பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா
(தீபாஸ்-ன்)
அத்தியாயம்-16
நிலவரசனின் பின்னேயே உள்நுழைந்த கீதாவை ஏசி
ஓடுதுள்ள கதவை அடைக்காம வருகிறாய் என்ற நிலவரசனின் வார்த்தையில் கதவை அடைத்து
தாளிட்டு திரும்பினால் கீதா.
கழுத்தில் போட்டிருந்த மலையை அங்கிருந்த
ஹேங்கரில் கழற்றி தொங்கவிட்டிருந்த நிலவரசன், உடை எதுவும் மாற்றாமல் கட்டிலில் கை
கால்களை பரப்பி படுத்திருந்தான்.
கீதா அவன் மாலையோடு தனது கழுத்தில் இருந்த மாலையும்
கழட்டி தொங்கவிட்டவள் அங்கிருந்த டிரஸ்ஸிங் டேபிள் முன் போட்டிருந்த சேரில்
அமர்ந்து அவளின் தலை அழங்காரத்தை கழைத்து நீண்ட கூந்தலை சிக்கெடுத்து தூக்கி கொண்டையிட்டவளுக்கு
நிலவரசனின் ஆளை விழுங்கும் பார்வை பார்க்காமலே உணர முடிந்தது. அதில் அவளுக்கு
படபடப்பு உண்டானது.
அவள் உள்நுளைந்ததில் இருந்து அவளின் ஒவ்வொரு
செயலையும் கண் இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தான். சற்றுமுன் தனது குடும்பத்தார்
செய்த ரகளையை பார்த்து என்ன நெனச்சிருப்பா ஏற்கனவே ரொம்ப நம்மளை பத்தி நல்ல
அபிப்ராயம் அவளுக்கு! இதில் நம் வீட்டுல வேற டோட்டலா நம்ம இமேஜை டேமேஜ்
செய்துட்டாங்களே.. என்று நினைத்துகொண்டிருந்தான் அப்பொழுது அவனின் மொபைல் ஒலி
எழுப்பியது மொபைல் நம்பரை பார்த்தவன் யோசனையுடன் எடுத்து காதில் வைத்து சொல்லுங்க
இன்ஸ்பெக்டர் வெற்றிமாறன் என்று கூறினான்.
அந்த பக்கம் அவர் கூறியதை கேட்டவன் கேஸ் பைல் பண்ண
வேண்டாம் உங்க போனை அவனிடம் கொடுங்க என்று கூறினான்.
நிலவரசன் ஒருநிமிடம் ஆழ்ந்த யோசனையுடன் இருந்தவன்
பின் மொபைலில் என்ன ரேஷ்மன் அமெரிக்காவில் இருந்து வந்த ஆறுமணி நேரத்தில் நீங்க யார்
யாரப்பார்த்தீங்க இப்போ யார் கொடுத்த தைரியத்தில என் மேல கம்ப்ளெயின்ட் கொடுக்க
வந்திருக்கீங்க என்று ஆள் டீடெய்ல்ஸ் ஐ நோ.
ஒழுங்கு மரியாதையா உங்கப்பா வாங்குன அமௌவுண்டை
வட்டியோட இன்னும் ஆறுமணி நேரத்துக்குள்ள என்னிடம் கொடுத்துட்டு உங்கப்பாவ
கூட்டிட்டு போலாம் என்றான்.
அதற்கு அந்த பக்கம் கூறியதை கேட்ட நிலவரசன்
என்னது அவ்வளவு பணத்துக்கு நீ எங்க போவியா தெரியாது. அப்படி அப்பன் வாங்குன பணத்தை
அடைக்க மனசில்லாதவன் அவர் எங்கிட்ட பணம் வாங்க அடமானமா கொடுத்த வீட்டை என்
பேருக்கு ரெஜிஸ்டர் செய்து தந்திடனும் அதைவிட்டு அப்பனும் மகனும் என்னிடமே டபிள்
கேம் ஆடி வீட்டை வேறொருத்தனுக்கு வித்து பணத்தோட எஸ் ஆக பார்த்தா சும்மா விட்டுட
நான் என்ன பொட்டையா? என்று கர்ஜித்தான்.
அந்தப் பக்கம் அவன் பேசியதை கேட்டவன். ஹா...ஹா...ஹா...என்று
சத்தமாக கோபத்தையும் நக்கலாக பறைசாற்றும் வகையில் சத்தமாக சிரித்தவன் உன்னால என்
மசுர கூட புடுங்க முடியாது. இப்போ கூட நீ கம்ப்ளைன்ட் கொடுக்க வந்த இடத்தில்
இன்ஸ்பெக்டர் போனிலேயே உன் கூட பேசுறேனே இதிலிருந்தே என் பவரை நீ புரிஞ்சு
இருக்கனும். உனக்கு கடைசியா ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறேன். இன்னும் ஆறுமணி
நேரத்துக்குள்ள என்னிடம் வாங்குன பணத்தை வட்டியோட
கொடுத்துட்டு உங்கப்பாவ கூட்டிட்டு போ.
அப்படியில்ல என்ன ஏமாத்த பாத்ததுக்கும் சேர்த்து
அபராதமா சேர்த்து அந்த வீட்டை அப்படியே என் பேருக்கு ஏழாவது மணிநேரம் ரெஜிஸ்டர்
ஆகும். நீ வந்து போட வேண்டிய கையெழுத்த போட்டுட்டு உங்கப்பனை கூட்டிட்டு போ.
என்னோட பலம் என்னனு இப்போ தெரிஞ்சிருப்ப. மகனே... ஏதாவது டபிள் கேம் ஆட பார்த்த
முடிச்சுடுவேன் உங்கப்பன இல்ல... அமெரிக்காவில் இருக்கிற உன் பொண்டாட்டிய... அவளோட
புதூ பிரன்ட் மைகேல் அவனோட ப்ராப்பர்டியா அவளை மாத்திக்குவான் உன் அமரிக்கா
சொத்தோட என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான்.
அவ்வளவு நேரம் அவன் பேசிய பேச்சை கேட்டு மனம்
கனத்து போனது கீதவாணிக்கு .
அதை உணராத நிலவரசு கூலாக அவன் தொழிலை பார்பதுபோல ஒரு மாயத்தை
மற்றவர்களுக்கு தோற்றுவித்தாலும் அவனுக்குள்ளும் அழுத்தம் இருந்தது. இதுவரை அவனின்
டென்சன் போக்க அவனுக்கு துணை புரிந்தது அவனது உடற்பயிற்சி கூடமே.
ஆனால் இன்றோ அவனுக்கு தன் டென்சனை குறைக்க ஜிம்மிற்கு
போக மனம் வரவில்லை. அவனின் மனைவியின் மூச்சு காற்று சுழலும் அவ்வறையில் இருந்து அகலவே
கூடாது என்று ஆசை அவனுக்குள் துளிர்த்தது அவளை பார்த்துகொண்டிருப்பதிலேயே தன்
டென்சன் படிப்படியாக குறைவதை உணர்ந்தவனுக்கு இதழில் புன்னகை உதித்தது.
அவனின் மனநிலைக்கு எதிர்பதமாக இருந்தது கீதாவின்
மனநிலை. அவன் போனில் யாரோ ஒரு ரேஸ்மனை மிரட்டிய விதம் அதுவும் அவனது மனைவியை
கொண்டு மிரட்டிய விதம் கண்டு அவனுடன் மனதளவில் ஒரு ஒதுக்கமும் தணிந்திருந்த பயமும்
திரும்ப தலைதூக்கியது.
அப்பொழுது மீண்டும் அவனின் மொபைல் ஒலித்தது
எடுத்தவன் ம்...இதோ வர்றோம். என்றவன் எழுந்து அவளின் அருகில் சென்றான்.
தன்னை நோக்கி அவன் வருவதை கண்டு
உட்கார்ந்திருந்த ஸ்டூலில் இருந்து டீச்சரை கண்ட ஸ்டூண்டாக எழுந்து நின்ற அவளின்
பின்னால் நின்று கண்ணாடியின் அருகில் இருந்த அவனின் சீப்பினை கைநீட்டி எடுத்தான்
அவளின் பின்பிற கழுத்தில் அவனின் மூச்சு காற்று
படுமாறு நெருக்கமாக நூலளவு இடைவெளியில் நின்றபடி தனது கலைந்த தலையை சரிசெய்தவன்
அவளின் தோளளவில் இருந்த கீதவானியின் காதோரம் குனிந்து அம்மா கிளம்புறாங்க மருமகக்கிட்ட
சொல்லனுமாம் என்று கூறிக்கொண்டே அவளின் கொண்டையைதட்டி அவிழவிட்டான்.
அவனின் நெருக்கத்தில் விஷமம் நிறைந்த பார்வையில்
அவளிடம் பேசும்போது புதிதாக குலைந்து ஒலித்த அவனின் குரலில் அவளின் உள்ளம்
தடதடத்தது. அது வெக்கத்தினால் மட்டுமல்ல பயத்தாலும் அதுவும் அவனின் வாய் மொழியால் சற்று
முன் கேட்ட மொபைல் உரையாடலால் உண்டான பயத்தால் என்பதனை அவன் உணர்ந்திருக்கவில்லை.
திரும்பவும் நிலவரசன் மொபைல் ஒலி எழுப்பியதும் அதில் அவனது அம்மாவின் என்னை கண்டவன் வெளியில் அவர்கள் தங்களுக்காக காத்திருப்பதை உணர்ந்து வா என்று கூறியபடி சற்று நகர்ந்தான்.
அவ்வளவு நேரம் அவனின் நெருக்கத்தால் அடக்கி வைத்திருந்த
மூச்சை இலகுவாகியவள் வீட்டில் உள்ளவங்க கிளம்பும் போது தலைவிரி கோலமாக
இருக்கக்கூடாதே என்று நினைத்தவள் விறுவிறுவென பின்னளிட்டு ரப்பர் பேன்ட் போட்டபடி
திரும்பியவள் அவள் தன்னுடன் வருவதற்காக காத்துகொண்டிநத்தை பார்த்து, வீட்டு மனுசளை
வழியனுப்பும் போது தலைவிரி கோலமாக நிக்கபடாது அதுனாலத்தான் என்று அவனை
நிக்கவைத்தற்கு காரணத்தை தயங்கிக் கூறியபடி நடந்தாள். இருவரும் ஜோடியாக சாப்பாடு
நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
வெளியில் சாப்பிட வந்தபோது சரசுவிடம் நிலவரசனின்
கோபத்திற்கு காரணம் அவளின் பேச்சே என்று கூறிக்கொண்டிருந்த நிலவரசனின் குடும்பத்தாரிடம்
சரசு கூறிய வார்த்தை அவர்களுக்கு சரியானதாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டது.
ஆம் சரசு அவளை திரும்பத்திரும்ப கீதவாணியை பேசிய
விதம் நிலவரசுவை கோபப்படுத்திவிட்டது என்று கூறவும் அவள் கூறினாள், ஆமா... நான்
சொன்னேந்தான் என் தம்பி பொண்டாட்டியா வந்திருக்கிறவள எனக்கு பிடிகலதான் அதுக்கு
காரணம் நம்ம கூட பட்டும் படாமல் இருக்கிற என் தம்பிக்கு வருகிற பொண்டாட்டி நம்மை
சார்ந்தவளா இருந்தா அவள் மூலமா அவனை நம்ம கூட ஒண்ட வைக்கலாம் என நினைத்தேன்.
நம்ம நிலவன் முன்னாடியெல்லாம் எந்த சொத்து
வாங்குனாலும் அதை நம்மட்ட காட்டி சந்தோசப்படுவான்.
ஆனா கடந்த ஐந்து ஆறு வருசமா அவன் வாங்கிக்
குமிச்சுருக்கறதப் பத்தி மூச்சு கூட காண்பிக்கல. ஏதோ நாள் கிழமைக்கு
கூடபிறந்தவங்களுக்கு செய்யவேண்டியத பட்டும் படாமளையும் இருந்தாலும் நம்ம அம்மா
காலம் இருக்கிற வரைக்கும்மாவது செய்வான்னு நெனச்சிருந்தேன். ஆனா இப்போ அவனுக்கு
வந்து வாச்சிருப்பவளோ வேற இனத்தச்சார்ந்தவ என்பதுமில்லாம பார்க்க ரதியாட்டமா
இருக்கா இவளெல்லாம் நம்மகிட்ட ஓட்டமாட்டா
என்றாள்.
அவள் கூறியதை கேட்ட காந்திமதியோ யோசனயானாள் என்றால்
நிலவின் தங்கை செம்பருத்தியோ நீ சொல்றது யோசிக்க கூடிய விசயமால்ல இருக்கு சரசு உனக்கென்ன
உன் பையனை அண்ணன் செலவில மெடிகல்காலேஜில் இடம் வாங்கிட்ட. அதுவாங்குன காம்ளக்சில்
உள்ள கடைகளின் வாடகை மாதம் லட்சக்கணக்கில்
வருமானமா உன் கைக்கு வருகிறமாதிரி செஞ்சுகிட்ட. இன்னும் என் பிள்ளைகள் ஸ்கூல்
படிப்பையே தாண்டலையே! நிலவன்அண்ணனை நம்பி காலேஜ் கட்டுற அளவு ஸ்கூல் பீஸ் கட்டி
இண்டர்நேசனல் இருந்து பிள்ளைகள் படிக்கிற இடத்தில் வேறு சேர்த்துட்டேனே... இனி
அவங்க செலவ அண்ணன் பார்த்துக்காம போயிடுவானோ! என்று கவலையோடு கூறினாள்.
ஆரம்பத்தில் நிலவரசன் தான் வாங்கிய நிலபுலங்கள்
பற்றிய விசயத்தை தனது தாய் மற்றும் உடன்பிறந்த அக்கா தங்கையிடம் ஆசையாக பகிர்ந்து
கொண்டுதான் இருந்தான்.
ஆனால் அவர்களிடம் சொல்லி வாங்கிய சொத்துக்கள்
நிலமாக இருந்தால் சரசு தம்பியை அணுகி நீ வாங்கியிருக்கிற நிலத்த ஒத்திக்கு கொடேன்
உன் மாமா அங்கன அவரோட டிராவலுக்கு ஆபீசு போட்டா நிறைய புக்கிங் கிடைக்கும்னு நினைக்கிராறு
என்று கேட்டு வாங்குபவள் திரும்பி அவளுக்கு அதை உரித்தாக மாற்றி கொள்வாள். வீடு
வாங்கியது தெரியவந்தால் தனது மச்சினனுக்கு வாடகைக்கு குடேன் என்று கேட்டு வருபவள்
பலலட்சத்துக்கு ஒத்திக்கு விட்டு பணத்தை எடுத்து கொண்டு அதை திருப்ப பணம்
இல்லையென்று அவனிடமே கேட்டு வந்து நிற்பாள்.
வட்டிக்கு விடுவது சொத்து தகராறை தீர்ப்பது,
அடியாட்களை அரசியல் வாதிகளுக்கு படைபலமாக அனுப்புவது, சினிமா பிரடியூசர்களுக்கு
பணம் கடனாக கொடுப்பது போன்ற தொழிலை செய்யும் நிலவரசனுக்கா தன உடன் பிறந்தவளின் இச்
சாதுர்யம் புரியாமலா போகும்.
புரிந்ததின் பின் அவன் வாங்கிய சொத்துக்களை
பற்றிய விவரம் ஏதும் தனது உடன் பிறப்புகளிடம் பகிர்ந்து மகிழ்வதை
நிறுத்திவிட்டான். ஆனால் தனது உடன்பிறப்புகளின் பிள்ளைகளின் படிபிற்குன்டான
அத்தனையையும் அவன் தான் பொறுப்பெடுத்து செய்கிறான்.
தான் சிறுவயதில் ஆசைப்பட்ட படிப்பு தனது குடும்ப
வறுமை காரணமாக கிடைக்காமல் போனத்தின் வலி உணர்ந்தவன் அவன்.
இவ்வாறாக சரசுவின் வார்த்தையில் குழம்பியிருந்த
நிலவரசனின் வீட்டார் ஜோடியாக வந்த இருவரிடம் விடைபெற ஆயத்தமானவர்களின் முகமோ
புன்னகையை தொலைத்திருந்தது.
ஏனோ தன்னால்தான் நிலவரசன் அவனின்
குடும்பத்தாருடன் இனக்கமில்லாமல் இருக்கும்படி ஆகிவிட்டது என்ற உறுத்தல்
கீதவாணிக்கு ஏற்பட்டது எனவே அவளே வழிய மற்றவர்களிடம் பத்திரமா போய் வாங்க அத்தே
போனதும் அவருக்கு போன் செய்து சொல்லுங்க என்று பேச்சுக்கொடுத்தாள்.
அவள் பேசியதை கவனித்த காந்திமதியின் முகமோ மலர்ந்தது
ராசாத்தி என் புள்ள தானா வளர்ந்து தகப்பன் சாமியா எங்களால் பாரத்தை பதினாறு
வயசிலிருந்து சுமப்பவன்.
என் வீட்டு உலை அவனால் கொதித்தாலும், ஊர் விட்டு
வந்த அவனுக்கு வீட்டு சாப்பாட அம்மாவான என்னால் கொடுத்து வளர்க்கமுடியல தானா
வளர்ந்த சுயம்பு அவன். இதுவரை எப்படியோ... இனி உன் கையால் ஆக்கிபோட்டு அவன தாயா
பார்த்துகிடனும் ராசாத்தி. ஊருல உங்களுக்காக காத்திருக்கும் என்னிடம் என் புள்ளைய
கூட்டிவருவது உன்னோட பொறுப்பு அப்போ நாங்க கிளம்பறோம் யய்யா போயிட்டு வாரோம் என்று
கூறி கிளம்பினாள் தனது மகள்களுடன் காந்திமதி.
நிலவ்ரசனோ அவனின் அம்மா பேசியதற்கு பெரிதாக எந்த
ஒரு ரியாக்சனும் முகத்திலோ வார்த்தைகளிலோ காண்பிக்காமல் ஓர் தலை அசைவை மட்டுமே
விடைகொடுப்பதற்காக கொடுத்தான்.
அவனின் குடும்பம் சென்ற மறுநிமிடம் அங்கிருந்த
அவனின் ஆட்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் இருவரின் முன் வந்து நின்றனர்
என்ன எல்லோரும் ஒன்னா வந்துருக்கீங்க.. என்ன
விஷயம்? என்று கேட்டான்.
அப்பொழுது கதிர் இல்லண்ணே... உங்க
கல்யாணத்துக்கு சர்ப்ரைஸ் கிப்ட் பசங்க
ரெடிபன்னியிருக்காங்க என்று அவன் சொல்லிகொண்டிருக்கும் போதே வழிவிடுங்க... வழிவிடுங்க...
என்று கூறியபடி மணப்பெண் தூக்கிச்செல்லும் பல்லக்கினை சுமந்துகொண்டு அவர்களின் முன்
கொண்டுவந்து வைத்தனர்.
அண்ணே அண்ணி பல்லகில உக்காரச்சொல்லுங்க அண்ணி ஏறி உக்காருங்க என்று கோரசாக குரல்
கொடுத்தனர்.
தடிதடியாக உயரமும் அதற்கேற்ற பருமனுமாக இருந்த
இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களின் தோற்றத்திற்கு சம்மந்தமில்லாத அவர்களின் இடையிளால
அன்பினால் குழந்தைகள் போன்ற அவர்களின் குதூகலத்தை கண்ட கீதவாணி அவர்களுள் ஒருவனாக நிலவனும்
மகிழ்ச்சியில் குதூகலித்ததை கண்டவளின்
உள்ளம் சிலிர்த்தது.
தனது குடும்பத்திடம் கூட ஒட்டாத தன்மையுடன்
இருந்த நிலவன் அவனின் சகாக்களுடன் ஒரே குடும்பமாக மனம் திறந்து சிரிப்பதை கண்டவள்
இப்பொழுது அவனின் கம்பீரமும் அவனின் இருக்கம் கலைந்த சிரிப்பும் அவனை மேலும் அழகாக
காட்டியது அவனின் இம்மற்றொரு பக்கம் அவளை நிலவரசனை ரசிக்க வைத்தது.
தன்னையே பார்த்தபடி நின்றிருந்த கீதவாணியை
திரும்பி பார்த்தவன் அவள் கண்களில் இதுவரை தான் தேடிய காதலை கண்டவன் உள்ளம்
சிறகில்லாமல் பறந்தது. அவனும் அதே காதலுடன் அவளை பார்த்தபடி அவளை அப்படியே கைகளில்
தூக்கி பல்லக்கில் அவளை அமரவைத்தான்.
அவன் கீதவாணியை கையில் தூகியதுமே ஹேய்.... என்று
கோரசாக சத்தமிட்ட அவனின் சகாக்கள் அண்ணனுக்கு ஜே..ஜே..அண்ணிக்கு ஜே..ஜே...என்று
குரல் கொடுத்தனர்.
நிலவரசனின் பார்வையில் கட்டுண்டு நின்ற
மறுநிமிடம் அவள் எதிர்பார்க்காமல் அவளை கையில் நிலவரன் அத்தனை பேர் முன்பு ஏந்தி
பல்லக்கினுள் அமர்த்தியது கூச்சத்தையும் வெட்கத்தையும்
அவளுக்கு உண்டாக்கி அவளின் முகம் சிவந்து நிமிர்ந்து பார்க்கமுடியாமல் தலை
கவிழ்ந்தது. அவளின் பல்லக்கு பவுன்சர்களால் ஆரவாரத்துடன் தூக்கப்பட்டது .
அதை சிரிப்புடன் பார்த்துகொண்டிருந்த நிலவரசனை அவனின்
அருகில் இருந்த பவுன்சர்கள் நான்கு பேர் சேர்ந்து அசால்டாக தூக்கி கொண்டு
பல்லக்குடன் சேர்ந்து நடந்தனர்.
இருவரையும் ஜிம்மின் ரிசப்சன் பகுதியை அழங்காரப்படுத்தி
இருந்த அவனின் சகாக்கள் அங்கிருந்த பெரிய வெட்டிங் கேக்கின் முன் இறக்கிவிட்டனர்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து வாங்கிய மோதிரத்தை
இருவரின் கையிலும் கொடுத்து ஒருவருக்கொருவர் போட்டுவிடும் படி கோரசாக அன்புக் கட்டளையிட்டனர்
நிலவரசன் அவர்களின் இந்த அன்பில் நெகிழ்ந்து போனான்.
அவனிடம் இருப்பவர்கள் சாப்பாட்டிற்கும் மற்ற
சந்தோஷ செலவினங்களுக்கும் நிலவரசன் மாதந்தோறும் லட்சக்கனக்கில் செலவளிக்கிறான்
என்றாலும் மாதம் அவர்களின் வருமானம் அனுபவத்தை பொறுத்து எட்டாயிரம் முதல் அதிகபட்சம்
இருபதாயிரம் உள்தான். லச்சக்கனகில் அவர்களின் அன்பு பரிசு செலவாக அவர்கள் அவனுக்கு
ஆசையாசயாக செய்திருப்பதை கண்டவன் உள்ளம் பாசத்தில் நெகிழ்ந்தது
அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தான்
இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் அந்தநேரம் அழுத்தமாக
தோன்றியது.
அவன் கீதவாணியின் கைபற்றி ஆசையாக அவளின் முகம்
பார்த்தபடி அம்மோதிரத்தை போட்டுவிட்டான் அதேபோல் அவளும் அவனுக்கு பரிசாக கொடுத்த
அம்மோதிரத்தை அவன் விரலை வெட்கத்துடன் பிடித்து போட்டுவிட்டாள்.
அதன் பின் சந்தோஷ ஆரவாரங்களுகிடையே கேக்வெட்டி
அதை இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு பின் மற்றவர்களை எடுத்துக்கொள்ளச் சொல்லி
ஒவ்வொருத்தராக கீதவாணிக்கு அறிமுகப்படுத்தினான் நிலவரசன்.
அக்கூட்டத்தை கண்டு முன்பெல்லாம் பயந்து
ஒதுங்கிய கீதவாணிக்கு இப்பொழுது அவர்களின் அண்ணி என்ற பாச அழைப்பையும் அவளை
தேவதையாக பாவித்து அவளுக்கு கொடுத்த
மரியாதையையும் கண்டவளுக்கு இவர்களைபோய் நான் பார்த்து பயந்திருக்கிறேனே!
பார்வைக்கு கடினமாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் மென்மையான பக்கமும் உண்டு.
அதில் அன்பு பாசம் உண்டு என்று தெரிந்து அவர்களை தனது உறவாக இயல்பாக அவளால் ஏற்றுக்
கொள்ள முடிந்ததை நினைத்து அச்சூழலிலும் அவளுக்குள் ஆச்சர்யம் எழுந்தது.
அப்பொழுது கதிர் அண்ணே... என்று அவனை கூப்பிட்டு
கீதவாணியை விட்டு சற்று நகர்ந்துவந்த நிலவரசனிடம் தனது மொபைலில் இருந்த அந்த
வீடியோ பதிவை காண்பித்தான் நிலவரசன்.
அதில் அந்த ரேஸ்மண் போலீஸ் ஸ்டேசனை விட்டு
வெளிவருவதும் பின்பு அங்கு நின்றுகொண்டிருந்த காரில் ஏறுவதும் தெரிந்தது அக்காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த
ஜெனார்த்தனின் முகம் டோரின் கண்ணாடிக் கதவு ஏறிகொண்டிருக்க அதில் சிறிது சிறிதாக
மறைந்துகொண்டிருந்த ஜெனார்த்தனின் முகம் தெளிவாக அவனுக்கு தெரிந்தது.
ரெட்டியின் மகன் ரேஷ்மன் திடீர் என்று
அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்ததின் மர்மமும் அதன் பின் ஜெனார்த்தன்
இருப்பதுவும் யூகத்தில் இருந்தது. இந்த வீடியோ பதிவில் உறுதியாவதை உணர்ந்த நிலவரசன்
ரெட்டியை பற்றியும் வசூலிக்கும் பணம்
பற்றியோ எந்த கவலையுமில்லை என்றாலும் கீதவானியின் தந்தை கணக்கும் அவரின் தற்போதைய
மனநிலையை ஜெனார்த்தன் என்னென்னவகையில் அவனுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான்
என்ற யோசனை அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
கணக்கு வெங்கி சாதாரண கணக்குகாக மட்டும்
இருந்தால் அவன் யோசிக்க வேண்டியிருக்காது. ஆனால் தன் பெரியப்பாவாகிய பயில்வானின்
கணக்கினை பல ஆண்டுகளாக பார்த்துகொண்டிருந்த வெங்கிக்கு அவர்களின் பினான்ஸ் மற்றும்
சொத்துக்கள் பற்றிய டீடெய்ல்ஸ் அனைத்தும் அதன் சாதக பாதகங்கள் அனைத்தும் தெரியும்
என்ற உண்மை அவனை யோசனை செய்யவைத்தது. அவர் தன் மனைவியின் தந்தையாக இல்லாமல் வேறு
யாரோவாக இருந்தால் தூக்கி வெளிபடையாக மிரட்டுவதில் எந்த தயக்கங்களும் இருக்காது.
ஆனால் இப்பொழுது... என்று நினைத்தவன்
கீதவாணியை கண்டு பின் பெருமூச்செடுத்து தன்னை சமாளித்துகொண்டவன் உள்ளம்
குசியாக இருப்பதுபோல் போர்வையை போர்த்திகொன்டாலும் மனம் ஆயிரம் கணக்கினை போட்டுகொண்டிருந்தது.
அதன் பின் அவனின் சகாக்கள் அவனின் காதில் மது
பார்ட்டிக்கான ரெக்வஸ்ட் வைக்க சரி...சரி...என்று சொன்னவன் கதிரிடம் அரைமணிநேரத்துகுள்
பார்டிக்கு தேவையானது அங்குவர ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு கீதவாணியுடன்
விடைபெற்று தனது இருப்பிடத்திற்கு வரும்போதே மணியை இரண்டுபேருக்கும் சாப்பாடு
ரூமுக்கு எடுத்துட்டுவா என்று கட்டளையிட்டு சென்றான்.
Episode 15 -----தொடரும்---- Episode 17

No comments:
Post a Comment