மீரா தாத்தா வயது 16 (ஆதன்-னின்)
அறிவடி- 13
ஊராட்சி தேர்தலுக்கான கடைசி நாள் பிரச்சாரம் என்பதால் களம் சூடாக இருந்தது. செந்தில் தன் அறிவான உக்கிரமான பேச்சால் மக்களை கவர்ந்துக்கொண்டிருக்க….
பழனிச்சாமி, வாசு, பாஸ்கர் மூனு பேரும் புடவை, குடம், குங்குமச் சிமிழை, பொம்பளைங்களுக்கும். ஓட்டுக்கு ஆயிரம் ரூவா பணத்தையும் தீவிரமா சப்ளை செய்தார்கள். தேர்தல் அன்னைக்கு ஒரு கோட்டர் உறுதினு வாக்குறுதி தந்தானுங்க மூனு பேருமே.
ஆள் அவன் இவன் அந்த சாதி இந்த சாதினு இல்லாம எல்லருக்கும் வித்தியாசமின்றி பணத்தை வாரி இறைச்சானுங்க!
செந்தில் தன் பிரச்சாரத்தில் " இப்ப உங்களுக்கு ஓட்டுக்கு பணம், பொருள், சாராயம்னு தர பணத்துக்கு பலமடங்கு அரசாங்கம் தர உங்க பணத்தை சுருட்டியிருவாங்க"னு எல்லா இடத்திலயும் பேசினான்.
பொம்பளைங்கள பார்த்து "ஏற்கனவே டாஸ்மாக்கால இங்க எத்தனை குடும்பங்கள் சண்டை, சச்சரவு, வறுமைனு வாடறத கண்ணால பாக்கறம். ஓட்டுக்காக கோட்டர் குடுக்கற இவங்களா நல்லது பண்ண போறாங்க?! உங்க அண்ணன், தம்பி, அப்பா, புருசன, புள்ளய குடிக்க வைக்கற இவங்களுக்காக நீங்க ஓட்டு போட போறிங்க?! அப்படி அல்ப காசு, பொருளுக்கு ஓட்டு போட்டிங்கனா உங்க தலையில நீங்களே மண்ண வாரி போட்டுக்கறதுக்கு சமம்"னு எல்லா இடத்திலயும் கடுமையாவே பேசினான்…..
மீரா இன்னைக்கு அவன் கூட முழுசா இருந்தார். அங்கங்க என்ன பேசினா சரியா இருக்கும்னு டிப்ஸ் குடுத்துக்கிட்டே வந்தார். ஒரு இடத்தில் தேங்கியிருந்த சாக்கடையை காட்டினர், ஒரு வீதியில் குடித்தண்ணி பைப் இல்லாததை காட்டினார்,
சரக்கடிக்கற இடமா மாறி இருந்த ஒரு இடத்தைக் காட்டி இங்க லைட் கம்பம் இருந்தா இந்த இடம் சரக்கடிக்கும் இடமா மாறி இருக்காதுனு பேச வைச்சார். இரண்டாவது சுற்று பிரச்சாரத்தின் போது ஆண்கள், பெண்களுக்கு கட்டணமில்லாத கழிப்பறைகள் கட்டித்தரதா சொல்லச் சொன்னார். இது பெண்களுக்கு ரொம்பவும் முக்காயமானதாகப்பட்டது.
செந்திலும் சளைக்காம தன் பேச்சுத் திறனால் வெளுத்து வாங்கினான்.
"நம்பி ஓட்டு போடுங்க, நீங்க வெம்பி வெதுங்கி போகாம நான் பார்த்துக்கறன். நம்ம புள்ளைங்க நாலும் தெரிஞ்ச அறிவான புள்ளைங்களா ஒழுக்கமா வளர நான் வழி பண்றன். எல்லா விளையாட்டுக்கும் கோயிலை ஒட்டி இருக்க இடத்தை மைதானமா மாத்தி தரேன். ஓட்டுக்காக நான் யார் கால்லயும் விழ மாட்டேன், ஜெயிச்ச பின்னாடி என் கால்லயும் உங்கள விழ விட மாட்டேன்"னு சுயமரியாதை பற்றி வகுப்பெடுத்தான்……
ஒருவழியாக இறுதி நாள் பிரச்சாரம் முடிந்திருந்தது. மீராவோட செந்தில் வர, ஆலமரத்தடியில் கார்களை நிறுத்தி பேசிக்கிட்டு இருக்க, இவர்களை பார்த்ததும் கை காட்டினார்கள். மீரா புல்லட்ட நேரா அங்க போய் நின்னது.
"என்ன பழனிச்சாமி அதிசயமா என்னையலாம் கூப்டற"னு மீரா கேட்க….
" இல்ல பஞ்சாயத்த தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னாடி வைச்சுக்கலாம் சொல்லத்தான் கூப்டன்"னு பழனிச்சாமி சொல்ல…
"அத ஒரு விசயமாவே நான் நினைக்கல பழனிச்சாமி நீ ஒருநாள் முன்ன சொல்லு நான் வரேன். நீங்க நியாயமா நடந்துக்கிட்டா நானும் நியாயமா நடந்துப்பன். இல்ல நீங்க சாதி நெருப்ப ஊதி விட்டிங்கனா நான் வேற ரூட்ல டீல் பண்ணா நீங்கவர உள்ள போய்ருவிங்க"னு மீரா அன்பா மிரட்ட…
"அட இத விடுங்கப்பா தேர்தல் வேலைலாம் எப்படி போச்சு உங்க கணிப்பு என்ன மாப்ள செந்திலு"என்று வாசு கேடீக
" பெருசா ஒன்னுல்ல மாமா நீங்க பணத்த வாரி எறச்சி இருக்கிங்க, இந்த மக்கள பத்தி நல்ல தெரிஞ்சதுதான. உங்க மூனு பேர்ல யாராவது ஒருத்தர்தான் ஜெயிப்பிங்க. தேர்தல் அன்னைக்கு நீங்க குடுக்கற கோட்டரு ஆம்பளைங்கள உங்களுக்குத்தான் ஓட்டு போட வைக்கும். ஆனா நானும் ஒரு குறிப்பிட்ட ஓட்ட வாங்குவன். ஆனா அடுத்த முறை கட்டாயம் ஜெயிச்சிருவேன்"னு சொல்லி நிறுத்தினான்.
"கவலைப்படாத மாப்ள நாங்க யார் ஜெயிச்சாலும் நீ சொன்னதை எல்லாம் முடிஞ்ச வரை செய்ய பாக்கறம்"னு பாஸ்கர் சொல்ல,
"நீங்க ஜெயிச்சி நான் சொன்னதை எல்லாம் முடிஞ்சவரை பண்ணிங்க அப்படினா நான் ஏன் அடுத்த முறை எலெக்சன்ல நிக்க போறன் மாமா"என்று செந்தில் முடிக்க அதுக்குள்ள மீரா புல்லட்ட ஸ்டார்ட் பண்ணி கிளம்பத் தயாரானது செந்திலும் ஏற புல்லட் புறப்பட்டது.
"ஏம்ணே பழனிச்சாமிணே நம்ம மூனு பேர்ல ஒருத்தருதான் ஜெயிப்பமா?! செந்திலுக்கு வாய்ப்பில்லையா"னு வாசு கேட்க…..
"நாம மூனு பேரும் செலவு பணத்த கணக்கு போட்டு, இந்த மக்களோட மனச யோசிச்சி பாரு. செந்தில் சொன்ன மாதிரிதான் நடக்கும். நாமதான் ஜெயிப்பம் கவலைப்படாத" என்றான் பழனிச்சாமி.
புல்லட்ல பின்னாடி உட்கார்ந்திருந்த செந்தில் மீரா காதுல பேசினான்.
"இவ்வளவு காசையும் மீறி ஜெயிக்க முடியுமா பெரியப்பா?!"
"கட்டாயம் நீ ஜெயிப்ப கவலைப்படாத" என்றார் மீரா…
"எப்டி உறுதியா சொல்ற பெரியப்பா"
"மத்த சாதிக்காரங்க ஓட்டு, பொம்பளைங்க ஓட்டு, சாதி ஓட்டுல கொஞ்சம். படிச்ச புள்ளைங்க ஓட்டுனு எல்லா பக்கமும் உனக்கு ஓட்டுருக்கு அவனுங்களுக்கு அப்படி இல்லை. நீ ஒரு ஓட்டு வித்தியாசத்தலயாவது ஜெயிச்சிருவ செந்திலு. பெரியப்பாவ நம்பு " என்றார் மீரா….
செந்தில் மனதில் புது தெம்பும் தைரியமும் வந்தது,..,...
அப்படியே தேர்தல் நாளும் வந்தது!
பெண்கள் வீட்டு வேலை முடித்து ஓட்டு போட போக, குடிக்கும் ஆண்கள் மூனுபேர் தந்த மூனு கோட்டரையும் குடிச்சிட்டு மட்டையாக, புதிய வாக்காள இளைஞர்கள் ஆர்வ மிகுதியால் காலையிலயே ஓட்டு போட்டு விட்டு விரலில் மை வைத்ததை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு, வாட்ஸ்அப்ல ஸ்டேடஸ் வைச்சிக்கிகிட்டு இருந்தாங்க.
பூத் ஏஜென்ட்டாக செந்திலின் படித்த நண்பர்கள் இருந்தனர். மீரா குடிக்காத ஆண்கள்கிட்ட எதார்தத்தை பேசி வாக்களிக்க அனுப்பி இருந்தார். இந்த முறை பெண்கள் கூட்டம்தான் ஓட்டளிக்கும் இடத்தில் அதிகமாக இருந்தது.
மீரா பைக்ல குறவன்பட்டிய சுத்தி சுத்தி வந்துக்கொண்டிருந்தார். செந்திலை வீட்டோட இருக்கச் சொல்லிவிட்டார்.
வயதானவர்களை வெயில் குறைந்ததும் கட்டாயம் கூட்டிட்டு போய் ஓட்டு போடச் செய்தார். எல்லா வேலைகளையும் முடிச்ச பின்னாடி கடைசியா ஓட்டை போட்டார் மீரா.
சந்தோசு ஒருபக்கம் ஊருக்குள்ள இளைஞர்களை, நண்பர்களை திரட்டிக்கிட்டு ஒரு படையா போய் ஓட்ட போட்டுட்டு வந்தான்.
செந்தில் அப்பன் முத்தான் சொந்தபந்த ஓட்ட வாங்க வீடு வீடா போய் உறவுமுறைச் சொல்லி ஓட்ட திரட்டிக்கிட்டு இருந்தான். அவனைத் தடுக்க வேண்டாம்னு செந்தில்கிட்ட மீரா சொல்லிடுச்சி. இது கடைசிநேரம் அவனுங்க புல்லா பணத்தை எறக்கி இருக்கானுங்க. நமக்கு எந்த வழியில் ஓட்டு வந்தாலும் வரட்டும்னு மீரா சொல்லிவிட்டார்.
மாலை நாலு மணிக்கு மேல சந்தோச கூட்டிக்கிட்டு மத்த சாதிக்காரங்க இருக்க இடத்தக்கு போய் யார் யாரெல்லாம் ஓட்டு போடலனு பார்த்து ஓட்டுப்போடச் சொல்லச் சொன்னார் மீரா!
மீரா சொல்லும் ஒவ்வொன்னுக்கு பின்னும் ஒரு அரசியல் இருந்தது, காரணம் இருந்தது. மீரா சொல்வதை செய்தால் போதும்னு செந்தில் முடிவு பண்ணிக்கிட்டான்.
"தப்பு பண்ணிட்டோம் பாஸ்கர்" என்றான் பழனிச்சாமி …..
"என்னாச்சி"
"மூனு பேரும் சேர்ந்து தலைக்கு ஒரு கோட்டர குடுத்திருக்கனும். இல்லனா ஓட்ட போட்டுட்டு வந்து விரலைக்காட்டி கோட்டர வாங்கிக்கோனு சொல்லி இருக்கனும். நாம குடுத்ததை குடிச்சிட்டு முக்காவாசி பேர் மட்டை ஆய்ட்டானுங்க"என்ற பழனிச்சி மெளனமானான்.
இதுக்கு நடுவுல செல்விய அவங்கம்மா பஸ்ல எங்கையோ கூட்டிட்கிட்டு போகுதுனு மீராக்கிட்ட சந்தோசு சொல்ல, எதுக்கும் கவலைப்படாத நானிருக்கனு தேற்றினார் மீரா.
அடுத்த நிமிசமே அவங்க எங்க போறாங்கற தகவலை முருகேசன் கிட்ட ஆதரவா பேசற மாதிரி ஒருத்தன பேச வைச்சி செல்வி போன இடத்தை கண்டபிடித்தார் மீரா.
சேலம் டவுன்ல இருக்க செல்வி அத்தை வீட்ல செல்வியை விட்டுட்டு வரத்தான் கூட்டிட்டு போறா சித்ரா! இந்த விசயத்தை போன் பண்ணி சந்தோசுக்கிட்ட மீரா சொல்ல சந்தோசு நிம்மதியானான்.
அவனை தைரியமா இருக்கச் சொன்ன மீரா வயித்துக்கு சாப்பிடச் சொல்லிட்டு நாட்டுக்கோழி ஒன்ன புடிச்சி வைக்கச் சொன்னார்!
குறவன் பட்டிக்கு புது விடியல் பிறக்குமானு இன்னும் மூனு நாள் கழித்து தெரியும்!
இந்த மூனு நாள் கேப்பில் மீராவின் பிளாஷ்பேக்கை பார்ப்போம்!...
மீரா தாத்தா வயது 16 அறிவடி- 14
நிகழ்காலம் & பிளாஷ்பேக்
மீராவும் செந்திலும் வீட்டுக்கு வர பொழுது இருட்டி இருந்தது!
சந்தோசு நாட்டுக்கோழியை அறுத்து சுத்தம் செய்துக்கொண்டிருந்தான்.
"லே ரமேசு கட்டில எடுத்து போடுறா"னு மீரா சொல்ல, புது நம்பரிலிருந்து போன் வர மீரா போனை எடுத்தார்….
"ஹல்லோ"
" மீரா நான் கருப்பன் பேசறன். இது பக்கத்து பெட்டுல இருக்கவங்க போனு"
"சொல்லுடே சாப்டிங்களா, சரவண பய எப்படியிருக்கான்?!
"இப்ப ரொம்ப பரவாயில்லை. முன்ன மாதிரி இல்ல, நைட்ல தூக்க ஊசி இல்லாமயே தூங்கறான், நல்லா சாப்டறன்"
"கவனமா பாத்துக்கலே நம்மாள ஒருத்தன் பொழைச்சதா இருக்கட்டும்"
" நல்லாதான் பாத்துக்கறன் என்ன எழவு இந்த பத்து நாளா உன்கூட நைட்ல கொஞ்சம் சாராயத்த போடுவன், பழச பேசிக்கிட்டு கெடப்போம் அதான் கொறையா இருக்கு"
"கை கால் நடுக்கம் இல்லாம அவன் வேலைய அவனே பாக்கற நெலமையில இருக்கானாலே"
"ம் அதெல்லாம் இருக்கான்"
"அப்ப காலையில வரதா சொல்லிட்டு வா நாட்டுக்கோழி ரெடியாவுது"
"அட இந்தா அர மணி நேரத்துல பஸ்ஸ புடிச்சி வந்திடறன்"னு சொன்ன கருப்பன் போனை கட் பண்ணிட்டு சரவணன் கிட்ட விசயத்தை சொல்லிட்டு பஸ் ஏற கிளம்பினான்.
கட்டில்ல செந்திலும் மீராவும் உட்கார
"செந்திலு கவலைப்படாத மூனுநாள் போயி நீதான் ஊராட்சி தலைவரு"
"பெரியப்பா நீங்க சொல்றதால நம்பறன்"
"லே மாப்ள மாமனுக்கு அசதியா கெடக்கு, கொழம்ப நல்லா ரசம் மாதிரி வை கறியை நல்லா வேக விடு " என்ற மீரா கொல்லைப் பக்கம் போய் சாராயத்த எடுத்துக்கிட்டு வந்துச்சி. சரவணன் கேஸ் அடுப்ப புல்லா வைச்சி கறிய ஆக்க ஆரம்பிச்சான்.
சாராயத்த அரை டம்ளர் ஊத்தி குடிச்ச மீரா சிகரெட் ஒன்ன பத்த வைச்சது. ரமேசுக்கே ஆச்சரியம் யார் முன்னாலயும் அவ்வளவு சீக்கிரம் சாராயம். சிகரெட்ட மீரா குடிக்காது.
"என்னடே ஆச்சரியமா பாக்கற. உம்முன்னாடி குடிக்கறன் அப்படினா, நீயெல்லாம் என்னைய பாத்து கெட்டு போயிட மாட்டங்கற நம்பிக்கையாலதான்"னு மீரா சொல்ல…
"பெரியப்பா எல்லா பழக்கத்தையும் ஆரம்பத்திலிருந்து நீதான் அடிமையா வைச்சிருப்பியாம் நீ அதுக்கு அடிமையாக மாட்டியாம் அப்பா சொல்லும்"
" ஆரோக்கியம்தாம்டே முதல்ல முக்கியம். இதே இந்த நல்ல சாராயம் உடம்புக்கு ஒத்துக்கலனா உடனே நிறுத்திடுவேன். ஆனா நானும் ஒன்னுக்கு இந்த நொடிவரை அடிமையாத்தான் இருக்கன் செல்லாயிங்கற செல்ல பிசாசுக்கிட்ட"னு சொன்ன மீரா கண்ணு கலங்கியிருந்துச்சி.
சொன்ன மாதிரி சரியா அரமணி நேரத்துல கருப்பன் வந்து சேர்ந்திருந்தான்.
"வாடா வாடா நண்பா நீயில்லாம கை ஒடிஞ்ச மாதிரி இருந்துச்சி நானும் பத்து நாளா சாரயத்ததொடல இன்னைக்குத்தான் தொடறன். நாட்டுக்கோழி வேகுது அப்படியே மூனு பேருக்கும் சூப் கொண்டா"னு மீரா சொல்ல கருப்பன் வீட்டுக்குள்ள போக …..
"அட வாங்க மாமா"னு ஆச்சரியமானான்.
"உம் மாமனுக்கு சூப் வேணுமாம் சந்தோசு"
"ஊத்தி எடுத்துட்டு போ மாமா" சந்தோசு சொல்ல, கருப்பன் ஊத்தி எடுத்துக்கிட்டு மீராக்கிட்ட போனான்.
மீரா அவனுக்கு முக்கா டம்ளர் சாராயத்தையும் தனக்கு அரை டம்ளர் சாராயத்தையும் ஊத்தி குடிச்சது. கூடவே சூப்ப உறிஞ்ச ஆரம்பிச்சது. சரக்கடிக்க இதான் மீராவோட பேவரைட். எப்பலாம் மீரா அரை டம்ளர் ஊத்திக்குடிக்குதோ அன்னைக்கு புல்லா குடிக்க போவுது மனசு சரியில்லனு அர்த்தம்.
கருப்பன் கரெக்ட்டா கண்டுபுடிச்சிட்டான்
"என்னாச்சி மீரா என்ன பிரச்சினை"னு நேரடியாவே கேட்டான் கருப்பன்.
"ஒன்னுமில்லடே நீ குடி. பத்துநாளா நாக்கு செத்திருக்கும் குடிச்சிட்டு நல்லா சாப்டு"
" நீ முதல்ல என்னனு சொல்லு"னு கருப்பன் பிடிவாதம் பிடிக்க சந்தோசு விசயத்துல நடந்தத முழுசா சொல்லிச்சி மீரா.
"அவனுங்க கெடக்கறானுங்க பாவாடை பசங்க கவலைய விடு மீரா, செல்வி புள்ள இப்ப இருக்கற எடம் எனக்குத் தெரியும். எம்பொண்டாட்டியில நெருங்குன சொந்தம்தான் அவங்க வூட்டுக்கு போயிருக்கோம்"னு கருப்பன் சொல்ல மீரா அடுத்த ரவுண்ட் சாராயத்த போட கருப்பனும் போட்டான்.
இதுக்கு நடுவுல சந்தோசு செந்திலுக்கு சாப்பாடு கறிய போட்டுக்கிட்டு வந்துக் குடுக்க செந்தில் சாப்டுட்டு கிளம்பினான். கல்யாணமாகாத பயதான அதான் இங்கையே சாப்டுட்டு போறான்.
கருப்பனும் மீராவும் பழசை எல்லாம் பேசிக்கிட்டு சாராயத்த ஏத்த ஆரம்பிச்சாங்க. யாருக்கிட்டயும் கேட்காம சந்தோசு சாராய கேன்னை எடுத்துட்டு போய் வைச்சிட்டான்.
"டே மாப்ள சந்தோசு இன்னும் கொஞ்சூண்டு குடுறா"னு மீரா போதையில கெஞ்ச, சந்தோச சாப்பாடு கறிய போட்டுக் கொண்டாந்து குடுத்தான் மீராவும் கருப்பனும் சாப்ட ஆரம்பித்தார்கள்..
"மீரா ஆட்டு உப்புக்கறி , சாராயம் ஒருநாளைக்கு அடிக்கனும்"
"எலெக்சன்ல செந்தில் பய ஜெயிக்கட்டும் செஞ்சிரலாம்"னு சொன்ன மீராவோட நினைவு ரொம்ப பின்னாடி போயிருச்சி…
இதே மாதிரி ஒரு இரவில்தான் ஆட்டு உப்புக்கறியோட சாராயத்த லைட்டா போட்டுட்டு கருப்பன், கருப்பன் பொண்ட்டாட்டி, மீரா , செல்லாயி நிலா வெளிச்சத்துல ஒக்காந்து சாப்பிட்டாங்க…..
கருப்பனும் அவன் பொண்டாட்டியும் கிளம்ப மீரா கேட்டார்…
"என்ன செல்லா முக்கியமான விசயம் சொல்றேனு சொன்ன?
"அதை வெளிய வைச்சி சொல்ல முடியாது"
"அவ்ளோ பெரிய இரகசியமா"
"ஆமா வெளிய வைச்சி எப்படி முத்தம் தருவ?"
"ஓஓஓ அவ்வளவு பெரிய விசாயமா சரி வா உள்ள போவம்"னு உள்ள போனாங்க…
செல்லாய பின்பக்கமா நின்னு கட்டிப்புடிச்ச படி நாசி அவள் காதோரம் உரச மீரா மெல்ல கேட்டார் இப்ப சொல்லு என்ன விசயம்னு…..
"இன்னும் ஏழு மாசத்துல மீசையில்லாத ராசப்பன் ஒருத்தன் நம்ம வூட்டுக்கு வரப்போறான்"னு செல்லாயி சொல்லி முடிக்கும் முன்னவே அவ மொகம் முழுசா முத்தம் குடுத்து முடிச்சிருந்தது மீரா.
"செல்லாயி நம்ம வூட்டுக்கு ஒரு உயிர் வர போகுதில்ல"
" ஆமா மீசைக்கார மாமா"
"எப்டி சொல்றதுனே தெரியல"
" நீ சொல்றது இருக்கட்டும் மாமா. நமக்கு எத்தனை புள்ளைங்க பொறந்தாலும் என் சாதியால அதுங்க மனசு கஷ்டப்படற மாதிரியோ, அவமானமோ வராம பாத்துக்கனும் நீ"னு செல்லாயி சொல்ல மீரா கண்கலங்க செல்லாயும் கண் கலங்கிட்டா…
" உம்மேல சத்தியம் பண்றன் நம்ம புள்ளைங்க சாதியால அவமானப்படாது. சுதந்திரமா வாழ வைப்பன்"
"இது போதும் மாமா" என்றாள் செல்லாயி….
கட்டியணைச்சி படுத்துக்கிடந்த உயிர்கள் ரெண்டும் பலதை பேசி உறங்கிப்போனது.
அங்கே அன்றிரவு காதலுக்கே மட்டுமே இடமிருந்தது. காமம் வெளியேறி வீட்டிற்கு வெளியே விழித்துக்கொண்டிருந்தது.
மாசம் ஆக ஆக தாய்மையின் பூரிப்பு அவள் முகத்தில் ஏறிக்கொண்டே போனது. அந்த நாட்களில் எல்லாம் அவளுக்கும் வயிற்றுக்கும் மீரா குடுத்த முத்தங்களுக்கு அளவே கிடையாது.
எந்த வேலையையும் செய்ய விடாம செல்லாய மீரா படுத்தி எடுத்திட்டாரு.
அப்புறம் ஊர் கெழவிங்க வேலை செஞ்சாதான்டா கொழந்த பொறக்கறப்ப சிக்கல் இருக்காது இல்லனா சிக்கல்தானு பயமுறுத்தின பின்னாடிதான் மீரா ஓய்ஞ்சாப்ல.
புள்ளைங்கள பெத்திருந்த ஒவ்வொருத்தருக்கிட்டயும் என்ன சாப்டனும் ஏது சாப்டனும்னு கேட்டு கேட்டு வாங்கிட்டு வந்து வூட்ட நிறைச்சிட்டாப்ல…
செல்லாயி எவ்வளவு சொல்லியும் மீரா கேட்கவே இல்லை. பால்ல குங்குமப்பூ கலக்கறதுக்கு பதில குங்குமப் பூவுல பாலை கலக்கறதுதான் மீரோவோட வேலை. காட்டுக்கு வேலைக்கு போறனு கிளம்பி அரைமணி நேரத்துல வூட்டக்கு ஓடி வந்திரும்.
செல்லாயி குணம், உழைப்பு, இப்ப மாசமா இருக்கறதால ஊர் பொம்பளைங்க சும்மா மீரா வீட்டுக்கு வந்து செல்லாயிக்கிட்ட பேசிட்டு போனாங்க. வந்து போனானுங்கனு சொல்றத விட. வந்து செல்லாய மீரா தாங்கறத பார்த்து பொறாமைப்பட்டு போனாங்க!
"யோவ் மீசைக்கார மாமா"
"சொல்லு செல்லா"
"ஆறு மாசம் முடிய போவுது"
"ஆமா"
" ஏழாவது மாசம் வளைக்காப்பு பண்ணி எங்ஙம்மா வூட்டுக்கு கூட்டிக்கிட்டு போகச் சொல்லவா"
" எது அந்த காட்டு கொட்டாய்க்கா? அதெல்லாம் ஒன்னும் வேணாம். வளைக்காப்புதான சிறப்பா வூட்லயே பண்றோம். நீ இங்கயே இருக்க! வேலையில்லாமத்தான் தனியார் ஆஸ்பத்திரினு கூட்டிக்கிட்டு அலையறனா?!
" மீசைக்காரரே நீயே போவ சொன்னாலும் உன்ன விட்டு நான் போக மாட்டன். வளைக்காப்ப பத்திரிக்கை அடிச்சி பண்ணு. கல்யாணத்ததான் அப்படி பண்ணல இதுக்கு பண்ணு. நீ யார்னு ஊருக்கு காட்டு"
"சொல்லிட்ட இல்ல என்ன பண்றனு பாரு இந்த பாலைக் குடிச்சிட்டு படு"
"மாமா"என்றவளின் சேலையை கழட்டு போட்டாள்.
"ஏன் செல்லா" வேர்க்குதா?
"வயித்த நீவிவிடு மீசைக்காரரே. கிட்ட வா"னு கூப்டு நாக்குகள் தீண்டி விளையாடும் முத்தம் ஒன்ன தந்து அவனை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு போனாள்……..
அந்தக் குடிசையில் நடப்பதெல்லாம் உயிர்க்கலப்பே தவிர கலவி அல்ல!..
அறிவடி- 15
"என்னாடி ஆச்சு இவனுக்கு வளைக்காப்புக்கு வாய்ல சொல்லாம பத்திரிக்கை அடிச்சி ஊரெல்லாம் வைக்கிறான்"னு ஒரு பொம்பள அலுத்துக்க..
" நம்ம வூட்ல இருக்கறதுங்க காய்ச்சல்ல கெடந்தாலும் இன்னைக்கு சோறு ஆக்கலயானு கேக்கறவனுங்க"னு அங்கலாய்ச்சா ஒருத்தி..
"பொம்பளையா பொறந்தா மீரா மாதிரி ஆளுக்கு வாக்கப்படனும், செல்லாயி மாதிரி வனவனப்பா பொறக்கனும்"னு ஒருத்தி பொறாமைப்பட…
செல்லாயி வளைகாப்புக்காக வீட்டுக்கு வெளிய பெரிய பந்தல், லைட்டு, சீரியல், ஸ்பீக்கருனு, மேடைனு கல்யாணம் மாதிரி வைச்சாப்ல மீரானு. ஊரே வாயப் பொளந்தது.
நல்ல நேரம் பார்த்து அலங்கார மேடைக்கு செல்லாயி கூட்டிக்கிட்டு வந்து உட்கார வைக்கப்பட்டாள். செய்ய வேண்டிய முறைகள் ஆரம்பிச்சி சீறும் சிறப்பா நடந்தது….
வளைக்காப்புக்காக ஒன்பது வகை சோத்த செஞ்சிருந்தாப்ல மீரா. வந்தவளுக்காக ஒம்பது வகை சோத்தையும் போட்டு தெணற தெணற திங்க வைச்சி அனுப்பி வைச்சான்.
அந்த ஊரே முக்காவாசி திரண்டு வந்து வளைக்காப்ப கல்யாணம் மாதிரி மாத்திட்டாங்க. மீரா தன் சொந்தத்துக்கு பத்திரிக்கை வைச்ச மாதிரியே செல்லாயி சொந்தங்களுக்கும் வைச்சி அழைச்சி வந்தாப்ல. இதுக்கு முணுமுணுப்பு இருக்கத்தான் செஞ்சது. அது எதுவும் சத்தமா மாறல மீரா காதிலயும் விழல.
எல்லாருக்கும் ஒரே மரியாதை ஒரே கவனிப்புதான். வந்தவங்க அத்தனை பேரையும் குடும்பம் குடும்பமா போட்டோ எடுத்து பெரிய ஆடம்பரம் பண்ணிட்டாப்ல மீரா. அன்னைக்குத்தான் ஊருக்கு ஒரு விசயமே புரிஞ்சது மீரா வெறும் ஜாலியான மனுசன் இல்ல பெரிய புத்திக்காரனு.
மாசம் ஒன்பதைக் கடக்க மணி நைட் 11 யைக் கடக்க செல்லாயிக்கு வலி புடிக்க ஆரம்பிச்சது. பைக்க ஒதச்சி நேரா ஆட்டோக்காரன் சந்திரன் வீட்டுக்கு போய் இழுத்துக்கிட்டு வராத கொறயா கூட்டியாந்து, ஆட்டோவுல கருப்பன் பொண்டாட்டிய ஏத்திவிட அவ தேவையான சாமான்களை எடுத்துக்க ஆட்டோ புறப்பட்டது….. புல்லட்ல கருப்பன் ஏற பெத்தவங்கள மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு வண்டிய வெரட்டினாப்ல மீரா……
சரியா ஆஸ்பத்திரிக்கு போய் அரமணி நேரத்துல ஆம்பளை பய பொந்தாச்சு. சந்தோசத்துல அந்த நைட்ல என்ன பண்றதுனு புாியல மீராவுக்கு. நர்ஸ் கொழந்தையைக் கொண்டாந்து காட்ட, மல்யுத்தம் போட்ட கை பிஞ்சு வெரல தீண்ட நடுங்கியது. குழந்தையின் வெரலோட வெரல் பட்டதும் மீரா வாய் தானா சொன்ன வார்த்தை அப்பா!!! இதுநாள் வரையிலும் பையனை அப்பானுதான் கூப்டுவாப்ல.
கொழந்த பொறந்து அடுத்த பதினைஞ்சாவது நிமிசம் புருசன தேட ஆரம்பிச்சாளே தவிர புள்ளய தேடல செல்லாயி. இந்த ரெண்டுங்களும் பல பிறவியாய் புருசன் பொஞ்சாதியா வாழ்ந்ததுங்க போல. நர்ஸ் வந்து மீராவை கூப்ட ஓடாத கொறயா பொண்டாட்டிய பாக்க ஓடுனாப்ல மீரா. எப்படி உன் வம்சத்துக்கு ஒரு புள்ளய ஆரோக்கியமா பெத்துக் குடுத்துட்டன் பாருங்கற கர்வம் அவ மீராவ பார்த்தப்ப அவ மொகத்துல தெரிஞ்சது.
" ரொம்ப பயந்துட்டியா மாமா"
" அது பயமா என்னானுலாம் தெரியல ஆனா நொடிக்கொருதரம் என்னை பெத்தவங்கள வேண்டிக்கிட்டேன்"
" அது பயமில்ல மாமா நீ எம்மேல வைச்சிருக்க பாசம். புள்ளய பாத்தியா? யார் மாதிரி இருக்கு? ஆணா பொண்ணா"
"ஏன் நீ பாக்கலயா செல்லா"
"உன் வாயால கேட்கனும்னு இங்கருக்கவங்கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டேன்"
மீரா அவ கையைக் வெரலால கோர்த்தப்படி…..
"
ஆம்பள பய, கண்ணு என்னை மாதிரி, மூக்கு உன் மாதிரி"னு சொல்ல….
" மூக்கும் உன்ன மாதிரி இருந்திருக்கலாம். ஊர்ல இருக்க எல்லா பொம்பளைங்களும் அவன் பின்னாடி சுத்தி இருக்கும். சரி புள்ளையக் காட்டு மீசைக்காரரேனு சொல்ல….
"எனக்குத் தூக்க பயமா இருக்கு"
"பாருடா அப்பன் ஆனதும் பயம்லாம் வருது. சரி ஆயாம்மா இருக்கும் அத கூப்டு"னு சொல்ல ஓடினாப்ல மீரா…. மீரா அன்னைக்கு ஒரு கொழந்தையா மாறி இருந்தாப்ல. யாராவது இந்த மருந்து இலட்ச ரூவா இத உம் பொண்டாட்டிக்கு போடனும்னு சொல்லி இருந்தாலும் அப்படி என்ன மருத்துனு கேட்காம காசுக்கு ஓடி இருப்பாப்ல….
ஆயாம்மா வந்து தூக்கி காட்டியதும் செல்லாயி கண்ணுல தண்ணி, அப்பன் ஜாடை அப்படியே இருந்துச்சி.
நேரம் போக பக்கத்துல வைச்சி கொழந்தைக்கு மொத பால குடுத்தா செல்லாயி. ரூம விட்டு எங்கையும் நகரல மீரா. மூனாம்நாள் டிஸ்சார்ஜ் ஆனாள் செல்லாயி.
பத்துநாள் குடிசையில இருந்தாள். மீரா இந்த பத்து நாள்ல காட்டு வூட்ட டேபிள் சகிதமா நல்லபடியா மாத்தி இருந்துச்சி. செல்லாயி, குழந்தைய காட்டு வூட்ல மாமியா மாமனார் மச்சினன் பொறுப்புல விட்டுட்டு வந்தாப்ல…,,
வந்த வேகத்துல குடிசையை இடிச்சி தார்ஸ் வூடு கட்ற வேலையை ஆரம்பிச்சிட்டாப்ல. ரெண்டே மாசத்துல ரெண்டுக் குடும்பம் தங்கற அளவுக்கு பாத்ரூம் வசதியோட கட்டி முடிச்சிட்டாப்ல மீரா.
ஊரே அசந்து போச்சு மீரா பண்ற ஒவ்வொரு வேலையை பார்த்து. வீட்டுக்கு டிவி ரேடியோனு பொருளும் வந்தது.
புதுமனை புகுற அன்னைக்குத்தான் ஆட்டோவுல செல்லாயியையும் குழந்தையையும் கூட்டியாந்தாப்ல மீரா. எந்த சாங்கிய சம்பிரதாயமும் செய்யல மீரா. ஊருக்கு பத்திரிக்கை வைச்சி அப்பன் அம்மையை கும்பிட்டு காலை டிபன், மதியம் சாப்பாடுனு விருந்து போட்டு விழாவ முடிச்சாப்ல மீரா….,
ஒரு ரூம் கதவ தொறந்த மீரா…..
"இதுதான் சாகற வரை நம்ம ரூமு, இன்னொரு பொட்ட புள்ள பொறந்தா அதுக்கும் இந்த வூட்டுல பாதி, பையனுக்கு பாதி நமக்கு இந்த ரூம்"
"அதுக்குனு இத்தனை பெரிய வீடா மாமா"
"அட இதே சின்னதுங்ஙறன் வூட்ல அப்பன் ஆத்தா வளத்த மரத்த வெட்ட மனசு வரல அதான் இத்தோட விட்டன். நீ இந்த வூட்டுக்குள்ள ராணி மாதிரி இருக்கலாம். டிவி பொட்டி. ரேடியோ, எல்லா ரூமுக்கும் காத்தாடினு எல்லாம் இருக்கு"
"இது எல்லாத்தையும் விட நீ இருக்க அது போதும்"னு கையைக் கோர்த்த செல்லாயி மீரா மாரோட சாஞ்சிக்கிட்டா……
மாசம் ஆக ஆக செல்லாயால வூட்ல இருக்க முடியல. மீரா எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்காம கொழந்தைய எடுத்துக்கிட்டு வண்டியில காட்டுக்கு வந்திருவா. செல்லாயி அம்மா கொழந்தையை பாத்துக்கும். செல்லாயி மறுபடியும் மாடாகி மண்ணுல உழைக்க ஆரம்பிச்சுட்டா….
மீராவுக்கோ இத்தனை செஞ்சிக்குடுத்தும் இவ மண்ணுலயே சாகறாளேனு வருத்தம். மீரா இதைக் கேட்டா "ஒழைச்ச ஒடம்பு மாமா ஒரே இடத்துல படுக்காது"னு பதில் சொல்லிருவா..,.. சாமி பேர்தான் வைப்பன்னு அடம்பிடிச்சி கொழந்தைக்கு சிவானு பேர் வைச்சாள்…..
அடுத்தடுத்த வருசம் போக சுந்தரி வந்து பிறந்தாள். வீட்டுக்கே அவதான் ராணிங்கற கணக்கா வளந்தானு சொல்றத விட மிரா வளத்துச்சுனு சொல்றதுதான் சரியா இருக்கும் ஓவர் செல்லம். ஊர்ல பெரிய வீட்டுக்காரன் கூட புள்ளைங்களுக்கு தங்கக் கொலுசு போடல ஆனா மீரா போட்டுச்சி,......
ஒருவழியா ஒரே நேரத்துல ரெண்டு கொழந்தைங்களுக்கும் மொட்டை அடிச்சி காது குத்த தேதி குறிச்சாங்க.
மறுபடியும் பத்திரிக்கை அழைப்புனு மீரா எறங்கிடாப்ல. ஒரு நல்ல நாள்ல குலதெய்வ கோயில்ல மொட்டை அடிச்சி காது குத்தும் நிகழ்ச்சி முடிந்தது.
ஒம்பது கெடா வெட்டி கோழிக அறுத்து ஊருக்கே விருந்துனு அமர்க்களப்படுத்திட்டாப்ல மீரா.
இந்த முறையும் செல்லாயி சொந்தக்காரங்க எல்லாத்துக்கும் மொறையான அழைப்பக் குடுத்து கூட்டியாந்தப்ல மீரா..
விருந்து விழா எல்லாம் முடிஞ்சி வீடு காலியாக…
"இத்தோட குழந்தைங்க போதும் மாமா"
" நானே சொல்லலாம்னு இருந்தன் செல்லா!"
"இதுங்கள நல்லா படிக்க வைச்சி நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக்குடுத்திட்டா போதும். நம்ம கல்யாணம் அர்த்தப்பட்டு போகும் மாமா"
"நான் இருக்கப்ப உனக்கென்ன கவலை. நீ சந்தோச இருக்க என்ன வேணும்னு சொல்லு. நீ சந்தோசமா இருந்தா இந்த குடும்பம் சந்தோசமா இருக்கும் செல்லாயி"னு சொன்ன மீரா அவளை தன் மேல இழுத்துப் போட்டபடி படுத்தார்.
இன்னைக்கு மனசால நிறைவா இருந்தவங்க உடலால நிறைவை இரவில் தேடி பயணிச்சாங்க!...
மீரா தாத்தா வயது 16 அடாவடி- 16
நிகழ்காலம்!
ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்க அரைமணி நேரம் இருந்தது.
மீராவும் செந்திலும் அறைக்கு வெளியே காத்திருந்தனர்..
ஓட்டு எண்ணிக்கை துவங்கியதுமே போட்டி பழனிச்சாமிக்கும் செந்திலுக்கும் என்று தெளிவாகியது……
7 ஓட்டு லீடிங்கில் ஆரம்பித்த
செந்தில் போக போக 100, 200, 300… என தொடா்ந்து முன்னேறி ஓட்டு எண்ணிக்கை முடியும் முன்னே வெற்றி அடைந்தான். இறுதியாக 857 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது…..
பழனிச்சாமி வாசு பாஸ்கர் மூனுபேருமே முகத்தில் தோல்வியைக் காட்டாமல் வெகு இயல்பா செந்திலிடம் பேசி வாழ்த்துச் சொன்னார்கள். மறந்தும் கூட மீராக்கிட்ட பேசல.
மீராவே பேசினார்.
"பஞ்சாயத்த எப்ப வைச்சிக்கலாம் பழனிச்சாமி?"
"நீயே பஞ்சாயத்த விரும்பற மாதிரி தெரியுது மீரா நாளைக்கே வைச்சுக்கலாம்
"வைச்சுக்கலாம் ஆனா செல்வியும் பஞ்சாயத்துக்கு வரனும்"
"புள்ள எதுக்கு பஞ்சாயத்துக்கு மீரா?"
"அப்புறம் பஞ்சாயத்து எதுக்கு பழனிச்சாமி?"னு திருப்பி அடிச்சார் மீரா! மீராவே தொடர்ந்து பேசினார்.
"புள்ள இப்ப ஊர்ல இல்லை. எங்க இருக்குனும் தெரியல. போலிஸ் ஸ்டேசன் படி ஏறாம எது நியாயமோ அப்டி முடிக்கலாம்னு நினைக்கறன். முருகேசனுக்கு போன் போட்டு பேசுங்க"னு சொல்லிட்டு மீரா புல்லட்ட எடுத்தார் செந்தில் ஏற வண்டி கிளம்பியது…..
புல்லட்டை ஊர் எல்லையிலயே நிறுத்தி மேள. தாளம். மாலைனு செந்தில் மீராவுக்கு ஊரார் வரவேற்பளிக்க மாலை தனக்கு வேண்டாம்னு மீரா மறுத்துட்டார்…
ஊர் எல்லையிலிருந்து ஆரம்பித்த வரவேற்பு ஊர்கோயில் வாசலில் நின்றது.
கோயில்ல பூசை நடக்க ஆரம்பிக்க செந்தில் சாமிய கும்பிட்டுட்டு, எல்லாருக்கும் நன்றியை சொல்லிக்கிட்டு மீராவோடு கிளம்பினான்.
மீரா நேரா தன்னோட வீட்டுக்கு வண்டியை விட்டார். செந்திலுக்கு நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருந்தது. மூனு பேருக்கு போட்டியா ஒரு ஆள் இருக்குனு காட்டுவோம்னு சொல்லித்தான் மீரா அவனை போட்டியில் இறக்கியது. ஆன இறக்கிய பின்னாடி மீராவோட செஞ்ச வேலைகள்தான் இந்த வெற்றிக்கு காரணம்.
"செந்திலு அரசியல், பதவிக்காக தொழிலை விட்றாத, திட்டங்கள் வரப்ப முன்னாடி நில்லு மீதிய நான் பின்னாடி இருந்து பாத்துக்கறன்"
"சரி பெரியப்பா நீயிருக்கப்ப எனக்கென்ன?!" என்ற செந்தில் சந்தோசு கொண்டுவந்த குடுத்த மோரைக் குடிச்சிட்டு சொல்லிட்டு கிளம்பினான்….
"மாமா நான் செல்விய பாத்துட்டு வந்திடறன்?
"எப்படிடா போவ?"
"கருப்பன் மாமா கூட்டிக்கிட்டு போவுதாம்"
"போயி?"
" கருப்பன் மாமா வீட்ட காட்டும், அது கூட வராது. நான் சோப்பு விக்கற மாதிரி போய் இந்த போன்ன எப்படியாவது செல்விக்கிட்ட குடுத்துட்டு வந்திடறன்"
"பார்ரா இந்த காதல் எப்படிலாம் வேலை செய்யுது! சரி போய்ட்டு வா. ஏதாவது பிரச்சினைனா நேரா பொண்ண தூக்கி கல்யாணம்தான்"னு சந்தோச கருப்பனோட அனுப்பி வைத்தார் மீரா..
கிளம்பிய கருப்பனும், சந்தோசும் பஸ்ஸ விட்டு இறங்கி செல்வி இருக்கும் வீட்டை நோக்கி நடந்தார்கள். தூரத்தில் இருந்து வீட்டை காட்ட அந்த வீட்டை நோக்கி சோப்பு பையோடு நடத்தான் சந்தோசு...
சாத்தியிருந்த கதவைத் தட்ட திறந்தது செல்வியேதான்….
உஷ் என்று செல்லி மொபைல், சார்ஜரை அவள் கையில் திணிக்க….
யாரும்மா அதுனு உள்ள இருந்து சத்தம் வந்தது.
சந்தோசு உடனே சோப்பு பையைக் காட்ட.
செல்வி சோப்பு விக்க வந்துருக்காங்க அத்தைனு குரல் கொடுக்க,
சோப்பெல்லாம் இருக்கு வேண்டாம்னு சொல்லி அனுப்பு செல்வினு அத்தைக்காரி சொல்ல.,
சத்தமா செல்வி அதையே சொன்னாள்…
சத்தமே இல்லாமல் பேசினார்கள்.
"எப்டி இருக்க" என்றாள் செல்வி
"ஏதோ இருக்கன் மீரா மாமா இருக்க தைரியத்துல" என்றன் சந்தோசு!
"சரி சரி நான் போறன் மெசேஜ் பண்றன் ஆள் இல்லனா கால் பண்றன்"
"மொபைல் புல் சைலன்ட்ல இருக்கு. நீயே மெசேஜ் பண்ணு கூப்டு" நான் வரனு உடனே வெற்றிக்கரமா திரும்பினான் சந்தோசு. கதவை சாத்தி விட்டு பீரோவுக்கு அடியில் மொபைலை சார்ஜரை ஒளித்து வைத்தாள் செல்வி!
"போன வேலை என்னாச்சு மாப்ள" என்று கருப்பன் கேட்க…
சந்தோசு சந்தோசமாக சக்சஸ் என்றான்!
வீட்டில் தனியா இருக்க மகேசு டீ கடைக்கு வந்த வந்த மீரா வழக்கபோல் மோரை வாங்கி குடிச்சிட்டு..
"லே மகேசு கொழந்தைக்கு எப்டி இருக்கு இப்ப?"
"இப்ப பரவாயில்லை மீரா"
"சரி சரி நல்ல படியா பார்த்துக்க"
சொடலை மவன் சதிசு வண்டிய நிறுத்திட்டு டீ கடைக்கு வந்தான்.
"அப்றம் மீரா இந்த நேரத்துல டீ கடையில?? என்றான் சதிசு….
"வூட்ல யாருமில்லடே அதான் இங்க வந்தேன்"
"சரி சரி. மகேசு ஒரு கோக் ஒன்னு ஜில்லுனு என்று சதிசு கேட்க சந்திரா கொண்டு வந்து தந்தாள் .
வெயிலுக்கு ஜில்லுனு உள்ள இறக்கினான்.
" என்னலே இது கருப்பா வெசம் மாதிரி?!"
"யோவ் மீரா லொள்ளா?! கூல்ட்ரிங்ஸ்யா இது?!
" இந்த வெசத்த வெலைக் குடுத்து வாங்கிக் குடிக்கறியே நீயெல்லாம் படிச்சவனா?!
"என்ன பண்ணச் சொல்ல வர இப்ப"னு சதீசு கேட்க
"ஏன்டா ரோட்டு புளிய மரத்தடியில வெள்ளரி. தர்ப்பூசணி, நுங்கு, எளநீர்னு விக்குதே அதையெல்லாம் வாங்கிக் குடிச்சா வாமிட் வந்துருமா?!"
"ஆரம்பிச்சிட்டியா?"
"ஏன்டா நீயே இப்படி வெசத்த வாங்கித் தின்னா புள்ளகுட்டி. பொண்டாட்டிக்கு நல்லதையா வாங்கித் தருவனு" மீரா பேசிக்கிட்டு இருக்கும் போதே சந்தோசும் கருப்பனும் பஸ்ஸ விட்டு இறங்கி வந்தார்கள்.
"போன விசயம் என்னடே ஆச்சு சந்தோசு?"
"எந்த பிரச்சினையும் இல்ல மாமா"
"பொருளை பத்ரமா ஒப்படைச்சிட்டியா?"
"அதெல்லாம் எல்லாத்தையும் சைலன்ட்ல போட்டு சேப்பா குடுத்திருக்கன்"னு சொன்ன சந்தோசு,
"மகேசன்ணே ஒரு மோர்" என்றான்...
தன் வளர்ப்பு எப்படினு சதிசை பார்த்து மீசையைத் தடவ.
கருப்பன் "மகேசு ஸ்ட்ராங்கா ஒரு டீ"னு சொல்லி மீரா மூக்கை உடைத்தான் கருப்பன்!
இந்த நேரத்தில்தான் பக்கத்து ஊரைச்
சோ்ந்த ஒரு ஏழரை டீ கடைக்கு வந்தது. இவனால்தான் மீராவின் வாழ்க்கையில் திருப்பமே ஏற்படப்போகிறது!...

No comments:
Post a Comment