anti - piracy

Post Page Advertisement [Top]


பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா...!(தீபாஸ்-ன்)
                 அத்தியாயம்-11         

கீதவாணி கண்ணில் தட்டுபட்ட அந்த கதவிடம்  சென்று அதை திறக்க முயன்றாள் ஏய் அங்க என்ன பன்ற என்ற நிலவரசனின் குரலில் மிரண்டவள் “ட்ரெஸ் மாத்தபோறேன் என்றாள்”.

இரு இரு அந்த ரூமிற்குள் வேண்டாம். அதோ பாத்ரூம் பாரு அங்குபோய் மாத்து அல்லது நான் இதோ வெளியில் போறேன் கதவை லாக் போட்டுட்டு இங்கேயே மாத்து என்றவன்  வெளியில் சென்றான்.

அவன் வெளியில் சென்றதும் கதவை லாக்கிட்டவள் வேகமாக ஒரு அவசர குளியல் முடித்து பத்துநிமிடத்திலேயே புத்தம்புதுமலராக எந்தவித ஒப்பனையும் இல்லாது அவன் எடுத்த உடையில் தேவதைபோன்று வெளியில் வந்தாள். அவளுக்காக அவன் டைனிங்டேபிளில் காத்திருப்பதை கண்டவள், சாரி லேட்பன்னிடேனா? என்று கேட்டாள்.

அவள் கதவை திறந்ததுமே அவளை கண்டவன் இமைக்க மறந்தான். அவள் பேசியதில் தன்னிலை அடைந்தவன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் பெருமூச்செடுத்து தன்னை நிலைபடுத்திகொண்டு அவனுக்கு அருகில் இருந்த சேரில் முன் அவன் கையருகில் இருந்த பிளேட்டை வைத்துகொண்டவன் அவனுக்கும் ஒன்றை வைத்துகொண்டான்.

அவன் பேசாமல் தனக்கு பிளேட் எடுத்து வைத்து அடுத்து பரிமாரப் போவதை உணர்ந்தவள், நீங்க சாப்டுங்க நான் எனக்கு வைத்துகொள்வேன் என்றபடி அவனது பிளேட்டில் வேகமாக பரிமாற அவனது அருகில் வந்து பாத்திரத்தை கையில் எடுத்து அவன் முன் இருந்த தட்டில் பரிமாற ஆரம்பித்தாள்.

ஏற்கனவே தன் வீட்டிற்கு அவளை அதிரடியாய் கொண்டுவந்துவிட்டு தனது காதலியை தன்னுடயவளாக ஆக்கிவிட்டோம் என்று மகிழ்சசி பொங்கிய வேலையில் வெண்ணை திரண்டுவரும் போது தாழி உடைந்தது போல அவனது பெரியய்யாவின் வார்த்தைகள் அவன் மகிழ்ச்சியை இல்லாமல் ஆக்கிவிட்டது.

அவளை தன்னிடத்தில் பார்க்க... பார்க்க இது இப்படியே நிலைத்துவிடாதா! என்ற ஏக்கம் அவனுள் விரவியது. அவள் தன்னருகில் நின்று உணவு பரிமாறுகையில் தட்டின் முன் கை வைத்து போதும் என கூறியவன் அவளின் சந்தன நிறகையை  பார்க்கும் போதே தெரிந்த மென்மையான கைகளின் அருகில் கண்ட தனது பிரவுன் நிற ஜிம்மில் அதிகம் வொர்க்கவுட் செய்வதால் உரமேறி தெரிந்த பெரிய கைகளை கண்டவனுக்கு தன்னுடைய கருமை நிறம் தாழ்வு மனப்பான்மையை கொடுத்தது.

இவளுக்கு எப்படி என்னை பிடிக்கும் அவள் அப்பன், பெரிசின் தயவுடன் என் மகளை என்னிடம் தா என்று நாளை கேட்கபோகிறார் இவளும் காப்பாத்தியதுக்கு ஒரு நன்றி கூறிவிட்டு போய்விட போகிறாள். அப்போ நான் என்ன கிறுக்கனா? என்று அவனுக்கு அவனே மனதில் சொல்லிகொண்டவனுக்கு உள்ளம் திகு.. திகு வென்று எரிந்தது.

எனவே தட்டில் வைத்த சாதத்தை சாப்பிடாமல் விருட்டென்று எழுந்து தட்டில் வைத்த உணவை தொட்டுகூட பாராமல் விறுவிறுவென்று எழுந்து வெளியேறினான்.

அவனின் திடீர் கோபத்திற்கு காரணம் புரியாமல் கீதவாணி அதிர்ந்து அவன் போகும் திசையையே பார்த்தபடி இருந்தாள். கீதா தன் அப்பா கணக்கு நிலவரசனின் மேல் வீண் பழி போட்டு பேசியதால் கோவத்தில் அவரை பழிவாங்க தன்னை இழுத்துகொண்டுவந்துவிட்டான்

அதனால் விருப்பம் இல்லாமல் தன்னை கல்யாணம் செய்ய சூழ்நிலை அவனை நிறுத்திவிட்டதால் விளைந்த கோபத்தில்தான் தனது அருகாமை அவனை கோபப்படுத்திவிட்டதாக அவள் நினைத்துகொண்டாள். அதனால் விளைந்த மன அழுத்தத்தில் மறுபடியும் அவளின் கண்கள் பொங்கியது.

அவனின் தட்டில் எடுத்துவைத்திருந்த சாப்பாட்டினை தட்டிட்டு மூடிவிட்டு அவளும் சாப்பிடாமல் அடுத்து என்ன செய்ய என்ற மலைப்புடன் அமர்ந்துவிட்டாள்.

வெளியில் சென்ற நிலவரசன் அவனின் டென்சன் குறைய ஜிம்மினுள் சென்று அதிவேகமாக டிரெட் மில்லில் தனது ஓட்டத்தை தொடங்கினான் அவனின் மனதின் உள்ள புழுக்கம் வேர்வை ஆறாக வடிந்தது. அதிவேகமாக ஓடியதால்  இதயம் அதிவேகமாக துடித்தது. இருந்தும் அவன் உள்ளத்தில் பொங்கிய ஆதங்கம் மட்டும் அடங்காமல் தலை விரித்தாடியது.

அந்நேரம் அவனின் அருகில் நிழலாடுவதை கண்டவன் ஏறிட்டுப்பார்த்தான். கதிர் அவனிடம் ஏதோசொல்ல வந்திருப்பதை கண்டுகொண்டவன் இயந்திரத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்து பின் இறங்கிவந்து தனது டவலால் பெருக்கெடுத்து ஓடிய வியர்வை துளிகளை ஒற்றி எடுத்தபடி தனக்கு பின்னால் கதிரை, வா என்னும் விதமாக தலை அசைத்து வரச்சொன்னவன் முன்னால் நடந்தான்.

அசுரத்தரமான அவனின் ஓட்டத்தை கண்ட கதிர் நிலவரசன் கோபத்தில் உள்ளதை உணர்ந்துகொண்டான்.அவனின் வேகம் கதிரை வருத்தப்பட வைத்தது அவனின் கார்டியோ சிஸ்டம் அவனின் வேகத்தால் பாதிப்படைதுவிடும் அபாயம் உள்ளதை கண்டவன் தான் சொல்லவந்த விஷயத்தை விட்டு முதலில் அவனை டிரட் மில்லில் இருந்து இறங்க வைக்கும் மார்க்கத்தை யோசிக்க ஆரம்பித்தான்.

ஆனால் அவன் பயந்ததுபோல இல்லாமல் அந்த நிலையிலும் தான் வந்ததை கவனித்து டக்கென்று தன்னை நிதானப்படுத்திகொண்ட நிலவரசனின் மனம் மற்றும் உடல் திடத்தை கண்டவன்  நிலவரசனின் அபிமானியாக தான் இருப்பதற்கு காரணம் அவனின் இதுபோன்ற ஆற்றலை கண்டதால்தனே என்று அவனுக்கு அவனே மனதினுள் கூறிகொண்டான்.

தனது வீட்டின் வராண்டாவில் போடப்படிருந்த இருக்கையில் அமர்ந்த நிலவரசு உக்கார் கதிர் என்று கூறினான். மறுப்பேதும் சொல்லாம அமர்ந்த கதிரிடம் ரெட்டி அமோவுன்ட் இப்போ தர என்னிடமில்லைனு சொல்கிறானா? என்று கேட்டான். ஆமா அண்ணே அதுதான் உங்களை அவனிடம் குடோனுக்கு கூட்டிட்டு போக வந்தேன். நீங்க சொல்லாம அவன் மேல கைவைக்க கூடாது. கை வைத்தால்தான் பணத்தை கைப்பத்த முடியும் போல என்றான் கதிர்.

நீ வேற ரெட்டிஎல்லாம் சொகுசா வளர்ந்தவன் ஒரு அடிக்கு கூட தாங்க மாட்டான். ஆனா முடிஞ்ச வரைக்கும் கைவக்காம நம்ம பணத்தை வசூலிக்க பார்க்கணும். நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வந்தாச்சுல இனி நம்மட்ட வாங்கின பணத்தோட நம்மை ஏய்க்க பார்த்ததுக்கும் சேர்த்து வசூலித்துவிட்டுதான் அவனை ரிலீஸ்பன்னுவோம்.

இந்தா இந்த வீடியோ பதிவை ரெட்டியிடம் காட்டு. ஒன்னு அவன் தரவேண்டிய அமவுண்டை தரனும் இல்லாட்டி அவன் வாங்கிய பணத்துக்கு ஈடா இன்னைக்கு ஹோட்டல்ல அவனுடைய பார்ம் ஹௌசை விலைபேச புடிச்ச அந்த பார்டி நம்ம ஆள்தான். எனவே முரண்டு பிடிக்காமல் அதை அப்படியே நம்மளுக்கு எழுதிகொடுத்துடனும் என்றான்.

அப்பொழுது நேரம் நடுஜாமத்தை எட்டியிருந்தது. நேரத்தை பார்த்தவன் நேரமாகிடுச்சு கதிர். தனியா அவ இருக்கா அதனால இப்போ என்னால வரமுடியாது. நாளைக்கு பாப்போம் ஒருநாள் கார்பரேசன் தண்ணீரையும் அன்னாச்சிகடை டீயையும், ஆயா இட்டிலியையும் அவனுக்கு கொடு. மினரல் வாட்டரை குடிச்சிட்டு கையில் ஸ்பூன் வைத்து வெரைட்டியா சாப்பிடவனுக்கு இப்படியும் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் என்று காண்பிப்போம். நாளைக்கு பின் அதையும் கண்ணில் காட்டாதே இப்போ கிளம்பு காலையில் போன் செய்றேன் என்று கூறியவன் தன் இயல்பிற்கு திறம்பியிருந்தான்.

அவன் சென்றவுடன் வீட்டிற்குள் வந்தவன் டைனிங் டேபிளிலேயே தலை வைத்து தூக்கத்திலோ அல்லது பசி மயக்கத்திலோ உடல் கலைப்பிலோ உறக்கத்தில் இருந்தவளைக் கண்டவன் உள்ளம் உருகியது அவளின் அருகில் வந்தவன் மூடியிட்ட தட்டையும் உணவு பாத்திரத்தையும் கண்டவன் அவள் எதுவும் உண்ணாமல் இருப்பதை கண்டவனுக்கு மனதில் குற்ற உணர்வு வந்தது. சாப்பிட கூப்பிட்டுவிட்டு கோபப்பட்டு நான் போயிட்டேன். அதனால் அவளும் சாப்பிடாமல் இருக்க தான் காரணமாகிவிட்டதை நினைத்து வருத்தம் கொண்டான்.

ஆனால் அவன் வளர்ந்த சூழலும் செய்துகொண்டிருக்கும் தொழிலும் அவனின் தன்மையை கடினமானவனாக ஆக்கியிருந்தது. உள்ளத்தில் அவளுக்காக நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளிபடுத்த தெரியாதவனாக அப்பொழுதும் அவளை,

ஏய்.... எந்திரி, ஏய்.... கீதா, எந்திரி என்று கூறியவன் அவளுக்கு தன்னை பிடிக்காது என்ற கோபத்தில் தன்னை விட்டு அவள் பிரிந்து சென்றுவிடுவாள் என்ற வருத்தத்தில் பிடிக்காதவளை தொட்டு எழுப்ப மனமில்லாமல் அவளின் அருகில் மேஜையில் தட்டி சத்தம் எழுப்பினான்.

அதில் அவள் எழவில்லை என்பதால் யோசனையுடன் அவளின் தோள்பட்டையை பிடித்து உலுக்கினான். அப்பொழுதும் அவளிடம் அசைவில்லை என்பதை கண்டவனுக்கு பயம் பதட்டம் நெஞ்சில் சுரீர் என வலி ஏற்பட்டது.

அவன் உதடுகள் அவனை அறியாமலேயே ஏய் முசகுட்டி எழுந்துரு ப்ளீஸ் எழுந்திரு... என்று உச்சரித்தபடி பதட்டதுடன் அவள் கன்னத்தை தட்டினான்.

அப்பொழுதுதான் அவள் உணர்வில்லாமல் இருப்பதை கண்டவன். கதிர் என்று சத்தம் எழுப்பினான்.தனது பைக்கை கிளப்புவதர்காக நடந்துகொண்டிருந்த கதிர் நிலவரசனின் சத்தம் கேட்டு என்ன ஆச்சு என்று பரபரப்புடன் திரும்பி அவன் வீட்டை பார்த்து ஓடினான்.

அதற்குள் தனது கைகளில் கீதவாணியை ஏந்தியபடி வெளியில் வந்த நிலவரசன் காரை நோக்கி வேக எட்டு எடுத்துவைத்தபடி நம்ம டாக்டர் விஜயனுக்கு போனபோட்டு ரெடியாயிருக்கச்சொல்லு. வா வந்து காரெடு என்று கூறியபடி தனது பொலிரோவை நாடிச்சென்றான்.

கதிர் சூழ்நிலையை உணர்ந்து வேகமாக வீட்டினுள் ஓடியவன் கார் கீ தொங்கிகொண்டிருக்கும் இடத்தில் இருந்து அதை எடுத்தவன் வேகமாக காருக்கு ஓடிவந்தான்.

கார் லாக்கிட்டிருப்பதை கூட உணராமல் தனது தோளில் கீதவாணியை போட்டபடி அதை திறக்க முயன்றுகொண்டிருந்தான்.

எந்நேரமும் நிதானத்துடன் செயல்படும் நிலவரசனின் இச்செயல் கண்ட கதிருக்கு இந்த நிலவரசன் புதியவனாக தெரிந்தான்.

கதிர் கார் ஓட்ட பின்னால் தனது மடியில் கீதவானியின் தலை வைத்தபடி எழுந்துவிடு முசகுட்டி உனக்கு என்னை பிடிக்காட்டி நான் உன்னை விட்டுடுறேன் இப்படி உணர்வில்லாமல் கிடந்து என்னை பயமுடுத்தாதே என்று கூறியபடி அவளின் கன்னத்தை தட்டி புலம்பியபடி இருந்தான்.

அவன் கண்கள் கலங்கியது அவனின் கை கூட நடுங்கியது அவனுக்கு. அந்த நேரத்திலும் ஹாஸ்பிடலில் வாயிலில் அவனின் காரை எதிர்கொண்டு ஸ்ட்ரெச்சருடன் பணியாளர்கள் காத்திருந்தனர்.

ஹாஸ்பிடலில் டாக்டர் ஸ்டெச்சரில் வந்த கீதவாணியை தள்ளிகொண்டுவந்த பணியாளர்களுடன் வந்த நிலவரசனை கண்டதும் நான் பார்த்துகொள்கிறேன் நிலவரசன். நீங்க கொஞ்சம் வெளியில் காத்திருங்கள் என்றவர் உள்ளே சென்று அவளை செக் பண்ணிவிட்டு நிலவரசனை அழைத்தார்.

நிலவரசன் உள்ளே வந்ததும் அவங்களுக்கு பயப்படும்படி ஒன்றுமில்லை என்று கூறிய டாக்டர் இப்போ மயக்கம் தெளிவதற்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருகிறது பல்ஸ் இப்போ நார்மலாக இருக்கிறது.அவங்க ஏதோ மிக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் மேலும் நாள்முழுக்க எதுவும் சரியா சாப்பிடாமல் இருந்திருகிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் அவங்க முழு உணர்வுக்கு வந்துவிடுவார்கள். முதலில் அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க அப்புறம் அவங்க மன அழுத்தத்திற்கான காரணத்தை கேட்டு அதிலிருந்து வெளிவர உதவி செய்ங்க.  எழுந்ததும் முதலில்  சாப்பிட ஏதாவது கொடுங்க.  அவங்க இப்போதைக்கு  டிப்ரசனில் இருந்து வெளிவர தூக்கத்திற்கு ஊசி போடச்சொல்லியிருகிறேன் அதனால் நல்லா தூங்கிடுவாங்க அதை பார்த்து பயந்துடவேண்டாம். தூங்கி எழுந்தபின் ஒருதடவை புல் செக்கப் செய்துவிட்டு அதன் பின் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க நிலவரசன் என்றார்.

அவனிடம் அவள் யாரென்று அவர் கேக்கவில்லை. காரணம் அந்த டாக்டர் விஜயன் அவனது பெரியப்பாவுக்கு டிரீட்மன்ட் கொடுப்பவர் மட்டுமல்ல நிலவரசனை பற்றி முழுவதுவும் அறிந்த அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். இதுவரை பெண்களின் பக்கமே திரும்பாது இருந்த நிலவரசனின் ஒரு பெண்ணுக்கான பதட்டத்தை பார்த்த டாக்டர் விஜயன் அவனுக்கு அந்த பெண்ணின்மேல் விருப்பம் இருப்பதை உணர்ந்துகொண்டார்.

இப்போ அவளை நான் போய் பார்க்கலாமா? என்று கேட்ட நிலவரசனிடம் ம்.. பாருங்க ஆனால் அவங்க தூங்கிக்கொண்டு இருப்பாங்க டிஸ்டப் செய்யாமல் பாருங்க என்று கூறினார். அவங்க பேரு என்று கேட்டதும் கீதா கீதவாணி டாக்டர் என்று நிலவரசன் சொன்னதும் உங்க கீதவாணிக்கு இப்போ கொஞ்சம் அமைதி மற்றும் அன்பானவர்களின் கவனிப்பு தேவை போய் பாருங்க  என்று கூறினார்.

அசைவில்லாமல் படுத்திருந்த கீதவாணியை பார்த்தவனின் உள்ளம் வருத்தமடைந்தது. அதற்குமேல் அவளை ஹாஸ்பிடலில் கையில் குளுகோஸ் ஏறும் நிலையில் பார்க்க முடியாமல் வெளியில் இருந்த பெஞ்சில் அமர்ந்தவன் அவள் விழிப்பதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

அதிகாலை 5.30க்கு படுக்கையில் கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க படுத்திருந்த கீதவாணிக்கோ திரும்பத்திரும்ப நிலவரசனின் குரல்தான் காதுக்குள் ஒலித்துகொண்டிருந்தது. எழுந்துவிடு முசகுட்டி உனக்கு என்னை பிடிக்காட்டி நான் உன்னை விட்டுடுறேன் இப்படி உணர்வில்லாமல் கிடந்து என்னை பயமுடுத்தாதே... என்று கூறியபடி அவளின் கன்னத்தை தட்டி புலம்பியபடி இருந்த நிலவரசனின் குரலில் இருந்த தவிப்பு அவளை பாதித்தது. சிறுவயதில் தன்னை அவன் அழைக்கும் முசகுட்டி என்ற அழைப்பை கேட்ட கீதவாணிக்கு வளர்ந்து பெரியவளாக இருக்கும் தான் இன்னும் அவனுக்கு முசகுட்டியாக தெரிவது ஆச்சரியத்தையும் தனக்காக அவனின் துடிப்பு தன் மேல் அவனுக்கு இருக்கும் விருப்பத்தையும் உணர்த்த அவளுக்கு அவனின்மேல் காதல் பிறக்காவிட்டாலும் ஓர் நெகிழ்ச்சி அவனின்மேல் உண்டானது.

கதிரிடம் அவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிவரச்சொல்லிவிட்டு அமர்ந்திருந்த நிலவரசுக்கு அவள் விழித்துவிட்டாள் என்று உள்ளுணர்வு சொல்ல அவள் இருந்த அறைக்கு  உள்ளே வந்த நிலவரசன் வேகமாக அவளிடம் வந்தான்.

அவன் உள்ளே வருவதை கண்டுகொண்ட கீதவாணி திறந்திருந்த கண்களை மூடிகொண்டாள். இதுவரை அவனின் அருகாமை அவளுக்கு பாதுகாப்பான உணர்வை மட்டுமே தந்திருந்தது ஆனால் அவனுக்கு அவளின் மேல் இருந்த விருப்பத்தை அறித்தபின் அவனின் அருகாமை அவளுக்கு புரியாத ஒரு உணர்வை உண்டுபண்ணியது.

எனவே அவ்வுணர்வின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவனை நேர்கொண்டுபாராமல் கண் மூடிக்கொண்டாள். அவளருகில் வந்தவன் அவளின் முகத்தை பார்த்தான் அவள் விழி மூடிகிடந்தாள். அவளின் நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கிவிட சென்ற அவனின் கையை ஏதோ நினைத்து பின்னால் இழுத்துகொண்டான்.

அவளின் கண் முழிகள் மூடியிருந்த இமைப்பேளைகளுக்குள் உருள்வதை பார்த்தவன் அவள் உணர்வுக்கு வந்துவிட்டதை உணர்ந்து கீதா கீதா என அழைத்தான்.

அவனின் முகம் பார்த்தவளிடம் அவனின் கண்கள் எதுவோ யாசிப்பதுபோல் அவளுக்கு பட்டது. ஆனால் சில வினாடிகளில் அவ்வுணர்வு பொய்யோ என்னும் விதமாக தனது முக பாவத்தை மாற்றிகொண்டவன் எப்பொழுதும் பேசும் கம்பீரமான குரலில் இப்போ எப்படி இருக்கு உடலுக்கு கொஞ்சம் தெம்பு இருக்கா என்று கேட்டுகொண்டே தனது மொபைலை இயகியவன் கதிரை தொடர்புகொண்டு அவளுக்கு சாப்பிட உணவு வாங்கிவிட்டாயா? என்று கேட்டான் .
இதோ வாங்கிட்டு ரூம்வாசல்கிட்ட வந்துட்டேனே என்றதும் உள்ளே கொண்டுவா என்ற நிலச்வரசனின் வார்த்தைக்கு சரினே என்றபடி கதவை திறந்தவன் கையில் வைத்திருந்த பொட்டலம் அடக்கிய பார்சலை வைத்தவன் அதன் அருகில் வாட்டர் பாட்டிலையும் வைத்துவிட்டு வெளியேறினான்.

நிலவரசன் அவளின் படுக்கை அருகில் சாப்பாடு அடங்கிய பார்சலை வைத்திருந்த பேசன்ட் சாப்பிட தோதாக போட்டிருந்த டீபாயை பெட்டுக்கு அருகில் நகர்த்தி வைத்து பார்சலை பிரிக்க முயன்றான்.

அதை கண்ட கீதவாணி நான் இன்னும் பல் விளக்கவில்லை பிறகு சாப்பிடுகிறேன் என்று அவனது முகத்தை பார்க்காமல் வேறுபுறம் பார்த்தபடி சொன்னாள்.

அவள் தனது முகம் பாராமல் பேசுவதை கண்ட நிலவரசுக்கு அவளுக்கு தன்னை பார்க்க பிடிக்காமல்தான் முகம் திருப்பிகொண்டு பேசுவதாக நினைத்தான் அதனால் அவளின் உடல் நிலைமை கருத்தில் கொண்டு அவனுக்குள் எழுந்த சினத்தை அடகிக்கொண்டான். என்னை விட்டு தள்ளி இருப்பதுதான் உனக்கு பிடிக்கும் என்று நீ நினைகிற? அப்படிப்பட்ட நீ எனக்கு வேண்டாம் போடி என்று மனதிற்குள் சொல்லிகொண்டவன், அவளிடம் டாக்டர் நீ முழித்ததும் சாப்பிட சொல்லி சொல்லியிருக்காங்க ஒழுங்கா என்னை டெண்சனாக்காமல் உட்கார்ந்து சாப்பிடு என்று சொல்லியபடி அவளுக்கு சாப்பாடு பார்சலை பிரித்துவைத்தவன் சாப்பிட தோதாக அவளுக்கு  டீபாபை இழுத்து போட்டான்.

படுத்திருந்த கீதவாணிக்கு அவனது கடினமான முகத்தையும் வார்த்தையும் கேட்டதும் மறுத்துப்பேச நாக்கு எழாமல் எழுந்து அமர முயன்றாள்.

ஆனால் சற்று தலை பாரமாக லேசாக தள்ளாட்டத்துடன் எழுந்த அவளை ஏய் பார்த்து... பார்த்து என்று பதறியபடி அவளை பிடிக்க கை நீட்டினான்.

ஆனால் அவளுக்கு புதிதாக ஏற்பட்டிருந்த அவனின் அருகாமை கொடுத்த ஏதோ ஓர் உணர்வில் இருந்தவள் அன்னிச்சை செயலாக கூச்சம் காரணமாக அவன் நீட்டிய கை தன் மேல் படாமல் அந்த நிலையிலும் லேசாக ஒதுக்கினாள்.

அவளின் ஒதுக்கத்தை பார்த்தவனுக்கு நெஞ்சில் சுருக்கென்று முள் தைத்தது போல் வலி எடுத்தது. அதனால் மேலும் அவளிடம் நெருங்காமல் திரும்பி வாசலை பார்த்தவாறு நடந்துகொண்டே இன்னும் ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்திருக்கணும் என்ற கட்டளையிட்டபடி  அவ்வரையை விட்டு வெளியேறினான்.

வெளியில் வந்தவநின் அருகில் வந்த கதிர் அண்ணே கணக்கு அவர் வீட்டோட ஹாஸ்பிடல் வந்திருப்பதாக கீழே இருக்கிற நம்ம சோமு போன் செய்றான் என்றதை கேட்ட நிலவரசன் அதுக்குள்ள யார் இவள் ஹாஸ்பிடலில் இருப்பதை பற்றி தகவல் கொடுத்தது என்று கேட்டான் .

இல்லன்னே அம்மா ஊரில் இருந்து பெருசு வீட்டுக்கு வந்துட்டதாக காலையில் நான் சாப்பாடுவாங்க போறப்ப என் போனுக்கு போன்  சொய்தாங்க உங்க போன் அடிச்சுகிட்டே இருக்கு ஏன் நீங்க போன் எடுக்கல எங்க இருக்கீங்க என்று கேட்டாங்க.

அப்போ வீட்டில இருந்த நம்ம காமாச்சியம்மா (பயில்வானின் மனைவி காமாச்சி} போனை வாங்கி கணக்கு அவர் குடும்பத்தோட அங்க பெருச பார்த்து பேசவந்திருப்பதாக சொன்னாங்க. நம்ம கீதவாணியத்தான் நிலவரசன் கல்யாணம் செய்துக்கபோறானா? என்று என்னை குடைந்து எடுத்துட்டாங்க இப்போ எங்க கீதவாணி இருக்கானு கேட்டதும் வேரவழியில்லாமல் ஹாஸ்பிடலில் இருகிறதா நான்தான் அவங்கட்ட சொல்லவேண்டியதாகிடுச்சு .

அவங்க மூலமாத்தான் கணக்குக்கு விஷயம் தெரிஞ்சு இங்கே வந்துருக்காங்கனு நினைகிறேன். கீழ அவங்க வந்ததை பார்த்த சோமு இப்போதான்  சொன்னான் என்று சொல்லி முடிக்கையில் அந்த ரூம் இருந்த வரண்டாவில் நின்றுகொண்டிருந்த நிலவரசனின் கண்ணில் சற்று தொலைவில் கணக்கு அவரின் இளையமகள் மற்றும் மனைவியுடன் வருவது மட்டும் தெரிய, அந்த திசையில் நன்றாக திரும்பி பார்த்த நிலவரசனுக்கு அவர்களுடன் தலையில் சிறு கட்டுடன் அவர்களின் பின்னால் வந்த ஜனார்த்தனை    பார்த்ததும் அவனின் உடல் விரைத்தது முகம் கடுமையை தத்து எடுத்தது.

இருந்தாலும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவன் உணர்ச்சி தொலைத்த கடினமான பார்வையால் வந்தவர்களை எதிர்கொள்ள தயாராக நின்றான்.
                         
                                  ----தொடரும்---
Episode 10                                                   Episode 12





No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib