மீரா தாத்தா வயது 16 (ஆதன்-னின்)
அறிவடி- 17
அந்த ஏழரை ரெட்டைக் கொலை செஞ்ச பயதான். பேரு யமஹா சுந்தர்… பக்கத்து ஊரான மூங்கில்பாடியில ரெளடினு வலம் வரும் பைத்தியக்காரன். 28 வயசிருக்கும்…. நல்ல போதையில வேற இருந்தான் கூட ஒரு தொண்டு பய வேற….
"யோவ் மகேசு ஒரு பாக்கெட் கோல்ட் பில்டர் எடு"னு அவன் சொன்னதும் பயத்தோட தர்ம சங்கடத்தில் எடுத்துக்குடுத்தான் மகேசு.
சிகரெட் பாக்கெட்ட எடுத்து ஒன்ன பத்த வைச்சிட்டு யமஹாவுல ஏற போனவனை மகேசு சிகரெட்டுக்கு காசு கேட்க….
"கணக்குல வைச்சுக்கோ"
"ஏற்கனவே கணக்கு நெறய இருக்கு, சிகரெட்லாம் கடன் தரதில்லங்க"னு மகேசு சொல்ல, மகேசு பொண்டாட்டி வெளிய வந்தாள்…..
இதையெல்லாம் மீரா, சந்தோசு, கருப்பன், சதீசு அமைதியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாங்க…..
"கடை இருக்கனுமா இல்ல பறக்கனுமாடா"னு சுந்தர் பய நக்கலா கேட்க…… சந்திரா சீறிட்டாள்.
"கடை எதுக்கு பறக்கும்? வாங்குன சிகரெட்டுக்கு பணத்த குடுத்துட்டு போயா! சும்மா மெரடிக்கிட்டு, ரோட்ல ஏதாவது பிரச்சினைனா போன் பண்ணச் சொல்லி எஸ்.ஐ நம்பர் குடுத்திருக்காரு பண்ணா சரியா போய்ரும்"னு சந்திரா சொல்ல…..
கடைக்குள்ள இருந்த சந்திரா முடியைப் புடிச்சி வெளிய இழுத்து ஒரே அறையா அறைஞ்சி கீழ தள்ளிட்டு காலல மிதிக்க காலத்தூக்கினவன
அடுத்த நொடி சந்தோசு அடித்த அடி அவனே நெலதடுமாறி கீழ விழுந்து கெடந்தான்
வெரல் சொடுக்குற நேரத்துல நடந்து முடிஞ்ச இந்த கலவரத்துல எதுவும் புாியாம
விழுந்துக்கிடந்த தன் பொண்டாட்டி சந்திராவ தூக்கி நிறுத்தினான் மகேசு….
இதுக்கு இடையில
சுந்தர் கூட வந்தவன் கல்லால சந்தோசு தலையில அடிக்க சந்தோசு சுருண்டு விழுந்தான்.
நடக்குற அத்தனையையும் அதுலயும்
குறிப்பா ஒரு பொட்டப்புள்ள மேல கைவச்சி ஒருத்தன் அடிச்சத வரையோ , சந்தோசு சுந்தர அடிக்கிற வரையோ,
சந்தோச சுந்தா் கூட வந்தவன் கல்லால அடிக்கிற வரையோ,
பாத்துட்டு பொறுமையா மீரா நின்னதுக்கு காரணமில்லாம இல்ல!!...
சந்தோசோட பிரச்சினை, அவன் எதிர்கால வாழ்க்கைக்காகத்தான் முடிஞ்ச வரை பொறுமையா இருந்தது. ஆனால் நிலைமை மோசமாகவே மீரா களத்துல இறங்க வேண்டியதா போச்சு. ஒரே நேரத்துல ரெண்டு பிரச்சினையை இழுக்கறது மீராவுக்கு ஒத்துவராது. இந்த சுந்தர சந்தோசு பிரச்சினையை முடிச்சிட்டு முடிக்கலாம்னு நினைச்சது. ஆனால் நிலைமை கை மீறி போச்சு! அதனால யோசனைகளும் காத்தோட பறந்து போச்சி!.
சாி ரைட்டு இது நமக்கான நேரம் போலனு களத்துல குதிச்ச மீரா சந்தோச கல்லால அடிச்சவனை லாவகமா கையை புடிச்சி பின்னாடி வைச்சி மடக்கி மணிக்கட்ட திருப்பி விட்டாப்ல, இது மல்யுத்த ஸ்டைல். அவனால கையை அதுக்கு மேல அசைக்கவே முடியல. விரல்கள் வேலையே செய்யல……
அடுத்து எழுந்து வந்த சுந்தரை சாதாரணமா காதோட சேர்த்தி சப்புனு ஒரு அறை. கண்ணுல பொறி கலங்க விழுந்தவனை காலால் அடி வயிற்றில் எட்டி உதைக்க குடிச்சதுலாம் வாந்தியா வந்திருச்சி…..
இதுக்குள்ள ஊருக்குள்ள விசயம் போய் மக்கள் கூடிக்கிட்டாங்க. போலீஸ்ல புடிச்சிக் குடுக்கலாம்னு சொல்ல மீரா மேல மேல பகை வேண்டாம் போங்கடானு தொரத்தி விட்டாப்ல..,,
போனவன் ஊருக்குள்ள பத்து பேர சேர்த்துக்கிட்டு ஆயுதங்களோட குறவன்பட்டி ரோட்டுக்கு வந்துட்டான். கடை சாத்தி இருந்தது. மீரா தன் வீட்டுக்கு முன்னெச்சரிக்கையா கூட்டிட்டு போய்ட்டாரு.
பத்துபேரும் ஆயுதமும் இருக்க தைரியத்துல ஊருக்குள்ள புகுந்துட்டான் சுந்தர். கண்ணுல பட்டவங்க வீட்டுக்குள்ள ஒதுங்க,
மீரா காதுக்கு விசயம்போய் மீரா சிலம்ப கம்போட வர மக்களும் மீரா இருக்க தைரியத்துல வந்தாங்க.
மீராவ தேடி வந்தவனுகளுக்கு மீராவே எதிர வர பாய ஆரம்பிச்சானுங்க. மீரா கம்ப சுழற்ற சுழற்ற அடி கால்ல கழுத்துலனு குறித்தவறாம விழுந்தது.
சந்தோசும் கம்போட எறங்க ரெண்டு பேரும் அடி பின்னி எடுத்துட்டாங்க…. கால்ல அடி சரியா விழுந்து கீழ விழுந்தவனுங்கள மக்கள் கட்டிபோட ஆரம்பிக்க இந்த சண்டைய பேஸ்புக்ல லைவ், வீடியோனு போட்டு விட்டானுங்க விடல பசங்க.
போலீஸ் வர பொறுப்பை பழனிச்சாமியிடம் ஒப்படைத்தார் மீரா. பழனிச்சாமி கையாலயே அவனுங்க மேல கேஸ் குடுக்கப்பட்டு உள்ள அனுப்பி வைச்சாரு மீரா…
இதுக்குள்ள மீராவோட சிலம்ப சண்டை பேஸ்புக் வாட்ஸ்அப்னு வைரலாக ஆரம்பிச்சிருந்து. அன்னைக்கும் அடுத்த நாளுக்கும் மீராதான் பேஸ்புக்ல கன்டென்ட்..,,
வீரத்தமிழன். வீர தாத்தா அதா இதானு பயங்கர வைரல் ஆகிட்டிருந்தது. இதுல பிரபவ டிவி ஒன்னு தற்காப்புக் கலையின் அவசியம் ஏன் அப்படிங்கற தலைப்புல பேட்டி வேற…..
பேட்டியில மீரா கடைசியா பேட்டிக்கு சம்பந்தமே இல்லாம சொன்னது.
"என்னை வீரத்தமிழன், வீர தாத்தானு புகழ்றவங்க வசதியா ஒன்ன மறந்திட்டாங்க,
என்னை கொல்ல வந்தவனுங்களும் தமிழனுங்கதான். என்னை புகழ்ந்து இப்படி இருக்கனும்னு சொல்றத விட அவனுங்கள காட்டி இது தமிழனுக்கு அசிங்கம்னு சொல்லுங்க. இவங்களாம் திருந்திட்டா எதுக்கு சண்டை வரபோகுது."
கடைசியா அவர் பேசின இந்த விசயமும் வைரலாயிடுச்சி. ஆக மொத்தம் பேஸ்புக்ல இருக்க தமிழர்கள் தவிர பலருக்கும் மீரா பேமஸ்!
மீராவோட பேஸ்புக் ஐடிக்கு ஆயிரக்கணக்குள ரிக்வெஸ்ட், பாலோயர்ஸ்னு எகிற ஆரம்பிச்சது. மீரா இப்பலாம் மனசுக்கு நல்ல விசயங்களை எல்லாம் உடனே பேஸ்புக்கில் போட்டு விட்டு கெத்து காட்டிக்கிட்டு இருக்கு…..
இதுக்கு நடுவுல மெசேஜ் அப்பப்ப கால்னு செல்வி சந்தோசு காதல் யாருக்கும் தெரியாம வளர்ந்துக்கிட்டு இருந்தது…
மீரா தன்னோட ஜிம்ல வெடல பசங்களுக்கு
உடற்பயிச்சி எல்லாம் சொல்லிக்கொடுத்துட்டு வீட்டுக்கு வரும் வழியில பழனிச்சாமியை பார்க்க
"மீரா எதுக்கும் கொஞ்சம் உசாரா இரு" என்றான்.
"சரி பழனிச்சாமி எப்படியும் பிரச்சினை ஓயாது" என்ற மீரா அமைதியானார்.
"பஞ்சாயத்துலாம் இந்த நேரத்துல வேணாம் மீரா"
"சரி வேணாம் புள்ளை எங்களுக்கு வேணுமே பழனிச்சாமி " என்றார் மீரா!
"சரி நாளைக்கு கூட்டிருவோம், புள்ளை பிரச்சினையா இருக்கு அதனால எங்க வீட்டுல வைச்சி பேசிருவோம்" என்றான் பழனிச்சாமி!
"சரி வைச்சிக்குவோம் சரியான ஆளுங்கள மட்டும் கூப்டு. வழவழ கொழகொழனு பேசற ஆளுங்க வேணாம். எனக்கு செட்டாகாது! அப்புறம் ஏதாவது சொல்லிபுடுவன்." என்ற மீரா பழனிச்சாமியை பார்க்க,
"சரி மீரா அப்படியே பண்ணுவோம்" என்றான் பழனிச்சாமி.
"எத்தனை மணிக்கு வைச்சுக்கலாம்"
"நைட் ஏழு மணிக்கு வரச்சொல்லுவோம்"
"வரச்சொல்லு ஆனா ரொம்ப முக்கியமா உன் பேச்சுல நேர்மை இருக்கனும் பழனிச்சாமி" என்ற மீரா அமைதியாக கிளம்பினார்!
இந்த பஞ்சாயத்த முடிச்சிட்டு அடுத்தநாள் மீராவுக்காக ஒரு கூட்டத்த கூட்ட முடிவுச் செய்ந்திருந்தான் பழனிச்சாமி விவகாரமா மனசுக்குள்ள!...
அறிவடி- 18
சரி அடுத்த நாள் இரவு ஏழு மணிக்கு சந்தோசட மீரா பழனிச்சாமி வீட்டு வாசல்ல நின்றார்.
பழனிச்சாமி வாசலுக்கு வந்து கூப்பிட உள்ள போய் உட்கார்ந்தார்கள். ஊருக்குள்ள முக்கியமான ஆட்கள் ஒரு இருவது பேர் வாந்திருந்தாங்க….
"ம்க்க்கும் ஆரம்பிக்கலாமே என்றான் பழனிச்சாமி!
"நல்ல விசயத்தை ஏன் தள்ளி போட்டுக்கிட்டு உடனே ஆரம்பிக்கலாம்" என்று வழக்கமான தன் பாணியிலயே பேசினார் மீரா!
செல்வி அம்மா ஆரம்பிச்சா "நல்லவிதமா யாருக்கும் பகையில்லாம பிரிச்சி வைப்பிங்கனு நம்பி வந்திருக்கோம்"னு சொன்னாள் சித்ரா…..
"முதல்ல பேசுவோம் சித்ரா, நீயோ மீராவோ முடிவு எடுக்கவோ நம்பிக்கவோ… நாங்க எதுக்கு"?என்றார் கூட்டத்தில் ஒருவர்.
"புள்ளையை பேசச் சொல்லுங்க" என்றார் இன்னொருவர்.,....
ரெண்டுபேரும் செத்து போய்ருவம், கடைசிவரை எங்க மூஞ்சியில முழிக்கக்கூடாது அப்படி இப்படினு செல்வியை அவ அம்மாளும், அத்தையும் உருட்டி மெரட்டி அனுப்பி இருந்தாங்க.
செல்வி பேசினாள்….
"ஐயா நான் பி.எல் படிக்க ஆசைப்படறன். படிச்சி முடிச்சிட்டு பெத்தவங்க சம்மதத்தோட சந்தோச கல்யாணம் பண்ணிக்க நினைக்கறன்"னு தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தாள்.
"பையனை பேசச் சொல்லுங்க"னு கூட்டத்திலிருந்து குரல் வந்தது….
சந்தோசு பேசினான் சுயமா…
"இந்த கல்யாணம் நடக்கட்டும் நடக்காம போவட்டும் ஆனா என் அத்தை. மாமனுக்காக நான் வக்கீல் ஆகியே ஆகனும். அதேசமயத்துல என்னைய நம்பி ஒரு பொண்ணு காதலிச்சிருக்கு அத ஏமாத்த மாட்டேன். செல்வி சொன்னத ஏத்துக்கிட்டா நல்லது. இல்லனா வீட்டைத் தாண்டி போய்த்தான் நாங்க கல்யாணம் பண்ணனும். அது உங்களுக்கு மரியாதையா இருக்காது"னு பதட்டமில்லாம பேசி முடிச்சான் சந்தோசு.
கூட்டத்தில் மூத்தவர் சுப்ரமணி பேசினார்.
இந்த பிரச்சினையில முக்கியமா இருக்கறது சாதிதான். மத்த எதுவும் இல்ல. சித்ரா சொந்த பந்தங்க தள்ளி வைச்சிரும்னு பயப்படறா. அவ பயத்திலயும் நியாயம் இருக்கு. ஒரே பொட்டப்புள்ள பையன் கிடையாது கடைசி காலத்துல நல்லது கெட்டத பார்த்துக்க.
மீரா பிரச்சினையே வேற. அவன் ஆம்பள அதனால ஊர் போக போக ஏத்துக்கிச்சி, ஆனா இங்க நம்ம சாதியில இருந்து ஒரு பொண்ணு போவுது. இது சாதிக்கான. சொந்த குலத்துக்கான பெருமைக்கு சேறு பூசற மாதிரி.
மீரா விசயத்துல ஊர் பெருந்தன்மையா கடைசியில நடந்துக்கிச்சி. அதுக்கு நன்றிக் கடனா இந்த பிரச்சினையில மீரா பெருந்தன்மையா விட்டுத்தரனும்னு முடிச்சார் சுப்ரமணி.
கோவத்து உச்சியில இருந்த மீரா அத அடக்கிக்கிட்டு பேச ஆரம்பிச்சார்.
" இந்த பிரச்சினையில முக்கியமா இருக்கறது சாதினு சொன்னிங்க அதை என் மசிறாக் கூட மதிக்கறது கிடையாது நான். அடுத்து நான் ஆம்பளைங்கறதால அதுவும் பெருந்தன்மையாய் ஏத்துக்கிட்டதா சொன்னிங்க……
என் மாமன் உருவாக்குன பிரச்சினையால வெளியில இருந்து இங்க வந்த உங்க பொழப்புக்கு உலை வந்துருமேனு பயந்து தீர்ப்புங்கற குப்பைய மாத்தினிங்க.
இங்கிருந்து ஒரு பொண்ணு வேற சாதி பையனைக் கட்றது உங்களுக்கு பெரிய அவமானமா இருக்கு. அப்ப உங்க மானம் மரியாதைலாம் பொம்பள பாவாடைக்குள்ளதான் இருக்கா?! வாய்ல நல்லாவாருது ஏதாவது சொல்லிட போறன்"னு மீரா சொன்னதும் கூட்டம் குதிக்க ஆரம்பிச்சது.
"மீரா வார்த்தைய பாத்து வுடு வயசுல பெரியவங்களாம் இருக்காங்க" என்றான் பழனிச்சாமி….
" வயசு என்னையா வயசு? வயசுக்கு தகுந்த மாதிரி பேசினா எனக்கு ஏன் கோவாம் வர போகுது"னு மீரா நிறுத்த…
கூட்டத்துல இருந்து எந்தரிச்ச மருதமுத்து " ஏ சித்ரா சும்மா எதுக்கு பேசிக்கிட்டு. சோத்துல வெசத்த வைச்சி வுடு சாவட்டும் எதுக்கு சாதிக்கு கேடா இவளாம் வாழ்ந்துக்கிட்டு"என்றான்……
டக்னு மீராவும் எந்திரிச்சி சூரியை உருவிக்கிட்டு நின்னு உரும ஆரம்பிச்சிருச்சி "முடிஞ்சா செஞ்சி பாருங்கடா மொத்த பேரையும் கருவறுக்கறன். கடைசியா உங்க புத்திய காட்றிங்களா. டே சந்தோசு பொருள உருவிக்கடா இங்க ஏதாவதுனா அந்த பக்கம் நாலு உயிராவது போவனும்"னு மீரா சொன்ன நொடி சுருள் சூரியை உருவி நின்றான் சந்தோசு.
மூத்தவர் சுப்ரமணியே இரு பக்கமும் அடக்கி உட்கார வைச்சார்.
மீரா உன்னோட முடிவ சொல்லிட்டு நீ முதல்ல கிளம்பிரு. தேவையில்லாத பிரச்சினை வேண்டாம்னு சொல்ல….
மீரா பேசினார்….
" என் மாப்ளயா சந்தோச பாக்கறத விட சொந்த மவனாத்தான் பாக்கறன். ஒரு ஏக்கர் நிலத்தையும், இப்ப இருக்க வீட்டையும், ஒரு இலட்சமும் தரேன். அடுத்து அவனை படிக்க வைச்சி வக்கீலாக்கறது என் பொறுப்பு. செல்வியையும் வக்கீலாக்குவேன். இவங்களுக்கு கல்யாணத்த சட்டப்படி பண்ணி வைப்பேன். சொல்றதுக்கு அவ்வளவுதான்"! என்றாா் மீரா
சுப்ரமணியே தொடர்ந்து பேசினார். "சரி மீரா நீங்க கிளம்புங்க உங்க முடிவுப்படி செய்யுங்க. நாங்க பொண்ணு வீட்டுக்கிட்ட பேசி அனுப்பறோம்னு சொல்ல மீரா வெடுக்குனு எந்திரிக்க சந்தோசும் எழ கிளம்பினார்கள்.
மீரா போனதும் சித்ராக்கிட்ட "நாங்க பேசிக்கறோம்"னு சொல்லி அனுப்பி வைச்சாங்க…..
"நான் அப்ப சொன்னதுக்கு இப்ப என்ன சொல்றிங்க" என்று நிறுத்தினான் பழனிச்சாமி!
நீ சொன்னப்படியே செஞ்சிருவோம் புள்ள ஸ்ட்ராங்கா இருக்கு வேறு வழியில்லை என்றது கூட்டம்!...
அறிவடி- 19
நிகழ்காலம்!
கருப்பன் ஆஸ்பத்திரியில இருந்து சரவணனை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிவர சேலம் ஜி.எச் போயிருந்தான். இப்ப சரவணன் முழுசாவே தேறி இருந்தான்.
மீரா பொழுசாய காட்டுக்கு போய்ட்டு இருட்டவும் புல்லட் கிக்கருக்கு வலிக்காம உதைச்சி ஸ்டார்ட் பண்ணி கிளம்பினார்…..
ஊர் எல்லையில இவனுங்க இலட்சணத்தால லைட்டே கிடையாது. நைட் சாராயத்துக்கு மொதக்கண்ட கருவாடா , இல்ல கோழியானு யோசிச்சிக்கிட்டே மீரா வந்த வேளையில் சக்கரத்தில் வலுவான ஒரு குச்சி மாதிரியான தடி சக்கரத்தில் சொறுகியது.
நிலைத்தடுமாறி மீரா கீழ விழுந்து எழுந்து நிற்க.
முகத்துல துணியைக் கட்டிக்கிட்டு வலுவான உருவத்துல மூனு பேர் கையில வீச்சரிவாள்….
மீராவின் தலைக்கு குறி வைச்சி வீச்ச வீச மீரா கொரங்கு குட்டிக்கரணம் போட குறித்தவறி கைப்பட்டை தோள்ல வெட்டு விழுந்தது.
ஒருத்தன் மறுபடியும் கழுத்துக்கு வீச மீரா நகரவும் வேற ஒருத்தன் வீசியது இடது கால் தொடையில் விழுந்தது ஆழமான வெட்டு….
மீராவுக்கு புரிஞ்சிருச்சி வயசும் 60 ஆயிருச்சி, கால்லயும் வெட்டு விழுந்திருச்சி இனி ஓடி தப்பிக்க முடியாதுனு. கத்துக்கிட்ட கலையும், தைரியமும்தான் காப்பாத்தும் இல்லனா இயற்கை விட்ட வழினு கீழக் கெடந்த தன் துண்டை எடுத்தார். மூனுபேரும் வெறியோட தயாரா நின்னானுங்க எதிர்ல…..
ஒருத்தன் வீச்ச வீச சரால்னு துண்ட வைச்சி தடுத்து துண்ட சுருட்டி வீச்ச புடுங்கியிருச்சி மீரா. இப்ப துண்ட தொடையில இறுக்கி கட்டிகிச்சி ஏன்னா தொடையிலதான் இரத்தப்போக்கு அதிகமாயிருந்தது.
புடுங்குன வீச்சரிவாள வெட்டற மாதிரி இல்லாம திருப்பி வைச்சிக்கிச்சு. மீராவுக்கு இவனுங்கள வெட்டி உள்ள போறதுக்கு விருப்பமில்லை.
நேருக்கு நேர் நின்னு ஒருத்தன் வெட்ட வீச மீரா பின்னுக்கு போக அவன் முன்னோக்கி வர. வீச்சின் கைப்பிடிதான் மீரா தோள்பட்டையில் பட்டுச்சி.
நேருக்கு நேரா நின்னதால தன் தலையால அவன் தலையில மோத அவன் கிறுகிறத்து கீழ விழுந்தான். மிச்சமிருந்த ஒருத்தன் ஒரு ரெண்டு நிமிசம் போக்கு காட்டிட்டு முடியாதுனு ஓட… அடுத்த ரெண்டு பேரும் அடிபட்டதால மெதுவாக ஓடியும், மீரா கால்ல விழுந்த ஆழமான வெட்டால் துரத்த முடியல….. மீரா பொறுமையா புல்லட்ட நிமித்தி மேல கீழ வழியற இரத்தத்தோட செந்திலுக்கு போன் போட்டு வீட்டுக்கு வரச்சொல்லிட்டு, சந்தோச வீட்டில இருக்கச் சொல்லிட்டு வீட்டுக்கு வண்டிய விட்டார் மீரா…
மீரா கோலத்த பார்த்த சந்தோசும். செந்திலும் அலற ஆரம்பிச்சிட்டாங்க…
"லேய் அழுவறத நிறுத்துங்கடே! சந்தோசு வீட்ல துணிய எடுத்துட்டு வந்து இரத்தம் வர மேலயும் கீழயும் இறுக்கிக் கட்டுனு சொல்லவும், ஓடி போய் துணி எடுத்து வந்த சந்தோசு செந்திலோடு சேர்ந்து இறுக்கிக்கட்டினான். மீரா ட்ராயரோட வெறும் உடம்புல துணியைக்கட்டி சந்தோசு புல்லட்ட ஓட்ட நடுவுல மீரா உட்கார செந்தில் பின்னாடி உட்கார்ந்தான்.
வண்டிய ஆட்டோ ஸ்டேண்டுக்கு விடச்சொன்னார் மீரா. ஆட்டோ ஸ்டாண்டுல இருந்தவங்க மீரா கோலத்த பார்த்ததும் வண்டிங்க உடனே வந்தது ஒரு வண்டியில மீரா செந்தில் இன்னொரு டிரைவர் ஏற ஆட்டோ சேலம் ஜி.எச்க்கு கிளம்ப, வீட்டு பீரோவுல பணத்த, ஏடிஎம் கார்ட எடுத்துக்கிட்டு அவசர வார்டுக்கு வந்திருனு சொல்ல ஆட்டோ வேகமெடுத்தது.. ஊருக்குள்ள தீயாய் மீரா வெட்டுப்பட்ட செய்தி பரவியது. சதிக்கார கும்பலுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.
அவசர வார்டுல சேர்ந்த மறுநொடி செந்திலால வேலை வேகமாக நடந்தது. அவன் ஊராட்சி தலைவராச்சே. உடனே தையல் போடப்பட்டு குளுக்கோஸ் ஏறியது. சந்தோசும் வந்து சேர்ந்தான். மீரா இயல்பாவே இருந்தார் இரத்தம்தான் அதிகமா போயிருந்தது…..
"லேய் சந்தோசு என்ன நடந்துச்சோ அதை அப்படியே போன் பண்ணி என் மவனுக்கும், மவளுக்கும் சொல்லு"
" பயந்துக்குவாங்க மாமா வேற மாதிரி சொல்லுவம்" என்றான் சந்தோசு……
" பயப்படட்டும் ஸ்கூல் லீவ்தான அப்படியாவது வரட்டும்"னு மீரா சொல்ல சந்தோஷ் அப்டியே செய்தான். இதுக்குள்ள ஆட்டோ டூவீலர் என ஊர் மக்கள்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க. கூட்டம் அதிகமாக மீரா எல்லாரையும் காலைல வரச்சொல்லி அனுப்பி வைச்சார். இந்த செய்தியும் மீரா போலீசிடம் நடந்ததை சொல்ல அது அங்கிருந்த செந்திலால் பேஸ்புக்கில் போடப்பட்டு வைரலானது.
மீரா… சந்தோசு, செந்திலு காதுல ஒரு விசயத்தை கிசுகிசுக்க,
"லேய் நம்ம மூனு பேருக்குள்ள மட்டும் இது இருக்கட்டும் வெளிய சொல்லாக்கூடாது"னு கண்டிப்பா சொல்லிட்டார். மக சுந்தரி அடுத்த ஒரு மணி நேரத்துல ஆஸ்பத்திரிக்கு வந்து ஆஸ்பத்திரியவே அலற வைச்சிட்டா அழுது!
மகள. குழந்தைங்கள, மருமவன வீட்டுக்கு போகச்சொல்லிட்டார்...
அடுத்தநாள் காலை பெங்களூலிருந்து மகன் சிவாவும் குடும்பத்தோட வந்தான். அவன்கிட்ட உடம்புக்கு ஏதுமில்லைனு சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைச்சார்.
ஜி.எச்ல இருந்த பத்துநாளும் விதவிதமா மவளும் மருமகளும் சமைச்சி அனுப்ப மீரா முன்னவிட இப்ப தேறிட்டார். பத்து நாளைக்கு பிறகு தையல் பிரிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார். சதிக்கார கூட்டம் ஆஸ்பத்தரிக்கு வந்து நலம் விசாரிச்ச மாதிரியே வீட்டுக்கும் வந்து நலம் விசாரிச்சானுங்க மீராவும் அப்பாவியாய் நடந்ததை சொன்னார். போலீஸ் பார்வை யமஹா சுந்தர் மேலயே இருந்துச்சி…..
இன்ஸ்பெக்டர் கிட்ட போன் பண்ணின செந்தில் யமஹா சுந்தர இதுக்கு இழுக்க வேண்டாம்னு கேட்டுக்கிட்டான். இன்ஸ் பெக்டர் ஏன்னு காரணம் கேட்டப்ப பகைய வளக்க மீராவுக்கு விருப்பம் இல்லைனு சொல்லிட்டான். இந்த விசயம் மனைவி மூலமா யமஹா சுந்தருக்கு ஜெயில்ல தெரிய வர நிம்மதி ஆனான். மீரா மேல ஒரு மதிப்பும் வந்தது.
மகன், மவள். மருமவன். மருமகள்னு பேரப் புள்ளைங்கனு வீடே ஜே ஜே னு சந்தோசமா இருக்க மீரா ஒரு முக்கியமான வேலைக்கு தயார் ஆனார். அந்த வேலைக்கு செந்தில வேணானு சொல்லிட்டார். ஆனா கருப்பன் தானும் வருவனு அடம்புடிச்சி சேர்ந்துக்கிட்டான்…….
அடாவடி- 20
மீரா புல்லட் எடுத்துக்கிட்டு நேரா துணிக்கடைக்கு கிளம்ப, சந்தோச கூப்பிட்டு ஊர்ல தண்டோரா போடறவனை கூப்பிட்டு வைக்கச் சொல்லி கிளம்பினார். முதல்ல ஒரு சுடிதார் வாங்கினார் அடுத்து இரும்பு கடைக்கு வண்டிய விட்டு பெரிய ராடா வாங்கி அத நாலா கட் பண்ணி வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்தார்.
வாசுக்கு போன் பண்ணி பாஸ்கர கூட்டிக்கிட்டு பழனிச்சாமி வீட்டுக்கு வாங்க அந்த யமஹா சுந்தர என்ன பண்ணலாம்னு பேசனும்னு போனை வைச்சார்.
நாலு ராடுக்கும் மெல்லிசான சணல் சாக்க ஓரளவு மொத்தமா சுத்திக் கட்டி தண்ணியில ஊற வைச்சார். செந்தில்கிட்ட வண்டிய மட்டும் வாங்கி அத சரவணன் ஓட்ட, சணல் சுத்தப்பட்ட ராடு ஊற வைக்கப்பட்ட பக்கெட்ட பிடிச்சிக்கிட்டு கருப்பன் பின்னால உட்கார்ந்துகிட்டான். சந்தோசும் மீராவும் பழனிச்சாமி வீட்டுக்கு வண்டிய ஓட்ட சரவணன் பின்னாடி போனான். என்ன செய்யனுங்கறத ஏற்கனவே மீரா சொல்லி இருந்தார்.
பழனிச்சாமி வீட்டு வாசல்ல வாசுவும் பாஸ்கரும் வந்ததிற்கான அடையாளமா அவர்கள் வண்டி நின்றிருந்தது…..
கருப்பன மட்டும் பக்கெட்டோட அஞ்சு நிமிசம் கழிச்சி வரச்சொன்ன மீரா நேரா வீட்டுக்குள்ள சிரிச்சபடியே போனார்…..
" நீ கவலைப்படாத மீரா அந்த சுந்தர் பயல நம்ம சாதி சனங்கள வெச்சி போடுவம்" என்றான். பழனிச்சாமி..
வாசுவும் பாஸ்கரும் கோரசா ஆமாம் போட்டார்கள்.
"எப்டி பழனிச்சாமி சாதி சனத்த வைச்சி நீ என்னைய போட பார்த்த மாதிரியா"னு கேட்கவும் கருப்பன் சணல் சுத்தி தண்ணியில ஊற வைக்கப்பட்ட ராடு இருக்கும் பக்கெட்டோட வரவும் சரியா இருந்தது.
ஆளுக்கொரு ராட எடுத்து வெளுக்க ஆரம்பிச்சாங்க மூனு பேரையும். தலையை விட்டுட்டு எல்லா எடத்துலயும் வெளுக்க சொல்லி இருந்தது மீரா……
அடினாலும் அடி எல்லாம் உள் அடி கோகிலா கோயிலுக்கு போயிருந்தா உதவி செய்யவும் ஆளில்லை. மயக்கம் வர அளவுக்கு அடிச்சி பஞ்சாயத்து பேசற இடத்துக்கு இழுத்துக்கிட்டு வந்து போட்டாங்க மூனு பேரையும். ஏற்கனவே தண்டோரா போட்டு மக்கள கூப்டதால கூட்டம் கூடியிருந்தது.
மீரா பேச ஆரம்பிச்சது…..
இவனுங்களும் இன்னும் இருவது பேரும் சேர்ந்துதான் என்னை போட ஆள் வைச்சது. நான் நினைச்சா இவனுங்கள இங்கையே போட முடியும். ஆனா செய்ய மாட்டன். இவனுங்கள நம்பி ஒரு குடும்பம் இருக்கு.
அப்றம் அந்த இருவது பேருக்கும் சொல்லிக்கறன் எப்பலாம் மப்பு மீறுதோ அப்பலாம் ஒருத்தன இந்த மாதிரி சாத்துவேன். நான் சாகற வரையோ இல்லை நீங்க சாகற வரையோ இனிமே இந்த ஊரு உங்களுக்கு நரகம்தான். இனிமே ஊர் பஞ்சாயத்துக்கு செந்தில் தலைமையில இளைஞர்கள்தான் உட்காருவாங்க. இந்த நாய்ங்க மேடையேறக் கூடாது.
"ஆமா மீரா இவனுங்க ஏறவே கூடாது. அப்பா அம்மா பொண்டாட்டினு எல்லாத்தையும் இழந்துட்டு நின்னப்ப சாதியே இல்லைனு சொல்ற மீராதான்டா தாய் மாதிரி இந்த நாள் வரை காப்பாத்தி வரான். சாதி சாதினு பேசற நீங்க என்னை தரித்திரம் புடிச்சவன், இவன் மூஞ்சியில முழிச்சா வெளங்காதுனு பேசினவங்கதான்டா"னு குமுறினான் கருப்பன்!
" குடிச்சி அழிஞ்ச என்னை உங்க வேலைக்கு தேவைனா சாராயம் வாங்கி குடுத்திங்க, இவன் ஆம்பளையே இல்ல அதான் இவன் பொண்டாட்டி ஓடி போயிட்டா. தெரிஞ்சிருந்தா நாம ஒரு தடவ மோதி பாத்துருக்கலாம்னு பேசின நாய்ங்கதான்டா நீங்க. சாதி தேவையில்லனு சொல்ற மீராதான்டா இன்னைக்கு என் உயிரை காப்பாத்தி கொண்டாந்து மனுசனா நிறுத்தி இருக்கு"னு
மீரா சரவணனை அமைதிப்படுத்திட்டு….
"எனக்கு இன்னொரு வேலை மீதி இருக்கு இங்கிருக்க கூட்டம் எங்க வீட்டுக்கு வாங்க"னு சொன்ன மீரா செல்வியோட அப்பன் அம்மா செல்வியையும் கூப்பிட சித்ரா பம்மியப்படி வந்தாள்….
வீட்டுக்கு கூட்டம் வந்ததும் மீரா புது சுடிதார எடுத்துக் குடுத்து "செல்வி இத போட்டுக்கிட்டு காதுல கையில காலுல இருக்கறதலாம் உங்கம்மாகிட்ட கழட்டி குடுத்துடுமா"னு சொல்ல, வீட்டுக்குள்ள போன செல்வி துணியை மாத்திக்கிட்டு கழட்டுனத எல்லாம் சித்ராக்கிட்ட குடுத்தா..
"இனிமே இது எங்க வீட்டு பொண்ணு நாங்க நல்லா பார்த்துக்கறோம் படிக்க வைச்சிக்கிறோம். சித்ரா உங்க கடைசி காலம்னு பயப்படாத. பொண்ணு கல்யாணத்துக்கு சேத்தி வைச்சத உங்க கடைசிக் காலத்துக்கு வைச்சிக்கோங்க.
என் பேச்ச மதிச்சி வந்த ஊர் மக்களுக்கு பெரிய நன்றி. இவங்களுக்கு ரெண்டு வருசம் படிப்பு முடிஞ்சதும்தான் கல்யாணம். ஒரு பெரிய வக்கீல்கிட்ட ஜூனியரா ஒரு வருசம் வேலை செஞ்ச பின்னாடிதான் கொழந்த குட்டிங்கலாம். என்னடே சந்தோசு சரிதான. ஊர் மக்கள் கலைஞ்சி போலாம் மறுபடியும் நன்றி சொல்லிக்கறேன்"னு சொல்ல எல்லாரும் போக, செல்வி அப்பன் முருகேசன் மட்டும் மீராக்கிட்ட வந்தான்,
வந்தவன் "வீட்ல என்னை மதிக்கற பாசங்காட்ற தாய் அது, நல்லா பார்த்துங்க"னு சொல்லிட்டு எதுவும் பேசாம செல்விய பாத்தபடியே தெம்பா நடந்து போனான்…..
"லேய் கருப்பா செல்லாயி படுக்கைக்கு பக்கம் கட்டில போடுறா, சாராயத்த ஊத்து வூட்ல இருக்க கறிய எடுத்துட்டு வாடே"னு சொல்ல கருப்பன் எல்லாத்தையும் எடுத்துவர வீட்ல இருங்கவங்கள உள்ள போகச் சொன்ன மீரா பெரிய டம்ளர் முழுசா சாராயத்த ஊத்தி ஒரே பெக்கா அடிச்சாப்ல. கறி ஒரு துண்ட மென்னு துப்பிட்டு சிகரெட்ட பத்த வைச்சவர் நேரா செல்லாயி புதைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருக்கும் அம்மன் சிலை முன்னால் நின்று இதைச் சொன்னார்….
"சந்தோசு பய முகத்துலதான் உன்ன பாக்கறன். அவனை அப்படியே வக்கீலா பாத்திருந்தா, அவனுங்க வெட்டறப்ப போராடி இருக்க மாட்டேன். உன் கூட வந்து சேந்திருப்பன். உங்கிட்ட மட்டும்தான் மூளையைக் கழட்டி வைச்சிட்டு மனசால பேசுவேன். நீ இன்னைக்கு லேட்டா தூங்கு. நான் உன் கிட்ட நிறைய பேசனும். தூங்கியிறாத செல்லா, என்னை விட்டு போறப்பக்கூட மாமா நெஞ்சி வலிக்குதுனு மூனே வார்த்தையில போயிட்ட ஆனா இன்னைக்கு அப்படி பண்ணியிராதா"
குறிப்பு: ஆஸ்பத்திரிக்கு மீரா போறப்ப பணம். ஏடிஎம்யை எடுக்க வந்த சந்தோசுக்கிட்ட இதுக்கு காரணம் பழனிச்சாமி,பாஸ்கர். வாசுதான்னு சொன்னது பழனிச்சாமி மனைவி கோகிலாதான்!
---முற்றும்.✍🏻

No comments:
Post a Comment