மா ஊரில் இருந்து நேரா உங்க வீட்டுக்கு
வந்துடுவாங்க இத்தனை நாளா என்னை கல்யாணம் செயச்சொல்லி பாட்டா படிச்சிச்சு. அம்மாவ கிளம்பிவா
நாளைக்கு கல்யாணம்னு சொல்லிட்டேன்.
நீங்க சொல்றதுபோல அந்த புள்ளைக்கு என்னை கல்யாணம்
செய்ய புடிக்கலேன்னு சொல்லிட்டு அவளோட அப்பா கூப்பிடவந்தா அவர் கூட போறேன்னு சொலிட்டா
என்ன செய்ய? அம்மாவவேற எனக்கு கல்யாணம்னு சொல்லி ஆசை காட்டி ஏமாத்துனதுபோல ஆயிடும்.
ஒன்று அவ சம்மதத்தோட இந்த கல்யாணம் நடக்கும். அல்லது அம்மா இதையே சாக்காக வைத்து
என்னை உடனே அது பார்த்திருக்க பொண்ணை கல்யாணம் பண்ணச்சொல்லி நிற்பந்தத்தில் நிற்கவைக்கும்
என்றான்.
அவன் அவ்வாறு கூறியதை கேட்ட நிலவரசனின் பெரியய்யாவாகிய
பயில்வான் மயில்சாமியி கலங்கிய குரலில் கூறினார். நான் ஒற்றை காலை இழந்தும் வீழ்ந்துவிடாமல்
இன்னும் அதே கம்பீரத்தோடு நிற்க ஊன்றுகோளாக இருப்பவன் நீ. நடப்பதெல்லாம் நல்லத்துக்கேனு
நினச்சுக்கோ நிலவு. உனக்கு எதுனாலும் நான் உன் கூட நிற்பேன். உன் அம்மா
வருவதற்குள் ஒரு முடிவெடுக்கணும் நான் கூப்பிடும்போது அந்த புள்ளைய கூட்டிட்டு வீட்டுக்கு
வந்துடுப்பா.. சரி போன வைக்கிறேன் என்று கூறியபடி தொடர்பை துண்டித்தார் பெரிசு.
அவன் கடையில் உடை எடுத்தபோது உண்டான உற்சாகம்
அப்படியே வடிந்ததுபோல் ஆனது. அவன் கண்ணசைவில் செயல்களை புரிய காத்திருக்கும்
வேலையாட்கள். பலகோடி ரூபாய்களை அசால்டாக அரசியல்வாதிகளுக்கும் பிலிம்
ப்ரோடியூசர்களுகும் கடனாய் கொடுக்கும் அளவில் பணம். தன்னை பார்த்து பதவியில்
இருப்பவனே பயப்படும் திறன் கொண்ட தன்னால் தான் மனதில் ஆசைப்பட்ட பெண்ணிடம் தன்
காதலை சொல்ல இயலவில்லை. அப்படி என்றால் இதுவரை என்னால் முடியாதது எதுவும் இல்லை
என்று நான் நெஞ்சை நிமிர்த்தி திரிந்ததற்கு அர்த்தமில்லையா? என்று அவனுக்கு அவனே
கேள்வி கேட்டபடி அவனின் வீட்டை அடைந்தான்.
அவன் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைகையில்
உள்ளிருந்து ஒருபெண் வெளியேறுவதை கண்டான். அது கீதவானியின் தங்கை என்று தெரிந்ததும்,
மணி என்று சத்தம் போட்டான். அவனின் முன் வேகமாக வந்தவனிடம் இப்போ போகுதே அந்த
பொண்ணு வீட்டிற்கு வெளியில் நின்ற ஆட்டோவில் போகுது பின்னாடியே போய் அது பத்திரமா வீடு
போய் ஆட்டோவில் இருந்து இறங்கிவிடுவது வரை பார்த்துட்டு வந்துசொல்லு என்று கூறியவன்.
பின் வாச்மேன்
என்று மீண்டும் சத்தம் கொடுத்தான் கேட்டில் நின்றிருந்த வாச்மேன் எதற்கு
கூப்பிடுகிறான் என்பதை ஓரளவு ஊகித்து அவன் திட்டுவதற்கு முன்பே நான் அந்த பொண்ண
உள்ள விட மாட்டேனுதான் சொன்னேன், ஆனா நம்ம கதிர் தம்பிதான் அன்னியோட தங்கச்சிதான்
உள்ளவிடுனு சொன்னாங்க என்றான். அவர் கூறியதை கேட்டதும் சரி போ என்று கூறிவிட்டு
வாசலுக்கு வந்தான் .
தனது தங்கையிடம் பேசும் போது கீதவாணி
அழுதிருந்தாள். அதனால் அவள் முகம் அழுத சுவடைக் கொண்டு இருந்தது.
அதை பார்த்த நிலவரசன் அவளை தான் கல்யாணம்
செய்யபோவதை நினைத்துதான் அவள் அழுவதாக நினைத்துகொண்டான்.
எனவே அவளின் அருகில் வந்தவன். கோபமாக கீதவாணியிடம்
ஏய் உங்க குடும்பத்தில் யாருக்கும் அறிவே இல்லையா? உன்ன என்னன்னா உங்கப்பன்
மாப்பிள்ளை என்ற பேரில் ஒரு பொறுக்கிகூட ஹோட்டலுக்கு அனுப்பிவச்சிருக்கான். இப்போ
மணி என்ன பத்தை தாண்டிடுச்சு இந்த நேரத்துக்கு உன் தங்கையை தனியா ஆட்டோல இங்க அனுபிவச்சிருக்காங்க.
பொம்பளை பிள்ளைகளை பெத்துட்டா மட்டும் போதாது. அதுகளை பத்திரமா காப்பாத்த தெரிஞ்சுருக்கனும்.
பொண்ண பத்திரமா பாத்துகிட தெரிஞ்சவனா பார்த்து கையபிடிச்சு கொடுக்கவாவது தெரியனும்.
இரண்டுமில்லை இதுல வெட்டி கெளரவம் வேற பொத்துக்கிட்டு
வந்துடும் என்று கூறியவன்.
அவன் பேசப்பேச கீதவானியின் முகம் கடுகடுவென ஆனது
அதனை பொருட்படுத்தாமல் நிலவரசு தன் அருகில் டிரைவர் வைத்த பர்சேஸ் பேக்கை ரூமில
கொண்டுபபோய் இதை வச்சுட்டு அங்கேயே உக்காரு என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியில் சற்று
தள்ளி தனது சகாக்களுக்குடன் ரவுன்சில் இருந்த கதிரை பார்பதற்கு விரைந்தான்.
கீதவாணி நிலவரசனின் படுக்கை அறையில் இருந்த
அவனின் கட்டிலில் அவன் கொடுத்த பைகளை வைத்தவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள்.
ஹாலில் நிலவரசு இருந்தான்.ஆனால் ஏசி ரூம் கதவு அடைக்கப்படிருந்ததால் அவளால்
வெளியில் நடப்பது எதையும் கேட்க்க முடியவில்லை என்றாலும் தன்னைத்தவிர அங்கு வேறு ஒரு
பெண் கூட இல்லாத சூழல் அவளுக்கு அந்த அறையைவிட்டே வெளியில் செல்ல தயக்கத்தை
கொடுத்தது.
கதவு திறக்கும் ஓசை கேட்டதும் அத்திசையில்
பார்த்த கீதவாணியிடம் இந்தா இந்த டிரஸ்ஸை மாத்திக்கோ. சாப்பாடு வந்திருச்சு வா சாப்பிடலாம்
என்று சொன்னபடி அவள் இருப்பதை பொருட்படுத்தாமல் இயல்பாக வீட்டிற்கு போடும் உடையை
மாற்றினான்.
கீதவாணிக்குத்தான் அவனின் செயல் அசவுகரியத்தை
கொடுத்தது. மேலும் எங்குபோய் உடை மாற்ற என்று கண்களை சுழலவிட்டவளுக்கு அங்கிருந்த
ஓர் கதவு கண்ணில் தட்டுப்படவும் அங்கு சென்றாள்.

No comments:
Post a Comment