நீல நிலா!(ஆதன்-னின்)
அத்தியாயம்- 01
பூமராங்!
போலீஸ் ஸ்டேசன் வெளியே காரில்
ஓய்வெடுப்பதற்காக வந்த வானதி குணசேகரனிடம் ஸ்டேசனிற்குள் நடப்பதை கவனிக்கச்
சொல்லிவிட்டு வந்தாள்!
நேகாவை உடன் கூட்டிக்கொண்டு ஏசியை
தட்டிவிட்டு காருக்குள் அமர்ந்தாள் வானதி!
" அக்கா நடக்கற எதுவுமே புரியல!
என்னங்கா நடக்குது" - நேகா
" நாம இங்க பேக்டரி
கட்டக்கூடாதாம் நேகா"
" ஓ ஏங்க்கா வெற்றியும் அறிவும் தடுக்கறாங்க" என்று
விசயம் தெரிந்தும் வேணுமென்றே கேட்டாள் நேகா…..
" பொலுசன் அது இதுனு ஹம்பக்கா
பேசிட்டு இருக்கானுங்க மெண்டல்ஸ்"
" அப்படினா பேக்டரி கட்ட
வெற்றியும் அறிவும் நமக்கிட்ட பணம் கேட்டதா ஏன்கா குணா சொல்றாரு"
" அது அவங்களுக்குள்ள இருக்க பகை, நமக்கென்ன அவங்கள பத்தி கவலை நேகா,
ஏன் உனக்கு கஷ்டமா இருக்கா?!"னு வானதி அழுத்தி கேட்க,
" எனக்கென்னக்கா கஷ்டம் நாம வந்த
நல்லபடியா முடிஞ்சா போதும்கா"னு டக்கென்று சுதாரித்தாள் நேகா…
ஸ்டேசனுக்கு வெளிய கதிரேசனும்
சுதாகரும் தீவிரமாய் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்……
சுமதிக்கு நடந்த எதையும்
சொல்லக்கூடாதென்று கதிரேசன் ஆரம்பத்திலயே சொல்லிவிட்டார்………
……………….
ஸ்டேசனிற்குள் ஹாலில் அமர்ந்திருந்த
இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை கூப்பிட்டான் அறிவு………
" ஏங்க ஒரு சின்ன உதவிங்க"னு
அறிவு சத்தமா கேட்க, குணசேகரன் திரும்பி பார்க்க, வெற்றி ரொம்ப ரொம்ப இயல்பா நீள
பெஞ்சில் அமர்ந்திருந்தான்……
" சொல்லுப்பா"
" காலையில சாப்டதுங்க, மதியம் சாப்பாட்டுல கை வைக்கற நேரம்
இங்க கூட்டியாந்துட்டாங்க,
பசிக்குதுங்க சாப்பாடு வேணும்"னு
அறிவு சொல்ல,
முத்துக்குமார் ரெண்டுபேருக்கும்
சாப்பாடு வாங்கிவர கான்ஸ்டபிளை கூப்பிட்டார்….. இவனுங்க எப்படி இயல்பா இருக்கானுங்கறத விட ஏன் இயல்பா இருக்கானுங்க
என்ன காரணம் அப்படிங்கற எண்ணம்தான் குணசேகரனை குழப்ப ஆரம்பித்தது…….
" உள்ள போனா வெளியவர வரை நல்ல
சாப்பாட்ட பாக்க முடியாதுங்க, நானே பணம் தரேன் நல்ல கறிச்சோற வாங்கியாரச் சொல்லுங்க"னு அறிவு
ஐநூறு ரூவா நோட்ட வெற்றி பாக்கெட்ல இருந்து எடுத்துக் குடுக்க, வெற்றி சத்தமாவே பேசினான்……
" நாம எதுக்குடா மச்சான் உள்ள போவ
போறம், இதா குணசேகரன் போவான், மாமன் போவாப்ல, இல்லனா இவங்க ஓனர் அந்த பொண்ணு போவும், நீ நல்லா சாப்டு மச்சான், நைட்டு சோறு உனக்கு மரகதம்மா
கையிலதான்"னு வெற்றி சிரிச்ச மாதிரி பேச, குணசேகரன் விடு விடுனு ஸ்டேசனுக்கு வெளிய வானதியிடம் ஓடினான்…. வேகமா வர குணசேகரனை பார்த்த கதிரேசனுக்கு குழப்பமாகியது…….
கார் கண்ணாடியை குணசேகரன் தட்ட, கதவைத் திறந்தாள் வானதி!
" ஏங்க உள்ள அந்த அறிவு பய ரொம்ப
ஜாலியா இன்ஸ்பெக்டர்கிட்ட கறிச்சோறு கேட்கறான், இந்த வெற்றி நைட் சோறு வூட்லதாங்கறான்,
ஒன்னுமே புரியலங்க ஏதோ தப்பா
நடக்குது"னு வானதிக்கிட்ட புலம்ப ஆரம்பிச்சான் குணசேகரன்!
" இங்க பாரு குணா நீயா அவங்க மேல
கேஸ் வேணாம்னு சொல்லாம யாராலும் அவங்கள இதிலிருந்து காப்பாத்தவே முடியாது டோன்ட்
வொர்ரி"
" ஏங்க அவனுங்க என்னைய ரெண்டு
மூனு அடி அடிச்சதும் குறுக்க வந்து அடிக்கறத தடுக்கறனு சொன்னிங்க ஆனா அறிவு பய
முழுசா முடிக்கற வரை நீங்க யாருமே வரல! ஏங்க? ரொம்ப வருத்தங்க"
" இல்ல குணா நாங்க தோப்புல
கிணத்துக்கு அந்த பக்கம் இருந்ததால அவங்க வந்ததை கவனிக்கல, குடிசைக்குள்ள இருந்த சுதாகர் வந்து
சொல்லித்தான் எனக்கு தெரியும், ஸாரி குணா"னு வானதி வருத்தம் தொணிக்கச் சொன்னாள்……. குணாவுக்கு எந்தளவுக்கு அடி விழுதோ அதை
வைச்சிதான் கேஸ பெருசாக்க முடியும் இதனாலதான் வானதி தடுக்க வரலை. இந்த முட்டாள் குணாவுக்கும், குடிசைக்குள்ள இருந்த சுதாகர்
உங்களுக்கு போன் பண்ணிச் சொல்லலையானு திருப்பி கேட்க தோணல!
இந்த பேச்சுவார்த்தை மேற்கொண்டு
நடந்துக் கொண்டிருக்கப்ப,
கான்ஸ்டபிள் ஒருவர் பெரிய சாப்பாடு
பொட்டலங்களோடு உள்ள போறத பார்த்த வானதி, காரிலிருந்து ஸ்டேசனிற்குள் போக இறங்கினாள்……
பிரியாணி பொட்டலத்தை பிரித்த அறிவு…..
" அட மட்டன் பிரியாணிங்களா ரொம்ப
நன்றிங்க"னு கான்ஸ்டபிளுக்கு சிரிச்சப்படியே சொல்ல, வெற்றி இன்னொரு பொட்டலத்த எடுக்க வானதி
உள்ள வந்தாள்……
" அட வானதி வா வா எங்களுக்காக
பாவம் பசியோட இங்கையே இருக்கற போல, ஆளுக்கு பாதி சாப்டலாம் வா உட்காரு"னு ஏக எகத்தாளத்துக்கு அறிவு
பேச ஆரம்பிச்சான். ஏன்னா நடந்த எல்லாத்தையும் வெற்றி சொல்லியிருந்தான்…… வானதிக்கு உச்ச கோபம் வர இதைவிட
சாதாரணமா பேசினாலே போதும்.. இப்ப சொல்லவே வேண்டாம்….
" நேகாம்மா சாப்டிங்களா"னு
இந்த முறை வெற்றி நேகாவை மரியாதையா, பாசமா கேட்க நேகாவுக்கு ஆச்சரியம், ஆனா இந்த நிஜமான மரியாதை வானதியை இன்னும் இன்னும் கடுப்பாக்கியது….
" இல்லணா சாப்பிடனும் நீங்க சாப்பிடுங்க" னு நேகா அண்ணா போட்டு
அப்பாவியா சொல்ல வானதிக்கு இன்னும் ஏறியது……
வானதிக்கு எரிச்சல் ஏத்தும் இந்த படலம்
நடந்துக்கொண்டிருக்கப்பவே அடுத்த இடியை வேலுச்சாமி கொண்டுவந்து இறக்கினார்.
ஊருக்குள்ள இருந்து ஆறேழு குடும்பங்கள்
கும்பலா வேலுச்சாமியோடு ஸ்டேசனிற்குள் நுழைந்தது! இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு
புரிந்துவிட்டது வெற்றி வித்தியாசமா ஒரு விளையாட்ட ஆரம்பிச்சுட்டானு!
" என்ன கூட்டமா வந்துருக்கிங்க
என்ன விசயம்?!" னு ஊர்க்காரர்களிடம் முத்துக்குமார்
கேட்க, ஊருக்குள்ள இருக்க ஒரு குடும்பமான
நாச்சிமுத்து காரணத்த சொல்ல ஆரம்பிச்சார்…..
" ஐயா பஞ்சாயத்து தலைவர் கதிரேகன்
மகன் குணசேகரன் பண்ற அட்டூழியத்தால ஊருக்குள்ள பொட்டப் புள்ளைங்க அங்க இங்கனு
எங்கையும் போக முடியலங்க,
அவசரத்துக்கு கூட காட்டுப்பக்கம் கூட
ஒதுங்க முடியலங்கயா"னு நாச்சிமுத்து நிறுத்த, கூட வந்த குடும்பங்களும் ஆமாங்கயானு கோரசா சொன்னார்கள்……
" இன்ஸ்பெக்டர் ஐயா இதெல்லாம்
காசக்குடுத்து இந்த வெற்றி பயலும் அவன் அப்பனும் நடத்தற நாடகம்யா"னு கதிரேசன்
கத்த ஆரம்பிச்சான்…..
" இங்க பாருங்க பொய்ச்சொல்லி
ஏமாத்தற ஈனத்தனமான ஆளுங்க நாங்க கிடையாது, நாங்க புகார் குடுக்கறோம் நீங்க நேரடியா வந்து ஊருக்குள்ள
விசாரிச்சுக்கோங்க"னு வேலுச்சாமி அசால்ட்டா சொன்னார்…..
" இவங்களுக்கு தேவைப்பட்ட
குடும்பத்த கை காட்டுவாங்க,
நீங்க முதல்ல இவனுங்க மேல கேஸ போடுங்க
இன்ஸ்பெக்டர்"னு கதிரேசன் குதிக்க ஆரம்பிச்சான்…….
" பொறுங்க கதிரேசன்
அவசரப்படாதிங்க உங்களுக்கு தெரியாதது இல்ல, வயசு பொண்ணுங்களே புகார் குடுக்க ஸ்டேசன் வந்துருக்காங்க, கொலை முயற்சி வழக்க விட இந்த புகார்
பெருசு, நாட்டுக்குள்ள என்ன நடக்குதுனு உங்களுக்கே
தெரியும். நான் இத தீர விசாரிக்கலனா என்வேலை மட்டுமில்ல, நானே உள்ள போயிருவேன்"னு
மரியாதையாவும், அதே சமயம் உள்குத்தா மிரட்டியும்
முத்துக்குமார் சொன்னார்……
" ஐயா வயசு புள்ளைங்கனு இல்ல, கல்யாணமாயி புள்ள பெத்த பொம்பளைங்க கூட
இவங்க தோப்பு வழியாவோ, ஆத்தங்கரை பக்கம் பொழுது சாஞ்சே போக
முடியறதில்லைங்கயா. எந்நேரமும் இவரு பையன்கூட ஊர்பேரு தெரியாதவனுங்க
சுத்திக்கிட்டு இருக்காங்கயா, சாராயம்னு இல்லாம எங்க ஊருக்கு சுத்தமா தெரியாத கஞ்சாவலாம்
குடிக்கறாங்கயா. ஊருக்குள்ள வேலைக்கு நெறய பேரு போய்ட்டாங்க அதான் நாங்க ஆறேழு
குடும்பங்க மட்டும் வந்திருக்கோம்"னு நாச்சிமுத்து அழாத குறையா சொல்ல, முத்துக்குமார் வந்தவங்க எல்லாரையும்
வெளிய நிற்க சொன்னார்!
" அப்பா பேப்பர், டிவிகாரங்களுக்கு
சொல்லிட்டிங்களா"னு வெற்றி சீரியசா கேட்க,
" இங்க இருந்து போறப்பயே போன்
பண்ணிட்டன்யா இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துருவாங்கயா"னு வேலுச்சாமி
சொல்ல, கதிரேசனுக்கும், குணசேகரனுக்கும் தொண்டைக்கு நடுவுல
கல்லு சிக்குன மாதிரி ஆயிருச்சி…….. வானதி முத்துக்குமார்கிட்ட எகிற ஆரம்பித்தாள்……
" ஸார் இது பக்கா பிளானடு…. நீங்க உடனே இவங்க மேல எப்.ஐ.ஆர்
போடுங்க"
" தாரளமா இப்பவே போட்ரலாங்க, கதிரேசன் ஸார் என்ன சொல்றாருனு
கேளுங்க"னு முத்துக்குமார் சொல்ல, வெற்றியும் அறிவும் வானதிய பார்த்து மெதுவா சிரித்தார்கள்…..
" கதிரேசன் ஏன் கொய்ட்டா
இருக்கிங்க சொல்லுங்க கேஸ் போட"
" அம்மா இருங்கம்மா இங்க வுட்டா
தலைக்கு மேல வெள்ளம் போயிரும். ஊர் விசயம்லாம் உங்களுக்கு புரியாது"னு
கதிரேசன் சலிப்பா சொல்ல வானதிக்கு கண்ணெல்லாம் மங்கற மாதிரி தெரிந்தது கோவத்தில்…….
முத்துக்குமார் கதிரேசனையும்
வெற்றியையும் ரூமுக்குள் அழைத்து பேச ஆரம்பிச்சார்!
" இங்க நடக்கற விளையாட்டு எல்லாம்
எனக்கு தெரியும். என் சர்வீஸ்ல இந்த மாதிரி நிறைய பார்த்துருக்கன். கதிரேசன் நீங்க
வெற்றிக்கு ஒரு செக் வைச்சிருக்கிங்க, வெற்றி நீ கதிரேசனுக்கு ஒரு செக் வைச்சிருக்க. என்னால ரெண்டு பேர்
மேலயும் நீங்களே குடுத்துருக்க புகாரை வைச்சி வழக்குபோட முடியும். இல்ல
உங்களுக்குள்ள சமாதானமா வழக்கில்லாம போறதா இருந்தாலும் விட முடியும். நேரம்
கடத்தாம ஒரு முடிவுக்கு வாங்க"
" நான் குணாவை அடிச்சது உண்மை.
காரணம் அவன் ஊருக்குள்ள பணம், பதவிய வைச்சிக்கிட்டு பொண்ணுங்கக்கிட்ட பண்ற அக்கிரமத்திற்காகத்தான்.
இந்த காரணத்துக்காக நானும் அறிவும் அடிச்சம்னு தாரளமா எங்க மேல வழக்கு போடுங்க, இவங்க சொல்ற காரணம் பொய்னு உங்களுக்கே
தெரியும். அதேமாதிரி இவங்க மேல வழக்கு குடுக்க வந்தவங்க சொன்னதையும் விசாரிச்சி
வழக்கு போடுங்க"னு வெற்றி அசால்ட்டா சொல்லிட்டான்… ஆனா கதிரேசன்தான் தடுமாற ஆரம்பிச்சான்….. வானதி கடைசிவரை போராடி பார்த்திடும்
முடிவோடு அங்க இங்கனு போன் பண்ணி அலைய ஆரம்பித்தாள்…..
கடைசியா கதிரேசன் வழக்கு வேணாம்னு
முடிவுக்கு வந்தான். ஆனா வெற்றி வந்தவங்கக்கிட்ட இன்ஸ்பெக்டர கேட்கச்
சொல்லிட்டான். இன்ஸ்பெக்டர் ஊர்க்காரங்கக்கிட்ட பேச, ஊர்க்காரங்க வெற்றியும், அறிவும் வெளிய வரதுனா நாங்க வழக்கு குடுக்கல, ஆனா இவன் மறுபடியும் இப்படியே பண்ணினா
உங்கள தேடித்தான் வருவோம்னு முத்துக்குமார்கிட்ட சொல்ல, ஒருவழியா வானதியோட சதி ஆட்டம்
முடிவுக்கு வந்து வெற்றியும் அறிவும் வேலுச்சாமியும் ஸ்டேசனுக்கு வெளிய வந்தார்கள்……
வானதி, நேகா, கதிரேசன், குணசேகரன், சுதாகர் கிளம்ப தயாரா நிற்க, வெற்றி, அறிவு, வேலுச்சாமி நேரா அங்க போனார்கள்…….
" ம் வானதி என்னாச்சு நெருப்புல
சுட்ட பனம்பழம் கணக்கா இருக்கு மூஞ்சு"னு வெற்றியே ஆரம்பிச்சான். வெற்றி
இப்படி பேசற ஆள் கிடையாது. ஆனா வானதி பண்ணின வேலை அப்படியானது…… யாருமே பேசல….. வெற்றியே பேசினான்…..
" நான் கூட உன்னை என்னமோ பெரிய
புத்திசாலினு நினைச்சேன் ஆனா நீ ஜெயிக்கறதுக்காக எதை வேணாலும் செய்ற சீப்பான
அயோக்கியத்தனமான ஆளுனு இப்பத்தான தெரியுது"னு வெற்றி சொல்ல, சரால்னு திரும்பினாள் வானதி….. ஆனா அவளால பேச முடியல…….
" உங்கப்பா சம்பாதிச்சி வைச்ச
பணம், தொடர்புகள வைச்சிதான் நீ ஆடற, உனக்கா எதுவுமே இல்லைனு இப்ப நல்லா
தெரியுது, இப்புடி எதுவுமே இல்லாம உன்னை நேர்மையா
தில்லா எதிர்க்கற நான் பெரிய ஆளா?! இல்ல எல்லாமே இருந்தும் அதை தப்பா பயன்படுத்தி ஜெயிக்க நெனைக்கற நீ
பெரிய ஆளா?!
ஹஹஹஹ உண்மையாவே நீ வாழ்க்கையும்
புரியாத, வியூகமும் தெரியாத முட்டா டம்மி
பீசு" னு வெற்றி சொல்ல சொல்ல வானதி உடம்பு கோவம், தோல்வி வெறுப்புனு மெல்லமா நடுங்க
ஆரம்பிச்சது……
" இங்க பாரு நேத்து நான் கூட்டுன
கூட்டத்துல பேசி முடிச்சதுமே நேரா ஊருக்குள்ள போய், குணா பய மேல எப்ப வேணா கை வைப்பம், அவனால பாதிக்கப்பட்டவங்க வழக்குக் குடுக்க தயாரா இருக்கனும்னு சொல்லி
நம்பிக்கைய வாங்கிட்டு வந்துட்டேன்"னு வெற்றி சொல்ல குணசேகரனால வாங்குன அடி
தந்த வேதனையால நிக்க முடியாம ஓரமா போய் மரத்தடி கல்லுல உட்கார்ந்தான் பாவமாய்…..
" ஆனா நீ திட்டம் போடறனு சும்மா
இருந்தவன இழுத்து வுட்டு நிக்கக்கூட முடியாதப்படி வெளு வாங்க வைச்சிட்ட, வாங்க வேண்டியவன்தான் அந்த பயலும்.
இப்பவும் எங்களுக்குதான் இலாபம்! புரியலயா? நாளைக்கே இந்த பய மேல வந்து கேஸ குடுக்க முடியும். ஆனா உன்ன மாதிரி
முன்ன வுட்டு பின்ன லுச்சாத்தனமா செய்ய மாட்டோம். ஏன்னா நாங்க உழைச்சி திங்கறம், உன்ன மாதிரி ஊர் மக்க உயிர்ல விளையாடி
திங்கல, இனிமேலாவது நேரா நியாயமா மோது, ஆளும் அழகும் ச்சை" என்ற வெற்றி
அங்க நிற்காம கிளம்ப வேலுச்சாமியும் நடந்தார்……
" நேகா அஞ்சோ பத்தோ இருக்கறத
வைச்சி சாப்ட்டு சந்தோசமா வாழ்ந்து செத்து போலாம். குடும்ப சூழ்நிலைக்காக இந்த
மாதிரி வெசம் புடிச்ச ஆளுங்கக்கிட்டலாம் இருந்துதான் சம்பாதிக்கனும்னு இல்ல.
என்னமோ தெரியல உன்னை பார்த்தா சொல்லனும்னு தோணுது அதான் சொன்னேன். வீட்டுக்கு போய்
முதல்ல சாப்டு நாங்க கெளம்பறோம்"னு அறிவும் கிளம்ப, நேகா பாவமாய் முழித்தாள். ஆனால் வானதி
பற்றி உருவான கெத்தான பிம்பம் உடைந்து, வெற்றி அறிவுமேல ஒரு மரியாதை உருவாக ஆரம்பித்தது……
வானதியின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட
ஒரு தோல்வி, ஒரு அவமானம் வந்ததே இல்லை. இப்படி
எல்லாம் நடக்குமானு அவள் யோசித்ததுக்கூட இல்லை. ஆனால் வெற்றி நடத்திக்
காட்டிவிட்டான். தோல்விய விட தன்னோட முன்னால குனிஞ்சு வளைஞ்சி நிற்கிற, பேசற லேபர்ஸ் முன்னாடி அவமானப்பட்டது, அதுவும் சீப்பான கேரக்டர்னு நாயைவிட
கேவலமா பேசினது, இத்தனை நாளா உருவாக்கி வைச்சிருந்த
கம்பீர பிம்பம் உடைந்து சுக்கு நூறா போனது, இப்படியெல்லாம் கோபம், வெறுப்பு, அவமானம் வானதியை வாட்டி எடுத்தது!
எல்லாரோயும் தன் காரிலே ஏறச்சொன்ன
வானதி. கார் புறப்பட்டதும்…….
" டிரைவர் ஸாங் ப்ளே பண்ணு
கொஞ்சம் கவுண்ட் வை"னு வழக்கம்போல
பேசின வானதி, ரொம்ப கூலா வந்தாள்……
கூட வந்த யாருக்கும் இதுல தோற்றது
வானதிதான நாம தோற்ற மாதிரி அவ சந்தோசமா இயல்பா இருக்காளேனு ஒன்னும் விளங்கல….. அதான் வானதி!
இரும்பு பட்டாம்பூச்சி இவள்!

No comments:
Post a Comment