பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா...!(தீபாஸ்-ன்)
அழுதுகொண்டிருந்த கீதவாணியின் காதுகளில்
நிலவரசனின் வார்த்தைகள் விழுந்ததும் அவளின் அழுகை நின்றுவிட்டது. என் அம்மா
அப்பாவை நான் எதுவும் சொல்லலாம் அதற்காக நிலவரசன் அவர்களை பேசலாமா என்ற மனதின் கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
ஆனால் அவளின் பெற்றோர்களும் நிலவரசனின்
வார்த்தையில் மேலும் அங்கு நிற்க இயலாமல் வெளியில் செல்வதை காணமட்டுமே அவளால்
முடிந்தது. தானே அவர்கள் தன்னை விட்டு தள்ளிநிற்கும்படி வார்த்தைகள் விட்டுவிட்டேன்.
இப்போ என்ன சொல்லி அவர்களை வெளியில் செல்லாமல் தடுத்துநிறுத்துவது என்று
கேள்வியுடன் வாசலை விட்டு அவர்கள் போவதை பார்த்துகொண்டு விக்கித்து அமர்ந்துவிட்டாள்.
நிலவரசனுக்கோ நிமிடத்தில் உலகையே சுற்றிவிட்டு
வரும் அளவு மனதில் உற்சாகம் பிறந்தது ஆனால் அதை வெளியில் காண்பிக்காமல் மறைக்க
அத்தனை பாடுபட்டு போனான்.
தன் பின் அவள் வருவாள் என்று அவன் நினைத்து கூட
பார்க்கவில்லை. இன்னும் அவள் தன்னை விரும்பி ஒன்றும் தன்னிடம் வரவில்லை. அவளின்
பெற்றோரின் மேலிருந்த கோபத்தில் அவர்களிடம் போகாமல் தன்னிடம் தங்கிவிட்டாள் என்ற
நிதர்சனம் புரிந்தாலும் இப்போதிருக்கும் அவனது மனநிலை மகிழ்ச்சியின் உச்சமே.
நிலவரசன் அதன் பின், நிமிடம் ஒருமுறை
கீதவானியின் முகத்தை பார்ப்பதும் அவ்வாறு தான் அவளை பார்ப்பதை மற்றவர்கள்
பார்ப்பதால் உடனே பாராததுபோல் இருந்தான்.
நிலவரசனின் அம்மா காந்திமதிக்கு கீதவாணியை
பார்த்ததும் ஆத்தி எம்புட்டு அழகா இருக்கா என் மருமக என்ற பேச்சில் அனைவரின்
இறுக்கமும் தளர்ந்து சூழலை இயல்பாக இருக்க தூண்டுகோலாக ஆனது.
எம்மாடி... உன்னை பார்த்ததுமே சிங்கம் போல் இருக்கும் என் மவனுக்கு
சைவபட்ச்சி முயல்போன்ற நீ எப்படி ஆக்கிபோட்டு குடும்பம் கொண்டுபோக முடியும் என்ற
யோசனையாத்தான் வந்தது. ஆனால் உன்ன பெத்தவங்கட்ட என் மகனை விட்டுக்கொடுக்காம உரிமையா பேசி என் பிள்ளைக்கிட்ட
கேள்வி கேட்ட பாரு அங்கன உறுதிபன்னிடேன் நீதான் என் மருமவனு..
ஆத்தி எம் புள்ள முன்னாடி நானே ஓங்கி
பேசப்பயபுடுவேன். பார்க்க முயலாட்டம் இருந்துகிட்டு என்னமா என் மவன விரட்டுற என்று கூறினாள்.
அவர் அவ்வாறு கூறவும் கீதவாணி அச்சோ நான் மிரட்டல்லாம்
செய்யல என்று பதறியபடி அவரிடம் கீதவாணி கூறினாள்.
அப்பொழுது, எம்மா... நீவேற அந்த புள்ளையே மனசு
சரியில்லாமல் ஏதோ பேசிடுச்சு நீவேற ஏம்மா அவள டென்சனாக்குற என்று கூறினான்.
அவன் அவ்வாறு கூறியதும் பயில்வான் மயில்சாமி
பெறும் சிரிப்புடன் நிலவா அதுக்குள்ள உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் செய்ய
ஆரம்பிச்சுட்ட ம்...கல்யாணம் பண்ண தேவையான தகுதி இப்போவே வந்துருச்சு உனக்கு என்று
கூறினார்.
அவர் அவ்வாறு கூறியதும் ஒருசெகன்ட் மீண்டும்
கீதவானியின் முகத்தில் எதையோ தேடியவன் அது கிடைக்காத ஏமாற்றத்தில் அப்படியெல்லாம்
இல்ல பெரியப்பா நீங்க இருக்கும் போதே உங்களை கேட்காமல் நாங்க என்று கீதவாணியை
கண்காளால் கண்பித்து இருவரும் கல்யாண முடிவை எடுக்க வேண்டியது ஆகிவிட்டது. எங்களை
மன்னிச்சிடுங்க என்றான் நிலவரசு.
அவன் அவ்வாறு கூறியதும் அவனது பெரியப்பாவின்
மனைவி காமாச்சி என்ன வார்த்தை சொல்லிட்ட நிலவு. நடந்ததுல உன்னோட தவறு எதுவும்
இல்லை நீங்க ரெண்டுபேரும் சேரனும் என்பது ஆண்டவன் கணக்கு என்று கூறியவள்,
கீதவாணியிடம் போய் அவளின் கைகளை தனது கைகளுக்குள் அடக்கியபடி,
கீதா... நான் பார்த்து வளர்ந்த பிள்ளை எங்க
நிலவு. அவனை பார்க்க வேண்டுமானால் முரடாக இருக்கலாம் ஆனால் பாசம் வைச்சுட்டா
அவங்களுக்காக தன் உயிரையும் கொடுப்பான். நீ அவனை புரிஞ்சு நடந்துக்கோ உன்னை உள்ளங்கையில்
வச்சு தங்குவான். அவன் உனக்கு புருசனா கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் என்றாள்.
கலங்கிய தெளிவில்லாமல் இருந்த அவளின் கண்களை
கண்டவள் நீ எதையும் நினைத்து பயப்படாதே..... எல்லாம் சரியாயிடும். மத்ததெல்லாம்
மறந்து நடக்கபோகிற கல்யாணத்தை மனசார
ஏத்துக்க என்றார்.
அதன் பின் கல்யாணத்துக்கு வேண்டிய மற்ற
ஏற்பாடுகளை செய்ய நிலவரசன் போனிலேயே தனது ஆட்களிடம் ஏற்பாடு செய்ய ஹாஸ்பிடலில்
இருந்தே உத்தரவுகளை மொபைலிலும் அங்கு அவனை தேடி வருபவர்களிடமும் செய்யச் சொல்லி
உத்தரவுகளை பிறப்பித்தான்.
தனது அம்மாவையும் பெரியப்பா ,மயில்சமியையும்
அவர் மனைவியையும் வீட்டிற்கு அனுப்பிவைத்து கல்யானத்திற்குன்டான வேலைகளை
பார்க்கும்படியும் மிகவும் சிம்பிளாக பக்கத்தில் இருந்த முருகன் கோவிலிலேயே
நெருங்கிய உறவினர்களை வைத்து மட்டும் திருமணம் செய்ய ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும்
என்றும் பின்பு கொஞ்சம் நாள் கழித்து ரிசப்சன் அனைவர்க்கும் தெரியுமாறு கிராண்டாக
வைத்துகொள்ளலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
ஹாஸ்பிடலில் கீதவாணிக்கு அனைத்து டெஸ்டுகளும்
செய்யப்பட்டு அவளுக்கு வந்தது சாதாரண பசி மற்றும் அதிர்ச்சியால் வந்த மயக்கமே
என்று உறுதிபடுத்தப்பட்டது.
அதன் பின் பயில்வான் வீட்டில் கீதவாணி
நிலவரனுடன் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி காரில் கிளம்பிவிட்டதாக தகவல் வரவும் நிலவரசனின் அம்மா காந்திமதி
தன் மகள்களை அடியே என் மருமகளுக்கு ஆரத்தி எடுக்கணும், செம்பருத்தி.... ஆரத்தி தட்டு ரெடி பண்ணு. பெரியவளே... அடியே....
சரசு உன் தம்பி முன்னாடி இப்படி மூஞ்சியை தூக்கிட்டு நிக்காத அவன்தான் உன்
கொழுந்தியாள கட்டமாட்டேனு எப்போவோ சொல்லிட்டான்ல இன்னும் அதையே புடுச்சு தொங்கிட்டு நிற்காத போய்
உன் தங்கச்சி செம்பருத்தி கூட ஆரத்தி சுத்த ரெடியாகு என்றாள்.
காரில் நிலவரனுடன் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜாகி
பயனப்பட்டுகொண்டிருந்த கீதவாணிகோ தன்னுடைய பெற்றோர்களின் செயலால் மனம் வெதும்பி
அவர்களை தள்ளிநிற்கும்படி சொல்லிவிட்டாலும் தன்னுடைய கல்யாணம் அவர்களின்
ஆசிர்வாதம் இல்லாமல் தன் வீட்டின் சார்பில் ஒருத்தரும் இன்றி நடக்க இருப்பதை
நினைத்து மனம் கனத்தது. அதனால் அவளின் கண்கள் கண்ணீரை சொரிந்தது. அவளது துக்கம்
தீர நிலவரசன் ஆறுதலான இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு அவளுள் எழுந்தது.
அவன் தான் அழுவதை பொருட்படுத்தாமல் கடுகடு
முகத்தை வைத்துகொண்டு இருப்பதை கண்டவளுக்கு தான் தனித்து ஆதரற்ற நிலையில்
இருப்பதாக பட்டது. தன் மேல் நிலவரசனுக்கு விருப்பம் இருப்பது போல தான் அரை மயக்கத்தில் இருந்த போது நிலவரசன் உருகி
தவித்தது எல்லாம் தன்னுடைய கற்பனையோ உண்மையிலேயே அவரும் சூழ்நிலை காரணமாக தன்னை கல்யாணம்
செய்ய முடிவெடுத்துள்ளாரோ என்று நினைத்து அவளின் துக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டாள்.
இந்நிலையில் வீட்டிற்கு அருகில் கார்
வந்துகொண்டிருந்தபோது இந்தா தண்ணீர் குடித்துவிட்டு அழுகையை நிப்பாட்டு என்னை
கல்யாணம் செய்வது உனக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தால் ஹாஸ்பிடலில் உங்க அம்மா அப்பா
வந்திருக்கும்போது அவர்களுடன் போயிருக்க வேண்டியதுதானே. ஒழுங்கா அழுத சுவடு
தெரியாமல் முகத்தை வைத்துக்கோ. என் வீட்டு ஆட்கள் முன்பு இப்படி இருந்தா நான் பொல்லதவன்
ஆகிடுவேன் என்று கர்ஜித்தான்.
அவள் எதுவோ கூற முயன்று ஆனால் கூறபயந்து பின்
அவன் சொன்னதுபோல் தண்ணீரை அருந்தி முகத்தை அழுத்த தான் உடுத்தி இருந்த சுடிதார்
சாலிலேயே துடைத்து முடித்தாள். கார்
பயில்வான் வீட்டு வாசலை அடைந்தது.மேற்கொண்டு எதுவும் பேச இயலாமல் காரில் இருந்து
நிலவரசனுடன் இறங்கி நடந்தாள் கீதவாணி.
அவளை ஆரத்தி சுத்தி கூப்பிட அனைவரும்
காத்திருந்தனர். நிலவரசனின் தங்கை செம்பருத்தி ஆரத்தி தட்டை கையில் ஏந்தியிருந்தாள்.
அப்பொழுது காந்திமதி சின்னவளே உன் அக்கா எங்கடீ.
அவளும் நீயும் சேர்ந்து உங்க மதினிக்கு ஆரத்தி எடுக்க வேண்டியதுதானே என்றாள்.
அப்பொழுது அவளுடன் ஜோடியாக கூட வாசலுக்கு வந்த
தனது அண்ணனைப் பார்த்து செம்பருத்தி கூறினாள், அண்ணே நாளைக்கு மதினி கழுத்தில்
தாலி கட்டியதும் ஜோடியா நிக்கவச்சு ஆரத்தி எடுக்குறேன். இப்போ ஆரத்தி மதினிக்கு
மட்டும்தான் என்று கூறினாள்.
தனது தங்கை பேச்சில் காரில் வரும்போது கண்கள்
பொங்க பொங்க கண்ணீருடன் அமர்ந்து இருந்த கீதவானியின் வருத்தத்தை தன்னுடனான அவளின்
கல்யாணம்தான் காரணம் என்ற தவறுதலாக புரித்துகொண்டு கோபத்தில் முகத்தை இறுக்கமாக
வைத்திருந்த நிலவரசனின் இறுக்கம் தளர்ந்தது.
அப்பொழுது செம்பருத்தியிடன் கூறிய தனது அன்னையின்
குரல் கேட்டு உள்ளிருந்து வந்து இணைந்து கொண்ட சரசு கேலியாக சொல்வதுபோல் என் தம்பிட்ட
உன் செவத்த தோலை காட்டி மயக்கி முடிஞ்சுகிட்ட கெட்டிக்காரிதான் நீ என்று கூறியபடி ஆரத்தி
எடுத்தாள்.
தன் அக்கா அவ்வாறு கூறவும் செம்பருத்தி அது
ஒண்ணுமில்ல மதினி எங்க குடும்பத்திலேயே
அவள்தான் சிவப்புன்ற பெருமையில் சுத்திகிட்டு இருந்தாளா இப்போ அந்த இடத்த நீங்க
பிடிச்சுகிட்டீங்க என்ற பொறாமையில் அப்படி பேசிட்டு போறா என்று கீதவாணியிடம் சொன்னாள்
செம்பருத்தி.
சற்று
தள்ளி நின்று அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துகொண்டிருந்த நிலவரசன் அவர்கள்
ஊர் கல்யாணத்தில் உறவுப்பெண்கள் கேலிகிண்டல்களில் ஈடுபடுவதைபோல, தனது
உடன்பிறப்புகளும் கீதவாணியிடம் தொடர்கின்றனர் என நினைத்தவன் மற்ற வேலைகளை செய்ய
அவளை அங்கு விட்டதும் சென்றுவிட திரும்பியவனை மயில்சாமியின், நிலவா.... என்ற
அழைப்பு தடுத்து நிறுத்தியது
திரும்பி அவனது பெரியப்பாவை பார்த்த அவனை என் ரூமிற்கு
ஒரு நிமிடம் வந்துட்டுபோ நிலவா என்றவர் தனது சக்கர நாற்காலியை தானே இயக்கியபடி
தனது அறைக்குச் சென்றார்.
அவரின் பின்னால் வந்த நிலவரசனிடம் கூறினார் அந்த
புள்ள கோபத்துல அவங்க அப்பா அம்மாவை எடுத்தெறிந்து பேசியிருக்கலாம் ஆனால் நாளைக்கு
கல்யாணத்துக்கு அம்மா அப்பா இல்லாமல் நடத்துவதில் கீதவாணிக்கு இஸ்டமிருக்காது.
அந்த புள்ளைகாக நாளைக்கு கல்யாணத்துக்கு அவங்களிடம் வரச்சொல்லி முறையா போய்
அழைக்கணும் நிலவா என்றார்.
அவரின் வார்த்தைகள் நிலவரனுக்கு உவப்பானதாக
இல்லை. எனவே அவன் கூறினான் என்னாலெல்லாம் அந்த வீட்டுக்கு போய் அவங்கள கூப்பிட
முடியாது என்னை மன்னிச்சுடுங்க பெரியப்பா. அதேபோல வேற யாரும் போய் அழைப்பதை நான்
தடுக்கப்போவதும் இல்லை. அப்போ... நான் கிளம்பறேன் எனக்கு வேலை நிறைய இருக்கு
என்றபடி திரும்பி விறுவிறுவென்று போனவன் ஏதோ
நினைத்தவனாக அங்கிருந்த ஒரு அறையில் தங்கியிருந்த கீதவானியின் ரூமிற்குள்
நுழைந்தான்.
அங்கு அறைக்குள் அவளை விட்டதும் மற்றவர்கள்
அவளின் ஓய்ந்துபோன தோற்றத்தை கண்டவர்கள் ஹாஸ்பிடலில் இருந்து இப்பத்தான்
வந்துருக்க நல்லா குளிச்சு கொஞ்சம் அவள் ஓய்வெடுக்கட்டும் என்ற காந்திமதியின்
வார்த்தையில் மற்றவர்கள் அவ்வறையை விட்டு அப்போதுதான் வெளியேறியிருந்தனர்.
கீதவாணிக்கும் ஹாஸ்பிடலில் இருந்து வந்ததால்
உண்டான நெடியும் இப்பொழுது உள்ள மனச்சோர்வும் குளித்துமுடித்து தனிமையில் கொஞ்சம்
ஓய்வெடுத்தால்தான் மீள முடியும் என்பதை உணர்ந்து குளிக்கச்செல்லும் முன் ரூம் கதவை
அடைக்க சாத்தி லாக்கிட கைவைத்துபோது அதிரடியாக கதவை திறந்தான் நிலவரசு.
நல்லவேளை சற்று சைடில் நின்றபடி கதவை அடைக்க
முயன்றதால் அவளின் மேல் கதவு இடிக்கவில்லை.
அவனின் திடீர் வருகையில் அதிர்ந்திருந்த அவளை
கண்டுகொள்ளாமல் கதவை உள்புறம் தாளிட்டான்.
அவனின் செயலைகண்டு பதட்டத்துடன் இப்போ எதுக்கு
கதவட....என்று மேலும் அவள் கூறவந்ததை கூறமுடியதவாறு அவளின் வாயில் தனது ஒரு கரம் கொண்டு மூடியவன்
மற்றொரு கரத்தின் ஒற்றை விரலை தன் உதடுகளில் வைத்து ஸ்...சத்தம் போடாத. என்று
கூறினான்.
அவனின் செயலில் நடுக்கத்துடன் கண்களை விரித்து
பார்த்த கீதவாணியிடம். நீ ஹாஸ்பிடலில்
வைத்து என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா எனக்கு புருஷன் இவர்தான் என்று என்னை நோக்கி
ஒற்றைவிரலால் சுட்டிக்காட்டி சொல்லிவிட்டு உங்க பொண்ணு செத்துட்டாப்பா. இப்போ
இருக்கிறது உங்க மக கிடையாது. என் மேல இனி உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது
போயிடுங்க... இங்கிருந்து போயிடுங்க.... அப்படின்னு சொன்ன தான..
இப்போ சொல்றேன் கேட்டுக்க எப்ப அந்த வார்த்தையை
சொன்னேயோ உன்னை முழுசா என் பொண்டாட்டியா எனக்கு மட்டும் சொந்தமானவளா அந்த
நிமிசத்தில் இருந்து நான் முடிவு செய்துட்டேன்.
நீ அப்படி சொல்லாம இருந்திருந்தேனா நான் என் பெரியப்பா சொல்றதை கேட்டு உங்க அம்மா
அப்பா அவங்க பொண்ணு நீ என்று யோசிச்சு நான் கொஞ்சம் உன்னை விட்டுகொடுக்க யோசிச்சு
பார்த்திருப்பேன்.
உன் வாயாலே எப்போ நாந்தான் உன் புருசன்னு நீ
சொன்னீயோ! இனி யார் சொல்றதையும் நான் கேட்கபோவதாக இல்லை அது என் பெரியப்பா
என்றாலும் சரிதான். இப்போ நீ என் பொண்டாட்டியா முழுசா எனக்கே சொந்தமாயிட்ட
நாளைக்கு நடக்கபோற கல்யாணம் ஊருக்காக தான். இல்ல எங்க அம்மாவும் அப்பாவும் வந்து ஆசீர்வாதம்
பண்ணாத்தான் நான் மணவறைக்கு வருவேன் அப்படி இப்படின்னு ஏதாவது சீன கிளப்புன
தூக்கிட்டு யாருமில்லாத இடத்துக்கு உன்ன கொண்டுபோய் வச்சு என் பொண்டாட்டியா உன்
கூட குடும்பம் நடத்த ஆரம்பிச்சுடுவேன். ஒழுங்கா கல்யானப்பொண்ணா கல்யாணத்துக்கு
ரெடிஆகுற வழியப்பாரு என்று கூறிவிட்டு அவள் மிரண்டு சிலையாக நிற்பதை
பொருட்படுத்தாமல் புயல்போல் எப்படி உள்ளே வந்தானோ அதே புயல்போல் வெளியேறினான்
நிலவரசன்.
Episode 12 -----தொடரும்---- Episode 14

No comments:
Post a Comment