anti - piracy

Post Page Advertisement [Top]


       பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா...!  (தீபாஸ்-ன்)
                          அத்தியாயம்-12
                                  

கணக்கு வெங்கி தன் மகள் மேல் தவறு இருக்காது என்று இளைய மகளின் வார்த்தையை கேட்ட பின்பே தான் அவசரப்பட்டு வார்த்தை விட்டுவிட்டோமோ என்று கலக்கத்தில் இருந்தார் .தன்னுடைய முன்கோபத்தால் தன மகளை தானே நிலவரசனின் பிடியில் சிக்க வழிசெய்துவிட்டோமோ என கலங்கிவிட்டார்.

தனது தந்தையின் கலக்கத்தை கண்ட தேவிஸ்ரீ அப்பா விஷயம் ஒன்னும் பெரிதாகவில்லை. சின்னவர் பத்தி நீங்க வீட்டில் பேசுவதில் இருந்தே அவர் செய்யும் தொழில் அவரை சுற்றி இருக்கும் நபர்கள் வேண்டுமானால் அவரை ரவுடியாக சித்தரிக்கிறதே தவிர அவர் நல்லவர் என்று நான் உணர்ந்துகொண்டேன்.

அக்கா அவரிடம் இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பாள் எனறு தான்  நினைகிறேன். நீங்களே சொல்லியிருகீங்க அவர் இருக்கிற இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்புக்கு குறைவிருக்காது என்று கூறியிருகிறீர்கள். அதனால் நான் அவர் வீட்டிற்கு போய் அக்காவின் நிலையை அறிந்து என்ன நடந்தது என்று தெரிந்து வருகிறேன். கையில் மொபைல் கொண்டு செல்கிறேன் எதுவும் உதவி தேவைஎன்றால் உங்களை தொடர்புகொள்கிறேன் நீங்க பெரியவரிடம் அதன் பின் பேசுங்க என்றபடி நேற்று இரவு கீதவாணியை சந்திக்க ஆட்டோபிடித்து அவளிருக்கும்  இடம் வந்தாள்.

அவள் வந்த நேரம் நிலவரசு கீதவாணிக்கு உடைஎடுக்க கடைவீதிக்கு சென்றிருந்ததால் அவளின் அக்காவை சந்தித்து நடந்ததை அறிந்து அவளுக்கு தைரியம்  கூறி நாளை எப்படியும் உன்னை அப்பா வந்து கூட்டிக்கொண்டு வந்துவிடுவார் உன்னை தக்க நேரத்தில் காப்பாத்திய அவரை நம் வீட்டில் புரிந்துகொள்ளாமல் பழிபோட்டதால்தான் கோபப்பட்டு உன்னை பழிவாங்க இங்கு கொண்டுவந்துவிட்டார் சின்னவர்.

நாளை அவரிடம் பேசியதற்கு அப்பா வருத்தமும், மன்னிப்பும் கூறி உன்னை மீட்டு வீட்டுக்கு கூட்டிகொண்டு வந்துவிடுவார்.

அதுவரை இங்கு நீ பாதுகாப்பாய்தான் இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீயும் சின்னவரின் மேல் இருக்கும் பயத்தை விட்டு உன்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றியதை மனதில் வைத்து அவருக்கு நன்றியோடு நடந்துக்கோ என்று கூறிவிட்டு வந்தாள்.

வீட்டிற்குவந்து தேவிஸ்ரீ,அப்பா கணக்கிடம் நடந்ததை கூறியதுமே தான் செய்த தவறு இமயமாக அவரை உறுத்த ஆரம்பித்துவிட்டது. என்னதான் நிலவரசன் நல்லவன் என்றாலும், தான் பார்த்திந்த மாப்பிள்ளை ஜெனார்த்தனை விட அதிகம் வசதிபடைத்தவன் என்றாலும், அவருள் ஊறிப்போயிருந்த ஆச்சாரம் என்ற பெயரில் புகுந்திருக்கும் கொடிய ஜாதிநோய் கிருமியும். நமக்கேன் பிரச்சனை, பிரச்சனையை கண்டு வீட்டில் புகுந்து தால்போட்டுகோ அதுவே புத்திசாலிதனம் என்னும் கோட்பாடும் கொண்ட கணக்கு வெங்கியால் ஆச்சாரத்தையும் தனது கோட்பாட்டையும் தகர்க்கும் தன்மையுள்ள நிலவரசனை தன் மகளின் கணவனாக நினைத்துகூட பார்க்க முடியவில்லை.

அதுவும் தன்னால்தான் இந்த நிலைமை என்று தெரிந்ததும் இதை மாற்றி அமைக்க தனது நண்பனும் முதலாளியுமாகிய பயில்வானின் உதவியை பெற அவரிடம் செல்ல பரபரத்தார்.

ஆனால் நேரத்தை பார்த்து நள்ளிரவை நெருங்கிகொண்டிருகும் இவ்வேளையில் மருந்தின் உதவில் உறங்கும் பயில்வான் மயில்சாமியை எழுப்ப முடியாது என்ற நிதர்சனம் உரைக்க விடிவதற்கு காத்திருந்தார்.

விடிந்ததும் யாராலும் அசைக்க முடியாத நிலவரசை பயில்வான் மயில்சாமியின் வார்த்தை ஒன்றுதான் கட்டுபடுத்தும் என உணர்ந்து அவரை தனக்கு உதவுமாறு கேட்க, விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதிலே சட்டையை மாட்டி கிளம்ப ஆரம்பித்த நேரம் புதது நம்மரில் இருந்து அவர்களின் வீட்டில் இருந்த பட்டன் போன் அழைத்தது.

அதனை அட்டன் செய்த கணக்கின் காதுகளில் அங்கிள் என்ற வார்த்தை விழுந்ததும் யோசனையுடன் புருவம் சுருக்கினார் வெங்கி, அதன் பின் திரும்பவும் அங்கிள் நான் ஜெனார்த்தன் பேசுறேன் முதலில் என்னை மன்னிச்சுடுங்க. ஹோட்டலில் நடந்தது ஒரு விபரீதம் என்னுடன் இருந்த நண்பர்களில் எனக்கு வேண்டப்படாத ஒருவர் நான் குடித்த பானத்தில் புத்தியை மழுங்கச் செய்யும் அதிக போதைதரும் வஸ்த்துவை கலந்து கொடுத்துவிட்டிருகிறார்கள் என்பதை இப்போ ஹாஸ்பிடல் ரிபோர்டில் இருந்து தெரிந்துகொண்டேன்.

எனவே அங்கு நடந்த சம்பவம் சூழ்ச்சியால் அவ்வாறு ஆகிவிட்டது. நீங்க வந்து ரிப்போர்ட் பார்த்து நான் சொல்வது உண்மையா பொய்யா என்று சரிபார்த்துக்கோங்க. வெறும் டூ கிளாஸ் ரெட் வொயின் எடுத்ததுக்கு ஏன் எனக்கு இப்படி கிறுக்கு பிடிச்சமாதிரி நடந்துகிட்டேன் என்றதுக்கு விடை என் ரிப்போர்ட் பார்த்த்தான் தெரிந்துகொண்டேன்.

இந்த காரணத்திற்காக   கல்யாணத்தை நிறுத்தி விடாதீங்க ப்ளீஸ் அங்கிள் என்று ஜெனார்த்தன் கூறினான்.

பயில்வான் மயில்சாமியிடம் தான் தனது இனத்தில் கீதவாணிக்கு தேர்ந்தெடுத்திருந்த மாப்பிள்ளை ஜெனார்த்தனின் கீழ்தரமான செயலை அறிந்தால் அவனைவிட நிலவரசன் எந்தவிதத்தில் தாழ்ந்துவிட்டான் என்று அவர் கேட்டால் வெளிபடையாக அவரிடம் ஜாதிவேற்றுமையை பற்றியும் தனது ஆச்சாரத்தை பற்றியும் பேச தயக்கம் ஏற்பட்டது. மேலும் நிலவரசனின் மீது மாறா அன்பும் அவனது திறமையின் மீதும்  மிகவும் அன்பு வைத்திருக்கும் பயில்வானின் முன் அவருக்கு பெண் கொடுக்க எனக்கு விருப்பமில்லை என்று முகத்தில் அடித்ததுபோல் பேச பயமும் எழுந்தது.

ஆனால் இப்பொழுது ஜெனார்த்தன் கூறியதை கேட்ட கணக்கோ தான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை அவ்வாறு நடந்து கொண்டது சூழ்ச்சியில்தான் என்று பயில்வானுக்கு அவனின் ரிபோர்ட்டை காண்பித்து புரிய வைத்துவிடவேண்டும். மேலும் ஏற்கனவே பேசி முடிவெடுத்து பத்திரிகை வைப்பதுவரை வந்த பின் அந்த மாப்பிள்ளை மாற்றுவது தனக்கும் தன் குடும்பத்துக்கும் இழுக்கு என கூறி தனது மகளை நிலவரசனிடம் சமாதானம் பேசி தன்னிடம் ஒப்படைக்க சொல்லச் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது .

எனவே ஜெனார்த்தன் அவ்வாறு போன் பண்ணி சொல்லவும் அவனை அந்த ரிபோர்ட்டை எடுத்துகொண்டு பயில்வான் வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார் கணக்கு .

பயில்வான் வீட்டிற்கு கணக்கு போனபின் அவரின் மகள் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயம் அறிந்து பதறிக்கொண்டு வெளியில் வந்தவர் அவரை தேடி வந்த ஜனார்த்தனை எதிர்கொண்டார் பின் அவனையும் கூப்பிடுக்கொண்டு ஹாஸ்பிடல் வந்தார் கணக்கு.

கணக்கு வந்துகொண்டிருந்த திசையின் எதிர்புறமிருந்து தடிதடியாக நான்கு பவுன்சர்கள் திடீரென்று வேக எட்டுகளுடன் முன்வந்தவர்கள் நிலவரசனை கணக்கின் குடும்பமும் ஜனார்த்தனும் நெருங்கிவிடாதவண்ணம் அவனுக்கு அரணாக நின்றனர்.

அவர்களிடம் கண்ஜாடை காண்பித்துவிட்டு கீதவாணி இருந்த ரூமினுள் நுழைந்து அந்த ஏசிரூமில் பேசண்டுக்கு துணையாக ஒருவர் தங்குவதற்கு வசதியாக போடப்பட்டிருந்த சிங்கிள் கட்டிலில் அமர்ந்தான் நிலவரசன்.

எதிரில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கீதவாணியை அவன் துளியும் கண்டுகொள்ளவில்லை. கையில் வைத்திருந்த மொபைலில் வெளியில் நின்றிருந்த கதிருக்கு ரூமில் நுழையமுடியாமல் காவலுக்கு நின்றிருந்த பவுன்சர்கள் கணக்கிடம் என்ன கூறவேண்டும் என்பதை வாட்சப்பில் மெசேஜ் செய்துகொண்டிருந்தான்.

ஏசிரூம் கதவு லாக்கிட்டு இருந்ததால் வெளியில் பேசுவோரின் குரல் அந்த அறைக்குள் கேட்கவில்லை.

தனது குடும்பம் மற்றும் ஜனார்த்தனுடன் கீதவாணி அனுமதிக்கப்பட்டிருந்த அறையை விசாரித்து வந்த கணக்கு, வெங்கி  அவ்வாறாயின் வாசலில் வழிமறித்து நின்றுகொண்டிருந்த நிலவரசனின் மெய்காப்பாளர்களை கண்டு வெகுண்டார்.

என் மகளைப் பார்க்க நான் போகக்கூடாது என்று நீங்க எப்படி என்னை தடுக்கலாம் என்று சாதுவாக எப்பொழுதும் காட்சிதரும் கணக்கு வெங்கி வெகுண்டார்.

ஆனால் அவரை துளியும் சட்டை செய்யாமல் தூசிபோல பாவித்தனர் அங்கு நின்று கொண்டிருந்த நான்கு பவுன்சர்கள்.

அவர்களுக்கு பின் ரூம் வாயிலில் நின்றுகொண்டிருந்த கதிரை பார்த்து வெங்கி சத்தமாக கதிர் தம்பி இது என்ன அநியாயமா இருக்கு. உள்ள சுகமில்லாமல் இருக்கிறது எங்க பொண்ணு பெத்தவங்களை பிள்ளையை பார்க்கவிடாமல் செய்வது உங்களுக்கே நல்லா இருக்கா? என்றார்.

நீங்களும் மாமியும் உங்க பொண்ணும் மட்டும் வந்திருந்தா உள்ள விட்டுருப்போம் ஆனா கூட நீங்க வேற ஒருத்தரயுமில்ல கூட்டிட்டு வந்திருக்கீங்க அதனால்தான் உங்களையும் சேர்த்து உள்ளவிடாமல் வெளியில் நிறுத்தும்படி ஆகிவிட்டது என்றான் கதிர்.

அவரும் எங்க குடும்பத்தில் ஒருத்தருதான். அவர் என் பொண்ணை கட்டிக்க போற என் வீட்டு மாப்பிள்ளை என்று கூறினார் கணக்கு.

உள்ளே அமர்ந்தபடி அவர்கள் பேசுவதை கதிரின் மொபைல் வாய்ஸ் கால் மூலம் தனது காதுகளில் ஹெட் போனை மாட்டியபடி கேட்டுகொண்டிருந்த நிலவரசனால் கணக்கு கூறிய ஜெனார்த்தன் என் பொண்ணை கட்டிக்க போற மாப்பிள்ளை என்று கூறியதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஹோட்டலில் கீதவாணிக்கு ஜனார்த்தனால் நிகழ்ந்த அவமானத்தை அவனால் இன்னுமே ஜீரணிக்க இயலவில்லை.

தனது வீட்டிற்கு வந்த கீதவானியின் தங்கை தேவிஸ்ரீயிடம் கீதவாணி ஹோட்டலில் என்ன நடந்தது என்று சொல்லியிருப்பாள். அதை கேட்ட கணக்கு வெகுண்டிருப்பார் இப்படிப்பட்ட ஒருத்தனுடன் போய் என் மகளின் திருமணம் நடக்க இருந்ததே நல்லவேளை திருமணத்துக்கு முன்பே அந்த ஜெனார்த்தனின் சுயரூபம் தெரிந்தே என் மகள் தப்பித்தாள் என்று நினைத்து அவனுடனான கல்யாணத்தை அவர் நிறுத்துவார் என்று நினைத்திருந்தான்.

தன்னைவிட்டு கீதவாணி பிரிந்து சென்றாலும் இனி அந்த கயவனுடன் அவளின் கல்யாணம் நடக்காது என்ற நிலவரசனின் நினைப்பு கணக்கு வெங்கியின் பேச்சால் தகர்ந்தது.

அந்நேரம் கதிர் குரல் பதட்டத்துடன் அண்ணே பெருசு வாராறு அண்ணே என்று கூறினான்.

ஆம் பயில்வான் மயில்சாமி தனது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவரை தள்ளிக்கொண்டு அவரது மனைவி காமாச்சியும் கூட நிலவரசனின் அம்மா காந்திமதியும் அவர்களை சுற்றி நன்கு பேர் பாதுகாப்புக்காக வந்துகொண்டிருந்தனர்.

அதன்பின் நிலைமை அப்படியே மாறிவிட்டது கதிரிடம் நிலவரசு பெருசும், அம்மாவுமா வருகிறார்கள். அப்போ  அவங்க உள்ளவர வழியவிட்டு நம்ம பசங்களை நிக்கச்சொல்லு.

என்று கூறியபடி வேகமாக சென்று மற்ற நினைப்பை புறம்தள்ளி கதவை அவனது பெரியப்பா வருவதற்கு தோதாக பிடித்து திறந்து வைக்க முன்னேறினான்.

கதவை அவன் சென்று திறப்பதற்கும் அங்கே அவனின் பெரியப்பா வருவதற்கும் சரியாக இருந்தது.

வாசலுக்கு அருகில் தன மனைவியின் துணையுடன் வந்திருந்த பயில்வான் மயில்சாமி உள்ளே வராமல் அங்கு நின்றுகொண்டிருந்த கணக்கு வெங்கியை பார்த்து நீஏன் இங்கன நிக்கிற உள்ளவா என்று கூறினார்.

அவ்வளவுநேரம் அவரை குடும்பத்துடன் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியிருந்த அந்த தடியர்கள் பயில்வானின் வார்த்தையை கேட்டதும் விலகி நின்றனர்.

உடனே வேகமாக அவரின் சக்கர நாற்காலியுடன் இணைந்து நடந்து ரூமிற்குள் நுழைந்தார் கணக்கு. அவரை தொடர்ந்து அனைவரும் உள்ளே வந்தனர் கதிரும் பவுன்சர்களும் வெளியில் நின்றுகொண்டனர்.

கதவு திறந்ததுமே கீதவாணி வெளியில் கேட்ட சலசலப்பில் யார் வருகிறார்கள் என்று வாசலைபார்த்து திரும்பினாள்.

உள்ளே பெருசும் அவரின் மனைவியும் கூட தனது குடும்ப உருப்பினர்களும் வருவதை கண்ட கீதவாணி முகம் ஒருநிமிடம் மலர்ந்தது. ஆனால் கடைசியாக உள்ளே வந்த ஜனார்த்தனை கண்டதும் அவளின் மலர்ந்த முகம் சிரிப்பை துறந்து கடினமானது.

உள்ளே வந்ததும் கணக்கு நிலவரசனிடம் என்ன மனிச்சிடுங்க சின்னவரே நான் நடந்தது தெரியாம உங்களை தப்பா பேசிட்டேன். அதுக்கு எனக்கு என்ன தண்டனைனாலும் கொடுத்துக்கோங்க என் மகளை என்னிடமே திரும்ப கொடுத்துடுங்க என்று நிலவரசனிடம் பேசினார்.

அப்பொழுது பயில்வான் சத்தமாக “வெங்கி நீ ஒருநிமிஷம் இங்கே வா நான் பேசுறேன் அவனிடம்” என்றவர் நிலவு கணக்கு தெரியாம பேசிட்டேன்னு உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டான். அவன் மாப்பிள்ளையாக பார்த்திருக்கும் ஜெனார்த்தனுடன் மகளின் கல்யாணம் முடிந்தால் தான் அவன் கொளரவம் நிலைக்கும் என்று நினைக்கிறான் . நீ என்னப்பா சொல்ற? என்றார்.

அவர் அவ்வாறு கூறிய மறுநிமிடம் கீதவாணி முடியாது... என்னால் முடியாது... என்று உரக்க கூறியவள்  தனது ஒற்றை கையை ஜெனார்த்தனின் புறம் நீட்டி அவனை சுட்டிக்காட்டி இவனுடன் எனக்கு கல்யாணம் என்ற பேச்சை யாராவது எடுத்தீங்க அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என்று கூறியவள்

நிலவரசனிடம் நேத்து  என்ன சொன்னீங்க, எப்ப உங்க வாயினால்  “இனி இந்த ஜென்மத்துக்கு நீதான் என்பொண்டாட்டி” அதை மாத்த இனி யாராலும் முடியாது என்று கூறினீங்க. இப்போ என்னவென்றால் என்னை அவனுக்கு கட்டிவைக்கபோறதா சொல்றாங்க நீங்க குத்துக்கல்லாட்டம் நிக்கிறீங்க .

நீங்க இழுத்துட்டுவருவதுக்கும் என் வீட்டு ஆட்கள் என்னை நீங்க இழுத்துட்டுவரும்போது வேடிக்கை பார்த்துட்டு இப்போ அவங்க நினச்சநேரத்துக்கு வந்து கூட்டிட்டு போறதுக்கும் நானென்ன நீங்க எல்லோரும் வச்சு விளையாடுர பொம்மையா? இப்போ சொல்றேன் கேட்டுக்கங்க எனக்கு புருஷன் இவர்தான் என்று நிலவரசனை பார்த்து கை நீடியவள் உங்க பொண்ணு செத்துட்டாப்பா. எப்ப என்னை பத்தி நீங்க புரிந்துகொள்ளாம பேசுநீங்களோ அப்பவே நான் பாதி செத்துப்போயிட்டேன். எப்ப நீங்க பார்த்த மாப்பிள்ளை என்னை நாலுபேர் முன்னாடி அசிங்கம் பண்ண பார்த்தது  தெரிஞ்சும் உங்க கொளரவுத்துக்காக அவனுக்கே என்னை கல்யாணம் செய்துகொடுக்கணும் என்று நீங்க நினைச்சீங்களே முழுசா உங்க மக செத்துட்டா.

இப்போ இருக்கிறது உங்க மக கிடையாது. என் மேல இனி உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது போயிடுங்க... இங்கிருந்து போயிடுங்க.... என்று கூறியபடி கையில் குளுகோஸ் ஏற போட்டிருந்த நீடிலுடன் தன் முகத்தை இரண்டு கைகளாலும் மறைத்து அமர்ந்தபடி அழத் துவங்கினாள்.

கீதவாணி பேசப்பேச அவளின் பெற்றோர்கள் அதிர்ந்து போயினர். தங்களை எதிர்த்து இதுவரை ஒருவார்த்தை கூட பேசாத அமைதியான மகளின் இந்த கோபம் கண்டு அரண்டுவிட்டனர். அதிர்ச்சியில் இருந்து அவளின் அழுகை கண்டு பதறி கீதா.... என்றபடி அவளிடம் நெருங்க முயன்ற அவர்களின் முன் சென்று நின்றான் நிலவரசன் அதுதான் அவளே சொல்லிடாளே இனி உங்களுக்கும் அவளுக்கும் எதுவும் கிடையதுன்னு போங்க இங்கிருந்து என்று கர்ஜித்தான்.

அவர்களுடன் வந்த ஜெனார்த்தனுக்கு இது பெரும் அவமானமாக போய்விட்டது. ஹோட்டலில் ஏற்கனவே  நண்பர்களின்முன் தன்னை அவள் அறைந்துவிட்டாள். அதுவும் தான் அறியாமல் போதையில் செய்த பிழைக்காக தன்னை அறைந்து அவமானபடுத்திய அவளை மனைவியாக தன்னிடம் கொண்டுவந்து அவளை பழிவாங்கவேண்டும் என்ற காரணத்திற்காகவும் அவளின் அழகின் மேல் இருந்த மோகத்திற்காகவும் எப்படியும் அவளை மணந்துவிடவேண்டும் என்றே அவளின் பெற்றோரை ஒருவழியாக சமாளித்து வந்தால் மேலும் தனக்கு அவளால் அவமானமாகிவிட்டதே என்று கோபத்தோடு விருட்டென்று வெளியேறினான். அவனின் மனம் கொதித்துகொண்டிருந்தது.

                          ----தொடரும்-----
Episode 11                                                 Episode 13





No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib